திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1258 | பெரிய திருமொழி || (4-2–கம்பாமா) (திருவண் புருடோத்தம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ப்ரஹ்மாஸ்த்ராதிகளுக்கும் கேளாத படி வர பலத்தாலே பூண் கட்டி இருக்கிற தலைகளை ஷத்ரியத்துவத்துக்கு ஏகாந்தமான அம்பாலே அழியச் செய்து ராஷசர் உடைய ஐஸ்வர்யத்தை நம்முடையான் ஒருவன் கடவனாகப் பெற்றோம் இறே என்று அந்த ஐஸ்வர்யத்தை அவன் தம்பியான ஸ்ரீ விபீஷணனுக்கு கொடுத்து அருளினவன் வந்து நித்ய வாசம் பண்ணுகிற தேசம்) 1 | கம்பா மா கடல் அடைத்து இலங்கைக்கு மன் கதிர் முடி யவை பத்தும்
அம்பினால் அறுத்து அரசு அவன் தம்பிக்கு அளித்தவன் உறை கோயில்
செம்பலா நிரை செண்பகம் மாதவி சூதகம் வாழைகள் சூழ்
வம்புலாங்கமுகு ஓங்கிய நாங்கூர் வண் புருடோத்தமே –4-2-1 | பதவுரை Show / Hideகம்பம் மா கடல் அடைத்து, Kambam Maa Kadal Adaiththu - (கண்டபோதே) நடுக்கத்தை விளைப்பதான பெரிய கடலிலே ஸேதுகட்டி இலங்கைக்கு மன் கதிர் முடி அவை பத்தும், Ilankaiyukku Man Kathir Mudi Avai Padhum - இலங்கைக்கு அதிபதியான இராவணனுடைய ஒளிவிடுகின்ற தலைகள் பத்தையும் அம்பினால் அறுத்து, Ambinaal Aruththu - பாணங்களினால் அறுத்து அவன் தம்பிக்கு அரசு அளித்தவன், Avan Thambikku Arasu Aliththavan - அவ்விராவணன் தம்பியான விபீஷணாழ்வானுக்கு இராஜ்யமளித்த இராமபிரான் உறை கோயில், Urai Koyil - எழுந்தருளியிருக்குமிடம் எதுவென்றால், செம் பலா நிரை செண்பகம் மாதவி சூதகம் வாழைகள் சூழ், Sem Palaa Nirai Senbagam Maadhavi Soothagam Vaalaihal Soozh - பலாமரங்களின் செல்விய வரிசைகளும் செண்பக மரங்களும் குருக்கத்திச் செடிகளும் மாமரங்களும் வாழை மரங்களும் (ஆகிய இவற்றால்) சூழப்பட்டு, வம்பு உலாம் கமுகு ஓங்கிய, Vambu Ulaam Kamuku Oongiya - பரிமளம் வீசுகின்ற பாக்கு மரங்கள் ஓங்கி வளரப்பெற்ற நாங்கூர், Naangoor - திருநாங்கூரில் வண்புரு டோத்தமம், Vanpuru Doththamam - வண்புருஷோத்தம மென்னும் திவ்யதேசமாம். |
| 1259 | பெரிய திருமொழி || (4-2–கம்பாமா) (திருவண் புருடோத்தம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பூத்த கடம்பின் மேலே ஏறி காளியன் உடைய பணங்கள் ஆகிற ரெங்கத்தின் மேலே அவன் தப்பாதபடியாக நினைவு இன்றிக்கே இருக்கச் செய்தே வந்து கடுகப் பாய்ந்து அந்த நிருத்தத்திலே-வன்மைக் கூத்து என்றும்-மென்மைக் கூத்து என்றும் சில உண்டு -அவற்றை அடையப் பண்ணின அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவன் வந்து வர்த்திக்கிற கோயில்) 2 | பல்லவம் திகழ் பூங்கடம்பு ஏறி அக்காளியன் பணம் அரங்கில்
