திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2-2 காசையாடை (10 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1058பெரிய திருமொழி || (2-2–காசையாடை) (திருஎவ்வுளூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அறிவுடையார் -ராமோ ராமோ ராம -என்னத்-தன் பக்கல் நசை உடையார்கள் இப்படி ஏச – இவை இரண்டையும் கேட்டு-திரு வெவ்வுளிலே கண் வளர்ந்தான் ஆயிற்று-என்கிறார் முதல் பாசுரத்தில்) 1
காசை யாடை மூடியோடிக் காதல்செய் தானவனூர், நாச மாக நம்பவல்ல நம்பி நம்பெருமான், வேயி னன்ன தோள்மடவார் வெண்ணெயுண் டானிவனென்று ஏச நின்ற வெம்பெருமா னெவ்வுள் கிடந்தானே. –2-2-1
பதவுரை Show / Hide
காசை ஆடை, Kaasai Aadai - காஷாய வஸ்த்ரத்தினால்
மூடி, Moodi - உடம்பை மறைத்துக்கொண்டு
ஓடி, Oodi - (பஞ்சவடிக்கு) ஓடிவந்து
காதல் செய்தானவன், Kaadhal Seithaanavan - (பிராட்டியிடத்தில்) ஆசை கொண்டவனான இராவணனுடைய
ஊர், Oor - ஊராகிய இலங்கையானது
நாசம் ஆக நம்ப வல்ல, Naasam Aaga Namba Valla - நாசமாகும்படி ஸங்கல்பித்த
நம்பி, Nambi - பரிபூர்ண சக்தியையுடையவனும்
நம்பெருமான், Namberumaan - நமக்கு ஸ்வாமியும்
வேயின் அன்னதோள் மடவார், Veiyin Annathol Madavaar - மூங்கிலோடு ஒத்த தோள்களையுடைய இடைச்சியர்
இவன் வெண்ணெய் உண்டான் என்று ஏச நின்ற எம்பெருமான, Ivan Vennai Undaan Endru Aesa Nindra Emperumaan - ‘இவன் வெண்ணெய் திருடி உண்டவன்’ என்று சொல்லிப்பரிஹஸிக்கும்படி நின்றவனுமான எம்பெருமான்
எவ்வுள் கிடந்தான், Evval Kidanthaan - திருவெவ்வுளூரில் திருக்கண் வளர்ந்தருளா நின்றான்.
1059பெரிய திருமொழி || (2-2–காசையாடை) (திருஎவ்வுளூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (திரியட்டும் ஸ்ரீ ராமாவதாரம் அனுவர்த்தித்த படி –-அவன் வந்து -சாய்ந்தான்-என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்) 2
தைய லாள்மேல் காதல்செய்த தானவன் வாளரக்கன், பொய்யி லாத பொன்முடிக ளொன்பதோ டொன்றும்,அன்று செய்த வெம்போர் தன்னி லங்கோர் செஞ்சரத் தாலுருள, எய்த வெந்தை யெம்பெருமா னெவ்வுள் கிடந்தானே. –2-2-2
பதவுரை Show / Hide
தையலாள்மேல், Thaiyalalmael - அழகிற் சிறந்த பிராட்டி விஷயத்திலே (- (எவ்வுள் கிடந்தானே-.))
