திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 11-1 குன்றமொன் (10 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1952பெரிய திருமொழி || (11-1–குன்றமொன்) - (பிரிவு ஆற்றாத தலைவி இரங்கி கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பசுக்களும் இடையரும் வர்ஷத்தைப் பரிஹரித்துக் கொள்ளுதல் – ஸ்ரீ பிராட்டி -அதார்மிகனான ராவணன் நஷ்டன் ஆவான் -என்று சபித்து போரும் என்று ஆயிற்று – இவளுக்கு தென்றல் பரிஹரித்துக் கொள்ள ப்ராப்தி உள்ளது) 1
குன்றம் ஓன்று எடுத்து ஏந்தி மா மழை அன்று காத்த அம்மான் அரக்கரை வென்ற வில்லியார் வீரமே கொலோ தென்றல் வந்து தீ வீசும் என் செய்கேன் –11-1-1
பதவுரை Show / Hide
அன்று, Anru - முன்பொருகால்
குன்றம் ஒன்று, Kuntram Onru - (கோவர்த்தனமென்கிற) ஒருமலையை
எடுத்து, Eduthu - (குடையாக) உயரவெடுத்து
ஏந்தி, Aendi - (ஏழுநாள் ஓய்வின்றிப்) பிடித்துக் கொண்டிருந்து
மா மழை, Maa Mazhai - (இந்திரன் பெய்வித்த) பெரு மழையில் நின்றும்
காத்த, Kaatha - (அடியார்க்ளைக்) காப்பாற்றி யருளின
அம்மான், Ammaan - ஸ்வாமியும்
அரக்கரை, Arakkarai - ராக்ஷஸாக்ளை
வென்ற, Vendru - கொன்றொழித்த
வில்லியார், Villiyaar - வில்லையுடையருமான பெருமாளுடைய
வீரமே கொலோ, Veerame Kolo - பராக்ரமத்தினாலோ
தென்றல் வந்து தீ வீசும், Thendral Vandu Thee Veesum - தென்றற்காற்று வந்து நெருப்பை வீசுகின்றது!
என் செய்கேன், En Seigken - (இதற்கு) என்ன பண்ணுவேன்!
1953பெரிய திருமொழி || (11-1–குன்றமொன்) - (பிரிவு ஆற்றாத தலைவி இரங்கி கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தோளும் தோள் மாலையுமான மார்வும் கண்டு ஆசைப் பட்டு வந்த தண்டமோ – இதர விஷய ப்ரவணர் பட்டது படா நின்றோம் – புத்தி நாஸாத் ப்ரணச்யதி -என்கிறபடியே விநாசத்தைப் பலிப்பித்தான் – இதர விஷய ப்ரவணர் பட்டது படா நின்றோம் -இப்பிராப்த விஷயத்தை ஆசைப் பட்ட நாங்களும்) 2
காரும் வார்பனிக் கடலும் அன்னவன் தாரும் மார்வமும் கண்ட தண்டமோ சோரும் மா முகில் துளியினூடு வந்து ஈரவாடை தான் ஈரும் என்னையே –11-1-2
பதவுரை Show / Hide
சாரும், Saarum - வர்ஷிக்கின்ற
மாமுகில், Maamugil - காளமேகத்தினுடைய
ஒளியினூடு வந்து, Oliyinuudu Vandu - துளியினுள்ளேயிருக்கிற குளிர் சியை ஊட்டிக்கொண்டுவந்து
ஈரம்வாடை, Eeramvaadai - (அதனால்) குளிர்ச்சிமிக்கக வாடைக்காற்றானது
என்னை ஈரும், Ennai Eerum - என்னை ஹிம்ளிக்கின்றது
காரும்வார்            பனி கடலும் அன்னவன், Kaarumvaar Pani Kadhalum Annavan - நாளமேகத்தையும், பரந்து குளிர்ந்தகடலையு மொத்திருக்கின்ற எம்பெருமானுடைய
தாரும், Thaarum - திருத்துழாய்மாலையையும்
மார்வமும், Marvamum - திருமார்பையும்
கண்ட, Kanda - காணவேணுமென்று ஆசைப் பட்டதற்கான
தண்டமோ, Thandamo - சிக்ஷையோ?
