திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1078 | பெரிய திருமொழி || (2-4–அன்றாயர்) (திருநீர்மலை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ திரு நறையூரிலே நின்றான்-ஸ்ரீ திருவாலியிலே இருந்தான்-ஸ்ரீ திருக் குடந்தையிலே சாய்ந்தான்-ஸ்ரீ திருக் கோவலூரிலே நடந்தான் – இடம் மா மலையாவது நீர் மலையே –மலையாய் இருக்கச் செய்தே அல்லாதவை வாஸ ஸ்தானம் ஆகிறது இல்லை இறே – உகந்து அருளின நிலங்களில் எங்கும் பண்ணக் கடவ விருப்பத்தைப் பண்ணிக் கொடு வந்து சந்நிஹிதனான தேசம் ஸ்ரீ திரு நீர் மலை- என்கிறார் முதல் பாசுரத்தில்) 1 | அன்றாயர்கு லக்கொடி யோடணிமா மலர்மங்கையொ டன்பளவி,அவுணர்க்
கென்றானு மிரக்கமி லாதவனுக்குக் குறையுமிட மாவது,இரும்பொழில்சூழ்
நன்றாயபு னல்நறை யூர்த்திருவா லிகுடந்தை தடந்திகழ் கோவல்நகர்,
நின்றானிருந் தான்கிடந் தான்நடந்தாற் கிடம்மாமலை யாவது நீர்மலையே. –2-4-1 | பதவுரை Show / Hideஅன்று, Andru - கிருஷ்ணனாய்ப் பிறந்த அக்காலத்து ஆயர்குலம் கொடியோடு, Aayarkulam Kodiyodu - இடைக்குலத்திற் பிறந்தகொடி போன்ற நப்பின்னை பிராட்டியோடும் அணி மா மலர் மங்கையொடு, Ani Maa Malar Mangaiyodu - மிகச் சிறந்த தாமரை மலரிற் பிறந்த பெரிய பிராட்டியோடும் அன்பு அளவி, Anbu Alavi - அன்புடன் கலந்தவனும் என்றானும், Endraanum - எக்காலத்திலும் அவுணர்க்கு, Avunarkku - அசுரர்கள் விஷயத்திலே இரக்கம் இலாதவனுக்கு, Irakkam Ilaadhavanukku - இரக்கமில்லாதவனுமான எம்பெருமானுக்கு உறையும் இடம் ஆவது, Urayum Idam Aavathu - வாஸஸ்தான மெதுவென்றால்;-. இரு பொழில் சூழ், Iru Pozhil Soozh - பரந்த சோலைகளாலே சூழப்பட்டு நன்று ஆய புனல், Nandru Aaya Punal - நல்ல தீர்த்தங்களையுடைய நறையூர், Naraiyoor - திருநறையூரிலே நின்றான், Nindraan - நின்றவனும் திரு ஆலி, Thiru Aali - திருவாலியிலே இருந்தான், Irundhaan - வீற்றிருந்தவனும் குடந்தை, Kudanthai - திருக்குடந்தையிலே கிடந்தான், Kidandhaan - சயனித்தவனும் தடம் திகழ் கோவல் நகர், Thadam Thigazh Koval Nagar - தடாகங்களாலே விளங்குகின்ற திருக்கோவலூரிலே நடந்தாற்கு இடம், Nadandaarku Idam - உலகளந்த திருக்கோலமாக எழுந்தருளியிருந்தவனுமான எம்பெருமானுக்கு இடமான மா மலை ஆவது நீர்மலை, Maa Malai Aavadhu Neermalai - சிறந்த மலையான திருநீர் மலையாம். |
