| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 307 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (ஒன்பதாம் திருமொழி - என்னாதன் (க்ருஷ்ணாவதார ராமாவதாரங்களின் குணசேஷ்டிதங்களை இறண்டு தோழியர் எதிரெதிராகக்கூறி உந்திபறித்தல்) (கலித்தாழிசை) 1 | என்னாதன் தேவிக்கு அன்று இன்பப் பூ ஈயாதாள் தன் நாதன் காணவே தண் பூ மரத்தினை வன்னாதப் புள்ளால் வலியப் பறித்திட்ட என்னாதன் வன்மையைப் பாடிப் பற எம்பிரான் வன்மையைப் பாடிப் பற–3-9-1 | என் நாதன்,En Naathan - எனக்கு ஸ்வாமியான கண்ண பிரானுடைய தேவிக்கு,Devikku - தேவியான ஸத்ய பாமைப் பிராட்டிக்கு இன்பம் பூ,Enbam Poo - மனோ ஹரமான கற்பகப் பூவை அன்று,Andru - (அவன் விரும்பின) அக் காலத்தில் ஈயாதாள் தன்,Eeyaadhaal Than - கொடாத இந்திராணியினுடைய நாதன்,Naathan - கணவனான தேவேந்திரன் காணவே,Kaanave - கண்டு கொண்டு நிற்கும் போதே தண் பூ மரத்தினை,Than Poo Maraththai - குளிர்ந்த பூக்களை யுடைய கல்ப வ்ருஷத்தை வல் நாதம் புள்ளால்,Val Naatham Pullaal - வலிமை யுடைய ஸாமவேத ஸ்வரூபியான பெரிய திருவடியாலே வலிய,Valiya - பலாத்காரமாக பறித்து,Pariththu - பிடுங்கிக் கொண்டு வந்து இட்ட,Etta - (அதனை ஸத்யபாமையின் வீட்டு முற்றத்தில்) நட்டருளின என் நாதன்,En Naathan - என் ஸ்வாமியான கண்ண பிரானுடைய வன்மையை,Vanmaiyai - வலிவை பாடி,Paadi - பாடிக் கொண்டு பற,Para - உந்திப்பற; எம் பிரான் வன்மையை பாடிப் பற |
| 308 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (ஒன்பதாம் திருமொழி - என்னாதன் (க்ருஷ்ணாவதார ராமாவதாரங்களின் குணசேஷ்டிதங்களை இறண்டு தோழியர் எதிரெதிராகக்கூறி உந்திபறித்தல்) (கலித்தாழிசை) 2 | என் வில் வலி கண்டு போவென்று எதிர் வந்தான் தன் வில்லி னோடும் தவத்தை எதிர் வாங்கி முன் வில் வலித்து முது பெண்ணுயிருண்டான் தன் வில்லின் வன்மையைப் பாடிப் பற தாசரதி தன்மையைப் பாடிப் பற–3-9-2 | எதிர் வந்தான் தன்,Ethir Vandhaan Than - எதிர்த்து வந்த பரசு ராமனுடைய வில்லினோடு,Villinodu - வில்லையும் தவத்தையும்,Thavaththaiyum - தபஸ்ஸையும் எதிர்,Ethir - அவன் கண்ணெதிரில் வாங்கி,Vaangi - அழித்தருளினவனும் முன்,Mun - இதற்கு முன்னே வில் வலித்து,Vil valiththu - வில்லை வளைத்து முது பெண்,Muthu pen - (பர ஹிம்சையில்) பழகிக் கிடந்த தாடமையினுடைய உயிர்,Uyir - உயிரை உண்டான் ,Undaan - உண்டான் வில்லின்,Villin - (தன் முடித்தருளினவனுமான இராமபிரானுடைய) வில்லினது வன்மையை,Vanmaiyai - வலிவை பாடிப் பற தாசரதி,Dasarathi - சக்ரவர்த்தித் திருமகனுடைய தன்மையை,Thanmaiyai - ஸ்வபாவத்தை பாடிப் பற |
