திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 5-8 ஏழை ஏதலன் (10 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1418பெரிய திருமொழி || (5-8–ஏழை ஏதலன்) (திருவரங்கம் 5) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இத்தனை குறைவாளனை விஷயீ கரியாது ஒழிகிறது என் –என்னாப் போலே யாய்த்து பார்வை இருக்கிறது – இவள் பருவத்தையும் நோக்கையும் கண்டால் இவள் வழியே போவான் ஒருவன் இறே – பிராட்டியை தோழி என்றும்-இளைய பெருமாளை தம்பி என்றும் சொன்ன போதே ஆர்த்தமாக வரும் இறே தம்முடைய தோழமை – சேஷ பூதன் உடைய தய நீயமான பாசுரம் சேஷி நெஞ்சிலே வேர் விழுந்து ரஷணத்துக்காய்க் கிடக்குமா போலே சேஷி பாசுரம் சேஷ பூதன் உடைய நெஞ்சிலே கிடக்கக் கடவது இறே கைங்கர்யத்துக்காக – ஸ்ரீ ராமாவதாரத்தைச் சொல்லி இங்கே சேர்க்கையாலே நம் சேவகனார் மருவிய பெரிய கோயில் -என்கிறபடியே அவரே இங்கே சாய்ந்தார் என்கிறது உடையவன் ஆகையாலே-உடைமை தேட்டமாய் அன்றோ-இங்கு வந்து சாய்ந்து அருளிற்று) 1
ஏழை ஏதலன் கீழ் மகன் என்னாது இரங்கி மற்று அவர்க்கு இன்னருள் சுரந்து மாழை மான் மட நோக்கி யுன் தோழி உம்பி யெம்பி என்று ஒழிந்திலை உகந்து தோழன் நீ எனக்கு இங்கு ஒழி என்ற சொற்கள் வந்து அடியேன் மனத்து இருந்திட ஆழி வண்ண நின்னடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத் தம்மானே –5-8-1
பதவுரை Show / Hide
ஆழி வண்ண, Aazhi Vanna - கடல்வண்ணனே! (- (அக்குஹனை நோக்கி) (நான் அவற்றில் ஈடுபட்டு))
அணிபொழில் திருஅரங்கத்து அம்மானே, Anipozhil Thiruarangathu Ammanae - அழகிய சோலைகள் சூழ்ந்த திருவரங்கத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமானே!
ஏழை ஏதலன் கீழ் மகன் என்னாது, Ezhaik Aethalan Keel Magan Ennaathu - (இவன்) அறிவில்லாதவன், கொலைத்தொழில் புரிகின்றவன், நீச ஜாதியிற் பிறந்தவன்’ என்று (குஹனுடைய தாழ்வுகளைக்) கருதாமல்
இரங்கி, Irangi - (அவன் மீது) கிருபை பண்ணி (அவனை உயிர்த்தோழனாக அங்கீகரித்து)
மற்று, Mattru - அதற்கு மேலே
அவற்கு, Avarukku - அந்தக் குஹப்பெருமான் விஷயத்தில்
இன் அருள் சுரந்து, In Arul Surandhu - இனிமையான கருணை மேன்மேலும் உண்டாகப்பெற்றவனாய்
மாழை மான் மட நோக்கி, Maazhai Maan Mada Nookki - மானின் பார்வைபோன்ற கபடமற்ற கண் பார்வையை உடையளான என் மனைவியாகிய இந்த ஸீதை
உன் தோழி, Un Thozhi - உனக்குத் தோழியாவாள்;
எம்பி, Embi - என் தம்பியான லக்ஷ்மணன்
உம்பி, Umbi - உன் தம்பியாவன்;
என்று, Endru - என்று சொல்லி
ஒழிந்திலை, Ozhinthilai - இவ்வளவோடு நீவிட்டிடாதவனாய்
உகந்து, Ugandhu - மகிழ்ச்சி கொண்டு
நீ எனக்கு தோழன், Nee Enakku Thozhan - ‘நீ எனக்கு நண்பன்
இங்கு ஒழி, Ingu Ozhi - இங்கே நின்றிடுவாயாக’
என்ற, Endra - என்றும் (நீ ஸ்ரீராமாவதாரத்திற்) சொல்லியருளிய
சொற்கள், Sorkkal - வார்த்தைகள்
வந்து, Vandhu - கர்ணபரம்பரையாய் என் கேள்விக்கு வந்து
அடியேன் மனத்து இருந்திட, Adiyen Manaththu Irundhida - அடியேனுடைய நெஞ்சிலே பொருந்தியிருக்க,
நின் அடி இணை அடைந்தேன், Nin Adi Inai Adaindhen - உனது திருவடிகள் இரண்டையும் சரணமாகப் பற்றினேன்
1419பெரிய திருமொழி || (5-8–ஏழை ஏதலன்) (திருவரங்கம் 5) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஜன்ம வ்ருத்தங்களால் குறைய நின்ற ஸ்ரீ குஹப் பெருமாள் பக்கல் பண்ணின விஷயீ காரத்தை என் பக்கலிலே பண்ண வேணும் என்று சரணம் புக்கார் -கீழில் பாட்டில் மனுஷ்ய சஜாதீயத்வம் கிடக்கச் செய்தே வந்த நிகர்ஷம் இறே -கீழ்ச் சொல்லிற்று இங்கு விசஜாதியமான திர்யக்கை அகப்பட-தத்கத நிகர்ஷம் பாராதே விஷயீ கரித்த மாத்ரம் அன்றிக்கே அந்தபுர கைங்கர்யத்திலே ஏவி அடிமை கொண்டால் போலே என் அளவிலும் கைங்கர்யத்தைக் கொள்ள வேணும் -என்கிறார் – இவ்வதிகாரிக்கு விஷயீகார அநந்தரம் கைங்கர்யத்தில் அன்வயிக்கும் அத்தனை போக்கி சாதனத்தில் அன்வயிக்க வேண்டியது இல்லை போலே காணும் இங்கு ஒழி என்கிற இடத்தில் சொல்லிற்று இத்தனை இறே) 2
வாத மா மகன் மற்கடம் விலங்கு மற்றோர் சாதி என்று ஒழிந்திலை உகந்து காதலாதரம் கடலினும் பெருகச் செய்தகவினுக்கு இல்லை கைம்மாறு என்று கோதில் வாய்மையினோடும் உடனே உண்பன் நான் என்ற ஒண் பொருள் எனக்கும் ஆதல் வேண்டும் என்று அடியிணை யடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத் தம்மானே –5-8-2
பதவுரை Show / Hide
வாதம் மா மகன், Vadhama Maa Magan - வாயுதேவனது பெரிய குமாரனான அனுமான் (- (அணி பொழில் திரு அரங்கத்து அம்மானே!-;) (அடி இணை அடைந்தேன்–.))
