திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1508 | பெரிய திருமொழி || (6-7–ஆளும் பணியும்) (திரு நறையூர் 4) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நாள் திரு நாளும் திங்கள் திரு நாளும் மாறாதே இருக்கிற ஸ்ரீ திரு நறையூரிலே நித்ய வாஸம் பண்ணுகிற ஸ்ரீ நம்பி -ஆளும் பணியும் அடியேனைக் கொண்டான்) 1 | ஆளும் பணியும் அடியேனைக் கொண்டான் விண்ட நிசாசரரை
தோளும் தலையும் துணி வெய்தச் சுடு வெஞ்சிலை வாய்ச் சரந்துரந்தான்
வேளும் சேயும் அனையாரும் வேல் கணாரும் பயில் வீதி
நாளும் விழவின் ஒலி யோவா நறையூர் நின்ற நம்பியே –6-7-1 | பதவுரை Show / Hideஅடியேனை, Adiyenai - அடியேனை ஆளும் பணியும் கொண்டான், Aalum Paniyum Kondaaan - சேஷபூதனாகவும் நித்யகிங்கரனாகவும் திருவுள்ளம் பற்றினவனும் விண்ட நிசாசரரை, Vindha Nisaacharari - பிரதிகூலரான ராக்ஷஸர்களின் தோளும் தலையும் துணிவு எய்த, Tholum Thalaiyum Thunivu Eytha - தோள்களும் தலைகளும் துண்டு துண்டாம்படியாக சுடு வெம் சிலை வாய், Sudu Vem Silai Vaai - மிகக்கடூரமான வில்லில் நின்றும் சரம், Saram - அம்புகளை துரந்தான், Durandhaan - பிரயோகித்தவனுமான பெருமான் (யாவனென்னில்) வேளும் சேயும் அனையாரும், Velaum Seyum Anaiyaarum - மன்மதனோடும் ஸுபரஹ்மண்யனோடும் ஒத்த அழகிய புருஷர்களும் வேல் கணாரும், Vel Kanaa Rum - வேல்போன்ற கண்களையுடைய மாதர்களும் பயில் வீதி, Payil Veethi - வாஸஞ்செய்யப்பெற்ற திருவீதிகளை யுடைத்தாய், நாளும், Naalum - எப்போதும் விழவின் ஒலி ஓவா, Vizhavin Oli Ovaa - உத்ஸவகோலாஹலங்கள் ஓயாதிருக்கப் பெற்றதான நறையூர், Naraiyoor - திருநறையூரில் நின்ற, Nindra - நித்யவாஸம் பண்ணகிற நம்பி, Nambi - ஸ்வாமி |
| 1509 | பெரிய திருமொழி || (6-7–ஆளும் பணியும்) (திரு நறையூர் 4) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இருபத்தொரு படி கால் ஷத்ரிய வம்சத்தை அறுத்துத் தூவும்படி அத்விதீயமான வாயை உடைய மழுவை ஆயுதமாக நிர்வஹித்து –ஜகத் ரஷணத்துக்கு தனி மாலை இட்டு இருக்கிறவன்) 2 | முனியாய் வந்து மூ வெழு கால் முடி சேர் மன்னர் உடல் துணியத்
தனிவாய் மழுவின் படை யாண்ட தாரார் தோளான் வார் புறவில்
பனி சேர் முல்லை பல்லரும்ப பானல் ஒரு பால் கண் காட்ட
