| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 264 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-ஐந்தாம் திருமொழி - அட்டுக்குவி (கண்ணன் கோவர்த்தனகிரியை குடையாகக்கொண்டு கல்மழை தடுத்து ஆயரையும் ஆநிரையையும் பாதுகாத்தல்) எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 1 | அட்டுக் குவி சோற்றுப் பருப் பதமும் தயிர் வாவியும் நெய் யளறும் அடங்கப் பொட்டத் துற்று மாரிப்பகை புணர்த்த பொரு மா கடல் வண்ணன் பொறுத்த மலை வட்டத் தடங்கண் மட மான் கன்றினை வலை வாய்ப் பற்றிக் கொண்டு குறமகளிர் கொட்டைத் தலைப் பால் கொடுத்து வளர்க்கும் கோவர்த்தன மென்னும் கொற்றக் குடையே–3-5-1 | குற மகளிர்,Kura Magalir - குறப் பெண்கள், வட்டம் தட கண்,Vattam Thada Kan - வட்ட வடிவான பெரிய கண்களை யுடையதும் மடம்,Madam - (தனது தாய்க்கு) வசப் பட்டிருப்பதுமான மான் கன்றினை,Maan Kanrinai - மான் குட்டியை வலை வாய்,Valai Vaai - வலையிலே பற்றிக் கொண்டு,Patri Kondu - அகப் படுத்தி கொட்டை,Kottai - (பின்பு அதனைத் தங்களுடையதாக அபிமானித்து, அதற்கு) பஞ்சுச் சுருளின் தலை,Thalai - நுனியாலே பால்,Paal - பாலை கொடுத்து,Koduthu - எடுத்து ஊட்டி வளர்க்கும்,Valarkkum - வளர்க்கைக்கு இடமான கோவர்த்தனம் என்னும்,Govarthanam Ennum - ‘கோவர்த்தநம்’ என்ற பெயரை யுடையதும் கொற்றம்,Kotram - வெற்றியை யுடையதுமான குடை,Kudai - குடையானது (யாதெனில்?) அட்டு,Attu - சமைத்து குவி,Kuvi - குவிக்கப் பட்ட சோறு,Sooru - சோறாகிற பருப்பதமும்,Paruppathamum - பர்வதமும் தயிர்,Thayir - தயிர்த் திரளாகிற வாவியும்,Vaaviyum - ஓடையும் நெய் அளறும்,Ney Alarum - நெய்யாகிற சேறும் அடங்க,Adanga - ஆகிய இவற்றை முழுதும் பொட்ட,Potta - விரைவாக (ஒரே கபளமாக) துற்றி,Thutri - அமுது செய்து விட்டு, மாரி,Maari - (இப்படி செய்கையினாலே இந்திரனுக்குக் கோபம் மூட்டி அவன் மூலமாக) மழையாகிற பகை,Pagai - பகையை புணர்த்த,Punartha - உண்டாக்கின பொரு மா கடல் வண்ணன்,Poru Maa Kadal Vannan - அலை யெறிகிற பெரிய கடலினது நிறம் போன்ற நிறத்தனான கண்ணபிரான் பொறுத்த,Porutha - (தனது திருக் கைவிரலால்) தூக்கின மலை,Malai - மலையாம். |
| 265 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-ஐந்தாம் திருமொழி - அட்டுக்குவி (கண்ணன் கோவர்த்தனகிரியை குடையாகக்கொண்டு கல்மழை தடுத்து ஆயரையும் ஆநிரையையும் பாதுகாத்தல்) எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 2 | வழு வொன் றுமிலாச் செய்கை வானவர் கோன் வலிப்பட்டு முனிந்து விடுக்கப்பட்டு மழை வந்து எழு நாள் பெய்து மாத்தடுப்ப மதுசூதன் எடுத்து மறித்த மலை இழவு தரியாத தோரீற்றுப் பிடி இளஞ்சீயம் தொடர்ந்து முடுகுதலும் குழவி யிடைக்காலிட் டெதிர்ந்து பொரும் கோவர்த்தன