| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 402 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || எட்டாம் திருமொழி - மாதவத்தோன் (திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை 1) தரவு கொச்சகக்கலிப்பா 1 | மாதவத்தோன் புத்திரன் போய் மறி கடல் வாய் மாண்டானை ஓதுவித்த தக்கணையா உருவுருவே கொடுத்தானூர் தோதவத்தித் தூய் மறையோர் துறை படியத் துளும்பி எங்கும் போதில் வைத்த தேன் சொரியும் புனலரங்க மென்பதுவே –4-8-1 | மறி,Mari - அலையெறியா நின்றுள்ள கடல்வாய் போய்,Kadalvaai Poi - கடலிற் புகுந்து மாண்டானை,Maandaanai - முதலைவாயி லகப்பட்டு உயிரொழிந்த மாதவத்தோன் புத்திரன்,Maadhavaththon Puththiran - மஹா தபஸ்வியான ஸாந்தீபிணியினுடைய பிள்ளையை ஒதுவித்த தக்கணையா,Othuvitha Thakkanaiyaa - (ஸாந்திபிகி தன்னை) அத்யாகம் பண்ணுவித்ததற்கு தக்ஷிணையாக உரு உருவே,Uru Uruve - (அப்புத்திரன் மரணமடையும் போதுள்ள ரூபம் மாறாதபடி) யதா ரூபமாக கொடுத்தான்,Koduththaan - (கொணர்ந்து) கொத்தருனின எம்பெருமானுடைய ஊர்,Oor - திருப்பதியாவது; தோதவத்தி,Thothavathi - பரிசுத்தமாகத் தோய்த்து உலர்த்தின வஸ்திரங்களை அணியா நிற்பவரும் தூய் மறையோர்,Thooy Maraiyoor - நிர்த்தோஷ ப்ரமாணமான வேதத்தைத் தமக்கு நிரூபகமாக வுடையவருமான ஸ்ரீவைஷ்ணவர்கள் துறை,Thurai - காவேரித் துறைகளில் படிய,Padiya - அவகாஹிக்க (அதனால்) எங்கும்,Engum - அக் காவேரி முழுதும் துளும்பி,Thulumbi - அலை மோதப் பெற்று (அதனால் தாமரை மலர்களின் கானங்கள் அலைய) போதில்,Pothil - (அந்தப்) பூக்களில் வைத்த,Vaiththa - இரா நின்றுள்ள தேன்,Then - தேனானது சொரியும்,Soriyum - பெருகப் பெற்ற புனல்,Punal - நீரை யுடைய அரங்கம் என்பது,Arangam Enbathu - திருவாங்கமென்னுந் திருப்பதியாம். |
| 403 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || எட்டாம் திருமொழி - மாதவத்தோன் (திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை 1) தரவு கொச்சகக்கலிப்பா 2 | பிறப்பகத்தே மாண்டொழிந்த பிள்ளைகளை நால்வரையும் இறைப் பொழுதில் கொணர்ந்து கொடுத்து ஒருப்படித்த வுறைப்பனூர் மறைப் பெருந் தீ வளர்த்திருப்பார் வரு விருந்தை யளித்திருப்பார் சிறப்புடைய மறையவர் வாழ் திருவரங்க மென்பதுவே–4-8-2 | பிறப்பு அகத்தே,Pirappu Agaththe - ஸூதிகா க்ருஹத்திலேயே மாண்டு ஒழிந்த,Maandu Ozhindha - இறந்தொழிந்த பிள்ளைகளை நால்வரயும்,Pillaigalai Naalvarayum - புத்திரர்கள் நால்வரையும் இறைப் பொழுதில்,Irai Pozhuthil - ஒரு நொடிப் பொழுதில் கொணர்ந்து,Konarndhu - (ஸ்ரீவைகுண்டத்தினின்றும்) கொண்டு வந்து கொடுத்து,Koduththu - மாதா பிதாக்கள் கையில் கொடுத்து ஒருப்படுத்த,Orupadutha - (இப் பிள்ளைகள் எம் பிள்ளைகள் தான் என்று) ஸம்மதி பண்ணுவித்த உறைப்பன்,Uraippan - சத்தியந்தன் (எழுந்தருளி யிருக்கிற) ஊர்,Oor - தீருப்பதியாவது: மறை,Marai - வேதங்களிற் கூறப்பட்டுள்ள (வைதிகமான) பொருந்தி,Porundhi - சிறந்த (மூன்று) அக்நிகளையும் வளர்த்து இருப்பவர்,Valarththu Irupavar - (அலிச்சிந்தமாக) வளர்த்துக் கொண்டிருப்பவர்களும் வரு,Varu - (தத்தம் திருமாலிகைக்கு) எழுந்தருளுகிற விருந்தை,Virundhai - அதிதிகளான ஸ்ரீவைஷ்ணவர்களை அளித்திருப்பவர்,Aliththirupavar - ஆதரித்துப்வோருமவர்களும் சிறப்பு உடைய,Sirappu Udaiya - (இப்படிப்பட்ட) உத்கர்ஷங்களை யுடையவர்களுமான மறையவர்,Maraiyavar - வைதிகர்கள் வாழ்,Vaazh - வாழப்பெற்ற திரு அரங்கம் என்பதுவே….,Thiru Arangam Enbathuve - திருவாங்கமென்னுந் திருப்பதியாம். |
| 404 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || எட்டாம் திருமொழி - மாதவத்தோன் (திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை 1) தரவு கொச்சகக்கலிப்பா 3 | மரு மகன் தன் சந்ததியை உயிர் மீட்டு மைத்துனன்மார் உருமகத்தே வீழாமே குரு முகமாய்க் காத்தானூர் திரு முகமாய்ச் செங்கமலம் திரு நிறமாய்க் கருங்குவளை பொரு முகமாய் நின்றலரும் புனலரங்க மென்பதுவே–4-8-3 | மருமகன் தன்,Marumagan Than - மருமகனான அபிமன்யுவினுடைய சந்ததியை,Sandhathiyai - புத்திரனான பரிஷித்தை உயிர் மீட்டு,Uyir Meettu - மறுபடியும் உயிர் மீட்டு மைத்துனன் மார்,Maiththunan Maar - மைத்துனன்னாரான பாண்டவர்களுடைய உரு,Uru - சரீரமானது மகத்து,Magaththu - (பாரதயத்தமாகிற) நரமேதத்திலே வீழாமே,Veezhamae - விழுந்து அழிந்து போகாதபடி குரு முகம் ஆய்,Guru Mugam Aay - ஆசார்ய ரூபியாய் (ஹித உபதேசங்களைப் பண்ணி) காத்தான்,Kaaththaan - ரக்ஷித்தருளிய கண்ணபிரானுடைய ஊர்,Oor - திருப்பதியாவது: செம் கமலம்,Sem Kamalam - செந்தாமரை மலர்களானவை திரு முகம் ஆய்,Thiru Mugam Aay - (பெரிய பெருமாளுடைய) திருமுகத்துக்குப் போலியாகவும் கரு குவளை,Karu Kuvalai - நீலோத்பல புஷ்பங்கள் திரு நிறம் ஆய்,Thiru Niram Aay - திருமேனி நிறத்துக்குப் போலியாகவும் பொரு முகம் ஆய் நின்று,Poru Mugam Aay Nindru - (ஒன்றுக் கொன்று) எதிர் பொருகிற முகத்தை யுடைத்தாய் கொண்டு அலரும்,Alarum - நீர்வளத்தையுடைய புனல்,Punal - நீர் வளத்தை யுடைய அரங்கம் என்பது |
