திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 10-1 ஒரு நல் சுற்றம் (10 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1848பெரிய திருமொழி || (10-1–ஒரு நல் சுற்றம்) (பதினெண் திருப்பதிகள்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நமக்கு பிராப்ய பூமியைத் தருவானாய் தானே பிராப்யன் ஆனவனை திரு நீர் மலையிலே கண்டோம் இனி திருக் கண்ண மங்கையிலே காணக் கடவோம் – என்கிறார்) 1
ஒரு நல் சுற்றம் எனக்கு உயிர் ஒண் பொருள் வரு நல் தொல் கதியாகிய மைந்தனை நெருநல் கண்டது நீர் மலை இன்று போய் கரு நெல் சூழ் கண்ண மங்கையுள் காண்டுமே –10-1-1
பதவுரை Show / Hide
ஒரு நல் சுற்றம், Oru Nal Suttam - அத்விதீய விலக்ஷண பந்துவாய்
எனக்கு உயிர், Enakku Uyir - எனக்கு ஆத்மாவாய்
ஒண் பொருள், On Porul - சிறந்த பெருளாயிருப்பவனாய்
வருநல் தொல் கதி ஆகிய, Varunal Thol Kathi Aagiya - மேல்வரப் போகிற நல்லப்ராய்ய பூமியும் தானேயா யிருப்பவனான
மைந்தனை, Mainthanai - நித்ய்யுவாலான பெருமானை
நெருநெல், Nerunel - நேற்று
கண்டது, Kandathu - ஸேவித்தது
நீர்மலை, Neermalai - திருநீர்மலையிலே
இன்று, Indru - இன்றைக்கோ வென்னில்,
கரு நெல் சூழ், Karunel Soozh - கருவடைந்த பயிர்களால் சூழப்பட்ட
கண்ணமங்கையுள், Kannamangaiyul - திருக்கண மங்கையிலே
போய் காண்டும், Poi Kaandum - சென்று ஸேவிப்போம்
1849பெரிய திருமொழி || (10-1–ஒரு நல் சுற்றம்) (பதினெண் திருப்பதிகள்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சர்வைஸ் ஸ்ப்ருஹணீயனானவை ஸ்ரீ திருமலையிலே கண்டோம் – இனி ஸ்ரீ திருத் தண் காவிலே சென்று காணக் கடவோம் – என்கிறார்) 2
பொன்னை மா மணியை யணி யார்ந்ததோர் மின்னை வேங்கடத் துச்சியில் கண்டு போய் என்னை யாளுடை யீசனை யெம்பிரான் தன்னை யாம் சென்று காண்டும் தண் காவிலே –10-1-2
பதவுரை Show / Hide
பொன்னை, Ponnai - பொன்போல விரும்பத்தகுந்தவனும்
மா மணியை, Maa Maniyai - நீலமணிபோன்றவனும்
அணி ஆர்ந்தது ஓர் மின்னை, Ani Aarnthathu Oru Minnai - அழகுமிக்கதொரு மின்னற் கொடிபோன்று உஜ்ஜவல ஸ்வரூபியானவனும்
என்னை ஆளுடை ஈசனை, Ennai Aaludai Eesanai - என்னை அடிமைகொண்ட ஸ்வாமியுமான
எம்பிரான் தன்னை, Embiran Thannai - ஸர்வேச்வரனை
யாம், Yaam - அடியோம்
(நெருநல்), Nerunel - நேற்று
வேங்கடத்து உச்சியில், Vengadathu Uchiil - திருவேங்கடமலையின் சிகரத்தில்
கண்டு, Kandu - ஸேவித்து,
(இன்று), Indru - இன்றைக்கு
தண்காவிலே சென்று காண்டும், Thankavilai Sendru Kaandum - திருத்தண்காவிலே போய் ஸேவிப்போம்.
