திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1478 | பெரிய திருமொழி || (6-4–கண்ணும் சுழன்று) (திரு நறையூர் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இப்படி ஜகதா காரணனாய் வேத பிரதிபாத்யன் ஆனவன்-சர்வம் கல்விதம் ப்ரஹ்ம-என்று இறே-சொல்லுகிறது – அந்த வேதோக்தமான சர்வ கர்ம சமாத்ராத்யன் ஆனவன் சம்சாரிகள் உடைய ரஷணத்துக்கு உறுப்பாக கிட்டி வர்த்திக்கிற ஸ்ரீ திரு நறையூரை ஆஸ்ரயிப்போம் ஒருப்படு என்று திரு உள்ளத்தோடு கூட்டுகிறார்) 1 | கண்ணும் சுழன்று பீளையோடு ஈளை வந்து ஏங்கினால்
பண்ணின் மொழியார் பைய நடமின் என்னாத முன்
விண்ணும் மலையும் வேதமும் வேள்வியும் ஆயினான்
நண்ணு நறையூர் நாம் தொழுதும் எழும் நெஞ்சமே –6-4-1 | பதவுரை Show / Hideபீளையோடு, Peelayodu - பிளிச்சையோடு கூட (- (திரஸ்கரித்துச்) சொல்வதற்கு முன்,-) கண்ணம் சுழன்று, Kannam Suzhandru - கண்கள் சுழலமிட்டு ஈளை வந்து, Eilai Vandu - கோழைமேலிட்டு ஏங்கினால், Aenginaal - தளர்ச்சியடைந்தால், (அப்போது) பண் இன் மொழியார், Pan In Mozhiyaar - இசைப்பாட்டுபோல் இனிமையான வாய் மொழியை யுடையமாதர் (நம்மை நோக்கி) பைய நடமின் என்னாத முன், Paiya Nadamin Ennaadha Mun - ‘மெல்ல நடந்து செல்லுங்கள்’ என்று விண்ணும், Vinnum - ஆகாசமும் மலையும், Malaiyum - பர்வதங்களும் வேதமும், Vedhamum - வேதங்களும் வேள்வியும், Velviyum - யாகங்களும் ஆயினான், Aayinaan - தானேயாயிருக்கு மெம்பெருமான் நண்ணும், Nannum - விரும்பியுடையுமிடமான நறையூர், Naraiyoor - திருநறையூரை நெஞ்சமே, Nenjamai - ஓ மனமே! நாம் தொழுதும், Naam Thozhudum - நாம் வணங்குவோம்; எழு, Ezhu - எழுந்திரு |
| 1479 | பெரிய திருமொழி || (6-4–கண்ணும் சுழன்று) (திரு நறையூர் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவன் நமக்காக வந்து நிற்கிற தேசத்திலே நாமும் புக்கு ஆஸ்ரயிப்போம்) 2 | கொங்குண் குழலார் கூடியிருந்து சிரித்து நீர்
இங்கு என் இருமி எம்பால் வந்தது என்று இகழாத முன்
திங்கள் எரி கால் செஞ்சுடராயவன் தேசுடை
நங்கள் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே –6-4-2 | பதவுரை Show / Hideகொங்கு உண் குழலார், Kongu Un Kuzhalar - மணம் பொருந்திய கூந்தலை யுடையரான மாதர் (- (நாம் தொழுதும், நெஞ்சமே! எழு)) கூடி இருந்து, Koodi Irundhu - கூடு்டமாகத் திரண்டிருந்து சிரித்து, Siriththu - பரிஹாஸம் பண்ணி நீர் இருமி இங்கு எம்பால் வந்தது என், Neer Irumi Ingu Empaal Vandhadhu En - ‘நீங்கள் இருமிக்கொண்டு இவ்விடத்தில் எங்களிடத்தில் வந்தது எதுக்காக?‘ என்று இகழாத முன், Endru Ikazhatha Mun - என்று திரஸ்கரிப்பதற்கு முன்னே,- திங்கள் எரி கால் செம் சுடர் ஆயவன், Thingal Eri Kaal Sem Sudar Aayavan - சந்திரனும் அக்நியும் காற்றும் ஸூரியனும் ஆகிய இப்பொருள்களாயிருக்கும் எம்பெருமானுடையதும் தேசு உடை, Desu Udai - தேஜஸ்ஸையுடையதும் நாங்கள், Naangal - நமக்குப் புகலிடமானதுமான நறையூர், Naraiyoor - திருநறையூரை |
