திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 5-6 கடல்ஞாலம் (11 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3172திருவாய்மொழி || (5-6–கடல்ஞாலம்) ("தலைவன் தன்மைகளைத் தன்னதாகக்கொண்டு பேசும் தலைவியின் நிலைகண்ட தாய் ‘ஆவேசமோ என்று நொந்து கூறல்") (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –என் மகள் ஜகத் ஸ்ருஷ்ட்யாதி வியாபாரங்கள் எல்லாம் பண்ணினேன் என்னா நின்றாள்இது எம்பெருமான் தன் பக்கல் ஆவேசிக்க சொல்லுகிறாப் போலே இருந்தது என்கிறாள்.) 1
கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும் கடல் ஞாலம் ஆவேனும் யானே என்னும் கடல் ஞாலம் கொண்டேனும் யானே என்னும் கடல் ஞாலம் கீண்டேனும் யானே என்னும் கடல் ஞாலம் உண்டேனும் யானே என்னும் கடல் ஞாலத் தீசன் வந்து ஏறக் கொலோ? கடல் ஞாலத் தீர்க்கிவை என் சொல்லுகேன்? கடல் ஞாலத்து என்மகள் கற்கின்றவே.–5-6-1
பதவுரை Show / Hide
கடல் ஞாலத்து என் மகள்,Kadal Gnalaathu en magal - கடல்சூழ்ந்த வுலகத்திலுள்ளவரான எனது பெண்பிள்ளை.
கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும்,Kadal Gnalam seydaenum yaane ennum - கடல் சூழ்ந்த இவ்வுலகத்தைப் படைத்தவளும் நானேயென்கிறாள்;
கடல் ஞாலம் ஆவேனும் யானே என்னம்,Kadal Gnalam aavenum yaane ennam - (படைக்கப்பட்ட) கடல் ஞாலத்திலே அநுப்ரவேசித்திருப்பவளும்! நானேயென்கிறாள்;
கடல் ஞானம் கொண்டேனும் யானே என்றும்,Kadal gnanam kondenum yaane endrum - (மஹாபலியிடத்தில்) கடல் ஞானத்தை இரந்து பெற்றுக் கொண்டவளும் நானே யென்கிறாள்.
கடல் ஞானம் கீண்டேனும் என்னும்,Kadal gnanam keendenum ennum - (மஹாவரஹமாகிக்) கடல் ஞானத்தை உத்தரித்தகளும் நானே யென்கிறாள்;
கடல் ஞாலம் உண்டேனும் யானே என்னும்,Kadal Gnalam undaenum yaane ennum - (பிரளயத்தில்) கடல் ஞானத்தை உள்ளே வைதபுது நோக்கினவரும் நானே யென்கிறாள்.
கற்கின்ற இவை,Karkindra ivai - (இப்பெண்பிள்ளை) இங்ஙனம் பேசுகிற இங்ஙனம் பேசுகிற இப்பேச்சுக்கள்
கடல் ஞாலத்து நான் வந்து ஏற கொலோ,Kadal Gnalaathu naan vandhu yeRa kolo - கடல்சூழ்ந்த மண்ணுலகுக்குத் தலைவனான பெருமான் வந்து ஆவேசித்ததனாலே!
கடல் ஞானத்தீர்க்கு,Kadal Gnanatheerkku - இவ்வுலகிலுள்ள உங்களுக்கு
என் சொல்லுகேன்,En sollugeen - என்னவென்று சொல்லுவேன்?
3173திருவாய்மொழி || (5-6–கடல்ஞாலம்) ("தலைவன் தன்மைகளைத் தன்னதாகக்கொண்டு பேசும் தலைவியின் நிலைகண்ட தாய் ‘ஆவேசமோ என்று நொந்து கூறல்") (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –சர்வ வித்யா வேதனமும் வித்யா ப்ரவர்த்திகாதிகளும் நான் இட்ட வழக்கு என்னா நின்றாள் -என்கிறாள்.) 2
கற்குங் கல்விக்கும் எல்லை இலனே என்னும் கற்கும் கல்வி ஆவேனும் யானே என்னும் கற்கும் கல்வி செய்வேனும் யானே என்னும் கற்கும் கல்வி தீர்ப்பேனும் யானே என்னும் கற்கும் கல்விச் சாரமும் யானே என்னும் கற்கும் கல்வி நாதன் வந்து ஏறக்கொலோ? கற்கும் கல்வி யீர்க்கு இவை என் சொல்லுகேன்? கற்கும் கல்வி என் மகள் காண்கின்றவே.–5-6-2
பதவுரை Show / Hide
கற்கும் கல்வி என் மகள்,Karkum kalvi en magal - இன்று வார்த்தை கற்கும் பருவமாயிருக்கின்ற எனது பெண்பிள்ளை;
சற்கும் கல்விக்கு எல்லை இவன் என்னும்,Sarkum kalvikku ellai ivan ennum - நான் எல்லை யில்லாதபடி கல்விகள் கற்றிருக்கின்றேனென்கிறாள்;
கற்கும் கல்வி ஆவேனும் யானே என்றும்,Karkum kalvi aavenum yaane endrum - கற்கப்படுகிற கல்விகளெல்லாம் நானேயென்கிறாள்;
கற்கும் கல்வி சாரமும் நானே என்னும்,Karkum kalvi saaramum naane ennum - கற்கும் கல்விகளின் ஸாரமாகிய திருமந்திரம் முதலியனவும் நானே யென்கிறாள்.