மற்று ஓர் சாதி விலங்கு மற்கடம் என்று ஒழிந்திலை, Mattru Oru Saadhi Vilangu Markadham Endru Ozhindilai - வேறு ஜாதியிற் பிறந்தவனென்றும், அதிலும் பகுத்தறிவில்லாத மிருகமென்றும், அதிலும் பலவகைப் பொல்லாங்குகளையுடைய குரங்கென்றும் (அவனது இழி குணங்களைப் பாராட்டி) விட்டிடாதவனாய்
உகந்து, Ugandhu - அவனிடம் அன்புவைத்து
காதல் ஆதரம் கடலினும் பெருக, Kaadhal Aadharam Kadalinum Peruga - அன்பும் ஆசையும் கடலைக் காட்டிலும், அதிகமாக வளர
செய், Sei - (நமக்கு இவன்) செய்த
தகவினக்கு, Thagavinaikku - உபகாரங்களுக்கு
கைம்மாறு இல்லை, Kaimaarru Illai - பிரதியுபகாரம் இல்லை’
என்று, Endru - என்று திருவுள்ளம் பற்றி
கோது இல் வாய் மையினாயொடும் உடனே உண்பன் நான், Kothu Il Vaai Maiyinayodum Udaney Unban Naan - குற்றமற்ற மெய்ம்மொழிகளை யுடையனான உன்னோடு உடனிருந்து உண்பேன்யான்’
என்ற, Endra - என்று (அவ்வனுமானைக் குறித்துக்) கூறியருளின
ஒண் பொருள், On Porul - சிறந்த விஷயம்
எனக்கும் ஆதல் வேண்டும் என்று, Enakkum Aadhai Vendum Endru - எளியனான அடியேன் விஷயத்திலும் உண்டாகவேண்டும் என்றெண்ணி
1420பெரிய திருமொழி || (5-8–ஏழை ஏதலன்) (திருவரங்கம் 5) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (விஷயீகாரத்தையும்-விஷயீகார பலமான கைங்கர்யத்தையும்-சொல்லிற்று கீழ் கைங்கர்யத்துக்கு இடைச் சுவரான விரோதியைப் போக்கி-ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானை கைங்கர்யத்திலே அன்வயித்தால் போலே என்னுடைய விரோதியைப் போக்கி என்னைக் கைங்கர்யத்தில் அன்வயிப்பிக்க வேணும் -என்கிறார் – விஷயீகாரத்துக்கும் கைங்கர்யத்துக்கும் நிகர்ஷம் முன்னிட வேண்டுகையாலே சொன்னார் கீழ் விரோதி நிரசனத்துக்கு நிகர்ஷம் முன்னிட வேண்டியது இல்லை இறே விஷயீகாரம் ஆகிறது -உபாயத் தளவும் செல்ல பலிக்குமது இறே அவன் உபாயம் ஆனால் பின்னை கைங்கர்யத்தில் அன்வயிப்பிக்கும் இத்தனை அதுக்கு விரோதி அறுகை இறே பின்னை உள்ளது-அந்த விரோதி தான் உபய ஆகாரமாய் இருக்கக் கடவது அவை ஆகிறன-இந்த்ரிய வஸ்யதையும் யம வஸ்யதையும் இறே மேலில் பாட்டில் யம வச்யததை-இங்கு இந்த்ரிய வச்யதை சொல்லுகிறது எங்கனே என்னில் ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு விரோதியான முதலையை நிரசித்தால் போலே எனக்கு விரோதியான இந்த்ரியங்களை நிரசித்து அருள வேணும் -என்கிறார் இவ்வதிகார்க்கு இந்த்ரிய வஸ்யதையாவது-விஷயாந்தர ப்ராவண்யம் முதலாய் கைங்கர்ய ஸ்பர்சியான அஹங்காரம் மமகாரம் முடிவாய் இறே இருப்பது) 3
கடி கொள் பூம் பொழில் காமரு பொய்கை வைகு தாமரை வாங்கிய வேழம் முடியும் வண்ணமோர் முழு வலி முதலை பற்ற மற்றது நின் சரண் நினைப்பக் கொடிய வாய் விலங்கின் உயிர் மலங்கக் கொண்ட சீற்றம் ஓன்று உண்டு உளது அறிந்து உன் அடியனேனும் வந்து அடி இணை அடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத்து அம்மானே –5-8-3