நனி சேர் கமல முகம் காட்டும் நறையூர் நின்ற நம்பியே –6-7-2 | பதவுரை Show / Hideமுனி ஆய் வந்து, Muni Aay Vandhu - பரசுராம முனியாய்த் திருவவதரித்து (- (நறையூர், நின்ற நம்பி-,)) மூவெழுகால், Moovizhughaal - இருபத்தொரு தலைமுறையளவும் முடி சேர்மன்னர் உடல் துணிய, Mudi Chermannar Udal Thuniya - முடியுடையரான க்ஷத்ரியர்களின் சரீரங்கள் தொலையும்படியாக தனி வாய் மழுவின்படை ஆண்ட, Thani Vaai Mazhuvinpadai Aanda - ஒப்பற்ற (கூர்மையான) வாயையுடைத்தான கோடாலிமைய ஆயுதமாகக் கொண்டவனும் தார் ஆர் தோளான், Thaar Aar Tholaan - மாலையணிந்த திருத்தோள்களையுடையனுமான பெருமான்,- வார் புறவில், Vaar Puravil - அகன்ற சோலைப்புறத்திலே ஒருபால், Orupaal - ஓரிடத்தில் பனி சேர் முல்லை, Pani Cher Mullai - குளிர்ந்த முல்லைப் பூக்களானவை பல் அரும்ப, Pal Arumba - (அவ்வூரிலுள்ள மாதர்களின் பற்கள் போன்று அரும்பு செய்யப்பெற்றதும் பானல், Paanal - கருங்குவளைப் பூக்களானவை (ஓருபால்), Oru Paal - மற்றோரிடத்தில் கண்காட்ட, Kan Kaata - (அந்த மாதர்களின்) கண்கள் போன்று அலரப் பெற்றதும் (ஒருபால்), Oru Paal - மற்றோரிடத்தில் நனிசேர் கமலம், Nani Seer Kamalam - மிகுதியாகவுள்ள தாமரைப் பூக்களானவை முகம் காட்டும், Mukam Kaatum - (அந்த மாதர்களின்) முகம் போன்று விகஸிக்கப் பெற்றதுமான |
| 1510 | பெரிய திருமொழி || (6-7–ஆளும் பணியும்) (திரு நறையூர் 4) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவ்வம்பு கையிலே இருக்கச் செய்தே ஓர் இயற்றி இல்லாதாரைப் போலே மகா பலி பக்கலிலே சென்று மண்ணை இரந்தான்- சாமத்துக்குச் செல்லாத இடத்தில் யாய்த்து பேதத்தில் இழிவது) 3 | தெள்ளார் கடல் வாய் விட வாய்ச் சின வாளரவில் துயில் அமர்ந்து
துள்ளா வருமான் வீழ வாளி துரந்தான் இரந்தான் மாவலி மண்
புள்ளார் புறவில் பூங்காவி புலன் கொள் மாதர் கண் காட்ட
நள்ளார் கமல முகம் காட்டும் நறையூர் நின்ற நம்பியே –6-7-3 | பதவுரை Show / Hideதெள் ஆர் கடல் வாய், Thel Aar Kadal Vaai - தெளிவுடைய திருப்பாற்கடலில் விடம் வாய, Vidam Vaai - விஷயத்தை உமிழாநின்ற வாயையுடையனாய் சினம், Sinam - (பிரதிகூலர்மேல்) சீற்றமுடையனாய் வாள், Vaal - ஒளிபொருந்தியவனான அரவில், Aravil - திருவனந்தாழ்வான் மீது துயில் அமர்ந்து, Thuyil Amarnthu - சயனித்தருள்பவனும் துள்ளா வரு, Thulla Varu - (பஞ்சவடியில்) துள்ளிவிளையாடிக்கொண்டு வந்த மான், Maan - (மாரிசனாகிற) மாயா மிருகம் விழ, Vizh - மாளும் படி வாளி துரந்தான், Vaali Thurandhaan - அம்பு எய்தவனும் மாவலி, Mavali - மஹாபலியினிடத்து மண் இரந்தான், Man Irandhaan - பூமியை யாசித்தவனுமான பெருமான்- புள் ஆர் புறவில், Pul Aar Puravil - பட்சிகள் நிறைந்த புறர் சோலைகளிலே பூ காவி, Poo Kaavi - அழகிய செங்கழுநீர்ப் பூக்கள் புலன் கொள் மாதர், Pulan Kol Maathar - அழகிய ஸ்த்ரீகளுடைய கண், Kan - கண்களை காட்ட, Kaata - காட்டப்பெற்றதும் நள் ஆர் கமலம், Nal Ar Kamalam - (இதழ்ச்) செறிவையுடைய தாமரைப்பூக்கள் முகம் காட்டும், Mukam Kaatum - (அவர்களது) முகங்களைக் காட்டப் பெற்றதுமான |
