Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: ஏழையர் ஆவி (11 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3403திருவாய்மொழி || (7-7—ஏழையர் ஆவி) (எம்பெருமானது பேரழகை உருவெளித் தோற்றத்தில் கண்ட தலைவி வருந்தி உரைத்தல்) (எம்பெருமானுடைய திருக்கண்களிலிருந்து வந்து தன்னை நலிகின்றபடியைப் பேசுகிறாள்.) 1
ஏழையர் ஆவி உண்ணும் இணைக் கூற்றங் கொலோ அறியேன்
ஆழியங் கண்ண பிரான் திருக்கண்கள் கொலோ அறியேன்
சூழவும் தாமரை நாண் மலர் போல் வந்து தோன்றுங் கண்டீர்
தோழியர் காள்!அன்னைமீர்!என் செய்கேன் துயராட்டியேனே.–7-7-1
தோழியர்காள்,Thozhiyar kaal - தோழிமார்களே!
அன்னைமீர்,Annai meeer - தாய்மார்களே!
ஏழையர் ஆவி உண்ணும் இணை கூற்றம் கொலோ,Yezhaiyar aavi unnum inai kootram kolo - பெண் பிறந்தாருடைய உயிரை முடிக்கவல்ல இரண்டு ம்ருத்யுக்களோ இவை!
அறியேன்,Ariyen - அறிகின்றிலேன்; (அன்றியே)
ஆழி அம் கண்ணபிரான்,Aali am kannapiraan - கடல் வண்ணனான கண்ண பிரானுடைய
திரு கண்கள் கொலோ,Thiru kangal kolo - திருக்கண்கள்தானோ!
அறியேன்,Ariyen - அறிகின்றிலேன்;
தாமரை நாள் மலர் போல்,Thaamarai naal malar pol - அப்போதலர்ந்த செந்தாமரைப் பூப்போலே
வந்து தோன்றும் கண்டீர்,Vandhu thondrum kandir - வந்து தோன்றா நின்றன காண்மின்;
துயராட்டியேன் என் செய்கேன்,Thuyar aatiyen en seyken - துயருறுகின்ற நான் (துயர் தீர்வதற்கு) என்ன செய்வேன்?
3404திருவாய்மொழி || (7-7—ஏழையர் ஆவி) (எம்பெருமானது பேரழகை உருவெளித் தோற்றத்தில் கண்ட தலைவி வருந்தி உரைத்தல்) (கண்ணழகு நலிந்தது போராமே மூக்கழகுன் நலியும்படியைச் சொல்லியழுகிறாள்.) 2
ஆட்டியும் தூற்றியும் நின்று அன்னைமீர்! என்னை நீர் நலிந்து என்?
மாட்டுயர் கற்பகத்தின் வல்லியோ கொழுந்தோ அறியேன்
ஈட்டிய வெண்ணெய் உண்டான் திருமூக்கு எனதாவி யுள்ளே
மாட்டிய வல் விளக்கின் சுடராய் நிற்கும் வாலியதே.–7-7-2
அன்னைமீர்,Annai meeer - தாய்மார்களே!
நீர்,Neer - நீங்கள்
என்னை ஆட்டியும் தூற்றியும் நின்று,Ennai aattiyum thootriyum nindru - என்னை யலைத்தும் அலர் தூற்றியும் நின்று
நலிந்து என்,Nalinthu en - நலிகிறவிதனால் என்ன பலனுண்டு?
மாடு உயர் கற்பகத்தின் வல்லியோ கொழுந்தோ,Maadu uyar karbakathin vallio kolundho - (அக்கண்களின்) அருகே ஓங்கியிருப்பதொரு கற்பகத்தினுடைய கொடியோ கொழுந்தோ!
அறியேன்,Ariyen - அறிகின்றிலேன்;
ஈட்டியவெண்ணெய் உண்டான் திருமூக்கு,Ettiya vennney undaan thirumukku - திரட்டி வைத்திருந்த வெண்ணெயை (க்களவு வழியாலே) அமுது செய்த கண்ணனுடைய திருமூக்கானது
எனது ஆவி உள்ளே,Enadhu aavi ullae - எனது நெஞ்சினுள்ளே
மாட்டிய,Maattiya - ஏற்றிய
வாலியது வல் விளக்கின் சுடர் ஆய் நிற்கும்,Vaaliyadhu val vilakkin sudar aay nirkum - பெருத்து ஸ்திரமான தீப ஜ்வாலே போலே விளங்காநின்றது.
