திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1868 | பெரிய திருமொழி || (10-3–ஏத்துகின்றோம்) (குழமணி தூரம்) - (தோல்வியுற்ற அரக்கர் அபயம் வேண்டி ஆடும் கூத்து) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ சுக்ரீவா ஸ்ரீ பெருமாள் திரு நாமத்தைச் சொல்லி ஏத்துவாருக்கு உம்மை ஆஸ்ரயிக்க வேணும் இறே – அவர் இசைந்தாலும் -வத்த்யதாம் -என்று நீர் சொன்னால் உம்மை இசைப்பித்து -ஆனய -என்று உம்மை விட்டு அழைப்பித்துக் கைக் கொள்ள வேண்டுகையாலே – ஸ்ரீ ராஜாவோடு வார்த்தை சொல்லுகிறவர்கள் என்று ஸ்ரீ முதலிகள் கொல்லாதபடி -என்கிறார்கள் – பண்டே சிஷித்து வைத்தவர்கள் போலே ஆடுகின்றோம்-எங்கள் செயல் அறுதியாலே) 1 | ஏத்துகின்றோம் நாத்தழும்ப இராமன் திருநாமம்
சோத்த நம்பி சுக்ரீவா யும்மைத் தொழுகின்றோம்
வார்த்தை பேசீர் எம்மை யுங்கள் வானரம் கொல்லாமே
கூத்தர் போலே ஆடுகின்றோம் குழமணி தூரமே –10-3-1 | பதவுரை Show / Hideஇராமன், Iraman - இராமபிரானுடைய திருநாமம், Thirunamam - திருநாமங்களை நா தழும்ப, Na Thazhumba - நாக்குத் தடிக்கும்படி எத்துகின்றோம், Eththukindrom - வாயாரச்சொல்லித் துதிக்கின்றோம். நம்பீ சுக்கிரீவா, Nambi Chukkrivaa - ஸுக்ரீவமஹாராஜரே! சோத்தம், Soththam - இதோ அஞ்ஜலி உம்மை தொழுகின்றோம், Ummalai Thozhugindrom - உம்மைத் திருவடிகளில் விழுந்து வணங்குகின்றோம் உங்கள் வானரம், Ungal Vaanaram - நீங்களிட்ட வழக்காயிருக்கின்ற வானரவீரர்கள் எம்மை கொல்லாமே, Emmai Kollame - எங்களைக் கொல்ல நினையாதபடி வார்த்தை பேசீர், Vaarthai Pesir - ஒருவார்த்தையருளிச் செய்யவேணும் கூத்தர் போல, Koothar Pola - கூத்தாடக்கற்றவர்கள் போல குழமணிதூரம் ஆடுகின்றோம், Kuzhamanithuram Aadugindrom - உங்கள் வெற்றியும் எங்கள் தோல்வியுந்தோற்ற ஆடுகின்றோம் |
| 1869 | பெரிய திருமொழி || (10-3–ஏத்துகின்றோம்) (குழமணி தூரம்) - (தோல்வியுற்ற அரக்கர் அபயம் வேண்டி ஆடும் கூத்து) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (எங்களுக்கு வேறு சிலர் ரஷகர் உண்டு என்று நினைத்து நலிய வேண்டியது இல்லை) 2 | எம்பிரானே என்னை ஆள்வா என்று என்று அலற்றாதே
அம்பின் வாய்ப்பட்டு ஆற்றகில்லாது இந்த்ரஜித் அழிந்தான்
நம்பி அனுமா சுக்ரீவா வங்கதனே நளனே