| 405 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || எட்டாம் திருமொழி - மாதவத்தோன் (திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை 1) தரவு கொச்சகக்கலிப்பா 4 | கூந்தொழுத்தை சிதகுரைப்பக் கொடியவள் வாய்க் கடிய சொல் கேட்டு ஈன்றெடுத்த தாயாரையும் இராச்சியமும் ஆங்கொழிய கான் தொடுத்த நெறி போகிக் கண்டகரைக் களைந்தானூர் தேந்தொடுத்த மலர்ச் சோலைத் திருவரங்க மென்பதுவே–4-8-4 | கூன்,Koon - கூனைவுடைய தொழுத்தை,Thozhuththai - வேலைக்காரியாகிய மந்தரை யானவள் சிதகு,Sithagu - (ஸ்ரீராமபட்டாபிஷேக மஹோத்வசத்துக்கு விநாசகமான தீய சொற்களை உரைப்ப,Uraippa - சொல்ல (அச் சொற்களை அங்கீகரித்துக் காட்டுக்கு எழுந்தருளச் சொன்ன) கொடியவள்,Kodiaval - மஹா க்ரூரையான கைகேயியினுடைய வாய்,Vaai - வாயிலுண்டான கடிய சொல்லைக் கேட்டு,Kadiya Sollai Kaettu - கடினமான சொல்லைக் கேட்டு ஈன்று எடுத்து தாயாரையும்,Eenru Eduththu Thaayaraiyum - (தன்னைப்) பெற்று வளர்த்த தாயான ஸ்ரீகௌஸலையாரையும் இராச்சியமும்,Iraachchiyamum - ராஜ்யத்தையும் ஆங்கு ஒழிய,Aangu Ozhia - கைவிட்டு தொழத்தை,Thozhaththai - அடிமைப் பெண் தாயார்,Thaayaar - பூஜையிற்பன்மை கண்டகர்,Kandhagar - முள்ளைப் போன்றவர் கான் தொடுத்த நெறி போகி,Kaan Thoduththa Neri Pogi - காடுகள் அடர்ந்திரா நின்றுள்ள வழியே (ஸ்ரீதண்டகாரணியத்திற்கு) எழுந்தருளி கண்டகரை,Kandhagarai - (முனிவர்களுக்கு) முள் போலப் பாதகராயிருந்த (ஜநஸ்தாந வாசிகளான ராக்ஷஸரை களைந்தான்,Kalaindhaan - நிரஸித்தருளின எம்பெருமான் (எழுந்தருளி யிருக்கிற) ஊர்,Oor - திருப்பதி யாவது தேன் தொடுத்த மலர்,Then Thoduththa Malar - தேன் மாறாத மலர்களை யுடைய சோலை,Solai - சோலைகளை யுடைத்தான திரு அரங்கம் என்பது.,Thiru Arangam Enpathu - திருவாங்கமென்னுந் திருப்பதியாம். |
| 406 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || எட்டாம் திருமொழி - மாதவத்தோன் (திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை 1) தரவு கொச்சகக்கலிப்பா 5 | பெரு வரங்களவை பற்றிப் பிழகுடைய இராவணனை உருவரங்கப் பொருதழித்து இவ் வுலகினைக் கண் பெறுத்தானூர் குருவரும்பக் கோங்கலரக் குயில் கூவும் குளிர் பொழில் சூழ் திருவரங்க மென்பதுவே என் திருமால் சேர்விடமே–4-8-5 | குரவு,Kuravu - குரவ மரங்களானவை அரும்ப,Arumba - அரும்பு விடா நிற்க கோங்கு,Kongu - கோங்கு மரங்களானவை அலரா,Alaraa - அலரா நிற்க. குயில்,Kuyil - குயில்களானவை கூவும்,Koovum - (களித்துக்) கூவும்படியான குளிர் பொழில் சூழ்,Kulir Pozhil Soozh - குளிர்ந்த சோலைகளாலே சூழப் பெற்ற திரு அரங்கம் என்பது,Thiru Arangam Enpathu - திருவரங்கமென்னும் திருப்பதியானது; பெரு வரங்களவை ,Peru Varangalavai - பெருமை பொருந்திய வரங்களை பற்றி,Patri - பலமாகக் கொண்டு பிழக்கு உடைய,Pizhakku Udaiya - (தேவர் முனிவர் முதலாயினோரிடத்துப்) பிழை செய்கையையே இயல்பாக வுடைய இராவணனை,Eraavananai - இராவணனுடைய உரு,Uru - உடலானது மங்க,Mangga - சிந்நபிந்நமாம்படி பொருது அழித்து,Porudhu Azhiththu - போர் செய்து (அவனைத்) தொலைத்த இ உலகினை,E Ulaginai - இந்த லோகத்தை கண் பெறுத்தான்,Kan Peruththaan - காத்தருளினவனும் என்,En - எனக்குத் தலைவனும் திருமால்,Thirumaal - ச்ரிய: பதியுமான எம்பெருமான் சேர்வு இடம்,Saarvu Idam - சேருமிடாகிய ஊர்,Oor - திருப்பதியாம் |
