திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1878 | பெரிய திருமொழி || (10-4–சந்தமலர் க்குழல்) - (யசோதை கண்ணனை அம்மன் உண்ண அழைத்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ நந்தன் பெறப்பெற்ற நம்பி – ஈஸ்வரனுக்கு இது அலாப்ய லாபமாய் இருக்கிற படி – இவர் பிள்ளையாகப் பெற்ற ஏற்றம் உடையவனே – பிதரம் ரோசயா மாச -என்று அவனை ஆசைப் பட்டு இறே பிறந்தது தனக்கு கிடையாதது பெறுகை இறே -அலாப்ய லாபம் – பிறக்கிற சம்சாரிக்கு பிறவாமை ஏற்றமோபாதி இறே அவனுக்குப் பிறக்கப் பெறுகையும் – தேவர்கள் தாங்கள் புஜிக்கும் அம்ருதத்தில் வாசி – ஸ்ரீ நந்தன் பெறப்பெற்ற என்று தொடங்கி இவன் ஆதரித்து முலை உண்கைக்காக ஸ்தோத்ரம் பண்ணுகிறாள்) 1 | சந்த மலர்க் குழல் தாழத் தானுகந்தோடித் தனியே
வந்து என் முலைத் தடம் தன்னை வாங்கி நின் வாயில் மடுத்து
நந்தன் பெறப்பெற்ற நம்பி நானுகந்து உண்ணும் அமுதே
எந்தை பெருமானே உண்ணாய் என் அம்மம் சேமம் உண்ணாயே –10-4-1 | பதவுரை Show / Hideநந்தன், Nandhan - நந்தகோபர் பெற்ப்பெற்ற, Perppetra - பிள்ளையாகப் பெறும்படி வாய்ந்த நம்பீ, Nambi - ஸ்வாமியே! நான் உகந்து உண்ணும் அமுதே, Naan Uganthu Unnum Amudhe - நான் பரிவுடனே புஜிக்கின்ற அமுதமாயிருப்பவனே! எந்தை பெருமானே, Endai Perumane - என்குல நாதனான கண்ணபிரானே! சந்தம் மலர் குழல், Chandham Malar Kuzhal - செவ்விப் பூக்களை யணிந்த திருக்குழற்கற்றையானது தாழ, Thaa - அலைய தான் தனியே உகந்து ஓடி வந்து, Thaan Thaniye Uganthu Oodi Vandu - நீ (பலராமனைவிட்டுத்) தனியே மகிழ்ச்சியுடன் (என் பக்கல்) ஓடிவந்து என் முலைத்தடம் தன்னை வாங்கி, En Mulaittadam Thannai Vaangi - எனது முலைகளைக்கையிற்பிடித்து நின் வாயில் மடுத்து, Nin Vayil Maduthu - உனது வாயிலே நிறைத்துக் கொண்டு உண்ணாய், Unnai - உண்ணவேணும், என் அம்மம், En Ammam - என்னுடைய முலைப்பாலாகிற சேமம், Semam - க்ஷேமத்தளிகையை உண்ணாய், Unnai - உண்ணவேணும் |
| 1879 | பெரிய திருமொழி || (10-4–சந்தமலர் க்குழல்) - (யசோதை கண்ணனை அம்மன் உண்ண அழைத்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தாய் முலை சுரந்து பார்த்து இருக்கும் அன்று வருகை அன்றிக்கே நான் அழைத்தும் வரக் காணாது இருந்தேன் – எங்கே புக்கிருந்து உன் பக்கல் நிரபேஷரானார் உடன் – சாபேஷையாய் நான் பார்த்து இருக்க – என்ன விளையாட்டு விளையாடுகிறது) 2 | வங்கமறி கடல் வண்ணா மா முகிலே ஒக்கு நம்பி
செங்கண் நெடிய திருவே செங்கமலம் புரை வாயா
கொங்கை சுரந்திட யுன்னைக் கூவியும் காணாது இருந்தேன்
