Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: தழைகளும் (10 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
254ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-நான்காம் திருமொழி - தழைகளும்) (காலிப்பின்னேவரும் கண்ணனைக்கண்டு இடைக்கன்னியர் காமுறுதல்) (எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 1
தழைகளும் தொங்கலும் ததும்பி எங்கும் தண்ணுமை எக்கம்மத் தளி தாழ் பீலி
குழல்களும் கீதமுமாகி எங்கும் கோவிந்தன் வருகின்ற கூட்டம் கண்டு
மழை கொலோ வருகின்ற தென்று சொல்லி மங்கைமார் சாலக வாசல் பற்றி
நுழைவனர் நிற்பனராகி எங்கும் உள்ளம் விட்டு ஊண் மறந்தொழிந்தனரே–3-4-1
தழைகளும் தொங்கலும்,Thazhaigalum Thongalum - பலவகைப் பட்ட மயிற் பீலிக் குடைகள்
எங்கும் ததும்பி,Engum Thathumbi - நாற் புறங்களிலும் நிறைந்து
தண்ணுமை,Thannumai - ம்ருதங்கங்களும்
எக்கம் மத்தளி,Ekkam Maththali - ஒரு தந்த்ரியை யுடைய மத்தளி வாத்யங்களும்
தாழ் பீலி,Thazh Peeli - பெரிய விசிறிகளும்
குழல்களும்,Kuzhalgalum - இலைக் குழல், வேய்ங்குழல் என்ற குழல்களும்
கீதமும்,Geethamum - இவற்றின் பாட்டுக்களும்
எங்கும் ஆகி,Engum Aagi - எங்கும் நிறைய
கோவிந்தன்,Govindan - (இந்த ஸந்நிவேசத்துடனே)கண்ணபிரான்
வருகின்ற,Varugindra - (கன்று மேய்த்து மீண்டு) வருகின்ற
கூட்டம்,Koottam - பெரிய திருவோலக்கத்தை
கண்டு,Kandu - பார்த்து
மங்கைமார்,Mangaimar - யுவதிகளான இடைப் பெண்கள்
மழை கொல் ஓ வருகின்றது என்று சொல்லி,Mazhai Kol O Varugindrathu Endru Solli - ‘மேக ஸமூஹமோ தான் (தரை மேலே நடந்து) வருகின்றது!’ என்று உல்லேகித்து
சாலகம் வாசல் பற்றி,Saalagam Vaasal Patri - ஜாலகரந்த்ரங்களைச் சென்று கிட்டி
நுழைவனர் நிற்பனர் ஆகி,Nuzhaivanar Nrirpanar Aagi - (வியாமோஹத்தாலே சிலர் மேல் விழுவதாகச் சால்க வாசல் வழியே) நுழையப் புகுவாரும், (சிலர் குருஜந பயத்தாலே) திகைத்து நிற்பாருமாகி
எங்கும்,Engum - கண்ணபிரான் நடந்த வழி முழுவதும்
உள்ளம் விட்டு,Ullam Vittu - தங்கள் நெஞ்சைப் பரக்க விட்டு
ஊண்,Oon - ஆஹாரத்தை
மறந்தொழிந்தனர்,Maranthoizhindhanar - மறந்து விட்டார்கள்.
255ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-நான்காம் திருமொழி - தழைகளும்) (காலிப்பின்னேவரும் கண்ணனைக்கண்டு இடைக்கன்னியர் காமுறுதல்) (எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 2
வல்லி நுண் இதழன்ன ஆடை கொண்டு வசை யறத் திரு வரை விரித் துடுத்து
பல்லி நுண் பற்றாக உடை வாள் சாத்திப் பணைக்கச் சுந்திப் பல தழை நடுவே
முல்லை நல் நறு மலர் வேங்கை மலர் அணிந்து பல்லாயர் குழாம் நடுவே
எல்லியம் போதாகப் பிள்ளை வரும் எதிர் நின்று அங்கினவளை இழவேன்மினே–3-4-2
பிள்ளை,Pillai - நந்த கோபர் மகனான கண்ணன்,
வல்லி,Valli - கற்பகக் கொடியினது
நுண்,Nun - நுட்பமான
இதழ் அன்ன,Ethazh Anna - இதழ் போன்று ஸுகுமாரமான
ஆடை கொண்டு,Aadai Kondu - வஸ்த்ரத்தைக் கொணர்ந்து
திரு அரை ,Thiru Arai - (தனது) திருவரையிலே
வசை அற,Vasai Ara - ஒழுங்காக
விரித்து உடுத்து,Virithu Uduthu - விரித்துச் சாத்திக் கொண்டு
பணை கச்சு,Panai Kachu - (அதன்மேல்) பெரிய கச்சுப் பட்டையை
உந்தி,Undhi - கட்டிக் கொண்டு
உடை வாள்,Udai Vaal - (அதன் மேல்) கத்தியை
பல்லி நுண் பற்று ஆக சாத்தி,Palli Nun Patru Aaga Saathi - பல்லியானது சுவரிலே இடை வெளியறப் பற்றிக் கிடக்குமா போலே நெருங்கச் சாத்திக் கொண்டு
நல்,Nal - அழகியதும்
நறு,Naru - பரிமளமுள்ளதுமான
முல்லை மலர்,Mullai Malar - முல்லைப் பூவையும்
வேங்கை மலர்,Vengai Malar - வேங்கைப் பூவையும் (தொடுத்து)
அணிந்து,Anindhu - (மாலையாகச்) சாத்திக் கொண்டு
பல் ஆயர்,Pal Aayar - பல இடைப் பிள்ளைகளுடைய
குழாம் நடுவே,Kuzhaam Naduvae - கூட்டத்தின் நடுவில்
பல தழை நடுவே,Pala Thazhai Naduvae - பல மயில் தோகைக் குடை நிழலிலே
எல்லி அம் போது ஆக,Elli Am Poothu Aaga - ஸாயம் ஸந்த்யா காலத்திலே
வரும்,Varum - வருவன்
அங்கு,Angu - அவன் வரும் வழியில்
எதிர் நின்று,Ethir Nindru - எதிராக நின்று
வளை இனம்,Valai Inam - கை வளைகளை
இழவேல்மின்,Ezhavaelmin - இழவாதே கொள்ளுங்கள்.
256ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-நான்காம் திருமொழி - தழைகளும்) (காலிப்பின்னேவரும் கண்ணனைக்கண்டு இடைக்கன்னியர் காமுறுதல்) (எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 3
சுரிகையும் தெறி வில்லும் செண்டு கோலும் மேலாடையும் தோழன்மார் கொண்டோட
ஒரு கையால் ஒருவன் தன் தோளை யூன்ற ஆ நிரையினம் மீளக் குறித்த சங்கம்
வருகையில் வாடிய பிள்ளை கண்ணன் மஞ்சளும் மேனியும் வடிவும் கண்டாள்