| 1511 | பெரிய திருமொழி || (6-7–ஆளும் பணியும்) (திரு நறையூர் 4) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நியாமகன் நியாம்யங்களிலே சிலர்க்கு அஞ்சிக் கட்டுண்டு அடி உண்டு அழுது நின்றான் என்றால் இது கூடுமோ என்று இருந்தோம் – இரண்டு இழவுக்கும் நம்முடைய ஹிருதயம் அஞ்சி நொந்தபடியால் அதுவும் கூடும் -என்று திரு உள்ளம் துணுக் என்று அஞ்சி அப்போது அருளிச் செய்த வார்த்தை) 4 | ஒளியா வெண்ணெய் உண்டான் என்று உரலோடு ஆய்ச்சி ஒள் கயிற்றால்
விளியா வார்க்க வாப்புண்டு விம்மி யழுதான் மென்மலர் மேல்
கழியா வண்டு கள் உண்ணக் காமர் தென்றல் அலர் தூற்ற
நளிர்வாய் முல்லை முறுவலிக்கும் நறையூர் நின்ற நம்பியே –6-7-4 | பதவுரை Show / Hideஒளியா, Oliya - மறைந்து நின்று (- (நறையூர், நின்ற நம்பி-.)) வெண்ணெய், Venney - வெண்ணெயை உண்டான் என்று, Undan Enru - விழுங்கின குற்றத்திற்காக ஆய்ச்சி, Aycci - யசோதையானவள் விளியா, Viliya - கோபித்து ஒண் கயிற்றால், On Kayitral - அழகிய தாம்பினால் உரலோடு, Uralotu - உரலோடு சேர்த்து ஆர்க்க, Arkka - கட்ட ஆப்புண்டு, Appuntu - கட்டுண்டு விம்மி அழுதான், Vimmi Aludan - விக்கிவிக்கி அழுத பெருமான்,- மெல் மலர்மேல், Mel Malarmel - மெல்லிய பூக்களின்மீது வண்டு, Vandu - வண்டுகள் களியா, Kaliya - களித்து கள் உண்ண, Kal Unna - தேனைப்பருக காமர் தென்றல், Kamar Tenral - அழகிய தென்றல்காற்று அலர் தூற்ற, Alar Turra - புஷ்பங்களை வீசியிறைக்க, நளிர் வாய்முல்லை, Nalir Vaymullai - குளிர்ந்த முகத்தையுடைய முல்லைப் பூக்கள் முறுவலிக்கும், Muruvalikkum - புன்சிரிப்புச் செய்யுமாபோலே விகளிக்க்பபெற்ற |
| 1512 | பெரிய திருமொழி || (6-7–ஆளும் பணியும்) (திரு நறையூர் 4) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (புருஷ புத்தயா அதீனம் ஆகையாலே நிர்த் தோஷமாய் இருக்கிற ஸ்ருதிகளை பத நியமங்களோடே அதிகரித்து – கேவல அத்யயனம் பண்ணுகை அன்றிக்கே அதனுடைய அனுஷ்டானம் அளவும் போருமவர்கள் அது தான் காதாசித்கமாய் இருக்கை அன்றிக்கே அது தான் யாத்ரையாய் இருக்குமவர்கள் – அது தன்னை ஒரு பலத்துக்காக அனுஷ்டிக்கை அன்றிக்கே அநந்ய பிரயோஜனராய் அனுஷ்டிக்கும்படியான வை லஷண்யத்தை உடையவர்கள் –வாழும் நறையூர் நின்ற நம்பியே) 5 | வில்லார் விழவில் வடமதுரை விரும்பி விரும்பா மல்ல்டர்த்துக்
கல்லார் திரள் தோள் கஞ்சனைக் காய்ந்தான் பாய்ந்தான் காளியன் மேல்
