திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 6-2 பொறுத்தேன் (10 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1458பெரிய திருமொழி || (6-2–பொறுத்தேன்) (திருவிண்ணகர் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நமக்கு தஞ்சமாவார் யார் -என்று ஆராயக் கடவன்-அவ்வளவில் நாம் தூரஸ்தராக ஒண்ணாது என்று நான் விபரீதத்திலே கை வளருகிற நாளே தொடங்கி எண்ணித் ஸ்ரீ திரு விண்ணகரிலே வந்து சந்நிஹிதன் ஆகையாலே திருவடிகளில் வந்து சரணம் புகுந்தேன் என்னும் அளவாய் ஆய்த்து இறே இங்கே வந்து நின்றது) 1
பொறுத்தேன் புன் சொல் நெஞ்சில் பொருள் இன்பம் என இரண்டும் இறுத்தேன் ஐம்புலன் கட்கனாயின வாயிலொட்டி யறுத்தேன் யார்வச் செற்றமவை தன்னை மனத் தகற்றி வெறுத்தேன் நின் அடைந்தேன் திரு விண்ணகர் மேயவனே –6-2-1
பதவுரை Show / Hide
புன் சொல், Pun Sol - (பிறர் சொல்லும்) அற்பமான வார்த்தைகளை
நெஞ்சில், Nenjil - நெஞ்சிலே
பொறுத்தேன், Porutthen - பொறுத்துக்கொண்டிருந்தேன்;
ஐம்புலன்கள் கடன் ஆயின, Aimpulankal Kadan Aayin - பஞ்சேந்திரியங்களுக்கும் கடமையாக ப்ராப்தமாயுள்ள
பொருள் இன்பம் என இரண்டும், Porul Inbam Ena Irandum - அர்த்தம், காமம் என்ற இரண்டையும்
இறுத்தேன், Irutthen - அநுபவித்துத் தீர்த்தேன்;
ஆர்வம் செற்றம், Aarvam Settram - (வேண்டியவர்களிடத்தில்) ப்ரீதியென்ன, (வேண்டாதவர்களிடத்தில்) பகையென்ன ஆகிய இவற்றை
வாயிலொட்டி, Vaayilotti - ‘அவசியம் நிறைவேற்றி விடக்கடவுன்’ என்று பிரதிஜ்ஞை பண்ணி
அறுத்தேன், Arutthen - நிறைவேற்றி விட்டேன்;
அவை தன்னை, Avai Thannai - அந்த ராகத்வேஷங்களை
மனத்து அகற்றி, Manaththu Akattri - (இப்போது) நெஞ்சில் நின்றும் நீக்கினவனாய்க் கொண்டு
வெறுத்தேன், Verutthen - அவற்றில் வெறுப்புற்றவனாகி,
திருவிண்ணகர் மேயவனே நின் அடைந்தேன், Thiruvinnagar Meyavane Nin Adaindhen - திருவிண்ணகர்ப் பெருமானே! உன்னைச் சரணம் புகுந்தேன்.
1459பெரிய திருமொழி || (6-2–பொறுத்தேன்) (திருவிண்ணகர் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (திரு மார்பா –உன்னுடைய ஸ்வா தந்த்ர்யத்தை அழித்து ஸ்வீகரிப்பிக்கும் ஸ்ரீ பிராட்டி அன்றோ அருகே இருக்கிறாள் – அவள் ஏதேனும் தப்புச் சொல்லிலும் விடேன் என்னும் நீயும்-உன் ஸ்வா தந்த்ர்யத்தை அழித்து உன்னை இட்டு ஸ்வீகரிப்பிக்கும் அவளும் இருவரும் இங்கே சந்நிதி பண்ணுகையாலே தேவர் திருவடிகளுக்கு தகுதியானேன் – கலங்கா பெரு நகரம் இருப்பாய் இருக்க அவ்விடத்தை விட்டு ஸ்ரீ பிராட்டியோடு கூட எய்த்தாரை எடுக்கைக்காக திரு விண்ணகரிலே சந்நிஹிதனாய் – நான் எய்த்துக் கொடு நின்றேன் – எய்த்தாருக்கும் எய்த்தாரை எடுக்க வந்து நிற்கிறவர்களுக்கும் ஒரு சேர்த்தி இல்லையோ) 2