அருகே நின்றாள் என் பெண் நோக்கிக் கண்டாள் அது கண்டு இவ்வூர் ஒன்று புணர்க்கின்றதே–3-4-3
தோழன்மார்,Thozhanmaar - தன்னேராயிரம் பிள்ளைகள்,
சுரிகையும்,Surikaiyum - உடை வாளையும்
தெறி வில்லும்,Theri Villum - சுண்டு வில்லையும்
செண்டு கோலும்,Sendu Kolum - பூஞ்செண்டு கோலையும்
மேல் ஆடையும்,Mel Aadaiyum - உத்தராயத்தையும்
கொண்டு,Kondu - (கண்ண பிரானுக்கு வேண்டின போது கொடுக்கைக்காக) கையிற்கொண்டு
ஓட,Oda - பின்னே ஸேவித்து வர,
ஒருவன் தன்,Oruvan Than - ஒரு உயிர்த் தோழனுடைய
தோளை,Tholai - தோளை
ஒரு கையால்,Oru Kaiyal - ஒரு திருக் கையினால்
ஊன்றி,Oonri - அவலம்பித்துக் கொண்டு
(ஒரு கையால்),(Oru Kaiyal) - மற்றொரு திருக் கையினால்
ஆநிரை இனம் மீள குறித்த சங்கம்,Aanirai Inam Meela Kuritha Sangam - (கை கழியப் போன) பசுக்களின் திரள் திரும்பி வருவதற்காக ஊத வேண்டிய சங்கை
(ஊன்றி),(Oonri) - ஏந்திக் கொண்டு
வருகையில்,Varugaiyil - மீண்டு வருமளவில்
வாடிய,Vaadiya - வாட்டத்தை அடைந்துள்ள
பிள்ளை கண்ணன்,Pillai Kannan - ஸ்ரீக்ருஷ்ண கிசோரனுடைய
மஞ்சளும் மேனியும்,Manjalum Maeniyum - பற்று மஞ்சள் மயமான திருமேனியையும்
வடிவும்,Vadivum - அவயவ ஸமுதாய சோபையையும்
அருகே நின்றான் என் பெண்,Arugae Nindraan En Pen - (அவனுக்குச்) சமீபத்தில் நின்று கொண்டிருந்த என் மகள்
கண்டாள்,Kandaal - (முதலில் எல்லாரும் பார்க்கிறாப்போல்) பார்த்தாள்;
நோக்கி கண்டாள்,Nookki Kandaal - (பிறகு, அபூர்வ வஸ்து தர்ச நீயமாயிருந்த படியால்) கொஞ்சம் குறிப்பாகப் பார்த்தாள்;
அது கண்டு,Adhu Kandu - அவ்வளவையே நிமித்தமாகக் கொண்டு
இ ஊர்,E Oor - இச்சேரியிலுள்ளவர்கள்
ஒன்று புணர்க்கின்றது,Ondru Punarugindrathu - (அவனுக்கும் இவளுக்கும் அடியோடில்லாத) ஒரு ஸம்பந்தத்தை யேறிட்டுச் சொல்லுகின்றனர்;
ஏ,Ae - இதற்கு என் செய்வது!
257ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-நான்காம் திருமொழி - தழைகளும்) (காலிப்பின்னேவரும் கண்ணனைக்கண்டு இடைக்கன்னியர் காமுறுதல்) (எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 4
குன்றெடுத்து ஆநிரை காத்த பிரான் கோவலனாய்க் குழலூதி யூதி
கன்றுகள் மேய்த்துத் தன் தோழரோடு கலந்துடன் வருவானைத் தெருவில்
கண்டு என்றும் இவனை யொப்பாரை நங்காய் கண்டறியேன் ஏடி வந்து காணாய்
ஒன்றும் நில்லா வளை கழன்று துகி லேந்திள முலையும் என் வசமல்லவே–3-4-4
நங்காய்,Nangai - பூர்த்தியை யுடையவனே!
ஏடி,Edi - தோழீ!