காண்கின்ற இவை,Kaanginra ivai - (இங்ஙனமாக இப்பெண் பிள்ளையிடத்துக்) காணப்படுகின்ற இந்த வாசகங்களானவை
கற்கும் கல்வி செய்வேனும் யானே என்னும்,Karkum kalvi seivenum yaane ennum - கற்கப்படுகிற கல்விகளை நானே உண்டாக்கினேனென்கிறாள்
கற்கும் கல்வி தீர்ப்பேனும் யானே என்னும்,Karkum kalvi theerpenum yaane ennum - கற்கப்படுகிற கல்விகளை (ஸம்ஹார காலத்தில்) முடித்து நானே என்னெஞ்சிலிட்டு வைத்துக் கொண்டிருக்கிறனென்கிறாள்;
கற்கும் கல்வி நாதன் வந்து ஏறகொலோ,Karkum kalvi naadhan vandhu eerakolo - கற்கும் கல்விகளால் பிரதிபாதிக்கப்படுகிற எம்பெருமான் வந்து? ஆவேசித்ததனாலோ? (அறியேன்.
கற்கும் கல்வியிர்க்கு,Karkum kalvirkku - இனிக் கற்க வேண்டும் கல்விகளையுடையிரான உங்களுக்கு
என் சொல்கேன்,En solgean - என்னென்று சொல்லுவேன்?
3174திருவாய்மொழி || (5-6–கடல்ஞாலம்) ("தலைவன் தன்மைகளைத் தன்னதாகக்கொண்டு பேசும் தலைவியின் நிலைகண்ட தாய் ‘ஆவேசமோ என்று நொந்து கூறல்") (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –அபரிச்சேதயமான ப்ருதிவ்யாதி பூத பஞ்சகமும் நான் இட்ட வழக்கு என்னா நின்றாள் என்கிறாள்.) 3
காண்கின்ற நிலமெல்லாம் யானே என்னும் காண்கின்ற விசும்பெல்லாம் யானே என்னும் காண்கின்ற வெம் தீ எல்லாம் யானே என்னும் காண்கின்ற இக் காற்றெல்லாம் யானே என்னும் காண்கின்ற கடலெல்லாம் யானே என்னும் காண்கின்ற கடல் வண்ணன் ஏறக் கொலோ? காண்கின்ற உலகத்தீர்க் கென் சொல்லுகேன்? காண்கின்ற என் காரிகை செய்கின்றவே.–5-6-3
பதவுரை Show / Hide
காண்கின்ற என் காரிகை,Kaanginra en kaarigai - பகவத் விஷயத்தை உள்ளபடி கண்டு பேசுகிற என் மகள்
காண்கின்ற நிலம் எல்லாம் யானே என்னும்,Kaanginra nilam ellaam yaane ennum - காணப்படுகிற பூமியெல்லாம் நானேயென்கிறாள்
காண்கின்ற விசும்பு எல்லாம் யானே என்னும்,Kaanginra visumbu ellaam yaane ennum - காணப்படுகிற ஆகாசமெல்லாம் யானே யென்கிறாள்;
காண்கின்ற வெம் தீ எல்லாம் யானே என்னும்,Kaanginra vem thee ellaam yaane ennum - காணப்படுகின்ற தேஜ: புஞ்சமும் யானே யென்கிறாள்;
காண்கின்ற இ காற்று எல்லாம் யானே என்னும்,Kaanginra i kaatru ellaam yaane ennum - காணப்படுகின்ற வாயுக்களும் யானே யென்கிறாள்;
காண்கின்ற கடல் எல்லாம் யானே என்னும்,Kaanginra kadal ellaam yaane ennum - காணப்படுகின்ற ஜலதத்துவமெல்லாம் யானே யென்கிறாள்; (இப்படி இவள் சொல்லுவதானது)
காண்கின்ற கடல்வண்ணன் ஏறகொலோ,Kaanginra kadalvannan eerakolo - அழகிய கடல்போன்ற வடிவையுடைய எம்பெருமான் வந்து ஆவேசித்ததனாலோ?