மென்னும் கொற்றக் குடையே–3-5-2 | ஒன்றும் வழு இல்லா செய்கை,Ondrum Vazh Illa Seigai - (இந்திரபட்டம் பெறுதற்காகச் செய்த ஸாதநாம்சத்தில்) ஒரு குறையுமற்ற செய்கைகளை யுடைய வானவர் கோன,Vaanavar Kon - தேவேந்திரனுடைய வலி பட்டு,Vali Pattu - பலாத்காரத்துக்கு உள் பட்டும் முனிந்து விடுக்கப்பட்ட,Muninthu Vidukkapatta - (அவ் விந்திரனால்) கோபத்துடன் ஏவப்பட்டுமுள்ள மழை,Mazhai - மேகங்களானவை வந்து,Vandhu - (அகாலத்திலே குமுறிக் கொண்டு) வந்து ஏழு நாள் பெய்து,Ezhu Naal Peidhu - ஏழுநாளளவும் (இடைவிடாமல்) வர்ஷித்து மா தடுப்ப,Maa Thaduppa - பசுக்களை (வெளியே போகக் கூடாதபடி) தகைய மதுசூதன்,Madhusoodhan - கண்ணபிரான் எடுத்து,Eduthu - (ஸர்வ ஜநங்களையும் காப்பதற்காக அடி மண்ணோடு கிளப்பி) எடுத்து மறித்த,Maritha - தலை கீழாகப் பிடித்தருளின மலை,Malai - மலையானது (எது என்னில்;) இள சீயம்,Ila Seeyam - சிங்கக் குட்டியானது தொடர்ந்து,Thodarndhu - ( யானைக் குட்டியை நலிவதாகப்) பின் தொடர்ந்து வந்து முடுகுதலும்,Muduguthalum - எதிர்த்த வளவிலே, இழவு தரியாதது ஓர் ஈற்றுப்பிடி,Izhal Thariyaadathu Oor Eetrupidi - (தன் குட்டியின்) வருத்தத்தைப் பொறுக்க மாட்டாத (அக் குட்டியைப்) பெற்ற பெண் யானை யானது குழவி,Kuzhavi - (அந்தக்) குட்டியை கால் இடை இட்டு,Kaal Idai Ittu - (தனது) நான்கு கால்களின் நடுவில் அடக்கிக் கொண்டு எதிர்ந்து,Edhirndhu - (அந்தச் சிங்கக் குட்டியோடு) எதிர்த்து பொரும்,Porum - போராடப்பெற்ற கோவர்த்தனம்,Govarthanam - குடையே-. |
| 266 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-ஐந்தாம் திருமொழி - அட்டுக்குவி (கண்ணன் கோவர்த்தனகிரியை குடையாகக்கொண்டு கல்மழை தடுத்து ஆயரையும் ஆநிரையையும் பாதுகாத்தல்) எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 3 | அம்மைத் தடங்கண் மட வாய்ச்சியரும் ஆனாயரும் ஆநிரையும் அலறி எம்மைச் சரணேன்று கொள்ளென்றிரப்ப இலங்காழிக் கை யெந்தை எடுத்த மலை தம்மைச் சரணென்ற தம் பாவையரைப் புன மேய்கின்ற மானினம் காண்மினென்று கொம்மைப் புயக் குன்றர் சிலை குனிக்கும் கோவர்த் தனமென்னும் கொற்றக் குடையே–3-5-3 | அம்,Am - அழகிய மை,Mai - மை அணிந்த தட,Thada - விசாலமான கண்,Kann - கண்களையும் மடம்,Madam - ‘மடப்பம்’ என்ற குணத்தை யுமுடைய ஆய்ச்சியரும்,Aaychiyarum - இடைச்சிகளும் ஆன் ஆயரும்,Aan Aayarum - கோபாலர்களும் ஆநிரையும் ,Aanirayum - பசுக்கூட்டமும்ட்டமும் அலறி,Alari - (மழையின் கனத்தால்) கதறிக் கூப்பிட்டு எம்மை சரண் என்று கொள் என்று,Emmai Saran Endru Kol Endru - (‘எம்பிரானே! நீ) எமக்கு ரக்ஷகனாயிருக்குந் தன்மையை எற்றுக் கொள்ள வேணும்’ என்று இரப்ப,Irappa - பிரார்த்திக்க, இலங்கு,Ilangu - (அவ்வேண்டுகோளின்படியே) விளங்கா