சொல்லார் சுருதி முறையோதிச் சோமுச் செய்யும் தொழிலினோர்
நல்லார் மறையோர் பலர் வாழும் நறையூர் நின்ற நம்பியே –6-7-5 | பதவுரை Show / Hideவில் ஆர் விழவில், Vil Ar Vilavil - (கம்ஸன் நடத்தின ததுர்யாகத்திலே) (- (நறையூர், நின்ற நம்பி-.)) வட மதுரை விரும்பி, Vata Maturai Virumbi - வடமதுரைக் கெழுந்தருள ஆசைப்பட்டு (எழுந்தருளின வளவிலே) விரும்பா, Virumba - எதிரிகளான மல், Mal - மல்லர்களை அடர்த்து, Adarthu - முடித்து (அதன் பிறகு) கல் ஆர் திரள் தோள் கஞ்சனை காய்ந்தான், Kal Ar Thiral Thol Kanjanai Kaindhaan - மலை போன்று திரண்ட தோள்களை யுடையனான கம்ஸனைச் சீறிக் கொன்றவனும் காளியன் மேல், Kaaliyan Mel - காளிய நாகத்தின் மீது பாய்ந்தான், Paindhaan - குதித்து அதனை வலியத்தின் வலுமான பெருமான், சொல் ஆர் சுருதி, Sol Ar Suruthi - (குற்றமற்ற) சொற்கள் நிரம்பீய வேதங்களை முறை ஓதி, Murai Othi - முறைப்படியே அதிகரித்து சோமு செய்யும் தொழிலினோர், Somu Seyyum Thozhilinor - ஸோமயாகம் முதலியயாகங்களை நடத்துவதைக் கருமமாக வுடையராய் நல்லார், Nallaar - விலக்ஷணரான மறையோர் பலர் வாழும், Maraiyor Palar Vaalum - வைதிகர்கள் பலர்வாழுமிடமான |
| 1513 | பெரிய திருமொழி || (6-7–ஆளும் பணியும்) (திரு நறையூர் 4) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பகுவாய் அலவன் கமலத்தின் இடைப் பள்ளி பட்டது –நள்ளியானது கர்ப்ப தாரனத்தாலே கேதித்து இருக்க அதுக்கு இனியது தேட வேணும் -என்று மதுவுக்காக போந்த அலவன் ஆனது தாமரைப் பூவில் வந்து இழிய கொள்ள போது அஸ்தமிக்கையாலே உடம்பைக் கொண்டு அங்கே இங்கே கொண்டு ராத்திரி அதிலே தங்கி – அதிலே தாதும் சுண்ணமும் உடம்பிலே நிழல் இட்டு தோற்ற போது விடிந்த வாறே வந்தது –இது போன போதே தொடங்கி-கதவைத் திறந்து வரவு பார்த்து கொடு நின்ற நள்ளி யானது இத்தைக் கண்டு ராத்திரி தங்கின படியாலும் உடம்பிலே சுவடு இருந்த படியாலும் இது வெருமன் அல்ல என்று முகம் மாறி கதவை அடைத்து உள்ளே போய்ப் புக்கது இத்தை ஸ்ரீ பட்டர் அருளிச் செய்த அநந்தரம் ஸ்ரீ பிள்ளை திரு நறையூர் அரையர் ஆராய்ந்து குற்றம் நிரம்பினால் பின்னை அன்றோ தண்டிப்பது -என்ன என் செய்வோம் கேள்வி இல்லாத படி பெண்ணரசு நாடாய்த்து -என்று அருளிச் செய்வர்) 6 | வள்ளி கொழு நன் முதலாய மக்களோடு முக் கணான்
வெள்கியோடே விறல் வாணன் வியன் தோள் வனத்தைத் துணிந்து உகுந்தான்
பள்ளி கமலத்திடைப் பட்ட பகுவாய் அலவன் முகம் நோக்கி
