திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1758 | பெரிய திருமொழி || (9-2–பொன்னிவர் மேனி) (திரு நாகை) - (தலைவனின் உருவெளிப்பாட்டில் நலியும் தலைவி தோழியிடம் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (மர்மங்களிலே கடாஷியா நின்றார் பார்த்த பார்வை ஒரு கால் மாற வைக்கிறிலர் – நீ பின்னை செய்தது என் என்ன –இப்பார்வைக்கு நானும் கூட்டு என்று பார்க்கிறாளோ -என்று அஞ்சுகின்றேன் – அவன் பார்வையும் அவள் பார்வையும் ஆனதாகிறது – அப்போதை அழகு இருந்த படி காண்) 1 | பொன்னிவர் மேனி மரகதத்தின் பொங்கிளம் சோதி யகலத்தாரம்
மின்னிவர் வாயில் நல் வேதம் ஓதும் வேதியர் வானவராவர் தோழீ
என்னையும் நோக்கி என் அல்குலும் நோக்கி ஏந்திளம் கொங்கையும் நோக்குகின்றார்
அன்னை என் நோக்கும் என்று அஞ்சுகின்றேன் அச்சோ ஒருவர் அழகிய வா –9-2-1 | பதவுரை Show / Hideதோழீ, Thozhi - வாராய் தோழியே!, இவர் மேனி, Ivar Meeni - இந்த எம்பெருமானுடைய திருமேனியானது பொன், Pon - பொன்னாயிருக்கின்றது மரதகத்தின் பொங்கு இள சோதி, Marathakathin Pongu Ila Sothi - மரதகப்பச்சையின் பரம்பின புதிய தேஜஸ்ஸை யுடைத்தான அகலத்து, Akalathu - திருமார்பில் (சாத்தப்பட்டுள்ள) ஆரம், Aaram - ஹாரமானது மின், Min - மின்னலாயிருக்கிறது இவர், Ivar - இப்பெரியவர் வாயில், Vaail - வாயினால் நல் வேதம் ஓதும் வேதியர், Nal Vedham Oodhum Vethiyar - நல்லவேதத்தை உருச்சொல்லுகிற வைதிகரா யிருக்கின்றார்; வானவர் ஆவர், Vaanavar Aavar - (மேன்மையில்) தேவர்களோடொப்பர்; (இவர்) என்னையும் நோக்கி, Ennaiyum Nookki - என்னையும் உற்றுப் பார்த்து என் அல்குலும் நோக்கி, En Alkulum Nookki - எனது நிதம்பத்தையும் உற்றுப் பார்த்து ஏந்து இள கொங்கையும், Aendu Ila Kongaiyum - ஏந்தப்படுகின்ற இளைய முலைகளையும் நோக்குகின்றார், Nookkiyiraar - உற்றுப்பார்க்கின்றார்; அன்னை என் நோக்கும் என்று, Annai En Nookkum Endru - தாய் என்ன நினைப்பாளோ வென்று அஞ்சுகின்றேன், Anjikiren - பயப்படுகிறேன்; அச்சோ, Achcho - ஆச்சரியம்; ஒருவர் அழகிய ஆ, Oruthar Azhagiya Aa - ஒரு பெரியவருடைய ஸௌந்தரியத்தை என்ன! சொல்லுவேன். |
| 1759 | பெரிய திருமொழி || (9-2–பொன்னிவர் மேனி) (திரு நாகை) - (தலைவனின் உருவெளிப்பாட்டில் நலியும் தலைவி தோழியிடம் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஒப்பித்துக் கொண்டு இரா நின்றார் –திரு ஆழியையும் ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தையும் திருக் கையிலே உடையராய் இரா நின்றார் – ஒப்பனை தான் வேண்டாத படி இரா நின்றது திருத் தோள்களை கண்டவாறே – இவ் வழகு நம்மால் பேசப் போகாது-விஸ்மயப்பட்டு விடும் அத்தனை) 2 | தோடவிழ் நீலம் மணம் கொடுக்கும் சூழ் புனல் சூழ் குடந்தைக் கிடந்த