| 1079 | பெரிய திருமொழி || (2-4–அன்றாயர்) (திருநீர்மலை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (முன்பு பூ பாரத்தைப் போக்கி நிர்வஹித்துப் -போந்தவன் –சீறி யருளி –அவனுடைய பிரதிஞ்ஞா காலத்தில் வந்து உதவிற்றிலன் ஆகில் குணங்கள் சாவாதியாம் போலே சர்வாதிகனான தான் வாமன வேஷத்தைப் பரிகிரஹித்து நிற்கச் செய்தே மஹா பலி பக்கலிலே சென்று இரந்து திருக் கையிலே நீர் விழுந்தவாறே ஆகாசவகாசம் இடம் அடையும்படி வளர்ந்து அளந்து கொண்டவனுக்கு வாஸ ஸ்தானம்- என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்) 2 | காண்டாவன மென்பதொர் காடமரர்க் கரையனது கண்டவன் நிற்க,முனே
மூண்டாரழ லுண்ணமு னிந்ததுவும்அதுவன்றியும் முன்னுல கம்பொறைதீர்த்
தாண்டான்,அ வுணனவன் மார்வகலம் உகிரால்வகி ராகமு னிந்து, அரியாய்
நீண்டான்குற ளாகிநி மிர்ந்தவனுக் கிடம்மாமலை யாவது நீர்மலையே. –2-4-2 | பதவுரை Show / Hideஅமரர்க்கு அரையன் அவன், Amararkku Arayan Avan - தேவர்களுக்குத் தலைவனான இந்திரனானவன் (- (மா மலை ஆவது நீர்மலை-.)) கண்டு நிற்க, Kandu Nirka - பார்த்துக்கொண்டிருக்கையில் முனே, Mune - அவன் கண் முன்னே “காண்டாவனம்”; என்பது ஓர் காடு அது, Kandavanam Enbathu Oru Kaadu Adhu - ‘காண்டாவனம்’ என்று ப்ரஸித்தமான வொருகாட்டை ஆர் அழல், Aar Azhai - அக்நி பகவான் மூண்டு உண்ண, Moondru Unna - மேல் விழுந்து உட்கொள்ளும்படியாக முனிந்ததுவும், Munindathuvum - சீறி நியமித்தவனும், அது அன்றியும், Adhu Andriyum - அதுவுந்தவிர, முன், Mun - முன்பு(பாரதப்போரில்) உலகம் பொறை தீர்த்து, Ulagam Porai Theerthu - பூமியின் பாரங்களைத்தீர்த்து ஆண்டான், Aandaan - உலகங்களை ரக்ஷித்தவனும் அவுணன் அவன், Avunan Aavan - இரணியாசுரனுடைய அகலம் மார்பு, Ahalam Maarbu - அகன்ற மார்பு உகிரால், Ukiral - (திருக்கை) நகங்களாலே வகிர் ஆக, Vagir Aaga - இருபிளவாம்படி முனிந்து, Muninthu - சீறி அரி ஆய் நீண்டான், Ari Aay Neendan - நரசிங்கமாய் வளர்ந்திட்டவனும் குறள் ஆகி, Kural Aagi - (முதலில்) வாமநாவதாரஞ் செய்து நிமிர்ந்தவனுக்கு, Nimirndhavanukku - (பிறகு) திரிவிக்கிரமனாய் வளர்ந்தவனுமான பெருமானுக்கு இடம், Idam - இடம் (எதுவென்றால்) |
| 1080 | பெரிய திருமொழி || (2-4–அன்றாயர்) (திருநீர்மலை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நில மன்னனுமாய் உலகு -ஆண்டவனுக்கு ஸ்ரீ சக்கரவர்த்தி திரு மகனைச் சொல்லுதல்-அன்றிக்கே பூ பார நிர் ஹரணம் பண்ணின படியைச் சொல்லுகையாலே ஸ்ரீ கிருஷ்ணனைச் சொல்லுதல்-என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்) 3 | அலமன்னு மடல்சுரி சங்கமெடுத் தடலாழியி னாலணி யாருருவில்,
புலமன்னு வடம்புனை கொங்கையினாள் பொறைதீரமு னாளடு வாளமரில்,
பலமன்னர் படச்சுட ராழியினைப் பகலோன்மறை யப்பணி கொண்டு,அணிசேர்