நள்ளி யூடும் வயல் சூழ்ந்த நறையூர் நின்ற நம்பியே –6-7-6 | பதவுரை Show / Hideவள்ளி கொழுநன் முதலாய, Valli Kozhunaan Mudhalaaya - வள்ளியம்மைக்கு நாதனான ஸுப்ரஹ்மண்யன் முதலான (- (நறையூர், நின்ற நம்பி-.)) மக்களோடு, Makkalodu - புத்திரர்களோடு கூட முக்கணான், Mukkanan - முகக்ண்ணனான ருத்ரன் வெள்கி ஓட, Velgi Oda - வெட்கமடைந்து (எதிர் நிற்க மாட்டாமல் முதுகுகாட்டி) ஓடிப்கோக விறல் வாணன், Viral Vaanan - பலிஷ்டனான பாணாஸுரனுடைய வியன் தோள் வனத்தை, Viyan Thol Vanathai - பரம்பி தோள்களாகிற காட்டை துணித்து, Thunithu - அறுத்து உகந்தான், Uganthaan - திருவுள்ளமுவந்த பெருமான், கமலத்திடை, Kamalathidai - தாமரைப்பூவிலே பள்ளி பட்ட, Palli Patta - போய்ப் படுத்துக்கொண்டு திரும்பிவந்த பகு வாய் அலவன், Paghu Vaai Alavan - பெரிய வாயையுடைய ஆண் நண்டின் முகம், Mukam - முகத்தை நள்ளி, Nalli - பெண் நண்டானது நோக்கி, Nokki - பார்த்து ஊடும், Oodum - பிரணய கலஹம் பண்ணப் பெற்ற வயல், Vayal - வயல்களினால் சூழ்ந்த, Sozhndha - சூழப்பட்ட |
| 1514 | பெரிய திருமொழி || (6-7–ஆளும் பணியும்) (திரு நறையூர் 4) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இவையே யாத்ரை யாம்படி கை வந்து இருக்கிற பிராமணர் வர்த்திக்கிற தேசம் தங்களை நோக்குகைக்காக தங்கள் உடைய வித்யா வ்ருத்தங்களால் அவன் தன்னையும் நோக்க வல்லார்கள் ஆயத்து) 7 | மிடையா வந்த வேல் மன்னர் வீய விசயன் தேர் கடவிக்
குடையா வரை யொன்று எடுத்த ஆயர்கோவாய் நின்றான் கூர் ஆழிப்
படையான் வேத நான்கு ஐந்து வேள்வி அங்கம் ஆறு இசை ஏழ்
நடையா வல்ல அந்தணர் வாழ நறையூர் நின்ற நம்பியே –6-7-7 | பதவுரை Show / Hideமிடையா வந்த, Midayaa Vantha - நெருங்கி (கூட்டங்கூட்டமாக) (போர்க்களததில்) வந்து நின்ற (- (நறையூர், நின்ற நம்பி -.)) வேல் மன்னர், Vel Mannar - வேற்படைக்கையரான வீய, Veeya - தொலையும்படி விசயன் தேர் கடவி, Visayan Ther Kadavi - அர்ஜுனனுடைய தேரை நடத்தினவனும் ஒன்று வரை, Ondru Varai - கோவர்த்தனமென்கிற ஒரு மலையை குடையா எடுத்து, Kudaiya Eduthu - குடையாகத் தூக்கிப் பிடித்து ஆயர் கோ ஆய் நின்றான், Aayar Ko Aayi Nindraan - இடையர்களுக்கு ரக்ஷகனாய் நின்றவனும் கூர் ஆழி படையான், Koora Aazhi Padaiyaan - கூர்மைபொருந்திய திருவாழியை ஆயுதமான வுடையவனுமான எம்பெருமான்,- வேதம் நான்கு, Vedham Naanku - நான்கு வேதங்களையும் ஐந்து வேள்வி, Aindhu Velvi - பஞ்ச மஹாயஜ்ஞங்களையும் ஆறு அங்கம், Aaru Angam - ஆறு வேதாங்கங்களையும் ஏழ் இசை, Ezhu Isai - ஸப்த ஸ்வரங்களையும் நடை ஆ வல்ல, Nadai Aa Valla - எப்போதும் போது போக்காகக்கொண்ட அந்தணர், Andhanar - பிராமணர் வாழ், Vaazh - வாழுமிடமான |