மறந்தேன் உன்னை முன்னம் மறந்த மதியில் மனத்தால் இறந்தேன் எத்தனையும் அதனால் இடும்பை குழியில் பிறந்தே எய்த்து ஒழிந்தேன் பெருமான் திரு மார்பா சிறந்தேன் நின்னடிக்கே திரு விண்ணகர் மேயவனே –6-2-2
பதவுரை Show / Hide
உன்னை, Unnai - (எப்போதும் ஸ்மரிக்கத் தகுந்தவனான) உன்னை (- (திருவிண்ணகர் மேயவனே!- ;) (அதற்கு மேலே))
முன்னம், Munnam - முதலிலே
மறந்தேன், Marandhen - மறந்தொழிந்தேன்;
மறந்த மதி இல் மனத்தால், Maranda Mathi Il Manaththal - இப்படி மறந்தோமே! என்கிற அநுதாப வுணர்ச்சியுமில்லாத மனத்தையுடைமையினால்
எத்தனையும், Ethanaiyum - மிகவும் (அசித்தைக் காட்டிலும்)
இறந்தேன், Irandhen - நிஹீனனாகக் கெட்டுப் போனேன்;
அதனால், Adhanal - ஆகையினாலே
இடும்பை, Idumpai - துக்கங்களுக்கு ஆஸ்பதமான
குழியில், Kuzhiyil - கர்ப்பக் குழியில்
பிறந்தே, Pirandhe - இடைவிடாது ஜனன மரணங்களை யுடையனாய்க் கொண்டு
எய்த்து ஒழிந்தேன், Eyththu Ozhindhen - அனர்த்தப்பட்டுப் போனேன்;
திரு மார்பா பெருமான், Thiru Maarpaa Perumaan - பிராட்டியை மார்பிலே யுடைய பெருமானே!
நின் அடிக்கே, Nin Adikke - உனது திருவடிகளுக்கே
சிறந்தேன், Siranthen - (இப்போது) தகுந்தவனாக அமைந்தேன்.
1460பெரிய திருமொழி || (6-2–பொறுத்தேன்) (திருவிண்ணகர் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (விபூதி த்வயத்தையும் தனக்கு பிரகாரமாக உடையனாய் இருந்து வைத்து என்னைப் பெறுகை தனக்கு தேட்டமாக வந்தான் ஆய்த்து – இன்னும் வரத்தும் போக்கும் உண்டு என்று தோற்றாதபடி ஸ்தாவர ப்ரதிஷ்டையாக இருந்தான் ஆய்த்து – அறு காத பயணத்துக்கு பொதி சோறு கொண்டு போம் விஷயம் இங்கே சந்நிஹிதம் ஆய்த்து) 3
மானேய் நோக்கியர் தம் வயிற்றுக் குழியில் உழைக்கும் ஊனேர் ஆக்கை தன்னை யுதவாமை உணர்ந்து உணர்ந்து வானே மா நிலமே வந்து வந்து என் மனத்து இருந்த தேனே நின்னடைந்தேன் திரு விண்ணகர் மேயவனே –6-2-3
பதவுரை Show / Hide
வானே மா நிலமே, Vane Maa Nilame - நித்யவிபூதிக்கும் லீலா விபூதிக்கும் நிர்வாஹகனே! (- (திரு விண்ணகர் மேயவனே!- ;))
உவந்து வந்து, Uvandu Vandu - (பரமபதத்தில் நின்றும்) உவப்போடேவந்து
என்மனத்து இருந்த தேனே, Enmanaththu Irundha Thenne - என்மனத்தில் நித்யவாஸம் பண்ணுகின்ற பரமபோக்யனே!