நிலமன்னனு மாயுல காண்டவனுக் கிடம்மாமலை யாவது நீர்மலையே. –2-4-3 | பதவுரை Show / Hideஅணி ஆர் உருவில், Ani Aar Uruvil - அழகுபொருந்திய திருமேனியிலே (- (மா மலை ஆவது நீர்மலையே-.)) அடல் ஆழியினால், Adal Azhiyinai - தீக்ஷ்ணமான திருவாழியோடு கூட அலம், Alam - கலப்பையையும் மன்னும் அடல் சுரி சங்கம், Mannum Adal Suri Sangam - (எதிரிகட்கு) நித்யபயங்கரமான ஸ்ரீ பாஞ்சஜந்யத்தையும் எடுத்து, Eduthu - தரித்துக் கொண்டிருப்பவனாயும் முன், Mun - முன்னொருகால், புலம் மன்னுவடம் புனை கொங்கையினாள், Pulam Mannuvadam Punai Kongaiyinai - மநோஹரமான முத்து வடங்களணிந்த முலையை யுடையளான பூமிப் பிராட்டியினுடைய பொறை, Porai - பாரமானது தீர, Theera - தொலையும்படி ஆள் அடு வாள் அமரில், Aal Adu Vaal Amarlil - ஆண்களை யெல்லாம் முடிக்கிற மஹத்தான யுத்தத்திலே பல மன்னர் பட, Pala Mannar Pada - பல அரசர்கள் நசிக்கும்படி (செய்தவனாயும்) பகலோன் மறைய, Pagalon Maraiya - ஸூர்யன் மறையும்படியாக சுடர் ஆழியினை பணி கொண்டு, Sudar Azhiyinai Pani Kondu - ஒளிமிக்க திருவாழியைக் காரியங் கொண்டவனாயும் அணிசேர் நிலம் மன்னனும் ஆய், Anicher Nilam Mannanum Aay - அழகிய இந்நிலத்திற்கு நாயகனாயிருந்துகொண்டு உலகு ஆண்டவனுக்கு, Ulaku Aandavanukku - உலகங்களை ரக்ஷித்தவனாயுமிருக்கிற பெருமானுக்கு இடம், Idam - இருப்பிடம் |
| 1081 | பெரிய திருமொழி || (2-4–அன்றாயர்) (திருநீர்மலை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தான் ஸ்வாமியான முறை தோற்ற இருக்குமாகில் அவர்களோடும் பொருந்த ஒண்ணாது இறே- அதுக்காக தன்னைத் தாழ விட்டு அவர்களோடு உறவு பண்ணி கலந்து –த்ரௌபதி உடைய ஸ்த்ரீத்வத்தை பரிஹரித்தவனுக்கு வாஸ ஸ்தானம்–என்கிறார் நாலாம் பாசுரத்தில்) 4 | தாங்காததோ ராளரி யாயவுணன் – றனைவீட முனிந்தவ னாலமரும்,
பூங்கோதையர் பொங்கெரி மூழ்கவிளைத் ததுவன்றியும் வென்றிகொள் வாளமரில்,
பாங்காகமுன் ஐவரொ டன்பளவிப் பதிற்றைந்திரட் டிப்படை வேந்தர்பட,
நீங்காச்செரு வில்நிறை காத்தவனுக் கிடம்மாமலை யாவது நீர்மலையே. –2-4-4 | பதவுரை Show / Hideதாங்காதது, Thangadhadhu - எதிரிகளுக்கு ஸஹிக்கமுடியாத ஓர் ஆளி அரி ஆய், Oru Aali Ari Aay - ஒப்பற்ற நரசிங்க மூர்த்தியாய்த் தோன்றி அவுணன் தனை, Avunan Thanai - (ஹிரண்யனென்னும்) அஸூரனை வீட முனிந்து, Veeda Muninthu - முடியுமாறு சீறி, அவனால் அமரும், Avanal Amarum - அவ்விரணியனால் நிலைபெற்றிருந்த பூங்கோதையர், Poongothaiyar - பெண்டுகள் பொங்கு எரி மூழ்க, Pongu Eri Moongka - எரிகிற நெருப்பிலே புகும்படி விளைத்து, Vilaitthu - செய்தவனாயும் அது அன்றியும், Adhu Andriyum - அதுவுமல்லாமல், முன், Mun - முன்னே வென்றி கொள் வாள் அமரில், Vendri Kol Vaal Amiril - வெற்றியையுடைய பெரிய