| 407 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || எட்டாம் திருமொழி - மாதவத்தோன் (திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை 1) தரவு கொச்சகக்கலிப்பா 6 | கீழுலகில் அசுரர்களைக் கிழங்கிருந்து கிளராமே ஆழி விடுத்து அவருடைய கருவழித்த வழிப்பனூர் தாழை மடலூடுரிஞ்சித் தவள வண்ணப் பொடி யணிந்து யாழினிசை வண்டினங்கள் ஆளம் வைக்கும் அரங்கமே–4-8-6 | கீழலகில்,Keezhlagil - பாதாள லோகத்திலுள்ள அசுரர்களை,Asuraralai - அஸுரர்களை கிழக்க இருந்து,Kizhakka Irundhu - அடக்கிடந்து கிளராமே,Kilaramae - கிளம்ப வொட்டாதபடி ஆழி விடுத்து,Aazhi Viduththu - திருவாழியாழ்வானை ஏவி அவருடைய,Avarudaiya - அவ் வசுரர்களுடைய கரு,Karu - கர்ப்பந்தமாக அழித்த,Azhiththa - அழித்தருளினதாலும் அழிப்பன்,Azhippan - சத்ருக்களைத் தொலைத் தருளுவதையே இயல்பாக வுடையவனுமான எம்பெருமான் (எழுந்தருளியிருக்கிற) ஊர்,Oor - திருப்பதி யாவது: யாழ்,Yaazh - (வீணையினுடைய ஓசை போன்ற) இன் ஓசை,In Osai - இனிய இசையையுடைய வண்டு இனங்கள்,Vandu Inangal - வண்டுகளின் திரள்களானவை தாமழை மடலூடு,Thaamazhai Madaloodu - (மலரத் தொடங்குகிற) தாழை மடல் முன்னே உறிஞ்சி,Urinji - உடம்பை உரசிக் கொண்டு (புகுந்து) தவள வண்ணப் பொடி,Thavala Vannapp Podi - (அம்மடலிலுள்ள)வெளுத்த நிறத்தையுடைய வண்ணத்தை அணிந்து,Aninthu - உடம்படங்கலும் அணிந்து கொண்டு ஆளம் வைக்கும்,Aalam Vaikkum - (அந்தக் களிப்பிலே) தெனதென என்று ஆளத்தி வைத்து பணிமிடமான அரங்கம்,Arangam - திருவரங்கம் |
| 408 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || எட்டாம் திருமொழி - மாதவத்தோன் (திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை 1) தரவு கொச்சகக்கலிப்பா 7 | கொழுப்புடைய செழுங்குருதி கொழித்திழிந்து குமிழ்த்தெறிய பிழக்குடைய அசுரர்களைப் பிணம்படுத்த பெருமானூர் தழுப்பரிய சந்தனங்கள் தடவரைவாய் ஈர்த்துக்கொண்டு தெழிப்புடைய காவிரி வந்து அடி தொழும் சீரரங்கமே–4-8-7 | கொழுப்பு உடைய,Kozhuppu Udaiya - கொழுப்பை யுடையதும் செழு,Sezhu - செழுமை தங்கியதுமான குருதி,Kurudhi - ரத்தமானது கொழித்து,Kozhiththu - ஊற்று மாறாமல் கிளர்ந்து இழிந்து,Izhindhu - நிலத்தில் பரவி குமிழ்ந்து,Kumizhndhu - குமிழி கிளம்பி பிழக்கு உடைய,Pizhakku Udaiya - (பர ஹிம்சையாகிய) தீமைகளைச் செய்கிற அசுரர்களை,Asuraralai - அஸுரர்களை பிணம் படுத்த,Pinam Paduththa - பிணமாக்கி யருளின பெருமான்,Perumaan - எம்பெருமான் (எழுந்தருளி யிருக்கிற) ஊர்,Oor - திருப்பதியானது: தழுப்பு அரிய,Thazhuppu Ariya - (ஒருவரிருவரால்) தழுவ முடியாத சந்தனங்கள்,Santhanangal - சந்தந மரங்களை தடவரைவாய்,Thadavarai Vaai - பெரியமலைகளினின்று ஈர்த்துக் கொண்டு,Eerththuk Kondu - (வேரோடே பிடுங்கி) இழுத்துக் கொண்டு வந்து தெழிப்பு உடைய,Thezhippu Udaiya - (இவற்றைத் திருவுள்ளம் பற்றவேணும் என்று எம்பெருமானைப் பிராரத்திக்கின்றதோ என்னலாம்படி) இரைச்சலை யுடைய காவிரி,Kaaviri - திருக்காவேரி நதியானது அடி தொழும்,Adi Thozhum - (எம்பெருமானது) திருவடிகளைத் தொழுகையாகிற சீர்,Seer - சீர்மையைப் பெற்ற அரங்கம்,Arangam - திருவரங்க நகராம். |
| 409 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || எட்டாம் திருமொழி - மாதவத்தோன் (திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை 1) தரவு கொச்சகக்கலிப்பா 8 | வல் லெயிற்றுக் கேழலுமாய் வாளெயிற்றுச் சீயமுமாய் எல்லை யில்லாத் தரணியையும் அவுணனையும் இடந்தானூர் எல்லியம் போது இருஞ்சிறை வண்டு எம்பெருமான் குணம் பாடி மல்லிகை வெண் சங்கூதும் மதிளரங்க மென்பதுவே–4-8-8 | வல் எயிறு கேழலும் ஆய்,Val Eyiru Kezhllum Aay - வலிவுள்ள பற்களையுடைய வராஹமாய்த் திருவவதரித்தும், வாள் எயிறு சீயமும் ஆய்,Vaal Eyiru Seeyamum Aay - ஒளியையுடைய பற்களையுடைய நரஸிம்ஹமாயத் திருவவதரித்தும் எல்லை இல்லா தரணியையும் அவுணனையும் இடந்தான்,Ellai Illaa Dharaniyaiyum Avuṇanaiyum Idandhaan - ஹிரண்யாஸுரனையும் கிண்டருளின எம்பெருமான் (எழுந்தருளியிருக்கிற) ஊர்,Oor - திருப்பதியாவது இரு சிறை வண்டு,Eru Sirai Vandu - பெரிய சிறகுகளையுடைய வண்டுகளானவை எல்லியம் போது,Elliyam Podhu - அந்திப் பொழுதிலே எம்பெருமான் குணம் பாடி,Emperumaan Gunam Paadi - பெரிய பெருமாளுடைய திருக் குணங்களைப் பாடிக் கொண்டு மல்லிகை வெண் சங்கு ஊதும்,Malligai Ven Sangu Uudhum - மல்லிகைப் பூவாகிற வெளுத்த சங்கை ஊதா நிற்கப் பெற்றதும் மதில்,Mathil - திருமதிள்களை யுடையதுமான அரங்கம் என்பது,Arangam Enpathu - திருவாங்கமென்னுந் திருப்பதியாம். |
| 410 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || எட்டாம் திருமொழி - மாதவத்தோன் (திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை 1) தரவு கொச்சகக்கலிப்பா 9 | குன்றாடு கொழு முகில் போல் குவளைகள் போல் குரை கடல் போல் நின்றாடு கண மயில் போல் நிறமுடைய நெடுமாலூர் குன்றாடு பொழில் நுழைந்து கொடியிடையார் முலை யணவி மன்றூடு தென்றலுமாம் மதிளரங்க மென்பதுவே–4-8-9 | குன்று ஆடு,Kundru Aadu - மலையினுச்சியிற் சார்ந்த