1850பெரிய திருமொழி || (10-1–ஒரு நல் சுற்றம்) (பதினெண் திருப்பதிகள்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ வடதள சாயி யானவனை திருவாலியிலே கண்டோம் – இனி ஸ்ரீ திரு நாங்கூரிலே சென்று காணக் கடவோம் என்கிறார்) 3
வேலை யாலிலைப் பள்ளி விரும்பிய பாலை யாரமுதினைப் பைந்துழாய் மாலை யாலியில் கண்டு மகிழ்ந்து போய் ஞாலம் உன்னியைக் காண்டும் நாங்கூரிலே –10-1-3
பதவுரை Show / Hide
வேலை, Velai - (பிரளயக்) கடலிலே
ஆல் இலை, Aal Ilai - ஆலந்தளிரிலே
பள்ளி விரும்பிய, Palli Virumbiya - திருக்கண் துயில்வதை உகந்தருளினவனும்
பாலை, Paalai - பால்போன்றவனும்
ஆர் அமுதத்தினை, Aar Amudaththinai - அருமையான அமிருதம் போன்றவனும்
பைந்துழாய், Painthuzhai - பசுமைதங்கிய திருத்துழாயை யுடையவனும்
ஞாலம் உன்னியை, Njaalam Unniyai - உலகத்தவர்களெல்லாராலும் தியானிக்கப்படுபவனுமான
மாலை, Maalaik - ஸர்வேச்வரனை
ஆலியில் கண்டு மகிழ்ந்து, Aaliil Kandu Makizhndhu - திருவாலியில் ஸேவித்து ஆநந்தித்து
நாங்கூரிலே போய் காண்டும், Naangoorile Poi Kaandum - திருநாங்கூரிலே சென்று ஸேவிப்போம்.
1851பெரிய திருமொழி || (10-1–ஒரு நல் சுற்றம்) (பதினெண் திருப்பதிகள்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ ப்ரஹ்லதா ஆழ்வானுக்கு விரோதியான ஹிரண்யனை போக்கினவனை ஸ்ரீ திருப் பேரிலே கண்டோம் இனிப் போய் ஸ்ரீ திரு வெள்ளறையிலே காணக் கடவோம் என்கிறார்) 4
துளக்கமில் சுடரை அவுணன் உடல் பிளக்கும் மைந்தனைப் பேரில் வணங்கிப் போய் அளப்பில் ஆரமுதை அமரர்க்கு அருள் விளக்கினைச் சென்று வெள்ளறை காண்டுமே –10-1-4
பதவுரை Show / Hide
துளக்கம் இல் சுடரை, Thulakkam Il Sudarai - ஒன்றாலும் அழிதலில்லாத ஒளியையுடையவனும்
அவுணன், Avaunan - (இரணியனென்னும்) அஸுரனுடைய
உடல், Udal - உடம்பை
பிளக்கும், Pilakkum - பிளந்தொழித்த
மைந்தனை, Mainthanai - மிடுக்கையுடையவனும்
அளப்பு இல் ஆர் அமுதை, Alappu Il Aar Amudhai - அளவிடுதலில்லாத போக்யதையை யுடைத்தான அமிருதம் போன்றவனும்
அமரர்க்கு அருள் விளக்கினை, Amararukku Arul Vilakkinai - நித்யஸூரிகளுக்கு அருள் செய்கின்ற விளக்குப் போன்றவனுமான பெருமானை
பேரில், Peril - திருப்பேர் நகரில்
வணங்கிப்போய், Vanangippoy - ஸேவித்து
வெள்ளறை, Vellarai - திருவெள்ளறையிலே
சென்று காண்டும், Sendru Kaandum - சென்று தொழுவோம்
1852பெரிய திருமொழி || (10-1–ஒரு நல் சுற்றம்) (பதினெண் திருப்பதிகள்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ருத்ரனுடைய சாபத்தைப் போக்கினவனை ஸ்ரீ திரு நறையூரிலே கண்டோம் இனிப் போய் ஸ்ரீ திரு மெய்யத்திலே காணக் கடவோம் என்கிறார்) 5
சுடலையில் சுடு நீறன் அமர்ந்ததோர் நடலை தீர்த்தவனை நறையூர்க் கண்டு என் உடலையுள் புகுந்து உள்ளம் உருக்கி யுண் விடலையைச் சென்று காண்டும் மெய்யத்துள்ளே –10-1-5
பதவுரை Show / Hide
சுடலையில், Sudalaiyil - சுடுகாட்டில்
சுடுநீறன், Suduneeran - சுட்டசாம்பலைப் பூசுமவனான ருத்ரனுக்கு
அமர்ந்தது, Amarnthathu - நேர்ந்ததான
ஓர் நடலை, Oru Nattalai - ஒரு கஷ்டத்தை
தீர்த்தவனை, Theerthavanai - போக்கியருளினவனும்
