திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1288 | பெரிய திருமொழி || (4-5–தூம்புடைப) (திருநாங்கூர்த் திருமணிக்கூடம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (மலையை ஏந்தி பரிஹரிக்கப் போகாத மழையைக் காத்த என் ஸ்ரீ ஸ்வாமி) 1 | தூம்புடைப் பனைக்கை வேழம் துயர் கெடுத்தருளி மன்னு
காம்புடைக் குன்றம் ஏந்திக் கடு மழை காத்த எந்தை
பூம் புனல் பொன்னி முற்றும் புகுந்து பொன் வரண்ட வெங்கும்
தேம பொழில் கமழ் நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே –4-5-1 | பதவுரை Show / Hideதும்புஉடை பனை கை வேழம் துயர் கெடுத்தருளி, Thumbu Udai Panai Kai Vezham Thuyar Kedu Tharuli - துளையையுடைத்தாய் பனை போன்றதான துதிக்கையையுடைய கஜேந்திராழ்வானது துன்பத்தைப் போக்கியருளினவனாயும் (- (எவ்விடத்திலுள்ளானென்னில்);) முன்னு காம்பு உடை குன்றம் ஏந்தி, Munnu Kaambu Udai Kuntram Aendhi - வேரூன்றின மூங்கில்களை உடைத்தான கோவர்த்தன மலையைக் (குடையாக) எடுத்துப்பிடித்து கடு மழை காத்த எந்தை, Kadu Mazhai Kaatha Endhai - கடிதான மழையைத் தடுத்தவனாயுமுள்ள எம்பெருமான், பூ புனல் பொன்னி, Poo Punal Ponni - அழகியஜலத்தையுடைத்தான காவேரியானது முற்றும் புகுந்து, Mutrum Pugundhu - எங்கும் பாய்ந்து பொன், Pon - பொற்குவியல்களை வரண்ட, Varanda - கொண்டுவந்து தள்ளப்பெற்றதும் எங்கும், Engum - கண்டவிடமெங்கும் தேம் பொழில் கமழும், Them Pozhil Kamazhum - தேன்மிக்க சோலைகள் பரிமளம் வீசப்பெற்றதுமான நாங்கூர், Naangoor - திருநாங்கூரில் திருமணிக் கூடத்தான், Thirumanik Koodaththaan - திருமணிக்கூடமென்னும் திருப்பதியிலுள்ளான். |
| 1289 | பெரிய திருமொழி || (4-5–தூம்புடைப) (திருநாங்கூர்த் திருமணிக்கூடம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இலங்கையைப் பற்றின ராவண சம்பந்தத்தால் வந்த துக்கம் போம்படியாக பிரதி பஷத்தின் மேலே கண் பாராதே அம்பை விட்ட ஸ்ரீ ஸ்வாமி) 2 | கவ்வை வாள் எயிறு வன் பேய்க்கதிர் முலை சுவைத்து இலங்கை
மன்னிய விடும்பை தீரக் கடுங்கணை துரந்த வெந்தை
கொவ்வை வாய் மகளிர் கொங்கைக் குங்குமம் கழுவிப் போந்த
தெய்வ நீர்க் கமழு நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே –4-5-2 | பதவுரை Show / Hideகவ்வை, Kavvai - ஆரவாரம்செய்பவளாய் (- (எவ்விடத்துள்ளானென்னில்;)? (நாங்கூர், திருமணிக்கூடத்தான்)) வாள் எயிறு, Vaal Eiyiru - வாள்போன்ற கூர்மையான பற்களையுடையளாய் வல் பேய், Val Pei - கல்நெஞ்சளான பூதனையினுடைய கதிர் முலை, Kathir Mulai - (விஷத்தாலே) புகர் பெற்றிருக்கிற முலையை சுவைத்து, Suvaiththu - உறிஞ்சி உண்டவனாயும் இலங்கைவவ்விய, Ilankaiyavviya - லங்காபுரியைப் பற்றின இடும்பை, Idumpai - (சாக்ஷஸப் பூண்டுகள் நெருங்கியிருத்தலாகிற) கேடானது தீர, Theera - தொலையும்படியாக கடுங் கணை, Kadung Kanai - கடுமையான அம்புகளை துரந்த, Thurandha - (அவ்விலங்கையின் மீது) செலுத்தினவனாயுமுள்ள எந்தை, Endhai - ஸ்வாமியானவன் கொவ்வை வாய் மகளிர், Kovvai Vaai Makalir - கொவ்வைக்கனி போன்ற வாயையுடையரான பெண்கள் கொங்கை, Kongai - (தங்கள்) கொங்கைத் தடத்தினின்று குங்குமம், Kungumam - குங்குமச்சேறுகளை கழுவி, Kazhuvi - கழுவ, போந்த, Pondha - (அவற்றோடு கூடிப்) பெருகுகின்ற தெய்வம் நீர், Deivam Neer - திவ்யமான தீர்த்தமானது கமழும், Kamazhum - வாஸனை வீசப்பெற்ற |
| 1290 | பெரிய திருமொழி || (4-5–தூம்புடைப) (திருநாங்கூர்த் திருமணிக்கூடம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சேக்கள் உடைய வியாபாரத்தை மணல் கொட்டகம் அழிக்குமா போலே அழித்து ஸ்ரீ நப்பின்னை பிராட்டியார் உடைய செவ்வியை உடைத்தான தோள்களோடு புணர்ந்த என் ஸ்ரீ ஸ்வாமி- அவ் ஊரில் உள்ளாருக்கு அத்யயனமும் அனுஷ்டானமும் யாத்ரையாய் இருக்குமா போலே யாய்த்து அவனுக்கு விரோதி நிரசனம் யாத்ரையாய் இருக்கும் படி) 3 | மாத் தொழில் மடங்கச் செற்று மருதிற நடந்தவன் தாள்
சேத் தொழில் சிதைத்துப் பின்னை செவ்வித் தோள் புணைந்த வெந்தை
நாத் தொழில் மறை வல்லார்கள் நயந்தறம் பயந்த வண்கைத்
தீத் தொழில் பயிலு நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே –4-5-3 | பதவுரை Show / Hideமா தொழில் மடங்க செற்று, Maa Thozhil Madanga Settru - குதிரை வடிவுகொண்டு வந்த கேசியென்னும் அஸுரனுடைய (பராக்ரமச்) செயல்களெல்லாம் அடங்கும்படி செய்து (அவ்வஸுரனை) கொன்றொழித்தவனாயும் (- (எங்குள்ளானென்னில்;) (நாங்கூர், திருமணிக்கூடத்தான்)) மருது இற நடந்து, Maruthu Ira Nadandhu - மருதமரங்கள் இற்றுமுடிந்து விழும்படி தவழ்நடை கற்றவனாயும் வல் தாள் சே தொழில் சிதைத்து, Val Thaal Se Thozhil Sithaithu - வலிய கால்களையுடைய (ஏழு) ரிஷபங்களினுடைய வியாபாரத்தை பங்கப்படுத்தி பின்னை, Pinnai - நப்பின்னைப் பிராட்டியினுடைய செவ்வி தோள், Sevvi Thol - அழகிய தோள்களோடே புணர்ந்த, Punarndha - கலவி செய்தவனாயுமுள்ள எந்தை, Endhai - எம்பெருமான் நா தொழில் மறை வல்லார்கள், Naa Thozhil Marai Vallarhal - நாவுக்கு வியாபாரமான வேதங்களைக் கற்று வல்லவர்கள் நயந்து அறம் பயந்த, Nayandhu Aram Payandha - ஆசையோடே தருமங்களை யனுஷ்டித்த வண் கை தி தொழில் பயிலும், Van Kai Thi Thozhil Payilum - உதாரமான கைகளாலே அக்நி காரியங்களை இடை விடாது செய்யப்பெற்ற |
| 1291 | பெரிய திருமொழி || (4-5–தூம்புடைப) (திருநாங்கூர்த் திருமணிக்கூடம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவன் விரோதி நிரசனத்தால் அல்லது போது போக்க மாட்டாதாப் போலே யாய்த்து இவையும் ரச அனுபவத்தால் அல்லது போது போக்க மாட்டாதே இருக்கும் படியும்) 4 | தாங்கரும் சினத்து வன் தாள் தடக்கை மா மருப்பு வாங்கிப்