செய்கின்ற,Seikinra - (இப்பெண் பிள்ளை) செய்கிறவைகளை
காண்கின்ற உலகத்தீர்க்கு,Kaanginra ulagaththirkku - இவ்வுலகமல்லது மற்றொன்று காணதவுங்களுக்கு
என் சொல்லுகேன்,En sollugean - என்னவென்று எடுத்துக் கூறுவேன்?
3175திருவாய்மொழி || (5-6–கடல்ஞாலம்) ("தலைவன் தன்மைகளைத் தன்னதாகக்கொண்டு பேசும் தலைவியின் நிலைகண்ட தாய் ‘ஆவேசமோ என்று நொந்து கூறல்") (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –க்ரியாதிகள் எல்லாம் நான் இட்ட வழக்கு என்னா நின்றாள் -என்கிறாள்.) 4
செய்கின்ற கிதி எல்லாம் யானே என்னும் செய்வான் நின்றனகளும் யானே என்னும் செய்து முன் இறந்தவும் யானே என்னும் செய்கைப் பயன் உண்பேனும் யானே என்னும் செய்வார்களைச் செய்வேனும் யானே என்னும் செய்ய கமலக் கண்ணன் ஏறக் கொலோ? செய்ய உலகத் தீர்க்கிவை என் சொல்லுகேன்? செய்ய கனி வாய் இள மான் திறத்தே.–5-6-4
பதவுரை Show / Hide
செய்கின்ற திதி எல்லாம் யானே என்னும்,Seikinra thithi ellaam yaane ennum - (இப்பெண்பிள்ளையானவள்) நிகழ்காலச் செய்கைகளெல்லாம் யானே யென்கிறாள்;
செய்வான் நின்றனகளும் யானே என்னும்,Seivaan nindranagalum yaane ennum - (இப்பெண்பிள்ளையானவள்) எதிர்காலச் செய்கைகளெல்லாம் யானே யென்கிறாள்;
செய்து முன் இறந்தவும் வானே என்னும்,Seidhu mun iranthavum yaane ennum - (இப்பெண்பிள்ளையானவள்) இறந்தகாலச் செய்கைகளெல்லாமும் யானே யென்கிறாள்;
செய்கை பயன் உண்பேனும் யானே என்னும்,Seikai payan unbenum yaane ennum - (இப்பெண்பிள்ளையானவள்) செய்கைகளின் பலன் களையனுபவிப்பதும் யானே யென்கிறாள்;
செய்வார்களை செய்வேனும் யானே என்னும்,Seivarkalai seivenum yaane ennum - (இப்பெண்பிள்ளையானவள்) செய்கைகளைச் செய்கின்ற கர்த்தாக்களைப் படைப்பதும் யானே யெனன்கிறாள்; (இவள் இப்படி யெல்லாம் சொல்லுவது)
செய்ய கமலம் கண்ணன் ஏற கொலோ,Seiya kamalam kannan eerakolo - செந்தாமரைக் கண்ணனான எம்பெருமான் ஆவேசித்ததனாலோ?
செய்ய கனி வாய் இன மான் திறந்து,Seiya kani vaai in maan thirandhu - சிவந்தாணிபோன்ற அதரத்தையுடையவளாய் இளமான் போன்றவளான இவள் விஷயத்தில்
செய்ய உலகத்தீர்க்கு,Seiya ulagaththirkku - (இப்பெண்பிள்ளையானவள்) கபடமறியாத உங்களுக்கு இவை என் சொல்லுகேன்?
