திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3-3 வாட மருதிடை (10 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1168பெரிய திருமொழி || (3-3–வாட மருதிடை) (தில்லைத் திருச்சித்ரகூடம் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இடையர் உடைய பசு நிரைக்கு அன்று இடர் தீர்க்கைக்காக இந்த்ரன் பிரேரித்த புஷ்கலா வர்த்தகாதி மேகங்கள் எல்லாம் கூடி வர்ஷித்த பெரு மழையைக் காத்த மநோஹாரி சேஷ்டிதத்தை உடையவன் என்று எல்லாரும் சொல்ல வருகிறவன்-ஸ்ரீ தில்லைச் சித்திரகூடத்து உள்ளானே) 1
வாட மருதிடை போகி மல்லரைக் கொன்று ஒக்கலித்திட்டு ஆடல் நன் மா வுடைத்து ஆயர் ஆநிரைக்கு அன்று இடர் தீர்ப்பான் கூடிய மா மழை காத்த கூத்தன் என வருகின்றான் சேடுயர் பூம் பொழில் தில்லைச் சித்திரகூடத்து உள்ளானே –3-3-1
பதவுரை Show / Hide
மருது இடை வாட போகி, Maruthu Idai Vaada Pogi - இரட்டை மருதமரங்களின் நடுவே அவை பக்கமடையும் படி தவழ்ந்து சென்றவனாயும்,
மல்லரை கொன்று, Mallarai Konru - மல்லர்ளைக் கொன்றவனாயும்,
ஒக்கலித்திட்டு ஆடல் நல் மா உடைத்து, Okkalithittu Aadal Nal Maa Udaittu - நடைபழகி ஆடிக்கொண்டு வந்த கொடிய (அசுரக்) குதிரையைக் கொன்றவனாயும்,
அன்று ஆயர்ஆநிரைக்கு இடர் தீர்ப்பான், Andru Aayaraanairaikku Idar Theerppaan - முன்பொரு காலத்தில் இடையர்கட்கும் பசுக்கூட்டங்கட்கும் நேர்ந்த துன்பத்தைத் தீர்ப்பதற்காக
கூடிய மா மழை காத்த, Koodiya Maa Mazhai Kaatha - திரண்ட பெருமழையைத் தடுத்து ரக்ஷித்தவனாயுமிருக்கிற
கூந்தன் என, Koondhan Ena - கூத்துக்களாடின கோபால க்ருஷ்ணனென்று சொல்லும்படியாக
வருகின்றாள், Varugindraal - வருமவள்
சேடு உயர்பூ பொழில் தில்லை சித்திரகூடத்த உள்ளான, Sedu Uyarpo Pozhil Thillai Chithirakoodath Ullaana - இளமை தங்கிய ஓங்கின பூஞ்சோலைகளையுடைய தில்லைத் திருச்சித்திர கூடத்திலுள்ளான்.
1169பெரிய திருமொழி || (3-3–வாட மருதிடை) (தில்லைத் திருச்சித்ரகூடம் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இவன் கேவலம் பிள்ளை அல்லன்-ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கு வல்லபன் ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு நாயகன் என்று நாட்டார் உடைய இந்திரியங்களைப் பிணைக்கும் வடிவை உடைய இடைப் பெண்கள் பாடி செவ்வைப் பூவைத் தூவ வருமவன்) 2
பேய் மகள் கொங்கை நஞ்சுண்ட பிள்ளை பரிசு இது வென்றால் மா நிலமா மகள் மாதர் கேள்வன் இவன் என்றும் வண்டுண் பூ மகள் நாயகன் என்றும் புலன் கெழு கோவியர் பாடி தே மலர் தூவ வருவான் சித்திர கூடத்து உள்ளானே –3-3-2
பதவுரை Show / Hide
பேய் மகள் கொங்கை நஞ்சு உண்ட இது, Pei Magal Kongai Nanju Unda Ithu - “பேய்ச்சியான பூதனையினுடைய முலையில் (தடவியிந்த) விஷத்தை (அம்ருதமாக)
பிள்ளை பரிசு என்றால் புலன் கெழு கோவியர், Pillai Parisu Endraal Pulankezhu Koviyaar - இச் சிறுபிள்ளளையின் செயல்” என்று சொல்லிக் கேட்டதும
புலன் கெழு கோவியர், Pulankezhu Koviyaar - அழகிய இடைப் பெண்களானவர்கள்,
இவன், Ivan - “இக் கண்ணபிரான்”
மா நிலமாமகள் மாதர் கேள்வன் என்றும், Maa Nilamaamagal Maathar Kaelvan Endrum - பூமிப்பிராட்டிக்கு வல்லபன்” என்றும்