| 1480 | பெரிய திருமொழி || (6-4–கண்ணும் சுழன்று) (திரு நறையூர் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (எல்லாருக்கும் தம் தாமுடைய அபேஷிதங்கள் பெற்று போகலாம்படி அவன் வந்து நித்ய வாஸம் பண்ணுகிற தேசத்தை நாம் போய் ஆஸ்ரயிப்போம்) 3 | கொங்கார் குழலார் கூடி இருந்து சிரித்து எம்மை
எம்கோலம் ஐயா என் இனிக் காண்பது என்னாத முன்
செங்கோல் வலவன் தான் பணிந்து ஏத்தித் திகழுமூர்
நங்கோன் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே –6-4-3 | பதவுரை Show / Hideகொங்கு ஆர் குழலார், Kongu Aar Kuzhalar - (தலைப் பூக்களில் நின்றும் பெருகின) தேன்நிறைந்த கூந்தலையுடைய மாதர் (- (நாம் தொழுதும் நெஞ்சமே! எழு-.)) கூடி இருந்து, Koodi Irundhu - திரளாக இருந்து சிரித்து, Siriththu - பரிஹாஸம்பண்ணி ஐயா, Aiyya - ‘கிழவனாரே! இனி, Ini - இப்படி நீர் கிழத்தன மடைந்த பின்பு எம்மை, Emmai - எங்களையும் எம் கோலம், Em Kolam - எங்களுடைய அலங்காரத்தையும் என் காண்பது, En Kaanbadhu - எதுக்காகப் பார்ப்பது?’ என்னாத முன், Ennaadha Mun - என்று திரஸ்தரிப்பதற்கு முன்னே, செங்கோல் வலவன் தான், Sengol Valavan Thaan - அரசாட்சி புரிந்த சோழராஜன் பணிந்து, Panindhu - ஆக்ரமித்து ஏத்தி, Aethi - துதித்து திகழும் ஊர், Thigazhum Oor - விளங்கப் பெற்ற திவ்யதேசமாய் நம் கோன், Nam Kon - எம்பெருமானுடையதான நறையூர், Naraiyoor - திருநறையூரை |
| 1481 | பெரிய திருமொழி || (6-4–கண்ணும் சுழன்று) (திரு நறையூர் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சர்வ அவஸ்தையிலும் பற்றலாம்படி விச்வச நீயனானவன் வர்த்திக்கிற ஸ்ரீ திரு நறையூரை நாம் ஆஸ்ரயிப்போம்) 4 | கொம்பும் அரவமும் வல்லியும் வென்ற நுண் ஏர் இடை
வம்புண் குழலார் வாசலடைத்து இகழாத முன்
செம்பொன் கமுகு இனம் தான் கனியும் செழும் சோலை சூழ்
நம்பன் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சே –6-4-4 | பதவுரை Show / Hideகொம்பும் அரவமும் வல்லியும் வென்ற, Kombum Aravamum Valliyeum Vendra - வஞ்சிக் கொடியையும் ஸர்ப்பத்தையும் இளங்கொடியையும் தோற்கடித்த (- (நாம் தொழுதும், நெஞ்சமே ! எழு-.)) நுண் ஏர் இடை, Nun Aer Idai - நுட்பமாய் அழகிதான இடையையுடையரும் வம்பு உண் குழலார், Vambu Un Kuzhalar - பரிமளம் மிக்க கூந்தலை யுடையருமான பெண்கள் வாசல் அடைந்து, Vaasal Adaindhu - வாசற்கதவைப் போட்டுவிட்டு இகழாத முன், Ikazhaadha Mun - அவமானப்படுத்துவதற்கு முன்னே-, கமுகு இனம், Kamuku Inam - பாக்குமரங்களின் திரள்கள் செம்பொன், Sembon - செவ்விய பொன் போலே கனியும், Kaniyum - பழுத்திருக்கப்பெற்ற செழு சோலை, Sezhu Solai - வளம்மிக்க சோலைகளாலே சூழ், Sool - சூழப்பட்டதும் நம்பன், Namban - விச்வஸிக்கத்தகுந்த எம்பெருமானுடையதுமான நறையூர், Naraiyoor - திருநறையூரை |
