திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 6-10 கிடந்த நம்பி (10 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1538பெரிய திருமொழி || (6-10–கிடந்த நம்பி) (திரு நறையூர் 7) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சத்ருக்கள் இட்ட அரண் அழியும்படியாக குரூரமான ராஷசர் திரண்ட இலங்கையை அழியச் செய்து அத்தால் வந்த வீர ஸ்ரீ யால் குறைவற்றவன் – பரப்பை உடைத்தான பூமியை அடைய இரண்டு அடியாலே அளந்த அத்புத கர்மத்தால் குறைவற்றவன் – கண் வளர்ந்து அருளுகிற போதை அழகாலே பூரணன் ஆனவன் –- சம்சாரிகளாய் குறைவே நிரூபகமாம் படி இருக்கிற நம்முடைய குறைவு தீர்க்கைக்கு அடியான பௌஷ்கல்யத்தை உடையைவன் – அவனுடைய பேர் சொல்லில் -நமோ நாராயணமே) 1
கிடந்த நம்பி குடந்தை மேவிக் கேழலாய் யுலகை இடந்த நம்பி எங்கள் நம்பி எறிஞர் அரண் அழியக் கடந்த நம்பி கடியார் இலங்கை யுலகை ஈரடியால் நடந்த நம்பி நாமம் சொல்லில் நமோ நாராயணமே –6-10-1
பதவுரை Show / Hide
குடந்தை மேவி கிடந்த நம்பி, Kudandhai Mevi Kidandha Nambi - திருக்குடந்தையிலே பொருந்திப் பள்ளிகொண்டிருக்கின்ற ஸ்வாமியாயும்
கேழல் ஆய் உலகை இடந்த நம்பி, Kezhal Aayi Ulagai Idantha Nambi - வராஹரூபியாகி பூமியை (அண்டபித்தியில் நின்றும்) ஒட்டு விடுவித் தெடுத்த ஸ்வாமியாயும்
எங்கள் நம்பி, Engal Nambi - எங்களுடைய குறைகளைத் தீர்க்க வல்லவனாயும்
எறிஞர் அரண் அழிய, Erinjir Aran Azhiya - சத்துருக்களினுடைய கோட்டை அழியும்படியாக
கடியார் இலங்கை கடந்த நம்பி, Kadiyaar Ilangai Kadandha Nambi - கடூரமானதன்மையுடைய அரக்கர் வாழும் இலங்கையை நாசஞ்செய்த ஸ்வாமியாயும்
உலகை ஈர் அடியால் நடந்த நம்பி, Ulagai Eer Adiyaal Nadandha Nambi - லோகங்களை இரண்டடியாலே அளந்துகொண்ட ஸ்வாமியாயுமிருக்கிற ஸர்வேச்வரனுடைய
நாமம், Naamam - திருநாமத்தை
சொல்லில், Sollil - சொல்லப்பார்க்கில்
நமோ நாராயணமே, Namo Narayaname - (அது) பெரிய திருமந்திர மாகும்.
1539பெரிய திருமொழி || (6-10–கிடந்த நம்பி) (திரு நறையூர் 7) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத வடிவைக் கொண்டு பிரளயங்கதை யான பூமியை எடுத்துக் கொண்டு ஏறினான் லோகத்தை இரண்டு அடியாலே அளந்து கொண்டவன் உடைய நாமம்) 2
விடந்தான் உடைய வரவம் வெருவச் செருவில் முன நாள் முன் தடந்தாமரை நீர்ப் பொய்கை புக்கு மிக்க தாடாளன் இடந்தான் வையம் கேழல் ஆகி யுலகை ஈரடியால் நடந்தான் உடைய நாமம் சொல்லில் நமோ நாராயணமே –6-10-2
பதவுரை Show / Hide
முனநாள், Munanhaal - முனபொருகால், (- (நாமம் சொல்லில் நமோநாராயணமே-.))