| 1515 | பெரிய திருமொழி || (6-7–ஆளும் பணியும்) (திரு நறையூர் 4) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வீரக் கழலை உடைய ராஜாக்கள் முழுக்காயாக அவியும்படி ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை வாயிலே வைத்தான் ஆய்த்து) 8 | பந்தார் விரலாள் பாஞ்சாலி கூந்தல் முடிக்கப் பாரதத்துக்
கந்தார் களிற்றுக் கழல் மன்னர் கலங்கச் சங்கம் வாய் வைத்தான்
செந்தாமரை மேல் அயனோடு சிவனும் அனைய பெருமையோர்
நந்தா வண்கை மறையோர் வாழ் நறையூர் நின்ற நம்பியே –6-7-8 | பதவுரை Show / Hideபந்து ஆர் விரலாள், Pandhu Aar Viralal - பந்து பிடித்து விளையாடும் விரலையுடையளான (- (நறையூர். நின்ற நம்பி-.)) பாஞ்சாலி, Panchali - த்ரௌபதியானவள் கூந்தல் முடிக்க, Koondhal Mudikka - குழல் முடித்துக் கொள்வதற்காக, பாரதத்து, Bharathaththu - பாரதப்போரில் கந்து ஆர் களிறு, Kandhu Aar Kaliru - (மதஜலத்தின்) மணம் பொருந்திய யானைகளின் மேலேறியிருப்பவர்களும் கழல், Kazhal - வீரக்கழலை யணிந்தவருமான மன்னர், Mannar - அரசர்கள் (துரியோதனாதியர்) கலங்க, Kalanga - மதிகலங்குமாறு சங்கம், Sangam - தனது ஸ்ரீபாஞ்சஜன்யத்தை வாய் வைத்தான், Vaai Vaiththaan - திருப்பவளத்தில் வைத்து ஊதின பெருமான்,- செம் தாமரை மேல் அயனோடு சிவனும் அனைய, Sem Thaamarai Mel Ayanodu Sivanum Anaiya - கமலாஸநனான பெருமானோடும் ருத்ரனோடும் ஒத்த பெருமையோர், Perumaiyor - பெருமைவாய்ந்தவர்களும் நந்தா வண் கை, Nandha Van Kai - ஒரு காலும் குறைபடாத ஔதார்யத்தை யுடையவர்களுமான மறையோர், Maraiyor - பிராமணர்கள் வாழ், Vaazh - வாழப்பெற்ற |
| 1516 | பெரிய திருமொழி || (6-7–ஆளும் பணியும்) (திரு நறையூர் 4) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சர்வ கந்த -என்கிற -திரு மேனியிலே ஸ்வேத ஜலத்தைக் கொடுத்து மதிப்பனாய்த் திரிகிற இவன் உடைய குறையை தீரப் பெற்றோம் -என்கிற இத்தால் தான் உகந்தான் ஆய்த்து) 9 | ஆறும் பிறையும் அரவமும் அடம்பும் சடை மேல் அணிந்து உடலம்
நீறும் பூசியேறூரும் இறையோன் சென்று குறை யிரப்ப
மாறு ஒன்றில்லா வாச நீர் வரை மார்வகலத்து அளித்து உகந்தான்
நாறும் பொழில் சூழ்ந்து அழகாய நறையூர் நின்ற நம்பியே –6-7-9 | பதவுரை Show / Hideஆறும், Aarum - (கங்கையாகிற) நதியையும் (- (நறையூர், நின்ற நம்பி -.)) பிறையும், Piraiyum - சந்திகலையையும் அரவமும், Aravamum - ஸர்ப்பங்களையும் அடம்பும், Adambum - அடப்பம் பூவையும் சடைமேல் அணிந்து, Sadaimeel Anindhu - ஜடையின் மீது தரித்துக்கொண்டு உடலம், Udalam - உடம்பிலே நீறும்பூசி, Neerumpoosi - சாம்பல் பூசிக்கொண்டு ஏறு ஊரும், Eru Oorum - ரிஷபத்தின் மேலேறி நடத்துகின்ற இறையோன், Irayon - சிவபிரான் சென்று, Sendru - வந்துகிட்டி குறை இரப்ப, Kurai Irappa - தனது பிரமஹத்யா சாபம் விடுபடுமாறு பிரார்த்திக்க, வரை மார்பு அகலத்து , Varai Maarbu Akalathu - மலைபோன்ற திரூமார்பிடத்தில் நின்றும் மாறு ஒன்று இல்லா வாசம்நீர், Maaru Ondru Illaa Vaasamneer - ஒப்பற்ற பரிமளம் மிக்க (வியர்வை) நீரை அளித்து, Alithu - எடுத்துக்கொடுத்து உகந்தான், Uganthaan - திருவுள்ளமுவந்த பெருமான் நாறும் பொழில் சூழ்ந்து அழகு ஆய, Naarum Pozhil Soozhndhu Azhagu Aaya - நறுமணம்மிக்க சோலைகளால் சூழப்பட்ட அழகிய |
| 1517 | பெரிய திருமொழி || (6-7–ஆளும் பணியும்) (திரு நறையூர் 4) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (லோகத்திலே ஆராய்ந்து சொல்லிமவர்கள் உடைய அருகே-பாபங்கள் ஆனவை கிட்டாது – பாபங்கள் வரப் போக்க வேணும் என்று அர்த்திக்கும் படி இருக்கை அன்றிக்கே இவ்விடம் நமக்கு இருப்பிடம் அன்று என்று பிராக்தமான பாபங்கள் தானே விட்டுப் போம் சம்சாரத்தில் நெடுநாள் இருந்து ஐஹிக போகங்களையும் புஜித்து பின்னை ஸ்ரீ பரம பதத்தே போய் ஸ்ரீ நித்ய சூரிகள் ஆதரிக்க நித்ய அனுபவம் பண்ணப் பெறுவார்கள்) 10 | நன்மை யுடைய மறையோர் வாழ் நறையூர் நின்ற நம்பியை
கன்னி மதிள் சூழ் வயல் மங்கைக் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை
பண்ணி யுலகில் பாடுவார் பாடு சாரா பழ வினைகள்
மன்னி யுலகம் ஆண்டு போய் வானோர் வணங்க வாழ்வாரே –6-7-10 | பதவுரை Show / Hideநன்மை உடைய மறையோர் வாழ், Nanmai Udaiya Maraiyore Vaal - விலக்ஷணரான வைதிக ப்ராஹ்மணர்கள் வாழப்பெற்ற நறையூர், Naraiyoor - திருநறையூரிலே நின்ற, Nindra - நித்யவாஸஞ் செய்தருள்நின்ற நம்பியை, Nambiyai - எம்பெருமான் விஷயமாக கன்னி மதிள் வயல் சூழ் மங்கை கலியன், Kanni Mathil Vayal Soozh Mangai Kalyan - அழிவில்லாத மதிள்களாலும் கழனிகளாலும் சூழப்பட்ட திருமங்கைக்குத் தலைவரான ஆழ்வார் ஒலி செய்த, Oli Seitha - அருளிச்செய்த தமிழ் மாலை, Tamil Malai - தமிழ்த்தொடையான இத்திருமொழியை உலகில் பன்னி பாடுவார்பாடு, Ulagil Panni Paaduvaarpaadu - இவ்விபூதியிலே ஆராய்ந்து பாடுமவர்களிடத்தில் பழ வினைகள், Pazha Vinaigal - முன்னைத் தீவினைகள் சாரா, Saraa - அணுகமாட்டா; (அன்றியும் அவர்கள்) மன்னி உலகம் ஆண்டு, Manni Ulagam Aandu - நெடுநாள் வாழ்ந்திருந்து இவ்வுலகை அரசாட்சி புரிந்து போய், Poi - (பின்பு, பரமபதத்திலே) சென்று வானோர் வணங்க வாழ்வார், Vaanor Vananga Vaalvaar - அங்குள்ள நித்யமுக்தர்கள் ஆதரிக்கும்படிவாழப்பெறுவர். |