| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 244 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-மூன்றாம் திருமொழி - சீலைக்குதம்பை) (கண்ணன் கன்றுகள்மேய்த்துவரக் கண்டு யசோதை மகிழ்தல்) (எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 1 | சீலைக் குதம்பை ஒரு காது ஒரு காது செந்நிற மேல் தோன்றிப் பூ கோலப் பணைக் கச்சும் கூறை யுடையும் குளிர் முத்தின் கோடாலமும் காலிப் பின்னே வருகின்ற கடல் வண்ணன் வேடத்தை வந்து காணீர் ஞாலத்துப் புத்திரனைப் பெற்றார் நங்கைமீர் நானோ மற்றாருமில்லை–3-3-1 | நங்கைமீர்,Nangaimir - பெண்காள்!, ஒரு காது,Oru Kaadu - ஒரு காதிலே சீலைக் குதம்பை,Seilai Kudambai - சீலைத் தக்கையையும் ஒரு காது,Oru Kaadu - மற்றொரு காதிலே செம் நிறம் மேல் தோன்றிப் பூ,Sem Niram Mel Thonrip Poo - செங்காந்தள் பூவையும் (அணிந்து கொண்டு) கூறை உடையும்,Koorei Udaiyum - திருப் பரியட்டத்தின் உடுப்பையும் கோலம்,Kolam - (அது நழுவாமைக்குச் சாத்தின) அழகிய பணை,Panai - பெரிய கச்சும்,Kachum - கச்சுப் பட்டையையும் குளிர்,Kulir - குளிர்ந்திரா நின்றுள்ள முத்தின்,Muthin - முத்தாலே தொடுக்கப் பெற்று கோடு,Kodu - (பிறை போல்)வளைந்திருக்கின்ற ஆலமும்,Aalamum - ஹாரத்தையும் காலி பின்னே,Kaali Pinne - (உடையனாய்க் கொண்டு) கன்றுகளின் பின்னே வருகின்ற,Varugindra - (மீண்டு)வாரா நின்ற கடல் வண்ணன்,Kadal Vannan - கடல் போன்ற நிறத்தனான கண்ணனுடைய வேடத்தை,Vedaththai - வேஷத்தை வந்து காணீர்,Vandhu Kaanir - வந்து பாருங்கள்; ஞாலத்து,Gnalathu - பூ மண்டலத்திலே புத்திரனை,Puthiranai - பிள்ளையை பெற்றார்,Pettrar - பெற்றவர்களுள் நானே,Naane - (’நல்ல பிள்ளை பெற்றவள்’ என்று சொல்லத் தக்கவள்) நான் ஒருத்தியே யாவேன்; மற்று ஆரும் இல்லை,Matru Aarum Illai - வேறொருத்தியுமில்லை. |
| 245 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-மூன்றாம் திருமொழி - சீலைக்குதம்பை) (கண்ணன் கன்றுகள்மேய்த்துவரக் கண்டு யசோதை மகிழ்தல்) (எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 2 | கன்னி நன் மா மதிள் சூழ் தரு பூம் பொழில் காவிரித் தென்னரங்கம் மன்னிய சீர் மது சூதனா கேசவா பாவியேன் வாழ்வுகந்து உன்னை இளங் கன்று மேய்க்கச் சிறு காலே யூட்டி ஒருப் படுத்தேன் என்னின் மனம் வலியாள் ஒரு பெண் இல்லை என் குட்டனே முத்தம் தா–3-3-2 | கன்னி,Kanni - அழிவற்ற நல்,Nal - விலக்ஷணமான மா மதிள்,Maa Mathil - பெரிய மதிள்களாலே சூழ் தரு,Soozh Tharu - சூழப்பட்டு பூ பொழில்,Poo Pozhil - பூஞ்சோலைகளை யுடைய