சேடர்கோல் என்று தெரிக்க மாட்டேன் செஞ்சுடராழியுஞ் சங்குமேந்தி
பாடக மெல்லடியார் வணங்கப் பன் மணி முததொடிலங்கு சோதி
ஆடகம் பூண்டொரு நான்கு தோளும் அச்சோ ஒருவர் அழகிய வா –9-2-2 | பதவுரை Show / Hideதோடு அவிழ் நீலம், Thodu Avizh Neelam - இதழ்கள் மலரப்பெற்ற நீலோற்பலங்கள் (- (அச்சோ ஒருவர் அழகிய ஆ -.)) மணம் கொடுக்கும், Manam Kodukkum - பரிமளத்தைப் புற்ப்பட விடுகின்றன சூழ் புனல், Sool Punal - பரந்த தீர்த்தங்களாலே சூழ், Sool - சூழப்பட்ட குடந்தை, Kudandhai - திருக்குடந்தையிலே கிடந்த, Kidandha - திருக்கண்வளர்ந்தருள்கின்ற சேடர் கொல்என்று, Sedar Kolendru - யௌவன புருஷரோ இவர்! என்று தெரிக்கமாட்டேன், Therikkamaatten - தெரிந்து கொள்கின்றிலேன், செம் சுடர் ஆழியும், Sem Sudar Azhiyum - சிவந்த ஒளியையுடை திருவாழியையும் சங்கும், Sangum - சங்கையும் ஏந்தி, Aendi - தரித்துக்கொண்டு, பாடகம் மெல் அடியார் வணங்க, Paadagam Mel Adiyaar Vananga - பாதகடகம் பூண்ட மெல்லி பாதங்களையுடைய பெண்டிர்களால் வணங்கப்பெற்ற பல் மணிமுத்தொடு, Pal Manimuththodu - பலவகைப்பட்ட ரத்னங்களோடும் முத்துகளோடும் இலங்கு சோதி ஆடகம் பூண்ட, Ilangu Sothi Aadagam Poonda - விளங்குகின்ற தேஜஸ்ஸையுடைய பொன் திருவாபரணங்களை யணிந்துள்ள ஒரு நான்கு தோளும், Oru Naangu Tholum - விலக்ஷணமான நான்கு திருத்தோள்களுமாய் |
| 1760 | பெரிய திருமொழி || (9-2–பொன்னிவர் மேனி) (திரு நாகை) - (தலைவனின் உருவெளிப்பாட்டில் நலியும் தலைவி தோழியிடம் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஓங்கி இருப்பதாய் பரந்து இருப்பதான மலை விளங்கினாப் போலே செவ்வையை உடைத்தாய் -மிக்க புகரை உடைத்தான – ஆயிரம் தோளையும் உடையராய்-அத் தோள்கள் தோறும் தோள் வந்தியை உடையராய் இரா நின்றார் கீழே நான்கு தோளும் என்னச் செய்தே ஆயிரம் தோள் என்கிறது ஆயிரம் தோள் ஆனால் கண்டு அனுபவிக்கும் கரணங்கள் அநேகம் கொண்டு அனுபவிக்க வேண்டும் படி இரா நின்றார் -என்கை – ஓர் ஒப்பனை வேணுமோ -அவ்வடிவு அழகு தானே அமையாதோ) 3 | வேயிரும் சோலை விலங்கல் சூழ்ந்த மெய்ய மணாளர் இவ்வையம் எல்லாம்
தாயின நாயகராவர் தோழீ தாமரைக் கண்கள் இருந்தவாறு