நின்ற ஆழி,Aazhi - திருவாழி ஆழ்வானை கை,Kai - கையிலே உடையனாய் எந்தை,Endhai - எமக்கு ஸ்வாமியான கண்ணபிரான் எடுத்த,Edutha - (அவற்றை ரக்ஷிப்பதற்காக) எடுத்த மலை,Malai - மலையாவது (எது என்னில்?); கொம்மை புயம்,Kommai Puyam - பருத்த புஜங்களை யுடைய குன்றர்,Kunrar - குறவர்கள், தம்மை,Thammai - தங்களை சரண் என்ற,Saran Endra - சரணமென்று பற்றியிருக்கிற தம் பாவையரை,Tham Paavaiyarai - தங்கள் பெண்களை (கொல்லையிலே வியாபரிக்கிற அப்பெண்களின் கண்களைக் கண்டு இவை மான்பேடைகள் என்று ப்ரமித்து) புனம் மேய்கின்ற மான் இனம் காண்மின் என்று,Punam Meikindra Maan Inam Kaanmin Endru - ‘(நம்முடைய) கொல்லையை மேய்ந்து அழிக்கின்ற மான் கூட்டங்களைப் பாருங்கோள்’ என்று (ஒருவர்க்கொருவர் காட்டி) சிலை,Silai - (அவற்றின்மேல் அம்புகளை விடுவதாக) (தமது) வில்லை குனிக்கும்,Kunikkum - வளையா நின்றுள்ள |
| 267 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-ஐந்தாம் திருமொழி - அட்டுக்குவி (கண்ணன் கோவர்த்தனகிரியை குடையாகக்கொண்டு கல்மழை தடுத்து ஆயரையும் ஆநிரையையும் பாதுகாத்தல்) எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 4 | கடு வாய்ச் சின வெங் கண் களிற்றினுக்குக் கவள மெடுத்துக் கொடுப்பானவன் போல் அடி வாயுறக் கை யிட்டு எழப் பறித்திட்டு அமரர் பெருமான் கொண்டு நின்ற மலை கடல் வாய்ச் சென்று மேகம் கவிழ்ந் திறங்கிக் கதுவாய்ப் பட நீர் முகந்தேறி எங்கும் குடவாய்ப் பட நின்று மழை பொழியும் கோவர்த்தன மென்னும் கொற்றக் குடையே–3-5-4 | கடுவாய்,Kaduvaai - பயங்கரமான வாயையும் சினம்,Sinam - மிக்க சீற்றத்தையும் வெம் கண்,Vem Kan - தீக்ஷ்ணமான கண்களை யுமுடைய களிற்றினுக்கு,Kalittrinukku - ஒரு யானைக்கு கவளம்,Kavalam - சோற்றுக் கபளத்தை எடுத்து,Edukku - திரட்டி யெடுத்து கொடுப்பான் அவன் போல்,Koduppaan Avan Pol - கொடுக்கின்ற யானைப் பாகனைப் போல, அமரர் பெருமான்,Amarar Perumaan - தேவர்களுக்குத் தலைவனான கண்ணபிரான் கை,Kai - (தனது) திருக் கைகளை அடிவாய் உற இட்டு,Adivaai Ura Ittu - (மலையின்) கீழ் வேர்ப் பற்றிலே உறும் படியாகச் செலுத்தி (மற்றொரு திருக் கையினாலே மேலே பிடித்து) எழ பறித்திட்டு,Eza Parithittu - கிளரப் பிடுங்கி கொண்டு நின்ற,Kondu Nindra - (தானே) தாங்கிக் கொண்டு நின்ற மலை,Malai - மலையாவது (எது? என்னில்;) மேகம்,Megam - மேகங்கள் கடல் வாய் சென்று,Kadal Vaai Sendru - கடலிடத்துச் சென்று இறங்கி கவிழ்ந்து,Irangi Kavizhnthu - (அங்கு) இறங்கிக் கவிழ்ந்து கிடந்து கதுவாய்ப்பட,Kaduvaaippada - (கடல்) வெறுந்தரையாம்படி நீர்,Neer - (அங்குள்ள) நீர் முழுவதையும் முகந்து,Mukandhu - மொண்டு கொண்டு ஏறி,Eri - (மீண்டும் ஆகாசத்திலே) ஏறி எங்கும்,Engum - எல்லாவிடத்தும் குடம் வாய்ப்பட நின்று,Kudam Vaippada Nindru - குடங்களில் நின்றும் நீரைச் சொரியுமா போலே மழை பொழியும்,Mazhai Pozhiyum - மழை பொழியா நிற்கப் பெற்ற கோவர்,Kovar - குடையே-. |