காவிரி,Kaaviri - காவேரி நதியோடு கூடிய தென் அரங்கம்,Then Arangam - தென் திருவரங்கத்தில் மன்னிய,Manniya - பொருந்தி யெழுந்தருளி யிருக்கின்ற சீர்,Seer - கல்யாண குண யுக்தனான மது சூதனா,Madhu Soothana - மதுஸூதநனே! [கண்ணபிரானே!] கேசவா,Kesavaa - கேசவனே! பாவியேன்,Paaviyeen - பாவியாகிய நான் வாழ்வு உகந்து,Vaazhvu Ugandhu - (நமது ஜாதிக்கேற்ற கன்று மேய்க்கை யாகிற) ஜீவநத்தை விரும்பி உன்னை,Unnai - (இவ் வலைச்சலுக்கு ஆளல்லாத) உன்னை சிறுகாலே,Sirukaale - விடியற்காலத்திலேயே ஊட்டி,Ootti - உண்ணச் செய்து இள கன்று மேய்க்க,Ela Kanru Meikka - இளங்கன்றுகளை மேய்க்கைக்காக (அவற்றின் பின்னே போக) ஒருப்படுத்தேன்,Orupadutthen - ஸம்மதித்தேன்; என்னில்,Ennil - (இப்படி உன்னை அனுப்பிவிட்டுப் பொறுத்திருந்த) என்னிற்காட்டில் மனம் வலியாள்,Manam Valiyaal - கல் நெஞ்சை யுடையளான ஒரு பெண்,Oru Pen - ஒரு ஸ்த்ரீயும் இல்லை,Ellai - (இவ் வுலகில்) இல்லை; என் குட்டனே,En Kuttane - எனது குழந்தாய்! முத்தம் தா,Mutham Thaa - (எனக்கு) ஒரு முத்தம் கொடு. |
| 246 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-மூன்றாம் திருமொழி - சீலைக்குதம்பை) (கண்ணன் கன்றுகள்மேய்த்துவரக் கண்டு யசோதை மகிழ்தல்) (எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 3 | காடுகளூடு போய்க் கன்றுகள் மேய்த்து மறி யோடி கார்க்கோடல் பூச் சூடி வருகின்ற தாமோதரா கற்றுத் தூளி காண் உன்னுடம்பு பேடை மயிற் சாயல் பின்னை மணாளா நீராட்டமைத்து வைத்தேன் ஆடி அமுது செய் அப்பனு முண்டிலன் உன்னோடு உடனே யுண்பான்–3-3-3 | காடுகள் ஊடு போய்,Kaadugal Oodu Poi - (பற்பல) காடுகளிலுள்ளே புகுந்து மறி ஓடி,Mari Odi - (கன்றுகள் கை கழியப் போகாத படி) (அவற்றை) மறிக்கைக்காக [திருப்புகைக்காக] முன்னே ஓடி கன்றுகள் மேய்த்து,Kanrugal Meithu - (அக்) கன்றுகளை மேய்த்து கார் கோடல் பூ சூடி,Kaar Koadal Poo Soodi - பெரிய கோடல் பூக்களை முடியிலணிந்து கொண்டு வருகின்ற,Varugindra - (மீண்டு) வருகின்ற தாமோதரா,Thaamotharaa - கண்ணபிரானே! உன் உடம்பு,Un Udambu - உன் உடம்பானது கன்று தூளி காண்,Kanru Thooli Kaan - கன்றுகளால் துகைத்துக் கிளப்பபட்ட தூளிகள் படியப் பெற்றுள்ளது காண்; மயில் பேடை,Mayil Paedai - பெண் மயில் போன்ற சாயல்,Saayal - சாயலை யுடைய பின்னை,Pinnai - நப்பின்னைப் பிராட்டிக்கு மாணாளா,Maanalaa - வல்லபனானவனே! நீராட்டு அமைத்து வைத்தேன்,Neeraattu Amaithu Vaithen - (இந்த உடம்பை அலம்புவதற்காக) நீராட்டத்துக்கு வேண்டியவற்றை ஸித்தப்படுத்தி வைத்திருக்கின்றேன்; ஆடி,Aadi - (ஆகையால் நீ) நீராடி அமுது செய்,Amudhu Sei - அமுது செய்வாயாக; உன்னோடு உடனே,Unnodu Udane - உன்னோடு கூடவே உண்பான்,Unbaan - உண்ண வேணுமென்று அப்பனும்,Appanum - (உன்) தகப்பனாரும் உண்டிலன்,Undilan - (இதுவரை) உண்ணவில்லை. |