என் உடலை உள் புகுந்து, En Udalai Ula Pugundhu - எனது சரீரத்தினுள்ளே புகுந்து
உள்ளம், Ullam - நெஞ்சே
உருக்கி உண், Urukki Un - உருக்கி உண்கின்ற
விடலையை, Vidalaiyai - யுவாவுமான ஸர்வேச்வரனை
நறையூர் கண்டு, Naraiyur Kandu - திருநறையூரிலே ஸேவித்து
மெய்யத்துள்ளே சென்று காண்டும், Meyyaththulle Sendru Kaandum - திருமெய்யத்திலே சென்று ஸேவிப்போம்
1853பெரிய திருமொழி || (10-1–ஒரு நல் சுற்றம்) (பதினெண் திருப்பதிகள்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பிரயோஜனாந்த பரருக்கும் அபேஷிதம் செய்யும் பரம உதாரனை ஸ்ரீ திருச் சேறையிலே கண்டோம் இனி ஸ்ரீ திருக் குடந்தையிலே காணக் கடவோம் என்கிறார்) 6
வானையார் அமுதம் தந்த வள்ளலைத் தேனை நீள் வயல் சேறையில் கண்டு போய் ஆனை வாட்டி யருளும் யமரர் தம் கோனை யாம் குடந்தை சென்று காண்டுமே –10-1-6
பதவுரை Show / Hide
வானையார், Vaanaiyaar - வானுலகத்திலுள்ளார்க்கு
அமுதம் தக்க, Amudham Thakka - அமுதமெடுத்தளித்த
வள்ளலை, Vallalai - உதாரனும்,
தேனை, Thenai - தேன்போல இனியவனும்
ஆனை, Aanaik - (குவலயாபீடமென்கிற) யானையை
வாட்டி அருளும், Vaatti Arulum - கொன்றொழித்தவனும்
அமரர்தம் கோனை, Amarartham Konai - நித்யஸூரிகளுக்கு நியாமகனுமான எம்பெருமானை
யாம், Yaam - அடியோம்
நீள் வயல் சேறையில், Neel Vayal Seraiyil - நீண்டவயல்களை யுடைத்தான திருச்சேறையில்
கண்டுபோய், Kandupoy - ஸேவித்து
குடந்தை, Kudanthai - திருக்குடந்தையிலே
சென்று காண்டும், Sendru Kaandum - போய்ஸேவிப்போம்.
1854பெரிய திருமொழி || (10-1–ஒரு நல் சுற்றம்) (பதினெண் திருப்பதிகள்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ கிருஷ்ணனாய் அனுகூல ஸ்பர்சம் உள்ள வெண்ணெயை விழுங்கினவனை ஸ்ரீ திருவழுந்தூரிலே கண்டோம் இனிப் போய் ஸ்ரீ திரு வெக்காவில் காணக் கடவோம்) 7
கூந்தலார் மகிழ் கோவலனாய் வெண்ணெய் மாந்து அழுந்தையில் கண்டு மகிழ்ந்து போய் பாந்தள் பாழியில் பள்ளி விரும்பிய வேந்தனைச் சென்று காண்டும் வெக்கா வுளே –10-1-7
பதவுரை Show / Hide
கூந்தலார் மகிழ் கோவலன் ஆய், Koondhalar Magizh Kovalain Aay - சிறந்த கூந்தலையுடையரான ஸ்த்ரீகள் உகக்கும்படியான கோபாலகிருஷ்ணனாய்த் திருவவதரித்து (- (கண்டு மகிழ்ந்து போய்))
வெண்ணெய், Vennai - வெண்ணெயை
மாந்த, Mantha - அமுதுசெய்யாநிற்க
அழுந்தையில், Azhundhaiyil - தேரழுந்தூரிலே
பாந்தள் பாழியில், Panthal Pazhiyil - திருவனந்தாழ்வானாகிற படுக்கையிலே
பள்ளி, Palli - திருக்கண்வளர்தலை
விரும்பிய, Virumbiya - விரும்பிக் கைக்கொண்ட
வேந்தனை, Vendhanai - ஸர்வேச்வரனை
வெஃகாவுள், Vekavul - திருவெஃகாவில்
சென்று காண்டும், Sendru Kaandum - போய் ஸேவிப்போம்
1855பெரிய திருமொழி || (10-1–ஒரு நல் சுற்றம்) (பதினெண் திருப்பதிகள்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தன் திருவடிகளிலே நல்லாருக்கு ஆத்மாவனவனை ஸ்ரீ தெற்குத் திருமலையிலே கண்டோம் இனிப் போய் ஸ்ரீ திரு விண்ணகரிலே காணக் கடவோம் என்கிறார்) 8
பத்தராவியைப் பான்மதியை யணித் தொத்தை மாலிருஞ்சோலை தொழுது போய் முத்தினை மணியை மணி மாணிக்க வித்தினைச் சென்று விண்ணகர் காண்டுமே –10-1-8
பதவுரை Show / Hide