3176திருவாய்மொழி || (5-6–கடல்ஞாலம்) ("தலைவன் தன்மைகளைத் தன்னதாகக்கொண்டு பேசும் தலைவியின் நிலைகண்ட தாய் ‘ஆவேசமோ என்று நொந்து கூறல்") (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –ஜகத் ரக்ஷண பிரமுகரான -ஆதி -சேஷ்டிதங்கள் எல்லாம் பண்ணுவேன் நான் என்னா நின்றாள் என்கிறாள்.) 5
திறம்பாமல் மண் காக்கின்றேன் யானே என்னும் திறம்பாமல் மலை எடுத்தேனே என்னும் திறம்பாமல் அசுரரைக் கொன்றேனே என்னும் திறங்காட்டி அன்றைவரைக் காத்தேனே என்னும் திறம்பாமல் கடல் கடைந்தேனே என்னும் திறம்பாத கடல் வண்ணன் ஏறக் கொலோ? திறம்பாத உலகத்தீர்க்கு என் சொல்லுகேன்? திறம்பாது என் திருமகள் எய்தினவே.–5-6-5
பதவுரை Show / Hide
என் திருமகள்,En thirumagal - என் செல்வமகளான பராங்குசநாயகி.
திறம்பாமல் மண் காக்கின்றேன் யானே என்னும்,Thirampaamal man kaakkinren yaane ennum - நீதி தவறாமல் இந்நிலவுலகத்தை நானே காக்கின்றேனென்கிறார்.
திறம்பாமல் மலை எடுத்தேனே என்னும்,Thirampaamal malai eduttenae ennum - சலியாதபடி கோவர்த்தன மலையை நானே யெடுத்தே னென்கிறாள்;
திறம்பாமல் அசுரரை கொன்றேனே என்னும்,Thirampaamal asurarai konrenae ennum - தப்பாதபடி (தேனுகன் முதலிய) அசுரர்களை நானே கொன்றிட்டேனென்கிறாள்;
அன்னு,Annu - அக்காலத்தில்
ஐவரை,Aivarai - பஞ்ச பாண்டவர்களை
திறம் காட்டி காத்தேனே என்னும்,Thiram kaatti kaattenae ennum - உபாயங்கள் காட்டி நானே ரக்ஷித்தேனென்கிறாள்;
திறம்பாமல்,Thirampaamal - அபயாமொன்று மின்றிக்கே
கடல் கடைந்தேனே என்னும்,Kadal kadaindenae ennum - நானே கடல் கடந்தேனெக்கிறாள்; (இப்படி இவள் வொல்வதானது)
திறம்பாத கடல் வண்ணன் எறகோலொ,Thirampaadha kadal vannan erakolo - அடியாரை நோக்குவதில் சலியாதவனும் கடல்கண்ணனுமான எம்பெருமான் ஆவேசித்ததனாலோ?
திறம்பாத உவகத்தீர்க்கு,Thirampaadha uvagaththirkku - இச்செய்தியை அவசியம் அறிந்தேதீர வேணுமென்று ஸ்திரமாயிருக்கிற உலகத்தீர்களான உங்களுக்கு (இப்பெண் பிள்ளை)
திறம்பாது எய்தின,Thirampaadhu eydhina - ஹிதஞ்சொல்லி மீட்கவொண்ணாதபடி அடைந்திருக்கிற தன்மைகளைப் பற்றி
என் சொல்லுவேன்,En solluven - என்ன கென்று சொல்லுவேன்?
3177திருவாய்மொழி || (5-6–கடல்ஞாலம்) ("தலைவன் தன்மைகளைத் தன்னதாகக்கொண்டு பேசும் தலைவியின் நிலைகண்ட தாய் ‘ஆவேசமோ என்று நொந்து கூறல்") (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –கோவர்த்தன உத்தரணம் முதலான கிருஷ்ண சேஷ்டிதங்கள் எல்லாம் பண்ணினேன் நான் என்று இவள் சொல்லா நின்றாள் என்கிறாள்.) 6
இன வேய் மலை ஏந்தினேன் யானே என்னும் இன ஏறுகள் செற்றேனும் யானே என்னும் இன ஆன் கன்று மேய்த்தெனும் யானே என்னும் இன ஆநிரை காத்தேனும் யானே என்னும் இன ஆயர் தலைவனும் யானே என்னும் இனத் தேவர் தலைவன் வந்து ஏறக்கொலோ? இன வேற் கண் நல்லீர்க்கு இவை என் சொல்லுகேன்? இன வேற் கண்ணி என்மகள் உற்றனவே.–5-6-6
பதவுரை Show / Hide
இனம் வேல் எண்ணி என் மகள்,Inam vel enni en magal - வேற்படையை யொத்திருக்கிற கண்ணழகையுடையவளான என் மகள்,
இனம் வேய் மலைஏந்தினேன் யானே என்றும்,Inam vey malai yentinen yaane ennum - திரள் திரளான மூங்கில்களையுடைய கோவர்த்தன மலையைக் குடையாக வெடுத்தேன் யானே யென்கிறாள்;
இனம் ஏறுகள் செற்றேனும் யானே என்னும்,Inam erugal setrenum yaane ennum - கூட்டமாகவந்த எருதுகளைக் கொன்றேனும் யானே யென்கிறாள்;
இனம் ஆன் கன்று மேய்த்தேனும் யானே என்னும்,Inam aan kanru meithenum yaane ennum - கூட்டங் கூட்டமான கன்றுகளை மேய்த்ததும் நானே யென்கிறாள்;
இனம் ஆரிரை காத்தேனும் யானே என்னும்,Inam aarirai kaathenum yaane ennum - திரளான பசுங் கூட்டங்களை ரக்ஷித்தேனும்நானே யென்கிறாள்.