| 309 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (ஒன்பதாம் திருமொழி - என்னாதன் (க்ருஷ்ணாவதார ராமாவதாரங்களின் குணசேஷ்டிதங்களை இறண்டு தோழியர் எதிரெதிராகக்கூறி உந்திபறித்தல்) (கலித்தாழிசை) 3 | உருப்பிணி நங்கையைத் தேரேற்றிக் கொண்டு விருப்புற் றங்கேக விரைந்து எதிர் வந்து செருக்குற்றான் வீரம் சிதைய தலையைச் சிரைத்திட்டான் வன்மையைப் பாடிப் பற தேவகி சிங்கத்தைப் பாடிப்பற–3-9-3 | உருப்பிணி நங்கையை,Uruppini nangaiyai - ருக்மிணிப் பிராட்டியை தேரின்,Therin - (தனது) தேரின் மேல் ஏற்றிக் கொண்டு,Eatrik kondu - ஏற்றிக் கொண்டு விருப்புற்று,Virupputru - ஆசையுடனே ஏக,Eka - (கண்ணன்) எழுந்தருளப்புக, அங்கு,Angu - அவ்வளவில் விரைந்து,Viraindhu - மிக்க வேகங் கொண்டு எதிர் வந்து,Ethir vandu - (போர் செய்வதாக) எதிர்தது செருக்கு உற்றான்,Serukku utraan - கர்வப்பட்ட ருக்மனுடைய வீரம் சிதைய,Veeram sithaiya - வீரத் தனம் கெடும் படியாக தலையை,Thalaiyai - (அவனது) தலையை சிரைத்திட்டான்,Siraiththittaan - (அம்பாலே) சிரைத்து விட்ட கண்ணனுடைய வன்மையை,Vanmaiyai - வலிவை பாடிப் பற தேவகி சிங்கத்தை,Devaki singaththai - தேவகியின் வயிற்றிற் பிறந்த ஸிம்ஹ குட்டி போன்றவனை பாடிப்பற,Paadippara - பாடிக் கொண்டு உந்திப்பற; எம் பிரான் வன்மையை பாடிப் பற |
| 310 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (ஒன்பதாம் திருமொழி - என்னாதன் (க்ருஷ்ணாவதார ராமாவதாரங்களின் குணசேஷ்டிதங்களை இறண்டு தோழியர் எதிரெதிராகக்கூறி உந்திபறித்தல்) (கலித்தாழிசை) 4 | மாற்றுத் தாய் சென்று வனம் போகே என்றிட ஈற்றுத் தாய் பின் தொடர்ந்து எம்பிரான் என்று அழ கூற்றுத் தாய் சொல்லக் கொடிய வனம் போன சீற்ற மிலாதானைப் பாடிப் பற சீதை மணாளனைப் பாடிப் பற–3-9-4 | மாற்று தாய்,Maatru thaai - தாயானவள் சென்று,Sendru - சென்று. வனமே போகு என்றிட,Vaname poga endrida - ‘நீ காட்டுக்கே போ’ என்று நியமிக்க ஈற்றுத்தாய்,Eetru thaai - பெற்ற தாயாகிய கௌஸல்வை யானவள் பின் தொடர்ந்து,Pin thodarnthu - (தன்னைப்) பின் தொடர்ந்து வந்து எம்பிரான்,Empiraan - “என் நாயனே! (உன்னைப் பிரிந்து எப்படி தரித்திருப்பேன்”) என்று அழ,Endru azha - என்று கதறி அழ கூற்று தாய் சொல்ல,Kootru thaai solla - யமனைப்போல் கொடியளான