| 1482 | பெரிய திருமொழி || (6-4–கண்ணும் சுழன்று) (திரு நறையூர் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அங்கு உள்ள திர்யக்குகளும் அகப்பட இன்னது பெற்றிலோம் என்னும் சோகம் இன்றிக்கே அபிமத லாபத்தாலே களித்து வர்த்திக்கிற தேசம் ஆய்த்து ஆக-இன்னது பெற்றிலோம் என்னும் சோகம் இன்றிக்கே உத்தேச்யத்தைப் பெற்று களித்து வர்த்திகலாம் படியான நன்மையை உடைய தேசத்தை நாம் ஆஸ்ரயிப்போம்) 5 | விலங்கும் கயலும் வேலும் ஒண் காவியும் வென்ற கண்
சலம் கொண்ட சொல்லார் தாங்கள் சிரித்து இகழா முன்
மலங்கும் வராலும் வாளையும் பாய் வயல் சூழ் தரு
நலங்கொள் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சே –6-4-5 | பதவுரை Show / Hideவிலங்கும், Vilangum - மானையும் (- (நாம் தொழுதும், நெஞ்சமே! எழு-.)) கயலும், Kayalum - மீனையும் வேலும், Velum - வேற்படையும் ஒண் காவியும், On Kaaviyum - அழகிய செங்கழுநீர்ப்பூவையும் வென்ற, Vendru - தோற்கடித்த கண், Kan - கண்களை யுடையரும் சலம் கொண்ட சொல்லார் தாங்கள், Salam Konda Sollaar Thangal - கபடமுள்ள சொற்களை யுடையருமான பெண்கள் சிரித்து, Siriththu - பரிஹாஸம் பண்ணி இகழாத முன், Ikazhaadha Mun - திரஸ்கரிப்பதற்கு முன்னே,- மலங்கும் வராலும் வாளையும், Malangum Varalum Vaalaiyum - பலவகைப்பட்ட மீன்கள் பாய், Paai - துள்ளி விளையாடுகின்ற வயல், Vayal - கழனிகளாலே சூழ்தரு, Sooltharu - சூழப்பட்டதும் நலம் கொள், Nalam Kol - நன்மைமிக்கதுமான நறையூர், Naraiyoor - திருநறையூரை |
| 1483 | பெரிய திருமொழி || (6-4–கண்ணும் சுழன்று) (திரு நறையூர் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சகல தாபமும் ஆறும்படியான ஜல சம்ருத்தியை உடைத்தான ஸ்ரீ திரு நறையூரை நாம் புக்கு ஆஸ்ரயிப்போம் – பொருந்தாத ராவணனை அழியச் செய்து ஸ்ரீ விபீஷணனுக்கு புகலாய் நின்ற ஸ்ரீ சக்கரவர்த்தி திரு மகனைப் போலே நம்முடைய விரோதியை வாசனையோடே போக்குகைக்கு ஈடான பெரு மிடுக்கனானவன் வந்து வர்த்திக்கிற ஸ்ரீ திரு நறையூரிலே போய்ப் புகுவோம்) 6 | மின்னேர் இடையார் வேட்கையை மாற்றி இருந்து
என்னீர் இருமி எம்பால் வந்தது என் என்று இகழா முன்
தொன்னீர் இலங்கை மலங்க விலங்கெரி யூட்டினான்
நன்னீர் நறையூர் தொழுது எழு மட நெஞ்சமே –6-4-6 | பதவுரை Show / Hideமின் நேர், Min Ner - மின்னல்போன்ற இடையையுடையரான மாதர் (முன்பு வைத்திருந்த) ப்ரீதியை (- (நாம் தொழுதும், நெஞ்சமே! எழு.-)) மாற்றி இருந்து, Maatri Irundhu - தீவிர்ந்தவர்களாய்க் கொண்டு நீர், Nir - (கிழவரான) நீங்கள் இருமி, Irumi - இருமிக்கொண்டு எம்பால் வந்தது என் என்று, Embaal Vandhadhu En Endru - ‘எங்களிடம் வந்தது ஏதுக்காக!’ என்று இகழாத முன், Ikazhaadha Mun - திரஸ்கரிப்பதற்கு முன்னே தொல் நீர் இலங்கை, Thol Neer Ilangai - கடல்சூழ்ந்த லங்காபுரி மலங்க, Malanga - வியாகுலப்படும்படி விலங்கு, Vilangu - (அனமானாகிற) வானர வீரனைக்கொண்டு எரி ஊட்டீனான், Eri Oottinaan - தீமூட்டிவிட்ட பெருமானுடையதாய் நல் நீர், Nal Neer - நல்ல தீர்த்தங்களையுடைத்தான நறையூர், Naraiyoor - திருநறையூரை |