காதல்செய்த, Kaadhalseitha - காமம் கொண்ட
தானவன், Thaanavan - ஆஸூரப்ருக்ருதியாய்
வாள், Vaal - வாளாயுதத்தை யுடையவனான
அரக்கன், Arakkan - இராவணனுடைய
பொய் இலாத பொன் முடிகள், Poi Iladha Pon Mudigal - மெய்யான பொன்முடிகள்
ஒன்பதோடு ஒன்றும், Onpathodu Ondrum - பத்தையும்
அன்று அங்கு செய்த வெம்போர் தன்னில், Andru Angu Seitha Vembor Thannil - முன்பு ராமாவதாரத்திலே கடற்கரையில் செய்த கோரமான யுத்தத்திலே
ஓர் செம் சரத்தால் உருள எய்த எந்தை எம் பெருமான், Oru Sem Sarathaal Urula Eytha Endhai Em Perumaan - ஒப்பற்ற சிவந்த பாணத்தினாலே  உருட்டின எம் பெருமான்
1060பெரிய திருமொழி || (2-2–காசையாடை) (திருஎவ்வுளூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஏச நின்ற -என்றது அனுவர்த்திக்கிறது-உதித அநுதித ஹோம நிந்தை போலே இருப்பது ஓன்று இறே – இது புக்க புக்க துறை தோறும் பகவத் விஷயத்தில் கால் தாழ வல்லர் -ஆயிற்று- பூமியிலே ஏவிக் கார்யம் கொள்ளுவாரைப் பெற்றது-இனி இவ்விடம் விட்டுப் போவோம் அல்லோம் என்று சாய்ந்தான் ஆயிற்று –என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்) 3
முன்னோர் தூது வானரத்தின் வாயில் மொழிந்து,அரக்கன் மன்னூர் தன்னை வாளியினால் மாள முனிந்து அவனே பின்னோர் தூத னாதிமன்னர்க் காகிப் பெருநிலத்தார், இன்னார் தூத னெனநின்றா னெவ்வுள் கிடந்தானே. –2-2-3
பதவுரை Show / Hide
முன், Mun - ஸ்ரீராமாவதாரத்திலே (- (எவ்வுள்  கிடந்தான்-.))
வானரத்தின் வாயில், Vaanaraththin Vaayil - சிறிய திருவடி மூலமாக
ஓர் தூது மொழிந்து, Oru Thoodhu Mozhinthu - (பிராட்டிக்குத்) தூது சொல்லியனுப்பி (பிறகு)
அரக்கன், Arakkan - இராவணனுடைய
மன் ஊர்தன்னை, Man Oorthannai - சிறந்த லங்காபுரியை
வாளியினால், Vaalaiyin Aal - ஓர் அம்பினாலே
மாள முனிந்து, Maala Muninthu - மாண்டுபோகும்படி சீறிமுடித்து,
பின், Pin - பின் பொருகாலத்தில்
ஆதி மன்னர்க்கு, Aadhi Mannarkku - ராஜாதிராஜர்களான பாண்டவர்களுக்கு
ஓர் தூது ஆகி, Oru Thoodhu Aagi - விலக்ஷணனான தூதனாய்,
பெரு நிலத்தார் இன்னார் தூதன்  என நின்றானவனே, Peru Nilaththaar Innar Thoodhan En Nindraanavaney - பெரிய இப்பூமியிலுள்ளாரெல்லாரும் இவன் இன்னாருடைய தூதன் என்று சொல்ல அதனால் நிலைபெற்று நின்ற அப்பெருமான்
1061பெரிய திருமொழி || (2-2–காசையாடை) (திருஎவ்வுளூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (திரியவும் ஸ்ரீ கிருஷ்ண அவதாரமே பின்னாட்டிற்று –சமஸ்த கல்யாண குணாத்மகனாய்ஸ்ரீ வைகுண்டத்தில் இருந்த இருப்பிலும் இங்கே வந்து அவதரித்து தான் தாழ நின்ற பின்பு ஆயிற்று –பூரணன் ஆயிற்று – சர்வ வித பந்துவானவனை காணலாவது ஸ்ரீ பரம பதத்திலே என்று அவ்விடத்துக்கு போக பொதி சோறு கட்ட வேண்டாதே பந்து க்ருத்யம் பண்ணலாம் படி ஸ்ரீ திரு வெவ் வுள்ளிலே வந்து சாய்ந்தான் ஆயிற்று – என்கிறார் நாலாம் பாசுரத்தில்) 4
பந்த ணைந்த மெல்விரலாள் பாவைதன் காரணத்தால், வெந்தி றலே றேழும்வென்ற வேந்தன் விரிபுகழ்சேர், நந்தன் மைந்த னாகவாகும் நம்பி நம்பெருமான், எந்தை தந்தை தம்பெருமானெவ்வுள் கிடந்தானே. –2-2-4
பதவுரை Show / Hide
பந்து அணைந்த மெல் விரலாள் பாவைதன் காரணத்தால், Pandhu Anaindha Mel Viralal Paavaithan Kaaranaththal - பந்து பொருந்திய மெல்லிய விரல்களை யுடையளான நப்பின்னைப்பிராட்டி நிமித்தமாக (- (எவ்வுள் கிடந்தான்-.))