1954பெரிய திருமொழி || (11-1–குன்றமொன்) - (பிரிவு ஆற்றாத தலைவி இரங்கி கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஓதம் கிளர்ந்த கடல் போலே ஸ்ரமஹரமான வடிவை உடையராய் இருக்கிறவருடைய – பரிமள பிரசுரமாய் இருக்கிற தாரானது உள்ளே புக்கு ஸ்த்ரீத்வத்தை நோக்கிக் கொண்டு மறைய இருக்கிறது என் – இங்கனே புறப்பட்டாயோ -என்று அறை கூவா நின்றது) 3
சங்கும் மாமையும் தளரும் மேனி மேல் திங்கள் வெங்கதிர் சீறும் என் செய்கேன் பொங்கு வெண்டிரைப் புணரி வண்ணனார் கொங்கலர்ந்த தார் கூவும் என்னையே –11-1-3
பதவுரை Show / Hide
சங்கும், Sangum - கைவளைகளும்
மாமையும், Maamaiyum - நிறமும்
தளரும், Thalarum - சோர்ந்திருக்கப்பெற்ற
மேனிமேல், Menimeel - (எனது) உடம்பின்மேலே
திங்கள், Thingal - சந்திரனுடைய
வெம் கதிர், Vem Kathir - கொடிய கிரணங்களானவை
சீறும், Seerum - சீறுகின்றன
பொங்கு வெண்திரை புணாரிணனார், Pongu Ventrirai Punarinar - கிளர்கின்ற வெளுத்த அலைகளையுடைய கடல் போன்ற நிறவண முடையரான பெருமாளுடைய
கொங்கு அலர்ந்ததர், Kongu Alarnthathar - பரிமளம் விரிகின்ற திருத்தழாய்மாலையானது
என்னை கூவும், Ennai Koovum - என்னோடே போர் செய்ய அறைகூவாநின்றது
என் செய்கேன், En Seigken - என்ன பண்ணுவென்!-.
1955பெரிய திருமொழி || (11-1–குன்றமொன்) - (பிரிவு ஆற்றாத தலைவி இரங்கி கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (போன இடத்திலே நலிய வேணும் என்று தாய் வடிவு கொண்டு வந்தவளை அனுகூலை என்று புத்தி பண்ணாதே அவளை பிரதிகூலை என்றே அறிந்து அவள் முலையை உண்டு முடித்த ஆராட்சி இல்லாத செயலோ) 4
அங்கோர் ஆய்க்குலத்துள் வளர்ந்து சென்று அங்கோர் தாயிருவாகி வந்தவள் கொங்கை நஞ்சுண்ட கோயின்மை கொலோ திங்கள் வெங்கதிர் சீறு கின்றதே –11-1-4
பதவுரை Show / Hide
திங்கள், Thingal - சந்திரனுடைய
வெம் கதிர், Vem Kathir - கொடிய கிரணங்கள்
சீறுகின்றது, Seerugindrathu - சீறுவதானது-
சென்று, Sendru - (மதுரையில் நின்றும்) போய்
அங்கு ஓர் ஆய் குலத்திலே வளர்ந்து, Angu Oor Aai Kulaththile Valarnthu - அந்த விலக்ஷணமான இடைக்குலத்துள்  வளர்ந்து கொண்டிருக்கையில்,
அங்கு ஓர் தாய் உருஆகி, Angu Oor Thaai Uruaagi - அங்குத் தாயாகிய யசோதைப்பிராட்டியின் வடிவு பூண்டு  வந்தவளான பூதனையினுடைய
கொங்கை நஞ்சு உண்ட, Kongai Nanju Unda - முலையில் தடவியிருந்த விஷத்தை
கோயின்மை கொலோ, Koyinmai Koloo - பராக்ரமமடியாகவோ?
