திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1528 | பெரிய திருமொழி || (6-9–பெடையடர்த்த) (திரு நறையூர் 6) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அருமந்தான் ஒரு மதிப்பன் இப்படி எளிவரவு படுவதே -என்று திரு உள்ளம் புண்பட்டு அவனுடைய சாபத்தை போக்கினான் ஆயத்து – அதுக்கடி என் என்னில்-திருவாளன் – தத்ர நாராயண ஸ்ரீ மான் -என்கிறபடியே ஸ்ரீயபதி யாகையாலே அவனுடைய -இணை யடியே யடை நெஞ்சே —அபிமானிகளும் ஆபன்னர் ஆன அன்று பற்றும் திருவடிகளை நெஞ்சே நீ பற்றப் பார்) 1 | பெடையடர்த்த மடவன்னம் பிரியாது மலர்க்கமலம்
மடலெடுத்து மது நுகரும் வயலுடுத்த திரு நறையூர்
முடையடர்த்த சிரமேந்தி மூவுலகும் பலி திரிவோன்
இடர்கெடுத்த திருவாளன் இணை யடியே யடை நெஞ்சே –6-9-1 | பதவுரை Show / Hideபெடை அடர்த்த, Pedai Adarth - பேடையோடுகூடின மட அன்னம், Mada Annam - அழகிய ஹம்ஸபக்ஷியானது பிரியாது, Priyadhu - அப்பேடையைச் சற்றும் விட்டும் பிரியாமல் உடனிருந்து கமலம் மலர், Kamalum Malar - தாமரைப்பூவில் மடல் எடுத்து, Madal Eduthu - இதழ்களைக் கழற்றிவிட்டு மது நுகரும், Madhu Nukarum - தேனைப் பருகப்பெற்ற வயல், Vayal - கழனிகளாலெ உடுத்த, Uthutha - சூழப்பட்ட திரு நறையூர், Thiru Naraiyur - திருநறையூரி லெழுந்தருளி யிருப்பவனாய்,- |
| 1529 | பெரிய திருமொழி || (6-9–பெடையடர்த்த) (திரு நறையூர் 6) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஜனனி என்று வாசி பார்க்க மாட்டாமையாலே மிக்க பழியைத் தரித்து இருப்பானாய் முன்கை மிடுக்காலே தோன்றின படி நடந்து திரிகிற ராவணன் உடைய தலைகள் சிதறும்படியாக – எதிரிகளை அம்பாய் நலிகை அன்றிக்கே நெருப்பாக சுடுகிற அம்புகளை நடத்தினவன் உடைய) 2 | கழியாரும் கனசங்கம் கலந்தெங்கும் நிறைந்தேறி
வழியார முத்தீன்று வளம் கொடுக்கும் திரு நறையூர்
பழியாரும் விறல் அரக்கன் பரு முடிகள் அவை சிதற
அழலாரும் சரம் துரந்தான் அடி இணையே அடை நெஞ்சே –6-9-2 | பதவுரை Show / Hideகழி ஆரும், Kazhi Aarum - உப்புக்கழிகளிலே நிரம்பியிருக்கின்ற (- (அடி இணையே, நெஞ்சே! அடை-.)) கனம் சங்கம், Kanam Sangam - கனத்த சங்குகளானவை எங்கும், Engum - எல்லாவிடங்களிலும் கலந்து, Kalandhu - வந்துசேர்ந்து நிறைந்து, Niraindhu - வரிசை வரிசையாக இருந்து ஏறி, Eri - பாய்ந்து வழி ஆர, Vazhi Aara - வீதிகள் நிறையும்படியாக முத்து, Muthu - முத்துக்களை ஈன்று, Eendru - கரந்து வளம் கொடுக்கும், Valam Kodukkum - (இப்படி) செல்வமளிக்கப்பெற்ற திருநறையூர், Thirunaraiyoor - திருநறையூரில்,- பழி ஆரும், Pazhi Aarum - மிகுந்த அபவாதத்தையுடையனாய் விறல், Viral - பலிஷ்டனான அரக்கன், Arakkan - இராவணனுடைய பரு முடிகள் அவை சிதற, Paru Mudigal Avai Sidhara - பருத்த (பத்துத்) தலைகளும் சிதறும்படியாக அழல் ஆகும், Azhai Aakum - நெருப்புப்போன்ற சரம், Saram - அம்புகளை துரந்தான், Durandhaan - பிரயோகித்த பெருமானுடைய |
| 1530 | பெரிய திருமொழி || (6-9–பெடையடர்த்த) (திரு நறையூர் 6) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ நம்பி மூத்த பிரானுக்கு பின் பிறந்தவன் –பூமிப் பரப்போடு கூட தயிரையும் வெண்ணெயும் அமுது செய்தவனுடைய திருவடிகளை அடை நெஞ்சே) 3 | சுளை கொண்ட பலங்கனிகள் தேன் பாயக் கதலிகளின்
திளை கொண்ட பழம் கெழுமி திகழ் சோலைத் திரு நறையூர்
வளை கொண்ட வண்ணத்தன் பின் தோன்றல் மூவுலகோடு
அளை வெண்ணெய் உண்டான் தன் அடி இணையே அடை நெஞ்சே –6-9-3 | பதவுரை Show / Hideசுளைகொண்ட, Sulaikondha - பல சுளைகளை யுடைத்தான (- (அடி இணையே நெஞ்சே! அடை -.)) பலங் கனிகள், Palang Kanigal - பலாப் பழங்களில் நின்றும் தேன் பாய, Then Paaya - தேன் பெருகப்பெற்றும், கதலிகளின், Kadaligalil - வாழைமரங்களின் திளைகொண்ட, Thilaikondha - பருத்திருந்துள்ள பழம், Pazham - பழங்கள் கெழுமு, Kezhumu - நெருங்கப்பெற்று மிருக்கிற திகழ் சோலை, Thigal Solai - விளங்குகின்ற சோலைகளையுடைய திருநறையூர், Thirunaraiyoor - திருநறையூரில்,- வளை கொண்ட வண்ணத்தன், Valai Konda Vannathan - சங்குபோல் வெளுத்த நிறமுடையனான பலராமனுடைய பின் தோன்றல், Pin Thondral - தம்பியாயும் மூ உலகோடு, Moo Ulakodu - மூன்று லோகங்களையும் அளைவெண்ணெய், Alai Vennai - தயிர் வெண்ணெயையும் உண்டான் தன், Undaan Than - அமுது செய்தவானயு மிருக்கிற எம்பெருமானுடைய |
| 1531 | பெரிய திருமொழி || (6-9–பெடையடர்த்த) (திரு நறையூர் 6) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (மன்றில் பரப்படைய பாழ் தீரும்படி குடக் கூத்தாடி- இந்த்ரன் வர்ஷிப்பிக்க மலையை எடுத்து வர்ஷத்தை பரிக்ரஹித்த -மலையாலே மலையை எடுத்தால் போலே திரண்ட தோளை உடையவன்) 4 | துன்று ஒளித் துகில் படலம் துன்னி எங்கும் மாளிகை மேல்
நின்றார வான் மூடும் நீள் செல்வத் திரு நறையூர்
மன்றாடக் குடமாடி வரை எடுத்து மழை தடுத்த