மான் ஏய் நோக்கியர்தம், Maan Aey Nokkiyartham - மானைப் போன்ற கண்ணழகையுடையரான ஸ்த்ரீகளினுடைய
வயிற்றுக் குழியில், Vayittruk Kuzhiyil - கர்ப்பக்குழியில் இருந்து கொண்டு
உழைக்கும், Uzhaikkum - கஷ்டப்படுமதாய்
ஊன் ஏய், Oon Aey - மாம்ஸாதிகள் நிறைந்ததான
ஆக்கை தன்னை, Aakkai Thannai - சரீரத்தினுடைய
உதவாமை உணர்ந்து உணர்ந்து, Udhavamai Unarndhu Unarndhu - உபயோகமற்றதன்மையை நன்றாக அறிந்து
நின் அடைந்தேன், Nin Adaindhen - உன்னை வந்து பற்றினேன்
1461பெரிய திருமொழி || (6-2–பொறுத்தேன்) (திருவிண்ணகர் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஜ்ஞானம் பிறக்கைக்கு ஒரு காலமும்-த்யஜிகைக்கு ஒரு காலமும் வேண்டுகிறது இல்லை – இவ்வருகு உண்டான பந்துக்கள் நமக்கு உபகாரகர் அல்லர்கள்-இனி இவ்வளவுக்கு தஞ்சமாவார் ஆர் -என்று நெஞ்சிலே பட்டவாறே என்னையே தஞ்சமாக நினைத்து இரு -என்று அருளிச் செய்த ஒரு வார்த்தை உண்டு இறே-அது இப்போது வாரா உதவிற்று இவருக்கு இப்புத்தி விசேஷத்தை பண்ணுவித்து ஸ்ரீ திரு விண்ணகரிலே வந்து சந்நிதி பண்ணி யாய்த்த்து அர்ஜுனன் உடைய தேர்த் தட்டு போலே யாய்த்து ஸ்ரீ திரு விண்ணகர் அர்ஜுனனுக்கு அருளிச் செய்த வார்த்தை அவனோடு ஒத்த சம்பந்தம் உடையார்க்கு எல்லாமாம் இறே) 4
பிறிந்தேன் பெற்ற மக்கள் பெண்டிர் என்று இவர் பின்னுதவாவது அறிந்தேன் நீ பணித்த வருள் என்னும் ஒள் வாள் உருவி எறிந்தேன் ஐம்புலன்கள் இடர் தீர வெறிந்து வந்து செறிந்தேன் நின்னடிக்கே திரு விண்ணகர் மேயவனே –6-2-4
பதவுரை Show / Hide
பெற்ற மக்கள், Petra Makkal - வயிற்றில் பிறந்த பிள்ளைகள் (- (திரு விண்ணகர் மேயவனே!- ;))
பெண்டிர், Pendir - மனைவியர்
என்ற இவர், Endra Ivar - இத்யாதிகளான பந்துக்கள்
பின் உதவாது அறிந்தேன், Pin Udhavathu Arindhen - முடிவு காலத்துக்குத் துணையாக மாட்டார்க ளென்பதைத் தெரிந்து கொண்டவனாய்
பிறிந்தேன், Pirindhen - (அவர்களை) விட்டொழிந்தேன்;
நீ பணித்த அருள் என்னும், Nee Paniththa Arul Ennum - (முன்பு திருத்தேர்த் தட்டிலே) நீ அருளிச் செய்த சரமச்லோகமாகிற
ஒள் வாள் உருவி, Ol Vaal Uruvi - ஒளி பொருந்திய கத்தியை உறையில்நின்றும் கழற்றி,
ஐம்புலன்கள் இடர் தீர, Aimpulankal Idar Theera - சப்தாதிவிஷயங்களாலே உண்டாகிற துயர் தொலையும்படி
எறிந்தேன், Erindhen - வீசினேன்;
வெறிந்து வந்து, Verinthu Vandu - அகிஞ்சானாய்க்கொண்டு வந்து
நின் அடிக்கே செறிந்தேன், Nin Adikke Serindhen - உனது திருவடிகளுக்கே பொருந்தினேன்.
1462பெரிய திருமொழி || (6-2–பொறுத்தேன்) (திருவிண்ணகர் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஐஸ்வர்யம் பிரத்யஷம் நீர் ஆசைப்படுகிறது அதீந்த்ரம் என்ன ஒண்ணாத படி ஸ்ரீ திரு விண்ணகரிலே வந்து நிற்கிறது – கைங்கர்ய சாம்ராஜ்யத்தை தருகைக்கு அன்றோ இந்நிலை) 5
பாண் தேன் வண்டு அறையும் குழலார்கள் பல்லாண்டு இசைப்ப ஆண்டார் வையம் எல்லாம் அரசாகி முன் ஆண்டவரே மாண்டார் என்று வந்தார் அந்தோ மனை வாழ்க்கை தன்னை வேண்டேன் நின்னடைந்தேன் திரு விண்ணகர் மேயவனே –6-2-5
பதவுரை Show / Hide
பாண், Paan - இசைப்பாட்டையுடையனவாய் (- (திரு விண்ணகர் மேயவனே!-;))
தேன், Then - தேனைப் பருகுகின்ற
வண்டு, Vandu - வண்டுகள்
அறையும், Araiym - ரீங்காரம் செய்யப்பெற்ற
குழலார்கள், Kuzhalargal - கூந்தலையுடையரான மாதர்கள்
பல்லாண்டு இசைப்ப, Pallandu Isaiyappa - மங்களாசாஸணம் பண்ண
அரசு ஆகி, Arasu Aagi - அரசர்களாயிருந்து கொண்டு
வையம் எல்லாம், Vaiyam Ellam - பூமண்டலம் முழுவதையும்
ஆண்டார், Aandaar - ஆட்சிபுரிந்தார்கள்,
முன் ஆண்டவரே மாண்டார், Mun Aandavare Maandaar - (இப்படி) முன்பு ஆண்டு வந்த அவர்களே மாண்டு போனார்கள்,
என்று வந்தார், Endru Vandhaar - என்ற சொல்லுக்கு இலக்காய்க்கொண்டு வருகிறார்கள்;
அந்தோ, Andho - ஐயோ!