பூங்குருந்து ஒசித்துப் புள் வாய் பிளந்து எருது அடர்த்த எந்தை
மாங்கனி நுகர்ந்து மந்தி வந்து வண்டிரிய வாழைத்
தீங்கனி நுகரு நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே –4-5-4 | பதவுரை Show / Hideதாங்க அரு சினத்து, Thanga Aru Sinatthu - (ஒருவராலும்) தாங்கமுடியாத கோபத்தையுடையதும் (- (எவ்விடத்திலுள்ளானெனில்) (நாங்கூர், திருமணிக்கூடத்தான்)) வன் தாள், Van Thaal - வலியுள்ள கால்களையுடையதும் தட கை, Thad Kai - பெரிய துதிக்கையையுடையதுமான மா, Maa - (குவலயாபீடமென்னும்) யானையினுடைய மருப்பு வாங்கி, Maruppu Vaangi - தந்தத்தைப் பிடுங்கிப் போட்டவனாயும் பூ குருந்து ஒசித்து, Poo Kurunthu Osiththu - பூத்த குருந்த மரத்தை முறித் தொழித்தவனாயும் புள் வாய் பிளந்து, Pul Vaai Pilandhu - பகாஸுரனுடைய வாயைக் கிழித்தவனாயும் எருது அடர்த்த, Eruthu Adarththa - ரிஷபங்களை வலியடக்கினவனாயுமுள்ள எந்தை, Endhai - எம்பெருமான மா கனி நுகர்ந்த மந்தி, Maa Kani Nukarntha Mandhi - மாம்பழங்களைப் புஜித்த குரங்கானது வந்து, Vandhu - (அந்த மாமரத்தினின்றும் வாழை மரத்திலே) வந்து சேர்ந்து வண்டு இரிய, Vandu Iriya - (அங்கிருந்த) வண்டுகள் சிதறியோடும்படியாக தீம் வாழை கனி நுகரும், Theem Vaalai Kani Nukarum - இனிய வாழைப் பழங்களைப் புஜிக்கப்பெற்ற |
| 1292 | பெரிய திருமொழி || (4-5–தூம்புடைப) (திருநாங்கூர்த் திருமணிக்கூடம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஏறிட்டுக் கொடு வந்த துர்மானத்தைப் போக்கி தானான படியே யாக்கி விட்ட படி அவளுடைய செவியையும் மூக்கையும் வாளாலே அறுத்த என் ஸ்வாமி – ஸ்ரீ பூமிப் பிராட்டியாரும் ஸ்ரீ பெரிய பிராட்டியாரும் நித்ய வாசம் பண்ணா நின்றுள்ள ஸ்ரீ திரு நாங்கூர்) 5 | கருமகள் இலங்கையாட்டி பிலம் கொள் வாய் திறந்து தன் மேல்
வருமவள் செவியும் மூக்கும் வாளினால் தடித்த வெந்தை
பெருமகள் பேதை மங்கை தன்னொடும் பிரிவிலாத
திருமகள் மருவு நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே –4-5-5 | பதவுரை Show / Hideகருமகள், Karumagal - சண்டாள ஸ்த்ரிபோல் மிகவும் தண்ணியளாய் (- (எவ்விடத்திலுள்ளானெனில்,) (நாங்கூர், திருமணிக்கூடத்தான்)) இலங்கை யாட்டி, Ilankai Yaatti - லங்காபுரிக்கு அதிகாரம் செலுத்துமவளாய் பிலம் கொள் வாய்த் திறந்து தன்மேல் வருமவள், Pillam Kol Vayth Thirandhu Thanmel Varumaval - குஹைபோன்ற வாயைத் திறந்துகொண்டு தன்மேல் வந்தவளான சூர்ப்பணகையினுடைய செவியும் மூக்கும், Seviyum Mookkum - காதையும் மூக்கையும் வாளினால் தடிந்த எந்தை, Vaalinaal Thadindha