வண்டு உண் பூ மகள் நாயகன் என்றும் பாடி, Vandu Un Poo Magal Nayagan Endrum Paadi - “வண்டுகள் மதுவுண்கிற தாமரைப்பூவிற் பிறந்த பெரிய பிராட்டியார்க்கு நாதன்” என்றும் சொல்லிப் பாடிக்கொண்டு
தே(ன்) மலர்தாவ, Theen Malartava - செவ்விகுன்றாத புஷ்பங்களைப் பணிமாற
வருவான், Varuvaan - (திருவாய்ப் பாடித் திருவீதிகளிலே) ஸஞ்சரித்த பெருமான்
சித்திர கூடத்து உள்ளான், Siththira Koodathu Ullaan - (இப்போது) சித்திரகூடத்திலே ஸேவை ஸாதிக்கின்றான்.
1170பெரிய திருமொழி || (3-3–வாட மருதிடை) (தில்லைத் திருச்சித்ரகூடம் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இவன் வெண்ணெய் உண்டான் என்று இடைப் பெண்கள் கூடி ஏச எட்டுத் திக்கில் உள்ளாறும் திருவடிகளிலே வணங்கும்படியாக நிர்விகாரமான மருதின் உள்ளிட்டுப் போய் இடையர்களும் தேவர்களுமாய் ஆயிரம் திரு நாமங்களை சொல்லிக் கொண்டு தன்னுடைய ஆண் பிள்ளைத் தனத்தை பண்டு பாட வருவான்) 3
பண்டு இவன் வெண்ணெய் யுண்டான் என்று ஆய்ச்சியர் கூடி இழிப்ப எண் திசையோரும் வணங்க இணை மருதூடு நடந்திட்டு அண்டரும் வானத்தவரும் ஆயிர நாமங்களோடு திண் திறல் பாட வருவான் சித்திர கூடத்து உள்ளானே –3-3-3
பதவுரை Show / Hide
பண்டு, Pandhu - முன்பொருகாலத்தில் (- (சித்திரகூடத்து உள்ளான்-.))
இவள் வெண்ணெய் உண்டான் என்று ஆய்ச்சியர்கூடி இழிப்ப, Ival Vennai Undaan Endru Aaychiyar Koodi Izhippa - “இச்சிறுபிள்ளை வெண்ணெயைத் (திருடித்) தின்றான்” என்று சொல்லி இடைச்சிகள் கும்பல் சேர்ந்து இழிவாகப் பேசப் பெற்றவனர்யும்,
எண் திசையோரும் வணங்க, En Thisaiyorum Vananga - எட்டுத்திக்கிலுள்ளாரும் வணங்கும்படியாக
இணை மருதூடு நடந்திட்டு, Inai Marudhoodu Nadandittu - இரட்டை மருதமரத்தினிடையே நடை பயின்றவனாயும்
அண்டரும் வானத்தவரும் ஆயிரம் நாமங்களோடு, Andarum Vaanaththavarum Aayiram Naamangalodu - இடையர்களும் தேவர்களும் ஸஹஸ்ரநாமங்களைச் சொல்லி
திண் திறல் பாட வருவான், Thin Thiral Paada Varuvaan - த்ருடமான ஆண் பிள்ளைத் தனத் தைப் பாடும்படி (திருவாய்ப்பாடியில்)  ஸஞ்சரித்தவனாயுமுள்ள பெருமான்
1171பெரிய திருமொழி || (3-3–வாட மருதிடை) (தில்லைத் திருச்சித்ரகூடம் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வளையாலே அலங்க்ருதமான கையையும் பீதைகளாய் பார்க்கும் நோக்கையும் உடைய இடைப் பெண்கள் அஞ்சிக் கூப்பிட கட்டவிழ்ந்து அலர்ந்த தாமரைப் பொய்கையினுடைய ஸ்ரமஹரமான கரையிலே சென்று இடையர் காண முளைத்த எயிற்றை உடைய பாம்பின் உடைய உச்சியிலே புக்கு நின்று அது வாடும்படி கூட விளையாடி அமர் செய்து வருமவன்-ஸ்ரீ சித்திர கூடததுள்ளானே) 4
வளைக்கை நெடும் கண் மடவார் ஆய்ச்சியர் அஞ்சி அழைப்ப தளைத்தவிழ் தாமரைப் பொய்கைத் தண் தடம் புக்கு அண்டர் காண முளைத்த எயிற்று அழல் நாகத்து உச்சியில் நின்று அது வாட திளைத்தமர் செய்து வருவான் சித்திர கூடததுள்ளானே –3-3-4
பதவுரை Show / Hide
வளை கை நெடுங் கண் மடவார்ஆய்ச்சியர், Valai Kai Nedung Kan Madavaar Aaychiyar - வளையல்களணிந்த கைகளையும் நீண்ட கண்களையுமுடைய இடைப்பெண்கள் (- (சித்திரகூடத்து உள்ளான்-.))