எங்கிருந்து ஆயர் தங்களோடு என் விளையாடுகின்றாயே –10-4-2 | பதவுரை Show / Hideவங்கம் மறி கடல் வண்ணா, Vangam Mari Kadal Vanna - அலைகள் மடிந்து மடிந்து எறிகிற கடலின் நிறம் போன்ற நிறமுடையவனே! மா முகிலே ஒக்கும் நம்பீ, Maa Mukile Okkum Nambi - காளமேகத்தை யொத்திருக்கின்ற பிரானே! நெடிய செம்கண் திருவே, Nedhiya Semkan Thiruve - நீண்ட செந்தாமரைக் கண்களையுடைய ஸ்ரீமானே! செம் கமலம் புரை வாயா, Sem Kamalam Purai Vayaa - செந்தாமரைப் பூப்போன்ற திருமுகத்தை யுடையவனே! கொங்கை காந்திட, Kongai Kanthida - என் முலைகளிலே பரல்காக்க உன்னை கூவியும், Unnai Kooviyum - உன்னையழைத்தும் காணாது இருந்தேன், Kaanadhu Irundhen - நீவரக்காண்கின்றிலேன், ஆயர்களோடும், Aayargalodum - இடைப்பிள்ளைகளோடே எங்கு இருந்து, Engu Irundhu - எவ்விடத்திலிருந்துகொண்டு என்விளையாடுகின்றாய், Envilaiyaadugindrai - என்ன விளையாட்டு விளையாடுகின்றாய்? |
| 1880 | பெரிய திருமொழி || (10-4–சந்தமலர் க்குழல்) - (யசோதை கண்ணனை அம்மன் உண்ண அழைத்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவயவங்கள் தோறும் முழுசா முகத்தைப் பாரா முலை சுரக்கப் பண்ணாமல் மடியிலே இருந்தாயிற்று உண்பது – இது அடைய தரையிலே போகாமே உன் வாயிலேயாம்படி முலை யுண்ண வாராய்) 3 | திருவில் பொலிந்த எழிலார் ஆயர் தம் பிள்ளைகளோடு
தெருவில் திளைக்கின்ற நம்பீ செய்கின்ற தீமைகள் கண்டிட்டு
உருகி என் கொங்கையின் தீம் பால் ஓட்டந்து பாய்ந்திடுகின்ற
மருவிக் குடங்கால் இருந்து வாய் முலை உண்ண நீ வாராய் –10-4-3 | பதவுரை Show / Hideதிருவின் பொலிந்த, Thiruvin Polintha - செல்வத்தினால் மிக்கவர்களாய் எழில் ஆர், Ezil Aar - வடிவழகும் நிறைந்தவர்களான ஆயர்தம் பிள்ளைகளோடு, Aayartham Pillaihalodhu - இடைப்பிள்ளைகளோடு கூட தெருவில் திளைக்கின்ற, Theruvil Thilaikkindra - வீதியிலே விளையாடுகின்ற நம்பீ, Nambi - பிரானே! செய்கின்ற, Seigindra - நீ செய்துவருகிற தீமைகள், Theemaigal - தீம்புகளை கண்டிட்டு, Kandittu - பார்த்து (அதனாலுண்டான உவப்பினால்) என் கொங்கையின், En Kongaiyin - என்னுடைய முலையினின் தீம் பால், Theem Paal - இனிய பாலமுது உருகி, Urugi - தானே உருகி ஒட்டந்து, Ottandhu - வெள்ளமிட்டு பாய்ந்திடுகின்ற, Paayndhidugindra - பெருகிப் பாழாய்ப் போகின்றது (அப்படி பாழாய்ப் போகாமே) குடங்கால், Kudankaal - (எனது) மடியிலே மருவி இருந்து, Maruvi Irundhu - பொருந்தியிருந்து வாய், Vaai - வாயினால் முலை உண்ண, Mulai Unna - முலைப்பாலுண்பதற்கு நீ வாராய், Nee Vaarai - நீ வரவேணும் |
| 1881 | பெரிய திருமொழி || (10-4–சந்தமலர் க்குழல்) - (யசோதை கண்ணனை அம்மன் உண்ண அழைத்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (என் ஒக்கலையிலே இழியாது இருந்து ஆதரித்து இனிதாக அம்மம் உண்ண வாராய்) 4 | மக்கள் பெறு தவம் போலும் வையத்து வாழும் மடவார்
