| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 54 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-நான்காம் திருமொழி - தன் முகத்து) (சந்திரனை அழைத்தல், அம்புலிப்பருவம்) 1 | தன்முகத் துச்சுட்டி தூங்கத் தூங்கத் தவழ்ந்து போய் பொன்முகக் கிண்கிணி யார்ப்பப் புழுதி யளைகின்றான் என்மகன் கோவிந்தன் கூத்தினை இள மாமதீ நின்முகம் கண்ணுள வாகில் நீ இங்கே நோக்கிப் போ–1-4-1 | இள,Ila - இளமை தங்கிய மா மதீ,Maa madhi - அழகிய சந்திரனே! தன் முகத்து,Than mugaththu - தன் முகத்தில் (விளங்குகிற) சுட்டி,Sutti - சுட்டியானது தூங்க தூங்க,Thoonga thoonga - பல காலும் தாழ்ந்து அசையவும் பொன் முகம்,Pon mugam - அழகிய முகத்தை யுடைய கிண் கிணி,Kin kini - சதங்கைகளானவை ஆர்ப்ப,Aarppa - கிண் கிண் என்றொலிக்கவும் தவழ்ந்து போய்,Thavazhnthu poy - (முற்றத்தில்) தவழ்ந்து போய் புழுதி,Puzhuthi - தெருப்புழுதி மண்ணை அளைகின்றான்,Alaikindraan - அளையா நிற்பவனும் என் மகன்,En magan - எனக்குப் பிள்ளையுமான கோவிந்தன்,Govindhan - கண்ண பிரானுடைய கூத்தினை,Kooththinai - சேஷ்டைகளை நின் முகம்,Nin mugam - உன் முகத்தில் கண் உள ஆகில்,Kan ulla aagil - கண் உண்டேயானால் நீ இங்கே நோக்கி போ,Nee ingae nokki po - நீ இங்கே பார்த்துப் போ. |
| 55 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-நான்காம் திருமொழி - தன் முகத்து) (சந்திரனை அழைத்தல், அம்புலிப்பருவம்) 2 | என் சிறுக் குட்டன் எனக்கோரின்னமுது எம்பிரான் தன் சிறுக் கைகளால் காட்டிக் காட்டி யழைக்கின்றான் அஞ்சன வண்ணனோடு ஆடலாட உறுதியேல் மஞ்சில் மறையாதே மா மதீ மகிழ்ந்தோடி வா–1-4-2 | மா மதீ !,Maa madhi - பெருமை பொருந்தியிரா நின்ற சந்திரனே! எனக்கு,Enakku - (தாயாகிய) எனக்கு ஓர் இன் அமுது,Or in amudhu - விலக்ஷணமாய் மதுரமாயிருப்பதொரு அம்ருதம் போன்றவனாய் எம்பிரான்,Empiraan - எனக்கு உபகாரகனான என் சிறுக் குட்டன்,En siruk kuttan - என் மகனான கண்ணன் தன் சிறு கைகளால்,Than siru kaigalal - தன்னுடைய சிறிய கைகளால் காட்டிக் காட்டி,Kaattik kaatti - பலகாலும் (உன்னையே) காட்டி அழைக்கின்றான்,Azaikkindran - அழையா நின்றான்; அஞ்சனம் வண்ணனோடு,Anjanam vannanodu - மை போன்ற வடிவை யுடைய இக் கண்ண பிரானோடு ஆடல் ஆட,Aadal aada - விளையாட உறுதியேல்,Urudhiyael - கருதினாயாகில் மஞ்சில்,Manjil - மேகத்திலே மறையாது,Maraiyaadhu - சொருகி மறையாமல் மகிழ்ந்து ஓடி வா,Magizhndhu odi va - உகந்து ஓடி வா. |
| 56 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-நான்காம் திருமொழி - தன் முகத்து) (சந்திரனை அழைத்தல், அம்புலிப்பருவம்) 3 | சுற்றும் ஒளி வட்டம் சூழ்ந்து சோதி பரந்தெங்கும் எத்தனை செய்யிலும் என் மகன் முகம் நேரொவ்வாய் வித்தகன் வேங்கட வாணன் உன்னை விளிக்கின்ற கைத்தலம் நோவாமே அம்பு லீகடி தோடிவா–1-4-3 | அம்புலி,Ambuli - சந்த்ரனே! (உன்னுடைய) ஒளி,Oli - ஒளி பொருந்திய வட்டம்,Vattam - மண்டலமானது (எப்போதும்) சுற்றும் சூழ்ந்து,Sutrum soozhndhu - நாற்புறமும் சுழன்று எங்கும்,Engum - எல்லாத் திசைகளிலும் சோதி