அஞ்சி, Anji - பயப்பட்டு
அழைப்ப, Azaippa - (‘காளிங்க மர்த்தனமாகிற இந்த பயங்கரமான செய்தியை வந்து பாருங்கள்’ என்று) அழைக்க,
அண்டர், Andar - இடையர்கள்
தளைத்து அவிழ் தாமரை பொய்கை தண் தடம்புக்கு, Thalaiththu Avizh Thamarai Poigai Than Thadampukku - மலர்ந்த தாமரைப் பூக்களையுடைய வொரு பொய்கையின் குளிர்ந்த கரையிலே சென்று
காண, Kaan - பார்த்தவளவிலே
முளைத்த எயிறு அழல் நாகத்து உச்சியில், Mulaiththa Eiyiru Azhala Naagaththu Uchiiyil - முளைத்த பற்களையுடையதும் விஷாக்நியை உமிழ்வதுமான காளியநாகத்தினுச்சியிலே
நின்று, Nindru - நின்று கொண்டு
அது வாட திளைத்து, Adhu Vaada Thilaiththu - அந்த நாகம் இளைக்கும்படி நர்த்தனஞ் செய்து
அமர் செய்து, Amar Seidhu - உல்லாஸமாக வீதியார எழுந்தருளின பெருமான்
1172பெரிய திருமொழி || (3-3–வாட மருதிடை) (தில்லைத் திருச்சித்ரகூடம் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ நப்பின்னை பிராட்டி யிடையாட்டத்துக்காக திரண்டு பெருமையை உடைய ருஷபங்களைக் கொன்று தன் பருவத்தில் பிள்ளைகளோடே தெருவிலே கூடி விளையாடி வருமவன் ஸ்ரீ சித்திர கூடததுள்ளானே) 5
பருவக் கரு முகில் ஒத்து முத்துடை மா கடல் ஒத்து அருவித் திரள திகழ்கின்ற ஆயிரம் பொன் மலை யொத்து உருவக் கரும் குழல் ஆய்ச்சி திறத்து இனமால் விடை செற்று தெருவில் திளைத்து வருவான் சித்திர கூடத்துள்ளானே –3-3-5
பதவுரை Show / Hide
பருவம் கருமுகில் ஒத்து, Paruvam Karumugil Othu - கார்காலத்திலுண்டான கான மேகம்  போன்றவனாயும் (- (சித்திரகூடத்து உள்ளான்-.))