| 268 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-ஐந்தாம் திருமொழி - அட்டுக்குவி (கண்ணன் கோவர்த்தனகிரியை குடையாகக்கொண்டு கல்மழை தடுத்து ஆயரையும் ஆநிரையையும் பாதுகாத்தல்) எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 5 | வானத் திலுள்ளீர் வலியீர் உள்ளீரேல் அறையோ வந்து வாங்குமி னென்பவன் போல் ஏனத் துருவாகிய ஈசன் எந்தை இடவனெழ வாங்கி யெடுத்த மலை கானக் களியானை தன் கொம் பிழந்து கது வாய் மதம் சோரத் தன் கை யெடுத்து கூனல் பிறை வேண்டி அண்ணாந்து நிற்கும் கோவர்த் தனமென்னும் கொற்றக் குடையே–3-5-5 | ஏனத்து உரு ஆகிய,Eenathu Uru Aahiya - (முன்பு ஒரு காலத்திலே) வராஹ ரூபம் கொண்டருளின ஈசன்,Eesan - ஸ்வாமியாயும் எந்தை,Enthai - எனக்குத் தந்தையாயுமுள்ள கண்ணபிரான், வானத்தில் உள்ளீர்,Vaanaththil Ullir - “மேலுலகத்திலிருப்பவர்களே! (நீங்கள்) வலியீர் உள்ளீர் எல்,Valiyeer Ullir El - (என்னோடொக்க) வல்லமை யுள்ளவர்களா யிருப்பீர்களாகில் அறையோ,Arayo - அறையோ அறை!! வந்து,Vandhu - (இங்கே) வந்து வாங்குமின்,Vaangumin - (இம் மலையைக் கையால்) தாங்கிக் கொண்டு நில்லுங்கள்” என்பவன் போல்,Enbavan Pol - என்று, சொல்லுகிறவன் போல இடவன்,Idavan - ஒரு மண் கட்டி போலே எழ வாங்கி,Eza Vaangi - (அநாயஸமாகக்) கிளரப் பிடுங்கி எடுத்த மலை,Eduktha Malai - எடுத்துக் கொண்டு நிற்கப் பெற்ற மலையாவது; கானம்,Kaanam - காட்டு நிலங்களில் களி,Kali - செருக்கித் திரியக் கடவதான யானை,Yaanai - ஒரு யானையானது தன் கொம்பு,Than Kombu - (கரை பொருது திரியும் போது ஓரிடத்தில் குத்துண்டு முறிந்த) தன் தந்தத்தை இழந்து,Izhandhu - இழந்ததனால் கதுவாய்,Kaduvaai - அக் கொம்பு முறிந்து புண்பட்ட வாயிலே மதம்,Madham - மத நீரானது சோர,Soora - ஒழுகா நிற்க தன் கை,Than Kai - தனது துதிக்கையை எடுத்து,Edukthu - உயரத் தூக்கி கூன் நல் பிறை,Koon Nal Pirai - (ஆகாசத்தில் தோற்றுகின்ற) வளைந்த அழகிய பிறையை (தானிழந்த கொம்பாக ப்ரமித்து) வேண்டி,Vendi - (அதைப் பறித்துக் கொள்ள) விரும்பி அண்ணாந்து நிற்கும்,Annaandhu Nirkum - மேல் நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கப் பெற்ற கோவர்,Kovar - குடையே-. |