கும்பகர்ணன் பட்டுப் போனான் குழமணி தூரமே –10-3-2 | பதவுரை Show / Hideஇந்திரசித்து, Indirachithu - இந்த்ரஜித்தானவன் (- (குழமணிதூரம் ஆடுகின்றோம்.)) எம்பிரானே என்னை ஆள்வாய் என்று என்று அரற்றாதே, Embirane Ennai Aalvaai Endru Endru Aratradhe - பகவந் நாமங்களையே சொல்லிக்கோஷம் போடாமல் அம்பின் வாய் பட்டு, Ambin Vaai Pattu - பாணங்களுக்கு இரையாகி ஆற்ற கில்லாது, Aattra Killaadhu - தரித்திருக்க மாட்டாமல் அழிந்தான், Azhindhaan - மாண்டுபோனான் நம்பி அனுமா!, Nambi Anumaa - சுக்கிரீவா! அங்கதனே! நளனே! கும்பகரணன், Kumbakaranan - கும்பகர்ணனானவன் பட்டுப் போனான், Pattup Ponaan - முடிந்துபோனான் |
| 1870 | பெரிய திருமொழி || (10-3–ஏத்துகின்றோம்) (குழமணி தூரம்) - (தோல்வியுற்ற அரக்கர் அபயம் வேண்டி ஆடும் கூத்து) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நாங்கள் போக்கற்ற வழி மாதரம் அல்ல-உங்கள் சம்ருத்தி எங்களுக்கு பிரயோஜனமாம் படி ஆனோம் – எங்களை கொல்லுகைக்கு ஒரு பிரயோஜனம் உண்டோ – கண் படைத்த பிரயோஜனம் பெறும்படி இத்தைக் காணல் ஆகாதோ) 3 | ஞாலம் ஆளும் உங்கள் கோமான் எங்கள் இராவணற்கு
காலனாகி வந்தவா கண்டு அஞ்சிக் கருமுகில் போல்
நீலன் வாழ்க சுடேணன் வாழ்க வங்கதன் வாழ்க என்று
கோலமாக வாடுகின்றோம் குழமணி தூரமே –10-3-3 | பதவுரை Show / Hideஞாலம் ஆளும், Njaalam Aalum - பூமியை யெல்லாம் ரக்ஷித்தருள்பவராய் (- (குழமணிதூரம் ஆடுகின்றோம்.)) உங்கள் கோமான், Ungal Gomaan - உங்களுக்கு ஸ்வாமியான ஸ்ரீராமபிரான் எங்கள் இராவணற்கு, Engal Iraavanarku - எங்களுக்குத் தலைவனாயிருந்த இராவணனுக்கு காலன் ஆகி வந்த ஆ கண்டு, Kaalan Aagi Vantha Aa Kandu - ம்ருத்யுவாக வந்தபடியைப் பார்த்து அஞ்சி, Anji - பயப்பட்டு, கரு முகில் போல், Karum Mukhil Pola - ;காளமேகம் போன்ற நீலன் வாழ்க, Neelan Vazhga - நீலன் வாழவேணும், சுடேணன் வாழ்க, Sudhenan Vazhga - ஸுஷேணன் வாழவேணும் அங்கதன் வாழ்க, Angathan Vazhga - அங்கதன் வாழவேணும் என்று, Endru - என்று ஒவ்வொருவர்க்கும் பல்லாண்டுபாடிக்கொண்டு கோலம் ஆக, Kolam Aaga - அழகாக |
| 1871 | பெரிய திருமொழி || (10-3–ஏத்துகின்றோம்) (குழமணி தூரம்) - (தோல்வியுற்ற அரக்கர் அபயம் வேண்டி ஆடும் கூத்து) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தர்ச நீயமான வில்லிலே அம்பைத் தொடுத்த ஸ்ரீ பெருமாள் தம்பியார் உடைய குணங்கள் பாடி ஆடுகின்றோம்) 4 | மணங்கள் நாறும் வார் குழலார் மாதர்கள் ஆதாரத்தைப்
புணர்ந்த சிந்தைப் புன்மையாளன் பொன்ற வரிசிலையால்
கணங்கள் யுண்ண வாளியாண்ட காவலனுக்கு இளையோன்