1956பெரிய திருமொழி || (11-1–குன்றமொன்) - (பிரிவு ஆற்றாத தலைவி இரங்கி கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அரியவற்றை வருத்தமறச் செய்து தலைக் கட்ட வல்லவன் தன்னை நெருக்கிக் கடைந்து உள்ளுண்டான மதியை வாங்குகையோ-இக்கடல் இங்கனே கிடந்தது கூப்பிடுகின்றது என்னைப் போலே மதி இழந்தோ இக்கடலும் கூப்பிடுகின்றது – மதி எல்லாம் உள் கலங்கி இறே இவளும் கிடக்கிறது – ஒன்றுக்கும் விக்ருதையாகாத நான் கலங்கிக் கூப்பிடுகிறாப் போலே இருந்ததீ இக்கடலும் தன் காம்பீர்யம் எல்லாம் அழிந்து கூப்பிடுகிறபடியும்) 5
அங்கோர் ளரியாய் அவுணனைப் பங்கமா விரு கூறு செய்தவன் மங்குல் மா மதி வாங்கவே கொலோ பொங்கு மா கடல் புலம்புகின்றதே –11-1-5
பதவுரை Show / Hide
அங்கு, Angu - ப்ரஹிலாதாழ்வான் எங்குமுளன்கண்ணன் என்று சொன்ன வப்பொழுதே
ஆள் அரிஆய், Aal Ariyai - நரஸிம்ஹ மூர்த்தியாக தரித்து
அவுணனை, Avunai - (இரணியமென்னும்) அசுரணை
பங்கம் ஆ, Pangam Aa - மானபங்காக்கி
இரு கூறு செய்தவன், Iru Kooru Seithavan - இருதுண்டமாகக் கிழித்த பெருமான்
மங்குல்மாமதி, Mangulmaamathi - ஆகாசத்திலே விளங்குகின்றசிறந்த சந்திரனை
வாங்கவே கொலோ, Vaangave Kolo - (தன்னிடத்தில் நின்றும்)அபஹாரித்ததனாலேயோ
பொங்குமா கடல், Pongumaa Kadal - திரைக்கிளப்பத்தையுடைய கருங்கடலானது
புலம்புகினறது, Pulampuginrathu - கோஷிக்கின்றது!
1957பெரிய திருமொழி || (11-1–குன்றமொன்) - (பிரிவு ஆற்றாத தலைவி இரங்கி கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அன்றிலின் உடைய த்வனி எனக்கு பாதகமாகா நின்றது – நான் இதுக்கு எத்தைச் செய்வேன் – நான் இதுக்கு மார்விலே அம்பு ஏற்கவோ) 6
சென்று வார் சிலை வளைத்து இலங்கையை வென்ற வில்லியார் வீரமே கொலோ முன்றில் பெண்ணை மேல் முளரிக் கூட்டகத்து அன்றிலின் குரல் அடரும் என்னையே –11-1-6
பதவுரை Show / Hide
சென்று, Sendru - எதிரிகளிருக்குமிடத்தேறச் சென்று (- (என்னை அடரும் என்னை வருத்துகின்றது!))