Endhai - வாட்படையனால் அறுத்தொழிந்த ஸ்வாமி பெரு மகள், Peru Magal - பெருமைதாங்கிய ஸ்த்ரியாயும் பேதை, Pethai - (அடியாருடைய குற்றங்களை அறியாதவளாயுமிருக்கிற மங்கை, Mangai - பூமிப்பிராட்டியும் திரு மகள், Thiru Magal - பெரிய பிராட்டியும் தன்னொடும் பிரிவு இலாத, Thannodum Pirivu Iladha - தன்னைவிட்டு ஒரு நொடிப் பொழுதும் பிரியாதவர்களாய் மருவும், Maruvum - பொருந்தியிருக்கப்பெற்ற |
| 1293 | பெரிய திருமொழி || (4-5–தூம்புடைப) (திருநாங்கூர்த் திருமணிக்கூடம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தனக்குப் போராத ஜன்மங்களிலே வந்து பிறந்து ரஷகன் ஆனவன் தானான நிலையிலே காணலாம் படி திரு மணிக் கூடத்திலே வந்து சந்நிஹிதன் ஆனான் என்கிறார்) 6 | கெண்டையும் குறளும் புள்ளும் கேழலும் அரியும் மாவும்
அண்டமும் சுடரும் அல்லா ஆற்றலும் ஆய வெந்தை
ஒண் திறல் தென்னனோடே வடவரசு ஓட்டம் கண்ட
திண் திறலாளர் நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே –4-5-6 | பதவுரை Show / Hideகெண்டையும் குறளும் புள்ளும் கேழலும் அரியும் மாவும், Kendaiyum Kurallum Pullum Kezhallum Ariyum Mavum - (ஆகிய இவ்வவதாரங்களை உடையனாய்) மத்ஸ்யமும் வாமநனும்ஹம்ஸ பக்ஷியும் வராஹமும் நரசிம்ஹமும் ஹயக்ரிவனும் (- (எவ்விடத்திலுள்ளானெனில்;) (நாங்கூர், திருமணிக்கூடத்தான்)) அண்டமும், Andamum - ப்ரஹ்மாண்டமும் சுடரும், Sudarum - ஸூர்ய சந்திரர்களும் அல்லா ஆற்றலும், Allaa Aatralum - மற்றுமுள்ள சிறந்த வஸ்துக்களும் ஆய, Aaya - தானேயாயிருக்கிற எந்தை, Endhai - எம்பெருமான் ஓண் திறல் தென்னன் ஓட, Oon Thiral Thenan Oda - மிக்கபலத்தை யுடையனான பாண்டியராஜன் தோற்று ஓடும்படியாகவும் வட அரசு ஓட்டம் கண்ட, Vada Arasu Oottam Kanda - பாண்டியதேசத்துக்கு வடக்கிலுள்ள சோளதேசத்துக்கு அரசனானசோழனைத் தோற்று ஓடும்படியாகவும் பண்ணின. திண் திறலாளர், Thin Thiralalar - மஹா பலசாலிகள் வாழ்கிற |
| 1294 | பெரிய திருமொழி || (4-5–தூம்புடைப) (திருநாங்கூர்த் திருமணிக்கூடம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பரார்தமான பதார்த்தங்களுக்கு நியந்தாவான ஸ்ரீ சர்வேஸ்வரன் இங்கே வந்து வர்த்தியா நின்றான்-என்கிறார்) 7 | குன்றமும் வானும் மண்ணும் குளிர் புனல் திங்களோடு
நின்ற வெஞ்சுடரும் அல்லா நிலைகளுமாய வெந்தை
மன்றமும் வயலும் காவும் மாடமும் மணம் கொண்டு எங்கும்