இனம் ஆயர் தலைவனும் நாயே என்னும்,Inam aayar thalaivanum naaye ennum - இடையர் கூட்டங்களுக்குத் தலைவனான கோபாலகிருஷ்ணனும் நானே யென்கிறான்; (இப்படி இவன் சொல்லுவதானது
இனம் தேவர் தலைவன் வந்து ஏற கொலோ,Inam thevar thalaivan vandhu erakolo - நித்யஸூரிகள் குழங்களுக்குத் தலைவனான ஸர்வேச்வரன் வந்து ஆவேசித்ததனாலோ?
உற்றன இவை,Utrana ivai - இவள் அடைந்த இத்தகையவிகாரங்களை
இனம் வேல் கண் நல்லீர்க்கு,Inam vel kan nallirkku - வேல் போன்ற கண்ணழகையுடையீரான உங்களுக்கு
என் சொல்லுகேள்,En sollugeal - ஏனென்று சொல்லுவேன்?
3178திருவாய்மொழி || (5-6–கடல்ஞாலம்) ("தலைவன் தன்மைகளைத் தன்னதாகக்கொண்டு பேசும் தலைவியின் நிலைகண்ட தாய் ‘ஆவேசமோ என்று நொந்து கூறல்") (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –எம்பெருமான் ஆஸ்ரிதர் விஷயத்தில் இருக்கும் இருப்பை தன் படியாக பேசா நின்றாள் -என்கிறாள்.) 7
உற்றார்கள் எனக்கு இல்லை யாரும் என்னும் உற்றார்கள் எனக்கு இங்கு எல்லாரும் என்னும் உற்றார்களைச் செய்வேனும் யானே என்னும் உற்றார்களை அழிப்பேனும் யானே என்னும் உற்றார்களுக்கு உற்றேனும் யானே என்னும் உற்றாரிலி மாயன் வந்து ஏறக் கொலோ? உற்றீர்கட்கு என் சொல்லிச் சொல்லுகேன் யான்? உற்று என்னுடைப் பேதை உரைக்கின்றவே.–5-6-7
பதவுரை Show / Hide
என்னுடைய பேதை,Ennudaia pethai - என்னுடைய சிறு பெண்பிள்ளை
எனக்கு உற்றார்கள் ஆரும் இல்லை என்னும்,Enakku utrargal aarum illai ennum - எனக்கு உறவினர் ஒருவருமில்லையென்கிறாள்.
இங்கு எனக்கு உற்றார்கள் எல்லாரும் என்னும்,Ingu enakku utrargal ellaaarum ennum - இவ்வுலகில் எனக்கு யாவரும் உறவினர் என்கிறாள்;
உற்றார்களை செய்வேனும் யானே என்னும்,Utrargalai seivenum yaane ennum - (சிலரை) எனக்கு உற்றார்களாம்படி செய்வதும் நானே யென்கிறாள்.
உற்றார்களை அழிப்பேனும் யானே என்னும்,Utrargalai azhipenum yaane ennum - (அற்பபலன்களுக்காகக்) கிட்டுமவர்களை (அந்த அற்பபலன்களைக் கொடுத்து அகற்றுவதும் நானே யென்கிறாள்.
உற்றார்களுக்கு உற்றேனும் யானே என்னும்,Utrargalukku utrenum yaane ennum - அநந்யப்ரயோஜநர்களாய்க் கிட்டுமவர்களுக்கு எல்லாவுறவு முறையும் நானேயென்கிறாள்;
உற்றார் இலிமாயன் வந்து ஏறக் கொலோ,Utrar ilimaayan vandhu erakolo - (இவள் இப்படிச் சொல்லுவதானது) மதம் முயற்சியால் தன்னைக் கிட்டினாரில்லாத ஆச்சர்ய சக்தியுக்தனான எம்பெருமான் வந்து ஆவேசிதத்னாலோ?