விடம் உடைய அரவம் தான், Vidam Udaya Aravam Thaan - விஷத்தையுடைத்தான காளியநாகமானது
வெருவ, Veruva - அஞ்சும்படியாக
முன், Mun - இடைப்பிள்ளைகளின் முன்னே
தட தாமரை பொய்கை நீர் புக்கு, Tada Thamarai Poigai Neer Pukku - பெரிய தாமரைகளையுடைய (யமுனையின் ஒருமடுவின்) நீரில் புகுந்து
செருவில், Seruvil - (அந்த நாகத்தோடு போர் செய்ததில்
மிக்க, Mikka - மேன்மைபெற்ற
தாளாளன், Thaalalan - திருவடிகளை யுடையவனும்
கேழல் ஆகி, Kezhal Aagi - வராஹமூர்த்தியாகி
வையம், Vaiyam - பூமியை
இடந்தான், Idandhaan - குத்தியெடுத்துக் கொணர்ந்தவனும்
ஈர் அடியால், Eer Adiyaal - இரண்டடியாலே
உலகை, Ulagai - உலகங்களை
நடந்தானுடைய, Nadandhaanudaiya - அளந்துகொண்டவனுமான எம்பெருமானுடைய
1540பெரிய திருமொழி || (6-10–கிடந்த நம்பி) (திரு நறையூர் 7) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (யசோதை பிராட்டி உண்ட தயிரையும் வெண்ணெயும் களவு கண்டு அமுது செய்யப் புக்கால் அவள் கண்டு பிடித்து கட்டுவது அடிப்பதாக நிற்கும் இறே- அப்போது வெண்ணெயைக் களவு கண்டோம் என்றால் வருவதோர் எளிவரவு உண்டோ -என்று இருக்கும் ஆய்த்து) 3
பூணாது அனலும் தறு கண் வேழம் மறுக வளை மறுப்பைப் பேணான் வாங்கி யமுதம் கொண்ட பெருமான் திரு மார்வன் பாணா வண்டு முரலும் கூந்தல் ஆய்ச்சி தயிர் வெண்ணெய் நாணாது உண்டான் நாமம் சொல்லில் நமோ நாராயணமே –6-10-3
பதவுரை Show / Hide
பூணாது அனலும், Poonaadhu Anhalum - கட்டுத்தறிக்குப் பிடிபடாமல் சீறிக்கொண்டிருப்பதும் (- (நாமம் சொல்லில் நமோநாராயணமே-.))
தறுகண், Tharugann - வட்டமான கண்களையுடையதுமான
வேழம், Vezham - (குவலயாபீடமென்னும்) யானையானது
மறுக, Maruga - குடல்குழம்பும்படி
பேணான், Penaan - அதை மதியாதவனாய்
வளை மருப்பை, Valai Maruppai - (அதன்) வளைந்தகொம்புகளை
வாங்கி, Vaangi - பறித்தெறிந்தவனும்
அமுதம் கொண்ட பெருமான், Amudham Konda Perumaan - (கடலில் நின்றும்) அமுதத்தைக் கடைந்தெடுத்த பெருமை பொருந்தியவனும்
திரு மார்வன், Thiru Marvan - பிராட்டியை மார்பிலுடைவனும்
வண்டு பாண் ஆ முரலும் கூந்தல் ஆய்ச்சி, Vandu Paan Aa Murulum Koondhal Aaychi - வண்டுகளானவை இசையிலே பொருந்தும்படி ஒலிசெய்யப்பெற்ற மயிர்முடியையுடையளான இடைச்சியாகிய யசோதையினது
தயிர் வெண்ணெய், Thayir Vennai - தயிர் வெண்ணெய் முதலியவற்றை
நாணாது உண்டான், Naanaadhu Undaan - (களவுசெய்து) உட்கொண்டவனுமான எம்பெருமானது
1541பெரிய திருமொழி || (6-10–கிடந்த நம்பி) (திரு நறையூர் 7) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தமையன் பக்கல் த்வேஷம் மிக்கு இருக்குமா போலே யாய்த்து இவன் பக்கல் ராகம் மிக்கு இருக்கும் படி – முதலிகள் எல்லார் பக்கலிலும் பண்ணும் பரிவை இவன் ஒருவன் பக்கலிலும் பண்ணினவன் உடைய நாமம் சொல்லில் – நமோ நாராயணமே –வாத்சல்யத்துக்கும் வாசகம் இறே) 4
கல்லார் மதிள் சூழ் கச்சி நகருள் நச்சிப் பாடகத்துள் எல்லா வுலகும் வணங்க விருந்த வம்மான் இலங்கைக் கோன் வல்லாளாகம் வில்லால் முனிந்த வெந்தை விபீடணற்கு நல்லான் உடைய நாமம் சொல்லில் நமோ நாராயணமே –6-10-4
பதவுரை Show / Hide
கல் ஆர் மதிள் சூழ் கச்சிநகருள், Kal Aar Mathil Soozh Kachinagarul - கருங்கல்லால் கட்டப்பட்ட திருமதிள்களால் சூழப்பட்ட காஞ்சீபுரத்தில் (- (நாமம் சொல்லில் நமோநாராயணமே -.))
