| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 371 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || ஐந்தாம் திருமொழி - ஆசைவாய் (பகவானிடத்தில் ஈடுபடாமலிருக்கும் ஸம்ஸாரிகளுக்கு கிதோபதேசம் செய்தல்) எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 1 | ஆசை வாய்ச் சென்ற சிந்தையராகி அன்னை அத்தன் என் புத்திரர் பூமி வாச வார் குழலாளென்று மயங்கி மாளு மெல்லைக் கண் வாய் திறவாதே கேசவா புருடோத்தமா என்றும் கேழலாகிய கேடிலீ என்றும் பேசு வாரவர் எய்தும் பெருமை பேசுவான் புகில் நம் பரமன்றே–4-5-1 | ஆசை வாய்,Aasai Vaai - (தனக்கு) ஆசையுள்ள விதத்திலே சென்ற,Senra - போர்ப் பாரத்த சிந்தையார் ஆகி,Sindhaiyaar Aagi - நெஞ்சை யுடையாராய் கொண்டு என் அன்னை,En Annai - என்னுடைய தாய் என் அத்தன்,En Aththan - என்னுடைய தகப்பன் என் புத்திரர் ,En Puththirar - என்னுடைய பிள்ளைகள் என் பூமி,En Boomi - என்னுடைய நிலம் வாச வார்,Vaasa Vaar - பரிமளம் வீசுகின்ற என் குழளான,En Kuzhalaana - கூந்தலை யுடையவளான என் மனைவியான என்று,Endru - என்று சொல்லிக் கொண்டு மயங்கி,Mayangi - (அவர்கள் பக்கத்தில்) மோஹமடைந்து மாளும் எல்லைக் கண்,Maalum Ellaik Kan - (பழூதே பல பகலும் போக்கினாலும்) சரம ஸமயத்தில் வாய் திறவாதே,Vaai Thiravaadhe - வாய் திறந்து(அவர்கள் பேச்சை) சொல்லி யழையாமல் கேசவா என்றும்,Kesavaa Endrum - கேசவனே என்றும் புருடோத்தமா என்றும்,Purudhooththamaa Endrum - புருடோத்தமனே என்றும் கேழல் ஆகிய கேடு இலீ என்றும்,Kezhal Aagiya Kedu Ili Endrum - ‘வராஹ ரூபியாய் அவதரித்தவனும் அழிவில்லாதவனுமான எம்பெருமானே! என்றும் பேசுவார் அவர்,Pesuvaar Avar - சொல்லுவார்கள் எய்திய,Eithiya - அடையக் கூடிய பெருமை,Perumai - பெருமைகளே பேசுவான் புகில்,Pesuvaan Pugil - பேசப் புக்கால் நம் பரம் அன்று,Nam Param Andru - நம்மால் பேசித் தலை கட்டப் போவது |
| 372 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || ஐந்தாம் திருமொழி - ஆசைவாய் (பகவானிடத்தில் ஈடுபடாமலிருக்கும் ஸம்ஸாரிகளுக்கு கிதோபதேசம் செய்தல்) எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 2 | சீயினால் செறிந்தேறிய புண் மேல் செற்ற லேறிக் குழம்பிருந்து எங்கும் ஈயினால் அரிப் புண்டு மயங்கி எல்லை வாய்ச் சென்று சேர்வதன் முன்னம் வாயினால் நமோ நாரணா வென்று மத்தகத்திடைக் கைகளைக் கூப்பி போயினால் பின்னை இத் திசைக்கு என்றும் பிணைக் கொடுக்கிலும் போக வொட்டாரே–4-5-2 | சீயினால்,Seeyinaal - சீயாலே செறிந்து எறிய,Serindhu Eriya - மிகவும் நிறைந்த