பதவுரை Show / Hide
கடி கொள் பூ பொழில் காமரு பொய்கை வைகுதாமரை வாங்கிய வேழம், Kadi Kol Poo Pozhil Kaamaru Poigai Vaikuthamarai Vaangiya Vezham - நறுமணங்கொண்ட மலர்கள் நிறைந்த சோலைகளாற் சூழப்பட்ட அழகிய பொய்கையிலே பொருந்திய தாமரைமலரை (அர்ச்சனைக்காகப்) பறித்த யானை யானது (- (அணி பொழில் திரு அரங்கத்து அம்மானே;-) (அப்பொழுது நீ))
முடியும் வண்ணம், Mudiyum Vannam - மிகுந்த ஆபத்தையடையும்படி
ஓர் முழு வலி முதலை பற்ற, Oru Muzhu Vali Muthalai Patra - மிக்க வலிமையையுடைய தொரு முதலையானது பிடித்துக்கொள்ள
அது நின் சரண் நினைப்ப, Adhu Nin Saran Ninaippa - அதனால் வருந்திய அந்த யானையானது (தன்வலிமையால் விடுவித்துக்கொள்ள முடியாமல்) உனது திருவடிகளைத் தியானிக்க,)
கோடிய வாய் விலங்கின் உயிர் மலங்க, Kodiyai Vaai Vilangin Uir Malangka - கொடுந்தன்மையுள்ள வாயையுடைய முதலையின் பிராணன் சிதையும் படி
கொண்ட, Konda - வருவித்துக்கொண்ட
சீற்றம் ஒன்று, Seetrham Ondru - ஒரு கோபம்
உண்டு உளது, Undu Ulathu - உண்டாயுள்ளதை
அறிந்து, Arindhu - தெரிந்து கொண்டு (உன் அடியனேனும் வந்து அடி இணை அடந்தேன்.)
1421பெரிய திருமொழி || (5-8–ஏழை ஏதலன்) (திருவரங்கம் 5) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (விஷயீகாரம் சொல்லி-விஷயீகார கார்யமான கைங்கர்யம் சொல்லி அதுக்கு இடைச் சுவரான தேக சம்பந்தத்தை அறுத்துத் தர வேணும்என்கிறதே -இரண்டு பாட்டாலே – அதில் தேக சம்பந்தம் கிடக்கச் செய்தே அனுபவ விரோதியான பாபைகதேச பலமான இந்த்ரிய வஸ்யதையைப் இதில் சரீர சம்பந்தம் அற்றால்-சர்வ பாப பலமாய் அனுபவ விரோதியாய்க் கொண்டு வரும் யம வஸ்யதையை தவிர்க்க வேணும் -என்கிறார் – ஸூமுகனுக்கு பெரிய திருவடியால் வந்த பயத்தை தவிர்த்துக் கொடுத்தால் போலே எனக்கு எம வச்யதையால் வந்த பயத்தை அறுத்து அவனை இட்டே பரிஹர -என்னும்படி பண்ணித் தர வேணும் -என்கிறார் சரணம் புகுவார் தாம்தாம் உடைய நிகர்ஷத்தை முன்னிட்டுக் கொண்டு இறே சரணம் புகுவது – அந்நிகர்ஷம் தான் ஆகிஞ்சந்ய ரூபமாயும்-அபராத ரூபமாயும் இறே இருப்பது அதாகிறது-அது தன்னை அனுசந்தித்தார் இறே அடைவே ந தர்ம நிஷ்டோச்மி-ந நிந்திதம் கர்ம-ஜ்ஞான கிரியாச பஜநா-இத்யாதிகளும் ஆகிஞ்சன்யத்தை முன்னிட்டது கீழ்–இதில் அபராதத்தை முன்னிடுகிறது) 4
நஞ்சு சோர்வதோர் வெஞ்சின வரவம் வெருவி வந்து நின் சரண் எனச் சரணாய் நெஞ்சில் கொண்டு நின் அஞ்சிறைப் பறவைக்கு அடைக்கலம் கொடுத்து அருள் செய்தது அறிந்து வெஞ்சொல் ஆளர்கள் நமன் தமர் கடியர் கொடிய செய்வன யுளவதற்கு அடியேன் அஞ்சி வந்து நின்னடி இணை அடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத் தம்மானே –5-8-4
பதவுரை Show / Hide
நஞ்சு சோர்வது, Nanju Soorvathu - விஷத்தை உமிழ்வதும் (- (அணி பொழில் திரு அரங்கத்து அம்மானே-;) (அதற்கு அஞ்சி வந்து நின் அடி இணை அடைந்தேன்–.))
