திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1942 | பெரிய திருமொழி || (10-10–திருத்தாய்) - (தலைமகனை பிரிந்த தலைமகள் ஆற்றாமை மீதிட்டுக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (திருத்தாய் செம்போத்தே-போத்துத் திருத்துகை யாவது -அநு கூலிக்கை – என்றும் ஒக்க இவற்றின் உடைய ரஷணமே பண்ணிப் போருகையாலே வந்த குணவத்தா ப்ரதையை உடையவன் – ஸ்ரீ லஷ்மீ பதி என்கை அன்றிக்கே இது தானே தனக்குப் பேராய் இருக்கை – ஒரு கால் சொன்னால் ஆதரம் மட்டம் என்று இருக்கிறதாய் கொண்டு இருகால் மாட்டுச் சொல்கிறாள்) 1 | திருத்தாய் செம்போத்தே
திரு மா மகள் தன் கணவன்
மருத்தார் தொல் புகழ் மாதவனை வரத்
திருத்தாய் செம்போத்தே –10-10-1 | பதவுரை Show / Hideசெம்போத்தே, Semboththae - ஓசெம்போத்துப் பட்சியே! (- (செம்போத்தே! திருத்தாய்)) திருமாமாள் தன் கணவன், Thirumaamal Than Kanavan - பெரியபிராட்டியார்க்கு கொழுநனாய் மருதர், Maruthar - மணம் மிக்க மாலையை யணிந்துள்ளவனாய் தொல் புகழ், Thol Pugazh - நித்யஸித்தமான கீர்த்தியை யுடையவனான மாதவனை, Madhavanai - எம்பெருமானை வர திருத்தாய், Vara Thiruththai - இங்கே வருமாறு நீதிருந்த வேணும்; |
| 1943 | பெரிய திருமொழி || (10-10–திருத்தாய்) - (தலைமகனை பிரிந்த தலைமகள் ஆற்றாமை மீதிட்டுக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சப்த பூர்த்தியை உடைத்தாய்-நித்யமான புகழை உடையவனாய் இருக்கிறவனை –ஸ்ரீ ராமாயணத்துக்கு பிரதிபாத்யனாய் இருக்குமவனை –ரஷிக்கையால் வந்த புகழை உடையவனை – ஸ்ரீ பிராட்டிக்காக தன் மார்விலே அம்பேற்ற தீரோதாத்த நாயகனை –வரக் கூவாய்) 2 | கரையாய் காக்கைப் பிள்ளாய்
கருமா முகில் போல் நிறத்தன்
உரையார் தொல் புகழ் உத்தமனை வரக்
கரையாய் காக்கைப் பிள்ளாய் –10-10-2 | பதவுரை Show / Hideகாக்கைப் பிள்ளாய், Kaakkai Pillai - காக்கைக்குட்டியே! (- (காக்கைப் பிள்ளாய்! கரையாய்)) கரு மா முகில் போல் நிறத்தன், Karumaa Mukil Pol Niraththan - காளமேகநிறத்தனாய் உரை ஆர்தொல் புகழ், Urai Aarthol Pugazh - சொற்களில் நிரம்பிய நித்ய கீர்த்தியையுடையனான உத்தமனை, Uthamanai - புரஷோத்தமனை வர கரையாய், Vara Karaiyaai - வருமாறு கூப்பிடவேணும் |
| 1944 | பெரிய திருமொழி || (10-10–திருத்தாய்) - (தலைமகனை பிரிந்த தலைமகள் ஆற்றாமை மீதிட்டுக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (விரோதியைப் போக்கிற்றிலனே யாகிலும் விட ஒண்ணாத படி யாயிற்று வடிவு அழகு – வரக் கூவாய் பூங்குயிலே) 3 | கூவாய் பூங்குயிலே