புண் மேல்,Punn Mel - புண்ணின் மேல் செற்றல் ஏறி,Setral Eaari - ஈ இருந்து முட்டை யிட்டு குழம்பிருந்து,Kuzhambirundhu - அலை புழுத்து சீயாய்ப் பாயுமளவில் எங்கும்,Engum - உடல் முழுதும் ஈயினால்,Eeyinaal - ஈயாலே அரிப்புண்டு,Aripputru - அரிக்கப்பட்டு மயங்கி,Mayangi - (வேதனை பொறுக்க முடியாமல்) மூர்ச்சை யடைத்து எல்லை வாய்ச் சென்று சேர்வதன் முன்னம்,Ellai Vaai Senru Servadhan Munnam - சரம காலத்தைக் கிட்டுவதற்கு முன்னே வாயினால்,Vaaiyinaal - வாயாலே நமோ நாராணா என்று,Namo Naaraanaa Endru - ‘நமோ நாராயணாய்’ என்று சொல்லிக் கொண்டு மத்தகத்திடை,Maththagaththidai - உச்சியிலே கைகளைக் கூப்பி,Kaigalai Kooppi - அஞ்ஜலி பண்ணி போயினால்,Poyinaal - (சரீர வியோகமான பின்பு) (பரம பதம்) போய்ச் சேர்ந்தால் பின்னை,Pinnai - பிறகு பிணைக் கொடுக்கிலும்,Pinaik Kodukkilum - (நித்ய முக்தர்கள்) ‘நாங்கள் உத்தர வாதம் பண்ணுகிறோம்’ என்றும்,Endrum - ஒருகாலும் போக ஒட்டார்,Poga Ottaar - (இந்த முக்தர்களைப்) போக வொட்டார்கள் |
| 373 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || ஐந்தாம் திருமொழி - ஆசைவாய் (பகவானிடத்தில் ஈடுபடாமலிருக்கும் ஸம்ஸாரிகளுக்கு கிதோபதேசம் செய்தல்) எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 3 | சோர்வினால் பொருள் வைத்த துண்டாகில் சொல்லு சொல்லென்று சுற்று மிருந்து ஆர்வினாவிலும் வாய் திறவாதே அந்தக் காலம் அடைவதன் முன்னம் மார்வ மென்பதோர் கோயி லமைத்து மாதவ னென்னும் தெய்வத்தை நாட்டி ஆர்வ மென்பதோர் பூவிட வல்லார்க்கு அரவ தண்டத்தில் உய்யலு மாமே–4-5-3 | சோர்வினால்,Soruvenaal - களவு வழியாலே பொருள் வைத்தது,Porul Vaiththathu - (எங்கேனும் ஏதாவதொரு) பொருள் வைக்கப் பட்டிருக்குமாகில் சொல்லு சொல் என்று,Sollu Sol Endru - (அதைச்) செல்லு, சொல்லு என்று சுற்றும் இருந்து,Sutrum Irundhu - சூழ்ந்து கொண்டு ஆர்வினாவிலும்,Aarvinaavilum - எப்படிப்பட்ட அன்பர்கள் கேட்டாலும் வாய் திறவாதே,Vaai Thiravaadhe - (அவர்களுக்கு மறு மாற்றம் சொல்லுகைக்கும்) வாயைத் திறக்க மாட்டாதபடி. அந்தக் காலம்,Andhak Kaalam - மரண காலமானது அடைவதன் மூலம்,Adaivadhan Moolam - வந்து கிட்டுவதற்கு முன்னே; மார்வம் என்பது,Maarvam Enbadhu - ‘ஹ்ருதயம்’ என்கிற ஓர் கோயில்,Or Koyil - ஒரு ஸந்நிதியை அமைத்து,Amaiththu - ஏற்படுத்தி (அந்த ஸந்நிதியில்) மாதவன் என்னும்,Madhavan Ennum - ‘திருமால்’ என்கிற தெய்வத்தை,Dheivaththai - தேவதையை நாட்டி,Naatti - எழுந்தருளப் பண்ணி (அத் தெய்வத்தைக் குறித்து) ஆர்வம்மென்பது,Aarvammenbadhu - பக்தி என்கிற ஓர் பூ,Or Poo - ஒரு புஷ்பத்தை இட வல்லார்க்கு,Eda Vallaarkku - ஸமர்பிக்க வல்லவர்களுக்கு அரவதண்டத்தின்,Aravathandaththin - யம படர்களால் வரும் துன்பத்தில் நின்றும் உய்யலும் ஆம்,Uyyalum Aam - தப்பிப் பிழைக்கலாகும். |