பத்தர் ஆவியை, Pathar Aaviyai - பக்தர்களுக்கு ஆத்மாவாக வுள்ளவனும்
பால் மதியை, Paal Mathiyai - களங்கமற்ற சந்திரனைப் போல அழகியவனும்
அணி தொத்தை, Ani Thothai - ஆபரணமாலை போன்றவனும்
முத்தினை, Muththinai - முத்துப்போன்றவனும்
மணியை, Maniyai - நீலமணிபோன்றவனும்
மணி மாணிக்கம், Mani Manikkam - சிறந்த மாணிக்கம் போன்றவனும்
வித்தினை, Viththinai - ஜகத்காரண பூகனுமான எம்பெருமானை
மாலிருஞ்சோலை, Maliruncholai - திருமாலிருஞ்சோலையில்
போய் தொழுது, Poi Thozhudhu - சென்று பணிந்து
விண்ணகர், Vinnagar - திருவிண்ணகரிலே
சென்று காண்டும், Sendru Kaandum - போய் ஸேவிப்போம்
1856பெரிய திருமொழி || (10-1–ஒரு நல் சுற்றம்) (பதினெண் திருப்பதிகள்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (குவலயா பீடத்தின் கொம்பைப் பறித்தவனை ஸ்ரீ திருக் கோட்டியூரிலே கண்டு போய் ஸ்ரீ திரு நாவாயிலே காணக் கடவோம் என்கிறார்) 9
கம்ப மா களிறு அஞ்சிக் கலங்க வோர் கொம்பு கொண்ட குரை கழல் கூத்தனைக் கொம்புலாம் பொழில் கோட்டியூர்க் கண்டு போய் நம்பனைச் சென்று காண்டும் நாவாயுளே –10-1-9
பதவுரை Show / Hide
கம்பம், Kambam - (கண்டார்க்கு) நடுக்கத்தை விளைக்கத்தக்கதாய்
மா, Maa - பெரிய வடிவுடைத்தான
களிறு, Kaliru - (குவலயாபீடமென்னும்) யானை
அஞ்சி, Anji - பயப்பட்டு
கலங்க, Kalanga - கலங்கி முடியுமாறு
ஓர் கொம்பு கொண்ட, Oru Kombu Konda - அதன் கொம்பை முறித்தெறிந்தவனும்
குரை கழல், Kurai Kazhal - ஒலிக்கின்ற வீரக்கழலை யுடையவனும்
கூத்தனை, Koothanai - விசித்திரமான நடையுடையவனும்
நம்பனை, Nambanai - (அன்பர்) விச்வஸிக்கத் தகுந்தவனுமான பெருமானை
கொம்புஉலாம் பொழில், Kombulalam Pozhil - கிளைகள் விளங்குகின்ற சோலைகள் யுடைத்தான
கோட்டியூர், Kottiyur - திருக்கோட்டியூரிலே
போய் கண்டு, Poi Kandu - சென்று ஸேவித்து
நாவாயுள் சென்று காண்டு, Navayul Sendru Kandu - திருநாவாயில் போய் ஸேவிப்போம்
1857பெரிய திருமொழி || (10-1–ஒரு நல் சுற்றம்) (பதினெண் திருப்பதிகள்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இவை சொன்ன ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு விச்சேதம் இல்லை –நச புனராவர்த்ததே ஆண்மின்கள் வானகம் -என்கிறபடியே-நித்ய அனுபவம் பண்ணலாம் தேசத்தை ஆளுவார்கள்) 10
பெற்றம் ஆளியைப் பேரில் மணாளனைக் கற்ற நூல் கலிகன்றி யுரை செய்த சொல் திறமிவை சொல்லிய தொண்டர்க்கு அற்றமில்லை அண்டம் அவர்க்கு ஆட்சியே –10-1-10
பதவுரை Show / Hide
பெற்றம் ஆளியை, Petram Aalaiya - பசுக்களை ஆளப்பிறந்தவனும்
பேரில், Peril - திருப்பேர் நகரில்
மணளனை, Manalanai - மணவாளப்பிள்ளையாக ;ஸேவை ஸாதிப்பவனுமான பெருமான் விஷயமாக,
நூல் கற்ற கலிகன்றி உரைசெய்த, Nool Katra Kalikanri Uraichaidha - நூல்களைப் பயின்ற திருமங்கையாழ்வார் அருளிச்செய்த
சொல் திறம் இவை, Sol Thiram Ivai - இந்த சப்தராசியை
சொல்லிய தொண்டர் கட்கு, Solliya Thondar Kadku - ஓதுகின்ற பாகவதர்களுக்கு
அற்றம் இல்லை, Attram Illai - (கைங்கரியத்திற்கு) இடையூறு (ஒருநாளும்) இல்லையாம்.
அவர்க்கு அண்டம் ஆட்சி, Avarkku Andam Aatchi - அவர்களுக்குப் பரமபதம் ஆளவுரியதாம்.