குணங்கள் பாடி யாடுகின்றோம் குழமணி தூரமே –10-3-4 | பதவுரை Show / Hideமணங்கள் நாறும் வார் குழலால் மாதர்கள், Manangal Naarum Vaar Kuzhalal Maatharhal - பரிமளம் மிக்க நீண்ட கூந்தளையுடையரான ஸ்த்ரீகள் விஷணத்திலே (- (குழமணிதூரம் ஆடுகின்றோம்.)) ஆதரத்தை புணர்ந்த சிந்தை, Aadharaththai Punarndha Sindhai - ஆசையை ஒருபோதும் விடாத நெஞ்சையுடையனாய் புன்மை யாளன், Punmai Yalan - மிகவும் நீசனான இராவணன் பொன்ற, Pondra - முடியும்படியாகவும் கணங்கள் உண்ண, Kangal Unna - பிசாசுகள் ஏறிப் புசிக்கும்படியாகவும் வரி சிலையால், Vari Silaiyal - அழகிய வில்வழியாக வாளி ஆண்ட, Vaali Aanda - அம்புகளைப் பிரயோகித்த காவலனுக்கு, Kaavalanukku - ஸர்வாக்ஷகரான பெருமாளுடைய இளையோன், Ilaiyoan - திருத்தம்பியாரான லக்ஷ்மணருடைய குணங்கள் பாடி, Gunangal Paadi - திருக்குணங்களைப் பாடிக்கொண்டு |
| 1872 | பெரிய திருமொழி || (10-3–ஏத்துகின்றோம்) (குழமணி தூரம்) - (தோல்வியுற்ற அரக்கர் அபயம் வேண்டி ஆடும் கூத்து) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நீங்கள் தான் எங்களைக் கொல்லுகிறது வெற்றிக்காக இறே – அத்தை உங்களுக்கு நாங்கள் தந்தோம்- நாங்களும் ஆண் பிள்ளைகள் என்று இருக்கிறது -துர்மானத்தாலே இறே- எங்களை நலிகிற துர்மானத்தை வேண்டோம்) 5 | வென்றி தந்தோம் மானம் வேண்டோம் தானம் எமக்காக
இன்று தம்மின் எங்கள் வாணாள் எம்பெருமான் தமர்காள்
நின்று காணீர் கண்கள் ஆர நீர் எம்மைக் கொல்லாதே
குன்று போலே ஆடுகின்றோம் குழ மணி தூரமே –10-3-5 | பதவுரை Show / Hideஎம்பெருமான் தமர்காள், Emperumaan Thamarkaal - ஸ்ரீராமபக்தர்களான வாநர வீரர்களே! (- (குழமணிதூரம் ஆடுகின்றோம்)) வென்றி தந்தோம், Vendri Thandhom - ஜயத்தை உங்களுக்குக் கொடுத்துவிட்டோம்! மானம் வேண்டாம், Maanam Vendaam - “நாங்களும் ஆண்பிள்ளைகள்” என்று கொண்டிருந்த அஹங்காரத்தைக் கைவிட்டிட்டோம். எங்கள் வாழ்நாள், Engal Vaazhnal - எங்களுடைய ஆயுளை எமக்கு, Emakku - எங்களுக்கு தானம் ஆக, Dhaanam Aaga - யாசகங் கொடுக்கும் விதமாக இன்று தம்மின், Indru Thammin - இப்போது கொடுத்து விடுங்கள், நீர், Neer - நீங்கள் எம்மை கொல்லாதே, Emmai Kollaadhe - எங்களைக் கொல்லாமல் கண்கள் ஆர, Kangal Aara - கண் படைத்த பயன் பெறுமாறு நின்று காணீர், Ninru Kaanir - நின்று காணுங்கோள் குன்றுபோல, Kuntrupola - நாங்கள் மலைமலையாக நின்று |
| 1873 | பெரிய திருமொழி || (10-3–ஏத்துகின்றோம்) (குழமணி தூரம்) - (தோல்வியுற்ற அரக்கர் அபயம் வேண்டி ஆடும் கூத்து) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பூசல் களத்தில் வெல்ல மாட்டாமை அஞ்சினோம் – பராபி பவ ந சாமர்த்தியம் உடையவன் மகன் அன்றோ – எங்களைக் கொல்ல வேண்டா-கார்யம் கொள்ள அமையும்) 6 | கல்லின் முந்நீர் மாற்றி வந்து காவல் கடந்து இலங்கை