| 269 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-ஐந்தாம் திருமொழி - அட்டுக்குவி (கண்ணன் கோவர்த்தனகிரியை குடையாகக்கொண்டு கல்மழை தடுத்து ஆயரையும் ஆநிரையையும் பாதுகாத்தல்) எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 6 | செப்பா டுடைய திருமாலவன் தன் செந்தாமரைக் கை விரலைந்தினையும் கப்பாக மடுத்து மணி நெடுந்தோள் காம்பாகக் கொடுத்துக் கவித்த மலை எப்பாடும் பரந்திழி தெள்ளருவி இலங்கு மணி முத்து வடம் பிறழ குப்பாயமென நின்று காட்சி தரும் கோவர்த் தனமென்னும் கொற்றக் குடையே–3-5-6 | செப்பாடு உடைய,Seppaadu Udaiya - செவ்வைக் குணத்தை யுடையனாய் திருமால் அவன்,Thirumaal Avan - ச்ரியஃபதியான அக்கண்ணபிரான் தன்,Than - தன்னுடைய செம் தாமரை கை,Sem Thaamarai Kai - செந்தாமரை மலர் போன்ற திருக்கையிலுள்ள விரல் ஐந்தினையும்,Viral Aindhinaiyum - ஐந்து விரல்களையும் கப்பு ஆக மடுத்து,Kappu Aaga Maduthu - (மலையாகிற குடைக்குக் காம்படியிலுண்டான) கிளைக் கொம்புகளாக அமைத்து மணி நெடு தோள்,Mani Nedu Thol - அழகிய நீண்ட திருத் தோள்களை காம்பு ஆக கொடுத்து,Kaambu Aaga Koduthu - (அந்த மலைக் குடைக்குத் தாங்கு) காம்பாகக் கொடுத்து கவித்த மலை,Kavitha Malai - தலை கீழாகக் கவித்த மலையாவது எப்பாடும்,Eppaaduum - எல்லாப் பக்கங்களிலும் பரந்து இழி,Parandhu Izhi - பரவிப் பெருகா நின்ற தெள்ளருவி,Thellaruvi - தெளிந்த சுனை நீரருவிகளானவை இலங்கு மணி முத்துவடம் பிறழ,Ilangu Mani Muthuvadam Pirazha - விளங்கா நின்ற அழகிய முக்தாஹரம் போலத் தனித் தனியே ப்ரகாசிக்க குப்பாயம் என நின்று,Kuppayam Ena Nindru - (கண்ண பிரானுக்கு இது ஒரு) முத்துச் சட்டையென்று சொல்லும்படியாக காட்சி தரும்,Kaatchi Tharum - காணப்படப் பெற்ற கோவர்,Kovar - குடையே-. |
| 270 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-ஐந்தாம் திருமொழி - அட்டுக்குவி (கண்ணன் கோவர்த்தனகிரியை குடையாகக்கொண்டு கல்மழை தடுத்து ஆயரையும் ஆநிரையையும் பாதுகாத்தல்) எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 7 | படங்கள் பலவுமுடைப் பாம்பரையன் படர் பூமியைத் தாங்கிக் கிடப்பவன் போல் தடங்கை விரலைந்தும் மலர வைத்துத் தாமோதரன் தாங்கு தட வரை தான் அடங்கச் சென்று இலங்கையை யீடழித்த அனுமன் புகழ் பாடித் தம் குட்டன்களை குடங்கைக் கொண்டு மந்திகள் கண் வளர்த்தும் கோவர்த் தனமென்னும் கொற்றக் குடையே–3-5-7 | படங்கள் பலவும் உடை,Padangal Palavum Udai - பல படங்களை யுடைய பாம்பு அரையன்,Paambu Araiyan - ஆதிசேஷன் படர் பூமியை,Padar Bhoomiyai - பரம்பின பூமியை தாங்கி கிடப்பவன் போல்,Thaangi Kidappavan Pol - (தன் தலைகளினால்) தாங்கிக் கொண்டிருப்பது போல, தாமோதரன்,Thaamodharan - கண்ணபிரான் தடங்கை,Thadangkai - (தனது) பெரிய திருக் கைகளிலுள்ள விரல் ஐந்தும்,Viral Aindhum - ஐந்து விரல்களையும் மலர வைத்து,Malar Vaithu - மலர்த்தி (விரித்து) தாங்கு,Thaangu - (அவற்றாலே) தாங்கப் பெற்ற தடவரை,Thadavarai - பெரிய மலையாவது; மந்திகள்,Mandhigal - பெண் குரங்குகளானவை, இலங்கையை சென்று,Ilangaiyai Sendru - லங்காநகரத் தேறப்போய் அடங்க,Adanga - அவ்வூர் முழுவதையும் ஈடு அழித்த,Eedu Azhitha - சீர்கெடும்படி பங்கப்படுத்தின அனுமன்,Anuman - சிறிய திருவடியினுடைய புகழ்,Pugazh - கீர்த்தியை பாடி,Paadi - பாடிக் கொண்டு தம் குட்டன்களை,Tham Kuttanagalai - தமது (குரங்குக்) குட்டிகளை குடங்கைக் கொண்டு,Kudangai Kondu - கைத்தலத்தில் படுக்க வைத்துக் கொண்டு கண் வளர்த்தும்,Kann Valarthum - (சீராட்டி) உறங்கப் பெற்ற கோவர்,Kovar - குடையே-. |
| 271 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-ஐந்தாம் திருமொழி - அட்டுக்குவி (கண்ணன் கோவர்த்தனகிரியை குடையாகக்கொண்டு கல்மழை தடுத்து ஆயரையும் ஆநிரையையும் பாதுகாத்தல்) எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 8 | சலமா முகில் பல் கணப் போர்க் களத்துச் சர மாரி பொழிந்து எங்கும் பூசலிட்டு நலிவானுறக் கேடகம் கோப்பவன் போல் நாராயணன் முன் முகம் காத்த மலை இலை வேய் குரம்பைத் தவமா முனிவர் இருந்தார் நடுவே சென்று அணார் சொறிய கொலை வாய்ச் சின வேங்கைகள் நின்றுறங்கும் கோவர்த்தன மென்னும் கொற்றக் குடையே–3-5-8 | சலம் மா முகில்,Salam Maa Mukil - நீர் கொண்டெழுந்த காளமேகங்களினுடைய பல் கணம்,Pal Kanam - பல திரளானது, எங்கும்,Engum - இடைச்சேரி யடங்கலும் பூசல் இட்டு,Poosal Ittu - கர்ஜனை பண்ணிக் கொண்டு போர் களத்து சரம் மாரி பொழிந்து,Por Kalathu Saram Maari Pozhindu - யுத்தரங்கத்தில் சர மழை பொழியுமா போலே நீர் மழையைப் பொழிந்து நலிவான் உற,Nalivaan Ura - (ஸர்வ ஜந்துக்களையும்) வருத்தப் புகுந்த வளவிலே நாராயணன்,Narayanan - கண்ணபிரான் கேடகம் கோப்பவன் போல்,Kedagam Koppavan Pol - கடகு கோத்துப் பிடிக்குமவன்போல (குடையாக எடுத்துப் பிடித்து) முன்,Mun - முந்துற வருகிற முகம்,Mugam - மழையினாரம்பத்தை காத்த,Kaatha - தகைந்த மலை,Malai - மலையாவது, கொலை வாய்,Kolai Vaai - கொல்லுகின்ற வாயையும் சினம்,Sinam - கோபத்தையுமுடைய வேங்கைகள்,Vengaihal - புலிகளானவை இலை வேய் குரம்பை,Elai Vey Kurambai - இலைகளாலே அமைக்கப்பட்ட குடில்களில் தவம் மா முனிவர் இருந்தார் நடுவே சென்று,Thavam Maa Munivar Irundhar Naduve Sendru - இருக்கின்ற தபஸ்விகளான மஹர்ஷிகளின் திரளிலே புகுர அணார் சொறிய,Anaar Soriya - (அங்குள்ள ரிஷிகள்) (தமது) கழுத்தைச் சொறிய நின்று உறங்கும்,Nindru Urangum - (அந்த ஸுக பாரவச்யத்தினால், அப்புலிகள்) நின்ற படியே உறங்கப் பெற்ற கோவர்,Kovar - குடையே-. |