வார்சிலை, Vaarcilai - பெரியவில்லை
வளைத்து, Valaiththu - (நானேற்றி) வளையச் செய்து
இலங்கையை, Ilankaiyai - லங்காபுரியை
வென்ற, Vendru - அழித்த
வில்லியார், Villiyaar - வில்வல்லவரான பெருமானுடைய
வீரமே கொலோ, Veerame Kolo - பராக்ரமமடியாகவோ
முன்றில் பெண்ணை     மேல், Munril Pennai Mael - வாசலிலுள்ள பனைமரத்தின் மேலே
முளரி கூட்டகத்து, Mulari Koottakathu - தாமரைப் பூவாலே இயற்றப்பட்ட கூட்டிலே கிடக்கிற
அன்றிலின், Anrilin - அன்றிற்பறவையினுடைய
குரல், Kural - தொனியானது
1958பெரிய திருமொழி || (11-1–குன்றமொன்) - (பிரிவு ஆற்றாத தலைவி இரங்கி கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வைத்த கண் மாறாதே கண்டு கொண்டே இருக்க வேண்டும்படியான ஆகர்ஷகமான வடிவை உடையவர் – ஒரு மேருவை இனிய மேகம் படிந்தால் போலே ஸ்ரீ பெரிய திருவடி திருத் தோளிலே வர – சிதிலை யாகாதே நின்று-நான் கண்டத்துக்கு தண்டமோ –காமன் ஆனவன் தன்னுடைய புஷ்ப பாணங்களாலே-தோல் புரையே அன்றியே மர்மத்திலே எய்கிற இது) 7
பூவை வண்ணனார் புள்ளின் மேல் வர மேவி நின்று நான் கண்ட தண்டமோ வீவில் ஐங்ணை வில்லி யம்பு கோத்து ஆவியே இலக்காக எய்வதே –11-1-7
பதவுரை Show / Hide
ஐங்கணை வில்லி, Aingadai Villi - மன்மதனானவன்
வீவு இல், Veivu Il - இறைப்பொழுதும் ஓய்வில்லாமல்
அம்பு கோத்து, Ambu Koththu - பாணங்களைத் தொடுத்து
ஆவியே இலக்கு ஆக எய்வது, Aaviye Ilakku Aaga Eyvathu - என் உயிரையே லஷயமாகக் கொண்டு பிரயோகிப்பதானது
பூவை வண் ணனார், Poovai Vannanaar - காயம்பூவண்ணரான பெருமாள்
புள்ளின் மேல் வர, Pullin Mel Vara - பெரிய திருவடியின் மீது எழுந்தருள
நான்மேவி நின்று, Nanmevi Nindru - நான் விரும்பி நின்று கொண்டு
கண்ட தண்டமோ, Kanda Thandamo - கண்டதற்கான தண்டனையோ
1959பெரிய திருமொழி || (11-1–குன்றமொன்) - (பிரிவு ஆற்றாத தலைவி இரங்கி கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தேசிகனான ஸ்ரீ விபீஷண ஆழ்வான் நின்று வழி இட்டுக் கொடுக்கையாலே ராஷசர்கள் வெல்ல மாட்டிற்று இலர்கள் இறே – அப்படியே நிலவரே வழி காட்டி கொடு வந்து நலியா நிற்க நம்மால் பரிஹரிக்கப் போமோ) 8
மாலினம் துழாய் வரும் என்நெஞ்சகம் மாலினந்துழாய் வந்து என்னுள் புகக் கோல வாடையும் கொண்டு வந்ததோர் ஆலி வந்தது ஆல் அரிது காவலே –11-1-8
பதவுரை Show / Hide
என் நெஞசகம், En Nenjasagam - எனது நெஞ்சானது
மால்இனம், Maalinam - (அப்பெருமான் பக்கலுண்டான)  வியாமோஹத்திற்குத் தகுதியாக
துழாய் வரும், Thuzhai Varum - அலைந்துகொண்டு வாரா நின்றது
மாலின், Maalin - (அந்த) எம்பெருமானுடைய
அம் துழாய், Am Thuzhai - அழகிய திருத்துழாய் மாலையானது
என்னுள் வந்து புகளுதல், Ennul Vandu Pugaluthal - என்னுடைய நினைவுக்குவர
வந்தது ஓர் ஆலி, Vandhadhu Oru Aali - (ஏற்கெனவே தனியே) வந்துபார்த்துப்போனவொரு சிறு துளியானது
கோலம், Kolam - அழகிய
வாடையும், Vaadaiyum - வாடைக்காற்றையும்
கொண்டு வந்தது, Kondhu Vandhadhu - துணைகூட்டிக்கொண்டு வந்துவிட்டது.