போர்க்களத்திலே ஐவரொடு, Aivarodu - பஞ்சபாண்டவர்களோடே பாங்கு ஆக அன்பு அளவி, Paangu Aaga Anbu Alavi - அவர்களுக்குத் தக்கபடி உறவு பண்ணிக் கலந்து, படை, Padai - ஆயுதங்களை யுடையவர்களான பதிற்றைந் திரட்டி வேந்தர் பட, Pathirrain Thiratti Vendar Pada - நூற்றுவரான துரியோதனாதிகள் முடிந்துபோம்படி செய்தவனாயும் நீங்கா செருவில், Neenga Seruvil - மாளாத அப்பெரும் பூசலினாலே நிறை, Nirai - (த்ரௌபதியின்) நலத்தை காத்தவனுக்கு, Kaathavanukku - ரக்ஷித்தவனாயுமுள்ள ஸர்வேச்வரனுக்கு |
| 1082 | பெரிய திருமொழி || (2-4–அன்றாயர்) (திருநீர்மலை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ராவண வதம் பண்ணின அநந்தரம் திருமேனியில் பிறந்த பௌஷ் கல்யம் இருக்கிறபடி – நீலமானது அமர்ந்து இருக்கிற முகில் போலே ஸ்ரமஹரமான வடிவை உடையவன் – அவ் வடிவு அழகாலே என்னை அனன்யார்ஹன் ஆக்கினவனுக்கு –மா மலையாவது நீர் மலையே – என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்) 5 | மாலுங்கட லாரம லைக்குவடிட் அணைகட்டி வரம்புருவமதிசேர்
கோலமதி ளாயவி லங்கைகெடப் படைதொட்டொரு காலம ரிலதிர,
காலமிது வென்றயன் வாளியினால் கதிர்நீண்முடிபத்து மறுத்தமரும்,
நீலமுகில் வண்ணனெ மக்கிறைவற் கிடம்மாமலை யாவது நீர்மலையே. –2-4-5 | பதவுரை Show / Hideஒரு கால், Oru Kaal - முன்னொருகாலத்திலே (- (அவ்வளவிலும் இராவணன் சளைக்காமல்) (இடம் மாமலை ஆவது நீர்மலையே-)) மாலும் கடல் ஆர, Maalum Kadal Aara - பெரிய கடல் நிறையும்படி மலை குவடு இட்டு, Malai Kuvalu Ittu - மலைக் கொடுமுடிகளைக் கொண்டு போட்டு வரம்பு உருவ, Varambu Uruva - அக்கரையிலே சென்று சேரும்படி அணை கட்டி, Anai Katti - ஸேது கட்டி, மதி சேர், Madi Ser - சந்திரன் வரையில் ஓங்கியிருக்கிற கோலம் மதிளாய, Kolam Madilay - அழகிய மதில்களையுடைத்தான இலங்கை, Ilankai - லங்காபுரியானது கெட, Keda - அழியும்படியாக படை தொட்டு, Padai Thottu - ஆயதங்களைச் செலுத்தி அமரில் அதிர, Amaril Athira - போர்க்களத்தில் நின்று குமுறின வளவிலே இதுகாலம் என்று, Idhukalam Endru - இவனை முடிப்பதற்கு இதுவே தக்க ஸமயமென்று கொண்டு அயன் வாளியினால், Ayan Valiyinal - ப்ரஹ்மாஸ்த்ரத்தாலே கதிர் நீள் முடி பத்தும் அறுத்து, Kathir Neel Mudi Pathum Aruthu - (கிரீடங்களால்) ஒளிபெற்ற நீண்ட பத்துத் தலைகளையும் அறுத்து அமரும், Amarum - அயோத்திமாநகரில் பிராட்டியும் தானுமாக வந்து சேர்ந்த நீலம் முகில் வண்ணன், Neelam Mukil Vannan - காளமேக நிறத்தனான எமக்கு இறைவற்கு, Emakku Iraivarku - எம்பெருமானுக்கு |