| 247 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-மூன்றாம் திருமொழி - சீலைக்குதம்பை) (கண்ணன் கன்றுகள்மேய்த்துவரக் கண்டு யசோதை மகிழ்தல்) (எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 4 | கடியார் பொழிலணி வேங்கடவா கரும் போரேறே நீ யுகக்கும் குடையும் செருப்பும் குழலும் தருவிக்கக் கொள்ளாதே போனாய் மாலே கடிய வெங் கானிடைக் கன்றின் பின் போன சிறுக் குட்டச் செங் கமல அடியும் வெதும்பி உன் கண்கள் சிவந்தாய் அசைந்திட்டாய் நீ எம்பிரான்–3-3-4 | கடி ஆர்,Kadi Aar - (மலர்களின்) பரிமளம் நிறைந்த பொழில்,Pozhil - சோலைகளை யுடைய அணி,Ani - அழகிய வேங்கடவா,Vengadavaa - திருவேங்கட மலையி லெழுந்தருளி யிருப்பவனே! போர்,Por - யுத்தஞ்செய்ய முயன்ற கரு ஏறே,Karu Eare - காள ரிஷபம் போல் செருக்கி யிருக்குமவனே! மாலே,Maale - (கன்றுகளிடத்தில்) மோஹமுள்ளவனே! எம்பிரான்,Empiraan - எமக்கு ஸ்வாமி யானவனே! நீ உகக்கும்,Nee Ugakkum - நீ விரும்புமவையான குடையும்,Kudaiyum - குடையையும் செருப்பும்,Seruppum - செருப்பையும் குழலும்,Kuzhalum - வேய்ங்குழலையும் தருவிக்க,Tharuviikka - (நான் உனக்குக்) கொடுக்கச் செய்தேயும் கொள்ளாதே,Kollaadhe - (அவற்றை நீ) வாங்கிக் கொள்ளாமல் போனாய்,Poonaai - (கன்றுகளின் பின்னே) சென்றாய்; கடிய வெம் கான் இடை,Kadiya Vem Kaan Idai - மிகவும் வெவ்விய காட்டிலே கன்றின் பின்,Kanrin Pin - கன்றுகளின் பின்னே போன,Poona - தொடர்ந்து சென்ற சிறு குட்டன்,Siru Kuttan - சிறுப் பிள்ளையாகிய உன்னுடைய செம் கமலம் அடியும்,Sem Kamalam Adiyum - செந் தாமரைப் பூப் போன்ற திருவடிகளும் வெதும்பி,Vedumbi - கொதிக்கப் பெற்று உன் கண்கள்,Un Kangal - உன் கண்களும் சிவந்தாய்,Sivandhaai - சிவக்கப் பெற்றாய்; நீ;,Nee - நீ; அசைந்திட்டாய்,Asaindittai - (உடம்பு) இளைக்கவும் பெற்றாய் |
| 248 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-மூன்றாம் திருமொழி - சீலைக்குதம்பை) (கண்ணன் கன்றுகள்மேய்த்துவரக் கண்டு யசோதை மகிழ்தல்) (எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 5 | பற்றார் நடுங்க முன் பாஞ்ச சன்னியத்தை வாய் வைத்த போரேறே என் சிற்றாயர் சிங்கமே சீதை மணாளா சிறுக் குட்டச் செங்கண் மாலே சிற்றாடையும் சிறுப் பத்திரமும் இவை