குளிர்மாரி தடுத்துகந்த
மாவாய் கீண்ட மணி வண்ணனை வரக்
கூவாய் பூங்குயிலே –10-10-3 | பதவுரை Show / Hideபூகுயிலே, Pookuyile - அழகிய குயிலே! (- (பூங் குயிலே! கூவாய்-.)) குளிர்மாரி, Kulirmaari - (இந்திரனால் பெய்விக்கப் பட்ட) குளிர்மழையை தடுத்து, Thaduthu - (கோவர்த்தன மென்னுங் கொற்றக் குடையினால்) தடைசெய்து உகந்த, Ukanta - திருவுள்ளமுவந்தவனும் மா வாய்கீண்ட, Maa Vaaykeenda - நேசியென்னுங்குதிரையின் வாயைக்கீண்டவனும் மணி வண்ணனை, Mani Vannana - நீலமணி நிறத்தனுமான எம பெருமானை வரகூவாய், Varakoovai - வருமாறு கூவவேணும் |
| 1945 | பெரிய திருமொழி || (10-10–திருத்தாய்) - (தலைமகனை பிரிந்த தலைமகள் ஆற்றாமை மீதிட்டுக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஒரு ஊரில் மன்று பாழ் தீரும்படியாக குடக் கூத்தாடினான் – ஒரு லோகத்தில் பாழ் தீரும்படியாகவும் ஒரு கூத்தாடினான் ஆயிற்று – தேன் மாறாத பூ மலரை உடைத்தான திருக் குழலை உடையவனை – பரம பிரணயிநி ஆனவனை – வரக் கொட்டாய் பல்லிக் குட்டி) 4 | கொட்டாய் பல்லிக் குட்டி
குடமாடி உலகளந்த
மட்டார் பூங்குழல் மாதவனை வரக்
கொட்டாய் பல்லிக் குட்டி –10-10-4 | பதவுரை Show / Hideபல்லக்குட்டி, Pallakkutti - ஓ பல்லிக்குட்டி! (- (பல்லிக்குட்டி கொட்டாய்-.)) குடம் ஆடி, Kudam Aadi - குடக் கூத்தாடினவனும் மட்டு ஆர்பூ குழல், Mattu Aarboo Kuzhal - தேன் பொருந்தி ணிந்த திருக்குழற்கற்றை யையுடையவனும் மாதவனை, Madhavanai - திருமகள் கொழுநனுமான எம் பெருமானை வா, Vaa - இங்கே வருமாறு கொட்டாய், Kottai - ஒலிசெய் |
| 1946 | பெரிய திருமொழி || (10-10–திருத்தாய்) - (தலைமகனை பிரிந்த தலைமகள் ஆற்றாமை மீதிட்டுக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஆயுதம் தானும் மிகையாம்படி யான திண்ணிய தோளை உடையவன் – வட வேங்கடவனை வரச் –ரஷணத்துக்கு உறுப்பாக முதலடி இட்டுக் கொண்டு நிற்கிறவனை – சொல்லாய் பைங்கிளியே) 5 | சொல்லாய் பைங்கிளியே
சுடராழி வலனுயர்த்த
மல்லார் தோள் வட வேங்கடவனை வரச்
சொல்லாய் பைங்கிளியே –10-10-5 | பதவுரை Show / Hideபைங்கிளியே, Paingiliye - பசுமைதங்கிய கிளியே! (- (பைங்கிளியே! சொல்லாய்-.)) சுடர்ஆழி, Sudarazhi - ஒளிமிக்க திருவாழிப் படையை வலன், Valan - வலத்திருக்கையிலே உயர்த்த, Uyarttha - உயரத் தாங்கியிருந்துள்ளவனும் மல் ஆர்தோள், Mal Aarthol - மிடுக்குடைய திருத்தோள் களையுடையவனும் வடங்கடவனை, Vadangadavani - வடதிருவேங்கடமலையில் எழுந்தருளியிருப்பவனுமானபெருமானை வரசொல்லாய், Varasollai - இங்குவரச்சொல்லவேணும் |