ஒல்லை வந்து உறப் பாய்ந்து அரு நடம் செய்த உம்பர்கோன் உறை கோயில்
நல்ல வெந்தழல் மூன்று நால் வேதம் ஐ வேள்வியோடு ஆறங்கம்
வல்ல வந்தணர் மல்கிய நாங்கூர் வண் புருடோத்தமமே——— –4-2-2 | பதவுரை Show / Hideபல்லவம் திகழ் பூ கடம்பு ஏறி, Pallavam Thigazh Poo Kadambu Aeri - தளிர்கள் விளங்காநின்ற பூத்த கடம்ப மரத்தின்மேல் ஏறி (- (வண் புருடோத்தமம்)) அ காளியன் பணம் அரங்கில், A Kaaliyan Panam Arangil - அப்படிப்பட்ட (கொடியனான) காளியமுடைய படங்களாகிற நாட்ய ஸ்தலத்தில் ஒல்லை வந்து உறபாய்ந்து, Ollai Vandhu Urupaayndhu - திடீரென்று வந்து சிக்கனக் குதித்து அரு நடம் செய்த, Aru Nadam Seidha - அருமையான கூத்தாட்டம் செய்த உம்பர் கோன், Umbar Koon - தேவாதி தேவன் உறைகோயில், Uraikoyil - வாழுமிடம்; வெம் தழல் மூன்று, Vem Thazhal Moondru - த்ரேதாக்நிகளையும் நால் வேதம், Naal Vedham - நான்கு வேதங்களையும் ஐ வேள்வியோடு, Ai Velviyodu - பஞ்ச மஹாயஜ்ஞங்களையும் ஆறு அங்கம், Aaru Angam - வேதாங்கங்கள் ஆறையும் வல்ல, Valla - அதிகரித்து ஸமர்த்தர்களான நல்ல அந்தணர், Nalla Andhanar - நல்ல பிராமணர்கள் மல்கிய, Malkiya - நிறைந்திருக்கப்பெற்ற நாங்கூர், Naangoor - திருநாங்கூரில் |
| 1260 | பெரிய திருமொழி || (4-2–கம்பாமா) (திருவண் புருடோத்தம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவற்றின் உடைய ரஷணமும் தனக்கே பரம் ஆகையாலே அவற்றை மேய்த்து அவற்றின் உடைய ஆபத்தை போக்கி ரஷிக்கிறவன்-இன்னமும் இப்படி ரஷிக்கைக்கு பாங்கான தேசம் என்று அவன் உகந்து நித்ய வாசம் பண்ணுகிற தேசம்) 3 | அண்டரானவர் வானவர் கோனுக்கு என்று அமைத்த சோறது எல்லாம்
உண்டு கோனிரை மேய்த்தவை காத்தவன் உகந்து இனிது உறை கோயில்
கொண்டலார் முழவில் குளிர் வார் பொழில் குல மயில் நடமாட
வண்டு தான் இசை பாடிடு நாங்கூர் வண் புருடோத்தமமே –4-2-3 | பதவுரை Show / Hideஅண்டர் ஆனவர் வானவர் கோனுக்கு என்று அமைத்த சோறு அது எல்லாம், Andar Aanavar Vaanavar Konukku Endru Amaiththa Sooru Adhu Ellam - இடையர்கள் தேவேந்திரனுக்குப் பலியிட வேண்டுமென்று சமைத்த சோற்றை முழுவதும் (- (உகந்து இனிது உறை கோயில்;) (வண்புருடோத்தமம்)) உண்டு, Undu - அமுது செய்தவனாயும் கோ நிரை அவை மேய்த்து காத்தவன், Ko Nirai Avai Meyththu Kaaththavan - பசுக்கூட்டங்களை மேய்த்து ரக்ஷித்தவனாயுமுள்ள பெருமான் குளிர் வார் பொழில், Kulir