நச்சி, Nachchi - வஸிக்கவிரும்பி
எல்லா உலகும் வணங்க, Ella Ulagum Vananga - லோகமெல்லாம் வணங்குமாறு
பாடகத்துள், Paadakaththul - திருப்பாடமென்னுந் திருப்பதியில்
இருந்த, Irundha - வீற்றிருக்கின்ற
அம்மான், Ammaan - ஸ்வாமியும்,
இலங்கை கோன், Ilankai Kon - லங்காதிபதியான ராவணனுடைய
வல் ஆள் ஆகம், Val Aal Aagam - மிகவும் பலிஷ்டமான சரீரத்தை
வில்லால் முனிந்த, Villal Munintha - வில்லாலே சீறியழித்த
எந்தை, Endhai - ஸ்வாமியும்
விபீடணற்கு நல்லானுடைய, Vipeedanarku Nallaanudaiya - விபீஷணாழ்வான் விஷயத்தில் நன்மை புரிந்தவனுமான எம்பிரானது
1542பெரிய திருமொழி || (6-10–கிடந்த நம்பி) (திரு நறையூர் 7) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பண்டு மிருத்யு ராஷசரைக் கிட்ட அஞ்சி யாய்த்து இருப்பது – இப்போது பெருமாள் தோளை அண்டை கொண்டு அத்தாலே பொருந்தி புஜியா நிற்கும் ஆய்த்து – இதுவே ஸ்வ பாவமாம் படி பண்ணினவன்உடைய நாமம் சொல்லில் நமோ நாராயணமே) 5
குடையா வரையால் நிரை முன் காத்த பெருமான் மருவாத விடை தான் ஏழும் வென்றான் கோவல் நின்றான் தென்னிலங்கை அடையா வரக்கர் வீயப் பொருது மேவி வெங்கூற்றம் நடையா யுண்ணக் கண்டான் நாமம் நமோ நாராயணமே –6-10-5
பதவுரை Show / Hide
முன், Mun - முன்பொருகாலத்தில் (- (நாமம் சொல்லில் நமோநாராயணமே-.))
குடை ஆம் வரையால், Kudai Aam Varaiyaal - குடையாகக்கொண்ட கோவர்த்தநகிரியினால்
நிரை, Nirai - பசுக்கூட்டங்களை
காத்தபெருமான், Kaathaperumaan - (பெருமழையில் நின்றும்) காத்தருளின பெருமானும்
மருவாத விடை ஏழும் வென்றான், Maruvaadha Vidai Ezhum Vendraan - எதிரிட்ட ஏழு எருதுகளையும் வலியடக்கினவனும்
கோவல் நின்றான், Koval Nindraan - திருக்கோவலூரில் நின்றதிருக் கோலமாயிருப்பவனும்
தென் இலங்கை, Then Ilangai - தென்னிலங்கையிலிருந்தவர்களாய்
அடையா, Adaiyaa - பணியாதவர்களான
அரக்கர், Arakkar - ராக்ஷஸர்கள்
வீய, Veeya - அழியும்படி
பொருது, Poruthu - போர்புரிந்து
வெம் கூற்றம், Vem Koottram - கொடியமிருத்யுவானவன்
மேவி, Mevi - (அஞ்சாமல்) பொருந்தியிருந்து
நடை ஆ, Nadai Aa - இதுவே காரியமாக
உண்ண கண்டான், Unna Kandan - (இலங்கையைப்) புஜீக்கும்படி செய்தவனுமான பெருமானுடைய