பரந்து,Sothi parandhu - ஒளி நிரம்பி யிருக்குமாறு எத்தனை செய்யிலும்,Eththanai seyyilum - இப்படி உன்னை எவ்வளவு அழகு செய்து கொண்டாலும் என் மகன்,En magan - என் மகனான கண்ண பிரானுடைய முகம்,Mugam - திருமுக மண்டலத்துக்கு நேர் ஒவ்வாய்,Ner ovvaai - பூர்ணமாக ஒப்பாக மாட்டாய்; வித்தகன்,Viththagan - ஆச்சர்யப் படத் தக்கவனாய் வேங்கடம்,Vengadam - திருவேங்கடமலையிலே வாணன்,Vaanan - நின்றாக வாழுமவனான இக்கண்ணபிரான் உன்னை விளிக்கின்ற,Unnai vilikkindra - உன்னை அழைக்கிற கை தலம்,Kai thalam - திருக் கைத் தலத்தில் நோவாமே,Novaame - நோவு மிகாத படி கடிது ஓடி வா,Kadidhu odi va - சீக்கிரமாய் ஓடிவா. |
| 57 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-நான்காம் திருமொழி - தன் முகத்து) (சந்திரனை அழைத்தல், அம்புலிப்பருவம்) 4 | சக்கரக் கையன் தடங்கண்ணால் மலர விழித்து ஒக்கலை மேலிருந்து உன்னையே சுட்டிக் காட்டும் காண் தக்க தறிதியேல் சந்திரா சலம் செய்யாதே மக்கட் பெறாத மலடனல்லையேல் வா கண்டாய்–1-4-4 | சந்திரா,Chandira - சந்திரனே! சக்கரம்,Chakaram - திருவாழி ஆழ்வானை கையன்,Kaiyan - திருக்கையிலணிந்த கண்ணபிரான் ஒக்கலை மேல்,Okkalai mel - (என்) இடுப்பின்மேல் இருந்து,Irundhu - இருந்துகொண்டு தட கண்ணால்,Thada kannaal - விசாலமான கண்களாலே மலர் விழித்து,Malar vizhiththu - மலரப் பார்த்து உன்னையே,Unnaiye - உன்னையே சுட்டிகாட்டும்,Suttikattum - குக்ஷ்த்துக் காட்டுகின்றான்; தக்கது,Thakkadhu - (உனக்குத்) தகுதியானதை அறிதியேல்,Aridhiyel - அறிவாயாகில் (அன்றியும்) மக்கள் பெறாத,Makkal peraadha - பிள்ளை பெறாத மலடன் அல்லையேல்,Maladan allaiyel - மலடன் அல்லையாகில் சலம் செய்யாதே,Salam seyyadhe - கபடம் பண்ணாமல் வா கண்டாய்,Vaa kandai - வந்து நில்கிடாய். |
| 58 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-நான்காம் திருமொழி - தன் முகத்து) (சந்திரனை அழைத்தல், அம்புலிப்பருவம்) 5 | அழகிய வாயில் அமுதவூறல் தெளிவுறா மழலை முற்றாத இளஞ்சொல்லால் உன்னைக் கூவுகின்றான் குழகன் சிரீதரன் கூவக் கூவநீ போதியேல் புழையில வாகாதே நின் செவி புகர் மாமதீ!–1-4-5 | புகர்,Pugar - தேஜஸ்வியாய் மா,Maa - பெருமை பொருந்தியிரா நின்ற மதீ,Madhi - சந்திரனே! அழகிய வாயில்,Azhagiya vaayil - அழகிய திருப் பவளத்திலே ஊறல்,Uural - ஊறுகின்ற ஜலமாகிய அமுதம்,Amudham - அம்ருதத்தோடே கூடி தெளிவுறா,Thelivuraa - உருத் தெரியாததாய் மழலை முற்றாத,Mazhalai mutraadha - மழலைத் தனத்துக்குள்ள முற்றுதலுமில்லா திருக்கிற இளஞ் சொல்லால்,Ilanj sollaal - இளம்பேச்சாலே உன்னை கூவுகின்றான்;,Unnai koovugindran - உன்னை கூவுகின்றான்; குழகன்,Kuzhagan - எல்லோரோடும் கலந்திருப்பவனாய் சிரீதரன்,Sreedharan - ச்ரிய: பதியான இக் கண்ண பிரான் கூவக் கூவ,Koova koova - (இப்படி) பலகாலுமழையா நிற்கச் செய்தோம் நீ போதியேல்,Nee podhiyel - நீ போவாயேயானால் நின் செவி,Nin sevi - உன் காதுளானவை புழை இல,Puzhai ila - துளை யில்லாதவையாக ஆகாதே,Aagaadhe - ஆகாதோ?(ஆகவே ஆகும்) |