கைகேயியின் சொல்லைக் கொண்டு கொடிய வனம் போன,Kodiya vanam pona - கொடிய காட்டுக்கு எழுந்தருளின சீற்றம் இலாதானை,Seetram ilaathaanai - சீற்றமற்ற இராம பிரானை பாடிப் பற,Paadippara - பாடிக் கொண்டு உந்திப்பற; எம் பிரான் வன்மையை பாடிப் பற சீதை மணாளனை,Seethai manaalanai - ஸீதைக்கு வல்லபனானவனை பாடிப் பற, Paadippara - பாடிக் கொண்டு உந்திப்பற; எம் பிரான் வன்மையை பாடிப் பற |
| 311 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (ஒன்பதாம் திருமொழி - என்னாதன் (க்ருஷ்ணாவதார ராமாவதாரங்களின் குணசேஷ்டிதங்களை இறண்டு தோழியர் எதிரெதிராகக்கூறி உந்திபறித்தல்) (கலித்தாழிசை) 5 | பஞ்சவர் தூதனாய்ப் பாரதம் கை செய்து நஞ்சுமிழ் நாகம் கிடந் தநல் பொய்கை புக்கு அஞ்சப் பணத்தின் மேல் பாய்ந்திட்டு அருள் செய்த அஞ்சன வண்ணனைப் பாடிப் பற அசோதை தன் சிங்கத்தைப் பாடிப் பற–3-9-5 | பஞ்சவர்,Panchavar - பஞ்ச பாண்டவர்களுக்காக தூதன் ஆய்,Thoodhan Aay - (துரியோதநாதிகளிடம்) தூதனாய்ப் போய் பாரதம்,Bharatham - (அத்துரியோதனநாதிகள் தன்சொற்படி இசைந்துவாராமையால்) பாரத யுத்தத்தை கை செய்து,Kai Seithu - அணி வகுத்துச் செய்து, கஞ்சு உமிழ்,Kanju Umizh - விஷத்தைக் கக்குகின்ற நாகம் கிடந்த,Kaagam Kidandha - காளியன் கிடந்த நல் பொய்கை புக்கு,Nal Poigai Pukku - கொடிய மடுவிலே புகுந்து அஞ்ச பணத்தின் மேல் ,Anja Ak Kaaliyan Anjumbadi - (அக் காளியன்) அஞ்சும்படி (அவனது) படத்திலே பாய்ந்திட்டு,Paayndhittu - குதித்து நடமாடி அக்காளியனை இளைப்பித்துப் பின்பு அவன் ப்ரார்த்திக்க அருள் செய்த,Arul Seitha - அப் பாம்பின் பிராணனைக் கருணையால் விரட்டிட்ட அஞ்சனவண்ணனை பாடிப்பற;,Anjanavannanai Paadippara - அஞ்சனவண்ணனை பாடிப்பற; அசோதைதன் சிங்கத்தைப் பாடிப்பற.,Asothaithan Singaththaip Paadippara - அசோதைதன் சிங்கத்தைப் பாடிப்பற. |
| 312 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (ஒன்பதாம் திருமொழி - என்னாதன் (க்ருஷ்ணாவதார ராமாவதாரங்களின் குணசேஷ்டிதங்களை இறண்டு தோழியர் எதிரெதிராகக்கூறி உந்திபறித்தல்) (கலித்தாழிசை) 6 | முடியொன்றி மூவுல கங்களும் ஆண்டு உன் அடியேற் கருளென்று அவன் பின் தொடர்ந்த படியில் குணத்துப் பரத நம்பிக்கு அன்று அடி நிலை யீந்தானைப் பாடிப் பற அயோத்தியர் கோமானைப் பாடிப்பற–3-9-6 | முடி ஒன்றி,Mudi Ondri - திருமுடி சூடி மூ உலகங்களும்,Moo Ulagangalum - பூமி, சுவர்க்கம், பாதாளம் என்ற