1543பெரிய திருமொழி || (6-10–கிடந்த நம்பி) (திரு நறையூர் 7) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இதர விஷயங்களின் உடைய பேரைச் சொல்லிப் போந்த நானும் அன்றோ சொன்னேன் – இனி இது கண்டால் எல்லார்க்கும் சொலத் தட்டில்லை இறே என்னோடு சம்பந்தம் உடையார் எல்லாரும் இத்தையே சொல்லிப் போருங்கோள் – நமோ நாராயணமே –நமக்கு வகுத்ததையே சொல்லிப் போருங்கோள- ஸ்ரீ ஆழ்வார்கள் கோஷ்டியில் இது ஒழிய வேறு ஒரு திரு நாமம் உண்டாக நினைத்து இருப்பார் இல்லை – உண்டாகில் ஆயிரம் -என்று திரளாக சொல்லும் இத்தனை பேர் ஆயிரம் கொண்டதோர் பீடுடையான் – தேவோ நாம சஹஸ்ரவான் –-பல பசு உடையவன் -என்னுமா போலே ஸ்ருதி வேறு ஒரு திரு நாமம் உண்டாகச் சொல்லும் அன்று ஆய்த்து-இவர்கள் வேறு ஒரு திரு நாமம் உண்டாகச் சொல்லுவது – அந்தர்யாமி ப்ராஹ்மணத்தோடு-காரண வாக்யங்களோடு– இது ஒழிந்தவை ஞான சக்த்யாதிகளைப் போலே – இது ஞான ஆனந்த அமலத் வாதிகளைப் போலே ஸ்வரூப நிரூபகமாய் இருக்கும்) 6
கான வெண்கும் குரங்கும் முசுவும் படையா அடல் அரக்கர் மானம் அழித்து நின்ற வென்றி யம்மான் எனக்கு என்றும் தேனும் பாலும் அமுதுமாய திருமால் திரு நாமம் நானும் சொன்னேன் நமரும் உரைமின் நமோ நாராயணமே –6-10-6
பதவுரை Show / Hide
கானம் எண்கும், Kaanam Enkum - காட்டுக்கரடிகளையும்
குரங்கும், Kurangum - குரங்குகளையும்
முசுவும், Musuvum - ‘முசு’ என்னுஞ்சாதிக் குரங்குகளையும்
படை ஆ, Padai Aa - சேனையாகக்கொண்டு
அடல் அரக்கர், Adal Arakkar - கொடிய ராக்ஷருடைய
மானம், Maanam - செருக்கு
அழித்துநின்ற, Azhiththinira - அழியச்செய்த
வென்றி அம்மான், Vendri Amman - ஜயசீலனான ஸ்வாமியுமான
திருமால், Thirumaal - திருமாலினுடைய.-
எனக்கு, Enakku - எனக்கு
என்றும், Endrum - எப்போதும்
தேனும் பாலும் அமுதும் ஆய, Thenum Paalum Amuthum Aaya - பரமபோக்யமாயிருக்கின்ற
திருநாமம் நமோநாராயணம், Thirunamam Namonaarayanam - திருநாமமாகிய பெரிய திருமந்திரத்தை
நானும் சொன்னேன், Naanum Sonnaen - நானும் உச்சரித்தேன்;
நமரும் உரைமின், Namrum Uraimin - நம்மைச்சேர்ந்தவர்களும் சொல்லுங்கோள்.
1544பெரிய திருமொழி || (6-10–கிடந்த நம்பி) (திரு நறையூர் 7) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (காரண பூதனனவன் பேர் சொல்லுகை ப்ராப்தம் இறே பிராப்தம் செய்யப் பார்த்ததிலி கோள் ஆகில் இனியது தான் வேணுமே – பகவத் விஷயத்தில் கைங்கர்ய ருசி உடையார் எல்லாருக்கும் சொன்னேன்-இது செய்யாதார் கேளாதாராம் இத்தனை – நமோ நாராயணமே —சஹஸ்ர அஷரீ மாலா-மந்த்ரமாய் இருக்கிறதும் அல்ல) 7
நின்ற வரையும் கிடந்த கடலும் திசையும் இரு நிலனும் ஒன்றும் ஒழியா வண்ணம் எண்ணி நின்ற அம்மானார் குன்று குடையா எடுத்த வடிகள் உடைய திரு நாமம் நன்று காண்மின் தொண்டீர் சொன்மின் நமோ நாராயணமே –6-10-7
பதவுரை Show / Hide
நின்றவரையும், Nindravaraiyum - ஸ்திரமாக நிற்கின்ற மலைகளும் (- (ஆகிய இவையெல்லாம்) (திருநாமம் நமோநாராயணம்-;) (நன்று சொன்னேன் காண்மின்.))