வெம் சினம், Vem Sinam - கொடிய கோபத்தையுடையதுமான
ஓர் அரவம், Oru Aravam - (சுமுகனென்னும்) ஒரு பாம்பானது
வெருவி, Veruvi - (தன்னைக்கொல்ல விருக்கின்ற கருடனுக்கு) அஞ்சி
வந்து, Vandhu - உன்னிடத்தில் வந்து
நின் சரண் என, Nin Saran Ena - ‘உனக்கு அடைக்கலப் பொருளாகின்றேன் யான்’ என்று சொல்லி உன்னைச் சரணமடைய,
சரண் ஆய், Saran Aay - நீ அதற்கு ரக்ஷகனாகி
நெஞ்சில் கொண்டு, Nenjil Kondu - (அவனுக்கு நெர்ந்த துன்ப நிலையையும் அவன் சொல்லையும்) உன் திருவுள்ளத்திற்கொண்டு
நின் அம் சிறை பறவைக்கு அடைக்கலம் கொடுத்து அருள் செய்தது, Nin Am Sirai Paravaikku Adaikalam Koduthu Arul Seithathu - உனது அடியவனான அழகிய இறகுகளையுடைய கருடனிடத்தில் (அப்பாம்பை) அடைக்கலப் பொருளாக நீ ஒப்பித்துப் பாதுகாத்தருளிய திறத்தை
அடியேன் அறிந்து, Adiyen Arindhu - அடியேன் தெரிந்து கொண்டு,
வெம் சொலாளர்கள், Vem Solalargal - கொடிய சொற்களைச் சொல்பவர்களான
நமன் தமர், Naman Thamar - யமதூதர்கள்
கடியர், Kadiyar - பயங்கரமான தோற்றமுடையவர்களாய்
செய்வன, Seivan - (மரணகாலத்திலும் மறுமையிலும்) செய்பவையான
கொடிய, Kodiy - கொடுந்தொழில்கள்
உள், Ul - பலவுளவன்றோ;
1422பெரிய திருமொழி || (5-8–ஏழை ஏதலன்) (திருவரங்கம் 5) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (விஷயீ காரத்தைச் சொல்லி-கைங்கர்யத்தைச் சொல்லி கைங்கர்யத்தின் உடைய உபய ஆகாரமான விரோதிகளைப் போக்கி தந்து அருள வேணும் -என்றார் கீழ் இதில் ஸ்ரீ கோவிந்த ஸ்வாமி உடைய கருத்து அறிந்து செய்தால் போலே என்னுடைய கருத்து அறிந்து கார்யம் செய்ய வேணும் -என்கிறார் – கீழ் நின்ற நிலைக்கு இவர்க்கு கருத்தாவது இந்த்ரிய வஸ்யதைக்கும் யம வஸ்யதைக்கும் அடியான-தேக சம்பந்தத்தை அறுத்து தர வேணும் என்கை மரணமானால் -என்கிறபடியே தன்னடையே சரீர விச்லேஷம் சித்திக்குமாகில் அபேஷிககிறது என் என்னில்-க்ரம ப்ராப்தி பற்றாத த்வேரா திரேகத்தாலே – ஸ்ரீ கோவிந்த ஸ்வாமி-என்பான் ஒரு பிராமணன் இதிஹாச புராண ஸ்ரவணத்தாலே ஸ்ரீ கிருஷ்ணன் உடைய பால்ய சேஷ்டிதங்களையும் ராச க்ரீடாதிகளையும் சாஷாத்கரித்து காமனாய் முன்பு காண வாராய் -என்று எண்ணி இருப்பார்க்கு பரித்ராணாயா சாது நாம் -என்கிறபடியே காட்டிக் கொடுத்து போருமவன் அன்றோ நமக்கும் அவ்வாசை உண்டானால் சித்தியாமை இல்லை-ததர்த்தமாக அர்த்திப்போம் -என்று சரீரத்தை ஒறுத்து தபஸை பண்ண-இவன் நினைவின் படியே ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்தின் படிகளை அடைய சிருஷ்டித்துக் காட்டி அனுபவிப்பித்து-உனக்கு வேண்டுவது என் என்று கேட்டு அருள கூடப் போந்து இப்படி தேவரை அனுபவிக்கும் அத்தனை -என்ன நீ தபஸ் பண்ணுகிற போது விஷய விதுரனாய்-அன்ன பாநாதிகளையும் கழித்து உடம்பையும் நாரும் நரம்புமாய் ஆக்கிக் கொடு போந்தாய் இங்கே இருந்து நெகிழ்ந்த போகங்களையும் கழித்து வா என்று அவன் கருத்து அறிந்து அருளிச் செய்தால் போலே என் கருத்து அறிந்து கார்யம் செய்ய வேணும் -என்கிறார் – இவ்வர்த்தம் சாப்தம் அன்றிக்கே இருக்க இவருக்கு இது கருத்தாக சொல்லுகிறது பிரகரண பலத்தாலும்-அர்த்த க்ரமத்தாலும்-நாசமான பாசம் -என்றும் போந்தேன் -என்றும் சொல்லுகிற இவருக்கு இது கருத்தாக வேணும் இறே) 5
மாக மா நிலம் முழுதும் வந்து இறைஞ்சும் மலரடிக்கண்ட மா மறையாளன் தோகை மா மயில் அன்னவர் இன்பம் துற்றிலாமை யிலத்த விங்கு ஒழிந்து போகம் நீ எய்திப் பின்னும் நம்மிடைக்கே போதுவாய் என்ற பொன்னருள் எனக்கும் ஆக வேண்டும் என்று அடி இணை அடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத் தம்மானே –5-8-5
பதவுரை Show / Hide
மா கம், Maa Kam - பரமாகாசமெனப் படுகிற பரமபதத்திலுள்ளாரும் (- (ஆணி பொழில் திரு அரங்கத்து அம்மானே!–;) (எனக்கும் ஆகவேண்டும் என்று அடி இணை அடைந்தேன்–.))