தென்றல் வந்துலவு நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே –4-5-7 | பதவுரை Show / Hideகுன்றமும், Kundramum - மலைகளும் (- (எவ்விடத்திலுள்ளானெனில்;) (நாங்கூர், திருமணிக்கூடத்தான்)) வானும், Vaanum - ஆகாசமும் மண்ணும், Mannum - பூமியும் குளிர் புனல், Kulir Punal - குளிர்ச்சியே இயற்கையான நீரும் திங்களோடு, Thingalodu - சந்திரனும் நின்ற, Nindra - நிலைநின்ற வெம் சுடரும், Vem Sudarum - ஸூர்யனும் அல்லா நிலைகளும், Allaa Nilaihalum - மற்றுமுள்ள நக்ஷத்ராதி ஸ்திதியும் ஆய, Aaya - தானேயாயிருக்கப்பெற்ற எந்தை, Endhai - எம்பெருமான் மன்றமும், Manramum - பெரிய வீதிகளும் வயலும், Vayalum - கழனிகளும் காவும், Kaavum - தோட்டங்களும் மாடமும், Maadum - மாட மாளிகைகளும் ஆகிய எங்கும், Engum - எல்லாவிடங்களிலும் தென்றல், Thendral - தென்றல் காற்றானது மணம் கொண்டு, Manam Kondo - பரிமளத்தை வீசிக்கொண்டு வந்து உலவும், Vandhu Ulavum - ஸஞ்சரிக்கப்பெற்ற |
| 1295 | பெரிய திருமொழி || (4-5–தூம்புடைப) (திருநாங்கூர்த் திருமணிக்கூடம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (த்யாஜ்யமாயும் உபாதேயமாயும் பௌதிகமாயும் உள்ள பதார்த்தங்களுக்கு நியந்தா வானவன் இங்கே வந்து வர்த்தியா நின்றான் என்கிறார்) 8 | சங்கையும் துணிவும் பொய்யும் மெய்யும் இத்தரணி ஓம்பும்
பொங்கிய முகிலும் அல்லாப் பொருள்களுமாய வெந்தை
பங்கயம் உகுத்த தேறல் பருகிய வாளை பாயச்
செங்கயல் உகளு நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே –4-5-8 | பதவுரை Show / Hideசங்கையும், Sangaiyum - ஸந்தேஹமும் (- (எவ்விடத்திலுள்ளானெனில்) (நாங்கூர், திருமணிக்கூடத்தான்)) துணிவும், Thunivum - நிச்சயமும் பொய்யும், Poyyum - அஸத்யமும் மெய்யும், Meiyyum - ஸத்யமும் இத் தரணி ஓம்பும், Ith Tharani Oombum - இப்பூமண்டலத்தை ரக்ஷிக்கின்ற பொங்கிய முகிலும், Pongiya Mukilum - பரம்பின மேகங்களும் எல்லா பொருள்களும், Ella Porulkalum - மற்றுமுள்ள வஸ்துக்களும் ஆய, Aaya - தானேயாயிருக்கப்பெற்ற எந்தை, Endhai - எம்பெருமான் பங்கயம் உகுத்த தேறல் பருகிய வாளை பாய, Pangayam Ukutha Therhal Parugiya Vaalai Paaya - தாமரைப் பூவானது வெளிப்படுத்தின மகரந்தத்தை பானம்பண்ணின வாளை மீன்கள் குறுக்கும் நெடுக்கும் பாய்ந்து விளையாட செம் கயல், Sem Kayal - சிவந்த கயல் மீன்கள் உகளும், Ugalum - (அவற்றுக்கு அஞ்சித்) துள்ளுமிடமான |
| 1296 | பெரிய திருமொழி || (4-5–தூம்புடைப) (திருநாங்கூர்த் திருமணிக்கூடம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நிஷித்த அனுஷ்டானம் -விஹித அனுஷ்டானம்-மோஷம்-மோஷத்துக்கு உபயோகியான ஆத்ம குணங்கள் அதுக்கு விரோதியான அநாத்ம குணங்கள்-இவற்றுக்கு எல்லாம் நியந்தா வானவன் இங்கே வந்து வர்த்தியா நிற்கிறான் என்கிறார்) 9 | பாவமும் அறமும் வீடும் இன்பமும் துன்பமும் தானும்
கோவமும் அருளும் அல்லாக் குணங்களும் ஆய வெந்தை
மூவரில் எங்கள் மூர்த்தி இவன் என முனிவரோடு