சேயிரும் குன்றம் திகழ்ந்தது ஒப்பச் செவ்வியவாகி மலர்ந்த சோதி
ஆயிரம் தோளோடு இலங்கு பூணும் அச்சோ ஒருவர் அழகிய வா –9-2-3 | பதவுரை Show / Hideதோழீ, Thozhi - வாராய்தோழியே!’ (- (அச்சோ ஒருவர் அழகிய ஆ-.)) வேய் இரு சோலை, Veiy Iru Solai - மூங்கில்மயமான பரந்த சோலைகளை யுடைத்தான விலங்கல், Vilangkal - குன்றுகளாலே சூழ்ந்த, Soozhndha - சூழப்பட்ட மெய்யம், Meyyam - திருமெய்ய மலையில் எழுந்தருளியிருக்கிற மணாளர், Manalar - மணவாளப்பிள்ளையும் இ வையம் எல்லாம் தாயின, I Vaiyam Ellam Thaayin - இந்த பூமிப்பரப்பையெல்லாம் தாவி அளந்தவருமான நாயகர் ஆவர், Naayakar Aavar - பரமபுருஷர்போலும் இவர்! தாமரை கண்கள் இருந்த ஆறு, Thamarai Kangkal Irundha Aaru - தாமரை போன்ற திருக்கண்களிருக்கும் படியை என் சொல்வேன்;! சேய் இரு குன்றம், Sey Iru Kuntram - ஓங்கியும் பரந்துமிருக்கின்ற மலைகள் திகழ்ந்தது ஒப்ப, Thigazhnthathu Oppa - விளங்குமாபோலே செவ்விய ஆகி, Sevviya Aagi - அழகுடையனவாய் மலர்ந்த சோதி, Malarndha Sothi - பரந்த தேஜஸ்ஸை யுடையனவான ஆயிரம் தோளொடு, Aayiram Tholodu - ஆயிரம் திருத்தோள்களும் இலங்கு பூணும், Ilangu Poonum - விளங்குகின்ற திருவாபரணங்களுமாய் |
| 1761 | பெரிய திருமொழி || (9-2–பொன்னிவர் மேனி) (திரு நாகை) - (தலைவனின் உருவெளிப்பாட்டில் நலியும் தலைவி தோழியிடம் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இவர் திரு வதரம் இருக்கிற படியை பார்த்தவாறே சிவந்த பவளம் என்னலாம் படி இருந்தது – தேவர் இவர்-இதர விசஜாதியருமாய் இருந்தார்-மனிச்சரோடு கூட்டலாய் இருக்கிறிலர் – இவர் வடிவு இருந்த படியைச் சொல்லில்-எங்கும் ஒக்க ஸ்ப்ருஹநீயமாய் இரா நின்றது – உபமானம் இல்லாத விஷயத்தில்-உபமானம் சொல்லி இருப்போமோ) 4 | வம்பவிழும் துழாய் மாலை தோள் மேல் கையன வாழியும் சங்கும் ஏந்தி
நம்பர் நம்மில்லம் புகுந்து நின்றார் நாகரிகர் பெரிது மிளையர்
செம்பவளம் இவர் வாயின் வண்ணம் தேவர் இவரது உருவம் சொல்லில்
அம்பவளத் திரளேயும் ஒப்பர் அச்சோ ஒருவர் அழகிய வா –9-2-4 | பதவுரை Show / Hideதோள் மேல், Thol Mel - திருத்தோள்களிலே வம்பு அவிழும் துழாய் மாலை, Vambu Avizhum Thuzhai Maalai - பரிமளம் விஞ்சுகிற திருத்துழாய் மாலையுள்ளது; ஆழியும் சங்கும், Aazhiyum Sangum - சக்கரமும் சங்கமும் கையன, Kaiyan - திருக்கைகளிலுள்ளன; ஏந்தி, Aendi - (அத்திவ்யாயுதங்களைத்) தரித்துக்கொண்டு நம்பர், Nambar - (இந்த) ஸ்வாமி