| 374 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || ஐந்தாம் திருமொழி - ஆசைவாய் (பகவானிடத்தில் ஈடுபடாமலிருக்கும் ஸம்ஸாரிகளுக்கு கிதோபதேசம் செய்தல்) எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 4 | மேலெ ழுந்ததோர் வாயுக் கிளர்ந்து மேல் மிடற்றினை உள்ளெழ வாங்கி காலுங் கையும் விதிர் விதிர்த் தேறிக் கண்ணுறக்க மாவதன் முன்னம் மூல மாகிய ஒற்றை யெழுத்தை மூன்று மாத்திரை உள்ளெழ வாங்கி வேலை வண்ணனை மேவுதிராகில் விண்ணகத்தினில் மேவலு மாமே–4-5-4 | மேல் எழுந்தது ஓர் வாயு,Mel Ezhundhathu Or Vaayu - ஊர்த்துவச்ஸமானது கிளர்ந்து,Kilarndhu - மேலெழுந்ததனால் மேல் மிடறு,Mel Midaru - நெஞ்சானது உள் எழ வாங்கி,Ul Eza Vaangi - கீழே இடிந்து விழப் பெற்று காலும் கையும்,Kaalum Kaiyum - கால்களும் கைகளும் விதிர் விதிர்த்து ஏறி,Vidhir Vidhirththu Eaari - பதைபதைக்கப் பெற்று கண் உறக்கம் அது ஆவதன் முன்னம்,Kan Urakkam Adhu Aavadhan Munnam - தீர்க்க நித்திரையாகிய மரணம் ஸம்பவிப்பதற்கு முன்னே, மூலமாகிய ஒற்றை எழுத்தை,Moolamaagiya Otrai Ezhuththai - (ஸகலவேதங்களுக்கும்) காரணமாகிய ‘ஓம்’ என்ற பிரணவத்தை மூன்று மாத்திரைகள் உள் எழ வாங்கி,Moonru Maaththiraigal Ul Eza Vaangi - உச்சரிக்க வேண்டிய முறைப்படி உச்சரித்து வேலை வண்ணனை,Velai Vannanai - கடல் போன்ற நிறத்தை யுடையவனான எம்பெருமானை மேவுதிர் ஆகில்,Mevuthir Aagil - ஆச்ரயித்தீர்களாகில் விண் அகத்தினில்,Vin Agaththinil - ஸ்ரீவைகுண்டத்தில் மேவலும் ஆம்,Mevalum Aam - அடியார்கள் குழாங்களை) உடன் கூடவும் பெறலாம். |
| 375 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || ஐந்தாம் திருமொழி - ஆசைவாய் (பகவானிடத்தில் ஈடுபடாமலிருக்கும் ஸம்ஸாரிகளுக்கு கிதோபதேசம் செய்தல்) எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 5 | மடிவழி வந்து நீர் புலன் சோர வாயி லட்டிய கஞ்சியும் மீண்டே கடைவழி வாரக் கண்டமடைப்பக் கண்ணுறக்க மாவதன் முன்னம் தொடைவழி உம்மை நாய்கள் கவரா சூலத்தால் உம்மைப் பாய்வதும் செய்யார் இடைவழியில் நீர் கூறையும் இழவீர் இருடீகேசனென் றேத்த வல்லீரே–4-5-5 | மடி புலன் வழி வந்து,Madi Pulan Vali Vandhu - லிங்கத்தின் வழியாக வந்து நீர் சோர,Neer Sora - மூத்திர நீர் பெருகவும் வாயில்,Vaayil - வாயிலே