| 59 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-நான்காம் திருமொழி - தன் முகத்து) (சந்திரனை அழைத்தல், அம்புலிப்பருவம்) 6 | தண்டொடு சக்கரம் சார்ங்கமேந்தும் தடக்கையன் கண் துயில் கொள்ளக் கருதிக் கொட்டாவி கொள்கின்றான் உண்ட முலைப் பாலறா கண்டாய் உறங்கா விடில் விண் தனில் மன்னிய மா மதீ விரைந்தோடி வா–1-4-6 | விண் தனில்,Vin thanil - ஆகாசத்திலே மன்னிய,Manniya - பொருந்திய மா மதீ!,Maa madhi - பெருமை தங்கிய சந்திரனே! தண்டொடு,Thandodu - ‘கௌமோதகி’ என்னும் கதையையும் சக்கரம்,Chakaram - திருவாழி யாழ்வானையும் சார்ங்கம்,Saarngam - ஸ்ரீசார்ங்கமென்னும் வில்லையும் ஏந்தும்,Eendum - ஏந்தியிரா நின்றுள்ள தட,Thada - விசாலமான கையன்,kaiyan - கைகளை யுடைய இக் கண்ண பிரான் கண் துயில் கொள்ள கருதி,Kann thuyil kollak karudhi - திருக்கண் வளர்ந்தருள நினைத்து கொட்டாவி கொள்கின்றான்,Kottaavi kolkindraan - கொட்டாவி விடாநின்றான். உறங்காவிடில்,Urangavidil - (இப்போது இவன்) உறங்காதொழிந்தால் உண்ட,Unda - அமுது செய்யப் பட்டிருக்கிற முலைப்பால்,Mulaippaal - ஸ்தந்யமானது அறா,Araa - ஜரிக்கமாட்டாது; ஆகையால் விரைந்து ஓடிவா,Virainthu odiva - விரைந்து ஓடிவா |
| 60 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-நான்காம் திருமொழி - தன் முகத்து) (சந்திரனை அழைத்தல், அம்புலிப்பருவம்) 7 | பாலக னென்று பரிபவம் செய்யேல் பண்டொரு நாள் ஆலி னிலை வளர்ந்த சிறுக்கனவன் இவன் மேலெழப் பாய்ந்து பிடித்துக் கொள்ளும் வெகுளுமேல் மாலை மதியாதே மா மதீ மகிழ்ந்தோடி வா–1-4-7 | மா மதீ!,Maa madhi - பெருமை பொருந்தியிரா நின்ற சந்திரனே! பாலகன் என்று,Baalagan endru - ‘இவனொரு சிறு பயலன்றோ’ என்று பரிபவம் செய்யேல்,Paripavam seiyael - திரஸ்கரியாதே; பண்டு ஒருநாள்,Pandu orunaal - முன்பொரு காலத்திலே ஆலின் இலை,Aalin ilai - ஆலந்தளிரிலே வளர்ந்த,Valarntha - கண் வளர்ந்தவனாகப் புராணங்களிலே சொல்லப் படுகிற சிறுக்கனவன்,Sirukkanavan - அந்த சிறுப்பிள்ளையானவன் இவன்,Ivan - இவனாகிறான் காண்; வெகுளும் ஏல்,Vegulum ael - (இவன்) சீறினானாகில் மேல் எழப் பாய்ந்து,Mael ezha painthu - (உன் மேல்) ஒரு பாயலாகப் பாய்ந்து பிடித்துக் கொள்ளும்,Pidiththu kollum - (உன்னைப்) பிடித்துக் கொள்வான்; மாலை,Maalai - இம் மஹா புருஷனை மதியாதே,Madhiyadhae - அவமதியாமல் மகிழ்ந்து ஓடிவா,Magizhndhu odiva - மகிழ்ந்து ஓடிவா |
| 61 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-நான்காம் திருமொழி - தன் முகத்து) (சந்திரனை அழைத்தல், அம்புலிப்பருவம்) 8 | சிறியனென்று என்னிளஞ் சிங்கத்தை இகழேல் கண்டாய் சிறுமையின் வார்த்தையை மாவலி யிடைச் சென்று கேள் சிறுமைப் பிழை கொள்ளில் நீயும் உன் தேவைக்குரியை காண் நிறை மதீ நெடுமால் விரைந்து உன்னைக் கூவுகின்றான்–1-4-8 | நிறை மதி,Nirai madhi - பூர்ண சந்திரனே! என் இள சிங்கத்தை,En ila singaththai - எனக்குச் சிங்கக்குரு போன்ற கண்ணபிரானை சிறியன் என்று,Siriyan endru - (உபேக்ஷிக்கைக்கு உறுப்பான) சிறுமையை யுடையவனாக நினைத்து இகழேல்,Izhalael - அவமதியாதே; சிறுமையில்,Sirumaiyil - (இவனுடைய) பால்யத்தில் நிடந்த