| 1083 | பெரிய திருமொழி || (2-4–அன்றாயர்) (திருநீர்மலை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ரஷ்யம் அளவுபட்டு ரஷகத்வமே விஞ்சி இருக்கிறவன் –இப்படி தான் சர்வ ரஷகனாய் இருக்கிற இருப்பைக் காட்டி என்னை எழுதிக் கொண்டவன் –நீரார் பேரான் –நீர் -என்று நீர்மையாய்-அத்தால் ஸ்வாபாவமாய் -அதாகிறது சேஷித்வமாய்-ஆக ஸ்வ வ்யதிரிக்த சமஸ்தவஸ்துவும் தனக்கு பிரகாரமாய் தான் ப்ரகாரியாய் இருக்கையாலே ஸ்ரீ நாராயணன் என்னும் திரு நாமத்தை உடையவன் –சர்வாதிகனான எம்பெருமானுக்கு ஸ்ரீ நீர் வண்ணன் என்று திரு நாமம் – என்கிறார் ஆறாம் பாசுரத்தில்) 6 | பாராருல கும்பனி மால்வரையும் கடலும்சுட ருமிவை யுண்டும், எனக்
காரா தென நின்றவ னெம்பெருமான் அலைநீருல குக்கரசாகிய,அப்
பேரானைமுனிந்தமுனிக்கரையன் பிறரில்லை நுனக்கெனு மெல்லையினான்,
நீரார்ப்பே ரான்நெடு மாலவனுக் கிடம்மாமலை யாவது நீர்மலையே. –2-4-6 | பதவுரை Show / Hideஆர் பார் உலகும், Ar Paar Ulagum - விசாலமான பூலோகமும் (- (நீர்வண்ணனென்னும் திருநாமத்தை யுடையவனுமான) (இடம் மா மலை ஆவது நீர்மலையே)) பனி மால் வரையும், Pani Maal Varaiyum - குளிர்ந்தபெரிய மலைகளும் கடலும், Kadalum - ஸமுத்ரங்களும் சுடரும், Sudarum - சந்திர ஸூரியர்களும் இவை, Ivai - ஆகிய இவற்றையடங்கலும் உண்டும், Undum - அமுது செய்தும் எனக்கு ஆராது என நின்றவன், Enakku Aaraathu Ena Nindravan - எனக்கு வயிறு நிறை வில்லையே! என்று சொல்லிக்கொண்டே யிருந்தவனும் எம்பெருமான், Emperuman - எம்போலியர்க்கு ஸ்வாமியானவனும் அலை நீர் உலகுக்கு அரசு ஆகிய அப்பேரானை முனிந்த முனிக்கு அரையன், Alai Neer Ulakukku Arasu Aagi Apperaanai Munintha Munikku Arayan - கடல் சூழ்ந்த உலகத்துக்கு ராஜாக்களென்கிற அந்தப் பேரையுடைய க்ஷத்ரிய குலத்தைச் சீறிக்களைந்த பரசுராம முனிவரனாகத் தோன்றினவனும் நுனக்கு பிறர் இல்லை எனும் எல்லையினான், Nunakku Pirar Illai Ennum Ellaiyinan - ‘உனக்கு மேற்பட்டாரொருவருமில்லை‘ என்னும்படியாகப் பெருமையின் எல்லையிலே நிற்பவனும் நீர் ஆர் பேரான், Neer Aar Peeraan - நீர்வண்ணனென்னும் பேரான் நெடு மால் அவனுக்கு, Nedu Maal Avanukku - ஸர்வேச்வரனுக்கு |
| 1084 | பெரிய திருமொழி || (2-4–அன்றாயர்) (திருநீர்மலை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நான் எதிரி என்று தோற்றினவனுடைய மார்வை இரண்டு கூறாம்படி பிளந்து பொகட்டவனுக்கு-ஸ்ரீ பிரகலாத ஆழ்வான் உடைய வார்த்தையாலே –முன்பு அவன் பண்ணின பராதி கூல்யத்தை எல்லாம் பொறுக்க வேணும் என்ன பொறுத்துப் போந்தான் – இனி இவன் இருக்கில் இவனுக்கு அநர்த்தம் என்னும் அளவில் பின்னை அழியச் செய்து விட்டான் ஆயிற்று என்கிறார் ஏழாம் பாசுரத்தில்) 7 | புகராருரு வாகிமுனிந்தவனைப் புகழ்வீட முனிந்துயி ருண்டு,அசுரன்