மனை வாழ்க்கை தன்னை வேண்டேன், Manai Vaalkkai Thannai Vendein - (இப்படி நிலையற்றதான) ஸம்ஸாரவாழ்க்கையை வெறுத்தவனாய்க்கொண்டு
நின் அடைந்தேன், Nin Adaindhen - உன்னைப் பற்றினேன்.
1463பெரிய திருமொழி || (6-2–பொறுத்தேன்) (திருவிண்ணகர் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (மதிளையும் அரணாகப் போம் படி கடலையும் உடைய இலங்கையை அழியச் செய்த – அந்த வில் கொண்டு வியாபாரிக்க அங்கே வந்து முகம் காட்டப் பெற்றது இல்லை என்ன அந்த பிரதி பஷத்தை அழியச் செய்து அங்கனே போனாயோ-போக்குக் காட்டி இங்கே அன்றோ வந்து புகுந்தது) 6
கல்லா ஐம் புலன்கள் வவை கண்டவாறே செய்யகில்லேன் மல்லா மல் அமருள் மல்லர் மாள மல்லடர்த்த மல்லா மல்லல் அஞ்சீர் மதிள் நீர் இலங்கை அழித்த வில்லா நின்னடைந்தேன் திரு விண்ணகர் மேயவனே –6-2-6
பதவுரை Show / Hide
கல்லா, Kallaa - (சாஸ்த்ர நெறியில் நிற்கமாட்டாத) கல்விபயிரா (- (திருவிண்ணகர்மேயவனே!- ;) (நின் அடைந்தேன்-.))
ஐம்புலன்கள் அவை, Aimpulankal Avai - பஞ்சேந்திரியங்களானவை
கண்ட ஆறு, Kanda Aaru - செய்ய நினைத்தவிதமாக
செய்யகில்லேன், Seyyakillein - நான் செய்யமாட்டுகின்றிலேன்;
மல்லர், Mallaiyar - வலிமையுள்ள பெருமானே!,
மல் அமருள், Mal Amarul - மற்போரில்
மல்லர் மாள, Mallaiyar Mal - (சாணூரன் முதலிய) மல்லர்கள் முடியும்படியாக
மல் அடர்த்த, Mal Atartta - (அவர்களுடைய) வலியையழித்த
மல்லா, Malla - மல்தொழில் வல்லவனே!,
மல்லம் அம் சீர், Mallam Am Cir - மிகவும் அழகிய செல் வத்தையுடைத்தாய்
மதிள், Matil - மதிள்களால் சூழப்பட்டதாய்
நீர், Nir - சுற்றிலும் நீர்க்கோட்டையை யுடைத்தான
இலங்கை, Ilankai - லங்காபுரியை
அழித்த, Alitta - நாசம்செய்த
வில்லா, Villa - சார்ங்கத்தையுடையவனே!
1464பெரிய திருமொழி || (6-2–பொறுத்தேன்) (திருவிண்ணகர் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (என்னுடைய பூர்வ வ்ருத்தத்தைப் பார்த்தால் தேவர் சீற வேண்டும்படியாய் இருக்கும் நான் சர்வ தோஷ உக்தனாய் இருந்தேன்-நீ சர்வஞ்ஞனாய் இருந்தாய் ஆனபின்பு -நம்மையும் தன்னையும் பாராதே இவன் நிர்தோஷரைப் போலே நம் காலைப் பிடிப்பதே என்று சீறாதே -சீறாமை போராது இத்தை திரு உள்ளத்தே கொண்டு அருள வேணும்- விச்வச நீயனான நீ சந்நிஹிதனாய் இருக்க பயாவஹமான பதார்த்தங்களுக்கு அடிமை செய்து திரிய வேணுமோ) 7
வேறாய் யான் இரந்தேன் வெகுளாது மனக்கொள் எந்தாய் ஆறா வென் நரகத்து அடியேனை இடக்கருதிக் கூறா வைவர் வந்து குமைக்கக் குடி விட்டவரைத் தேறாது உன்னடைந்தேன் திரு விண்ணகர் மேயவனே –6-2-7
பதவுரை Show / Hide
எந்தாய், Entay - ஸ்வாமிந்!, (- (திரு விண்ணகர் மேயவனே!- ;) (மனக்கொள்) (உன் அடைந்தேன்.))