அட்டிய,Attiya - பெய்த கஞ்சியும்,Kanjiyum - பொரிக் கஞ்சியும் கண்டம் அடைப்ப,Kandam Adaippa - கழுத்தை அடைக்கவும் மீண்டும்,Meendum - மறுபடியும் கடை வழி,Kadai Vali - கடை வாய் வழியாலே வார,Vaara - (அந்தப் பொறிக் கஞ்சி வழியா நிற்கவும் கண் உறக்கம் அது ஆவதன் முன்னம்,Kan Urakkam Adhu Aavadhan Munnam - கண் உறக்கம் அது ஆவதன் முன்னம் இருடீகேசன் என்று,Erudeekesan Endru - (ஹ்ருஷீகேசன்’ என்ற (எம்பெருமான் திருநாமத்தைச் சொல்லி) ஏத்த வல்லீர்,Eaitha Vallir - ஸ்தோத்திரம் பண்ண வல்லவர்களே! நாய்கள்,Naaygal - (யம லோகத்திலுள்ள) செந்நாய்களானவை உம்பை,Umbai - உங்களை கவரா,Kavaraa - கவர மாட்டா; உம்மை,Ummai - (யம கிங்கரர்களும் ) உங்களை சூலத்தால்,Soolaththaal - சூலாயுதத்தால் பாய்வதும் செய்யார்,Paayvadhuum Seiyaar - கத்தவும் மாட்டார்கள்; நீர்,Neer - நீங்கள் இடை வழியில்,Edai Valiyil - நடு வழியில் கூறையும்,Kooraikum - வஸ்திரத்தையும் இழவீர்,Izhavir - இழக்க மாட்டீர்கள் |
| 376 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || ஐந்தாம் திருமொழி - ஆசைவாய் (பகவானிடத்தில் ஈடுபடாமலிருக்கும் ஸம்ஸாரிகளுக்கு கிதோபதேசம் செய்தல்) எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 6 | அங்கம் விட்டவை யைந்து மகற்றி ஆவி மூக்கினில் சோதித்த பின்னை சங்கம் விட்டவர் கையை மறித்துப் பைய வேதலை சாய்ப்பதன் முன்னம் வங்கம் விட்டுலவும் கடற் பள்ளி மாயனை மது சூதனை மார்பில் தங்க விட்டு வைத்து ஆவதோர் கருமம் சாதிப் பார்க்கு என்றும் சாதிக்க லாமே–4-5-6 | அவை ஐந்தும்,Avai Aindhum - பஞ்ச பிராணன்களும் அங்கம் விட்டு,Angam Vittu - உடலை விட்டு அகற்றி,Agarthi - அகன்று போக மூக்கினில்,Mookkinil - மூக்கில் (கையை வைத்து) ஆவி சோதித்த பின்னை,Aavi Sodhiththa Pinnai - ‘பிராணன் இருக்கிறதா இல்லையா’ என்று சோதித்துப் பார்த்து, இல்லை யென்றிந்த பின்பு சங்கம் விட்டு,Sangam Vittu - (அவருடைய உயிரில்) ஆசையை விட்டு, கையை மறித்து,Kaiyai Mariththu - (அங்குள்ளாரை நோக்கி, இப்போதை நிலைமை ஏன்? என்று வந்தவர்கள் கேட்க; (அவர்களுக்குப் பதிலாக) கையை விரித்துக் காட்டி பைய,Paiya - மெள்ள மெள்ள தலை சாய்ப்பதன் முன்னம்,Thalai Saayppadhan Munnam - (தங்கள்) தலையைத் தொங்க விட்டுக் கொள்வதற்கு முன்னே, வங்கம்,Vangam - கப்பல்களானவை விட்டு உலவும்,Vittu Ulavum - இடை விடாமல் திரியப் பெற்ற கடல்,Kadal - கடலில் பள்ளி,Palli - பள்ளி கொள்பவனும் மாயனை,Maayanai - ஆச்சரிய சக்தி யுத்தனும் மது சூதனை,Madhu Soothanai - மதுவைக் கொன்றவனுமான எம்பெருமானை மார்பில்,Maarbil - ஹ்ருதயத்தில் தங்க விட்டு வைத்து,Thanga Vittu Vaiththu - அமைத்து, ஆவது ஓர் கருமம்,Aavadhu Or Karumam - ஸ்வரூபத்துக்குச் சேர்ந்ததொரு (உபாய வரணமாகிற காரியத்தை) சாதிப்பார்க்கு,Saadhippaarkku - ஸாதிக்குமவர்களுக்கு என்றும்,Endrum - எந்நாளும் சாதிக்கலாம்,Saadhikkalaam - பலாநுபவம் பண்ணப் பெறலாம். |