அல்லல் செய்தான் உங்கள் கோமான் எம்மை அமர்களத்து
வெல்ல கில்லாது அஞ்சினோம் காண் வெங்கதிரோன் சிறுவா
கொல்ல வேண்டா ஆடுகின்றோம் குழ மணி தூரமே –10-3-6 | பதவுரை Show / Hideஉங்கள் கோமான், Ungal Gomaan - உங்களுக்குத் தலைவரான ஸ்ரீராமபிரான், (- (வானர முதலிகான்!) (குழமணிதூரம் ஆடுகின்றோம் காண்)) கல்லில், Kallil - மலைகளைக்கொண்டு முந்நீர், Munnir - கடலை மாற்றி வந்து, Maatri Vandu - (அணைகட்டித்) தகைந்து இலங்கை, Ilankai - லங்கையிலுள்ள காவல், Kaaval - அரண்களையும் கடந்து, Kadandhu - அதிக்ரமித்து எம்மை, Emmai - எங்களை அமர் களத்து, Amar Kalathu - யுத்தபூமியிலே அல்லல் செய்தான், Allal Seithaan - மிகவும் துன்பங்களுக்கு ஆளாக்கினார் வெம் கதிரோன் சிறுவர், Vem Kathiron Siruvar - ஸூர்ய புத்திரனான ஸுக்ரீவனே! வெல்ல கில்லாது, Vella Killaadhu - (உங்களை) ஜயிக்க மாட்டாமல் அஞ்சினோ, Anjino - பயப்படுகின்றோம் கொல்ல வேண்டா, Kolla Venda - எங்களைக் கொல்லாதொழிய வேணும் |
| 1874 | பெரிய திருமொழி || (10-3–ஏத்துகின்றோம்) (குழமணி தூரம்) - (தோல்வியுற்ற அரக்கர் அபயம் வேண்டி ஆடும் கூத்து) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வலியை உடையனாகையைப் பிறப்பே யுடைய ஸ்ரீ திருவடி வாழ்வான் என்று – பரிகரம் அடைய அவன் பக்கலிலே ப்ராவண்யம் –இவனை வாழ்த்தவே கொல்லுவார் இல்லை – ஸ்ரீ திருவடியைச் சொன்னோம் ஆனால் ம்ருத்யு சத்ருசராய் இருப்பாரும் விலங்குவர்கள் போலே காணும்) 7 | மாற்றம் ஆவது இத்தனையே வம்மின் அரக்கர் உள்ளீர்
சீற்றம் நும்மேல் தீர வேண்டில் சேவகம் பேசாதே
ஆற்றல் சான்ற தொல் பிறப்பில் அனுமனை வாழ்க என்று
கூற்றம் அன்னார் காண வாடீர் குழ மணி தூரமே –10-3-7 | பதவுரை Show / Hideஅரக்கர் உள்ளீர், Arakkar Ullir - ராக்ஷஸஜாதியிற் பிறந்திருக்கின்ற இலங்கையர்காள்! வம்மின், Vammin - நீங்களும் எங்களோடே வந்து சேருங்கள், மாற்றம் ஆவது இத்தனையே, Maatram Aavathu Ithanaiye - (உங்கட்கு நாங்கள்) சொல்லும் வார்த்தை இவ்வளவே, நும் மேல், Num Mel - உங்கள்மேல் சீற்றம், Seetram - (ஸ்ரீராம ஸைந்யங்களுக்குண்டான) கோபம் தீர வேண்டில், Theera Venda - தணிய வேண்டுமாகில் சேவகம் பேசாதே, Sevagam Pesadhe - (நீங்கள் இனியும்) மிடுக்குச் சொற்களைப் பேசுதல் தவிர்ந்து தொல் பிறப்பில் ஆற்றல் சான்ற அனுமானை, Thol Pirappil Aatral Sanra Anumaanai - அநாதிகாலமாக மிக்க வலிமையையுடையரான சிறிய திருவடிக்கு வாழ்க என்று, Vazhga Endru - பல்லாண்டு பாடிக்கொண்டு கூற்றம் அன்னார் காண, Kootram Annar Kaana - (நமக்கு) ம்ருத்யு போன்ற வானாலீரர்கள் காணும் படியாக குழமணிதூரம் ஆடீர், Kuzhamanithooram Aadeer - குழமணிதூரக்கூத்தை ஆடுங்கோள் |