உற்று உரைக்கின்ற,Utru uraikindra - உள்ளூறக் கண்டு சொல்லும் வார்த்தைகளை
உற்றீர்கட்கு,Utrirkadku - உறவினரானவுங்களுக்கு
யான் என் சொல்லி சொல்லுகேன்,Yaan en solli sollugean - நான் என்ன பாசுரத்தையிட்டுச் சொல்லுவேன்?
3179திருவாய்மொழி || (5-6–கடல்ஞாலம்) ("தலைவன் தன்மைகளைத் தன்னதாகக்கொண்டு பேசும் தலைவியின் நிலைகண்ட தாய் ‘ஆவேசமோ என்று நொந்து கூறல்") (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –ஜகத் பிரதானராக சாஸ்திரங்களில் சொல்லப் படுகிற சதுர்முகப் பிரமுகரும் நான் இட்ட வழக்கு என்னா நின்றாள் என்கிறாள்.) 8
உரைக்கின்ற முக்கட் பிரான் யானே என்னும் உரைக்கின்ற திசை முகன் யானே என்னும் உரைக்கின்ற அமரரும் யானே என்னும் உரைக்கின்ற அமரர் கோன் யானே என்னும் உரைக்கின்ற முனிவரும் யானே என்னும் உரைக்கின்ற முகில் வண்ணன் ஏறக் கொலோ? உரைக்கின்ற உலகத்தீர்க்கு என் சொல் லுகேன்? உரைக்கின்ற என் கோமள ஒண் கொடிக்கே.–5-6-8
பதவுரை Show / Hide
முக் கண்பிரான் யானே என்னும்,Muk kanpiraan yaane ennum - உரைக்கின்ற (இப்பெண்பிள்ளை) ஈச்வரனாகச் சொல்லப்படுகிற சிவபிரான் நானே யென்கிறாள்.
உரைக்கின்ற திசைமுகன் யானே என்னும்,Uraikindra dhisaimugan yaane ennum - உரைக்கின்ற (இப்பெண்பிள்ளை) ப்ரஸித்தனான பிரமனும் நானே யென்கிறாள்;
உரைக்கின்ற அமரரும் யானே என்னும்,Uraikindra amararum yaane ennum - உரைக்கின்ற (இப்பெண்பிள்ளை) பேசுகின்ற தேவர்களும் யானே யென்கிறாள்;
உரைக்கின்ற அமரர்கோன் யாயே என்னும்,Uraikindra amararkon yaane ennum - உரைக்கின்ற (இப்பெண்பிள்ளை) ப்ரஸித்தனான தேவேந்திரனும் நானே யென்கிறாள்;
உரைக்கின்ற முனிவரும் யானே என்னும்,Uraikindra munivarum yaane ennum - உரைக்கின்ற (இப்பெண்பிள்ளை) ப்ரஸித்தர்களான நாரதாதிமஹரிஷிகளும் நானே யென்கிறாள்;
உரைக்கின்ற முகில் வண்ணன் ஏறகொலோ,Uraikindra mugil vannan erakolo - (இப்படிச் சொல்லுவதானது) ப்ரஸித்தனான காளமேகவண்ணப் பெருமான் வந்து ஆவேசித்ததனாலோ?
உரைக்கின்ற உலகத்தீர்க்கு,Uraikindra ulagaththirkku - சொல்லுகின்ற சொல்லென்று கேட்கிற நாட்டாரான உங்களுக்கு,
உரைக்கின்ற என் கோமளம் ஒண் நொடிக்கு,Uraikindra en komalam on nodikku - விலக்ஷணமாகப் பேசுகின்ற எனது அழகிய சிறு பெண்ணைப் பற்றி
உரைக்கின்ற இவை,Uraikindra ivai - இவள்தான் சொல்லுகின்ற இப்பேச்சுக்களை
என் சொல்லுகேண்,En sollugean - என்னவென்று கூறுவேன்?