| 1947 | பெரிய திருமொழி || (10-10–திருத்தாய்) - (தலைமகனை பிரிந்த தலைமகள் ஆற்றாமை மீதிட்டுக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தோழி என்று சமான துக்கையாய்-உடன் கூடினவளை சம்போதித்து- கோழி கூவென்னுமால் ஆழி வண்ணர் வரும் பொழுதாயிற்றுக் கோழி கூவென்னுமால் – என் செய்கேன் -என்கிறாள்) 6 | கோழி கூவென்னுமால்
தோழி நான் என் செய்கேன்
ஆழி வண்ணர் வரும் பொழுதாயிற்றுக்
கோழி கூவென்னுமால் –10-10-6 | பதவுரை Show / Hideதோழி, Thozhi - வாராய் தோழீ (- (மறுபடியும்) (எம்பெருமான் பிரிந்துபோய்விடப் போகிறானே)) கோழி கூ என்னும், Kozhi Koo Ennum - கோழியானது கூவென்று கத்துகிறது ஆழிவண்ணனா வரும் பொழுது ஆயிற்று, Azhivannana Varum Pozhuthu Aayitru - கடல் வண்ணனான எம்பெரு மான் இங்குவந்து சேருகிற வேளையாயிற்று ஆல், Aal - ஸந்தோஷம் கோழி கூ என்னும், Kozhi Koo Ennum - கோழியானது கூவென்று கூப்பிடப்போகிறதே! நான் என்செய் கேன், Naan Ensei Ken - நான் என்னபண்ணுவேன் ஆல், Aal - கஷ்டம்!. |
| 1948 | பெரிய திருமொழி || (10-10–திருத்தாய்) - (தலைமகனை பிரிந்த தலைமகள் ஆற்றாமை மீதிட்டுக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இதர விஷயத்துக்கு இறே அவன் பிரேரகன்-இவ்விஷயத்துக்கு அவன் பிரேரிக்க வேண்டா – அவன் வடிவு தானே இறே ப்ரேரகம் பேரமர் காதல் கடல் புரைய விளைவித்த காரமர் மேனி -என்னக் கடவது இறே) 7 | காமற்கு என் கடவேன்
கரு மா முகில் வண்ணற்கு அல்லால்
பூ மேல் ஐங்கணை கோத்துப் புகுந்து எய்யக்
காமற்கு என் கடவேன் –10-10-7 | பதவுரை Show / Hideகருமாமுகில் வண்ணற்கு அல் லால், Karumamugil Vannarku Al Laal - கருத்துப் பெருத்த மேகம் போன்ற திருநிறத்தையுடையரான பெருமாளுக்குக் கடமைப் பட்டிருப்ப தல்லாமல் (- (காமற்கு என் கடவேன்?-.)) மேல், Mel - அதற்குமேலே பூ, Poo - புஷ்பங்களாகிற ஐகணை, Aikanai - பஞ்சபாணங்களை கோத்து, Kothu - (கருப்புவில்லிலே) தொடுத்து புகுந்து, Pugundhu - உள்ளேபுகுந்து எய்ய, Eyy - பிரயோகித்து ஹிம்ஸிக்கும் படியாக காமற்கு, Kaamarakku - (என்வயிற்றிறி பிறந்தபிள்ளையான) மன்மதனுக்கு என் கடவேன், En Kadaven - கடமைப்பட்டவனோ நான்? |
| 1949 | பெரிய திருமொழி || (10-10–திருத்தாய்) - (தலைமகனை பிரிந்த தலைமகள் ஆற்றாமை மீதிட்டுக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஒன்றுக்கு ஓன்று ஒப்பாய்-வேல் போல் நெடிதாய் இருந்துள்ள கண்கள் களிப்ப – தேனார்ந்த சோலையை உடைத்தான ஸ்ரீ திருக் குடந்தையிலே சாய்ந்து அருளின வ்யாமுக்த்தன் – இங்கே போதுங்கொலோ) 8 | இங்கே போதுங்கொலோ