யான், Yan - அடியேன்
வேறு ஆ, Veru A - விலக்ஷணமாக
இரந்தேன், Iranten - யாசிக்கின்றேன்;
வெகுளாது, Veguladu - சீற்றமி்ன்றி
ஐவர், Aivar - பஞ்சேந்திரியங்கள்
அடியேனை, Adiyenai - அடியேனை
ஆறா வெம் நரகத்து, Ara Vem Narakattu - ஓய்வில்லாத கொடிய ஸம்ஸாரநரகத்திலே
இடக் கருதி, Itak Karuti - தள்ள நினைத்து
கூது ஆ, Koothu Aa - என்னைத் தங்களுக்குப் பாகமாகக் கொண்டு
வந்து, Vandhu - என்னைக் கிட்டி
குமைக்க, Kumaikka - ஹிம்ஸிக்க,
குடி விட்டவரை, Kudi Vittavarai - (நீ என்னை நல்வாழிப் படுத்துகைக்காக ஸ்ருஷ்டிகாலத்தில் என்னிடத்தில்) குடியிருக்கச்செய்த அந்த இந்திரியங்களை
தேறாது, Theraadhu - நம்பாமல்
1465பெரிய திருமொழி || (6-2–பொறுத்தேன்) (திருவிண்ணகர் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (மூவா வானவர்–அகர்ம வச்யராக்கி அவர்களுக்கு உன்னை அனுபவிக்க கொடுத்து அவ்வழியாலே அவர்கள் சத்தையை நிர்வஹித்துக் கொண்டு போர நின்றாய்- பிராதாக்களில் ஒருவன் முடி சூடி வாழா நிற்க-ஒருவன் சிறைப் பட்டு கிடந்தால் போலே தோற்றா நின்றது யாய்ற்று – என்னுடைய ஷயத்தை போக்குகைகாக நீயே வந்து சந்நிஹிதனாய் இருக்க நான் பிறருக்கு அடிமை செய்து திரியவோ) 8
தீவாய் வல்வினையார் உடன் நின்று சிறந்தவர் போல் மேவா வென் நரகத்து இட உற்று விரைந்து வந்தார் மூவா வானவர்தம் முதல்வா மதி கோள் விடுத்த தேவா நின்னடைந்தேன் திரு விண்ணகர் மேயவனே –6-2-8
பதவுரை Show / Hide
தீ வாய், Thee Vaai - நெருப்பையுமிழ்கின்ற வாயையுடைய (- (திரு விண்ணகர் மேயவனே!- ;) (நின் அடைந்தேன்-,))
வல், Val - கொடிய
வினையார், Vinaiyaar - பாவங்கள்
சிறந்தவர் போல், Sirandhavar Pol - பந்துக்கள் போன்று
உடன் நின்று, Udan Nindru - என்னோடு பிரியாமல் கலந்துநின்று
மேவா வெம் நரகத்து இட உற்று, Mevaa Vem Narakaththu Ida Utru - பொருந்தாத கொடிய நரகத்திலே (என்னைத்) தள்ள முயன்று
விரைந்து வந்தார், Viraindhu Vandhaar - வெகுவேகமுடையனவா யிருக்கின்றன
மூவா, Moovaa - கிழத்தனம் முதலிய விகாரங்களற்ற
வானவர்தம் முதல்வா, Vaanavartham Muthalvaa - தேவாதிதேவனே!
மதிகோள் விடுத்த தேவா, Mathikool Vidutha Devaa - சந்திரனுடைய க்ஷயரோகத்தைப் போக்கினதேவனே!