மா நிலம், Maa Nilam - விசாலமான இப்பூமண்டலத்திலுள்ளாரும்
முழுதும், Muzhudhum - மற்றுமுள்ள சராசரங்களடங்கலும்
வந்து இறைஞ்சும், Vandu Irainchum - வந்து வணங்கப்பெற்ற
மலர் அடி, Malar Adi - (உனது) திருவடித் தாமரைகளை
கண்ட, Kanda - ஸாக்ஷாத்கரித்த
மா மறையாளன், Maa Maraiyalan - (கோவிந்தஸ்வாமி யென்னும்) மஹாவைதிக ப்ராம்மணனொருவனைக்குறித்து
அந்த, Andha - ‘அப்பா!,
நீ, Nee - நீ
தோகை மா மயில் அன்னவர் இன்பம் துற்றிலாமையில், Thokai Maa Mayil Annavar Inbam Thutrilamaigalil - பெண்டிர்களாலுண்டாகும் விஷய போகஸுகங்களை அநுபவியாமையால்
இங்கு ஒழிந்து, Ingu Ozhindhu - (சில காலம்) இவ்விபூதியிலேயிருந்து
போகம் எய்தி, Pogam Eydhi - விஷய போகங்களை யநுபவித்து
பின்னும், Pinnum - அதன் பிறகு
நம் இடைக்கே போதுவாய், Nam Idaikkee Podhuvai - நம்மிடம் வந்து சேரக்கடவாய்’
என்ற, Endra - என்றருளிச்செய்த
பொன் அருள், Pon Arul - சிறந்த கிருபையானது
1423பெரிய திருமொழி || (5-8–ஏழை ஏதலன்) (திருவரங்கம் 5) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ கோவிந்த ஸ்வாமி கருத்து அறிந்து அவனுடைய கார்யம் செய்தாப் போலே என் கருத்து அறிந்து என்னுடைய அபிமதம் செய்ய வேணும் என்றார் -கீழ் – ஸ்ரீ மார்கண்டேயன் மிருத்யு பய பீதனாய் சரணம் புக அவனுக்கு மிருத்யுவை நிரசித்து அந்த பய நிவ்ருதியை பண்ணிக் கொடுத்த அளவன்றிக்கே ஒரு காலமும் உன் திருவடிகளைப் பிரியாதபடியான பேற்றை அவனுக்குப் பண்ணிக் கொடுத்தால் போலே என் சம்சார பயத்தை பரிக்ரஹித்து உன் திருவடிகளை நான் பிரியாத படியான பேற்றை பண்ணித் தந்து அது நான் அர்த்திக்க இரப்புக்குக் கார்யம் செய்ததாய் காலன் கொண்டு மோதிரம் இடுமா போலே பண்ணப் பெற ஒண்ணாது என் ஸ்வரூப அநு ரூபமான பேறாகிறது-நீ தரப் பெறுமது -அது வேணும் என்கிறார்) 6
மன்னு நான்மறை மா முனி பெற்ற மைந்தனை மதியாத வெங்கூற்றன் தன்னை யஞ்சி நின் சரண் எனச் சரணாய் தகவில் காலனை யுக முனிந்து ஒழியாப் பின்னை என்றும் நின் திருவடிப் பிரியா வண்ணம் எண்ணிய பேரருள் எனக்கும் அன்னதாகும் என்று அடி இணை அடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத் தம்மானே –5-8-6
பதவுரை Show / Hide
மன்னு, Mannu - நிலைபெற்ற (- (அணி பொழில் திரு அரங்கத்து அம்மானே!–;) (அடி இணை அடைந்தேன்–.))
நால் மறை மா முனி பெற்ற மைந்தனை, Naal Marai Maa Muni Petra Maindhanai - நான்கு வேதங்களையும் ஓதியுணர்ந்த சிறந்த ம்ருகண்டு முனிவன் பெற்றகுமாரனாகிய மார்க்கண்டேயனை,
மதியாத வெம் கூற்றம் தன்னை அஞ்சி நின் சரண் என, Madhiyadha Vem Kootram Thannai Anji Nin Saran Ena - ஒருவரையும் லக்ஷரியஞ் செய்யாத கொடிய யமனுக்குப் பயந்து ‘உனது அடைக்கலப் பொருளாவேன் யான்’ என்று சொல்லி அவன் உன்னைச் சரணமடைந்தபோது
சரண் ஆய், Saran Aay - (அவனுக்கு நீ) ரக்ஷகனாகி
தகவு இல் காலனை உக முனிந்து, Thagavu Il Kaalanai Uga Munindhu - இரக்கமில்லாத யமனை வலியொழியும்படி கோபித்து
ஒழியா, Ozhia - அவ்வளவோடு விட்டிடாமல்
பின்னை, Pinnai - அதற்குமேலே
என்றும் நின்திரு அடி பிரியா வண்ணம் எண்ணிய, Endrum Nindhira Adi Priya Vannam Enniya - எந்நாளும் (அம்முனிகுமாரனை) உன்திருவடிகளை விட்டுப் பிரியாமலிருக்கும்படி திருவுள்ளம் பற்றிய
பேர் அருள் –, Per Arul - (உனது) சிறந்த திருவருளானது
எனக்கும் அன்னது ஆகும், Enakkum Annadhu Aagum - என் விஷயத்திலும் அப்படி உண்டாகவேணும்
என்று, Endru - என்று நினைத்து