கட்டிலின் மேல் வைத்துப் போய் கற்றாயரோடு நீ கன்றுகள் மேய்த்துக் கலந்துடன் வந்தாய் போலும்–3-3-5 | முன்,Mun - (பாரதப் போர் செய்த) முற் காலத்தில் பற்றார்,Patraar - (உனது உயிர் போன்ற பாண்டவர்களுக்குப்) பகைவரான துரியோதனாதியர் நடுங்கும்,Nadungum - நடுங்கும்படி பாஞ்ச சன்னியத்தை,Paancha Sanniyaththai - சங்கத்தை போர் ஏறே,Por Eare - போர் செய்யலுற்ற காளை போன்ற கண்ணபிரானே!-எனக்கு விதேயனாய் சிறு ஆயர் சிங்கமே,Siru Aayar Singame - சிறிய இடைப் பிள்ளைகளுள் சிங்கக் குட்டி போன்றுள்ளவனே! சீதை,Seethai - ஸீதாப் பிராட்டிக்கு மணாளா,Manaalaa - வல்லபனானவனே! சிறு குட்டன்,Siru Kuttan - சிறு பிள்ளையாயிருப்பவனே! செம் கண் மாலே,Sem Kan Maale - (இப்படியிருக்கச் செய்தேயும்) செந்தாமரை மலர் போன்ற கண்களை யுடைய ஸர்வேச்வரனாக விளங்குமவனே! நீ;,Nee - நீ; சிறு ஆடையும்,Siru Aadaiyum - (உன் பருவத்துக்குத் தக்க) சிறிய திருப்பரிவட்டமும் சிறு பத்திரமும் இவை,Siru Paththiramum Ivai - குற்றுடை வாளுமாகிற இவற்றை கட்டிலின் மேல் வைத்து போய்,Kattilin Mel Vaithu Poi - (காட்டுக்குப் போகையிலுள்ள விரைவாலே) (கண் வளர்ந்தருளின) கட்டிலின் மேலே வைத்து மறந்து போய் கன்று ஆயரோடு,Kanru Aayarodhu - கன்று மேய்க்கிற இடைப் பிள்ளைகளுடனே கன்றுகள் மேய்த்து,Kanrugal Meithu - கன்றுகளை மேய்த்து விட்டு கலந்து உடன்,Kalandhu Udan - (மீண்டு மாலைப் பொழுதிலே) (அந்த தன்னேராயிரம் பிள்ளைகளோடே) கூடிக் கலந்து வந்தாய் போலும்,Vandhai Poolum - (வீட்டுக்கு) வந்தாயன்றோ?. |
| 249 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-மூன்றாம் திருமொழி - சீலைக்குதம்பை) (கண்ணன் கன்றுகள்மேய்த்துவரக் கண்டு யசோதை மகிழ்தல்) (எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 6 | அஞ்சுடராழி உன் கையகத் தேந்தும் அழகா நீ பொய்கை புக்கு நஞ்சுமிழ் நாகத்தினோடு பிணங்கவும் நான் உயிர் வாழ்ந்தி ருந்தேன் என் செய்ய என்னை வயிறு மறுக்கினாய் ஏது மோரச்ச மில்லை கஞ்சன் மனத்துக்கு உகப்பனவே செய்தாய் காயாம்பூ வண்ணம் கொண்டாய்–3-3-6 | அம் சுடர்,Am sudar - அழகிய ஒளியை யுடைய ஆழி,Aazhi - திருவாழி யாழ்வானை கை அகத்து,Kai akathu - திருக் கையிலே ஏந்தும்,Aendum - தரியா நின்றுள்ள அழகா,Azhagaa - அழகப் பிரானே! நீ;,Nee - நீ; பொய்கை,Poigai - (காளியன் கிடந்த) பொய்கையிலே புக்கு,Pukku - போய்ப் புகுந்து பிணங்கவும்,Pinangavum - (அவ் விடத்தில்) சண்டை செய்த போதும் நான் உயிர் வாழ்ந்து இருந்தேன்,Naan uyir vaazndhu irundhen - நான் ஜீவித்திருந்தேன்; என் செய்ய,En seyyya - ஏதுக்காக என்னை,Ennai - என்னை வயிறு மறுக்கினாய்,Vayiru marukkinai - (இப்படி) வயிறு குழம்பச் செய்கின்றாய்; ஏது ஓர் அச்சம் இல்லை,Aethu or achcham illai - (உனக்குக்) கொஞ்சமும் பயமில்லையே; காயாம் பூ வண்ணம் கொண்டாய்,Kaayaam poo vannam kondai - காயாம் பூப் போன்ற வடிவு படைத்தவனே! கஞ்சன்,Kanjan - கம்ஸனுடைய மனத்துக்கு,Manaththukku - மநஸ்ஸுக்கு உகப்பனவே,Ugappanave - உகப்பா யுள்ள வற்றையே செய்தாய்,Seythaay - செய்யா நின்றாய். |
| 250 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-மூன்றாம் திருமொழி - சீலைக்குதம்பை) (கண்ணன் கன்றுகள்மேய்த்துவரக் கண்டு யசோதை மகிழ்தல்) (எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 7 | பன்றியும் ஆமையும் மீனமு மாகிய பாற் கடல் வண்ணா உன் மேல் கன்றி னுருவாகி மேய் புலத்தே வந்த கள்ள அசுரன் தன்னை சென்று பிடித்துச் சிறுக் கைகளாலே விளங்கா யெறிந்தாய் போலும் என்றும் என் பிள்ளைக்குத் தீமைகள் செய்வார்கள் அங்கன மாவார்களே–3-3-7 | பன்றியும்,Panriyum - மஹா வராஹமாயும் ஆமையும்,Aamiyum - ஸ்ரீகூர்மமாயும் மீனமும்,Meenamum - மத்ஸ்யமாயும் ஆகிய,Aagiya - திருவவதரித்தருளின பால் கடல் வண்ணா,Paal kadal vanna - பாற் கடல் போல் வெளுத்திருந்துள்ள திருமேனியை யுடையவனே! உன் மேல்,Un mel - உன்னை நலிய வேணுமென்ற எண்ணத்தினால் கன்றின் உரு ஆகி,Kanrin uru aagi - கன்றின் உருவத்தை எடுத்துக் கொண்டு மேய் புலத்தே வந்து,Mey pulathey vandhu - (கன்றுகள்) மேயும் நிலத்தில் வந்து கலந்த கள்ளம் அசுரர் தம்மை,Kallam asurar thammai - க்ருத்ரிமனான அஸுரனை சென்று,Senru - (அவன் சேஷ்டையாலே அவனை அசுரனென்றறிந்து) (அக்கன்றின் அருகிற்) சென்று சிறு கைகளாலே,Siru kaikalaale - (உனது) சிறிய கைகளாலே பிடித்து,Pitithu - (அக்கன்றைப்) பிடித்து விளங்காய்,Vilangaai - (அஸுராவிஷ்டமானதொரு) விளா மரத்தின் காய்களை நோக்கி எறிந்தாய் போலும்,Erindhaai polum - விட்டெறிந்தா யன்றோ; என் பிள்ளைக்கு,En pillaiyukku - என் பிள்ளையான கண்ணபிரானுக்கு தீமை செய்வார்கள்,Theemai seivargal - தீமைகளை உண்டுபண்ணுமவர்கள் என்றும்,Endrum - என்றைக்கும் அங்ஙனம் ஆவார்கள்,Angnanam aavargal - அவ் விளவும் கன்றும் போலே நசித்துப் போகக் கடவர்கள். |