இனவேல் நெடுங்கண் களிப்பக்
கொங்கார் சோலைக் குடந்தை கிடந்த மால்
இங்கே போதுங்கொலோ –10-10-8 | பதவுரை Show / Hideகொங்கு ஆர், Kongu Ar - தேன்நிறைந்த (- (இங்கே போதும் சொலோ!-)) சோலை, Solai - சோலைகளையுடைய குடந்தை, Kudanthai - திருக்குடைந்தையிலே கிடந்த, Kidandha - திருக்கண்வளர்ந்தருளாநின்ற மால், Maal - எம்பெருமான், இளம் வேல் நெடு கண் களிப்ப, Ilam Vel Nedu Kann Kalippa - ஓன்றுக்கொன்று ஒப்பாய்வேல் போன்ற நீண்ட (எனது) கண்களானவை கண்டு களிக்கும்படியாக இங்கே, Inge - இவ்விடத்தே போதும்கொலோ, Podhumkolo - எழுந்தருளக் கூடுமோ? |
| 1950 | பெரிய திருமொழி || (10-10–திருத்தாய்) - (தலைமகனை பிரிந்த தலைமகள் ஆற்றாமை மீதிட்டுக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தேவத்வ ஸூசகமான ஸ்ரீ திரு ஆழியையும்-மனுஷ்யத்வைகாந்தமாய் ஸ்ப்ருஹநீயமான ஸ்ரீ சார்ங்கத்தையும் உடைய – ஸ்ரீ ஸ்வாமிகளை –அடையாளம் சொல்லா நிற்கச் செய்தே அறியேன் -என்னப் பண்ணுகிறது இறே -அவன் வைலஷண்யம்) 9 | இன்னார் என்று அறியேன்
அன்னே ஆழியொடும்
பொன்னார் சார்ங்கமுடைய வடிகளை
இன்னார் என்று அறியேன் –10-10-9 | பதவுரை Show / Hideஅன்னே, Anne - அம்மே! ஆழியொடும், Azhiyodum - திருவாழியாழ்வானையும் பொன்ஆர் சார்ங்கம், Ponaar Sargangam - அழகுபொருந்திய சார்ங்க வில்லையும் உடைய, Udaiya - (திருக்கையிலே) உடைய வரான அடிகளை, Adigalai - ஸ்வாமியை இன்னார்என்று, Innaarendru - இன்னாரென்று தொரிந்து கொள்ளமாட்டுகின்றியேன் அறியேன், Ariyen - இன்னார்என்று அறியேன்-. |
| 1951 | பெரிய திருமொழி || (10-10–திருத்தாய்) - (தலைமகனை பிரிந்த தலைமகள் ஆற்றாமை மீதிட்டுக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பல ஸ்ருதி சொல்லாது ஒழிந்தது-இது தானே பிரயோஜனம் -ஆகையாலே) 10 | தொண்டீர் பாடுமினோ
சுரும்பார் பொழில் மங்கையர் கோன்
ஒண்டார் வேல் கலியன் ஒலி மாலைகள்
தொண்டீர் பாடுமினோ –10-10-10 | பதவுரை Show / Hideதொண்டீர் அன்னே!, Thondir Anne - பாகவதர்களே (- (தொண்டீர்! பாடுமின்-.)) சுரும்பு ஆர் பொழில், Surumbu Ar Pozhil - வண்டுகள் நிறையப்படிந்த சோலைகளையுடைய மங்கையர் கோன், Mangaiyar Kon - திருமங்கை நாட்டில் உள்ளவர்கட்குத் தலைவரும் ஒண் தர்வேல், On Tharveel - அழகிய மாலையையும் வேற் படையையுமுடையவருமான் கலியன், Kalyan - ஆழ்வார் ஒலி, Oli - அருளிச்செய்த மாலைகள், Maalaihal - இச்சொல்மாலையை பாடுமின், Paadumin - பாடுங்கள் |