நகராயின பாழ்பட நாமமெறிந்ததுவன்றியும் வென்றிகொள் வாளவுணன்,
பகராதவ னாயிர நாமமடிப் பணியாதவ னைப்பணி யாமலரில்,
நிகராயவன் நெஞ்சிடந் தானவனுக் கிடம்மாமலை யாவது நீர்மலையே. –2-4-7 | பதவுரை Show / Hideபுகர் அர் உரு ஆகி, Pugar Ar Uru Aagi - (கண்ணபிரானான தன்னைப்போலவே சங்கு சக்கரங்களைச் செய்வித்துத் தரித்துக் கொண்டதனால்) ஒளிமிக்க உருவையுடையனாய் முனிந்தவனை, Munindhavanai - (தன்மீது) கோபத்தைக் காட்டினவனான பௌண்ட்ரக வாஸுதேவனை நாமம் பாழ்பட எறிந்து, Naamam Pazhpad Erinthu - பேருங்கூட அழந்துபோம்படியாக த்வம்ஸம் பண்ணினவனும் அது அன்றியும், Adhu Andriyum - அது தவிரவும், வென்றி கொள் வாள், Vendri Kol Vaal - வெற்றி கொருந்திய வாளைத் துணையாகவுடையனாய் ஆயிரம் நாமம் பகராதவன், Aayiram Naamam Bhakaradhavan - (தன்னுடைய) ஸஹஸ்ர நாமங்களில் ஒன்றையும் சொல்லாதவனாய் புகழ் வீட முனிந்து, Pugazh Veeda Muninthu - (அவனுடைய புகழ் ஒழியும்படி சீறி உயிர் உண்டு, Uyir Undu - (அவனது) பிராணனை அபஹரித்தவனும் அசுரன், Asuran - ஆஸுரப்ரக்ருதியான அவனுடைய நகர் ஆயின, Nagar Aayin - நகரங்களாக அமைந்திருந்த பல ஸ்தானங்களை அடி பணியாதவன், Adi Paniyadhavan - திருவடிகளிலே வணங்காதவனாய் அமரில் நிகர் ஆயவன், Amaril Nikar Aayavan - போர்புரிவதில் தன்னோடு ஒத்தவனாயிருந்த அவுணனை, Avunai - இரணியரசுரனுடைய நெஞ்சு, Nenju - மார்வை பணியால், Paniyal - (ப்ரஹ்லாதனுடைய) சொல்நிமித்தமாக இடந்தான் அவனுக்கு, Idanthan Avanukku - பிளந்தவனுமான எம்பெருமானுக்கு |
| 1085 | பெரிய திருமொழி || (2-4–அன்றாயர்) (திருநீர்மலை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (எங்கள் பக்கலிலே அருளைப் பண்ண வேணும் என்று நெஞ்சு நெகிழ்ந்து ப்ரேமயுக்தராய் கொண்டு நாள் தோறும் அனுசந்திக்குமவர்கள்-நிச்சம் அருள் செய்யும் அவர்க்கு –மா மலையாவது நீர் மலையே என்கிறார் எட்டாம் பாசுரத்தில்) 8 | பிச்சச்சிறு பீலிபி டித்துலகில் பிணந்தின்மடவாரவர் போல்,அங்ஙனே
அச்சமிலர் நாணில ராதன்மையால் அவர்செய்கை வெறுத்தணி மாமலர்த்தூய்,
நச்சிநம னாரடை யாமைநமக் கருள்செய் எனவுள்குழைந் தார்வமொடு,
நிச்சம்நினை வார்க்கருள் செய்யுமவற் கிடம்மாமலை யாவது நீர்மலையே. –2-4-8 | பதவுரை Show / Hideஉலகில், Ulagil - இவ்வுலகத்திலே பிச்சம் இது பீலி பிடித்து, Picham Ithu Peelipidithu - பிச்சங்களையுடையதாய்ச் சிறிதான மயிலிறகைக் கையிலே வைத்துக் கொண்டு (இருப்பவர்களான ஜைநர்கள்) பிணம் தின்மடவார் அவர்போல் அங்ஙனே, Pinam Thinmadavaar Avarpol Anggane - பிணங்களைப் பிடுங்கித் தின்கிற பிசாச