1424பெரிய திருமொழி || (5-8–ஏழை ஏதலன்) (திருவரங்கம் 5) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (விஷயீ காரத்தை சொல்லி கைங்கர்யத்தை சொல்லி அதுக்கு விரோதியாய் வருமதில் இந்த்ரிய வஸ்யதையைத் தவிர்த்து தர வேண்டுமேன்று சொல்லி அதுக்கடியான பாபமடியாக வந்த யம வஸ்யதையை பரிஹரிக்க வேணும் என்று சொல்லி அதுக்கடியான பிரகிருதி சம்பந்தத்தை அறுத்துத் தர வேணும் என்று சொல்லி கருத்து அறிந்து செய்யும் அளவு அன்றிக்கே உன் பரிவாலே செய்ய வேணும் என்று நின்றது -கீழ் – இதுக்கு அவ்வருகு அபேஷிக்கலாவது இல்லாமையாலே-மேலில் பாட்டுக்களுக்கு உதயம் இல்லை ஆனால் மேல் செய்கிறது என் என்னில் ஆழ்வீர்-சேஷியும் சேஷ பூதனும் ஆனால் சேஷி செய்தபடி கண்டு தத்தச்ய சத்ருசம் பவேத் -என்று சேஷ பூதன் இருக்கும் அத்தனை அல்லது இத்தனை த்வரிக்க கடவது அல்ல காணும் -என்ன தன்னைப் பார்த்தால் தன் சரீர அவசானத்தில் தான் பேறு உண்டோ உன் சர்வ சக்தித்வத்தாலே த்வரிக்கிறேன் இத்தனை அன்றோ அவனுடைய போக்யதை போலே-சர்வ சக்தித்வமும் த்வரிப்பிக்கும் இறே சாந்தீபிநீ புத்ரனை கடல் கொள்ள மீட்டுக் கொடுத்த அகடிதகட நா சாமர்த்த்யத்தையும் விஞ்சி இருப்பது ஓன்று இறே சம்சார ஆர்ணவத்திலே அகப்பட்டு நோவுபடுகிற என்னையும் மீட்டு உன் திருவடிகளை தருகை யாவது தேவரீர் உடைய சர்வ சக்தித்வத்தாலே அத்தை செய்து அருள வேணும் -என்கிறார்) 7
ஒது வாய்மையும் உவனியப் பிறப்பும் உனக்கு முன் தந்த அந்தணன் ஒருவன் காதல் என் மகன் புகலிடம் காணேன் கண்டு நீ தருவாய் எனக்கு என்று கோதில் வாய்மையினான் உனை வேண்டிய குறை முடித்தவன் சிறுவனைக் கொடுத்தாய் ஆதலால் வந்து உன் அடி இணை அடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத் தம்மானே –5-8-7
பதவுரை Show / Hide
ஓது, Othu - ஓதியுணர்தற்கு உரிய (- (அணி பொழில் திரு அரங்கத்து அம்மானே!–;) (வந்து உன் அடி இணை அடைந்தேன்–.))
வாய்மையும், Vaimaiyum - ஸத்யவசநமான வேதத்தையும்
உவனியம் பிறப்பும், Uvaniyam Pirappum - (அதனை ஓதுதற்கு அதிகார முண்டாம்படி) உபநயனஞ் செய்தலால் வரும் (இரண்டாவது) பிறப்பையும்
முன், Mun - முன்பு
உனக்கு தந்த, Unakku Thanda - உனக்கு அளித்தவனும்
கோது இல் வாய்மையினால், Kothu Il Vaimaiyinal - (சாபாநுக்ரஹ சக்தியினால்) பழுதுபடுதலில்லாத  மெய்ம் மொழிகளையுடையவனுமான
அந்தணன் ஒருவன், Andhanan Oruvan - (ஸாந்தீபிநியென்னும்) ஒரு பிராமணன்
காதல் என் மகன் புகல் இடம் காணேன், Kaadhal En Magan Pugal Idam Kaanen - ‘(எனது) அன்புக்கு இடமான புத்திரன் சென்ற இடத்தை அறியேன்;
கண்டு நீ எனக்கு தருவாய் என்று, Kandu Nee Enakku Taruvay Endru - நீ (அவனிருக்கின்ற இடத்தை) நாடி யுணர்ந்து அந்த மகனை எனக்குக் கொடுக்கவேணும்’ என்று
உனை வேண்டிய, Unai Vendiya - உன்னைப் பிரார்த்தித்த
குறை, Kurai - அவனது வேண்டுகோளை
முடித்து, Mudiththu - நீ தலைக்கட்டி
அவன் சிறுவனை கொடுத்தாய், Avan Siruvanai Koduththay - அவன் மகனை (அவனுக்குக்) கொணர்ந்து கொடுத்தருளினாய்;
ஆதலால், Adhalal - (இங்ஙனம் செயற்கரிய செயல் செய்து அன்பர் குறையைத் தீர்த்து அவர் வேண்டியதை வேண்டியபடி தந்தருள்பவன் நீ) ஆகையால்
1425பெரிய திருமொழி || (5-8–ஏழை ஏதலன்) (திருவரங்கம் 5) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வைதிக புத்ர இதிகாசத்தை முன்னிட்டுக் கொண்டு சரணம் புகுகிறார் – இப்பாட்டிலும் சொல்லுகிறது -கீழ்ச் சொன்ன சர்வ சக்தி யோகத்தை ஆனால் வாசி என் என்னில் தேச கால விப்ரகர்ஷம் கிடக்கச் செய்தே-கார்யம் செய்த சக்தி மத்தையைச் சொல்லுகிறது) 8
வேத வாய் மொழி யந்தணன் ஒருவன் எந்தை நின் சரண் என்னுடை மனைவி காதல் மக்களைப் பயத்தலும் காணாள் கடியதோர் தெய்வம் கொண்டு ஒளிக்கும் என்று அழைப்ப ஏதலார் முன்னே இன்னருள் அவர்க்குச் செய்து உன் மக்கள் மற்று இவர் என்று கொடுத்தாய் ஆதலால் வந்து உன் அடி இணை அடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத் தம்மானே –5-8-8
பதவுரை Show / Hide
வேதம் வாய் மொழி, Vetham Vay Mozhi - வேதங்களையே வாய்ப்பேச்சாகவுடையவனான (- (அணி பொழில் திரு அரங்கத்து அம்மானே!;))
அந்தணன் ஒருவன், Andhanan Oruvan - ஒரு வைதிகப்ராமணன் (உன்னை அடுத்து)
எந்தை, Endhai - ‘எமது தலைவனே!