3405திருவாய்மொழி || (7-7—ஏழையர் ஆவி) (எம்பெருமானது பேரழகை உருவெளித் தோற்றத்தில் கண்ட தலைவி வருந்தி உரைத்தல்) (திருப்பவளத்தில் அழகு தன்னை நலிகிற படியை சொல்கிறாள்) 3
வாலிய தோர் கனி கொல்?வினையாட்டியேன் வல் வினைகொல்?
கோலம் திரள் பவளக் கொழுந்துண்டங் கொலோ அறியேன்
நீல நெடு முகில் போல் திருமேனி யம்மான் தொண்டை வாய்
ஏலும் திசையுள் எல்லாம் வந்து தோன்றும் என் இன் உயிர்க்கே.–7-7-3
வாலியது ஒர் கனி கொல்,Vaaliyadhu or kani kol - விலக்ஷ்ணமாயிருப்ப தொரு பழமோ?
வினையாட்டியேன் வல்வினை கொல்,Vinaiyaatien valvinai kol - இப்பழத்தை இப்போதேய நுபவிக்கப் பெறாத பாவத்தையுடையேனான வென்னுடையவலிய பாவமே ஒரு வடிவு கொண்டதாயிருக்கிறதோ?
கோலம் திரள்,Kolam thirul - ஸௌந்தர்யம் ஸௌகுமார்யம் முதலான நலங்களெல்லான் ஒருசேரத்திரண்ட
பவளம் கொழு துண்டம் கொலோ,Pavalam koludu thundam kolo - பவளத்தினுடைய கொழுவிய தொரு முறியோ?
அறியேன்,Ariyen - அறிகின்றேனில்லை;
நீலம் நெடு முகில் போல் திருமேனி அம்மான்,Neelam netu mugil pol thirumeni ammaan - சுறுத்துப் பெருத்த மேகம் போன்ற திருமேனியையுடைய பெருமானது
தொண்டை வாய்,Thondai vaai - தொண்டைக் கனியின் நிறத்தையுடைத்தான அதரமானது
3406திருவாய்மொழி || (7-7—ஏழையர் ஆவி) (எம்பெருமானது பேரழகை உருவெளித் தோற்றத்தில் கண்ட தலைவி வருந்தி உரைத்தல்) (திருப்பவளத்தில் அழகு தன்னை நலிகிற படியை சொல்கிறாள்.) 4
இன்னுயிர்க்கு ஏழையர் மேல் வளையும் இணை நீல விற்கொல்
மன்னிய சீர் மதனன் கருப்புச் சிலை கொல்?மதனன்
தன்னுயிர்த் தாதை கண்ணப் பெருமான் புருவம் மவையே
என்னுயிர் மேலனவாய் அடுகின்றன என்றும் நின்றே.–7-7-4
இன் உயிர்க்கு,In uyirkku - இனிமையான உயிரைக் கவர்வதற்காக
ஏழையர் மேல் வளையும்,Ezhaiyar mel valaiyum - பெண்பிறந்தார் மேலேதானே வளைந்து நலிவதான
நீலம் இணைவில் கொல்,Neelam inaivil kol - நீல நிறத்தையுடைய இரண்டு விற்களோ?
மன்னிய சீர் மதனன்,Manniya seer madanan - அழியாவழகடையனான மன்மதனுடைய
கரும்பு சிலை கொல்,Karumbu silai kol - கரும்பமயமான வில்தானோ?
ம நனன் தன் உயிர் தாதை கண்ணன் பெருமான்,Ma nanan than uyir thaathai kannan perumaan - மன்மதனுக்கு அபிமதனான் பிதாவாகிய கண்ணபிரானுடைய
புருவம் அவையே,Puruvam avaiye - அந்தத் திருப்புருவங்களே
என் உயிர் மேலன ஆய்,En uyir melana aay - எனது உயிரையே கணிசித்து
என்றும் நின்றே அடுகின்றன்,Endrum nindrae adukindran - என்றும் ஒருபடிப்பட நின்று நலியாநின்றன.