| 1875 | பெரிய திருமொழி || (10-3–ஏத்துகின்றோம்) (குழமணி தூரம்) - (தோல்வியுற்ற அரக்கர் அபயம் வேண்டி ஆடும் கூத்து) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ திரு அயோத்யைக்கு கடவ ஸ்ரீ சக்கரவர்த்தி திரு மகன் –ஸ்யாமமான நிறத்தை உடையவர் காண ஆடி கோள்- ராஜா கூத்துக் காணா நின்றான் என்று உங்களை விடும்படி) 8 | கவள யானைப் பாய் புரவி தேரோடு அரக்கர் எல்லாம்
துவள வென்ற வென்றியாளன் தன் தமர் கொல்லாமே
தவள மாட நீடு அயோத்தி காவலன் தன் சிறுவன்
குவளை வண்ணர் காண வாடீர் குழ மணி தூரமே –10-3-8 | பதவுரை Show / Hideகவளம் யானை, Kavalam Yaanai - கவளங்கொள்ளுமியல் பினவான யானைகளும் பாய் புரவி, Paai Puravi - பாய்ந்து வருகிற குதிரைகளும் தேரோடு, Therodu - தேர்களும் ஆகிய இவையெல்லாவற்றொடுங்கூட அரக்கர் எல்லாம் துவள, Arakkar Ellam Thuvalla - ராக்ஷஸஜாதியடங்கலும் கஷ்டப்படும்படியாக வென்ற, Vendra - ஜயித்த வென்றியாளன் தன் தமர், Vendriyaalan Than Thamar - ஜயசீலரான பெருமாளுடைய கிங்கரர்களான வானரவீரர்கள் கொல்லாமே, Kollaame - (நம்மை) கொல்லாதபடி, தவளம் மாடம் நீடு, Thavalam Maadam Needu - வெண்மையான மாடமாளிகை களினால் நீண்டிருக்கிற அயோத்தி, Ayodhya - அயோத்திமா நகர்க்கு காவலன் தன், Kaavalan Than - அரசரான தசரதருடைய சிறுவன், Siruvar - திருக்குமார்ராய் குவளை வண்ணன், Kuvazhai Vannan - குவளை மலர்போன்ற நிறத்தையுடையரான இராமபிரான் காண, Kaana - காணும்படியாக குழமணிதூரம், Kuzhamanithooram - குழமணிதூரக்கூத்து ஆடீர், Aadeer - ஆடுங்கோள். |
| 1876 | பெரிய திருமொழி || (10-3–ஏத்துகின்றோம்) (குழமணி தூரம்) - (தோல்வியுற்ற அரக்கர் அபயம் வேண்டி ஆடும் கூத்து) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நாங்கள் உஜ்ஜீவிக்கைக்காக-கச்ச அநுஜா நாமி -என்று விட்டடித்தவர் உடைய ஆஞ்ஞையை சிரஸா வஹித்துக் கொண்டு போந்தோம்) 9 | ஏடு ஒத்து ஏந்தும் நீண் இலை வேல் எங்கள் இராவணனார்
ஓடிப் போனார் நாங்கள் எய்தோம் உய்வதோர் காரணத்தால்
சூடிப் போந்தோம் உங்கள் கோமான் ஆணை துடரேன்மின்