வெம் திறல் ஏறு ஏழும் வென்ற வேந்தன், Vem Thiral Aeru Aezhum Vendhan - க்ரூரமான மிடுக்கையுடைய ஏழுரிஷபங்களையும் வென்று முடித்த அரசனும்,
விரி புகழ் சேர் நந்தன், Viri Pugazh Cher Nandhan - உலகமெங்கும் பரந்த புகழையுடையனான நந்தகோபனுக்கு
மைந்தன் ஆக ஆகும் நம்பி, Maindhan Aaga Aagum Nambi - திருக்குமாரனாக அவதரித்த பரிபூர்ணனும்
நம்பெருமான், Namberumaan - நமக்கு ஸ்வாமியும்
எந்தை தந்தை தம்பெருமான், Endai Thandai Thamberumaan - நம்குலத்துக்கெல்லாம் நாதனுமானவன்
1062பெரிய திருமொழி || (2-2–காசையாடை) (திருஎவ்வுளூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பரிமள பிரசுரமான பர்யந்தத்தை உடைத்தான தேசத்தில் அரியது செய்ய வல்லவன் ஆயிற்று கண் வளர்ந்து அருளுகிறான் -எழுப்பி கார்யம் கொள்வார் குறையே –என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்) 5
பால நாகி ஞாலமேழு முண்டுபண் டாலிலைமேல், சால நாளும் பள்ளிகொள்ளும் தாமரைக் கண்ணன் எண்ணில், நீல மார்வண் டுண்டுவாழும் நெய்தலந் தண்கழனி, ஏல நாறும் பைம்புறவி லெவ்வுள் கிடந்தானே. –2-2-5
பதவுரை Show / Hide
பண்டு, Pandhu - முன்பொரு காலத்தில்
பாலன் ஆகி ஞாலம் ஏழும் உண்டு, Paalan Aagi Nyaalam Ezhum Undu - சிறு குழந்தையாய் உலகங்களை யெல்லாம் திரு வயிற்றிலே வைத்து
ஆல் இலை மேல், Aal Ilai Mael - ஆலந்தளிரின் மேலே
சால நாளும், Saal Naalum - வெகு நாள் வரையில்
பள்ளி கொள்ளும், Palli Kollum - சயனித்திருந்த
தாமரை கண்ணன், Thamarai Kannan - புண்டரீகாக்ஷன்,
எண் இல் நீலம்;, En Il Neelam - எண்ணிறந்த நெய்தற் பூவிலே
ஆர், Aar - படிந்த
வண்டு, Vandu - வண்டுகள்
உண்டு, Undu - (அப்பூக்களிலுள்ள தேனைப்)பருகி
வாழும், Vaalum - வாழப்பெற்ற
அம் தண், Am Than - அழகிய குளிர்ந்த
நெய்தல் கழனி, Neithal Kazhani - நெய்தல் கழனிகளையும்
ஏலம் நாறும், Elam Naarum - பரிமளம் கமழ்கின்ற
பை புறவில், Pai Puravil - பரந்த சோலைகளையுமுடைய
எவ்வுள், Evvul - திருவெவ்வுளூரிலே
கிடந்தான், Kidandhaan - சயனித்திருப்பவன்.