3407திருவாய்மொழி || (7-7—ஏழையர் ஆவி) (எம்பெருமானது பேரழகை உருவெளித் தோற்றத்தில் கண்ட தலைவி வருந்தி உரைத்தல்) (எம்பெருமானுடைய புன்முறுவலின் அழகு வந்து நலிகிற படியைக் கூறுகின்றாள்.) 5
என்று நின்றே திகழும் செய்ய ஈன்சுடர் வெண் மின்னுக்கொல்?
அன்றிஎன் ஆவி அடும் அணி முத்தங்கொலோ? அறியேன்
குன்றம் எடுத்த பிரான் முறுவல் எனது ஆவி அடும்
ஒன்றும் அறிகின்றிலேன் அன்னைமீர்!எனக்கு உய்விடமே.–7-7-5
என்றும் நின்றே திகழும்,Endrum nindrae thigazhum - எப்போதும் ஒருபடிப்பட நின்று விளங்கும் தாய்
செய்ய சுடர் ஈன்,Seyya sudar een - சிவந்த சுடரை வெளிப்படுத்து மதான
வெண் மின் கொல்,Ven min kol - வெண்ணிறமான மின்னலோ!
அன்றி,Andri - அல்லது
என் ஆவி அடும் அணி முத்தம் கொலோ,En aavi adum ani muththam kolo - என்னுயிரை மாய்க்கின்ற அழகிய முத்துநிரையோ!;
அறியேன்,Ariyen - அறிகின்றிலேன்;
குன்றம் எடுத்த பிரான் முறுவல்,Kunram edutha piran muruval - கோவர்த்தனமலையைக் குடையாக வெடுத்த பெருமானுடைய மந்த ஹாஸமானது
எனது ஆவி அடும்,Enadhu aavi adum - என் ஆத்மாவைத் தபியாநின்றது;
அன்னைமீர்,Annai meeer - தாய்மார்களே!
எனக்கு உய்வு இடம்,Enakku uyvu idam - நான் பிழைக்கு முபாயம்
ஒன்றும் அறிகின்றிலேன்,Ondrum arikindrilen - சிறிதும் அறிகிறேனில்லை.
3408திருவாய்மொழி || (7-7—ஏழையர் ஆவி) (எம்பெருமானது பேரழகை உருவெளித் தோற்றத்தில் கண்ட தலைவி வருந்தி உரைத்தல்) (அவனுடைய திருமகரகுண்டலங்களும் திருக்காதுகளும் நலிகிறபடி சொல்லுகிறாள்.) 6
உய்விடம் ஏழையர்க்கும் அசுரர்க்கும் அரக்கர்கட்கும்
எவ்விடம்? என்றிலங்கி மகரம் தழைக்கும் தளிர் கொல்?
பைவிடப் பாம்பணையான் திருக் குண்டலக் காதுகளே
கைவிடல் ஒன்றும் இன்றி அடுகின்றன காண்மின்களே.–7-7-6
ஏழையாக்கும்,Ezhaiyaakkum - பெண்டுகளுக்கும்
அசுரர்க்கும் அரக்கர் கட்கும்,Asurarkkum arakkar kadkum - அஸூர ராக்ஷஸர்களுக்கும்
உய்வு இடம் எவ்விடம் என்று இலங்கி,Uyvu idam evvidam endru ilangi - பிழைக்கும் வரது ஏது? என்னும்படி விளங்கிக் கொண்டு
மகரம் தழைக்கும் தளிர்கொல்,Makaram thalaikkum thalir kol - மகரவடிவமாய்த் தழைத்த சில தளிர்களோ?
பை விடம் பாம்பு அணையான்,Pai vidam paampu anaiyaan - படமெடுப்பதும் விஷத்தைக்குவதுமான பாம்பைக் படுக்கை யாகவுடைய பெருமானுடைய
திரு குண்டலம்,Thiru kundalam - திருமகர குண்டலங்களை யுடைய காதுகள் தானே
கைவிடல் ஒன்றும் இன்றி,Kaividal ondrum indri - ஒய்வில்லாமல் நிரந்தரமாக
அடுகின்றன,Adukindran - நலியாநின்றன;
காண்மின்கள்,Kaanmingal - காணுகோள்.