நம் இல்லம் புகுந்து நின்றார், Nam Illam Pugundhu Nindraar - நம்மனையிலே வந்து ஸுலபராயிரா நி்ன்றார்; நாகரிகர், Naagarikar - பெருமதிப்பராயிரா நின்றார்; பெரிதும் இளையர், Peridum Ilaiyar - மிக்க இளம்பருவமுடையராயிருக்கின்றார்; இவர், Ivar - இவருடைய வாயின் வண்ணம், Vaayin Vannam - அதரத்தின் நிறம் செம் பவளம், Sem Pavalam - சிவந்த பவளமே; தேவர் இவரது, Thevar Ivarthu - அமாநுஷரான இவருடைய உருவம் சொல்லில், Uruvam Sollil - உருவமிருக்கும்படியைச் சொல்வோமாகில் அம் பவளம் திரளேயும் ஓப்பர், Am Pavalam Thiraleeyum Ooppar - அழகிய பவளத்திரள் போலே விரும்பத் தக்கவரா யிரா நின்றார்; |
| 1762 | பெரிய திருமொழி || (9-2–பொன்னிவர் மேனி) (திரு நாகை) - (தலைவனின் உருவெளிப்பாட்டில் நலியும் தலைவி தோழியிடம் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இவர் வடிவு இருக்கும் படியைச் சொல்லப் புக்கால் கடல் போலே இரா நின்றது – பிரதி பஷத்தை கனல் எழக் காய்கிற ஸ்ரீ திரு ஆழியை ஒரு கையிலே ஏந்தி –தமக்கு அடங்காத ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை மற்றைக் கையிலே உடையராய் இருந்தார் – இத்தைச்சொல்லி நம்மால் கரையிலே நிற்கும் அத்தனை அல்லது நம்மால் உள் இழிந்து பேசப் போகாது) 5 | கோழியும் கூடலும் கோயில் கொண்ட கோவலரே யொப்பர் குன்றமன்ன
பாழி யம் தோளுமோர் நான்குடையர் பண்டிவர் தம்மையும் கண்டறியோம்
வாழியரோ விவர் வண்ணம் எண்ணில் மா கடல் போன்றுளர் கையில் வெய்ய
ஆழி யொன்றேந்தியோர் சங்கு பற்றி அச்சோ ஒருவர் அழகிய வா –9-2-5 | பதவுரை Show / Hideகோழியும், Kozhiyum - உறையூரையும் (- (அச்சோ ஒருவர் அழகிய ஆ-.)) கூடலும், Koodalum - தென் மதுரையையும் கோயில் கொண்ட, Koyil Konda - இருப்பிடமாகவுடைய கோவலரே ஒப்பர், Kovalare Oppar - கோபாலக்ருஷ்ணன் போன்றிருக்கின்றார் இவர்; குன்றம் அன்ன, Kundram Anna - மலை போன்ற பாழி, Paazhi - வலிமை பொருந்திய அம், Am - அழகிய ஓர் நான்கு தோளும், Oor Naanthu Tholum - விலக்ஷணமான நான்கு திருத்தோள்களையும் உடையர், Udaiyar - உடையராயிருக்கின்றார்; இவர்தம்மை, Ivarthammai - இவரை பண்டும், Pandum - முன்பொருகாலும் கண்டு அறியோம், Kandu Ariyom - நாம் பார்த்ததில்லை; வாழியரோ, Vazhiyaro - பல்லாண்டு பல்லாண்டு; (இவர் வாழ்ந்திடுக.) இவர் வண்ணம் எண்ணில், Ivar Vannam Ennil - இவருடைய வடிவிருக்கும் படியை நினைக்கப்புக்கால் மா கடல் போன்று உளர், Maa Kadal Poonru Ular - பெரிய கடல்போலே யிருக்கின்றாரிவர்; கையில், Kaiyil - ஒரு திருக்கையில் வெய்ய, Veyya - தீக்ஷ்ணமான ஆழி ஒன்று ஏந்தி, Aazhi Onru Aendhi - ஒரு திருவாழியை ஏந்தியும் (மற்றொரு திருக்கையிலே) ஓர் சங்கு பற்றி, Oru Sangu Patri - ஒரு சங்கத்தைத் தரித்துக் கொண்டும். |