முத்து உடை மாகடல் ஒத்து, Muthu Udai Magadal Othu - முத்துக்களையுடைய பெரிய கடல் போன்றவனாயும்
அருவி திரள் திகழ்கின்ற ஆயிரம் பொன் மலை ஒத்து, Aruvi Thiral Thigazhkindra Aayiram Pon Malai Othu - அருவிகளின் கூட்டங்களால் விளங்குகின்ற ஆயிரம் பொன் மலைகள்   போன்றவனாயும்,
உருவம் கருகுழல் ஆய்ச்சி திறந்து, Uruvam Karuguzhal Aaychchi Thirandhu - அழகிய கருத்த கூந்தலையுடைய நப்பின்னைப் பிராட்டிக்காக
மால் விடை இனம் செற்று, Maal Vidai Inam Settru - பெரிய ரிஷபங்களின் திரளைத் தொலைத்தவனாயும்
தெருவில் திளைத்து வருவான், Theruvil Thilaithu Varuvaan - திருவாய்ப்பாடியின் வீதியிலே கூத்தாடிக்கொண்டு வருமவன்
1173பெரிய திருமொழி || (3-3–வாட மருதிடை) (தில்லைத் திருச்சித்ரகூடம் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இவன் பண்டு எய்ய இலங்கை அழிந்தது-பசுக்களும் இடையரும் மலங்கும்படியாக வருகிற மழையைக் காக்கைக்காக அவை உய்யும்படிக்கு ஈடாக பெரிய மலையை எடுத்துக் காத்தான் என்று ஏத்தி பூமியில் உள்ளார் எல்லாரும் ஆஸ்ரயிக்க தேவா விஷ்டமான மலை போலே ஸ்ரீ பெரிய திருவடி மேலே ஏறி வருமவன்) 6
எய்யச் சிதைந்தது இலங்கை மலங்க வரு மழை காப்பான் உய்யப் பரு வரை தாங்கி ஆநிரை காத்தான் என்று ஏத்தி வையத் தெவரும் வணங்க அணங்கு எழு மா மலை போலே தெய்வப் புள் ஏறி வருவான் சித்திர கூடத்துள்ளானே –3-3-6
பதவுரை Show / Hide
எய்ய இலங்கை சிதைந்தது, Eyy Ilangai Sithaindhadhu - (அதுவுந் தவிர) “ஒரு அம்பை தொடுத்து விட்ட மாத்திரத்திலே லங்காபுரியானது அழிந்தொழிந்தது (- (சித்திரகூடத்து உள்ளான்-;))
ஆநிரை மலங்க வரும் மழை காப்பான், Aanirai Malanga Varum Mazhai Kaappaan - பசுக்களின் கூட்டம் துன்பமடையும்படியாக  வந்து ஏழுநாள் ஓயாமல் பெய்த மழையை தடுப்பதற்காகவும்
உய்ய, Uyya - (ஆநிரைகள்) பிழைப்பதற்காகவும்
பருவரை தாங்கி காத்தான், Paruvarai Thaangi Kaaththaan - பெரிய கோவர்த்தன மலையைக் (குடையாக) எடுத்துப் பிடித்து எல்லாரையும் காப்பாற்றினான்.
என்று வையத்து எவரும் ஏத்தி வணங்க, Endru Vaiyaththu Evarum Aethi Vananga - என்று சொல்லி பூமியிலுள்ளாரெல்லாரும் துதித்துத் தொழும் படியாக
அணங்கு எழுமா மலைபோலே தெய்வம் புள் ஏறி வருவான், Anangu Ezhumaa Malaipolae Deivam Pul Aeri Varuvaan - தெய்வாவேசங் கொண்ட ஒரு பெரிய மலைபோலே யிருக்கிற திவ்ய பக்ஷியாகியகருடன் மீதேறிக் கொண்டு எழுந்தருளும் பெருமான்
1174பெரிய திருமொழி || (3-3–வாட மருதிடை) (தில்லைத் திருச்சித்ரகூடம் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தர்சநீயங்களாய் காவிமலர் போலே கறுத்து நெடிய கண்ணை உடைய ஸ்திரீகள் கை தொழும்படி வீதியிலே வருமவன் தேவர்கள் ஆஸ்ரயிக்கும் ஸ்ரீ தில்லைச் சித்திர கூடத்துள்ளானே) 7
ஆவர் இவை செய்தறியார் அஞ்சன மா மலை போலே மேவு சினத்து அடல் வேழம் வீழ முனிந்து அழகாய காவி மலர் நெடும் கண்ணார் கை தொழ வீதி வருவான் தேவர் வணங்கு தண் தில்லைத் சித்திர கூடத்துள்ளானே –3-3-7
பதவுரை Show / Hide
மா அஞ்சனம் மலைபோலே, Maa Anjanam Malaipolae - ” பெரிய கரிய மலை போன்றதும்
மேவு சினம், Mevu Sinam - மிகுதியாகக் கொண்ட கோபத்தையுடையதும்
முனிந்து இவை செய்வதறிவார் ஆவர், Muninthu Ivai Seivadharithaar Aavar - சீறியருளினது முதலிய இப்படிப்பட்ட  அருந்தொழில்களைச்  செய்வதறிவார்(இக்கண்ணபிரான் தவிர) வேறு யாருமில்லை ”( என்று சொல்லி )
அழகாய காவி மலர்நெடு கண்ணார் கைதொழ, Azhagaaya Kaavi Malarnedu Kannaar Kaithozh - அழகிய நீலோற்பலம் போன்ற நீண்ட கண்களையுடைய மாதர்கள் கைகூப்பித் தொழும்படியாக.