வார்த்தையை,Vaarthaiyai - செய்கையை மாவலி இடை சென்று கேள்,Maavali idai sendru kel - மஹாபலியிடம் போய்க் கேட்டுக்கொள்; சிறுமை பிழை கொள்ளில்,Sirumai pizhai kollil - (இப்படி யுள்ளவன் விஷயத்தில்) சிறுமை நினைத்தலிது மஹாபாரதம் என்று நினைத்தாயாகில் நீயும்,Neeyum - (அப்போது) நீயும்; உன் தேவைக்கு,Un thevaikku - (அஜன் விஷயத்தில்) நீ பண்ணக் கூடிய அடிமைக்கு உரியை,Uriyai - தகுந்தவனாவாய் ; (அதெல்லாமப்படி நிற்க;) நெடு மால்,Nedu maal - ஸர்வ ஸ்மாத் பரனான இவன் விரைந்து உன்னை கூவுகின்றான்,Virainthu unnai koovuginraan - (‘மகிழ்ந்து ஓடி வா’ என்று வருவிக்க. ) |
| 62 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-நான்காம் திருமொழி - தன் முகத்து) (சந்திரனை அழைத்தல், அம்புலிப்பருவம்) 9 | தாழியில் வெண்ணெய் தடங்கையார விழுங்கிய பேழை வயிற்றெம் பிரான் கண்டாய் உன்னைக் கூவுகின்றான் ஆழி கொண்டு உன்னை யெறியும் ஐயுற வில்லை காண் வாழ வுறுதியேல் மாமதீ மகிழ்ந்தோடிவா–1-4-9 | மா மதீ!;,Maa madhi - பெருமை பொருந்தியிரா நின்ற சந்திரனே! தாழியில்,Thaazhil - தாழியிலே (சேமித்திருக்கிற) வெண்ணெய்,Vennai - வெண்ணெயை தட,Thad - பெரிதான கைஆர,Kaiaara - கை நிறைய (அள்ளி) விழுங்கிய,Vizhungiya - அமுது செய்த பேழை வயிறு,Paezhai vayiru - பெரு வயிற்றை யுடையவனான எம்பிரான்,Empiraan - என் கண்ணபிரான் உன்னை கூவுகின்றான்;,Unnai koovuginraan - (இப்படி அழைக்கச் செய்தேயும் நீ வாராதிருந்தால் உன் தலையை அறுக்கைக்காக) ஆழி கொண்டு,Aazhi kondu - திருவாழியாலே உன்னை எறியும்,Unnai eriyum - உன்னை வெட்டி விடுவேன்; ஐயுறவு இல்லை,Aiyuravu illai - ஸம்சயமேயில்லை; வாழ உறுதியேல்,Vaazha urudiyael - (இதில் நின்றுந்தப்பி) வாழக்கருதினாயாகில் மகிழ்ந்து ஓடிவா,Magizhndhu odivaa - மகிழ்ந்து ஓடிவா |
| 63 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-நான்காம் திருமொழி - தன் முகத்து) (சந்திரனை அழைத்தல், அம்புலிப்பருவம்) 10 | மைத்தடங் கண்ணி யசோதை தன் மகனுக்கு இவை ஒத்தன சொல்லி உரைத்த மாற்றம் ஒளி புத்தூர் வித்தகன் விட்டுசித்தன் விரித்த தமிழிவை எத்தனையும் சொல்ல வல்ல வர்க்கு இட ரில்லையே–1-4-10 | மை,Mai - மையணிந்த தட,Thad - விசாலமாயிராநின்ற கண்ணி,Kanni - கண்களை யுடையளான அசோதை,Asothai - யசோதையானளவள் தன் மகனுக்கு,Than maganukku - தன் மகனான கண்ணனுக்கு ஒத்தன சொல்லி,Oththana solli - நினைவுக்கும் சொலவுக்கும் சேர்ந்திருப்பவற்றைச் சொல்லி உரைத்த,Uraitha - (சந்திரனை நோக்கிச்)சொன்ன இவை மாற்றம்,Ivai maatram - இப் பாசுரத்தை ஒளி,Oli - ஒளி பொருந்திய புத்தூர்,Puththoor - ஸ்ரீவில்லிபுத்தூரில் உதித்தவராய் வித்தகன்,Viththagan - (மங்களாசாஸநி) ஸமர்த்தரான விட்டு சித்தன்,Vittu siththan - பெரியாழ்வாராலே விரித்த,Viriththa - விரித்து அருளிச் செய்யப்பட்ட தமிழ்,Tamil - த்ராவிட பாஷாரூபமான இவை,Ivai - இப் பாசுரங்கள் பத்தையும் எத்தனையும்,Eththanaiyum - ஏதேனுமொருபடியாக சொல்ல வல்லவர்க்கு,Solla vallavarkku - ஓத வல்லவர்களுக்கு இடர் இல்லை,Idar illai - துன்பமொன்றுமில்லை. |