கிடந்த கடலும், Kidandha Kadalum - வற்றாதேயிருக்கின்ற ஸமுத்ரமும்
திசையும், Thisaiyum - திக்குக்களும்
இரு நிலனம், Iru Nilanam - பரந்த பூமியும்
ஒன்றும் ஒழியா வண்ணம், Onrum Ozhiyavannam - சிறிதும் பாழாகாதபடி
எண்ணி நின்ற, Enni Nindra - ஸங்கல்பத்தாலே ப்ரவாஹ நித்யமாக்கிக்கொண்டேவருகிற
அம்மானார், Ammanar - ஸ்வாமியும்
குன்று, Kundru - கோவர்த்தனமலையை
குடை ஆ எடுத்த அடிகளுடைய, Kudai A Edutha Adigaludaiya - குடையாயவேந்தின ஸ்வாமியுமானவனுடைய
தொண்டீர், Thondir - ஓ பக்தர்களே!
1545பெரிய திருமொழி || (6-10–கிடந்த நம்பி) (திரு நறையூர் 7) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பண்ணின உபகாரம் அறியாத பசுக்களை சிரமத்தாலே நோவு படாத படியாக ரஷித்தான் – தான் அறிந்த ஆபத்தும் விலக்காமையும் இறே வேண்டுவது -ரஷிக்கைக்கு ஸ்வ பாவிக சம்பந்தத்தில் கண் அழிவு இல்லையே) 8
கடுங்கால் மாரி கல்லே பொழிய அல்லே எமக்கு என்று படுங்கால் நீயே சரண் என்று ஆயர் அஞ்ச அஞ்சா முன் நெடுங்கால் குன்றம் குடை ஓன்று ஏந்தி நிரையைச் சிரமத்தால் நடுங்கா வண்ணம் காத்தான் நாமம் நமோ நாராயணமே –6-10-8
பதவுரை Show / Hide
கடு, Kadu - கடுமையான (- (நாமம் நமோநாராயணம்-.))
கால், Kaal - காற்றோடு கூடின
மாரி, Maari - மேகமானது
கல்லே பொழிய, Kalle Pozhiya - கற்களையே வர்ஷிக்கையில்
எமக்கு அல்லே என்று, Emakku Alle Endru - ‘(இது) எங்களுக்குக் காளராத்ரியாகவே யிருக்கின்றது’ என்று
படு்ங்கால், Padungkal - நெஞ்சிலேபட்டு
ஆயர், Aayar - இடையர்கள்
நீயே சரண் என்று அஞ்ச, Neeye Saran Endru Anja - (எமக்கு நீயே புகலாகவேணுமென்று சொல்லி அஞ்சியிருக்க
அஞ்சாமுன், Anjamun - அந்த அச்சத்தினுடைய காரியம் பலிப்பதற்கு முன்னே
நெடு கால் குன்றம் ஒன்று, Nedu Kaal Kuntram Ondru - சுற்று மலைகளையுடைத்தானவொரு கோவர்த்தனமலையை
குடை ஏந்தி, Kudai Aendhi - குடையாகவெடுத்துப் பிடித்து
நிரையை, Niraiyai - பசுக்கூட்டங்களை
சிரமத்தால், Sirama Thaal - ஆயாஸத்தினால்
நடுங்காவண்ணம், Nadungaavannam - நோவுபடாதபடி
காத்தான், Kaathaan - ரக்ஷித்த பெருமானுடைய
1546பெரிய திருமொழி || (6-10–கிடந்த நம்பி) (திரு நறையூர் 7) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (குறைவற்றாரோடு-குறை வற்றாராக பிரமித்து இருப்பரோடு-குறைவாளரோடு வாசி அற எல்லாருக்கும் ஒக்க நிர்வாஹகனாய் இருக்கை – நீங்கள் அநாதி காலம் புத்தி பூர்வகமாக பண்ணின பாபம் தீரும்படி சொல்லப் பாரும் கோள்- ஸ்ரீ எண்ணாயிரத்து திரு வாய்க் குலத்து ஆழ்வான் -ஸ்ரீ நஞ்சீயரை பிரபத்தி யாகிறது புத்தி பூர்வம் பண்ணின பாபத்துக்கும்-பரிஹாரம் ஆகவற்றோ –-பிராமாதிகத்துக்கேயோ -என்ன