ஆல், Aal - அந்தோ! (இனி)
காவல், Kaaval - (உயிரைக்) காப்பாற்றிக் கொள்
அரிது, Aridhu - முடியாதகாரியம்
1960பெரிய திருமொழி || (11-1–குன்றமொன்) - (பிரிவு ஆற்றாத தலைவி இரங்கி கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அநந்ய பிரயோஜனரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் இட்ட திருத் துழாயில் பரிமளத்தை வண்டு கொண்டு வந்து ஊதுமாகில் – மிக்க சீர் தொண்டர் இட்ட -என்பான் என் என்னில் –அங்குத்தைக்கு பரிவர் உண்டு -என்று அறிந்தால் இறே இவளுக்கு கண் உறங்குவதும்-பழைய நிறம் வருவதுவும் – அநந்ய பிரயோஜாரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் அங்குத்தைக்கு பரியா நின்றார்கள் என்று கேட்ட வாறே இனி நமக்கு ஒரு குறை இல்லை என்று கண் உறங்கா நிற்கும்-நிறமும் பழைய படியேயாம்) 9
கெண்டை ஒண் கண்ணும் துயிலும் எந்நிறம் பண்டு பண்டு போல் ஒக்கும் மிக்க சீர் தொண்டரிட்ட பூம் துளவின் வாசமே வண்டு கொண்டு வந்தூதும் ஆகிலே –11-1-9
பதவுரை Show / Hide
மிக்க சீர் தொண்டர், Mikka Seer Thondar - அநந்யப்ரயோஜநரான ஸ்ரீ வைஷ்ணவாக்ள்
இட்ட, Itta - ஸமர்ப்பித்த
பூ துளவின், Poo Thulavin - திருத்துழாய் மலரின்
வாசம், Vaasam - பரிமளத்தை
வண்டு, Vandu - வண்டானது
கெண்டை, Kendai - கெண்டை மீன்போன்று அழகிய
ஒண் கணும், On Kanum - (எனது) கண்களும்
துயிலும், Thuyilum - உறக்கங்கொள்ளும்
என்நிறம், Enniram - எனது மேனி நிறமும்
கோண்டு வந்து, Kondhu Vandu - முகந்துகொண்டுவந்து
பண்டு பண்டு போல் ஓக்கும், Pandhu Pandhu Pol Okkum - முன்னைய வண்ணமாகும்
ஊதும் ஆகில், Oodhum Aakil - (என்னருகில்) ஊதுமானால்
1961பெரிய திருமொழி || (11-1–குன்றமொன்) - (பிரிவு ஆற்றாத தலைவி இரங்கி கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த இத்தை அப்யசிக்க வல்லார்களுக்கு பாதக பதார்த்தங்களால் நோவு பட வேண்டாதே நித்ய சம்ஸ்லேஷத்தோடே காலம் செல்லப் பெறுவர்–அல்லல் ஆகிறது இத் திரு மொழியில் பட்ட கிலேசம்) 10
அன்று பாரதத்து ஐவர் தூதனாய்ச் சென்ற மாயனைச் செங்கண் மாலினை மன்றிலார் புகழ் மங்கை வாள் கலி கன்றி சொல் வல்லார்க்கு அல்லல் இல்லையே –11-1-10
பதவுரை Show / Hide
அன்று, Anru - முன்பொருகால்
பாரதத்து, Bharathaththu - பாரத யுத்தத்திற்குப் பூர்வாங்கமாக
ஐவர் தூதன் ஆய், Aivar Thoodhan Aay - பஞ்சபாண்டவர்கட்குத் தூதுவனாய்
சென்று, Sendru - எழுந்தருளின
மாயனை, Maayanai - ஆச்சரிய சக்தியுத்தனும்
செம் கண் மாலினை, Sem Kan Malinai - செந்தமாரைக் கண்ணனுமான ஸர்வேச்வரன் விஷயகமாக
மன்றில் ஆர் புகழ், Manril Aar Pugazh - நூறத்திகள் தோறும் நிறைந்த
மங்கை, Mangai - திருமங்கை நாட்டையுடையவரும்
வாள், Vaal - வாட்படை கொண்டவருமான
கலிகன்றி, Kalikanri - ஆழ்வார்(அருளிச்செய்த)
சொல், Sol - இந்த ஸ்ரீ ஸூக்திகளை
வல்லார்க்கு, Vallarkku - ஓதவல்லவாக்ளுக்கு
அல்லல் இல்லை, Allal Illai - ஒரு துன்பமும் உண்டாக மாட்டாது.