குன்றாறும் திரள் தோளன் குறை கழலே அடை நெஞ்சே –6-9-4 | பதவுரை Show / Hideதுன்று, Thunru - நெருங்கியும் (- (திரு நறையூர்-;) (நெஞ்சே! அடை-.)) ஒளி, Oli - ஒழுங்குபெற்று மிருக்கிற துகில் படலம், Thugil Patalam - த்வஜபடங்களின் திரள்கள் மாளிகை மேல், Maaligai Mel - மாளிகைகளின் மேல் எங்கும் துன்னி, Engum Thunni - எல்லாவிடங்களிலும் நிபிடமாய் ஆர நின்று, Aara Nindru - பரம்பியிருந்து வான் மூடும், Vaan Moodum - ஆகாசத்தை மறையா நின்றதாய் நீள் செல்வம, Neel Selvam - நிறைந்த செல்வத்தை யுடையதான மன்று ஆர, Manru Aara - வெளிநிலமெங்கும் குடம் ஆடி, Kudam Aadi - குடக்கூத்தாடினவனும் வரை எடுத்து, Varai Eduthu - கோவர்த்தன மலையைக் குடையாக ஏந்தி மழை தடுத்த, Mazhai Thadutta - மழையைத் தடைசெய்தவனும் குன்று ஆரும் திரள் தோளன், Kundru Aarum Thiral Tholan - மலைபோன்று திரண்ட திருத்தோள்களையுடையனுமான பெருமானுடைய குரை கழலே, Kurai Kazhale - ஒலிக்கின்ற வீரக்கழலை யணிந்த திருவடிகளையே |
| 1532 | பெரிய திருமொழி || (6-9–பெடையடர்த்த) (திரு நறையூர் 6) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (லோகங்கள் ஏழையும் வயிற்றிலே வைத்து பிரளயம் தேடி வந்தால் இங்கு உண்டோ என்று பண்டையிலும் இளைத்துக் காட்டும் திரு வயிற்றை உடையவன் –தன்னைப் பற்றினாரை உள்ளே இட்டு தன்னை பிரளயத்துக்கு இலக்காக்கி நோக்குமவன் திருவடிகளிலே அடையப் பார்) 5 | அகில் குறடும் சந்தனமும் பொன்னு மணி முத்தும்
மிகக் கொணர்ந்து திரை யுந்தும் வியன் பொன்னித் திரு நறையூர்
பகல் கரந்த சுடராழிப் படையான் இவ் உலகு எழும்
புகக் கரந்த திரு வயிற்றன் பொன்னடியே அடை நெஞ்சே –6-9-5 | பதவுரை Show / Hideஅகில் குறடும், Akil Kuradum - அகில் கட்டைகளையும் (- (திரு நறையூர்-;) (நெஞ்சே! அடை-.)) சந்தனமும், Sandhanamum - சந்தனக் கட்டைகளையும் அம் பொன்னும், Am Ponnum - அழகிய பொன்களையும் அணி முத்தும், Ani Muthum - அழகிய முத்துக்களையும் திரை, Thirai - அலைகளானவை மிக கொணர்ந்து, Miga Konrandhu - மிகுதியாகத் திரட்டிக் கொண்டு வந்து உந்தும், Undum - தள்ளுகிற வியன் பொன்னி, Viyan Ponni - ஆச்சரியமான பொன்னி யாற்றையுடைய பகல் கரந்த, Pakal Karandha - (பாரதப்போரில்) ஸூரியனை மறைத்த சுடர் ஆழி, Sudar Aazhi - உஜ்வலமான சக்கரத்தை படையான், Padaiyaan - ஆயுதமாகவுடையனும் இ உலகு ஏழும், I Ulagu Ezhum - இவ்வுலகங்களெல்லாவற்றையும் புக கரந்த, Puga Karandha - உள்புகச்செய்து மறைத்து வைத்த திரு வயிற்றின், Thiru Vayittrin - திருவயிற்றை யுடையவனுமான பெருமானுடைய பொன் அடியே, Pon Adiye - அழகிய திருவடிகளையே |