3409திருவாய்மொழி || (7-7—ஏழையர் ஆவி) (எம்பெருமானது பேரழகை உருவெளித் தோற்றத்தில் கண்ட தலைவி வருந்தி உரைத்தல்) (திருநெற்றியினழகுவந்து நலிகிறபடியைச் சொல்லுகிறாள். அவ்வழகை எல்லார்க்கும் காட்டவேணுமென்றும், அதைக்கண்டு தான் படுகிற பாட்டை எல்லாரும் படவேணுமென்றும் இவளுக்கு ஆசையுள்ளது.) 7
காண்மின்கள் அன்னையார்காள்! என்று காட்டும் வகை அறியேன்!
நாண் மன்னு வெண் திங்கள் கொல்,நயந்தார்கட்கு நச்சிலை கொல்
சேண் மன்னு நால் தடந் தோள் பெருமான் தன் திரு நுதலே?
கோண் மன்னி ஆவி அடும் கொடியேன் உயிர் கோளிழைத்தே.–7-7-7
அன்னையர் காள காண்மின்கள் என்று,Annaiyar kaala kaanmingal endru - தாய்மார்களே! காணுங்கோள் என்று சொல்லி
காட்டும் வகை அறியேன்,Kaattum vakai arien - (உங்களுக்குக்) காட்டும் வித மறிகின்றிலேன்;
நாள் மன்னு வெண் திங்கள் கொல்,Naal mannu ven thingal kol - பூர்வ பக்ஷ்த்து அஷ்டமீசந்திரனோ!
நயந்தார் கட்கு நஞ்சு இலை கொல்,Nayanthar kadku nanju ilai kol - ஆசைப்பட்டவர்களுக்கு நஞ்சாயிருப்பதொரு இல்லையோ!
சண் மன்னுநால் தட தோள் பெருமான் தன்,Shan mannunaal thada thol perumaan than - உயர்த்தி பொருந்திய நான்கு பருத்த திருத்தோள்களையுடைய எம்பெருமானது
திரு நுதலே,Thiru nuthale - திரு நெற்றியே
கோள் மன்னி,Kol manni - மிடுக்குப் பொருத்தி
கொடியேன் உயிர் கோள் இழைத்து,Kodiyaen uyir kol izhaithu - பாவியான வென்னுடைய பிராணனே முடிக்கையிலே துணிந்து
ஆவி அடும்,Aavi adum - என் ஆத்மாவை நலியாநின்றது.
3410திருவாய்மொழி || (7-7—ஏழையர் ஆவி) (எம்பெருமானது பேரழகை உருவெளித் தோற்றத்தில் கண்ட தலைவி வருந்தி உரைத்தல்) (கீழே ஏழு பாட்டுக்கள் கடந்தன. அவ்வேழு பாட்டுக்களிலும் ஏழு அவயவங்கள் நலிந்தன்மை சொல்லிற்று. அவையெல்லாம் திருமுகமண்டலமென்று பேர் பெற்று நலிகிறபடியைச் சொல்லுகிறாளிப் சேர்ந்து திருமுகமண்டலமென்று பேர் பெற்று நலிகிறபடியைச் சொல்லுகிறாளிப் பாட்டில்.) 8
கோளிழைத் தாமரையும் கொடியும் பவளமும் வில்லும்
கோளிழைத் தண் முத்தமும் தளிரும் குளிர் வான் பிறையும்
கோளிழை யாவுடைய கொழுஞ்சோதி வட்டங்கொல்? கண்ணன்
கோளிழை வாண் முகமாய்க் கொடியேன் உயிர் கொள்கின்றதே.–7-7-8
கோள் இழை தாமரையும்,Kol izhai thaamaraiyum - தன்னுடைய வொளியே தனக்கு ஆபரணமானகப் போரும்படியான தாமரையும் (திருக்கண்களும்)
கொடியும்,Kodiyum - கற்பகக் கொடியும் (திருமூக்கும்)
பவளமும்,Pavalamum - பவளமும் (திருவதரமும்)
வில்லும்,Villum - வில்லும் (திருப்புருவங்களும்)
கோள் இழைதண்முத்தமும்,Kol izhaidhan muththamum - தன்னுடைய தேஜஸஸையே தனக்கு ஆபரணமாகவுடைத்தும் (தந்தபங்க்தியும்)
தளிரும்,Thalirum - தளிரும் (திருக்காதும்)
குளிர் வான் பிறையும்,Kulir vaan piraiyum - குளிர்ந்து பெருத்த பிறையும் (நெற்றியும்) ஆகிய இவற்றோடே கூடி
கோள் இழையா உடைய,Kol izhaiya udaiya - தன்னழகே தனக்கு ஆபரணமாயிருக்கிற
கொழு சோதி வட்டம் கொல்,Kol sothi vattam kol - பூர்ணமான ஜ்யோதிர் மண்டலஸீஉலீ!