1063பெரிய திருமொழி || (2-2–காசையாடை) (திருஎவ்வுளூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அசாதாராண திவ்ய விக்ரஹ யுக்தனாய் –இதர விஸஜாதியனாய் இருக்கச் செய்தேயும் ப்ரஹ்மாவுக்கு அந்தராத்மாவாய் நின்று ஸ்ருஷ்ட்யாதிகளை நடத்துகிறான் என்று ஸநகாதிகள் ஏத்தும் படியாய் இருக்கிறவன் இங்கே சாய்ந்தான் –என்கிறார் ஆறாம் பாசுரத்தில்) 6
சோத்த நம்பி யென்றுதொண்டர் மிண்டித் தொடர்ந்தழைக்கும், ஆத்தனம்பி செங்கணம்பி யாகிலும் தேவர்க்கெல்லாம், மூத்த நம்பி முக்கணம்பி யென்று முனிவர்த்தொழு- தேத்தும், நம்பி யெம்பெருமா னெவ்வுள் கிடந்தானே. –2-2-6
பதவுரை Show / Hide
தொண்டர், Thondar - அடியவர்கள் (- (எவ்வுள் கிடந்தான்-.))
மிண்டி, Mindi - நெருக்கமாகத் திரண்டு
நம்பி சோத்தம் என்று  தொடர்ந்து அழைக்கும், Nambi Soththam Endru Thodarnthu Azaikkum - ‘ஸ்வாமீ! உனக்கு அஞ்சலி’ என்று சொல்லிப் பின் தொடர்ந்து துதிக்கப் பெற்ற
ஆத்தன், Aathan - ஆப்தனான
நம்பி, Nambi - ஸ்வாமியாய்
செம் கண், Sem Kan - செந்தாமரைக் கண்ணனான
நம்பி ஆகிலும், Nambi Aakilum - ஸ்வாமியுமாய் இருக்கச் செய்தேயும்,
முனிவர், Munivar - ஸநகர் முதலிய ரிஷிகள்
தேவர்க்கு எல்லாம், Thevarkku Ellam - தேவர்களுக்குள் பெரிய
மூத்த நம்பி முக்கண் நம்பி என்று தொழுது ஏத்தும் நம்பி எம்பெருமான், Mootha Nambi Mukkan Nambi Endru Thozhuthu Aethum Nambi Emperumaan - ‘பிரமனே! சிவனே!. என்று சொல்லி வணங்கி ஏத்தும் படியாயுள்ள (ஸர்வாந்தர்யாமியான) பெருமான்
1064பெரிய திருமொழி || (2-2–காசையாடை) (திருஎவ்வுளூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (திரு மேனியில் ஏக தேசத்தில் இருக்கிற ருத்ரன் விஸ்த்ருதமான திருவடிகளை தலையாலே சுமக்கும்படி நிற்கிறவன் –எங்களுக்கு ஜநகனுமாய்-ஸ்வாமி யுமானவன்-என்கிறார் ஏழாம் பாசுரத்தில்) 7
திங்க ளப்பு வானெரிகாலாகி, திசைமுகனார் தங்க ளப்பன் சாமியப்பன் பாகத் திருந்த,வண்டுண் தொங்க லப்பு நீண்முடியான் சூழ்கழல் சூடநின்ற, எங்க ளப்ப னெம்பெருமான் எவ்வுள் கிடந்தானே. –2-2-7
பதவுரை Show / Hide
திங்கள் ஆகி, Thingal Aagi - சந்திரனுக்கு அந்தர்யாமியாயும் (- (எங்கள் அப்பன் எம்பெருமான்-;) (எவ்வுள் கிடந்தான்-.))
