திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1298 | பெரிய திருமொழி || (4-6–தாவளந்து) (திருநாங்கூர்க் காவளம்பாடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (முதலையாலே இடர்பட்ட யானை தன்னை நோக்கிக் கொள்ளுதல் அம்முதலை இத்தை நோக்குதல் செய்ததோ பாதகமானது ரஷகம் ஆக மாட்டாதே அந்த ஆனையினுடைய ஸ்தானே யாய்த்து நான் முதலையினுடைய ஸ்தானே யாய்த்து பிறர்) 1 | தா வளந்துலகம் முற்றும் தட மலர்ப் பொய்கை புக்கு
நாவள நவின்று அங்கே ஏத்த நாகத்தின் நடுக்கம் தீர்த்தாய்
மாவளம் பெருகி மன்னு மறையவர் வாழும் நாங்கைக்
காவளம் பாடி மேய கண்ணனே களை கண் நீயே –4-6-1 | பதவுரை Show / Hideஉலகம் முற்றும் தாவளந்து, Ulagam Mutrum Thaavalandhu - உலகமடங்கலும் தட்டித்தரிந்து (- (தாமரைப்பூ ஸம்பாதிப்பதற்காக)) தடம் மலர் பொய்கை புக்கு, Thadam Malar Poigai Pukku - பெரிதான பூக்களையுடைத்தான ஒரு தடாகத்தில் இறங்கி அங்கு, Angu - அங்கு (முதலையினால் கவ்வப்பட்டு) நா வளம் நவின்று ஏத்த, Naa Valam Navinru Aetha - நாவுக்கு அலங்காரமான திருநாமங்களை சொல்லித்துதிக்க நாகத்தின் நடுக்கம் தீர்த்தாய், Naagaththin Nadukkam Theerththaa - கஜேந்திராழ்வானுடைய அச்சத்தை போக்கினவனே!, மா வனம் பெருகி, Maa Vanam Perugi - மிக்க செல்வமானது அதிகமாகி மன்னு, Mannu - பொருந்தியிருக்கப்பெற்ற மறையவர் வாழும் நாங்கை, Maraiyavar Vaalum Naangkai - வைதிகர்கள் வாழ்ந்திருக்குமிடமான திருநாங்கூரில் காவளம்பாடி மேய, Kaavalampadi Maeya - திருக்காவளம்பாடி யென்னுந்திருப்பதியில் நித்யவாஸம் பண்ணுகிற கண்ணனே, Kannane - கண்ணபிரானே! நீயே களைகண், Neeye Kalaikkan - நீயே ரக்ஷகனாகவேணும்…. |
| 1299 | பெரிய திருமொழி || (4-6–தாவளந்து) (திருநாங்கூர்க் காவளம்பாடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவ் ஊரில் உள்ளாருக்கு இந்த்ராதிகள் படி இல்லை யாய்த்து அவனை இரப்பாளன் ஆக்கி தாங்கள் வயிறு வளரார்கள் ஆய்த்து மகா ராஜரைப் போலே தங்களை அழிய மாறி நோக்குவர்கள்) 2 | மண் இடந்து ஏனமாகி மாவலி வலி தொலைப்பான்
விண்ணவர் வேண்டச் சென்று வேள்வியில் குறை இரந்தாய்
துண்ணென மாற்றார் தம்மைத் துலைத்தவர் நாங்கை மேய