| 251 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-மூன்றாம் திருமொழி - சீலைக்குதம்பை) (கண்ணன் கன்றுகள்மேய்த்துவரக் கண்டு யசோதை மகிழ்தல்) (எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 8 | கேட்டறியாதன கேட்கின்றேன் கேசவா கோவலர் இந்திரற்கு காட்டிய சோறும் கறியும் தயிரும் கலந்துடன் உண்டாய் போலும் ஊட்ட முதலிலேன் உன் தன்னைக் கொண்டு ஒரு போதும் எனக் கரிது வாட்டமிலாப் புகழ் வாசுதேவா உன்னை அஞ்சுவன் இன்று தொட்டும்–3-3-8 | கேசவா,Kesavaa - கண்ணபிரானே! கேட்டு அறியாதன,Kaettu ariyaadhana - (உன் விஷயமாக இதுவரை நான்) கேட்டறியாதவற்றை கேட்கின்றேன்,Kaetkinraen - (இன்று) கேட்கப் பெற்றேன்; கோவலர்,Kovalara - (அவற்றில் ஒன்று சொல்லுகின்றேன் கேள்;) கோபாலர்கள் இந்திரற்கு,Indirarku - இந்திரனைப் பூஜிப்பதற்காக காட்டிய,Kaattiya - அனுப்பிய சோறும்,Soruma - சோற்றையும் கறியும்,Kariyuma - (அதுக்குத் தக்க) கறியையும் தயிரும்,Thairuma - தயிரையும் உடன் கலந்து,Udan kalandhu - ஒன்று சேரக் கலந்து உண்டாய் போலும்,Undaai poolum - உண்டவனன்றோ நீ; ஊட்ட,Ootta - (இப்படி உண்ண வல்ல பெரு வயிற்றாளனான உன்னை) (நாடோறும்) ஊட்டி வளர்க்க(த்தக்க) முதல் இலேன்,Mudhal ilaen - கைம் முதல் எனக்கில்லை; உன் தன்னை கொண்டு,Un thannai kondu - உன்னை வைத்துக் கொண்டு ஒரு போதும்,Oru pothum - ஒரு வேளையும் எனக்கு அரிது,Enakku aridhu - என்னால் ஆற்ற முடியாது; வாட்டம் இலா,Vaattam ilaa - (என்றும்) வாடாத புகழ்,Pugazh - புகழை யுடைய வாசு தேவா,Vaasu Devaa - வஸுதேவர் திருமகனே! இன்று தொட்டும்,Indru thottum - இன்று முதலாக உன்னை,Unnai - உன்னைக் குறித்து அஞ்சுவன்,Anjuvan - அஞ்சா நின்றேன். |
| 252 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-மூன்றாம் திருமொழி - சீலைக்குதம்பை) (கண்ணன் கன்றுகள்மேய்த்துவரக் கண்டு யசோதை மகிழ்தல்) (எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 9 | திண்ணார் வெண் சங் குடையாய் திருநாள் திருவோணமின் றேழு நாள் முன் பண்ணேர் மொழியாரைக் கூவி முளை யட்டிப் பல்லாண்டு கூறு வித்தேன் கண்ணாலம் செய்யக் கறியும் கலத்தரிசியும் ஆக்கி வைத்தேன் கண்ணா நீ நாளைத் தொட்டுக் கன்றின் பின் போகேல் கோலம் செய் திங்கே யிரு–3-3-9 | திண் ஆர்,Thin Aar - திண்மை பொருந்திய வெண் சங்கு,Ven Sangu - வெண் சங்கத்தை உடையாய்,Udaiyaai - (திருக் கையில்) ஏந்தி யுள்ளவனே! கண்ணா,Kanna - கண்ணபிரானே! திருநாள்,Thirunaal - (நீ பிறந்த) திருநக்ஷத்திரமாகிய திருஓணம்,Thiru Onam - திருவோண க்ஷத்திரம் இன்று,Endru - இற்றைக்கு ஏழு நாள்,Ezh NaaL - ஏழாவது நாளாகும்; முன்,Mun - (ஆதலால்,) முதல் முதலாக பண் ஏர் மொழியாரை கூவி,Pan Aer Mozhiyaarai Koovi - பண்ணோடே கூடின அழகிய பேச்சை யுடைய மாதர்களை யழைத்து முளை அட்டி,Mulai Atti - அங்குராரோபணம் பண்ணி பல்லாண்டு கூறுவித்தேன்,Pallaandu