அப்பு வான் எரி கால் ஆகி, Appu Vaan Eri Kaal Aagi - ஜலம் ஆகாசம் தேஜஸ்வாயு முதலிய பூதங்களுக்கு சரீரியாயும்
திசைமுகனார் தங்கள் அப்பன், Thisaimughanar Thangal Appan - பிரமனுக்குத் தந்தையாயும்
சாமி அப்பன், Saami Appan - ஸாமவேதத்தால் பிரதிபாதிக்கப்பட்ட ஸ்வாமியாயும்
பாகத்து இருந்த, Paagathu Irundha - தனது திருமேனியின் ஒருபக்கத்திலே இருப்பவனாய்
வண்டு உண்தொங்கல் அப்பு நீள் முடியான், Vandu Unthongal Appu Neel Mudiyan - வண்டுகள் மதுபானம் பண்ணப்பெற்ற கொன்றை மாலையையும் கங்கா ஜலத்தையும் நீண்ட சடையிலேயு டையனான சிவபிரான்
சூழ் கழல் சூட நின்ற, Sool Kazhal Sooda Nindra - விசாலமான திருவடிகளைத் தன் தலைமீது அணிந்து கொள்ளும்படி யிருப்பவனாயுமுள்ள
1065பெரிய திருமொழி || (2-2–காசையாடை) (திருஎவ்வுளூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இப்படி தான் அத்விதீயனாய் இருந்தானே யாகிலும் தன்னை ஆஸ்ரயித்தவர்களுக்கு இனியவன் – எனக்கு ஜநகனுமாய் ஸ்வாமியுமானவன் –எவ்வுள் கிடந்தானே-என்கிறார் எட்டாம் பாசுரத்தில்) 8
முனிவன் மூர்த்தி மூவராகி வேதம் விரித்துரைத்த புனிதன், பூவை வண்ணனண்ணல் புண்ணியன் விண்ணவர்கோன், தனியன் சேயன் தானொருவன் ஆகிலும் தன்னடியார்க்கு இனியன், எந்தை யெம்பெருமான் எவ்வுள் கிடந்தானே. –2-2-8
பதவுரை Show / Hide
முனிவன், Munivan - உலகங்களைப் படைக்க ஸங்கல்பம் செய்தவனும் (- (எவ்வுள் கிடந்தான்-.))
மூர்த்தி மூவர் ஆகி, Moorthi Moovar Aagi - பிரமன் விஷ்ணு சிவன் என்று மூன்று மூர்த்தியாக நிற்பவனும்
வேதம் விரித்து உரைத்த புனிதன், Vedham Virithu Uraitha Punithan - வேதப் பொருள்களை வெளியிட்ட வியக்தமாக பவித்திரனும்
பூவை வண்ணன், Poovai Vannan - காயாம்பூப்போன்ற திரு நிறத்தை யுடையவனும்
அண்ணல், Annal - ஸர்வ ஸ்வாமியும்
புண்ணியன், Punniyan - வடிவுகொண்ட புண்ணியமானவனும்
விண்ணவர் கோன், Vinnavar Kon - நித்யஸூரிகளுக்குத் தலைவனும்
தனியன், Thaniyan - “ஏகமேவ அத்விதீயம் ப்ரஹ்ம” என்று உபநிஷத்தில் ஓதப்பட்டவனும்
தான் சேயன் ஒருவனாகிலும், Thaan Cheyan Oruvanagilum - தான் ஒருவர்க்கும் எட்டாத வொருவனா யிருந்தாலும்
தன் அடியார்க்கு இனியன், Than Adiyarkku Iniyan - தன்னுடைய அடியவர்களுக்குப் பரம போக்யனா யிருப்பவனும்
எந்தை, Endhai - எமக்குத் தந்தையா யிருப்பவனுமான
எம் பெருமான், Em Perumaan - ஸ்வாமியானவன்
1066பெரிய திருமொழி || (2-2–காசையாடை) (திருஎவ்வுளூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நித்ய சம்ச்லேஷத்தாலே கையும் பந்துமாய் -அது தான் பொறாமை சிவந்து ஸூகுமாரமான விரலை உடையவள் – நிரூபாதிக ஸ்த்ரீத்வத்தை உடையவள் – குளிர்ந்த தாமரைப் பூவை பிறந்தகமாக உடையவள் – அப்பூ நெரிஞ்சி முள்ளாய் அடிக் கொதித்து வந்து அகலகில்லேன் -என்று இருக்கும்படி மார்வு படைத்தவன் –எவ்வுள் கிடந்தானே-என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்) 9
பந்தி ருக்கும் மெல்விரலாள் பாவை பனிமலராள், வந்தி ருக்கும் மார்வன்நீல மேனி மணிவண்ணன், அந்த ரத்தில் வாழும் வானோர் நாயக னாயமைந்த, இந்தி ரற்கும் தம்பெருமா னெவ்வுள் கிடந்தானே. –2-2-9
பதவுரை Show / Hide
பந்து இருக்கும் மெல் விரலாள், Pandhu Irukkum Mel Viralal - பந்து தங்கிய மெல்லிய விரல்களை யுடையவளும் (- (எவ்வுள் கிடந்தான்-.))