மக்கள் பிறர் கண்ணுக்கு ஒக்கும் முதல்வா மதக் களிறன்னாய்
செக்கர் இளம்பிறை தன்னை வாங்கி நின் கையில் தருவன்
ஒக்கலை மேல் இருந்து அம்மம் உகந்து இனிது உண்ண நீ வாராய் –10-4-4 | பதவுரை Show / Hideவையத்து வாழும் மடவார், Vaiyaththu Vaalum Madavaar - நாட்டிலே வாழ்கின்ற ஸ்த்ரீகளினுடையவும் பிறர் மக்கள், Pirar Makkal - மற்றுமுள்ள மநுஷ்யர்களினுடையவும் கண்ணுக்கு, Kannukku - கண்களுக்கு மகள் பெறுதவம் போலும் ஒக்கும் முதல்வா, Magal Peruthavam Polum Okkum Muthalvaa - பிள்ளைபெறுதற்கு நோற்கும் நோன்புதான் ஒருவடிவு கொண்டதோ! என்று சொல்லலாம் படியிருக்கின்ற ஜகத்காரண பூதனே! மதம் களிறு அன்னாய், Matham Kaliru Annai - மதம்பிடித்த யானை போலேச் செருக்கியிருப்பவனே! செக்கர் இளபிறை தன்னை, Chekkar Ilapirai Thannai - செவ்வானத்திலிருக்கின்ற பாலசந்திரனை வாங்கி, Vaangi - பிடித்து நின் கையில், Nin Kaiyil - உன் கையிலே தருவன், Tharuven - கொடுப்பேன் ஒக்கலை மேல் இருந்து, Okkalai Mel Irundhu - (என்) இடுப்பிலே இருந்து கொண்டு அம்மம், Amma - முலைப்பாலை உவந்து, Uvandu - ஆதரித்து இனிது, Inidhu - போக்யமாக உண்ண, Unna - உண்பதற்கு நீ வாராய், Nee Vaarai - நீ வரவேணும் |
| 1882 | பெரிய திருமொழி || (10-4–சந்தமலர் க்குழல்) - (யசோதை கண்ணனை அம்மன் உண்ண அழைத்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இனி இதுசெய்யான் -என்னும்படி படுக்கையிலே கிடந்தது-அவள் பேர நின்றவாறே வெண்ணெயை விழுங்கும் விகிர்தமான செயலை உடையவனே – நெடும் போது உண்டாயிற்று முலைக் கடுப்போடு இருக்கிறது – இத்தனை போது அல்லாதே என்னால் பொறுத்து பாடாற்றப் போகாது – உன் நோவிலும் தாய் நோவு அறியும்வன் அன்றோ –வேண்டும் அளவில் வந்து ஸ்பர்சித்த நீ அன்றோ) 5 | மைத்த கருங்குஞ்சி மைந்தா மா மருதூடு நடந்தாய்
வித்தகனே விரையாதே வெண்ணெய் விழுங்கும் விகிர்தா
இத்தனை போதன்றி எந்தன் கொங்கை சுரந்து இருக்ககில்லா
உத்தமனே அம்மம் உண்ணாய் யுலகளந்தாய் அம்மம் உண்ணாயே –10-4-5 | பதவுரை Show / Hideமைத்தகரு குஞ்சி, Maiththakaru Kunchi - மைபோன்ற கறுத்த திருக்குழல்களையுடைய (- (அம்மம் உண்ணாய்)) மைந்தா, Maindhaa - சிறுக்கனே! மா மருதூடு, Maa Marudhuudu - பெரிய மருதமரங்களினுடைய நடந்தாய், Nadandhaai - தவழ்ந்து சென்றவனே! விரையாதே, Viraiyadhe - ஸாவகாசமாக வித்தகனே, Viththagane - ஆச்சரியசக்திவாய்ந்தவனே! விரையாதே, Viraiyadhe - ஸாவகாசமாக வெண்ணெய் விழுங்கும், Vennyei Vizhungum - வெண்ணெயை வாரி விழுங்கவல்ல விகிர்தா, Vikirthaa - விலக்ஷணனே! என் தன் கொங்கை, En Than Kongai - என்னுடைய ஸ்தனமானது சுரந்து, Surandhu - பால்சுரந்து இத்தனை போது அன்றி, Iththanai Podhu Andri - இதுவரையிலிருந்தது போலல்லாமல் இருக்க கில்லா, Irukka Killa - இனி இருக்கமாட்டா உத்தமனே, Uththamaney - சிறந்த குணசாலியே! உலகு அளந்தாய், Ulaku Alandhai - உலகமளந்தபிரானே! |