Vaar Pozhil - குளிர்ந்து பரந்த சோலைகளிலே, கொண்டல் ஆர் முழவில், Kondal Aar Muzhavil - மேகங்களினுடைய மிக்க கோஷம்உண்டாகும் போது குலம் மயில் நடம் ஆட, Kulam Mayil Nadam Aada - கூட்டங் கூட்டமான மயில்கள் கூத்தாடப் பெற்றதும், வண்டு இசைபாடிடு, Vandu Isaipaadidu - வண்டுகள் (மயில்களின் கூத்தாட்டத்திற்குத் தகுதியாக) இசைபாடப் பெற்றதுமான நாங்கூர், Naangoor - திருநாங்கூரில் |
| 1261 | பெரிய திருமொழி || (4-2–கம்பாமா) (திருவண் புருடோத்தம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (உள்ளே போய் புக்கு கம்சன் தலை மயிரைப் பிடித்து முகம் கீழ் பட வலித்து திருவடிகளாலே யுதைத்து முடித்தவன் இன்னும் இப்படிப் பட்ட விரோதி அம்சத்தை போக்குகைக்காக நித்ய வாசம் பண்ணுகிற தேசம்) 4 | பருங்கை யானையின் கொம்பினைப் பறித்து அதன் பாகனைச் சாடி புக்கு
ஒருங்க மல்லரைக் கொன்று பின் கஞ்சனை உதைத்தவன் உறை கோயில்
கரும்பினூடு உயர் சாலிகள் விளை தரு கழனியில் மலி வாவி
மருங்கு எலாம் பொழில் ஓங்கிய நாங்கூர் வண் புருடோத்தமமே –4-2-4 | பதவுரை Show / Hideபரு கை யானையின் கொம்பினை பறித்து, Paru Kai Yaanainin Kombinai Pariththu - பருத்த துதிக்கையையுடைய (குவலயா பீடமென்னும்) யானையினது தந்தங்களை பிடுங்கிக் கொன்று, (- (வண்புருடோத்தமம்)) அதன் பாகனை சாடி புக்கு, Adhan Paaganai Saadi Pukku - அந்த யானையின் பாகனையும் உயிர் தொலைத்திட்டு உள்ளே நுழைந்து மல்லரை ஒருங்க கொன்று, Mallarai Orunga Konru - மல்லர்களை ஒன்றுசேர முடித்திட்டு பின் கஞ்சனை உதைத்தவன், Pin Kanjanai Uthaiththavan - அதற்குப் பிறகு கம்ஸனை முடித்தருளிய கண்ணபிரான் உறை கோயில், Urai Koyil - நித்யவாஸம் பண்ணுமிடம்; கரும்பினூடு உயர் சாலிகள் விளைதரு கழனியில் மலி வாவி, Karumbinoodu Uyar Saaligal Vilaitharu Kazhaniyil Mali Vaavi - கருப்பஞ்சோலைகளின் இடையே ஓங்கி வளரானின்ற செந்நெற் பயிர்கள் விளையப்பெற்ற கழனிகளில் நிறைந்திருக்கிற நடைவாவிகளினுடைய மருங்கு எலாம், Marungu Elam - பக்கங்களிலெல்லாம் பொழில் ஓங்கிய, Pozhil Ongiya - சோலைகள் வளர்ந்திருக்கப் பெற்ற நாங்கூர், Naangoor - திருநாங்கூரில் |
| 1262 | பெரிய திருமொழி || (4-2–கம்பாமா) (திருவண் புருடோத்தம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இதர சமாஸ்ரயணம் பண்ணின பாணன் உடைய ஆயிரம் தோளையும் தரித்தவன் இன்னும் ஆஸ்ரித விரோதிகளை போக்குகைக்கு ஈடாக வந்து வர்த்திக்கிற தேசம்) 5 | சாடு போய் விழத் தாழ் நிமிர்த்து ஈசன் தன் படை யோடும் கிளையோடும்