கண்ணன்,Kannan - கண்ணபிரானது
கோள் இழை வாள் முகம் ஆய்,Kol izhai vaal mukam aay - தன்னொளிதானே தனக்காபரணமான அழகிய முகமென்றொரு வியாஜத்தையிட்டு
கொடியேன் உயிர் கொள் கின்றது,Kodiyaen uyir kol kindradhu - கொடியேனான வென்னுடைய உயிரைக் கொள்ளை கொள்ளாநின்றது
3411திருவாய்மொழி || (7-7—ஏழையர் ஆவி) (எம்பெருமானது பேரழகை உருவெளித் தோற்றத்தில் கண்ட தலைவி வருந்தி உரைத்தல்) (திருக்கழல் வந்து நலிகிற படியைச் சொல்லுகிறாள்.) 9
கொள்கின்ற கோள் இருளைச் சுகிர்ந்திட்ட கொழுஞ் சுருளின்
உள் கொண்ட நீல நன்னூல் தழைகொல்?அன்று மாயன் குழல்
விள்கின்ற பூந் தண் துழாய் விரை நாற வந்து என்னுயிரைக்
கள்கின்றவாறு அறியீர் அன்னைமீர்!கழறா நிற்றிரே.–7-7-9
கொள்கின்ற கோள் இருளை,Kolkindra kol irulai - உலகத்தை யெல்லாம் வியாபிக்கின்ற மிடுக்கையுடைய இருளை
சுகிர்ந்திட்ட கொழு சுருளின்,Sukirnditta kolu surulin - பன்னிப் பன்னிச் சுருட்டப்பெற்ற சிறந்தவொரு சுருளினுடைய
உள் கொண்ட நீலம் நல்நூல் தழை கொல்,Ul konda neelam nalnul thazhai kol - (கையழுக்குப்படாமல்) உள்ளே நூற்கப்பட்ட நீல நிறத்தையுடைய அழகிய நூல்திரளோ!
அன்று,Andru - அதுவென்று, அதுவன்று; திருக்குழல் கற்றை என்றிவ்வளவே சொல்லத்தகுமத்தனை; (அத்திருக்குழலானது)
விள்கின்ற பூ தண்துழாய் விரை நாறவந்து,Vilkindra poo thandhulai virai naaravandhu - அலர்ந்தழகிய குளிர்ந்த திருத்துழாயின் பரிமளம் வீசும்படிவந்து
என்; உயிரை,En uyirai - என் ஆத்மாவை
கள்கின்ற ஆறு,Kalkindra aaru - கொள்ளை கொள்ளும் விதந்தை
அன்னைமீர் அறியீர்,Annaimeer ariyeer - தாய்மார்களே! நீங்கள் அறிகிறீர்களில்லை;
கழறா நிற்றிர்,Kalaraa nittrir - வீணாக் ஏதேனுமொன்றைச் சொல்லிப் பொடிகின்றீர்களே!
3412திருவாய்மொழி || (7-7—ஏழையர் ஆவி) (எம்பெருமானது பேரழகை உருவெளித் தோற்றத்தில் கண்ட தலைவி வருந்தி உரைத்தல்) (திருவபிஷேகத்தினழக்கிலே என்னுற்றமகப்பட்டது. இனியென்னைப் பொடிந்து உங்களுக்கொரு பலனில்லையென்று திண்ணிதாகப் பேசித் தலைக்கட்டுகிறாள். இப்படி வெட்டிதாகச் சொல்லாவிடில் அவர்கள் விடார்கள் போலேயிருந்து; ஆகவே வெட்டொன்று துண்டிரண்டாகச் சொல்லி முடிக்கிறாள்.) 10
நிற்றி முற்றத்துள் என்று நெரித் தகையராய் என்னை நீர்
சுற்றியும் சூழ்ந்தும் வைதிர் சுடர்ச்சோதி மணி நிறமாய்
முற்ற இம் மூவுலகும் விரிகின்ற சுடர்முடிக்கே
ஒற்றுமை கொண்டது உள்ளம் அன்னைமீர்!நசை என் நுங்கட்கே?–7-7-10
அன்னை மீர்,Annaimeer - தாய்மார்களே!