| 1763 | பெரிய திருமொழி || (9-2–பொன்னிவர் மேனி) (திரு நாகை) - (தலைவனின் உருவெளிப்பாட்டில் நலியும் தலைவி தோழியிடம் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கண்டாரை தம் வசமாக்கி தன் காலிலே விழ விட்டுக் கொள்ள அஞ்சன கிரி போலேயுமாய் இரா நின்றார் – வாக்குக்கு அவிஷயமான விஷயத்தில் நான் எத்தைச் சொல்லுவது) 6 | வெஞ்சின வேழம் மருப்பொசித்த வேந்தர் கொல் ஏந்திழையார் மனத்தை
தஞ்சுடையாளர் கொல் யான் அறியேன் தாமரைக் கண்கள் இருந்தவாறு
கஞ்சனை யஞ்ச முன் கால் விசித்த காளையராவர் கண்டார் வணங்கும்
அஞ்சன மா மலையேயும் ஒப்பர் அச்சோ ஒருவர் அழகிய வா –9-2-6 | பதவுரை Show / Hideவெம் சினம் வேழம், Vem Sinam Vezham - வெவ்விய சீற்றத்தை யுடைய (குவலயாபீட மென்னும்) யானையினது மருப்பு, Maruppu - கொம்பை ஒசித்த, Osiththa - முறித்தொழித்த வேந்தர் கொல், Vendar Kol - பிரபுவோ இவர்! ஏந்து இழையார், Aendhu Izhaiyar - தரிக்கப்படும் ஆபரணங்களை யுடையரான பெண்டிருடைய மனத்தை, Manaththai - நெஞ்சை தஞ்சு உடையாளர் கொல், Thanju Udaiyalar Kol - தஞ்சமாகவுடையவரோ இவர்! யான் அறியேன், Yaan Ariyeen - நான் அறிகின்றிலேன்; தாமரை கண்கள் இருந்த ஆறு, Thamarai Kangkal Irundha Aaru - தாமரைபோன்ற திருக்கண்களிருக்கும்படி என்னே! முன், Mun - முன்பு கஞ்சன், Kanjan - கம்ஸன் அஞ்ச, Anja - பயப்படும்படியாக கால் விசைத்த, Kaal Visaittha - (தனது) திருத்தாள்களின் வலிமையைக் காட்டின காளையர் ஆவர், Kaalaivar Aavar - இளையவராக இருக்கின்றார்; கண்டார் வணங்கும், Kandaar Vanangum - கண்டவர்களெல்லாரும் வணங்குதற்குரியவராய் அஞ்சனம் மாமலை யேயும் ஒப்பர், Anjanam Maamalai Yeyum Oppar - பெரிய வொரு அஞ்சனமலை போன்றிருப்பவரான ஒருவர், Oruthar - ஒருபெரியவருடைய அழகிய ஆ, Azhagiya Aa - ஸௌந்தரியமானது அச்சோ, Achcho - ஆச்சரியம்!. |
| 1764 | பெரிய திருமொழி || (9-2–பொன்னிவர் மேனி) (திரு நாகை) - (தலைவனின் உருவெளிப்பாட்டில் நலியும் தலைவி தோழியிடம் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வடிவைப் பார்த்த வாறே மேக் சகலங்கள் அன்றிக்கே எல்லாம் ஒன்றாகத் திரண்டு வர்ஷிக்கையிலே ஒருப்பட்ட மேகம் போலே இரா நின்றது –விசஜாதீயத்துக்கு சஜாதியங்களில் சில வற்றை சொன்ன இடம் என் சொன்னோம் ஆனோம்) 7 | பிணியவிழ் தாமரை மொட்டலர்த்தும் பேரருளாளர் கொல் யான் அறியேன்