கூடிக் கூடி யாடுகின்றோம் குழ மணி தூரமே –10-3-9 | பதவுரை Show / Hideஏடு ஒத்த, Aedu Oththa - பனையோலே விரிந்தாற்போல் அகன்றதாயும் (- (குழமணிதூரம் ஆடுகின்றோம்.)) நீள், Neel - நீண்டதாயும் இலை, Ilai - இலையையுடைத்தாயுமிருக்கிற வேல், Vel - வேற்படையை ஏந்தும், Aendhum - கையிற்கொண்ட எங்கள் இராவணனார், Engal Iravananar - எங்கள் பிரபுவான இராவணன் ஓடி போனார், Odi Poonar - முதுகுகாட்டி ஓடிப்போய் விட்டார் நாங்கள், Naangal - நாங்களோ எய்த்தோம், Eyththom - இளைத்தோம், உய்வது ஓர் காரணத்தால், Uyvathu Oor Kaaranathaal - (இனி) உஜ்ஜீவிப்பதன் பொருட்டு உங்கள் கோமான் ஆணை, Ungal Koman Aanai - உங்களுக்கு ஸ்வாமியான பெருமாளுடைய ஆஜ்ஞையை சூடிப் போந்தோம், Soodip Ponthom - சிரஸாவஹிப்பவர்களாயிருக்கின்றோம் தொடரேல் மின், Thodareel Min - (எங்களைக் கொல்வதற்குத்) தொடரவேண்டா, கூடி கூடி, Koodi Koodi - திரள் திரளாகக் குழாங்கூடி |
| 1877 | பெரிய திருமொழி || (10-3–ஏத்துகின்றோம்) (குழமணி தூரம்) - (தோல்வியுற்ற அரக்கர் அபயம் வேண்டி ஆடும் கூத்து) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ மகா ராஜரை நோக்கிச் சொன்ன ஒன்றும் ஒன்றும் -இரண்டு பாசுரங்கள் வானர முதலிளைக் குறித்து சொன்ன ஐந்து பாசுரங்கள் பரோபதேச ரூபமான மூன்று பாசுரங்கள் – இப்பத்தையும் பாடிக் கொண்டாட-உங்களுக்கு இனி வரக் கடவதொரு பயம் இல்லை – நாவலிட்டு உழி தருகின்றோம் -என்று வேண்டின படி ஆடித் திரியுங்கோள்) 10 | வென்ற தொல் சீர் தென்னிலங்கை வெஞ்சமத்து அன்று அரக்கர்
குன்றமன்னார் ஆடியுய்ந்த குழ மணி தூரத்தைக்
கன்றி நெய்நீர் நின்ற வேற்கைக் கலியன் ஒலி மாலை
ஒன்றும் ஒன்றும் ஐந்தும் மூன்றும் பாடி நின்றாடுமினே –10-3-10 | பதவுரை Show / Hideதொல், Thol - நெடுநாளாக வென்றி சீர், Vendri Seer - வெற்றியையே இயல்பாக வுடைத்தாயிருந்த தென் இலங்கை, Then Ilangai - தென்னிலங்கையில் வெம் சமத்து, Vem Samathu - வெவ்வியபோர்க்களத்திலே அன்று, Anru - அப்போது அரக்கர், Arakkar - ராக்ஷஸர்கள் குன்றம் அன்னார், Kundram Annar - மலைபோன்றவர்களாக ஆடி உய்ந்த குழமணி தூரத்தை, Aadi Uyndha Kuzhamani Thoorathai - குழமணிதூரக்கூத்தாடி உயிர் தப்பினபடியைக் குறித்து, கன்றி நெய் நீர் நின்ற வேல் கை, Kandri Ney Neer Nindra Vel Kai - சினக்குறிப்புடன் கூடிய தாய் நெய்யிட்டிருப்பதை நீர்மையாகவுடைத்தாய் நின்ற வேற்படையைக் கையிலுடையரான கலியன், Kalyan - திருமங்கையாழ்வார் ஒலி, Oli - அருளிச்செய்த மாலை ஒன்றும் ஒன்றும் ஐந்தும் மூன்றும், Maalaik Ondrum Ondrum Aindhum Moondrum - சொல்மாலையாகிய இப்பத்துப் பாசுரங்களையும் பாடி நின்று, Paadi Nindru - பாடிக்கொண்டு ஆடுமின், Aadumin - (ஆநந்தத்துக்குப் போக்கு வீடாகக்) கூத்தாடுங்கோள் |