| 1533 | பெரிய திருமொழி || (6-9–பெடையடர்த்த) (திரு நறையூர் 6) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நாம் சென்று திருவடிகளைக் கிட்டினால் அவன் நம்முடைய தோஷங்களை கணக்கிடுவான் ஆகில் ந கச்சின் ந அபராத்யதி -என்று அத்தைப் பொறுப்பிக்கும் ஸ்ரீ பிராட்டியை உகந்து எப்போதும் திரு மார்பில் வைத்துக் கொண்டு இருக்கிறவன் உடைய ஸூ குமாரமான திருவடிகளை அடை- மதுப்பில் அர்த்தத்தை சொல்லுகிறது) 6 | பொன் முத்தும் அரி உகிரும் புழைக் கைம்மா கரிக் கோடும்
மின்னத் தண் திரை யுந்தும் வியன் பொன்னித் திரு நறையூர்
மின் ஒத்த நுண் மருங்குல் மெல்லியலைத் திரு மார்பில்
மன்னத் தான் வைத்து உகந்தான் மலரடியே அடை நெஞ்சே –6-9-6 | பதவுரை Show / Hideமின்ன, Minna - (மேற்கே) மின்னல் கண்டவாறே (- (வியன் பொன்னி, திருநறையூர்-;) (நெஞ்சே! அடை-.)) பொன், Pon - பொன்களையும் முத்தும், Muthum - முத்துக்களையும் அரி உகிரும், Ari Ugrum - சிங்கங்களின் நகங்களையும் புழை கைமா கரி கோடும், Puzhai Kaimaa Kari Kodum - த்வாரத்தையுடைய துதிக்கையையுடைத்தான பெரிய யானைகளின் கொம்புகளையும் தண் திரை உந்தும், Than Thirai Undum - குளிர்ந்த அலைகளின் முகமாகக் கொழிக்கின்ற மின் ஒத்த நுண், Min Oththa Nun - மின்னல் போன்று அதிஸூக்ஷ்மமான மருங்குல், Marungul - இடையையுடையளாய் மெல் இயலை, Mel Iyilai - ஸௌகுமார்யத்தை ஸ்வபாவமாக உடையளான பிராட்டியை திருமார்பில், Thirumaarbil - திருமார்பிலே மன்ன, Manna - பொருந்தும்படியாக தான் வைத்து உகந்தான், Thaan Vaiththu Uganthaan - தரித்துக்கொண்டு திருவுள்ளமுவந்திருக்கிற பெருமானுடைய மலர் அடியே, Malar Adiye - திருவடித்தாமரைகளையே |
| 1534 | பெரிய திருமொழி || (6-9–பெடையடர்த்த) (திரு நறையூர் 6) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (உபகார சீலனான கிருஷ்ணன்-அயர்வறும் அமரர்கள் அதிபதி –உபய விபூதி நாயகன் என்னும் இடம் தோற்ற வைத்த வளையத்தை உடையவன் திருவடிகளை அடை நெஞ்சே) 7 | சீர் தழைத்த கதிர்ச் செந்நெல் செங்கமலத் திடையிடை
பார் தழைத்துக் கரும்போங்கிப் பயன் விளைக்கும் திரு நறையூர்
கார் தழைத்த திருவுருவன் கண்ண பிரான் விண்ணவர் கோதியாதே
தார் தழைத்த துழாய் முடியன் தளிர் அடியே அடை நெஞ்சே –6-9-7 | பதவுரை Show / Hideசீர்தழைத்த கதிர், Seerthazhaiththa Kathir - அழகுமிக்க கதிர்களையுடைய (- (அவற்றையடுத்து முளைத்த) (திரு நறையூர்-;) (நெஞ்சே! அடை -.)) செந்நெல், Sennel - செந்நெற்பயிர்களினுடையவும் செங்கமலம், Sengamalai - செந்தாமரைகளினுடையவும் இடை இடையில், Idai Idaiyil - நடு நடுவே கரும்பு, Karumbu - கரும்புகளானவை ஓங்கி பார் தழைத்து, Ongi Paar Thazhaiththu - உயரவெழுந்து தரையிலே படியவளர்ந்து