| 1484 | பெரிய திருமொழி || (6-4–கண்ணும் சுழன்று) (திரு நறையூர் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வேதத்தில் வாசனை போய் ஆசாரத்திலே ஏதேனும் ஓர் வைகல்யம் உண்டாய் இருக்கை அன்றிக்கே ஆசார பிரதானவர்கள் வர்த்திக்கிற தேசத்தை –நாமும் போய் ஆஸ்ரயிப்போம்) 7 | வில்லேர் நுதலார் வேட்கையை மாற்றிச் சிரித்து இவன்
பொல்லான் திரைந்தான் என்னும் புறனுரை கேட்பதன் முன்னம்
சொல்லார் மறை நான்கோதி யுலகில் நிலா யவர்
நல்லார் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே –6-4-7 | பதவுரை Show / Hideவில் ஏர் நுதலார், Vil Aer Nuthalaar - வில்போன்று அழகிய நெற்றியையுடையரான மாதர் (- (நாம் தொழுதும், நெஞ்சமே! எழு-.)) வேட்கையை மாற்றி, Vedkaitai Maatri - (முன்பு வைத்திருந்த) ஆசையைத் தவிர்த்து சிரித்து, Siriththu - பரிஹாஸம்பண்ணி இவன் பொல்லான், Ivan Pollaan - ‘இந்தக் கிழவன் பொல்லாதவன்’ திரைந்தான், Thiraindhaan - சதை சுருங்கினான் என்னும், Ennum - என்று (இகழ்ந்து) சொல்லும்படியான புறன் உரை, Puran Urai - இழிவான வார்த்தைகள கேட்பதன் முன், Kaetpathan Mun - கேட்கநேருவதற்கு முன்னே,- சொல் ஆர், Sol Aar - பதங்கள் நிரம்பிய நான்கு மறை, Naanthu Marai - நான்கு வேதங்களையும் ஓதி, Othi - அதிகரித்து உலகில், Ulagil - இவ்வுலகில் நிலாயவர், Nilayavar - (அவ்வேதங்களை) ஸ்தாபிக்கு மவர்களாய் நல்லார், Nallaar - நல்லொழுக்கமுடையரான வைதிகர்வாழ்கிற நறையூர், Naraiyoor - திருநறையூரை |
| 1485 | பெரிய திருமொழி || (6-4–கண்ணும் சுழன்று) (திரு நறையூர் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நித்ய உத்சவமும் வைதிக சமாராதானமும் என்றும் மாறாத ஊர் – ஸ்ரீ பரம பத்திலே போய் நித்ய அனுபவம் பண்ணும் அளவும் செல்ல இப் பிரக்ருதியோடே அத்தோடு போலியான ஸ்ரீ திரு நறையூரிலே புக்கு அனுபவிப்போம்) 8 | வாள் ஒண் கண் நல்லார் தாங்கள் மதனன் என்றார் தம்மைக்
கேளுங்கள் ஈளையோடு ஏங்கு கிழவன் என்னாத முன்
வேள்வும் விழவும் வீதியில் என்றும் அறாத ஊர்
நாளு நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே –6-4-8 | பதவுரை Show / Hideவாள் ஒண், Vaal On - வாள்போன்ற கண் நல்லார், Kan Nallaar - கண்களையுடைய பெண்கள் தாங்கள், Thangal - இப்போது இகழும் தாங்களே மதனன், Madhanan - இவன் மன்மதன் என்றார், Endraar - என்று சொன்ன தம்மை, Thammai - ஆண்களைப் பார்த்து ஈளையோடு, Eelaiyodu - கோழையோடு ஏங்கு கிழவன், Aengu Kizhavan - ஏங்கும் கிழவன் கேண்மின்கள், Keenmingal - எங்கே வந்தான் என்று கேளுங்கள் என்னாத முன், Ennaadha Mun - என்று சொல்வதற்கு முன் வேள்வும், Velvum - யாகங்களும் விழவும் வீதியில், Vizhavum Veedhiyil - விழாக்களும் வீதியில் என்றும் அறாத, Endrum Aradha - என்றும் தினமும் ஊர் நாளும், Oor Naalum - நிகழும் ஊரான நறையூர், Naraiyoor - நறையூரை நாம் தொழுதும், Naam Thozhudum - நாம் வணங்குவோம் எழு நெஞ்சமே!, Ezhu Nenjamai - எழுந்திரு மனமே |