இவனை ஒப்பாரை,Evanai Oppaarai - இவனைப் போன்றுள்ள வ்யக்தியை
என்றும்,Endrum - எந்த நாளிலும்
கண்டு அறியேன்,Kandu Ariyaen - (நான்) பார்த்ததில்லை;
வந்து காணாய்,Vandhu Kaanai - (இங்கே) ஓடிவந்து பார்; (என்று ஒருத்தி தன் தோழியை அழைக்க, அவள் சிறிது தாமஸிக்க, மேல் தனக்குப் பிறந்த விகாரத்தைச் சொல்லுகிறாள்;)
கோவலன் ஆய்,Kovalan Aay - இடைப் பிள்ளையாகப் பிறந்து (இந்த்ர பூஜையை விலக்க)
குன்று,Kundru - (பசிக் கோபத்தினால் இந்திரன் விடா மழை பெய்வித்த போது) கோவர்த்தன மலையை
எடுத்து,Eduthu - (குடையாக) எடுத்து
ஆநிரை,Aanirai - பசுக்களின் திரளை
காத்த,Kaatha - ரக்ஷித்தருளின
பிரான்,Piraan - உபகாரகனும்
குழல்,Kuzhal - குழலை
ஊதி ஊதி,Oodhi Oodhi - பல கால் ஊதிக் கொண்டு
கன்றுகள்,Kanrugal - கன்றுகளை
மேய்த்து,Meyththu - (காட்டில்) மேய்த்து விட்டு
தன் தோழரோடு உடன் கலந்து,Than Thozharodu Udan Kalanthu - தனது தோழர்களுடன் கூடிக் கொண்டு
தெருவில்,Theruvil - இவ் வீதி வழியே
வருவானை,Varuvaanai - வருபவனுமான கண்ணபிரானை
கண்டு,Kandu - நான் கண்ட வளவிலே
துகில்,Thugil - (எனது அரையிலுள்ள) புடவை
கழன்று,Kalandru - (அரையில் தங்காதபடி) அவிழ்ந்தொழிய
வளை,Valai - கை வளைகளும்
ஒன்றும் நில்லா,Ondrum Nillaa - சற்றும் நிற்கின்றனவில்லை;
ஏந்து,Enndhu - (என்னால்) சுமக்கப் படுகின்ற
இள முலையும்,Ela Mulaiyum - மெல்லிய முலைகளும்
என் வசம் அல்ல,En Vasam Alla - என் வசத்தில் நிற்கின்றனவில்லை.
258ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-நான்காம் திருமொழி - தழைகளும்) (காலிப்பின்னேவரும் கண்ணனைக்கண்டு இடைக்கன்னியர் காமுறுதல்) (எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 5
சுற்றி நின்று ஆயர் தழைகளிடச் சுருள் பங்கி நேத்திரத்தால் அணிந்து
பற்றி நின்று ஆயர் கடைத் தலையே பாடவும் ஆடக் கண்டேன் அன்றிப் பின்
மற்றொருவர்க்கு என்னைப் பேச லொட்டேன் மாலிருஞ் சோலை எம் மாயற் கல்லால்
கொற்றவனுக்கு இவளா மென்றெண்ணிக் கொடுமின்கள் கொடீராகில் கோழம்பமே–3-4-5
ஆயர்,Aayar - இடைப் பிள்ளைகள்
சுற்றி நின்று,Suttri Nindru - (தன்னைச்) சூழ்ந்து கொண்டு
தழைகள்,Thazhaigal - மயில் தோகைக் குடைகளை
இட,Eda - (தன் திருமேனிக்குப் பாங்காகப்) பிடித்துக் கொண்டு வர,
சுருள் பங்கி,Surul Pangi - (தனது) சுருண்ட திருக் குழல்களை (எடுத்துக் கட்டி)
நேத்திரத்தால்,Nethrathaal - பீலிக் கண்களாலே
அணிந்து,Anindhu - அலங்கரித்துக் கொண்டு
ஆயர் கடைத்தலை பற்றி நின்று,Aayar Kadaithalai Patri Nindru - இடைப் பிள்ளைகளின் கோஷ்டியில் முன் புறத்தில் நின்று கொண்டு
பாடவும் ஆடவும் கண்டேன்,Paadavum Aadavum Kandaen - பாட்டுங்கூத்துமாக வரக் கண்டேன்;
பின்,Pin - இனி மேல்
அன்றி,Andri - அவனுக்கொழிய
மற்று ஒருவற்கு,Matru Oruvarku - வேறொருவனுக்கு
என்னை பேசல் ஒட்டேன்,Ennai Paesal Ottaen - என்னை (உரியளாகத் தாய் தந்தையர்) பேசுவதை நான் பொறுக்க மாட்டேன்;
மாலிருஞ்சோலை,Malirunjcholai - (ஆர்க்கொழிய வென்று கேட்கிறிகோளாகில்?) திருமாலிருஞ்சோலையில் நித்ய வாஸம் பண்ணுகிற
எம் மாயற்கு அல்லால்,Em Maayarukku Allaal - எனது தலைவனுக்கொழிய (மற்றொருவற்கு என்னைப் பேசலொட்டேன்;)
இவள்,Eval - (ஆகையினால், தாய்மார்களே!) (நம் மகளான) இவள்
கொற்றவனுக்கு,Kottravanukku - அத் தலைவனுக்கே
ஆம்,Aam - உரியன்
என்று எண்ணி,Endru Enni - என்று நிச்சயித்து விட்டு
கொடுமின்கள்,Kodumingal - (அவனுக்கே தாரை வார்த்து) தத்தம் பண்ணி விடுங்கள்;
கொடீர் ஆகில்,Kodir Aagil - (அப்படி) கொடா விட்டீர்களே யானால்
கோழம்பமே,Kozhambamae - (உங்களுக்கு என்றைக்கும்) மனக் குழப்பமேயாம்.
259ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-நான்காம் திருமொழி - தழைகளும்) (காலிப்பின்னேவரும் கண்ணனைக்கண்டு இடைக்கன்னியர் காமுறுதல்) (எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 6
சிந்துர மிலங்கத் தன் திரு நெற்றி மேல் திருத்திய கோறம்பும் திருக் குழலும்
அந்தர முழவத் தண் தழைக் காவின் கீழ் வருமாயரோடு உடன் வளை கோல் வீச
அந்தமொன் றில்லாத ஆயப் பிள்ளை அறிந்தறிந்து இவ் வீதி போதுமாகில்
பந்து கொண்டானென்று வளைத்து வைத்துப் பவள வாய் முறுவலும் காண்போம் தோழீ–3-4-6
தோழீ,Thozhi - வாராய் தோழீ!
தன்,Than - தன்னுடைய
திருநெற்றி மேல்,Thirunettri Mel - திரு நெற்றியில்
சிந்துரம்,Sindhuram - சிந்தூரமும்
திருத்திய,Thiruthhiya - (அதன் மேல்) ப்ரகாசமாகச் சாத்தின
கோறம்பும்,Korambum - திலகப் பொட்டும்
திரு குழலும்,Thiru Kuzhalum - (அதுக்குப் பரபாகமான) திருக் குழற் கற்றையும்
இலங்க,Elanga - விளங்கவும்
அந்தரம்,Antharam - ஆகாசமடங்கலும்
முழவம்,Muzhavam - மத்தளங்களின் ஓசையினால் நிறையவும்
தழை,Thazhai - பீலிக் குடைகளாகிற
தண்,Than - குளிர்ந்த
காவின் கீழ்,Kaavin Keezh - சோலையின் கீழே
வரும்,Varum - (தன்னோடு) வருகின்ற
ஆயரோடு உடன்,Aayarodu Udan - இடைப் பிள்ளைகளோடு கூட
வளை கோல் வீச,Valai Kol Veesa - வளைந்த தடிகளை வீசிக் கொண்டு
ஒன்றும் அந்தம் இல்லாத,Ondrum Antham Illadha - (அலங்கார விசேஷங்களில்) ஒவ்வொன்றே எல்லை காண ஒண்ணாத
ஆயர் பிள்ளை,Aayar Pillai - இடைப் பிள்ளையான கண்ணபிரான்
அறிந்து அறிந்து,Arindhu Arindhu - தன் தன்மையையும் என் தன்மையையும் அறிந்து வைத்தும்
இ வீதி,E Veedhi - இத் தெரு வழியே
போதும் ஆகில்,Podhum Aagil - வருவானாகில்
பந்து கொண்டான் என்று வளைத்து வைத்து,Panthu Kondaan Endru Valaithu Vaithu - (அவனை) ‘ (எங்கள்) பந்தை வலியப் பிடுங்கிக் கொண்டு போனவனன்றோ இவன்’ என்று (முறையிட்டு) வழி மடக்கி
பவளம் வாய்,Pavalam Vaai - (அவனுடைய) பவளம் போன்ற அதரத்தையும்
முறுவலும்,Muruvallum - புன் சிரிப்பையும்
காண்போம்,Kaanbom - நாம் கண்டு அநுபவிப்போம்.
260ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-நான்காம் திருமொழி - தழைகளும்) (காலிப்பின்னேவரும் கண்ணனைக்கண்டு இடைக்கன்னியர் காமுறுதல்) (எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 7
சாலப் பல் நிரைப் பின்னே தழைக் காவின் கீழ் தன் திருமேனி நின்றொளி திகழ
நீல நல் நறுங் குஞ்சி நேத்திரத் தாலணிந்து பல்லாயர் குழாம் நடுவே
கோலச் செந்தாமரைக் கண் மிளிரக் குழலூதி யிசை பாடிக் குனித்து ஆயரோடு
ஆலித்து வருகின்ற ஆயப் பிள்ளை அழகு கண்டு என் மகள் யயர்க்கின்றதே–3-4-7
சால பல் நிரை பின்னே,Saala Pal Nirai Pinnae - பற்பல பசுத் திரளின் பின்னே
தழை,Thazhai - பீலிக் குடைகளாகிற
காவின் கீழ்,Kaavin Keezh - சோலையின் கீழே
தன்,Than - தன்னுடைய
திருமேனி,Thirumeni - திருமேனியானது
ஒளி திகழ நின்று,Oli Thigazha Nindru - பளபளவென்று விளங்கும்படி நின்று
நீலம்,Neelam - நீல நிறத்தை யுடைத்தாய்
நல் ,Nal - நீட்சி முதலிய அமைப்பையுடைத்தாய்
நறு,Naru - பரிமளம் வீசா நின்றுள்ள
குஞ்சி,Kunji - திருக்குழற் கற்றையை
நேத்திரத்தால்,Nethrathaal - பீலிக் கண்களினால்
அணிந்து,Anindhu - அலங்கரித்துக் கொண்டு
பல் ஆயர் குழாம் நடுவே,Pal Aayar Kuzhaam Naduvae - பல இடையர்களின் கூட்டத்தின் நடுவில்
கோலம் செந்தாமரை கண் மிளிர,Kolam Senthaamarai Kann Milira - அழகிய செந்தாமரை மலர் போன்ற (தனது) திருக் கண்கள் ஸ்புரிக்கப் பெற்று
குழல்,Kuzhal - வேய்ங்குழலை
ஊதி,Oodhi - ஊதிக் கொண்டும்
இசை,Esai - (அதுக்குத் தக்க) பாட்டுக்களை
பாடி,Paadi - பாடிக் கொண்டும்
குனித்து,Kuniththu - கூத்தாடிக் கொண்டும்
ஆயரோடு,Aayarodu - இடைப் பிள்ளைகளுடனே
ஆலித்து வருகின்ற,Aaliththu Varugindra - மகிழ்ந்து வருகின்ற
ஆயர் பிள்ளை,Aayar Pillai - இடைப் பிள்ளையான கண்ணபிரானுடைய
அழகு,Azhagu - வடிவழகை
என் மகள் கண்டு,En Magal Kandu - என் மகள் பார்த்து
அயர்க்கின்றது,Ayarkkindrathu - அறிவு அழியாநின்றாள்.
261ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-நான்காம் திருமொழி - தழைகளும்) (காலிப்பின்னேவரும் கண்ணனைக்கண்டு இடைக்கன்னியர் காமுறுதல்) (எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 8
சிந்துரப் பொடிக் கொண்டு சென்னி யப்பித் திரு நாம மிட்டங்கோ ரிலையந் தன்னால்
அந்தர மின்றித் தன்னெறி பங்கியை அழகிய நேத்திரத் தாலணிந்து
இந்திரன் போல் வரு மாயப் பிள்ளை எதிர் நின்றங் கினவளை இழவே லென்ன
சந்தியில் நின்று கண்டீர் நங்கை தன் துகிலொடு சரி வளை கழல்கின்றதே–3-4-8
சிந்துரம் பொடி கொண்டு,Sindhuram Podi Kondu - ஸிந்தூர சூர்ணத்தைக் கொணர்ந்து
தன்,Than - தன்னுடைய
சென்னி,Senni - திரு முடியிலே
சிப்பி,Sippi - அப்பிக் கொண்டும்
அங்கு,Angu - திரு நெற்றியில்
ஓர் இலை தன்னால்,Or Ilai Thannal - ஒரு இலையினாலே
திரு நாமம் இட்டு,Thiru Naamam Ittu - ஊர்த்துவ புண்ட்ரம் சாத்திக் கொண்டும்
நெறி,Neri - நெறித்திரா நின்றுள்ள
பங்கியை,Pangiyai - திருக் குழலை
அழகிய,Azhagiya - அழகிய
நேத்திரத்தால்,Nethrathaal - பீலிக் கண்களினால்
அந்தரம் இன்றி அணிந்து,Antharam Inri Anindhu - இடைவெளியில்லாதபடி (நெருங்க) அலங்கரித்துக் கொண்டும்
இந்திரன் போல்,Endhiran Pol - ஸாக்ஷாத் தேவேந்திரன் போல
வரும்,Varum - (ஊர்வலம்) வருகின்ற
ஆயர் பிள்ளை,Aayar Pillai - இடைப் பிள்ளையான கண்ணபிரானுக்கு
எதிர் அங்கு,Ethir Angu - எதிர்முகமான இடத்தில்
நின்று,Nindru - நின்று கொண்டு
வளை இனம்,Valai Inam - கை வளைகளை
இழவேல்,Ezhavael - நீ இழக்க வேண்டா”
என்ன,Enna - என்று (என் மகளை நோக்கி நான் உறுத்திச்) சொல்லச் செய்தேயும்
நங்கை,Nangai - (எனது) மகளானவள்
சந்தியில் நின்று,Sandhiyil Nindru - அவன் வரும் வழியில் நின்று
தன் துகிலொடு,Than Thugilodu - தனது துகிலும்
சரிவளை,Sarivalai - கைவளைகளும்
கழல்கின்றது,Kalalkindrathu - கழன்றொழியப் பெற்றாள்.
ஏ,Ae - இதென்ன அநியாயம்!
262ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-நான்காம் திருமொழி - தழைகளும்) (காலிப்பின்னேவரும் கண்ணனைக்கண்டு இடைக்கன்னியர் காமுறுதல்) (எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 9
வலங்காதின் மேல் தோன்றிப் பூ வணிந்து மல்லிகை வன மாலை மெளவல் மாலை
சிலிங்காரத் தால் குழல் தாழ விட்டுத் தீங் குழல் வாய் மடுத் தூதி யூதி
அலங்காரத்தால் வரு மாயப் பிள்ளை அழகு கண்டு என் மகள் ஆசைப் பட்டு
விலங்கி நில்லாது எதிர் நின்று கண்டீர் வெள் வளை கழன்று மெய்ம் மெலிகின்றதே–3-4-9
வலங்காதில்,Valangaadhil - வலது காதில்
மேல் தோன்றிப் பூ,Mel Thondrip Poo - செங்காந்தள் பூவையும்
வனம் மல்லிகை மாலை,Vanam Malligai Maalai - (திருமார்பில்) காட்டு மல்லிகை மாலையையும்
மௌவல் மாலை,Mouval Maalai - மாலதீ புஷ்ப மாலையையும்
அணிந்து,Anindhu - அணிந்து கொண்டு,
சிலிங்காரத்தால்,Silingaarathaal - அலங்காரமாக
குழல்,Kuzhal - திருக்குழல்களை
தாழ விட்டு,Thaazha Vittu - (திரு முதுகில்) தொங்க விட்டுக் கொண்டு
தீம் குழல்,Theem Kuzhal - இனிமையான வேய்ங்குழலை
வாய் மடுத்து,Vaai Maduthu - திருப் பவளத்தில் வைத்து
ஊதி ஊதி,Oodhi Oodhi - வகை வகையாக ஊதிக் கொண்டு,
அலங்காரத்தால்,Alangaarathaal - (கீழ்ச் சொன்ன) அலங்காரங்களோடே
வரும்,Varum - வாரா நின்ற
ஆயர் பிள்ளை,Aayar Pillai - இடைப் பிள்ளையான கண்ணபிரானுடைய
அழகு,Azhagu - வடிவழகை
என் மகள் கண்டு,En Magal Kandu - என் மகள் பார்த்து
ஆசைப்பட்டு,Aasaipattu - (அவனிடத்தில்) காமங் கொண்டு,
விலங்கி நில்லாது,Vilangi Nillaadhu - (இவ்வடிவழகு கண்டவர்களை வருத்தும் என்று கண்ணை மாற வைத்துக் கடக்க நிற்க வேண்டி யிருக்க,) (அப்படி) வழி விலங்கி நில்லாமல்
எதிர் நின்று,Ethir Nindru - (அவனுக்கு) எதிர்முகமாக நின்று
வெள்வளை கழன்று,Velvalai Kalandru - (தனது) சங்கு வளைகள் கழலப் பெற்று
மெய் மெலிகின்றது,Mey Melikindrathu - உடலும் இளைக்கப் பெற்றாள்.
263ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-நான்காம் திருமொழி - தழைகளும்) (காலிப்பின்னேவரும் கண்ணனைக்கண்டு இடைக்கன்னியர் காமுறுதல்) (எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 10
விண்ணின் மீது அமரர்கள் விரும்பித் தொழ மிறைத்து ஆயர் பாடியில் வீதி யூடே
கண்ணங் காலிப் பின்னே எழுந்தருளக் கண்டு இளவாய்க் கன்னிமார் காமுற்ற
வண்ணம் வண்டமர் பொழில் புதுவையர் கோன் விட்டு சித்தன் சொன்ன மாலை பத்தும்
பண்ணின்பம் வரப் பாடும் பத்தருள்ளார் பரமான வைகுந்தம் நண்ணுவரே–3-4-10
விண்ணின் மீது,Vinnin Meedhu - பரமாகாசமாகிய ஸ்ரீவைகுண்டத்திலே
அமரர்கள்,Amarargal - நித்ய ஸூரிகள்
விரும்பி,Virumbi - ஆதரித்து
தொழ,Thozha - ஸேவியா நிற்கச் செய்தேயும்
கண்ணன்,Kannan - ஸ்ரீக்ருஷ்ண பரமாத்மா
மறைத்து,Maraiththu - (அவர்களை மதியாமல்) மேனாணித்து
ஆயர் பாடியில்,Aayar Paadiyil - திருவாய்ப்பாடியில் (வந்து அவதரித்து)
வீதி ஊடே,Veedhi Oodae - தெருவேற
காலி பின்னே,Kaali Pinnae - பசுக்களின் பின்னே
எழுந்தருள,Ezhundharula - எழுந்தருளா நிற்க,
இள ஆய் கன்னிமார்,Ila Aay Kannimaar - (அவ்வழகை)யுவதிகளான இடைப் பெண்கள்
கண்டு,Kandu - பார்த்து
காமுற்ற வண்ணம்,Kaamutra Vannam - காம லிகாரமடைந்த படியை,
வண்டு அமர் பொழில்,Vandu Amar Pozhil - வண்டுகள் படிந்த சோலைகளை யுடைய
புதுவையர் கோன்,Puduvaiyar Kon - ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ளார்க்குத் தலைவரான
விட்டு சித்தன்,Vittu Siththan - பெரியாழ்வார்
சொன்ன,Sonnan - அருளிச் செய்த
மாலை பத்தும்,Maalai Paththum - சொல் மாலையாகிய இப் பத்துப் பாசுரங்களையும்
இன்பம் வர,Inbam Vara - இனிமையாக
பண்,Pan - பண்ணிலே
பாடும்,Paadum - பாட வல்ல
பக்தருள்ளார்,Bhaktar Ullaar - பக்தர்களா யிருக்குமவர்கள்
பரமான,Paramaan - லோகோத்தரமான
வைகுந்தம்,Vaikundham - ஸ்ரீவைகுண்டத்தை
நண்ணுவர்,Nannuvaar - அடையப் பெறுவார்கள்.