பணியும் என்னெஞ்சம் இது என் கொல் தோழி பண்டிவர் தம்மையும் கண்டறியோம்
அணி கெழு தாமரை யன்ன கண்ணும் அங்கையும் பங்கயம் மேனி வானத்து
அணி கெழு மா முகிலே யும் ஒப்பர் அச்சோ ஒருவர் அழகிய வா –9-2-7 | பதவுரை Show / Hideபிணி அவிழ் தாமரை மொட்டு அலர்த்தும், Pini Avizh Thaamarai Mottu Alarthum - பாவந்தொலையப் பெற்ற (மஹான்களினுடைய ஹ்ருதய புண்டரீக மென்கிற தாமரை மொக்கை விகஸிப்பிக்கவல்ல (- (அச்சோ ஒருவர் அழகிய ஆ-.)) பேரருளாளர் கொல், Perarulalar Kol - பேரருளாளப் பெருமானோ இவர்!, யான் அறியேன், Yaan Ariyeen - நான் அறிகின்றிலேன்; தோழீ, Thozhi - வாராய் தோழியே!, என் நெஞ்சம், En Nenjam - என்னுடைய நெஞ்சானது பணியும், Paniyum - தானே வணங்கா நின்றது; இது என்கொல், Idhu Enkol - இது என்னோ? ; இவர் தம்மை, Ivar Thammai - இவரை பண்டும் கண்டு அறியோம், Pandum Kandu Ariyom - முன்னமொருகாலும் பார்த்தில்லை கண்ணும், Kannum - இவருடைய (திருக்கண்கள்) அணி கெழு, Ani Kezhu - அழகுமிக்க தாமரை அன்ன, Thaamarai Anna - தாமரை போலிருக்கின்றன; அங்கையும், Angaiyum - அங்கைகளும் பங்கயம், Pangayam - தாமரையே மேனி, Meeni - திருமேனி விஷயத்தில் வானத்து அணி கெழுமா முகிலேயும் ஒப்பர், Vaanathu Ani Kezhumaa Mukileyum Oppar - ஆகாசத்திலே அழகு மிக்கெழுந்த காளமேகத்தை ஒத்திருக்கின்றார்; |
| 1765 | பெரிய திருமொழி || (9-2–பொன்னிவர் மேனி) (திரு நாகை) - (தலைவனின் உருவெளிப்பாட்டில் நலியும் தலைவி தோழியிடம் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (என்னை விலக்கப் பார்க்கிற நீங்களும் வந்து-காணுங்கோள் -உங்களால் தான் விடலாமாகில் – ஸ்ரீ திருவடி திருத் தோளில் இருந்தால் இருக்கும் அழகு தான் இப்படியேயோ) 8 | மஞ்சுயர் மா மதி தீண்ட நீண்ட மாலிரும் சோலை மணாளர் வந்து என்
நெஞ்சுள்ளும் கண்ணுள்ளும் நின்று நீங்கார் நீர் மலையார் கொல் நினைக்க மாட்டேன்
மஞ்சுயர் பொன் மலை மேல் எழுந்த மா முகில் போன்றுளர் வந்து காணீர்