மூன்று லோகங்களையும் ஆண்டு,Aandu - பரி பாலித்துக் கொண்டு உன் அடியேற்கு அருள் என்று,Un Adiyerku Arul Endru - தேவருடைய தாஸனான எனக்கு க்ருபை பண்ண வேணும் என்று வேண்டிக் கொண்டு அவன் பின் தொடர்ந்த,Avan Pin Thodarndha - பெருமான் பின்னே தொடர்ந்து வந்த படி இல் குணத்து பரதன் நம்பிக்கு,Padi Il Gunathu Barathan Nambikku - ஒப்பற்ற குணங்களை யுடையனான ஸ்ரீபரதாழ்வானுக்கு அன்று,Andru - அக் காலத்திலே அடி நிலை,Adi Nilai - ஸ்ரீபாதுகைகளை ஈந்தானை,Einthaanaai - அளித்தருளின இராமபிரானை பாடிப் பற,Paadip Para - பாடிக் கொண்டு உந்திப்பற; எம் பிரான் வன்மையை பாடிப் பற அயோத்தியர்,Ayoththiyar - அயோத்தியையிலுள்ளவர்களுக்கு கோமானை,Komaanaai - அரசனானவனை, பாடிப்பற |
| 313 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (ஒன்பதாம் திருமொழி - என்னாதன் (க்ருஷ்ணாவதார ராமாவதாரங்களின் குணசேஷ்டிதங்களை இறண்டு தோழியர் எதிரெதிராகக்கூறி உந்திபறித்தல்) (கலித்தாழிசை) 7 | காளியன் பொய்கை கலங்கப் பாய்ந் திட்டு அவன் நீள் முடி யைந்திலும் நின்று நடம் செய்து மீள அவனுக்கு அருள் செய்த வித்தகன் தோள் வலி வீரமே பாடிப் பற தூமணி வண்ணனைப் பாடிப் பற–3-9-7 | காளியன் பொய்கை,Kaaliyan Poigai - காளியன் கிடந்த பொய்கையானது கலங்க,Kalanga - கலங்கும்படி பாய்ந்திட்டு,Paayndhittu - (அதில்) குதித்து அவன்,Avan - அக் காளியனுடைய நீள் முடி ஐந்திலும் நின்று நடம் செய்து,Neel Mudi Aindhilum Nindru Nadam Seithu - ஆகாசத்தளவும் நீண்ட ஐந்து படங்களின் மேலும் நின்று கூத்தாடி, மீள,Meela - அவன் இளைத்துச் சரணம் புகுந்த பிறகு. அவனுக்கு,Avanukku - அக் காளியனுக்கு அருள் செய்து,Arul Seithu - (ப்ராணன் நிற்கும்படி) க்ருபை செய்தருளின் வித்தகன்,Viththagan - லிஸ்மயநீயனான கண்ணபிரானுடைய தோள் வலி,Thol Vali - புஜ பலத்தையும் வீரம்,Veeram - வீரப் பாட்டையும் பாடிப் பற; தூ மணி,Thoo Mani - பழிப்பற்ற நீலமணி போன்ற வண்ணனை,Vannanai - நிறத்தை யுடையவனை பாடிப் பற |
| 314 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (ஒன்பதாம் திருமொழி - என்னாதன் (க்ருஷ்ணாவதார ராமாவதாரங்களின் குணசேஷ்டிதங்களை இறண்டு தோழியர் எதிரெதிராகக்கூறி உந்திபறித்தல்) (கலித்தாழிசை) 8 | தார்க்கு இளந் தம்பிக்கு அரசீந்து தண்டகம் நூற்றவள் சொல் கொண்டு போகி நுடங்கிடைச் சூர்ப்ப ணகாவைச் செவி யொடு மூக்கு அவ ஆர்க்க அரிந்தானைப் பாடிப் பற அயோத்திக் கரசனைப் பாடிப் பற–3-9-8 | தார்க்கு,Tharkku - மாலை யிட்டு ராஜ்யம் நிர்வஹிக்கைக்கு இளந்,Ilann - (தகுந்திராத) இனம் பருவத்தை யுடையவனான தம்பிக்கு,Thambikku - பரதாழ்வானுக்கு அரசு ஈந்து,Arasu Eindhu - (அடி சூடுகையாகிற) அரசைக் கொடுத்து, நூற்றவள்,Noorrthaval - (இராமனைக் காட்டுக்குச் செலுத்தக் கடவோம் என்று) எண்ணம் கொண்ட கைகேயியினுடைய சொல் கொண்டு,Sol Kondu - சொல்லை ஏற்றுக் கொண்டு தண்டகம்,Thandhagam - தண்ட காரண்யத்துக்கு போகி,Poagi - எழுந்தருளி (அவ்விடத்தில்) நுடங்கு இடை,Nutangu Idai - துவண்ட இடையை உடையனான சூர்ப்பண சாவை,Soorppana Saavai - சூர்ப்பணகையினுடைய செவியொடு மூக்கு,Seviyodu Mookku - காதையும் மூக்கையும் அவன் ஆர்க்க அரித்தானை,Avan Aarkka Ariththaanai - அவன் கதறும்படி அறுத்த இராம பிரானை பாடிப் பற;,Paadip Para - பாடிக் கொண்டு உந்திப்பற; எம் பிரான் வன்மையை பாடிப் பற அயோத்திக்கு அரசனைப் பாடிப் பற,Ayoththikku Arasanai Paadip Para - அயோத்திக்கு அரசனைப் பாடிப் பற |
| 315 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (ஒன்பதாம் திருமொழி - என்னாதன் (க்ருஷ்ணாவதார ராமாவதாரங்களின் குணசேஷ்டிதங்களை இறண்டு தோழியர் எதிரெதிராகக்கூறி உந்திபறித்தல்) (கலித்தாழிசை) 9 | மாயச் சகட முதைத்து மருதிறுத்து ஆயர்களோடு போய் ஆநிரை காத்து அணி வேயின் குழலூதி வித்தகனாய் நின்ற ஆயர்க ளேற்றினைப் பாடிப் பற ஆநிரை மேய்த்தானைப் பாடிப் பற–3-9-9 | மாயம்,Maayam - க்ருத்ரிமமான அஸுரராலிஷ்டமான சகடம்,Sakadam - சகடத்தை உதைத்து,Uthaiththu - (திருவடிகளால்) உதைத்துத் தள்ளியும் மருது,Marudhu - இரட்டை மருத மரங்களை இறுத்து,Iruththu - இற்று விழும்படி பண்ணியும், (பின்பு) ஆயர்களோடு,Aayargalodu - இடையர்களோடு கூட போய்,Poi - (காடேறப்) போய் ஆநிரை,Aanirai - பசுக்களின் திரளை காத்து,Kaaththu - ரக்ஷித்தும் அணி,Ani - அழகிய வேயின் குழல்,Veyin Kuzhal - வேய்ங்குழலை ஊதி,Oothi - ஊதியும் வித்தகன் ஆய் நின்ற ,Viththagan Aay Nindra - விஸ்மயநீயனாய் நின்ற ஆயர்கள் ஏற்றினை,Aayargal Etrhinai - இடையர்க்குத் தலைவனான கண்ணபிரானை பாடிப்பற ஆநிரை மேய்த்தானை பாடிப் பற,Aanirai Meyththaanai Paadip Para - ஆநிரை மேய்த்தானை பாடிப் பற |