கண்ணனே காவளந்தண் பாடியாய் களை கண் நீயே –4-6-2 | பதவுரை Show / Hideஎனம் ஆகி மண் இடந்து, Enam Aagi Mann Idandhu - ஆதிவராஹமாகி (அண்டபித்தியில் அழுந்திக்கிடந்த) பூமியைப் பிரித்துக் கொணர்ந்தவனாயும் (- (சாவளந்தண்பாடியாய்! கண்ணனெ!) (நீயே களைகண்.)) மாவலி வலி தொலைப்பான், Maavali Vali Tholaippaan - மஹாபலியினுடைய மிடுக்கைப்போக்குமாறு விண்ணவர் வேண்ட, Vinnavar Venda - தேவர்கள் யாசிக்க (அதற்கிணங்கி) வேள்வியில் சென்று, Velviyil Sendru - (அந்த மாவலியின்) யாக பூமியில் எழுந்தருளி குறை இரந்தாய், Kurai Irandhaai - தனக்கு வேண்டியதை யாசித்துப் பெற்றவனே!, மாற்றார் தம்மை துண்ணென தொலைத்தவர் நாங்கை மேய, Maatraar Thammai Thunnena Tholaiththavar Naangkai Maeya - பகைவர்களைச் சீக்கிரமாக வென்று ஒழித்தவர்கள் வாழ்கிற திருநாங்கூரில் பொருந்தியிருக்கிற |
| 1300 | பெரிய திருமொழி || (4-6–தாவளந்து) (திருநாங்கூர்க் காவளம்பாடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (உனக்கு முடி தந்த ப்ரஹ்மாதிகள் உடைய ஐஸ்வர்யம் போல் அன்றிக்கே ஊற்று மாறாத சம்பத்து உடையவன் சுக்ரீவன் ஆகையாலே காண் அவன் முடி பெற்றது) 3 | உருத்தெழு வாலி மார்வில் ஒரு கணை யுருவ வோட்டிக்
கருத்துடைத் தம்பிக்கு இன்பக் கதிர்முடி யரசளித்தாய்
பருத்தெழு பலவும் மாவும் பழம் விழுந்து ஒழுகு நாங்கைக்
கருத்தனே காவளந்தண் பாடியாய் களை கண் நீயே –4-6-3 | பதவுரை Show / Hideஉருத்து எழு வாலி மார்பில் உருவ, Uruthu Ezhuthu Vaali Maarbil Uruva - கோபங்கொண்டு கிளம்பி வந்த வாலியினுடைய மார்பிலே தைக்கும்படி (- (காவளந்தண்பாடியாய்!;) (நீயே களை கண்)) ஒரு கணை ஒட்டி, Oru Kanai Otti - ஒரு பாணத்தைப் பிரயோகித்து (அவனைக் கொன்று) கருத்து உடை தம்பிக்கு, Karuthu Udai Thambikku - தன் திருவுள்ளத்திற்குப் பொருந்தினவனான ஸுக்ரிவனுக்கு இன்பம் கதிர் முடி அரசு அளித்தாய், Inbam Kathir Mudi Arasu Aliththaa - ஆனந்தகரமான ஒளிபொருந்திய கிரீடத்தையும் ராஜ்யத்தையும் கிருபைபண்ணினவனே!, பருத்து எழு பலவும் மாவும் பழம், Paruthu Ezhuthu Palavum Maavum Pazham - பருமனாய்க்கொண்டு முளைக்கின்ற பலாமரங்களினுடையவும் மாமரங்களினுடையவும் பழங்களானவை விழுந்து ஒழுகும் நாங்கை, Vizhundhu Ozhugum Naangkai - கீழேவிழுந்து தேன் வெள்ளமிடா நிற்கப்பெற்ற திருநாங்கூரிலுள்ள கருத்தனே, Karuththanae - எல்லாவற்றுக்கும் கர்த்தாவாயிருப்பவனே! |
| 1301 | பெரிய திருமொழி || (4-6–தாவளந்து) (திருநாங்கூர்க் காவளம்பாடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ராஜத் துரோகத்தைப் பார்த்தால் சம்பந்தம் உள்ள இடம் எங்கும் அழியச் செய்ய வேண்டி இருக்க அவன் தம்பிக்கே கொடுத்தான் ஆய்த்து) 4 | முனை முகத்து அரக்கன் மாள முடிகள் பத்து அறுத்து வீழ்த்து ஆங்கு
அனையவற்கு இளையவற்கே யரசு அளித்து அருளினானே