ஓட வாணனை யாயிரம் தோள்களும் துணித்தவன் உறை கோயில்
ஆடுவான் கொடி யகல் விசும்பு அணைவிப் போய் பகலவன் ஒளி மறைக்கும்
மாட மாளிகை சூழ் தரு திரு நாங்கூர் வண் புருடோத்தமமே –4-2-5 | பதவுரை Show / Hideசாடு கோய் விழ, Saadu Koyi Vizha - (அஸுரனால் ஆவேசிக்கப்பட்ட) சகடமானது விழுந்தொழியும்படி (- (உறை கோயில்;) (வண்புருடோத்தமம்)) தாள் நிமிர்த்து, Thaal Nimirththu - திருவடிகளைத் தூக்கினவனாயும் ஈசன் தன் படையோடும் கிளையோடும் ஓட, Eesan Than Padaiyodum Kilaidodum Oda - ருத்ரன் தனது ஸேனைகயோடும் சுற்றத்தாரோடும் தோற்று ஓடிப்போகும் படியானவளவில் வாணனை, Vaananai - பாணாஸுரனை ஆயிரம் தோள்களும், Aayiram Thoalkalum - ஆயிரந் தோள்கயையும் துணித்தவன், Thuniththavan - அறுத்தொழித்தவனாயுமுள்ள பெருமான் ஆடு வான் கொடி அகல் விசும்பு அணவி போய், Aadu Vaan Kodi Akal Visumbu Anavi Poi - அசையாநின்ற பெரிய த்வஜங்கள் பரந்த ஆகாசத்தைத் தழுவி உயரக்கிளம்பி பகலவன் ஒளி மறைக்கும், Pagalavan Oli Maraikkum - ஸூர்யனுடைய பிரதாபத்தை மறையச்செய்யப்பெற்ற மாடம் மாளிகை சூழ்தரு நாங்கூர், Maadam Maaligai Soozhdharu Naangoor - மாடங்களினாலும் மாளிகைகளினாலும் சூழப்பட்ட திருநாங்கூரில் |
| 1263 | பெரிய திருமொழி || (4-2–கம்பாமா) (திருவண் புருடோத்தம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (மூவடியை நீர் ஏற்று திருக்கையிலே நீர் விழுந்த அநந்தரம் வளர்ந்து அருளுகிற போது ப்ரஹ்ம பதத்து அளவும் சென்று அவன் கையிலே திருவடிகள் இருக்க அவன் புஷ்பாதி உபகரணங்களைக் கொண்டு ஆஸ்ரயிக்கும்படி யாகவும் கங்கை புறப் படும் படியாகவும் திருவடிகளை நிமிர்த்து அருளின ஸ்ரீ சர்வேஸ்வரன் வந்து நித்ய வாசம் பண்ணுகிற தேசம்) 6 | அங்கையால் அடி மூன்று நீர் ஏற்று அயன் அலர் கொடு தொழுது ஏத்த
கங்கை போதரக் கால் நிமிர்த்து அருளிய கண்ணன் வந்து உறை கோயில்
கொங்கை கொங்கு அவை காட்ட வாய் குமுதங்கள் காட்ட மா பதுமங்கள்
மங்கைமார் முகம் காட்டிடு நாங்கூர் வண் புருடோத்தமமே –4-2-6 | பதவுரை Show / Hideமூன்று அடி, Moondru Adi - மூவடி நிலத்துக்காக (- (திரிவிக்கிரமனாக ஓங்கிவளர்ந்த காலத்து) (வந்து உறை கோயில்) (வண்புருடோத்தமம்)) அம் கையால் நீர் ஏற்று, Am Kaiyhaal Neer Aetru - அழகிய திருக்கையினால் உதக தானம் வாங்கி அயன் அலர் கொடு தொழுகு ஏத்த, Ayan Alar Kodu Thozhugu Aettha - பிரமனானவன் புஷ்பங்களை ஸமர்ப்பித்து வணங்கி துதிக்கும்படியாகவும் கங்கை