| 1486 | பெரிய திருமொழி || (6-4–கண்ணும் சுழன்று) (திரு நறையூர் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ பிராட்டிக்காக பரிகிரஹித்தான் என்கிற பெருமையை உடைய ஸ்ரீ திரு நறையூரை அவள் பரிகர பூதரான நாம் போய் ஆஸ்ரயிப்போம்) 9 | கனி சேர்ந்து இலங்கு நல் வாயவர் காதன்மை விட்டிட
குனி சேர்ந்து வுடலம் கோலில் தளர்ந்து இளையா முன்
பனி சேர் விசும்பில் பால் மதி கோள் விடுத்தான் இடம்
நனி சேர் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே –6-4-9 | பதவுரை Show / Hideகனி சேர்ந்து, Kani Serndhu - கோவைப்பழத்தோடொத்து (- (தளர்ந்து இளையாத முன்-;) (நாம் தொழுதும், நெஞ்சமே! எழு,-)) இலங்கு, Ilangu - விளங்காநின்ற நல் வாயவர், Nal Vaayavar - அழகிய அதரத்தையுடையரான பெண்கள் காதன்மை விட்டிட, Kaadhanmai Vittida - (வைத்திருந்த) ப்ரீதியை விட்டொழிக்கும்படியாக உடலம், Udalam - சரீரமானது குனி சேர்ந்து, Kuni Serndhu - கூன்வளைந்து கோவில், Kovil - தடியோடுகூடி விசும்பில், Visumbil - ஆகாசத்தில் பால், Paal - பால் போன்று பனி சேர், Pani Ser - குளிர்ச்சி பொருந்தியவனான மதி, Madhi - சந்திரனுடைய கோள், Kol - துன்பத்தை விடுத்தான், Viduththaan - போக்கின பெருமானுடைய இடம், Idam - இருப்பிடமாய் நனி சேர், Nani Ser - பெருமை பொருந்தியதான நறையூர், Naraiyoor - திருநறையூரை |
| 1487 | பெரிய திருமொழி || (6-4–கண்ணும் சுழன்று) (திரு நறையூர் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்திரீகளும் கண்ணுக்கு இலக்கான யௌவனமும் உண்டான போதாக இத்தை மறவாதே அப்யசிக்க வல்லவர்கள் என்றும் ஒக்க பஞ்ச விம்சதி வார்ஷிகரான நித்ய சூரிகள் உடைய தேசத்துக்கு நியாமகராகப் பெறுவார் – என்றும் ஒக்க ஏக ரூபராய் இருக்கும் அவர்கள் இறே அவர்கள் –அவன் சாம்யா பத்தி கொடுத்து வைக்கையாலே) 10 | பிறை சேர் நுதலார் பேணுதல் நம்மை யிலாத முன்
நறை சேர் பொழில் சூழ் நறையூர் தொழு நெஞ்சமே என்ற
கறையார் நெடுவேல் மங்கையர் கோன் கலிகன்றி சொல்
மறவாது உரைப்பவர் வானவர்க்கு இன்னரசு ஆவரே –6-4-10 | பதவுரை Show / Hideபிறை சேர் நுதலார், Pirai Ser Nudhalaar - சந்திரகலைபோன்ற நெற்றியை யுடையரான பெண்கள் நம்மை, Nammai - நம் விஷயத்தில் பேணுதல் இலாத முன், Penuthal Iladha Mun - ஆதரவைத் தவிர்த்துக் கொள்ளும்படியான கிழத்தனம் வருவதற்கு முன்னே, நெஞ்சமே, Nenjamai - ‘ஓ மனமே! நறை சேர் பொழில் சூழ் நறையூர் தொழு என்ற, Nirai Ser Pozhil Soozh Naraiyoor Thozha Enra - தேன் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருநறையூரை வணங்கு’ என்று உபதேசித்தவரும். கறை ஆர் நெடு வேல், Karai Aar Nedu Vel - ரத்தக்கரை நிரம்பிய நீண்ட வேற்படையை யுடையவரும் மங்கையர் கோன், Mangaiyar Kon - திருமங்கை நாட்டிலுள்ளார்க்குத் தலைவருமான கலிகன்றி, Kalikanri - ஆழ்வாருடைய சொல், Sol - இந்த ஸ்ரீஸூக்திகளை மறவாது உரைப்பவர், Maravathu Uraippavar - மறவாமல் ஓதுமவர்கள் வானவர்க்கு, Vaanavarkku - நித்ய ஸூரிகளுக்கும் இன் அரசு ஆவர், In Arasu Aavar - மேற்பட்டவர்களாவர். |