சுனைகளில் கயல்கள் பாயச் சுரும்பு தேனுகரு நாங்கைக்
கனை கழல் காவளந்தண் பாடியாய் களை கண் நீயே –4-6-4 | பதவுரை Show / Hideமுனை முகத்து அரக்கண் மாள, Munai Mugaththu Arakkan Maala - யுத்தகளத்திலே இராவணன் முடியும்படியாக (- (காவளந்தண்பாடியாய்!;) (நீயே களைகண்)) பத்து முடிகள் அறுத்து வீழ்த்து, Paththu Mudigal Aruththu Veelththu - (அவனது) பத்துத் தலைகளையும் அறுத்துத் தள்ளி ஆங்கு, Aangu - அந்த லங்கையிலே அனையவற்கு இளையவற்கே, Anaiyavarkku Ilaiyavarkke - அப்படிப்பட்ட ராவணனுடைய தம்பியான விபீஷணனுக்கு அரசு அளித்தருளினானே, Arasu Alitharulinane - ராஜ்யத்தைத் தந்தருளினவனே!, சுனைகளில் கயல்கள் பாய, Sunaiyil Kayalgal Paaya - நீர்நிலைகளில் கயல்மீன்கள் அஞ்சித் துள்ளயோடும்படியாக சுரும்பு தேன் நுகரும், Surumbu Then Nukarum - வண்டுகளானவை (ஆரவாரத்துடனே) தேனைப் பருகுமிடமான நாங்கை, Naangkai - திருநாங்கூரில் கனை கழல், Kanai Kazhal - ஒலிக்கின்ற வீரத்தண்டையை யுடையனாய்க் கொண்டு |
| 1302 | பெரிய திருமொழி || (4-6–தாவளந்து) (திருநாங்கூர்க் காவளம்பாடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஆஸ்ரித சம்ரஷணத்துக்கும் அநாஸ்ரித சம்ஹாரத்துக்கும் உறுப்பாக ஸ்ரீ பிராட்டியோடே நித்ய சம்ச்லேஷமாய் செல்லா நிற்கும் கடவுள் என்று பர தேவதை என்ற படியாய் சர்வாதிகனான நீயே சந்நிஹிதனாய் இருக்க நான் வேறு ஒருவரைத் தேடித் போகவோ) 5 | பட வரவுச்சி தன்னில் பாய்ந்து பன்னடங்கள் செய்து
மடவரல் மங்கை தன்னை மார்வகத்து இருத்தினானே
தடவரை தங்கு மாடத் தகு புகழ் நாங்கை மேய
கடவுளே காவளந்தண் பாடியாய் களை கண் நீயே –4-6-5 | பதவுரை Show / Hideபடம் அரசு உச்சி தன் மேல் பாய்ந்து, Padam Arasu Uchi Than Mel Paayndhu - (விரிக்கப்பட்ட) படங்களை யுடையனான காளிய நாகத்தினுடைய முடிமீது குதித்து (- (காவளந்தண்பாடியாய்!;) (கடவுளே ஸர்வாதிகனே!) (நீயே களைகண்)) பல் நடங்கள் செய்து, Pal Nadangal Seidhu - அனேக விதங்களான நர்த்தனங்களைச் செய்தவனாயும் மடவரல் மங்கை தன்னை, Madarval Mangai Thannai - மடமைக் குணம் வாய்ந்த பெரியபிராட்டியாரை மார்வகத்து, Marvagathu - திருமார்பிலே இருத்தினானே, Iruthinane - நித்யமாக வைத்துக்கொண்டவனாயுமிருக்கிற பெருமானே!, துடவரை மாடம் தங்கு தகு புகழ் நாங்கை மேய, Thudavarai Maadam Thangu Thagu Pugazh Naangkai Maeya - பெரிய மலைகள் போன்ற மாளிகைகள் பொருந்தியதும் தகுதியான புகழையுடையதுமான திருநாங்கூரில் மேவியிருக்கின்ற |