போதா கால் நிமிர்த்தருளிய கண்ணன், Gangai Podha Kaal Nimirththaruliy Kannan - கங்காநதியானது பெருகும் படியாகவும் திருவடியை உயரநிட்டின ஸர்வேச்வரன் கோங்கு அவை, Kongu Avai - கோங்குமரத்தின் அரும்புகளானவை மங்கைமார் கொங்கை காட்ட, Mangaimaar Kongai Kaata - (அவ்வூரிலுள்ள) பெண்களினுடைய தனங்களை பிரகாசிப்பிக்கவும் குமுதங்கள், Kumudhangal - செவ்வாம்பல்களானவை வாய் காட்ட, Vaai Kaata - (அப்பெண்களின்) அதரங்களைப் பிரகாசிப்பிக்கவும் மா பதுமங்கள், Maa Pathumangal - சிறந்த தாமரை மலர்கள் முகம் காட்டிடு, Mugam Kaattidu - (அப்பெண்களின்) முகங்களை பிரகாசிப்பிக்கவும் பெற்ற நாங்கூர், Naangoor - திருநாங்கூரில் |
| 1264 | பெரிய திருமொழி || (4-2–கம்பாமா) (திருவண் புருடோத்தம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவன் முடிந்து போகச் செய்தேயும் சிறுக்கன் பக்கல் உண்டான வாத்சல்யத்தாலே சீற்றம் மாறாதே ருதிர வெள்ளத்தை வெண்ணெய் போலே அளந்த ஸ்ரீ நர சிம்ஹம் எல்லாரும் ஒக்க அஞ்சும் படி வந்து தோற்றின கேசி வாயை கிழித்து தன்னைத் தந்த மகா உபகாரகன் வந்து வர்த்திக்கிற தேசம்) 7 | உளைய ஒண் திறல் பொன் பெயரோன் தனது உரம் பிளந்து உதிரத்தை
யளையும் வெஞ்சினத் தரி பரி கீறிய அப்பன் வந்து உறை கோயில்
இளைய மங்கையர் இணை அடிச் சிலம்பினோடு எழில் கொள் பந்தடிப்போர் கை
வளையில் நின்றொலி மல்கிய வண் புருடோத்தமமே –4-2-7 | பதவுரை Show / Hideஒண் திறல் பொன் பெயரோன் உளைய, On Thiral Pon Peyaron Ulaiya - பிரஸித்தமான வலிவையுடையனான இரணியனானவன் நோவுபடும்படி (- (வந்து உறை கோயில்;) (வண்புருடோத்தமம்)) தனது உரம்பிளந்து, Thanathu Urampilandu - அவனுடைய மார்பைக் கிழித்து உதிரத்தை அளையும், Uthirathai Alaiyum - (அவனது உடலில் நின்று இழிந்த) ரத்தத்தை அளைந்த வென் சினத்து அரி, Ven Sinaththu Ari - உக்ரஸிம்ஹனானவனும் பரி கீறிய, Pari Keeriyah - குதிரைவடிவு கொண்டுவந்த கேசியென்னும் அசுரனைக் கொன்றவனுமான அப்பன், Appan - ஸ்வாமி இளைய மங்கையர், Ilaiya Mangaiyar - சிறுபெண்கள் (நர்த்தனமனாடும்போது உண்டான) இணை அடி சிலம்பினோடு, Inai Adi Silampinodu - இரண்டுகால்களிலும் அணிந்த தண்டைச் சிலம்பின் ஒலியோடு கூட, ஏழில்கொள் பந்து அடிப்போர் கை வளையில் நின்று, Ezhalkol Pandhu Adipor Kai Valaiyil Nindru - அழகுபொருந்திய பந்தடிக்கும் சிறுமிகளினுடைய கைவளையல்களினின்று உண்டான ஓலிமல்பிய நாங்கூர், Olimalpiya Nangoor - ஓசையானது நிறைந்த திருநாங்கூரில் |