| 1883 | பெரிய திருமொழி || (10-4–சந்தமலர் க்குழல்) - (யசோதை கண்ணனை அம்மன் உண்ண அழைத்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தீமைகள் செய்யா நிற்புதி-கண்டு இருக்க ஆகர்ஷகமான தீம்புகளை செய்வுதி – அத்தீமை காண என் ஹிருதயம் உருகி முலை வழியே பாலாய் புறப்படா நின்றது – கண்கள் சிவப்பது-மூரி நிமிர்வது-கொட்டாவி கொள்வது -அழுவது -ஆகாதே) 6 | பிள்ளைகள் செய்வன செய்யாய் பேசில் பெரிதும் வலியை
கள்ள மனத்தில் உடையைக் காணவே தீமைகள் செய்தி
உள்ளம் உருகி என் கொங்கை ஓட்டந்து பாய்ந்திடுகின்ற
பள்ளிக் குறிப்புச் செய்யாதே பாலமுது உண்ண நீ வாராய் –10-4-6 | பதவுரை Show / Hideபிள்ளைகள் செய்வன செய்யாய், Pillaihal Seivana Seyyai - (உன்னோடொத்த பருவமுள்ள) பிள்ளைகள் செய்யும் தீம்புகளை நீ செய்கின்றிலை, (- (பால் அமுது உண்ண நீ வாராய்)) பேசில், Pesil - உன்னைப்பற்றிச் சொல்வோமாகில் பெரிதும் வலியை, Peridhum Valiyai - மிகவும் மிடுக்குடையனாயிரா நின்றாய், மனத்தில், Manathil - நெஞ்சிலே கள்ளம் உடைய, Kallam Udaiya - கபடத்தை வஹியாநின்றாய், காணவே, Kaanave - (தண்டிக்க வேண்டியவர்களும்) பார்த்துக்கொண்டிருக்கும்படியாக தீமைகள், Theemaigal - தீம்புகளை செய்தி, Seithi - செய்கின்றாய், என் உள்ளம் உருகி, En Ullam Urugi - என்னுடைய நெஞ்சு நீர்ப்பண்டமாகி கொங்கை, Kongai - முலைகளும் ஓட்டந்து பாய்ந்திடுகின்ற, Oottandhu Paayndhidugindra - பால் பெருகிப் பாயப்பெறுகின்றன பள்ளி குறிப்பு செய்யாதே, Palli Kurippu Seyyadhe - (கொட்டாவி விடுதல் முதலிய) தூக்கக் களைச்செர் |
| 1884 | பெரிய திருமொழி || (10-4–சந்தமலர் க்குழல்) - (யசோதை கண்ணனை அம்மன் உண்ண அழைத்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பூதனை கையிலே அகப்பட்ட உன்னை ஆராக நினைத்தாய் – நிருபாதிக ஸ்த்ரீத்வத்தை உடைய ஸ்ரீ நப்பின்னை பிராட்டிக்கும் ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கும் வல்லபன் ஆனவனே – அப்படியே ஓர் ஏத்தம் போலே காணும் இவள் மகன் ஆனதுவும்) 7 | தன் மகனாக வன் பேய்ச்சி தான் முலை யுண்ணக் கொடுக்க
வன் மகனாய் அவள் ஆவி வாங்கி முலை யுண்ட நம்பீ
நன் மகள் ஆய் மகளோடு நானில மங்கை மணாளா