| 1303 | பெரிய திருமொழி || (4-6–தாவளந்து) (திருநாங்கூர்க் காவளம்பாடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இவருடைய உபாயம் ஸூ ரஷிதமாக பெற்றது ஆய்த்து ஸூ ரஷிதமான உபாயத்தை விட்டு வேறு ஒன்றைத் தேடித் போகவோ) 6 | மல்லரை யட்டு மாளக் கஞ்சனை மலைந்து கொன்று
பல்லரசவிந்து வீழப் பாரதப் போர் முடித்தாய்
நல்லரண் காவின் நீழல் நறை கமழ் நாங்கை மேய
கல்லரண் காவளந்தண் பாடியே களை கண் நீயே –4-6-6 | பதவுரை Show / Hideமல்லரை மாள அட்டு, Mallarai Maala Attu - மல்லர்களை மாளும்படி பொசித்து (- (காவளந்தண்பாடியாய்!,) (நீயே களைகண்)) கஞ்சனை மலைந்து கொன்று, Kanjanai Malaindhu Konru - கம்ஸனை எதிரிட்டுச் சென்று கொன்றொழித்து, பல் அரசு அவிந்து வீழ பாரதம் போர் முடித்தாய், Pal Arasu Avinthu Veel Bharatham Por Mudiththai - பல்லாயிரம் ராஜாக்கள் நாசமடையும்படி பாரதயுத்தத்தை நிறைவேற்றினவனே!, நல் அரண் காவின் நீழல் நறை கமழ் நாங்கை மேய, Nal Aran Kaavin Neezhal Narai Kamazh Naangkai Maeya - நல்ல அரணாகப் போரும்படியான சோலைகளினுடைய நிழலிலே பரிமளம் வீசப்பெற்ற திருநாங்கூரில் பொருந்தி வாழ்கிற கல் அரண், Kal Aran - கல்மதிளை யுடைத்தான |
| 1304 | பெரிய திருமொழி || (4-6–தாவளந்து) (திருநாங்கூர்க் காவளம்பாடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஏதத் விரதம் மம -என்கிறபடியே இத்தை அடைய ரஷிக்கைக்காக காவல் பூண்டு இருக்கிறவனே ரஷிக்கக் கடவதாக ஏறிட்டுக் கொண்டு அசந்நிஹிதனாய் இருக்கை அன்றிக்கே ஸ்ரீ திருக் காவளம் பாடியிலே சந்நிஹிதனான நீயே எனக்கு ரஷகனாக வேணும்) 7 | மூத்தவருக்கு அரசு வேண்டி முன்பு தூது எழுந்து அருளி
மாத்தமர் பாகன் வீழ மதகரி மருப்பு ஒசித்தாய்
பூத்தமர் சோலை யோங்கிப் புனல் பரந்து ஒழுகு நாங்கைக்
காத்தேன் காவளந்தண் பாடியாய் களை கண்நீயே –4-6-7 | பதவுரை Show / Hideமுன்பு, Munbu - முன்பொருகால் (- (நாங்கை, காவளந்தண்பாடியாய்;) (நீயே களைகண்)) மூத்தவற்கு அரசு வேண்டி தூது எழுந்தருளி, Moothavarkku Arasu Vendi Thoodhu Ezhundharuli - பாண்டவர்களில் தலைவனான தருமபுத்திரனுக்கு ராஜ்யமளிக்க விரும்பித் தூது சென்றவனாய், மாத்து அமர் பாகன் வீழ மத கரி மருப்பு ஒசித்தாய், Maathu Amar Paagan Veez Madha Kari Maruppu Osiththai - மத்தகத்தின் மீது பொருந்தியிருந்த பாகனானவன் விழுந்து முடியும்படி (குவலயா பீடமென்னும்) மத யானையினுடைய தந்தங்களை முறித் (து அந்த யானையை ஒழித்)தவனே! பூத்து அமர் சோலை ஓங்கி, Poothu Amar Solai Ongi - புஷ்பித்து (வரிசையாகப்) பொருந்தியிருக்கிற சோலைகளானவை உயர்ந்து வளர்ந்திருக்கப் பெற்றதும் புனல் பறந்து ஒழுகும், Punal Parandhu Ozhugum - ஜலமானது (அச்சோலைகளைச் சுற்றி) வியாபித்து பாயா நிற்கப்பெற்றதுமான காத்தனே, Kaaththanae - ரக்ஷகனே!, |