| 272 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-ஐந்தாம் திருமொழி - அட்டுக்குவி (கண்ணன் கோவர்த்தனகிரியை குடையாகக்கொண்டு கல்மழை தடுத்து ஆயரையும் ஆநிரையையும் பாதுகாத்தல்) எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 9 | வன் பேய் முலை யுண்ட தோர் வாயுடையன் வன் தூணென நின்றதோர் வன் பரத்தை தன் பேரிட்டுக் கொண்டு தரணி தன்னில் தாமோதரன் தாங்கு தட வரை தான் முன்பே வழி காட்ட முசுக் கணங்கள் முதுகில் பெய்து தம்முடைக் குட்டன்களை கொம்பேற்றி யிருந்து குதி பயிற்றும் கோவர்த்தனமென்னும் கொற்றக் குடையே–3-5-9 | வன் பேய்,Van Pey - கல் நெஞ்சளான பூதனையினுடைய முலை,Mulai - (விஷந்தடவின) முலையை உண்டது ஓர் வாய் உடையன்,Undathu Or Vaai Udaiyan - (உறிஞ்சி) உண்ட வாயை யுடையனான தாமோதரன்,Thaamodharan - கண்ணபிரான் தன் பேர்,Than Per - (கோவர்த்தநன் என்ற) தனது திருநாமத்தை இட்டுக் கொண்டு,Ettuk Kondu - (மலைக்கு) இட்டு, வல்பரத்தை நின்றது ஓர் வன் தூண் என,Valparathai Nindrathu Or Van Thoon Ena - பலிஷ்டமானதொரு பாரத்தைத் தாங்கிக் கொண்டுநின்ற ஒரு வலிய தூணைப் போல நின்று தரணி தன்னில்,Tharani Thannil - இந்நிலவுலகத்தில் தான் தாங்கு,Thaan Thaangu - (உள்ளவர்கள் காணும்படி) தான் தாங்கிக் கொண்டு நின்ற தடவரை,Thadavari - பெரிய மலையாவது; முசு கணங்கள்,Musu Kanangal - முசு என்ற சாதிக் குரங்குகளின் திரள்கள் முன்பே,Munbe - (தம் குட்டிகளுக்கு) ஏற்கனவே வழி காட்ட,Vali Kaata - ஒருகிளையில் நின்றும் மற்றொரு கிளையில் பாயும் வழியைக் காட்டுகைக்காக தம்முடை குட்டன்களை,Thammudai Kuttanagalai - தம்தம் குட்டிகளை முதுகில் பெய்து,Mudugil Peithu - (தம் தம்) முதுகிலே கட்டிக் கொண்டு போய் கொம்பு,Kombu - மரக் கொம்பிலே ஏற்றி யிருந்து,Etri Irundhu - ஏற்றி வைத்து குதி பயிற்றும்,Kuthi Payitrum - அக்கொம்பில் நின்றும் மற்றொரு கொம்பில் குதித்தலைப் பழக்குவியா நிற்கப் பெற்ற கோவர்,Kovar - குடையே-. |
| 273 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-ஐந்தாம் திருமொழி - அட்டுக்குவி (கண்ணன் கோவர்த்தனகிரியை குடையாகக்கொண்டு கல்மழை தடுத்து ஆயரையும் ஆநிரையையும் பாதுகாத்தல்) எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 10 | கொடியேறு செந்தாமரைக் கை விரல்கள் கோலமும் அழிந்தில வாடிற்றில வடிவேறு திரு வுகிர் நொந்துமில மணி வண்ணன் மலையுமோர் சம்பிரதம் முடியேறிய மா முகிற் பல் கணங்கள் முன்னெற்றி நரைத்தன போல எங்கும் குடியேறி யிருந்து மழை பொழியும் கோவர்த் தனமென்னும் கொற்றக் குடையே–3-5-10 | கொடி ஏறு,Kodi Eru - (ரேகா ரூபமான) த்வஜத்தை யுடைய செந்தாமரை கை,Senthamarai Kai - செந்தாமரை மலர் போன்ற (கண்ணனது) திருக்கையும் விரல்கள்,Viralgal - (அதிலுள்ள) திருவிரல்களும் (ஏழுநாள் ஒரு பழுப்பட மலையைத் தாங்கிக் கொண்டு நின்றதனால்) கோலமும் அழிந்தில,Kolamum Azhindhila - (இயற்கையான) அழகும் அழியப் பெறவில்லை; வாடிற்றில,Vaadittrila - வாட்டமும் பெறவில்லை; வடிவு ஏறு,Vadivu Eru - அழகு அமைந்த திரு உகிரும்,Thiru Ugirum - திரு நகங்களும் நொந்தில,Nondhila - நோவெடுக்க வில்லை; மணி வண்ணன்,Mani Vannan - (ஆகையால்) நீலமணி போன்ற நிறத்தனான கண்ணபிரான் மலையும்,Malaiyum - (எடுத்தருளின) மலையும் ஓர் சம்பிரதம்,Or Sampiratham - (அம் மலையை இவன் எடுத்து நின்ற நிலைமையும்) ஒரு இந்திர ஜாலவித்தையாயிருக்கின்றது; முடி ஏறிய,Mudi Eriya - (அந்தமலை எது? என்னில்;) கொடுமுடியின் மேலேறிய மா முகில்,Maa Mukil - காளமேகங்களினுடைய பல் கணங்கள்,Pal Kanangal - பல ஸமூஹங்களானவை எங்கும் மழை பொழிந்து,Engum Mazhai Pozhindhu - மலைச் சாரல்களிலெல்லாம் மழை பெய்து (வெளுத்ததனால்) முன் நெற்றி நரைத்தன போல,Mun Netri Naraiththana Poola - (அம்மலையினுடைய) முன்புறம் நரைத்தாற் போல் தோற்றும்படி குடி ஏறி இருக்கும்,Kudi Eri Irundhu - (கொடுமுடியின்மேல்) குடிபுகுந்திருக்கப் பெற்ற கோவர்,Kovar - குடையே-. |
| 274 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-ஐந்தாம் திருமொழி - அட்டுக்குவி (கண்ணன் கோவர்த்தனகிரியை குடையாகக்கொண்டு கல்மழை தடுத்து ஆயரையும் ஆநிரையையும் பாதுகாத்தல்) எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 11 | அரவில் பள்ளி கொண்டு அரவம் துரந்திட்டு அரவப் பகை யூர்தி யவனுடைய குரவிற் கொடி முல்லைகள் நின்றுறங்கும் கோவர்த் தனமென்னும் கொற்றக் குடை மேல் திருவிற் பொலி மா மறை வாணர் புத்தூர்த் திகழ் பட்டர் பிரான் சொன்ன மாலை பத்தும் பரவு மன நன்குடைப் பத்தருள்ளார் பரமான வைகுந்தம் நண் ணுவரே–3-5-11 | அரவில்,Aravil - திருவனந்தாழ்வான்மீது பள்ளி கொண்டு,Palli Kondu - (பாற்கடலில்) பள்ளி கொள்பவனும் அரவம்,Aravam - (அதைவிட்டு ஆயர் பாடியில் வந்து பிறந்து) காளியநாகத்தை துரந்திட்டு,Thurandhittu - ஒழித்தருளினவனும் அரவம் பகை ஊர்தி,Aravam Bhagai Oorthi - ஸர்ப்ப சத்ருவான கருடனை வாஹனமாக வுடையவனுமான கண்ணனுடைய குரலில் கொடி முல்லைகள் நின்று உறங்கும்,Kuralil Kodi Mullaihal Nindru Urangum - குரவ மரத்தில் முல்லைக் கொடிகள் படர்ந்து கோவர்த்தனம் என்னும் கொற்றம் குடை மேல்,Kovarthanam Ennum Kotrham Kudai Mel - கோவர்த்தனமென்ற கொற்றக் குடை விஷயமாக திருவில்,Thiruvil - ஸ்ரீவைஷ்ணவஸ்ரீயாலே பொலி,Poli - விளங்கா நின்றுள்ள மறைவாணர்,Marai Vaanaar - வைதிகர்கள் இருக்குமிடமான புத்தூர்,Puthoor - ஸ்ரீவில்லிபுத்தூரில் பட்டர் பிரான்,Pattar Piraan - பெரியழ்வார் சொன்ன,Sona - அருளிச் செய்த மாலை பத்தும்,Maalai Paththum - இப் பத்துப் பாசுரங்களையும் பரவும் மனம்,Paravum Manam - அப்யஸிக்கைக்கீடான மநஸ்ஸை நன்கு உடை,Nangu Udai - நன்றாக உடையரான பத்தர் உள்ளார்,Paththar Ullaaar - பக்தர்களாயிருப்பார் பரமான வைகுந்தம்,Paramaan Vaikundham - பரம பத்ததை நண்ணுவர்,Nannavur - அடையப் பெறுவர். |