Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: வண்ண மாடங்கள் (10 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
13ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து - முதல் திருமொழி - வண்ண மாடங்கள்) (கண்ணன் திரு அவதாரச் சிறப்பு) (ஸ்ரீ கிருஷ்ணாவதார கந்தமான ஸ்ரீ திருக் கோட்டியூரிலே அர்ச்சாவதார பர்யந்தமாக மங்களா சாசனம் பண்ணுகிறார் -வண்ண மாடத்தால்.) 1
வண்ண மாடங்கள் சூழ்திருக் கோட்டியூர்
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்
எண்ணெய் சுண்ணம் எதிரெதிர் தூவிடக்
கண்ணன் முற்றம் கலந்துஅள ராயிற்றே.–1-1-1
வண்ணம்,Vannam - அழகு பொருந்திய
மாடங்கள்,Madangal - மாடங்களாலே
சூழ்,Soozh - சூழப்பட்ட
திருக்கோட்டியூர்,Thirukkottiyur - திருக்கோட்டியூரில் (எழுந்தருளியுள்ள)
கேசவன்,Kesavan - கேசவனென்ற திருநாமமுடையனாய்
நம்பி,Nambi - கல்யாணகுண பரிபூர்ணனான
கண்ணன்,Kannan - ஸ்ரீக்ருஷ்ணன்
இன் இல்,In il - (நந்தகோபருடைய) இனிய திருமாளிகையிலே
பிறந்து,Pirandhu - திருவவதிரித்தருளின வளவிலே,
எண்ணெய்,Enney - (திருவாய்ப்பாடியிலுள்ளார்) எண்ணெயையும்
சுண்ணம்,Sunnam - மஞ்சள் பொடியையும்
எதிர் எதிர் தூவிட,Ethir ethir thoovida - (ஸந்தோஷத்தாலே ஒருவர்க்கொருவர்) எதிர்த்துத்தூவ,
கண்டக்கினிய,Kandakkiniya - விசாலமாய்
நல்,Nal - விலக்ஷணமான
முற்றம்,Mutram - (நந்தகோபர் திருமாளிகையில்) திருமுற்றமானது
கலந்து,Kalandhu - (எண்ணெயும் மஞ்சள் பொடியும் துகையுண்டு) தன்னிலே சேர்ந்து
அளறு ஆயிற்று,Alaru aayitru - சேறாய்விட்டது.
14ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து - முதல் திருமொழி - வண்ண மாடங்கள்) (கண்ணன் திரு அவதாரச் சிறப்பு) (இவ்வளவிலே யன்றி தம் திரு உள்ளத்துக்குப் பொருந்த திருவாய்ப்பாடியில் உள்ளார் ப்ரியம் கண்டபடியாலே ஸ்லாகிக்கிறார்) 2
ஓடுவார் விழு வார் உகந் தாலிப்பார்
நாடுவார் நம்பி ரான் எங்குற் றானென்பார்
பாடு வார்களும் பல்பறை கொட்ட நின்று
ஆடு வார்களும் ஆயிற்று ஆய்ப் பாடியே.–1-1-2
ஆய்ப்பாடி,Aayppadi - திருவாய்ப்பாடியானது,
ஓடுவார்,Oduvaar - (ஸ்ம்ப்ரமித்து) ஓடுவாரும்
விழுவார்,Vizhuvaar - (சேற்றிலே வழுக்கி) விழுவாரும்
உகந்து,Ugandhu - உகப்புக்குப் போக்குவீடாக
ஆலிப்பார்,Aalipaar - கோஷிப்பாரும்
நாடுவார்,Naaduvaar - (பிள்ளையைத்) தேடுவாரும்
நம் பிரான்,Nam piraan - நமக்கு உபகாரகனான கண்ணன்
எங்கு தான் என்பார்,Engu thaan enbaar - எங்கேதான் (இராநின்றான்) என்பாரும்
பாடுவார்களும்,Paaduvaargalum - பாடுவார்களும்
பல் பறை,Pal parai - பலவகை வாத்யங்கள்
கொட்ட,Kotta - முழங்க
நின்று,Nindru - அதற்குப் பொருந்த நின்று
ஆடுவார்களும்,Aaduvaargalum - கூத்தாடுவாருமாக
ஆயிற்று,Aayitru - ஆய்விட்டது.
15ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து - முதல் திருமொழி - வண்ண மாடங்கள்) (கண்ணன் திரு அவதாரச் சிறப்பு) 3
பேணிச் சீருடைப் பிள்ளை பிறந்தினில்
காணத் தாம்புகு வார்புக்குப் போதுவார்
ஆணொப் பார் இவன் நேரில்லை காண் திரு
வோணத் தானுலகாளு மென் பார்களே.–1-1-3
சீர் உடை,Seer udai - ஸ்ரீமானான
பிள்ளை,Pillai - க்ருஷ்ணன்
பேணி,Peni - (கம்ஸாதிகள் கண்படாதபடி தன்னைக்) காத்து வந்து
பிறந்தினில்,Pirandhinil - பிறந்தவளவில்
தாம்,Thaam - ஆடிப்பாடி ஆயர்கள்
காண,Kaana - (கண்ணனைக்) காண்கைக்காக
புகுவார்,Puguvaar - உள்ளே நுழைவாரும்
புக்கு,Pukku - உள்ளேபோய் (கண்டு)
போதுவார்,Poduvaar - வெளிப்புறப்படுவாரும்,
ஆண் ஒப்பார்,Aan oppaar - ஆண்தன்மையொத்திருப்பவர்களில்
இவன் நேர்,Ivan ner - இவனோடு ஒத்திருப்பார்
இல்லை,Illai - (யாரும்) இல்லை; (இவன்)
திரு ஓணத்தான்,Thiru onathaan - ச்ரவண நக்ஷரத்தில் அவதரித்த ஸர்வேச்வரனுடைய
உலகு,Ulagu - விபூதிகளையெல்லாம்
ஆளும்,Aalum - ஆளக்கடவன்
என்பார்கள்,Enbaarghal - என்று சொல்லுவாருமாக ஆனார்கள்.
16ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து - முதல் திருமொழி - வண்ண மாடங்கள்) (கண்ணன் திரு அவதாரச் சிறப்பு) 4
உறியை முற்றத்து உருட்டி நின் றாடுவார்
நறு நெய் பால் தயிர் நன்றாகத் தூவுவார்
செறிமென் கூந்தல் அவிழத் திளைத்து எங்கும்
அறிவ ழிந்தனர் ஆய்ப்பாடி யாயரே.–1-1-4
ஆய்ப்பாடி,Aayppadi - திருவாய்ப்பாடியிலுள்ள
ஆயர்,Aayar - இடையர்கள்
உறியை,Uriyai - (பால் தயிர் சேமித்து வைத்த)உறிகளை
முற்றத்து,Mutrathu - முற்றத்திலே
உருட்டி நின்று,Urutti nindru - உருட்டிவிட்டு
ஆடுவார்,Aaduvaar - கூத்தாடுவார் சிலரும்,
நறு,Naru - மணம்மிக்க
நெய் பால்தயிர்,Ney paalthayir - நெய்யையும் பாலையும் தயிரையும்
நன்றாக,Nandraaga - நிச்சேஷமாக
தூதுவார்,Thoothuvaar - தாநம் பண்ணுவார் சிலரும்,
செறி மென்,Seri men - நெருங்கி மெத்தென்றிருக்கிற
கூந்தல்,Koondhal - மயிர்முடியானது
அவிழ,Avizha - அவிழ்ந்து கலையும்படி
திளைத்து,Thilaiththu - நர்த்தநம்பண்ணுவார் சிலருமாக,
எங்கும்,Engum - சேரியடங்கலும்
அறிவு அழிந்தனர்,Arivu azhindhanar - தங்களூடைய விவேகம் ஒழியப் பெற்றனர்.
17ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து - முதல் திருமொழி - வண்ண மாடங்கள்) (கண்ணன் திரு அவதாரச் சிறப்பு) 5
கொண்ட தாளுறி கோலக் கொடு மழுத்
தண்டினர் பறியோலை சயனத்தர்
விண்ட முல்லை யரும்பன்ன பல்லினர்
அண்டர் மிண்டிப் புகுந்து நெய்யாடினார் –1-1-5
தான்கொண்ட,Thaankonda - கால்நெருக்கத்தையுடைய
உறி,Uri - உறிகளையும்
கோலம்,Kolam - அழகிய
கெரடு,Keradu - கூர்மையான
மழு,Mazhu - மழுக்களையும்
தண்டினர்,Thandinar - தடிகளையுமுடையராய்
பறி,Pari - (தாழைமடலினின்றும்) பறிக்கப்பட்ட
ஓலை
,Olai-olaigalinaarseydha
- ஓலைகளினாற்செய்த
சயனத்தர்,Sayanathar - படுக்கையையுடையராய்
விண்ட,Vinda - விசஹித்த
முல்லை அரும்பு அன்ன,Mullai arumbu anna - முல்லையரும்பு போன்ற
பல்லினர்,Pallinar - பற்களையுடையவரான
அண்டர்,Andar - இடையரானவர்கள்
மிண்டி,Mindi - (ஒருவருக்கொருவர்) புகுந்து
நெய் ஆடினார்,Ney aadinaar - நெய்யாடல் ஆடினார்கள்.
18ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து - முதல் திருமொழி - வண்ண மாடங்கள்) (கண்ணன் திரு அவதாரச் சிறப்பு) 6
கையும் காலும் நிமிர்த்து கடார நீர்
பைய வாட்டிப் பசும் சிறு மஞ்சளால்
ஐய நா வழித் தாளுக்கு அங்காந்திட
வையம் ஏழும் கண்டாள் பிள்ளை வாயுளே –1-1-6
கையும்,Kaiyum - திருக்கைகளையும்
காலும்,Kaalum - திருவடிகளையும்
நிமிர்த்து,Nimirththu - (நீட்டி) நிமிர்த்து
கடாரம்,Kadhaaram - கடாரத்தில் (காய்ச்சின)
நீர்,Neer - திருமஞ்சனத் தீர்த்தத்திலே
பசு சிறு மஞ்சளால்,Pasu siru manjalal - குறுங்கண்ணான பசு மஞ்சளால்
பைய,Paiya - திருமேனிக்குப் பாங்காக
ஆட்டி,Aatti - ஸ்நாநம் செய்வித்து
ஐய,Ayya-mellidhaana - மெல்லிதான
நா,Naa - நாக்கை
வழித் தாளுக்கு,Vazhi thaalukku - வழித்தவளான யசோதைக்காக
அங்காந்திட,Angaandhida - (கண்ணன்) வாயைத்திறக்க, (யசோதையானவன்)
பிள்ளை,Pillai - கண்ணபிரானுடைய
வாயுள்,Vaayul - வாயினுள்ளே
வையம் ஏழும்,Vaiyam ezhum - உலகங்களையெல்லாம்
கண்டாள்,Kandaal - ஸாக்ஷத்கரித்தாள்.
19ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து - முதல் திருமொழி - வண்ண மாடங்கள்) (கண்ணன் திரு அவதாரச் சிறப்பு) 7
வாயுள் வையகம் கண்ட மட நல்லார்
ஆயர் புத்திர னல்லன் அருந்தெய்வம்
பாய சீருடைப் பண்புடைப் பாலகன்
மாய னென்று மகிழ்ந்தனர் மாதரே–1-1-7
வாயுள்,Vaayul - (பிள்ளையின்) வாயினுள்ளே
வையகம்,Vaiyagam - உலகங்களை
கண்ட,Kanda - ஸாக்ஷாத்கரித்த
நல் மடவார்,Nal madavaar - வைலக்ஷண்யத்தையும் மடப்பத்தையுமுடைய
மாதர்,Maadhar - ஸ்த்ரீகளானவர்கள்
ஆயர் புத்திரன் அல்லன்,Aayar puthiran allan - (இவன்) இடைப்பிள்ளை யல்லன்
அரு தெய்வம்,Aru dheivam - பெறுதற்கரிய தெய்வம்,
பாய சீர் உடை,Paaya seer udai - பரம்பின புகழையுடையனும்
பண்பு உடை,Panbu udai - குணங்களை யுடையனுமான
பாலகன்,Paalakan - (இந்த) சிறு பிள்ளையானவன்
மாயன்,Maayan - ஆச்சர்ய சக்தி யுக்தன்
என்று,Endru - என்று (ஒருவர்க்கொருவர்) சொல்லிக் கொண்டு
மகிழ்ந்தனர்,Magizhndhanar - ஆநந்தித்தார்கள்.
20ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து - முதல் திருமொழி - வண்ண மாடங்கள்) (கண்ணன் திரு அவதாரச் சிறப்பு) 8
பத்து நாளும் கடந்த இரண்டாநாள்
எத்தி சையும் சயமரம் கோடித்து
மத்த மாமலை தாங்கிய மைந்தனை
உத்தா னம்செய்து உகந்தனர் ஆயரே.–1-1-8
பத்து நளும் கடந்த,Paththu nalum kadandha - பத்துநாளுங் கழிந்த
இரண்டாம் நாள்,Erandaam naal - பன்னிரண்டாம் நாளான நாமகரண திநத்திலே
எத் திசையும்,Eth thisaiyum - எல்லாத் திக்குக்களிலும்
சயம் மரம்,Sayam maram - ஜயதோரண ஸ்தம்பங்களை
கோடித்து,Kodiththu - நாட்டி அலங்கரித்து
மத்தம் மா,Maththam maa - மதம் பிடிக்குந் தன்மையுள்ள மிருகமாகிய யானைகள் தங்கியிருக்கிற
மலை,Malai - கோவர்த்தந பர்வதத்தை
தாங்கிய,Thaangiya - (குடையாக) ஏந்தி நின்ற
மைந்தனை,Maindhanai - குழந்தையாகிய கண்ணனை
ஆயர்,Aayar - இடையரானவர்கள்
உத்தானம் செய்து,Uthaanam seydhu - கைத் தலத்திலே வைத்துக் கொண்டு
உகந்தனர்,Ugandhanar - ஸந்தோஷித்தார்கள்.
21ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து - முதல் திருமொழி - வண்ண மாடங்கள்) (கண்ணன் திரு அவதாரச் சிறப்பு) (பருவத்துக்குத் தக்க அல்லாத சேஷ்டிதங்களை அனுசந்தித்து – திருத்தாயார் -சந்நிஹிதர் ஆனவர்களுக்கு சொன்ன பாசுரத்தை – அவளான பாவனையிலே தாம் அனுபவித்து -இனியர் ஆகிறார்) 9
கிடக்கில் தொட்டில் கிழிய உதைத்திடும்
எடுத்துக் கொள்ளில் மருங்கை யிறுத்திடும்
ஒடுக்கிப் புல்கில் உதரத்தே பாய்ந்திடும்
மிடுக்கி லாமையால் நான் மெலிந் தேன் நங்காய்–1-1-9
நங்காய்,Nangai - பூர்ணகளான ஸ்த்ரீகளே (இப்பிள்ளையானவன்)
கிடக்கில்,Kidakkil - (தொட்டிலில்) கிடந்தானாகில்
தொட்டில்,Thottil - தொட்டிலானது
கிழிய,Kizhiya - சிதிலமாம்படி
உதைத்திடும்,Udhaithidum - (கால்களினால்) உதையா நின்றான்
எடுத்துக் கொள்ளில்,Eduththu kollil - (இவனை இடுப்பில்) எடுத்துக் கொண்டால்
மருங்கை,Marungai - இடுப்பை
இறுத்திடும்,Eruthidum - முறியா நின்றான்.
ஒடுக்கி,Oduki - (இவனுடைய கைகால்களை) ஒடுக்கி
புல்கில்,Pulgil - மார்வில் அணைத்துக் கொண்டால்
உதரத்து,Udharaththu - வயிற்றிலே
பாய்ந்திடும்,Paayndhidum - பாயாநின்றான்
மிடுக்கு,Midukku - (இச்சேஷ்டைகளைப் பொறுக்கவல்ல) சக்தி
இலாமையால்,Ilaamaiyaal - (இப்பிள்ளைக்கு) இல்லாமையால்
நான்,Naan - தாயாகிய நான்
மெலிந்தேன்,Melindhen - மிகவும் இளைத்தேன்.
22ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து - முதல் திருமொழி - வண்ண மாடங்கள்) (கண்ணன் திரு அவதாரச் சிறப்பு) (இத்திருமொழி கற்றாருக்கு பலன் சொல்லித் தலைக் கட்டுகிறார் செந்நெலாலே நிறைந்த வயலாலே சூழப் பட்ட திருக் கோஷ்டியூரிலே நித்ய வாசம் பண்ணுகிற திருக் கோட்டியூர் கண்ணன் கேசவன் நம்பி என்று தொடங்கி மன்னு நாரணன் நம்பி -என்று நியமிக்கையாலே சாதாரண அசாதாரண வ்யாவ்ருத்தமான வாக்ய த்வய குண பூர்த்தியை மன்னு நாரணன் நம்பி -என்று அருளிச் செய்கிறார்.) 10
செந்நெ லார் வயல் சூழ் திருக் கோட்டியூர்
மன்னு நாரணன் நம்பி பிறந்தமை
மின்னு நூல் விட்டு சித்தன் விரித்த இப்
பன்னு பாடல் வல் லார்க்கு இல்லை பாவமே–1-1-10
செம் நெல்,Sem nel - செந்நெல் தாந்யங்களால்
ஆர்,Aar - நிறையப் பெற்ற
வயல்,Vayal - கழனிகளாலே
சூழ்,Soozh - சூழப்பட்ட
திருக்கோட்டியூர்,Thirukkottiyur - திருக்கோட்டியூரிலே
மன்னு,Mannu - பொருந்தி வர்த்திக்குமவனாய்
நாரணன்,Naaranan - நாராயண சப்த வாச்யனாய்
நம்பி,Nambi - ஸர்வ குண பூர்ணனான ஸர்வேச்வரன்
பிறந்தமை,Pirandhamai - திருவவதரித்தபடியை
மின்னு,Minnu - விளங்கா நின்ற
நூல்,Nool - யஜ்ஞோபலீதத்தையுடைய
விட்டு சித்தன்,Vittu siththan - பெரியாழ்வார்
விரித்த,Viritha - விஸ்தரித்து அருளிச் செய்த
பன்னு,Pannu - ஜ்ஞாநிகள் எப்போதும் அநுஸந்திக்கக் கடவதான
இப் பாடல்,Ep paadal - இப் பரசுரங்களை
வல்லார்க்கு,Vallaarukku - ஓத வல்லவர்க்கு
பாவமில்லை,Paavamilai - பாபமில்லை.