| 1305 | பெரிய திருமொழி || (4-6–தாவளந்து) (திருநாங்கூர்க் காவளம்பாடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தர்ச நீயமான பூக்களை உடைத்தான பொழிலாலே சூழப் பட்ட இந்த்ரன் ஏற்றின ஸ்ரீ திரு நாங்கூரிலே ஸ்வர்க்கத்தில் உண்டான வேண்டப்பாடு பூமிக்கும் உண்டாக வேணும் என்று அக் கட்டளையாலே இந்த்ரனாலே சமைக்கப் பட்டது ஸ்ரீ திரு நாங்கூர் என்று சொல்லக் கடவது அன்று அப்படி ஸ்ரீ சத்ய பாமை பிராட்டிக்கு உதவினது எல்லாருக்கும் ஒக்க உதவுகைக்காக ஸ்ரீ திருக் காவளம் பாடியிலே வந்து சந்நிஹிதனான நீயே ரஷகனாக வேணும்) 8 | ஏவிளம் கன்னிக்காகி இமையவர் கோனைச் செற்று
காவளம் கடிது இறுத்துக் கற்பகம் கொண்டு போந்தாய்
பூ வளம் பொழில்கள் சூழ்ந்த புரந்தரன் செய்த நாங்கைக்
காவளம் பாடி மேய கண்ணனே களை கண் நீயே –4-6-8 | பதவுரை Show / Hideஇள கன்னிக்கு ஆகி, Ila Kannikku Aagi - இளம்பெண்ணாகிய ஸத்யபாமைப் பிராட்டிக்காக (- (காவளம்பாடி மேய கண்ணனே!) (நீயே களை கண்)) ஏவு இமையவர் கோனை செற்று, Aevu Imaiyavar Konai Settru - யுத்தத்திலே தேவேந்திரனைப் பங்கப்படுத்தி கடிது கா வளம் இறுத்து, Kadithu Kaa Valam Iruththu - சீக்கிரமாக நந்தவனத்தின் அழகை அழித்து கற்பகம், Karppagam - கல்பவ்ருக்ஷத்தை கொண்டு போந்தாய், Kondhu Ponthaai - (த்வாரகையில்) கொண்டு வந்து நட்டவனே!, பூவளம் பொழில்கள் சூழ்ந்த, Poovalam Pozhilgal Soozhntha - புஷ்பங்களின் வளம்பொருந்திய சோலைகளாலே சூழப்பட்டதாய் புரந்தரன் செய்த, Purandharan Seitha - இந்திரனால் ஏற்படுத்தப்பட்டதான நாங்கை, Naangkai - திருநாங்கூரில் |
| 1306 | பெரிய திருமொழி || (4-6–தாவளந்து) (திருநாங்கூர்க் காவளம்பாடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கார்யாவஸ்தமாயும் காரணாவஸ்தமாயும் போருகிறது ஸ்ரீ ப்ரஹ்மம் ஒன்றுமே என்று வேதங்களால் பிரதிபாதிக்கப் படுபவனுமாய் ஸ்ரீ திரு நாங்கூரிலே-சர்வ கந்த -என்கிற வஸ்து நித்ய வாஸம் பண்ணுகிற தேசம் என்று தோற்றும்படி இருக்கும் ஆய்த்து இப்படி நிரதிசய போக்யனான நீயே ரஷகனாக வேணும்) 9 | சந்தமாய்ச் சமயமாகிச் சமய வைம்பூதமாகி
அந்தமா யாதியாகி யருமறை யவையும் ஆனாய்
மந்தமார் பொழில்கள் தோறும் மட மயிலாலு நாங்கைக்