பயன் விளைக்கும், Payan Vilaikkum - பலன்களைக் கொடுக்கப்பெற்ற கார் தழைத்த திரு உருவன், Kaar Thazhaiththa Thiru Uruvan - காளமேகப்போன்ற திருமேனியை யுடையவனும் விண்ணவர் கோன், Vinnavar Kon - தேவாதி தேவன் தார் தழைத்த துழாய் முடியன், Thaar Thazhaiththa Thuzhai Mudiyan - பூக்கள் நிறைந்த திருத்துழாய் மாலையைத் திருமுடியிலுடையவனுமான கண்ணபிரான், Kannapiraan - கண்ணபிரானுடைய தளிர் அடியே, Thalir Adiye - தளிர்போன்ற திருவடிகளையே |
| 1535 | பெரிய திருமொழி || (6-9–பெடையடர்த்த) (திரு நறையூர் 6) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (மலை போலே தர்ச நீயமான திரு மணி மாடக் கோயிலின் உள்ள அவதாரம் போலே தீர்த்தம் பிரசாதியாதே நிலையார நின்றான் ஆய்த்து- நிற்கிற போதை அழகைக் கண்டு-இவன் இருத்தல் சாய்ந்து அருளுதல் செய்து இவ் வழகை இழக்க வரில் செய்வது என்-என்று துணுக் துணுக் என்ன வேண்டும்படியாய் இருக்கும் – மலையை ஒக்க ஒக்கத்தை உடையதாய் அழகை உடைய மணி மாடங்கள் மிக உடைய ஸ்ரீ திருநறையூரில் மன்னி நிலையார நின்றான்) 8 | குலையார்ந்த பழுக் காயும் பசும் காயும் பாளை முத்தும்
தலையார்ந்த விளங்கனியின் தடஞ்சோலைத் திருநறையூர்
மலையார்ந்த கோலஞ்சேர் மணி மாடம் மிக மன்னி
நிலையார நின்றான் தன் நீள் கழலே அடை நெஞ்சே –6-9-8 | பதவுரை Show / Hideகுலை ஆர்த்த பழுக்காயும், Kulai Aartha Pazhukkaiyum - குலைகுலையாக நிறைந்து படுத்த காய்களும் (- (தட சோலை திரு நறையூர் -!) (நெஞ்சே! அடை-.)) பசுங்காயும், Pasungaiyum - பழுக்கப்போகிற காய்களும் பாளை முத்தும், Paalai Muththum - பாளைகளிலுண்டான முத்துக்களும் தலை ஆர்ந்த, Thalai Aarntha - தலைகளிலே நிறைந்திருக்கப்பெற்ற இள கமுகின், Ila Kamugin - இளைய பாக்குமரங்களையுடைய மலை ஆர்த்த கோலம் சேர், Malai Aartha Kolam Ser - மலைபோன்று அழகு பொருந்திய மணி மாடம், Mani Maadam - மணிமாடக்கோயிலில் மிக மன்னி, Miga Manni - மிகவும் பொருந்தி நிலை ஆர நின்றான் தன், Nilai Aara Nindraan Than - ஸ்திரமாக நிற்கும் பெருமானுடைய நீள் கழலே, Neel Kazhale - நீண்ட திருவடிகளையே |
| 1536 | பெரிய திருமொழி || (6-9–பெடையடர்த்த) (திரு நறையூர் 6) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (லோகத்துக்கு ஆஸ்ரயணீயராய் இருப்பாருக்கும் ஆஸ்ரயணீயனாய் இருக்கையாலே ஸ்ரீ சர்வாதிகன் –அவன் திருவடிகளையே ஆஸ்ரயிக்கப் பார்) 9 | மறையாரும் பெரு வேள்விக் கொழும் புகை போய் வளர்ந்து எங்கும்
நிறையார வான் மூடும் நீள் செல்வத் திரு நறையூர்