3180திருவாய்மொழி || (5-6–கடல்ஞாலம்) ("தலைவன் தன்மைகளைத் தன்னதாகக்கொண்டு பேசும் தலைவியின் நிலைகண்ட தாய் ‘ஆவேசமோ என்று நொந்து கூறல்") (ஸ்ரீ பன்னீராயிரப்படி -அநந்தரம் குரூரமான கர்ம பிரகாரங்கள் எல்லாம் நான் இட்ட வழக்கு என்னும் என்கிறாள்.) 9
கொடிய வினை யாதும் இலனே என்னும் கொடிய வினை ஆவேனும் யானே என்னும் கொடிய வினை செய்வேனும் யானே என்னும் கொடிய வினை தீர்ப்பேனும் யானே என்னும் கொடியான் இலங்கை செற்றேனே என்னும் கொடிய புள்ளுடையவன் ஏறக் கொலோ? கொடிய உலகத்தீர்க்கு இவை என் சொல்லுகேன்? கொடியேன் கொடி என் மகள் கோலங்களே.–5-6-9
பதவுரை Show / Hide
கொடிய வினை யாதும் இலன் என்னும்,Kodiya vinai yaadhum ilan ennum - (இப்பெண்பிள்ளை) கொடிய கருமங்களின் பற்று சிறிது முடையேனல்லேன் நான் என்கிறாள்;
கொடிய வினை ஆவேனும் யானே என்னும்,Kodiya vinai aavenum yaane ennum - அக்கொடியகருமங்களும் எனது நிக்ரஹங்களும் என்கிறாள்;
கொடிய வினை செய்வேனும் யானே என்னும்,Kodiya vinai seivenum yaane ennum - ஆச்ரிதவிரோதிகளுக்குக் கொடியபாவங்களை விளைப்பதும் நானே என்கிறாள்;
கொடிய வினை தீர்ப்பேனும் யானே என்னும்,Kodiya vinai theerpenum yaane ennum - (அடியார்கட்குக்) கொடிய பாவங்களைத் தீர்த்துக் கொடுப்பதும் நானே யென்கிறாள்;
கொடியான் இலங்கை செற்றேனே என்னும்,Kodiyan ilangai settraenae ennum - கொடியவனான இராவணனுடைய இலங்காபுரியைத் தொலைத்த்தும் நானே யென்கிறாள்;
கொடிய புள் உடையவன் ஏற கொலோ,Kodiya pul udaiyavan eerakolo - (இவன் இப்படிச் சொல்லுவது) ஆச்ரித விரோதிகளுக்குக் கொடியவனான பெரிய திருவடியை த்வஜமாகவுடைய எம்பெருமான் வந்து ஆவேசித்ததனாலோ?
கொடியேன் கொடி என் மகள் கோலங்கள் இவை,Kodiyaan kodi en magal kolangal ivai - கொடியேனான என்னுடைய கொடி போன்ற இம்மகளின் அழகிய சேஷ்டைகளான இவற்றைப் பற்றி
கொடிய உலகத்தீர்க்கு என் சொல்லுகேன்,Kodiya ulagaththirkku en sollugean - சொல்லு சொல்லென்று ஹிம்ஸிக்கிற உங்களுக்கு என்னவென்று சொல்லுவேன்?.
3181திருவாய்மொழி || (5-6–கடல்ஞாலம்) ("தலைவன் தன்மைகளைத் தன்னதாகக்கொண்டு பேசும் தலைவியின் நிலைகண்ட தாய் ‘ஆவேசமோ என்று நொந்து கூறல்") (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் ஸ்வர்க்க நரகாதிகளான சகல பலங்களும் நான் இட்ட வழக்கு என்னும் -என்கிறாள்.) 10
கோலங் கொள் சுவர்க்கமும் யானே என்னும் கோல மில் நரகமும் யானே என்னும் கோலம் திகழ் மோக்கமும் யானே என்னும் கோலம் கொள் உயிர்களும் யானே என்னும் கோலம் கொள் தனி முதல் யானே என்னும் கோலம் கொள் முகில் வண்ணன் ஏறக் கொலோ? கோலம் கொள் உலகத்தீர்க்கு என் சொல்லுகேன்? கோலம் திகழ் கோதை என் கூந்தலுக்கே.–5-6-10
பதவுரை Show / Hide
கோலம் கொள் சுவர்க்கமும் யானே என்னும்,Kolam kol suvarkkamum yaane ennum - (என் மகளானவள்) அழகிய ஸ்வர்க்கலோகமும் நானிட்ட வழக்கென்கிறாள்
கோலம் இல் நரகமும்யானே என்னும்,Kolam il naragamum yaane ennum - துக்கமே வடிவெடுத்த நரகமும் நானிட்ட வழக்கென்கிறாள்;
கோலம் திகழ் மோக்கமும் யானே என்னும்,Kolam thigazh mokkamum yaane ennum - இன்பமயமான மோஷமும் நானிட்டவழக்கென்கிறாள்;
கோலம் கொள் உயிர்களும் யானே என்னும்,Kolam kol uyirkalum yaane ennum - பலபல சரீரங்களைப் பரிக்ரஹிக்கிற ஆத்மாக்களும் நானிட்ட வழக்கென்கிறாள்;
கோலம் திகழ் கோதை என் கூந்தலுக்கு,Kolam thigazh kodhai en koondhalukku - அழகிய மாலையையுடைய மயிர் முடியையுடைவளான என்மகள் விஷயமாக
கோலம் கொள்தனி முதல் யானே என்னும்,Kolam kol thani mudhal yaane ennum - விசித்திரகாரியங்களைச் செய்யவல்லதான மூலப்ரக்ருதியம் நானிட்ட வழக்கென்கிறாள்;
கோலம் கொள்முகில் வண்ணன் ஏறகொலோ,Kolam kol mugil vannan eerakolo - (இப்படிச் சொல்லுவதானது) அழகிய காள மேகவண்ணப்பெருமான் வந்து ஆவேசித்தனாலோ?