கந்தமார் காவளந்தண் பாடியாய் களை கண் நீயே –4-6-9 | பதவுரை Show / Hideசந்தம் ஆய், Sandham Aayi - சந்தஸ்ஸுக்கு நியாமகனாய் (- (காவளந்தன்பாடியாய்!;) (நீயே களை கண்)) சமயம் ஆகி, Samayam Aagi - அவற்றின் வ்யவஸ்தைகளுக்கும் நியாமகனாய் சமயம் ஐ பூதம் ஆகி, Samayam Ai Poodham Aagi - வ்யவஸ்தையோடு கூடின பஞ்ச பூதங்களுக்கும் நியாமகனாய் அந்தம் ஆய், Andham Aayi - உலக முடிவுக்கு காரணபூதனாய் ஆதி ஆகி, Aadhi Aagi - உலக ஸ்ருஷ்டிக்கும் காரண பூதனாய் அரு மறை அவையும் ஆனாய், Aru Marai Avaiyum Aanaai - அருமையான வேதங்களுக்கும் நிர்வாஹகனாயிருக்கும் பெருமானே! மந்தம் ஆர் பொழில்கள் தோறும் மடம் மயில் ஆலும் நாங்கை, Mandham Aar Pozhilgal Thorum Madham Mayil Aalum Naangkai - பாரிஜாத மரங்கள் பொருந்திய சோலைகளெங்கும் அழகிய மயில்களானவை கூத்தாடாநிற்குமிடமான திருநாங்கூரில் கந்தம் ஆர், Kandham Aar - பரிமளம் நிறைந்த |
| 1307 | பெரிய திருமொழி || (4-6–தாவளந்து) (திருநாங்கூர்க் காவளம்பாடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (திருக் காவளம் பாடியிலே வந்து நித்ய வாஸம் பண்ணுகிற கிருஷ்ணனை கிருஷ்ண அவதாரம் பர தசையோடு ஒக்கச் சொல்லலாம் படி இறே இங்குத்தை சௌலப்யம் இப்பத்தையும் வல்லவர்-மோஷத்தை பலமாகச் சொல்லில் அதிகாரிகள் கிடையாது -என்று அபிமத சாதனம் என்னவே கற்பர்கள் பின்னை மோஷத்தில் கொடு போய் மூட்டுகிறோம் -என்று-ஐஸ்வர்யத்தை பலமாகச் சொல்லிற்று) 10 | மாவளம் பெருகி மன்னு மறையவர் வாழு நாங்கைக்
காவளம் பாடி மேய கண்ணனை கலியன் சொன்ன
பாவளம் பத்தும் வல்லார் பார்மிசை அரசராகிக்
கோவிள மன்னர் தாழக் குடை நிழல் பொலிவர் தாமே –4-6-10 | பதவுரை Show / Hideமா வளம் பெருகி மன்னு மறையலர் வாழும் நாங்கை, Maa Valam Perugi Mannu Maraiyalar Vaalum Naangkai - மிக்க செல்வமானது அபிவிருத்தியடைந்து பொருந்தியிருக்கிற வைதிகர்கள் வாழுமிடமான திருநாங்கூரில் காவளம்பாடி மேய கண்ணனை, Kavalampadi Mey Kannanai - திருக்காவளம்பாடியில் எழுந்தருளியுள்ள எம்பொருமான் விஷயமாக கலியன் சொன்ன, Kaliyan Sonna - திருமங்கையாழ்வாரருளிச் செய்த வளம் பா பத்தும் வல்லார் தாம், Valam Paa Pathum Vallar Thaam - அழகுபொருந்திய இப்பாசுரங்கள் பத்தையும் ஓதவல்லவர்கள் பார் மிசை அரசர் ஆகி, Paar Misai Arasar Aagi - பூமியிலே, அரசர்களாயிருந்து கொண்டு கோ இள மனனர் தாழ, Ko Ilamana Thaa - (மற்றுள்ள) ராஜாக்களும் இளவரசர்களும் வணங்குமாறு குடை நிழல் பொலிவர், Kudai Nizhal Polivar - ஒற்றைக்குடை நிழலில் விளங்கப்பெறுவர் |