அடல், Adal - மிக்க வலிமையுடையதுமான
வேழம், Vezham - (குவலயாபீடமென்னும் கம்ஸனது) யானை
வீழ, Veel - மாண்டொழியும் படி
வீதி வருவான், Veethi Varuvaan - (வடமதுரைத்) தெருவிலே கம்பீரமாக எழுந்தருளினவன்
தேவர் வணங்கு, Thevar Vanangu - நித்யஸூரிகளும் வந்து வணங்கப்பெற்ற
தண், Than - அழகிய
தில்லை சித்திர கூடத்து உள்ளான், Thillai Chithira Koodathu Ullan - தில்லைத்திருச் சித்திரக்கூடத்தில் ஸேவை  ஸாதிக்கின்றான்
1175பெரிய திருமொழி || (3-3–வாட மருதிடை) (தில்லைத் திருச்சித்ரகூடம் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பண்டு ஒருகால் ஹிரண்யனை வெருவும்படி சீறி அவ்விடத்திலேயே அவனுடைய உடம்பை அளைந்து ஆயிரம் தோள் தோற்ற வ்யாபாரித்த உசிதமாக எரி கான்ற பசுமையை உடைய கண்ணும் நீண்ட எயிறும் பெரிய வாயும் ஆன ஸ்ரீ சிம்ஹ ரூபத்தை உடையவனாய் வருமவன்) 8
பொங்கி அமரில் ஒருகால் பொன் பெயரோனை வெருவ அங்கு அவனாகம் அளைந்திட்டு ஆயிரம் தோள் எழுந்தாட பைம் கண் இரண்டு எரி கான்ற நீண்ட எயிற்றோடு பேழ் வாய் சிங்க வுருவின் வருவான் சித்திர கூடத்துள்ளானே –3-3-8
பதவுரை Show / Hide
ஒருகால் அமரில் பொன் பெயரோன் வெருவ பொங்கி, Orukal Amarl Pon Peyron Veruva Pongi - முன்பொரு காலத்தில் போர்க்களத்தில் ஹிரண்யா ஸூரன் பயப்படும்படியாகக் கிளர்ந்து
அங்கு அவன் ஆகம் அளைத்திட்டு, Angu Avan Aagam Alaitthittu - அவ்விடத்திலே அவ்விரணியனது உடம்பிலே கை வைத்து
ஆயிரம் தோள் எழுந்தாட, Aayiram Thol Ezhundhaada - (அவனைச் சித்திரவதம் பண்ண வேணுமென்கிற பதற்றத்தாலே ) கைகள்  பலமுகமாகப் பெருக்கமடைய.