| 316 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (ஒன்பதாம் திருமொழி - என்னாதன் (க்ருஷ்ணாவதார ராமாவதாரங்களின் குணசேஷ்டிதங்களை இறண்டு தோழியர் எதிரெதிராகக்கூறி உந்திபறித்தல்) (கலித்தாழிசை) 10 | காரார் கடலை யடைத்திட்டு இலங்கை புக்கு ஓராதான் பொன் முடி ஒன்பதோ டொன்றையும் நேரா அவன் தம்பிக்கே நீளரசீந்த ஆரா வமுதனைப் பாடிப் பற அயோத்தியர் வேந்தனைப் பாடிப் பற–3-9-10 | கார் ஆர் கடலை,Kaar Aar Kadalai - கருமை பொருந்திய கடலை அடைத்திட்டு,Adaiththittu - (மலைகளினால்) அடைத்து விட்டு (ஸேது கட்டி) இலங்கை,Ilangai - (அர்த்த ஸேது வழியாக) லங்கையிலிருந்து புக்கு,Pukku - (அவ்விடத்தில்) ஒராதான்,Oraathaan - (தன் வீரப்பாட்டை) மதியாத ராவணனுடைய பொன் முடி ஒன்பதோடு ஒன்றையும்,Pon Mudi Onpathodu Onraiyum - அழகிய தலைகள் பத்தையும் நேரா,Naeraa - அறுத்துப் போகட்டு அவன் தம்பிக்கே,Avan Thambikke - அவனது தம்பியான ஸ்ரீலிபீஷணாழ்வானுக்கே நீள் அரசு ஈந்த,Neel Arasu Eindha - நெடுங்காலம் நடக்கும்படியான ஆதி ராஜ்யத்தை அளித்தருளின் ஆரா அமுதனை,Aaraa Amudhanai - எவ்வளவு உண்டாலும் திருப்தியைத் தாராத அம்ருதம் போல் இனியனான இராமபிரானை பாடிப்பற;,Paadip Para - பாடிக் கொண்டு உந்திப்பற; எம் பிரான் வன்மையை பாடிப் பற அயோத்தியர்,Ayoththiyar - அயோத்தியிலுள்ளார்க்கு வேந்தனை அரசனானவனை பாடிப் பற |
| 317 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (ஒன்பதாம் திருமொழி - என்னாதன் (க்ருஷ்ணாவதார ராமாவதாரங்களின் குணசேஷ்டிதங்களை இறண்டு தோழியர் எதிரெதிராகக்கூறி உந்திபறித்தல்) (கலித்தாழிசை) 11 | நந்தன் மதலையைக் காகுத்தனை நவின்று உந்தி பறந்த ஒளி யிழையார்கள் சொல் செந்தமிழ்த் தென் புதுவை விட்டு சித்தன் சொல் ஐந்தினோ டைந்தும் வல்லார்க்கு அல்ல லில்லையே–3-9-11 | நந்தன மதலையை,Nandhana Madhalaiyai - நந்த கோபான் குமாரனான கண்ண பிரானையும் காகுத்தனை,Kaaguththanai - இராம பிரானையும் நவின்று,Navindru - (ஒருவர்க்கொருவர் எதிரியாய் நின்று) சொல்லி உந்தி பறந்து,Undhi Parandhu - உந்தி பறக்கையாகிற லீலா ரஸங்கொண்டாடின ஒளி இழையார்கள்,Oli Izaiyaargal - அழகிய ஆபாரணமணிந்த ஆய்ப் பெண்கள் இருவருடைய சொல்,Sol - சொல்லி செம்தமிழ்,Semthamizh - அழகிய தமிழ் பாஷையாலே தென் புதுமை விட்டு சித்தன் சொல்,Then Puthumai Vittu Siththan Sol - அழகிய ஸ்ரீவில்லிபுத்தூர்க்குத் தலைவரான பெரியாழ்வார் அருளிச் செய்த ஐந்தினோடு ஐந்தும்,Aindhinodu Aindhum - க்ருஷ்ணாவதார விஷயமான ஐந்தும், ராமாவதார விஷயமான ஐந்துமாகிய இப் பத்துப் பாசுரங்கனை வல்லார்க்கு அல்லல் இல்லை,Vallarkku Allal Illai - துன்பமொன்று மில்லையாம். |