1466பெரிய திருமொழி || (6-2–பொறுத்தேன்) (திருவிண்ணகர் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ பிராட்டிமாரும் ஸ்ரீ நித்ய சூரிகளும் புருஷகாரமாக சரணம் புகுகிறார்) 9
போதார் தாமரையாள் புலவிக் குல வானவர்தம் கோதா கோதில் செங்கோல் குடை மன்னரிடை நடந்த தூதா தூ மொழியாய் சுடர் போல் என் மனத்து இருந்த வேதா நின்னடைந்தேன் திரு விண்ணகரம் மேயவனே –6-2-9
பதவுரை Show / Hide
போது ஆர் தாமரையாள், Pothu Aa Thamaraiyaal - நல்லபோதிலே அலர்ந்த தாமரைப்பூவை இருப்பிடமாகவுடையளான பிராட்டிக்கும் (- (திரு விண்ணகர் மேயவனே!- ;) (நின் அடைந்தேன்))
புலவி, Pulavi - பூமிப்பிராட்டிக்கும்
குலம் வானவர்தம், Kulam Vaanavartham - சிறந்த நித்யஸூரிகளுக்கும்
கோதா, Kodha - விரும்பத்தகுந்தவனே!
கோது இல் செங்கோல், Kothu Il Chengol - தடையின்றிச் செங்கோல் செலுத்துமவராய்
குடை, Kudai - கொற்றக்குடையை யுடையரான
மன்னர் இடை, Mannar Idai - (துரியோதநாதி) ராஜாக்களிடத்தில்
நடந்த தூதா, Nadanda Thutha - தூது நடந்தவனே!,
தூ மொழியாய், Thoo Mozhiyai - இன்சொற்களை யுடையவனே!
சுடர்போல், Sudharpol - விளக்கொளிபோலே (ஜ்வலித்துக்கொண்டு)
என் மனத்து இருந்த, En Manathu Irundha - என்னுள்ளத்தில் உறைகின்ற
வேதா, Veda - வேத வேத்யனே!- ;
1467பெரிய திருமொழி || (6-2–பொறுத்தேன்) (திருவிண்ணகர் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இப்பத்தும் வல்லார் –அங்கே போய் சிலருக்கு பரதந்த்ரராய் இருக்கை அன்றிக்கே ஆண்மின்கள் வானகம் -என்கிறபடியே-தாங்கள் அங்குத்தைக்கு நிர்வாஹகராய்க் கொண்டு ஸ்ரீ வைகுண்டத்தைப் பிராபிக்கப் பெறுவார்) 10
தேனார் பூம் புறவில் திரு விண்ணகர் மேயவனை வானாரும் மதிள் சூழ் வயல் மங்கையர் கோன் மருவார் ஊனார் வேல் கலியன் ஒலி செய் தமிழ் மாலை வல்லார் கோனாய் வானவர் தம் கொடி மா நகர் கூடுவரே –6-2-10
பதவுரை Show / Hide
தேன் ஆர் பூ புறவின், Then Aar Poo Puravin - தேன்நிறைந்த பூக்களை யுடைய சோலைகள் யுடைத்தான
திரு விண்ணகர், Thiru Vinnagar - திருவிண்ணகர்த் திருப்பதியிலே
மேயவனை, Meyavanai - நித்யவாஸஞ்செய்தருளு மெம்பெருமான் விஷயமாக,
வான் ஆரும் மதிள் வயல் சூழ் மங்கையர் கோன், Vaan Aarum Mathil Vayal Soozh Mangaiyar Kon - ஆகாசத்தையளாவியிருக்கிற மதிள்களாலும் கழனிகளாலும் சூழப்பட்ட திருமங்கையிலுள்ளார்க்கு ஸ்வாமியாய்,
மருவார், Maruvar - பகைவருடைய
ஊன் ஆர், Oon Aar - சரீரங்களிலே புகுவதான வேற்படையையுடையரான
கலியன், Kaliyan - ஆழ்வார்
ஒலிசெய், Olisei - அருளிச்செய்த
தமிழ் மாலை, Tamil Malai - இத் தமிழ்ப்பாசுரங்களை
வல்லார், Vallaar - ஓதவல்லவர்கள்
கோன் ஆய், Kon Aay - ஸ்ரீவைகுண்ட நிர்வாஹகராய்க் கொண்டு
வானவர் தம் கொடி மா நகர், Vaanavar Tham Kodi Maa Nagar - நித்யஸூரிகளுடைய கொடிகளால் அலங்கரிக்கப் பட்ட சிறந்ததான ஸ்ரீவைகுண்டத்தை
கூடுவர், Kooduvar - அடையப்பெறுவர்.