ஸ்த்ரீகளைப்போலே (திகம்பரர்களாய்த் திரிகையாலே) அச்சம் இலர், Acham Ilir - பயமில்லாதவர்களாயும் நாண் இலர் ஆதன்மையால், Naan Ilir Aadhanmaiyaal - வெட்கமில்லாதவர்களாயு மிருக்கையாலே அவர், Avar - அப்படிப்பட்ட ஜைநர்களினுடைய செய்கை, Seigai - நடத்தைகளை வெறுத்து, Veruthu - வெறுத்துத் தள்ளிவிட்டு அணி மா மலர்தூய், Ani Maa Malartthuuy - அழகிய சிறந்த புஷ்பங்களைக்கொணர்ந்து ஸமர்ப்பித்து நச்சி, Nachchi - பக்திபண்ணி நமனார் அடையாமை நமக்கு அருசெய் என, Namanar Adaiyaamai Namakku Aruseyi Ena - யமன் (எங்களைக்) கிட்டாதபடி (எமக்கு) அருள்புரியவேணும் என்று உள் குழைந்து, Ul Kuzhaindhu - மனங்குழைந்து ஆர்வமொடு, Aarvamodu - அன்புடனே நிச்சம், Nicham - நித்யமாக நினைவார்க்கு, Ninaivaarakku - அநுஸந்திக்கு மடியவர்களுக்கு அருள் செய்யுமவற்கு, Arul Seyyumavarkku - கிருபைபண்ணுகிற எம்பெருமானுக்கு |
| 1086 | பெரிய திருமொழி || (2-4–அன்றாயர்) (திருநீர்மலை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (திருவடிகளில் விழுந்து ஆஸ்ரயிப்பார் உடைய பாபங்களை வாசனையோடே நசிப்பிக்கும் – அவ்வரியத்தையும் செய்யும்-இப்படி இருக்கையாலே அதுவே நமக்கு உஜ்ஜீவிக்கைக்கு ஸ்தானம் – என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்) 9 | பேசுமள வன்றிது வம்மின்நமர்! பிறர்க்கேட்பதன் முன்பணி வார்வினைகள்,
நாசமது செய்திடும் ஆதன்மையால் அதுவேநம துய்விடம் நாண்மலர்மேல்
வாசமணி வண்டறை பைம்புறவில் மனமைந்தொடு நைந்துழல் வார்,மதியில்
நீசரவர் சென்றடை யாதவனுக் கிடம்மாமலை யாவது நீர்மலையே! –2-4-9 | பதவுரை Show / Hideநமர், Namar - நம்முடையவர்களே! இது பேசும் அளவு அன்று, Ithu Pesum Alavu Andru - இந்த திவ்யதேசவைபவம் நம்மால் சொல்லி முடிக்கப்போகாது, பிறர் கேட்பதன் முன், Piraar Kaetpadhan Mun - (இது) நாஸ்திகாதிகளின் காதில் விழுவதற்கு முன்னமே வம்மின், Vammin - வந்து கேளுங்கள், அது, Adhu - அந்த திவ்யதேசமானது பணிவார் வினைகள் நாசம் செய்திடும், Panivaar Vinaigal Naasam Seididum - தன்மை வணங்குமவர்களின் பாவங்களைத் தொலைக்கும் ஆதன்மையால், Aadhanmaiyaal - ஆகையாலே அதுவே, Adhuvae - அந்த திவ்யதேசமே நமது உய்வு இடம், Namathu Uyvu Idam - நாம் உஜ்ஜீவிப்பதற்கு உறுப்பானது (அஃது எவ்விடமென்றால்) மனம் ஐந்தொடு நைந்து உழல்வார், Manam Aindhodu Naindhu Uzhalvaar - நெஞ்சானது ஐந்து விஷயாந்தரங்களிலே செல்லப்பெற்று மிகவும் வருந்துகிறவர்களாயும் மதி இல், Madhi Il - புத்தி கெட்டவர்களாயுமிருக்கிற நீசர் அவர், Neesar Avar - அற்ப மனிதர்கள் சென்று அடையாதவனுக்கு இடம், Sendru Adaiyadaavanukku