என் மகனே அம்மம் உண்ணாய் என் அம்மம் சேமம் உண்ணாயே –10-4-7 | பதவுரை Show / Hideவல் பேய்ச்சி, Val Paeychchi - கொடிய நெஞ்சுடையளான பூதனையானவன் (- (அம்மம் உண்ணாய்)) தன் மகன் ஆக, Than Magan Aaga - (உன்னைத் தன்புத்திரன் போல அபிமானித்து தான் முலை உண்ண கொடுக்க, Thaan Mulai Unna Kodukka - தான் தனது முலையை உன்வாயிலே மடுக்க, (அவ்வளவிலே) வல் மகன் ஆய், Val Magan Aay - வலிய ஆண்பிள்ளையாய் அவள் ஆவி வாங்கி, Aval Aavi Vaangi - அவளுயிரைக் கவர்ந்து முலை உண்ட நம்பீ, Mulai Unda Nambi - அவளது முலையை உண்ட பிரானே! நல் மகள் ஆய்மகளோடு, Nal Magal Aaymagalodu - சிறந்த மகளாகிய நப்பின்னைப் பிராட்டிக்கும் மணாளா, Manala - வல்லபனானவனே! என் மகனே, En Magane - எனக்குப் பிள்ளையாக வாய்த்தவனே! என் அம்மம், En Ammam - எனது ஸ்தந்யமாகிற சேமம், Semam - க்ஷேமத்தளிகையை உண்ணாய், Unnai - உண்ணவேணும். |
| 1885 | பெரிய திருமொழி || (10-4–சந்தமலர் க்குழல்) - (யசோதை கண்ணனை அம்மன் உண்ண அழைத்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தாயாரைக் கண்டால் தீமையிலே ஓன்று பத்தாக பணைக்கும்–ஸ்ரீ நந்த கோபர்க்காயிற்று அஞ்சுவது அத்தாலே அவனுக்கு அச்சம் உறுத்துக்கைக்காக ஸ்ரீ யசோதை பிராட்டி சொல்லும் பாசுரம் ஆயிற்று) 8 | உந்தம் அடிகள் முனிவர் உன்னை நான் என் கையில் கோலால்
நொந்திட மோதவும் கில்லேன் உங்கள் தம் ஆநிரை எல்லாம்
வந்து புகுதரும் போது வானிடைத் தெய்வங்கள் காண
அந்தியம்போது அங்கு நில்லேல் ஆழி யங்கையனே வாராய் –10-4-8 | பதவுரை Show / Hideஆழி அம்கையனே, Aazhi Amkaiyane - திருவாழியினால் அழகு பெற்ற திருக்கையை யுடையவனே! (- (நீ செய்கிற தீமைகளைக் கண்டால்)) உந்தம் அடிகள், Undham Adigal - உங்கள் பிதாவாகிய நந்தகோபர் முனிவர், Munivar - சீறுவர் நான், Naan - நானோவென்றால் என் கையில் கோலால், En Kaiyil Kolaal - என் கையிலுள்ள கொம்பினால் உன்னை நொந்திட மோதவும் கில்லேன், Unnai Nondhida Modhavum Killeen - உன்னை நோகும்படி அடிக்கவும் மாட்டேன், உங்கள் தம் ஆ நிரை எல்லாம், Ungal Tham Aa Nirai Ellam - உங்களுடைய பசுக்கூட்டங்களெல்லாம் வந்து புகுதரும் போது, Vandhu Pugudharum Podhu - (காடுகளில் மேய்ந்து) மீண்டு வந்து (ஊர்க்குள்) புகும்போது வானிடை தெய்வங்கள் காண, Vaanidai Deivangal Kaan - ஆகாசத்திலுள்ள தேவதைகள் (எச்சிற்கண்ணால்) காணுமாறு அந்தியம்போது, Andhiyam Podhu - மாலைப்பொழுதிலே அங்கு நில்லேல், Angu Nillel - நாற்கந்தியிலே நிற்கவேண்டா வாராய், Vaarai - (என்னருகே) வந்திடாய் |
| 1886 | பெரிய திருமொழி || (10-4–சந்தமலர் க்குழல்) - (யசோதை கண்ணனை அம்மன் உண்ண அழைத்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கன்றின் உடைய திரள்-ஓன்று இரண்டு போராது –கன்றுகளை திரளாக மறித்து காட்டிலே அங்கே இங்கே தட்டித் திரியும் போது ஒரு மத்தகஜம் உலாவுமா போலே யாயிற்று இருப்பது – உனக்கு விடாய் இல்லாமையோ – உனக்கு முலை தாராது ஒழியும் போது நான் தரிப்பனாயோ) 9 | பெற்றம் தலைவன் என் கோமான் பேர் அருளாளன் மதலாய்