அஞ்சிறைப் புள்ளும் ஓன்று ஏறி வந்தார் அச்சோ ஒருவர் அழகிய வா –9-2-8 | பதவுரை Show / Hideமஞ்சு உயர், Manju Uyar - மேகமண்டலத்தளவும் உயர்ந்ததாய் (- (அச்சோ ஒருவர் அழகிய ஆ-.)) மா மதி தீண்ட நீண்ட, Maa Mathi Theenda Neenda - சந்திரன் படும்படியாக நீண்டிருப்பதான மாலிருஞ் சோலை, Maalirunj Cholai - திருமாலிருஞ்சோலையி லெழுந்தருளியிருக்கிற மணாளர், Manalar - மணவாளப்பிள்ளை வந்து, Vandhu - அவ்விடத்தை விட்டுவந்து என் நெஞ்சுள்ளும், En Nenjullum - என்னுடைய நெஞ்சினள்ளும் கண்ணுள்ளும், Kannullum - கண்களினுள்ளும் நின்று நீங்கார், Ninru Neengaar - நிலைநின்று நீங்கமாட்டா திருக்கின்றார்; நீர்மலையார் கொல், Neermalaiyaar Kol - திருநீர்மலை யெம்பெருமானோ இவர்! ; நினைக்க மாட்டேன், Ninaikka Maatten - இன்னாரென்று தெரிந்துணரகில்லேன்; அம் சிறை புள்ளும் ஒன்று, Am Sirai Pullum Ondru - அழகிய சிறகுகளை யுடைய பெரியதிருவடியின் மீது ஏறி வந்தார், Eri Vandhaar - ஏறிக்கொண்டு எழுந்தருளியிருக்கிற இவர் மஞ்சு உயர் பொன் மலைமேல் எழுந்த, Manju Uyar Pon Malaimel Ezhundha - மேகமண்டலத்தளவும் ஓங்கினவொரு பொன்மலையின் மேல் எழுந்த மா முகில் போன்று உளர், Maa Mukil Poondru Ular - காளமேகம்போன்றிருக்கின்றார்; வந்து காணீர், Vandhu Kaanir - வந்து ஸேவியுங்கள்; |
| 1766 | பெரிய திருமொழி || (9-2–பொன்னிவர் மேனி) (திரு நாகை) - (தலைவனின் உருவெளிப்பாட்டில் நலியும் தலைவி தோழியிடம் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (திரு முகத்திலே விழித்த வாறே-ஆபத் சகர் என்று தோற்றும்படி இரா நின்றார்) 9 | எண்டிசையும் எறி நீர்க் கடலும் ஏழுலகும் உடனே விழுங்கி
மண்டியோர் ஆலிலைப் பள்ளி கொள்ளும் ஆயர் கொல் மாயம் அறிய மாட்டேன்
கொண்டல் நன்மால் வரையேயும் ஒப்பர் கொங்கலர் தாமரைக் கண்ணும் வாயும்
அண்டத்தமரர் பணிய நின்றார் அச்சோ ஒருவர் அழகிய வா –9-2-9 | பதவுரை Show / Hideஎண் திசையும் எறி நீர், En Thisaiyum Erhi Neer - எட்டுத்திசைகளிலும் வந்து அலையெறிகின்ற நீரையுடைய (- (ஒப்பர்ஒத்திருக்கின்றார்;) (ஒருவர், அழகிய ஆ அச்சோ!-.-)) கடலும், Kadalum - கடல்களையும் ஏழ் உலகும், Ezhu Ulagum - ஸப்தலோகங்களையும் உடனே விழுங்கி, Udane Vizhunki - (பிரளயத்தில்) ஒருசேர விழுங்கி ஓர் ஆல் இலை, Oor Aal Ilai - ஒரு ஆலிலையிலே மண்டி, Mandi - பொருந்தி பள்ளி கொள்ளும், Palli Kollum - துயில் கொண்டருளின மாயர் கொல், Maayar Kol - ஆச்சரியபூதரோ இவர்! ; மாயம், Maayam - (இவருடைய) ஆச்சரியநிலைமையை அறியமாட்டேன், Ariyamaatten - அறிகின்றிலேன்; கொண்டல், Kondal - நீர்கொண்ட மேகத்தையும் நல் மால் வரையேயும், Nal Maal Varaiyeum - அழகிய பெரிய மலையையும் கண்ணும் வாயும், Kannum Vaayum - (இவருடைய) திருக்கண்களும் திருமுகமும் கொங்கு அலர் தாமரை, Kongu Alar Thaamarai - பரிமளம் மிக்க தாமரையாயே யிருக்கின்றன; அண்டத்து அமரர், Andaththu Amarar - பரமபதத்திலுள்ள நித்யஸூரிகள் பணிய நின்றார், Paniya Nindraar - வந்து தொழும்படி நிற்கின்ற |