கோலம் கொள் உலகத்திர்க்கு என் சொல்லுகேன்,Kolam kol ulagaththirkku en sollugean - அழகாக வந்து உட்கார்ந்திருக்கின்ற உங்களுக்கு என்ன சொல்லுவேன்?
3182திருவாய்மொழி || (5-6–கடல்ஞாலம்) ("தலைவன் தன்மைகளைத் தன்னதாகக்கொண்டு பேசும் தலைவியின் நிலைகண்ட தாய் ‘ஆவேசமோ என்று நொந்து கூறல்") (இத் திருவாய்மொழியை ஓதவல்லவர்கள் ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு அடிமை செய்யப்பெறுவர்களென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறது.) 11
கூந்தல் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும் குல ஆயர் கொழுந்துக்கும் கேள்வன் தன்னை வாய்ந்த வழுதி வளநாடன் மன்னு குருகூர்ச் சடகோபன் குற்றேவல் செய்து ஆய்ந்த தமிழ்மாலை ஆயிரத்துள் இவையும் ஓர் பத்தும் வல்லார் உலகில் ஏந்து பெருஞ் செல்வத்தராய்த் திருமால் அடியார்களைப் பூசிக்க நோற்றார்களே.–5-6-11
பதவுரை Show / Hide
கூந்தல்,Koondhal - விலக்ஷணமான மயிர் முடியையுடையனான
மலர் மங்கைக்கும்,Malar manghaikum - பெரியபிராட்டிக்கும்
மண் மடந்தைக்கும்,Man madanthaikum - பூமிப்பிராட்டிக்கும்
குலம் ஆயர் கொழுந்துக்கும்,Kulam aayar kolundhukkum - நல்லகுடிப்பிறப்பையுடைய நப்பின்னைப் பிராட்டிக்கும்
ஆய்ந்த,Aayndha - ஆராய்ந்து அருளிச் செய்த
தமிழ் மாலை ஆயிரத்துள் இவையும் ஒரு பத்தும் வல்லார்-;,Thamizh maalai aayiraththul ivaiyum oru paththum vallaar-; - தமிழ் மாலை ஆயிரத்துள் இவையும் ஒரு பத்தும் வல்லார்-;
உலகில்,Ulagil - இவ்வுலகத்திலே
ஏந்து பெரு செல்வத்தர் ஆய்,Aendhu peru selvaththar aay - எல்லாரும்கொண்டாடும்படியான ஸ்ரீவைஷ்ணவ லக்ஷ்மியையுடையராய்க் கொண்டு
கேள்வன் தன்னை,Kelvan thannai - நாயனான எம்பெருமான் விஷயமாக
வாய்ந்த வழுதி வனம் நாடன் மன்னுருருகூர் சடகோபன்,Vaayndha vazhuthi vanam naadan mannururukoor sadagopan - ஆழ்வார்
குற்றேவல் செய்த,Kuttreval seydh - அந்தரங்கரைங்கர்ய ரூபமாக
திரு மால் அடியார்களை,Thiru maal adiyaarkalai - பகவத்பக்தர்களான ஸ்ரீவைஷ்ணவர்களை
பூசிக்க,Poosikka - ஆராதிக்க
நோற்றார்கள்,Noatraargal - ஸுக்ருதம் பண்ணினவர்களாவர்.