அதன் உடைய ப்ரபாவ்வத்தைப் பார்த்தால் புத்தி பூர்வகத்துக்கும் பரிஹாரமாகவற்று ஜ்ஞானம் நடையாடும் இடத்தில் அனுதாபம் இன்றிக்கே இராது இறே-ஆகையால் இவன் பக்கல் ப்ராமாதிகம் அல்லாது கூடாது பூர்வாகத்தைப் போக்குகிற இது-புத்தி பூர்வத்துக்கு பரிஹாரம் ஆகாது என்ன ஒண்ணாதே அதில் புத்தி பூர்வம் ஒழிய இல்லாமையாலே –வினையைப் பண்ணுவதானாலும் சொல்ல வடுப்பது இது) 9
பொங்கு புணரிக் கடல் சூழாடை நில மா மகள் மலர் மா மங்கை பிரமன் சிவன் இந்திரன் வானவர் நாயகராய எங்கள் அடிகள் இமையோர் தலைவர் உடைய திரு நாமம் நங்கள் வினைகள் தவிர வுரைமின் நமோ நாராயணமே –6-10-9
பதவுரை Show / Hide
பொங்கு புணரி, Pongu Punari - மேன்மேலுங் கிளர்கின்ற அலைகளையுடைய
கடல், Kadal - ஸமுத்ரத்தை
சூழ் ஆடை, Sool Aadai - தனக்குச் சுற்றிக்கொள்ளும் வஸ்த்ரமாக வுடையளான
நிலம் மா மகள், Nilam Maa Magal - பூமிப்பிராட்டியார்க்கும்
மலர் மா மங்கை, Malar Maa Mangai - பெரிய பிராட்டியார்க்கும்
பிரமன், Brahman - நான்முகனுக்கும்
சிவன், Shivan - ருத்ரனுக்கும்
இந்திரன், Indiran - இந்திரனுக்கும்
1547பெரிய திருமொழி || (6-10–கிடந்த நம்பி) (திரு நறையூர் 7) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இதிலே பொருந்தி இத்தை சொல்ல வல்லவர்கள் உடைய பாபம் இவர்கள் பக்கலில் நில்லாது – இவர்களை விட்டுப் போய் பின்னையும் தான் நிற்கை அன்றிக்கே நசிக்கும் – த்விஷந்த பாபக்ருத்யாம் -என்கைக்கு முதல் இல்லை) 10
வாவித் தடம் சூழ் மணி முத்தாற்று நறையூர் நெடுமாலை நாவில் பரவி நெஞ்சில் கொண்டு நம்பி நாமத்தைக் காவித் தடங்கண் மடவார் கேள்வன் கலியன் ஒலி மாலை மேவிச் சொல்ல வல்லார் பாவம் நில்லா வீயுமே –6-10-10
பதவுரை Show / Hide
வாவி தடம் சூழ், Vaavi Thadam Sool - நடைவாவிகளாலும் தடாகங்களாலும் சூழப்பட்டதும்
மணிமுத்தாறு, Manimuthaaru - மணிமுத்தாற்றை யுடையதுமான
நறையூர், Naraiyoor - திருநறையூரி லெழுந்தருளியிருக்கிற
நெடுமாலை, Nedumalaik - ஸர்வேச்வரனை
நாவின் பரவி, Naavin Paravi - நாவினால் துதித்தும்
நெஞ்சில் கொண்டு, Nenjil Kondu - நெஞ்சில் சிந்தித்தும்
நம்பி நாமத்தை, Nambi Naamathai - அந்தத் திருநறையூர் நம்பியின் திருநாமம் விஷயமாக
காவி தட கண் மடவார்கேள்வன், Kaavi Thada Kan Madavaarkelvan - கருநெய்தற் பூப்போன்று பரந்த கண்களையுடைய மடவார்கட்கு விரும்பத் தகுந்தவராயிருந்த
கலியன், Kaliyan - திருமங்கையாழ்வார்
ஒலி, Oli - அருளிச்செய்த
மாலை, Maala - இச்சொல்மாலையை
மேவி, Mevi - விரும்பி
சொல்ல வல்லார் பாவம், Solla Vallar Paavam - சொல்ல வல்லவர்களுடைய பாபங்கள்
நில்லா, Nilla - நிற்கமாட்டாமல்
வீயும், Veeyum - அழிந்துபோதும்.