| 1767 | பெரிய திருமொழி || (9-2–பொன்னிவர் மேனி) (திரு நாகை) - (தலைவனின் உருவெளிப்பாட்டில் நலியும் தலைவி தோழியிடம் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தன்னை பிராபிக்கைக்கு வழி இட்டுக் கொடுத்த ஜகத் காரண பூதனானவன் –ஸ்ரீ திரு நாகையிலே தன் அழகாலே விட ஒண்ணாத படி பண்ணிக் கொண்டு நின்றான் ஆயிற்று – தம்மால் அளவிட ஒண்ணாமையால் பிரித்து அனுபவிக்கிறார்-உயிர் தோழியும் தானுமாய் அனுபவித்த ஏழு பாடல்கள் எல்லாரையும் குறித்த இரண்டு பாடல்கள்-பல ஸ்ருதி ஒன்றும் இத்தை அப்யசிக்க வல்லார்கள் இங்கும் கோலின பலங்களும் பெற்று இது தன்னின் பலமான ஸ்ரீ நித்ய சூரிகளோடு ஒரு கோவையாய் இனியராகப் பெறுவார்கள்) 10 | அன்னமும் கேழலும் மீனுமாய ஆதியை நாகை யழகியாரை
கன்னி நன் மா மதிள் மங்கை வேந்தன் காமரு சீர்க் கலிகன்றி குன்றா
வின்னிசையால் சொன்ன செஞ்சொல் மாலை ஏழும் இரண்டும் ஓர் ஒன்றும் வல்லார்
மன்னவராய் யுலகாண்டு மீண்டும் வானவராய் மகிழ் எய்துவரே –9-2-10 | பதவுரை Show / Hideஅன்னமும், Annamum - ஹம்ஸமாகவும் கேழலும், Keelalum - வராஹமாகவும் மீனும், Meenum - மத்ஸ்யமாகவும் ஆய, Aaya - அவதரித்த ஆதியை, Aadhiyai - ஜகத்காரணபூதரும் நாகை, Naagai - திருநாகையில் எழுந்தருளியிருக்கின்ற அழகியாரை, Azhagiyaarai - அழகிற்சிறந்தவருமான ஸௌந்தர்யராஜப் பெருமாளைக் குறித்து, கன்னி நல் மா மதிள் மங்கை வேந்தன், Kanni Nal Maa Madil Mangai Vendan - அழிவற்ற நல்ல பெரிய மதில்களையுடைய திருமங்கைக்குத் தலைவரும் காமரு சீர், Kaamaru Seer - விரும்பத்தக்க குணங்களையுடையவருமான கலிகன்றி, Kalikanri - கலியன் குன்றா இன் இசையால் சொன்ன, Kundraa In Isaiyaal Sonna - குறைவில்லாத இனிய இசையுடனே அருளிச்செய்த செம் சொல் மாலை, Sem Sol Maalai - அழகிய சொல்மாலையாகிய ஏழும் இரண்டும் ஓர் ஒன்றும், Ezham Irandum Oor Ondrum - இப்பத்துப்பாசுரங்களையும் வல்லார், Vallar - கற்றுவல்லவர்கள் மன்னவர் ஆய், Mannavar Aayi - (இவ்வுலகில்) சக்கரவர்த்திகளாயிருந்து உலகு ஆண்டு, Ulaku Aandu - அரசாட்சிபுரிந்து மீண்டும், Meendum - அதற்குமேலும் வானவர் ஆய், Vaanavar Aayi - முக்தர்களாகி மகிழ்வு எய்துவர், Magizhvu Eydhuvar - ஆனந்தமடைவர்கள். |