| 1265 | பெரிய திருமொழி || (4-2–கம்பாமா) (திருவண் புருடோத்தம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (எலும்பானது பூரணமாய் இருக்கும் படியாக – பிஷையை முன்பு அருளின-தேவன் உடைய வலிய சாபம் நீங்க மகா உதாரனானவன்– வர்த்திக்கிற தேசம்) 8 | வாளையார் தடம் கண் உமை பங்கன் வன் சாபம் மற்றது நீங்க
மூளையார் சிரத்து ஐயம் முன் அளித்த எம் முகில் வண்ணன் உறை கோயில்
பாளை வான் கமுகு ஊடு உயர் தெங்கின் வன் பழம் விழ வெருவிப் போய்
வாளை பாய் தடம் சூழ் தரு நாங்கூர் வண் புருடோத்தமமே –4-2-8 | பதவுரை Show / Hideவாளை ஆர்தட கண்உமை பங்கன், Vaalai Aarthada Kanumai Pangan - மீன்போன்ற விசாலமான கண்களை யுடையளான பார்வதியைத் தன் சரீரத்தின் ஒருபக்கத்தில் உடையனான ருத்ரனுடைய (- (வண்புருடோத்தமம்)) வல் சாபம் அது நீங்க முன், Val Saapam Adhu Neenga Mun - வலிய சாபம் தொலையும்படியாக, முன்பொரு காலத்தில் மூளை ஆர் சிரத்து ஐயம் அளித்த, Moolai Aar Sirathu Aiyam Alitha - வெறும் எலும்பான தலையோட்டிலே பிக்ஷையளித்த எம் முகில் வண்ணன், Em Mukil Vannan - நீலமேக நிறத்தனான எம்பெருமான் பாளை, Paalai - பாளைகளை யுடைத்தாய் வான், Vaan - ஓங்கியிருந்துள்ள கமுகு ஊடு, Kamuku Oodu - பாக்கு மரங்களினிடையே உயர், Uyar - உயர்ந்திருக்கின்ற தெங்கின், Thengin - தென்னை மரங்களினுடைய வன் பழம், Van Pazham - பெரிய காய்கள் விழ, Vizha - (குளத்தில்) விழ வாளை வெருவி போய் பாய், Vaalai Veruvi Poi Pai - (அங்குள்ள) மீன்கள் அஞ்சி அவ்விடத்தை விட்டுப் போய் வேறிடத்தில் குதித்துச் சேரப்பெற்ற தடம் சூழ்தரு நாங்கூர், Thadam Soozhdharu Naangoor - தடாகங்களினால் சூழப்பட்ட திருநாங்கூரில் |
| 1266 | பெரிய திருமொழி || (4-2–கம்பாமா) (திருவண் புருடோத்தம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தன்னாலே ஸ்ருஷ்டனான சதுர்முகனாலே ஸ்ருஷ்டமான ஜகத் என்று அதன் உடைய ரஷணத்துக்கு உறுப்பாக அவன் விரும்பி வர்த்திக்கிற தேசம்) 9 | இந்துவார் சடை ஈசனைப் பயந்த நான்முகனைத் தன் எழிலாரும்
உந்தி மா மலர் மீ மிசைப் படைத்தவன் உகந்து இனிது உறை கோயில்
குந்தி வாழையின் கொழும் கனி நுகர்ந்து தன் குருளையைத் தழுவிப் போய்