கொழு முகில் போல்,Kozhu Mugil Pol - நீர் நிறைந்த மேகம் போலவும் குவளைகள் போல்,Kuvalaigal Pol - கரு நெய்தல் பூப்போலவும் குரை,Kurai - ஒலி செய்யா நின்ற கடல்போல்,Kadal Pol - கடல்போலவும் நின்று ஆடு,Nindru Aadu - (களிப்பாலே) நின்று ஆடா நின்றுள்ள மயில் கணம் போல்,Mayil Kanam Pol - மயில்களின் திரள்போலவும் (இரா நின்ற) நிறம் உடைய,Niram Udaiya - வடிவழகை யுடையவனான நெடுமால்,Nedumaal - எம்பெருமான் (எழுந்தருளியிருக்கிற) ஊர்,Oor - திருப்பதி யாவது தென்றல்,Thendral - தென்றல் காற்றானது குன்று,Kundru - (மலய) பர்வதத்திலுள்ள பொழிலூடு,Pozhiloodu - சோலைகளினிடையிலே அழைத்து,Azaiththu - அழைத்து கொடி இடையார்,Kodi Idaiyaar - (அங்குள்ள பூத்களின் தாதுகளை அனைத்து பரிமளத்தைக் கொய்து கொண்டு) கொடி போன்ற இடையை யுடையரான பெண்களினுடைய முலை,Mulai - (கலவைச் சாந்தணிந்த) முலைகளை அணவி,Anavi - வியாபித்து மன்றூடு,Mandru Oodu - (அந்தப் பரிமளத்துடனே) நாற்சந்திகளினூடே உலாம்,Ulaam - உலாவப் பெற்ற மதிள் அரங்கம் என்பது |
| 411 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || எட்டாம் திருமொழி - மாதவத்தோன் (திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை 1) தரவு கொச்சகக்கலிப்பா 10 | பரு வரங்களவை பற்றிப் படையாலித் தெழுந்தானை செரு வரங்கப் பொருதழித்த திருவாளன் திருப்பதி மேல் திருவரங்கத் தமிழ் மாலை விட்டு சித்தன் விரித்தன கொண்டு இருவரங்க மெரித்தானை ஏத்த வல்லா ரடியோமே-4-8-10 | பருவரங்கள் அளை பற்றி,Paruvarangal Alai Patri - பிரமன் முதலியோரிடத்துப் பெற்ற பெரிய வரங்களைப் பலமாகக் கொண்டு படை ஆலித்து எழுந்தானை,Padai Aaliththu Ezhundhaanai - யுத்த விஷயமாகக் கோலாஹலஞ் செய்து வெளிப் புறப்பட்ட இராவணனை செரு,Seru - யுத்தத்திலே அரங்க,Aranga - ஒழியும்படி பொருது,Porudhu - போர் செய்து அழித்த,Azhiththa - ஒழித்தருளின திருவாளன்,Thiruvaalan - (வீர்யமாகிற) லக்ஷ்மியைத் தனக்கு நிருபகமாக உடையனான எம்பெருமானுடைய திருப்பதி மேல்,Thiruppathi Mel - (திருவரங்கமென்னும்) திருப்பதி விஷமாக விட்டுசித்தன்,Vittuchiththan - பெரியாழ்வார் விரித்தன,Viriththana - அருளிச் செய்த திரு அரங்கம் தமிழ் மாலை கொண்டு,Thiru Arangam Tamil Maalai Kondu - (பாட்டுத் தோறு ம்) ‘திருவரங்கம்’ என்கிற திருநாமத்தையுடைய தமிழ் மாலையாகிய இப் பத்துப் பாசுரங்களையுங்கொண்டு. இருவர் அங்கம் மெரித்தானை,Iruvar Angam Meriththaanai - (மதுகைடபர்களாகிற) இருவருடைய உடலைத் (திருவனந்தாழ்வானுடைய மூச்சு வெப்பத்தினால்) கொளுத்திப் போகட்ட எம்பெருமானை ஏத்தவல்லார்,Eaththavallaar - துதிக்க வல்லவர்களுக்கு அடியோம்,Adiyom - அடிமை செய்யக்கடவோம். |