Kooruvithen - மங்களாசாஸனமும் பண்ணுவித்தேன்; கண்ணாலம் செய்ய,Kannaalam Seyya - (திருவோணத்தினன்று) திருக் கல்யாணம் செய்வதற்கு கறியும்,Kariyum - கறி யமுதுகளையும் அரிசியும்,Arisiyum - அமுது படியையும் கலத்தது ஆக்கி வைத்தேன்,Kalathathu Aakki Vaithen - பாத்திரங்களில் சேமித்து வைத்திருக்கின்றேன்; நீ-;,Nee - நீ-; நாளைத் தொட்டு,NaaLai Thottu - நாளை முதற்கொண்டு கன்றின் பின்,Kanrin Pin - கன்றுகளின் பின்னே போகேல்,Pogael - (காட்டுக்குப்) போக வேண்டா; கோலம் செய்து,Kolam Seythu - (உன் வடிவுக்குத் தக்க) அலங்காரங்களைச் செய்து கொண்டு இங்கே இரு,Engae Eru - இந்த அகத்திலேயே இருக்கக் கடவாயாக. |
| 253 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-மூன்றாம் திருமொழி - சீலைக்குதம்பை) (கண்ணன் கன்றுகள்மேய்த்துவரக் கண்டு யசோதை மகிழ்தல்) (எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 10 | புற்றர வல்குல் அசோதை நல் லாய்ச்சி தன் புத்திரன் கோவிந்தனை கற்றினம் மேய்த்து வரக் கண்டுகந்து அவள் கற்பித்த மாற்ற மெல்லாம் செற்ற மிலாதவர் வாழ் தரு தென் புதுவை விட்டு சித்தன் சொல் கற்றிவை பாட வல்லார் கடல் வண்ணன் கழலிணை காண்பார் களே–3-3-10 | புற்று,Putru - புற்றிலே (வளர்கின்ற) அரவு,Aravu - பாம்பின் படத்தை ஒத்த அல்குல்,Alkul - அல்குலை உடையளாய் அசோதை,Asothai - யசோதை யென்னும் பெயரை யுடையளாய் நல்,Nal - (பிள்ளை திறத்தில்) நன்மையை யுடையளான ஆய்ச்சி,Aaychi - ஆய்ச்சியானவள் தன் புத்திரன்,Than Puthiran - தன் மகனான கோவிந்தனை,Govindanai - கண்ணபிரானை கன்று இனம் மேய்த்து வரக் கண்டு,Kanru Inam Maeythu Varak Kandu - கன்றுகளின் திரளை (க்காட்டிலே) மேய்த்து விட்டு மீண்டு வரக் கண்டு உகந்து,Ugandhu - மன மகிழ்ந்து அவள்,Aval - அவ் யசோதை கற்பித்த,Karpitha - (அம் மகனைக் குறித்து இன்னபடி செய் என்று)நியமித்துக் கூறிய மாற்றம் எல்லாம்,Maatram Ellaam - வார்த்தைகளை யெல்லாம்; செற்றம் இலாதவர்,Setram Ilaadhavar - அஸூயை யற்ற ஸ்ரீவைஷ்ணவர்கள் வாழ் தரு,VaaL Tharu - வாழுமிடமான தென்,Then - அழகிய புதுவை,Pudhuvai - ஸ்ரீவில்லிபுத்தூருக்கு நிர்வாஹகரான விட்டு சித்தன்,Vittu Siththan - பெரியாழ்வார் சொல்,Sol - அருளிச் செய்த இவை,Evai - இப் பாசுரங்களை கற்று,Katru - (ஆசார்ய முகமாக) ஓதி பாட வல்லார்,Paada Vallaar - (வாயாரப்) பாட வல்லவர்கள் கடல் வண்ணன்,Kadal Vannan - கடல் போன்ற நிறத்தனான எம்பெருமானுடைய கழல் இணை,Kalal Inai - திருவடி யிணைகளை காண்பார்கள்,Kaanbargal - கண்டு அநுபவிக்கப் பெறுவர்கள். |