மந்தி மாம்பணை மேல் வைகு நாங்கூர் வண் புருடோத்தமமே –4-2-9 | பதவுரை Show / Hideஇந்து வார் சடை ஈசனை பயந்த, Indhu Vaar Sadai Eesanai Bayandha - சந்திரனோடுகூடி நீண்டிருக்கிற சடைமுடியையுடைய ருத்ரனை ஸ்ருஷ்டித்த (- (உகந்து இனிது உறை கோயில்;) (வண்புருடோத்தமம்)) நான் முகனை, Naan Mughanai - பிரமனை தன் எழில் ஆரும் உந்திமா மலர்மீமிசை படைத்தவன், Than Ezhil Aarum Undhimaa Malarmimisai Padaiththavan - தன்னுடைய அழகு திருநாபிக் கமலத்திலே பொருந்திய உண்டாக்கின பெருமான் மந்தி, Mandhi - பெண் குரங்கானது குந்தி, Kundhi - குந்திக்கொண்டு வாழையின் கொழு கனி நுகர்ந்து தன் குருளையை தழுவி போய், Vaazhaiyin Kozhu Kani Nukarndhu Than Kurulaiyai Thazhuvi Poi - நல்ல வாழைப் பழங்களை புஜித்து தன்து குட்டியை அணைத்துக் கொண்டு அங்கு நின்றும்போய் மாம்பணைமேல் வைகும் நாங்கூர், Maambanai Mel Vaikum Naangoor - மாமரக் கிளைகளின் மேல் தங்கியிருக்கப் பெற்ற திருநாங்கூரில் |
| 1267 | பெரிய திருமொழி || (4-2–கம்பாமா) (திருவண் புருடோத்தம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அருள் மாரி-ஆஸ்ரிதருக்கு பிரசாதம் பண்ணும் இடத்தில் மேகம் போலே உதாரரான ஸ்ரீ ஆழ்வார் பண்ணிலே ஆரும்படியாக பாடிய இப்பாடல் இப் பத்தையும் வல்லவர்கள் லோகத்திலே நிரவதிகமான ஆனந்தத்தை உடையராய்-அநந்தரம் நிரவதிக ப்ரீதி உக்தரான ஸ்ரீ நித்ய சூரிகளோடு ஒரு கோவையாக பெறுவர்) 10 | மண்ணுளார் புகழ் வேதியர் நாங்கூர் வண் புருடோத்தமத்துள்
அண்ணல் சேவடிக் கீழ் அடைந்து உய்ந்தவன் ஆலிமன் அருள் மாரி
பண்ணுளார் தரப் பாடிய பாடல் இப்பத்தும் வல்லார் உலகில்
எண்ணிலாத பேரின்பம் உற்று இமையவரோடும் கூடுவரே –4-2-10 | பதவுரை Show / Hideமண்ணுள் ஆர் புகழ் வேதியர் நாங்கூர், Mannul Aar Pugazh Vedhiyar Naangoor - பூமண்டலத்தில் நிறைந்த புகழையுடைய வைதிகர்கள் வாழ்கிற திருநாங்கூரிலுள்ள வண்புருடோத்தமத்துள், Vanpurudoththama Thul - வண்புருடோத்தம மென்னுத் திருப்பதியில் எழுந்தருளியிருக்கிற அண்ணல், Annal - ஸ்வாமியினுடைய சே அடிக்கீழ் அடைந்து உய்ந்தவன், Sae Adikizh Adayndhu Uyndhavan - திருவடிகளின் கீழே சேர்ந்து உஜ்ஜீவித்தவரும் ஆலி மன் –, Aali Man - திருவாலி நாட்டுக்குத் தலைவரும் அருள் மாரி, Arul Maari - கிருபையை வர்ஷிக்கும்மேகமா-யுள்ளவருமான திருமங்கையாழ்வார் பண்ணுள் ஆர்தர பாடிய பாடல் இப்பத்தும் வல்லார், Pannul Aarthar Paadiya Paadal Ippaththum Vallar - கானத்திலே பொருந்தும்படி பாடின பாசுரமான இத்திருமொழியை ஓதவல்லவர்கள் உலகில் எண் இலாத பேர் இன்பம் உற்று, Ulagil En Iladha Per Inbam Utrum - இவ்வுலகின்கண் அளவற்ற மஹாநந்தங்களை அநுபவித்து (பிறகு) இமையவரோடும் கூடுவர், Imayavaro Thum Kooduvar - நித்யஸூரிகளோடும் கூட்டி வாழப் பெறுவர். |