நின் சரண், Nin Saran - உனக்கு அடைக்கலப் பொருளாகிறேன் யான்;
என்னுடை மனைவி, Ennudai Manaivi - எனது மனைவியானவள்
காதல் மக்களை, Kaadhal Makkal - தான் ஆசையுடன் பெறுகின்ற பிள்ளைகளை
பயத்தலும் காணாள், Payaththalam Kaanal - பெற்றவளவிலே காணப்பெறுகின்றாளில்லை;
கடியது ஓர் தெய்வம், Kadiyathu Or Deivam - கொடுந் தன்மையுடையதான ஒரு தெய்வமானது
கொண்டு ஒளிக்கும், Kondhu Olikkum - (அப்பிள்ளைகளைக்) கொண்டு போய் ஒளித்து விடுகின்றது’
என்று, Endru - என்று (தன் குறையைச்) சொல்லி
அழைப்ப, Azhaiyppa - அதற்குப் பரிஹாரம் செய்வதற்கு உன்னை யழைக்க
ஏதலார் முன்னே, Aethalaar Munne - (அவளைப் பரிஹாஸித்துக் கொண்டிருந்த) பகைவர்களது முன்னிலையிலே
அவற்கு, Avarukku - அந்த வைதிகனுக்கு
இன் அருள் செய்து, In Arul Seidhu - இனிமையான கருணையைச் செய்து
இவர் உன் மக்கள் என்று கொடுத்தாய், Ivar Un Makkal Endru Koduththaai - ‘நான் அழைத்துக் கொண்டு வந்த இவர்கள் உன் பிள்ளைகள்’ என்று சொல்லிக் கொணர்ந்து கொடுத்தருளினாய்;
ஆதலால், Adhalal - (இப்படி செயற்கரியன செய்து சரணாகதரக்ஷணம் செய்தருள்பவன் நீ) ஆதலால்
1426பெரிய திருமொழி || (5-8–ஏழை ஏதலன்) (திருவரங்கம் 5) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கீழ் இரண்டு பாட்டாலே அவனுடைய-சக்தி யோகத்தைச் சொல்லி-உபாய பூர்த்தியைச் சொல்லிற்றாய் நின்றது – இப்பாட்டுக்கு உதயம் என் என்னில் சம்சாரத்தின் உடைய தண்மையையும்-நம்முடைய அதிசய சக்தி த்வத்தையும் அனுசந்தித்து த்வரிக்கை யாகிற் இது ஔபாதிகம் காணும்-நாம் செய்தபடி கண்டிருக்குமது காணும் உமக்கு ஸ்வரூபம் -என்ன உன்னை அல்லது அறியாத தொண்டைமான் சக்கரவர்த்திக்கு ஸ்வரூப ஜ்ஞானத்தை உண்டாக்கினால் போலே எனக்கும் ஸ்வரூப ஜ்ஞானத்தை உண்டாக்க வேணும் என்று சரணம் புகுகிறார் – கீழே நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் -என்று திரு மந்த்ரத்தை சார்த்தமாக லபித்து உற்றதும் உன் அடியார்க்கு அடிமை -என்று ததீய சேஷத்வ பர்யந்தமாக அனுசந்தித்தார் – அதின் முன்பு ஸ்வரூப ஜ்ஞானம் பிறந்தது இல்லையோ -என்னில் தம்தாமுக்கு பிறக்கும் ஜ்ஞானம் விச்வச நீயம் அன்று என்று காணும் இருக்க அடுப்பது ஸ்ரீ நாரத பகவானை இட்டு ஸ்ரீ புண்டரீகனுக்கு-கிந்தத்ர-என்றும்-நராஜ்ஜா தாநி-என்றும் திரு மந்த்ரத்தை சார்த்தமாக உபதேசித்து பிராப்தி வேளையில் உனக்கு வேண்டுவது என் என்று ஈஸ்வரன் கேட்க க்வாஹமத்யந்த துர்ப்புத்தி -என்றான் இறே சர்வ அபிமத சாதனம் இறே சரணா கதி யாகிறது) 9
துளங்கு நீண் முடி யரசர் தம் குரிசில் தொண்டை மன்னவன் திண் திறல் ஒருவற்கு உளம் கொள் அன்பினோடு இன்னருள் சுரந்து அங்கோடு நாழிகை ஏழு உடன் இருப்ப வளம் கொள் மந்திரம் மற்று அவர்க்கு அருளிச் செய்தவாறு அடியேன் அறிந்து உலகம் அளந்த பொன்னடியே அடைந்து உய்ந்தேன் அணி பொழில் திருவரங்கத் தம்மானே –5-8-9
பதவுரை Show / Hide
துளங்கு, Thulangu - விளங்குகின்ற (- (அணி பொழில் திரு அரங்கத்து அம்மானே!–;) (உலகம் அளந்த பொன் அடியே அடைந்து உய்ந்தேன்–.-))