எரிகான்ற இரண்டு பைங்கண், Erikaanra Irandu Paingkan - நெருப்பை உமிழ்கின்ற பசுத்த இரண்டு திருக்கண்களையும்
நீண்ட எயிற்றொடு பேழ்வாய் சிங்கம் உருவில் வருவான், Neenda Eiyirrodhu Pezhvai Singam Uruvil Varuvaan - நீண்ட கோரப் பற்களையும்  பெரிய வாயையுமுடைய நரஸிம்ஹ ரூபியாய்க் காட்சி தந்த பெருமான் வருவான்
1176பெரிய திருமொழி || (3-3–வாட மருதிடை) (தில்லைத் திருச்சித்ரகூடம் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (காளமேகம் போலே இருக்கும் வடிவையும் கையில் திரு ஆழியையும் ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தையும் உடையனாய் பெரிய மிடுக்கை உடைய ப்ரஹ்மாதிகள் சூழ்ந்து சேவிக்க சப்த லோகத்தில் உள்ளாறும் திருவடிகளில் விழுந்து ஏத்த ஸ்ரீ பிராட்டிமார் மூவரோடும் கூட வருமவன்) 9
கருமுகில் போல்வது ஓர் மேனி கையன் ஆழியும் சங்கும் பெரு விறல் வானவர் சூழ ஏழுலகும் தொழுது ஏத்த ஒரு மகள் ஆயர் மடந்தை ஒருத்தி நிலமகள் மற்றைத் திருமகளோடும் வருவான் சித்திர கூடத்துள்ளானே –3-3-9
பதவுரை Show / Hide
கருமுகில் போல்வது ஓர்மேனி, Karumugil Polvathu Ormaeni - காளமேகம் போன்று விலக்ஷணமான திருமேனியோடும்
கையன ஆழியும் சங்கும், Kaiyan Aazhiyum Sangum - திருக்கைகளிலுள்ள திருவாழி திருச்சங்குகளோடுங் கூடி
பெருவிறல் வானவர் சூழ, Peruviral Vaanavar Soozha - மிக்க சக்தியையுடைய தேவர்கள் சுற்றிலும் சூழ்ந்து ஸேவிக்கவும்
ஏழ் உலகும் தொழுது ஏத்த, Ezhu Ulagum Thozhudhu Aetha - உலகத்திலுள்ளா ரெல்லாரும் வணங்கித் துதிக்கவும் பெற்று,
ஒருமகள் ஆயர்மடந்தை, Orumagal Aayarmadanthai - விலக்ஷணையான நீளாதேவியோடும்
ஒருத்தி நிலமகள், Oruththi Nilamagal - ஒப்பற்ற பூமிப்பிராட்டியோடும்
மற்றை திருமகளோடும், Mattrai Thirumagalodum - இன்னும் ஸ்ரீதேவியோடுங்கூடி
வருவான், Varuvaan - வருமவன்
1177பெரிய திருமொழி || (3-3–வாட மருதிடை) (தில்லைத் திருச்சித்ரகூடம் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சத்ருக்கள் சரீரமே தனக்கு உறையாக உடைய வேலை உடைய ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த அழகிய தமிழான இப்பத்தும் அப்யசித்தவர்கள் பக்கலில் அவர்கள் பண்ணின பாபம் பல அனுபவத்துக்கு சாரா) 10
தேனமர் பூம் பொழில் தில்லைச் சித்திர கூடம் அமர்ந்த வானவர் தங்கள் பிரானை மங்கையர் கோன் மருவார் ஊனமர் வேல் கலி கன்றி ஒண் தமிழ் ஒன்பதோடு ஒன்றும் தானிவை கற்று வல்லார் மேல் சாரா தீ வினை தானே –3-3-10
பதவுரை Show / Hide
தேன் அமர் பூ பொழில் தில்லை சித்திரகூடம் அமர்ந்த, Then Amar Poo Pozhil Thillai Chithirakoodam Amarntha - வண்டுகள் மொய்த்து அழகிய சோலைகளையுடைய தில்லைத்திருச் சித்திரகூடத்திலே நித்யவாஸஞ் செய்தருள்கிற
வானவர் தங்கள் பிரானை, Vaanavar Thangal Piraanai - தேவாதிதேவன் விஷயமாக,
மங்கையர்கோன், Mangaiyarkon - திருமங்கையிலுள்ளார்க்குத் தலைவரும்
மருவார்ஊன் அமர்வேல், Maruvaroon Amarveel - எதிரிகளின் சரிரத்திலே பொருந்தித் தைக்கும் வேற்படையையுடைய வருமான
கலிகன்றி, Kalikanri - திருமங்கையாழ்வார்(அருளிச் செய்த)
ஒண் தமிழ் இவை ஒன்பதோடு ஒன்றும், On Tamil Ivai Onpathodu Ondrum - அழகிய தமிழினாலாகிய இப்பத்துப் பாசுரங்களையும்
கற்று வல்லார்மேல், Kattru Vallarmeel - ஓதித் தேறினவர்களிடத்தில்
தீவினை சாரா, Theevinai Saara - பாவங்கள் கிட்டமாட்டா