| 377 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || ஐந்தாம் திருமொழி - ஆசைவாய் (பகவானிடத்தில் ஈடுபடாமலிருக்கும் ஸம்ஸாரிகளுக்கு கிதோபதேசம் செய்தல்) எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 7 | தென்னவன் தமர் செப்ப மிலாதார் சேவ தக்குவார் போலப் புகுந்து பின்னும் வன் கயிற்றால் பிணித் தெற்றிப் பின் முன் னாக இழுப்பதன் முன்னம் இன்னவன் இனையானென்று சொல்லி எண்ணி உள்ளத் திருளற நோக்கி மன்னவன் மது சூதன னென்பார் வானகத்து மன்றாடிகள் தாமே–4-5-7 | செப்பம் இலாதார்,Seppam Ilaadhaar - ருஜுவான செய்கை இல்லாதவர்களான தென்னவன்,Thennavan - தமர் யம கிங்கரர்கள் சே அதக்குவார் போல,Se Athakkuvaar Pola - எருதுகளை அடக்கி ஓட்டுபவர்கள் போல புகுந்து,Pugundhu - வந்து, பின்னும்,Pinnum - அதற்கு மேல் வல் கயிற்றால்,Val Kayittraal - வலிவுள்ள பாசங்களினால் பிணித்து,Piniththu - கட்டி ஏற்றி,Eaathri - அடித்து பின் முன் ஆக,Pin Mun Aaga - தலை கீழாக இழுப்பதன் முன்னம்,Ezhuppadhan Munnam - (யம லோகத்துக்கு) இழுத்துக் கொண்டு போவதற்கு முன்னே மன்னவன்,Mannavan - (அந்தத் தென்னவனுக்கும்) மன்னவனான எம்பெருமான் இன்னவன் இனையாள் என்று சொல்லி,Innavan Inaiyaal Endru Solli - இப்படிப்பட்ட ஸ்வரூபத்தையுடையவன், இப்படிப் பட்ட ஸ்பாவத்தையுடையவன் என்று எண்ணி,Enni - (அவனுடைய ஸ்ரூப ஸ்வபாவங்களைச் சொல்லி) (அவற்றை) நெஞ்சாலும் மநநம் பண்ணி உள்ளத்து இருள் அற,Ullaththu Irul Ara - ஹ்ருதயத்திலுள்ள (அஜ்ஞாநமாகிற) அந்தாரம் நீங்கும்படி நோக்கி,Nookki - (எம் பெருமானை) ஸாஷாத்கரித்து, மதுசூதனன் என்பார்,Madhusoodanan Enbaar - (தேஹமுள்ளதனையும்) ‘மதுஸூதநனே’ என்று அவன் திரு நாமங்களையே சொல்லிக் கொண்டிருக்குமவர்கள் வான் அகத்து,Vaan Agaththu - ஸ்ரீவைகுண்டத்திலே மன்றாடிகள் தாம்,Mantraadigal Thaam - (எம்பெருமானோடே நித்ய ஸூரிகளின் கைங்கரியத்துக்காக) மன்றாடப் பெறுவர்கள் |