Idam - சென்று கிட்ட முடியாதவனான எம்பெருமானுக்கு இடமானதும் நாள் மலர்மேல், Naal Malarmel - அப்போதலர்ந்த பூவின் மேலே (படிந்து) வாசம் அணி வண்டு, Vaasam Ani Vandu - பரிமளத்தை ஏற்றுக் கொண்ட வண்டுகள் அறை, Arai - ரீங்காரம் செய்யப்பெற்ற பை புறவில், Pai Puravil - பரந்த சோலைகளை யுடையதுமான மா மலை ஆவது நீர்மலை, Maa Malai Aavadhu Neermalai - சிறந்த மலையாகிய திருநீர்மலையாம். |
| 1087 | பெரிய திருமொழி || (2-4–அன்றாயர்) (திருநீர்மலை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஆஸ்ரயண காலத்திலேயே கர்மங்கள் அடைய விட்டோடிப் போம் – அதுக்கு மேலே பிராப்தியும் வேண்டி இருக்கில் அதுவும் அவர்க்கு சுலபமாம் – அன்றிக்கே-பூமிக்கு எல்லாம் தாங்களே நிர்வாஹகராய் ஐஸ்வர்யத்தை அனுபவித்து பின்னையும் திருவடிகளிலே கூடப் பெறுவர்–என்கிறார் பத்தாம் பாசுரத்தில்) 10 | நெடுமாலவன் மேவிய நீர்மலைமேல் நிலவும்புகழ் மங்கையர் கோன்,அமரில்
கடமாகளி யானைவல்லான் கலியன் ஒலிசெய்தமிழ் மாலைவல் லார்க்கு,
உடனே விடுமால்வினை வேண்டிடில் மேலுலகும் எளிதாயிடு மன்றியி லங்கொலிசேர்,
கொடுமாகடல் வையக மாண்டுமதிக் குடைமன்னவ ராயடி கூடுவரே. –2-4-10 | பதவுரை Show / Hideநெடு மால் அவன் மேவிய, Nedu Maal Aavan Meviyai - ஸர்வேச்வரன் நித்யவாஸம் செய்தருளப்பெற்ற (- (ஆல்-அசை.) (பின்பு)) நீர்மலை மேல், Neermalai Mel - திருநீர்மலை விஷயமாக, நிலவும் புகழ், Nilavum Pugazh - நித்யமான புகழையடையரும் மங்கையர்கோன், Mangaiyarkon - திருமங்கைநாட்டி லுள்ளார்க்குத் தலைவரும் அமரில், Amaril - போர்க்களத்திலே கடம் மா களி யானை வல்லான், Kadham Maa Kali Yaanai Vallaaan - மதத்தாலே மிகவும் களித்த யானையை நடத்தவல்லவருமான கலியன், Kaliyan - திருமங்கையாழ்வார் ஒலிசெய், Olisei - அருளிச்செய்த தமிழ் மாலை, Tamizh Maalai - இத்தமிழ்த்தொடையை வல்லார்க்கு, Vallarkku - ஓதவல்லவர்களுக்கு வினை, Vinai - (உள்ள) பாவங்கள் உடனே, Udane - அப்போதே விடும், Vidum - அகன்றொழியும்; வேண்டிடில், Vendidil - அபேக்ஷை யுண்டாகில் மேல் உலகும், Mel Ulakum - சுவர்க்கம் முதலிய மேலுலகங்களின் அநுபவமும் எளிது ஆயிடும், Ezhithu Aayidum - ஸூலபமாகும்; அன்றி, Andri - அதுவுமல்லாமல், இலங்கு ஒலி சேர் கொடு மா கடல் வையகம், Ilangu Oli Ser Kodu Maa Kadal Vaiyagam - விளங்காநின்ற கோஷத்தையுடைய வளைந்த பெரிய கடலால் சூழப்பட்ட பூமியை மதி குடை மன்னவர் ஆய் ஆண்டு, Mathi Kudai Mannavar Aay Aandu - சந்திரனை யொத்த வெண் கொற்றக்குடையை யுடைய ராஜாக்களாய் அரசாண்டு அடி கூடுவர், Adi Kooduvar - அவனது திருவடிகளைக் கிட்டப் பெறுவர்கள். |