பிறையாரும் சடையானும் பிரமனும் முன் தொழுது ஏத்த
இறையாகி நின்றான் தன் இணை அடியே அடை நெஞ்சே –6-9-9 | பதவுரை Show / Hideமறை ஆரும், Marai Aarum - வேதங்களில் பிரதிபாதிக்கப்பட்ட (- (நீள் செல்வத் திருநறையூர்-;) (இணை அடியே நெஞ்சே அடை-.)) பெரு வேள்வி, Peru Velvi - பெரிய யஜ்ஞங்களிலுண்டான கொழும்புகை, Kozhumbugai - நல்ல புகையானது வளர்ந்து போய், Valarnthu Poi - மேலே கிளம்பிப்போய் எங்கும் நிறை ஆர வான்மூடும், Engum Nirai Aara Vaanmoodum - எல்லாவிடங்களிலும் நிறைந்திருந்து ஆகாசத்தை மறைக்கப்பெற்ற பிறை ஆரும் சடையானும், Pirai Aarum Sadaiyanum - சந்திரகலையையுடைய சடை முடியை யுடையனான சிவனும் பிரமனும், Brahmanum - நான்முகனும் முன், Mun - முன்னேநின்று தொழுது ஏத்த, Thozhudhu Aetha - வணங்கித்துதிக்கும்படி இறை ஆகி நின்றான் தன், Irai Aagi Nindraan Than - ஸ்வாமியாயெழுந்தருளியிருக்கும் பெருமானுடைய |
| 1537 | பெரிய திருமொழி || (6-9–பெடையடர்த்த) (திரு நறையூர் 6) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இப்பாடல் பத்தும் வல்லார் –போக பூமிகளில் பிரதானமான ஸ்ரீ பரம பதத்திலே போய் ஸ்ரீ நித்ய சூரிகள் உடன் ஒரு கோவையாய் அவனை நித்ய அனுபவம் பண்ணப் பெறுவார்கள்) 10 | திண் களக மதிள் புடை சூழ் திருநறையூர் நின்றானை
வண் களக நில வெறிக்கும் வயல் மங்கை நகராளன்
பண் களகம் பயின்ற சீர் பாடல் இவை பத்தும் வல்லார்
விண் களகதது இமையவராய் வீற்று இருந்து வாழ்வாரே –6-9-10 | பதவுரை Show / Hideதிண் களகம் மதிள் புடைசூழ், Thin Kalagam Mathil Pudaisool - திடமாய் (சுண்ணாம்புச்) சாந்து இடப்பெற்றதான திருமதிளாலே நாற்புறமும் சூழப்பட்ட திருநறையூர், Thirunaraiyoor - திருநறையூரில் நின்றானை, Nindraanai - எழுந்தருளியிருக்குமெம்பெருமான் விஷயமாக வண் களகம், Van Kalagam - அழகிய அன்னப்பறவைகள் நிலவு எறிக்கும், Nilavu Erikkum - நிலாப்போல் விளங்கப்பெற்ற வயல், Vayal - கழனிகளையுடைத்தான மங்கை நகராளன், Mangai Nagaralan - திருமங்கை நாட்டுக்குத் தலைவரான ஆழ்வார் பண்கள் அகம் பயின்ற, Pankal Agam Payindra - பண்களுக்குள்ளே ஸாரமான பண்ணிலே அருளிச்செய்த சீர், Seer - சீர்மை பொருந்திய பாடல் இவை பத்தும், Paadal Ivai Paththum - இப்பாசுரங்கள் பத்தையும் வல்லார், Vallaar - ஓதவல்லவர்கள் விண்கள் அகத்து, Vingkal Akaththu - மேலுலகங்களுள் முக்கியமான பரமபதத்தில் இமையவர்ஆய், Imaiyavar Aayi - நித்யஸூரிகளோடு ஒரு கோஷ்டியாய் வீற்றிருந்து, Veetrirundhu - பெருமைபெறவிருந்து வாழ்வார், Vaalvaar - வாழப்பெறுவர். |