நீள் முடி, Neel Mudi - நீண்ட கிரீடத்தையுடைய
அரசர் தம் குரிசில், Arasar Tham Kurisil - அரசாகட்கு அரசனாகிய
திண்திறல், Thinthiral - மிக்க வலிமையையுடைய
தொண்டை மன்னவன் ஒருவற்கு, Thondai Mannavan Oruvarukku - தொண்டை நாட்டரச னொருவனிடத்தில்
உளம் கொள் அன்பினோடு இன் அருள் சுரந்து, Ulam Kol Anbinodu In Arul Surandhu - (நீ உன்) திருவுள்ளத்திற்கொண்ட அன்புடனே இனிமையான கருணையை மிகுதியாகச்செய்து,
அங்கு ஓடு நாழிகை ஏழுடன் இருப்ப, Angu Odu Naazhigai Ezhuudan Iruppa - அரசாளுதலாகிய இம்மைச் செல்வத்திலே வீணே கழிகின்ற அவனது நாழிகையானது (அங்ஙனம் கழியாது) ஏழு தத்துவப் பொருள்களுடனே கூடியிருக்கும்படி
வளம்கொள் மந்திரம், Valamkol Manthiram - சிறப்புக்கொண்ட பெரிய திருமந்திரத்தையும்
மற்று, Mattru - மற்றும் அதன் பொருளையும்
அவற்கு அருளிச் செய்த, Avarukku Arulich Seidha - அத் தொண்டைமான் சக்ரவர்த்திக்கு உபதேசித்தருளிய
ஆறு, Aaru - வகையை
அடியேன் அறிந்து, Adiyen Arindhu - அடியேன் தெரிந்து கொண்டு
1427பெரிய திருமொழி || (5-8–ஏழை ஏதலன்) (திருவரங்கம் 5) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இவருடைய பாவ வருத்தி இல்லையாகிலும் இவருடைய பாசுரத்தைச் சொல்லவே ப்ராப்தி பிரதிகந்தகங்கள் போம் என்கிறது) 10
மாட மாளிகை சூழ் திரு மங்கை மன்னன் ஒன்னலர் தங்களை வெல்லும் ஆடல் மா வலவன் கலிகன்றி அணி பொழில் சூழ் திரு வரங்கத் தம்மானை நீடு தொல் புகழ் ஆழி வல்லானை எந்தையை நெடுமாலை நினைந்த பாடல் பத்திவை பாடுமின் தொண்டீர் பாட நும்மிடைப் பாவம் நில்லாதே –5-8-10
பதவுரை Show / Hide
மாடம் மாளிகை சூழ், Maadam Maaligai Soozh - உபரிகைகளை யுடைய வீடுகள் எங்கும் நிறைந்திருக்கப்பெற்ற
திரு மங்கை, Thiru Mangai - திருமங்கை யென்னும் நாட்டுக்கு
மன்னன், Mannan - அரசரும்
ஒன்னலர் தங்களை வெல்லும், Onnalaar Thangalai Vellum - பகைவர்களை வெல்லுகின்ற
ஆடல் மா, Aadal Maa - ஆட்டத்திற்சிறந்த குதிரையை ஏறிச் செலுத்துதலில்
வலவன், Valavan - வல்லவருமான
கலிகன்றி, Kalikanri - ஆழ்வார்
அணி பொழில் திரு அரங்கத்து அம்மானை, Ani Pozhil Thiru Arangathu Ammanaai - அழகிய சோலைகள் சூழ்ந்த ஸ்ரீரங்கத்திற்பள்ளி கொண்டருள்கின்ற ஸ்வாமியும்
தொல், Tol - தொன்றுதொட்டு வருகிற
நீடு புகழ், Needu Pugazh - மிக்க கீர்த்தியையுடைய
ஆழி, Aazhi - திருவாழியாழ்வானைப் பிரயோகித்தலில்
வல்லானை, Vallaanai - வல்லவனும்
எந்தையை, Endhaiyai - எமது தலைவனுமான
நெடு மாலை, Nedu Maalai - பெருமையையுடைய ஸ்ரீமந்நாராயணனை
நினைந்த, Ninaindha - மனத்தினால் அநுபவித்து அருளிச் செய்த
இவை பத்து பாடல், Ivai Paththu Paadal - இந்தப் பத்துப் பாசுரங்களையும்
தொண்டீர், Thondeer - எம்பெருமானடியார்களே!
பாடுமின், Paadumin - நீங்கள் ஓதுங்கள்;
பாட, Paada - அங்ஙனம் ஓதவே
நும்மிடை பாவம் நில்லா, Nummidai Paavam Nillaa - உங்களித்திற் பாவங்கள் நிற்கமாட்டா.