| 378 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || ஐந்தாம் திருமொழி - ஆசைவாய் (பகவானிடத்தில் ஈடுபடாமலிருக்கும் ஸம்ஸாரிகளுக்கு கிதோபதேசம் செய்தல்) எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 8 | கூடிக் கூடி உற்றார்கள் இருந்து குற்றம் நிற்க நற்றங்கள் பறைந்து பாடிப் பாடி ஓர் பாடையிலிட்டு நரிப் படைக்கு ஒரு பாகுடம் போலே கோடி மூடி யெடுப்பதன் முன்னம் கெளத்துவமுடைக் கோவிந்தனோடு கூடி யாடிய உள்ளத்தரானால் குறிப்பிடம் கடந்து உய்யலுமாமே–4-5-8 | உற்றார்கள்,Urrargal - (மரணமான பின்பு) பந்துக்களானவர்கள் கூடி கூடி இருந்து,Koodi Koodi Irundhu - திரள் திரளாகக் கூடியிருந்து கொண்டு குற்றம் நிற்க,Kutram Nirka - (செத்தவன் செய்த) குற்றங்கள் (பல) கிடக்க (அவற்றை யெல்லாம் விட்டு விட்டு) நற்றங்கள்,Natrangal - (சிறிது) நன்மையாகத் தோன்றும் படியான கூற்றை பறைந்து,Parainthu - சொல்லி, பாடிப் பாடி,Paadip Paadi - (அழுகைப் பாட்டுக்களைப்) பலகால் பாடி ஓர் பாடையில் இட்டு,Or Paadaiyil Ittu - ஒரு பாடையிலே படுக்க வைத்து கோடி மூடி,Koodi Moodi - வஸ்திரத்தை யிட்டு மூடி நரிப் படைக்கு ஒரு பாகுடம் போல,Narip Padaikku Oru Paagudam Pola - நரிக் கூட்டத்துக்கு ஒரு பாகுக் குடத்தைப் பச்சையாகக் கொடுப்பதுபோல (இப் பிணத்தைப் கொடுக்கைக்காக,) எடுப்பதன் முன்னம்,Eduppadhan Munnam - (சுடுகாட்டுக்குக் கொண்டு போவதாக) எடுப்பதற்கு முன்னே, கௌத்துவம்,Kauthuvam - கௌஸ்துபத்தை உடை,Udai - (திரு மார்பிலே) உடைய கோவிந்தனோடு,Govindhanodu - எம்பெருமன் பக்கலில் கூடி ஆடிய,Koodi Aadiya - சேர்ந்து அவகாஹித்த உள்ளத்தர் ஆனால்,Ullaththar Aanaal - நெஞ்சை யுடையவர்களாக ஆனால், குறிப்பு இடம்,Kurippu Idam - யம லோகத்தை கடந்து,Kadandhu - (அதிக்ரமித்து,(பரம பதம் போய்ச் சேர்ந்து) உய்யலும் ஆம்,Uyyalum Aam - உஜ்ஜீவிக்கப் பெறலாம். |
| 379 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || ஐந்தாம் திருமொழி - ஆசைவாய் (பகவானிடத்தில் ஈடுபடாமலிருக்கும் ஸம்ஸாரிகளுக்கு கிதோபதேசம் செய்தல்) எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 9 | வாயொரு பக்கம் வாங்கி வலிப்ப வார்ந்த நீர்க் குழிக் கண்கள் மிழற்ற தாய் ஒரு பக்கம் தந்தை ஒரு பக்கம் தாரமும் ஒரு பக்கம் அலற்ற தீ ஓரு பக்கம் சேர்வதன் முன்னம் செங்கண் மாலொடும் சிக்கெனச் சுற்ற மாய் ஒரு பக்கம் நிற்க வல்லார்க்கு அரவ தண்டத்தில் உய்யலு மாமே–4-5-9 | வாய்,Vaai - வாயானது ஒரு பக்கம் வாங்கி வலிப்ப,Oru Pakkam Vaangi Valippa - (வாயுவினாலே) ஒருக்கடுத்து வலிக்கவும் வார்ந்த நீர்,Vaarndha Neer - பெருகா நின்ற நீரை யுடையதும் குழி,Kuzhi - உள்ளே இடிய இழிந்ததுமான கண்கள்,Kangal - கண்ணானது மிழற்ற,Mizhatra - அலமந்து நிற்கவும், ஒரு பக்கம்,Oru Pakkam - ஒரு பக்கத்தில் தந்தை,Thandhai - தகப்பானரும் தாரமும்,Thaaramum - மனைவியும் (இருந்து கொண்டு) அலற்ற,Alatra - கதறி அழவும் ஒரு பக்கம்,Oru Pakkam - மற்றொரு பக்கத்திலே தீ,Thee - நெருப்பானது சேர்வதன் முன்னம்,Servadhan Munnam - (மார்லில வந்து) சேர்வதற்கு முன்னே செம் கண் மாலொடும்,Sem Kan Maalodum - புண்டரீகரக்ஷனான எம்பெருமானை சிக்கன சுற்றம் ஆய்,Sikkana Suttram Aai - நிருபாதிக பந்துவாகக் கொண்டு ஒரு பக்கம்,Oru Pakkam - அவனொருவனிடத்திலேயே பக்ஷ பாதமாய் நிற்க வல்லாருக்கு,Nirka Vallaarkku - நிலைத்து நிற்ப வல்லவர் களுக்கு அரவ தண்டத்தில்,Arava Thandaththil - யம தண்டனையில் நின்றும் உய்யலும் ஆம்,Uyyalum Aam - தப்பிப் பிழைக்கப் பெறலாம். |
| 380 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || ஐந்தாம் திருமொழி - ஆசைவாய் (பகவானிடத்தில் ஈடுபடாமலிருக்கும் ஸம்ஸாரிகளுக்கு கிதோபதேசம் செய்தல்) எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 10 | செத்துப் போவதோர் போது நினைந்து செய்யும் செய்கைகள் தேவபிரான் மேல் பத்தரா யிறந்தார் பெறும் பேற்றைப் பாழித் தோள் விட்டு சித்தன் புத்தூர்க் கோன் சித்தம் நன்கொருங்கித் திரு மாலைச் செய்த மாலை இவை பத்தும் வல்லார் சித்தம் நன்கொருங்கித் திருமால் மேல் சென்ற சிந்தை பெறுவர் தாமே–4-5-10 | செத்துப் போவது ஓர் போது,Seththu Povadhu Or Podhu - இறந்து போகுங் காலத்திலே செய்கைகள்,Seykaigal - (கடுஞ்) செயல்களை நினைத்து,Ninaiththu - நினைத்து தேவ பிரான் மேல்,Deva Piraan Mel - தேவ பிரான் பக்கலில் பத்தர் ஆய்,Pattar Aai - அன்பு பூண்டவர்களாய் இருந்து இறந்தார்,Irandhaar - (பின்பு) இறந்தவர்கள் பெறும் பேற்றை,Perum Paettrai - அடையக்கூடிய பலன்களைக் குறித்து, பாழி தோள்,Paazhi Thol - (ஸம்ஸாரத்தை வென்ற) மிடுக்கை யுடைய தோள்களை யுடையவரும் புத்தூர்,Puththoor - ஸ்ரீவில்லிபுத்தூருக்கு கோன்,Kon - தலைவருமான விட்டு சித்தன்,Vittu Siththan - பெரியாழ்வார் செய்யும்,Seyyum - (யம படர்களால்) செய்யப் படுகிற சித்தம்,Siththam - (தம்முடைய) நெஞ்சை திருமாலை,Thirumaalai - திருமால் திறத்தில் நன்கு,Nangu - நன்றாக ஒருங்கி,Orungi - ஒருபடுத்தி செய்த,Seydha - அருளிச் செய்த மாலை,Maalai - சொல் மாலையாகிய இவை பத்தும்,Ivai Paththum - இப் பத்துப் பாட்டுகளையும் வல்லவர்,Vallavar - ஓத வல்லவர்கள், சித்தம் நன்கு ஒருங்கி,Siththam Nangu Orungi - (ஆழ்வார்க்குப் போல்) நெஞ்சு ஒருபடிப்படப் பெற்று திருமால் மேல்,Thirumaal Mel - திருமால் பக்கலிலே சென்ற,Senra - குடி கொண்ட சிந்தை,Sindhai - மநஸ்ஸை பெறுவர்,Peruvar - உடையராவர். |