தேவர் வந்து இறைஞ்சு நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே –4-5-9 | பதவுரை Show / Hideபாவமும், Paavamum - பாபமும் (- (எவ்விடத்திலுள்ளானென்னில்) (நாங்கூர், திருமணிக்கூடத்தான்)) அறமும், Aramum - புண்யமும் வீடும், Veedum - மோக்ஷமும் இன்பமும், Inbamum - ஸுகமும் துன்பம் தானும், Thunbam Thaanum - துக்கமும் கோவமும், Kovamum - கோபமும் அருளும், Arulum - அநுக்ரஹமும் அல்லா குணங்களும், Allaa Gunangalum - மற்றுமுள்ள ஸத்வம் முதலிய குணங்களும் ஆய, Aaya - தானேயாயிருக்கிற எந்தை, Endhai - எம்பெருமான் மூவரில் எங்கள் மூர்த்தி இவன் என, Mooviril Engal Moorthi Ivan Ena - ‘ப்ரஹ்ம விஷ்ணு’ ருத்ரர்களாகிற மூன்று மூர்த்திகளுள் நாங்கள் ஆச்ரயிக்கத்தக்க மூர்த்தி இந்த விஷ்ணுவே’ என்று தெளிந்து முனிவரோடு தேவர், Munivaroatu Thevar - மஹர்ஷிகளும் தேவதைகளும் வந்து இறைஞ்சும், Vandu Irainchum - வந்து வணங்குமிடமான |
| 1297 | பெரிய திருமொழி || (4-5–தூம்புடைப) (திருநாங்கூர்த் திருமணிக்கூடம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இத்தை வல்லவர்கள் கடல் சூழ்ந்த பூமியை ஆண்டு ஸ்வர்க்கத்தை நிர்வஹித்து அதுக்கு மேலே ஆதித்ய மண்டலத்தின் நடுவிட்டு ஸ்ரீ அர்ச்சிராதி மார்க்கமே போய் பரமபதத்திலே சென்று ஸ்வ ஸ்வரூபத்தை பெற்று உஜ்ஜ்வலராவர் சர்வ நிர்வாஹகன் -சர்வ அபேஷித ப்ரதன் -விரோதி நிரசன சீலன்-விரோதி நிவ்ருத்த பூர்வக பல ப்ரதத்வம் அதிகாரிகள் பேதம் பற்ற அருளிச் செய்கிறார்) 10 | திங்கள் தோய் மாட நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானை
மங்கையர் தலைவன் வண்டார் கலியன் வாயொலிகள் வல்லார்
பொங்கு நீருலகம் ஆண்டு பொன்னுலகு ஆண்டு பின்னும்
வெங்கதிர்ப் பருதி வட்டத்தூடு போய் விளங்குவாரே –4-5-10 | பதவுரை Show / Hideதிங்கள் தோய் மாடம் நாங்கூர், Thingal Thoi Maadam Naangoor - சந்திர மண்டலத்திலே போய்ப் படிந்திருக்கிற மாடங்களையுடைய திருநாங்கூரிலுள்ள திருமணிக் கூடத்தானை, Thirumanik Koodaththanai - திருமணிக்கூடமென்னுந் திருப்பதியிலெழுந்தருளியுள்ள எம்பெருமான் விஷயமாக, மங்கையர் தலைவன், Mangaiyar Thalaivan - திருமங்கையிலுள்ளார்க்குத் தலைவரும் வண் தார், Van Thaar - அழகிய மாலையை யணிந்தவருமான கலியன், Kaliyan - ஆழ்வார் வாய், Vaai - திருவாய்மலர்ந்தருளிய ஒலிகள், Oligal - இப்பாசுரங்களை வல்லார், Vallar - ஓதவல்லவர்கள், பொங்கு நீர் உலகம் ஆண்டு, Pongu Neer Ulagam Aandu - கடல் சூழ்ந்த இவ்வுலகை அரசாட்சி புரிந்து (அதன் பிறகு) பொன் உலகு ஆண்டு, Pon Ulagu Aandu - ஸ்வர்க்கலோகத்தை அனுபவித்து பின்னும், Pinnum - அதற்குமேலும் வெம் கதிர் பரிதி வட்டத்தூடு போய், Vem Kadhir Paridhi Vattathoodu Poi - வெவ்விய கிரணங்களையுடையனான ஸூர்யனுடைய மண்டலத்தின் வழியேசென்று விளங்குவார், Vilanguvaar - (பரமபதத்தில்) வாழப்பெறுவர். |