நீர்,Neer - நீங்கள்
என்னை,Ennai - என்னைக் குறித்து
முற்றத்துள்,Mutrathul - (பெண்ணே!) கூசாமல் முற்றத்திலே வந்து நிற்கிறாயே! என்று அதட்டி
நேரித்த கையர் ஆய் சுற்றியும் சூழந்தும்,Neritha kaiyar aai suttriyum soozhandhum - கையை நேரித்துக் கொண்டு
வைதிர்,Vaidhir - நிந்திக்கின்றீர்கள்;
சுடர் சோதி மணி நிறம் ஆய்,Sudar sothi mani niram aai - சுடராய்ப் பரம்பின வொளியையுடைத்தான ரத்னங்களினுடைய நிறத்தை யுடைத்தாய்க் கொண்டு
இம் மூவுலகு முற்றவும் விரிகின்ற,Im moovulagu mutravum virikindra - உலகமடங்கலும் வியாபிக்கிற
சுடர்,Sudar - தேஜஸ்ஸையுடைத்தான
முடிக்கே,Mudikke - திருவபிஷேகத்தின் பக்கலிலேயே
உள்ளம் ஒற்றுமை கொண்டது,Ullam otrimai kondadhu - எனது நெஞ்சானது ஒருமைப்பட்டது;
நுங்கட்கு நசை என்,Nungatku nasai en - இனி உங்களுக்கு என் பக்கலில் ஆசை வீண்தான்.
3413திருவாய்மொழி || (7-7—ஏழையர் ஆவி) (எம்பெருமானது பேரழகை உருவெளித் தோற்றத்தில் கண்ட தலைவி வருந்தி உரைத்தல்) (இத்திருவாய்மொழியை ஓதுமவர்கள் எம்பெருமானைப் பிரிந்து வருந்தாதே நித்யஸூரிகளோடே கூடி நித்யாதுபவம் பண்ணப் பெறுவர்களென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார்.) 11
கட்குஅரிய பிரமன் சிவன் இந்திரன் என்ற இவர்க்கும்
கட்குஅரிய கண்ணனைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
உட்குஉடை ஆயிரத்துள் இவையும் ஒருபத்தும் வல்லார்
உட்குஉடை வானவரோடு உட னாய் என்றும் மாயாரே.–7-7-11
கட்கு அரிய,Katku ariya - மனிதா முதலானாருடைய கண்ணுக்க இலக்காகாத
பிரமன் சிவன் இந்திரன் என்ற இவர்க்கு,Piraman sivan indiran endra ivarkku - பிரமன் சிவன் இந்திரன் என்று சொல்லிப் பட்ட இவர்களுடைய
கட்கும் அரிய,Katkum ariya - கண்ணுக்கும் காணவர்யனான
கண்ணனை,Kannanai - எம்பெருமானைக் குறித்து
குருகூர்சட கோபன் சொன்ன,Kurukoor Sadagopan sonna - நம்மாழ்வார் அருளிச்செய்த
உட்கு உடை ஆயிரத்துள்,Udkku udai aayirathul - எம்பெருமானை உள்ளபடி பேசும் வல்லமை வாய்ந்த ஆயிரத்தினுள்ளே
இவையும் ஒரு பத்தும் வல்லார்,Ivaiyum oru pathum vallaar - இப்பத்துப் பாசுரங்களையும் ஓதவல்லவர்கள்
உட்கு உடை வானவரோடு உடன் ஆய் என்றும்,Udkku udai vaanavarodu utan aai endrum - ஆற்றல்மிக்க நித்ய ஸூரிகளோடு கூடியவர்களாய்
மாயார்,Maayaar - ஒரு நாளும் பிரியாதிருக்கப் பெறுவர்கள்