பனி மலரான், Pani Malaraan - குளிர்ந்த தாமரைப் பூவைப் பிறப்பிடமாக வுடையவளுமான
பாவை, Paavai - பிராட்டியானவள்
வந்து இருக்கும் மார்வன், Vandu Irukkum Maarvan - வந்து தங்கி வாழ்கின்ற திரு மார்பை யுடையவனாய்
நிலம் மேனி மணி வண்ணன், Nilam Meeni Mani Vannan - நீலமான நிறத்தையுடைய மணியின் வர்ணம் போன்ற வர்ணத்தை யுடையவனாய்
அந்தரத்தில் வாழும் வானோர் நாயகன் ஆய் அமைந்த இந்திரற்கும் தம்பெருமான், Andharathil Vaalum Vaanor Naayagan Aay Amaindha Indirarkkum Thamberumaan - சுவர்க்கத்தில் வாழ்கின்ற தேவர்களுக்கு நாதனாக அமைந்த இந்திரனுக்கும ஸ்வாமியானவன்
1067பெரிய திருமொழி || (2-2–காசையாடை) (திருஎவ்வுளூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இங்கே வந்து சாய்ந்த படியாலே பகவத் குணங்கள் நெஞ்சிலே ஊற்றிருந்து சொல்லி அல்லது நிற்க ஒண்ணாதபடி அவை ப்ரேரிக்க பாடின மாலை-இது கற்றார் அண்டத்தை ஆளுகை நிச்சயம் – அவனைப் பற்றியும் இத்தைப் பெறுமத்தனையோ – என்று விரக்தர் ஆனார்கள் ஆகில் அவர்கள் ஆளுமது பரம பதம் —என்கிறார் பத்தாம் பாசுரத்தில்) 10
இண்டை கொண்டு தொண்டரேத்த எவ்வுள் கிடந்தானை, வண்டு பாடும் பைபுறவில் மங்கையர் கோன்கலியன், கொண்ட சீரால் தண்டமிழ்செய் மாலையீ ரைந்தும்வல்லார், அண்ட மாள்வ தாணையன்றே லாள்வ ரருலகே. –2-2-10
பதவுரை Show / Hide
தொண்டர், Thondar - பக்தர்கள்
இண்டை கொண்டு, Indai Kondu - புஷ்ப மாலைகளை ஏந்திக் கொண்டு
ஏத்த, Aetha - துதிக்கும்படியாக
எவ்வுள் கிடந்தானை, Evvul Kidandhaanai - திருவெவ்வுளூரிலே சயனித்தருள்பவனான பெருமான் விஷயமாக,
வண்டு பாடும் பை புறவில் மங்கையர்கோன் கலியன், Vandu Paadum Pai Puravil Mangaiyarkon Kalyan - வண்டுகள் களித்துப் பாடா நின்ற விசாலமான சோலைகளையுடைய திருமங்கையிலுள்ளார்க்கு ஸ்வாமியான ஆழ்வார்
கொண்ட சீரால், Konda Seeraal - நெஞ்சிலே கொண்ட பகவத் குணங்களாலே
தண் தமிழ் செய், Than Tamil Sei - அழகிய தமிழ்ப் பாஷையிலருளிச் செய்த
மாலை, Maalai - சொல்மாலையாகிய
ஈர் ஐந்தும், Eer Aindhum - இப்பத்துப் பாசுரங்களையும்
வல்லார், Vallaar - ஓதவல்லவர்கள்
அண்டம் ஆள்வது ஆணை, Andam Aalvathu Aanai - இந்த பிரஹ்மாண்டங்களையெல்லாம் செங்கோல் செலுத்தி ஆளப் பெறுவது திண்ணம்;
அன்றேல், Andrel - இவ் வுலகங்களை ஆள்வதில் ஆசையற்றவர்களாகில்
அமரர் உலகு ஆள்வர், Amarar Ulagu Aalvar - பரமபதந் தன்னையே ஆளப் பெறுவர்கள்.
அமருலகு, Amarulagu - அமரருவகு.