சுற்றக் குழாத்து இளங்கோவே தோன்றிய தொல் புகழாளா
கற்றினம் தோறும் மறித்துக் கானம் திரிந்த களிறே
எற்றுக்கு என் அம்மம் உண்ணாதே எம்பெருமான் இருந்தாயே –10-4-9 | பதவுரை Show / Hideபெற்றம் தலைவன், Petram Thalaivan - பசுக்களுக்குத் தலைவனே! எம் கோமான், Em Koman - எங்கள் பெருமானே! பேரருளாளன் மதலாய், Perarulalan Mathalai - மஹாதயாளுவான நந்தகோபருடைய திருக்குமாரனே! சுற்றம் குழாம், Sutram Kuzham - பந்த ஸமூஹத்துக்கெல்லாம் இன கேரவே, Ina Kerave - யுவராஜாவானவனே! தோன்றிய தொல் புகழாளா, Thondriya Thol Pugazhala - எங்கும் பாவி விளங்குகின்ற நித்ய கீர்த்தியை யுடையவனே! கானம் தோறும், Kaanam Thoram - காடுகள் தோறும் கன்று இனம், Kandru Inam - கன்றுகளின் கூட்டங்களை மறித்து, Marithu - மடக்கி மேய்த்து திரிந்த, Thirindha - உலாவின களிறே, Kalire - கஜராஜமே! எம் பெருமான், Em Peruman - எனக்குப் பெருமையை விளைப்பவனே! ஏற்றுக்கு, Aetrukku - எதுக்காக என் அம்மம் உண்ணாத இருந்தாய், En Ammam Unnaadha Irundhai - என் முலைப்பாலை உண்ணாமலிருக்கின்றாய்? |
| 1887 | பெரிய திருமொழி || (10-4–சந்தமலர் க்குழல்) - (யசோதை கண்ணனை அம்மன் உண்ண அழைத்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அம்மம் உண் என்று சொன்ன இப்பத்தையும் –அந்த பாவ வ்ருத்தியோடே சொல்லுவாருக்கு வந்தேறியான முக்தர் ஆனவர்கள் அன்றிக்கே அஸ்ப்ருஷ்ட சம்சாரிகளான ஸ்ரீ நித்ய சூரிகளோடே ஒக்க தரம் பெறலாம்) 10 | இம்மை இடர் கெட வேண்டி ஏந்து எழில் தோள் கலிகன்றி
செம்மைப் பனுவல் நூல் கொண்டு செங்கண் நெடியவன் தன்னை
அம்மம் உண் என்று உரைக்கின்ற பாடல் இவை ஐந்தும் ஐந்தும்
மெய்ம்மை மனத்து வைத்து ஏத்த விண்ணவர் ஆகலுமாமே –10-4-10 | பதவுரை Show / Hideஎழில ஏந்து தோள் கலிகன்றி, Ezhil Aenthu Thol Kalikanri - அழகை ஏந்தியிருக்கின்ற தோள்களையுடையவரான திருமங்கையாழ்வார் இம்மை இடர்கெட வேண்டி, Immai Idarkeda Vendi - இப்பிறவியிலுண்டான இடரெல்லாம் அழியவேண்டி செம் கண் நெடியவன் தன்னை, Sem Kan Nediyavan Thannai - புண்டரீகாக்ஷனான ஸர்வேச்வரனை நோக்கி செம்மை நூல் பனுவல் கொண்டு, Semmai Nool Panuval Kondo - சிறந்த சாஸ்த்ரமாகிய அருளிச்செயலைக் கொண்டு அம்மம் உண் என்று உரைக்கின்ற இவை பாடல் ஐந்தும் ஐந்தும், Amma Um Enru Uraikkindra Ivai Paadal Aindhum Aindhum - ‘முலைப்பாலுண்ண வா’ என்று அழைப்பதான இப்பத்துப் பாசுரங்களையும் மெய்ம்மை, Meimmai - யதார்த்தமான அன்பு பொலிய மனத்து வைத்து, Manaththu Vaiththu - நெஞ்சிற்கொண்டு ஏத்த, Aetha - அநுஸந்திக்குமளவில் விண்ணவர் ஆகலும் ஆம், Vinnavar Aagalum Aam - நித்யஸூரிகளாகப் பெறுதலும் அவர்கட்கு நேரும். |