| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3667 | திருவாய்மொழி || (10-1–தாளதாமரை) (திருமோகூர்ப் பெருமானைச் சரணம் அடைந்து தாம் பரமபதம் அடையக் கருதியதை ஆழ்வார் அருளிச்செய்தல்) (கொடிய தாபத்திலே அடிபட்டவன் குளிர்ந்த தடாகத்தையோ காளமேக வர்ஷத்தையோ எதிரிபாரிப்பது ஸஹஜந்தானே; அதுபோல ஆழ்வாரும் தம்முடைய ஸாம்ஸாரிக தாபங்களெல்லாம் தொலையப்பெறும் ஸமயமாகையாலே இப்போது காளமேகப் பெருமாளைப் பெற்று ஸூகிக்கிறபடியைத் தெரிவித்தருளுகிறார். இப்பெருமாளையே மேலே எட்டாம் பாட்டில் தயரதன் பெற்ற மரதக மணித்தட மென்று திவ்ய தடாகமாகவும் அநுஸந்திக்கையாலே தாபம் அகற்றும் பெருமாளேயிவர்; இவரையொழிய மற்றொன்று கதியிலம்…..வேறுதுணையுடையோமல்லோ மென்று அப்பெருமாளைப் பற்றுகிறார்.) 1 | தாள தாமரைத் தட மணி வயல் திரு மோகூர் நாளும் மேவி நன்கமர்ந்து நின்று அசுரரைத் தகர்க்கும் தோளும் நான்குடைச் சுரி குழல் கமலக் கண் கனி வாய் காளமேகத்தை யன்றி மற்று ஓன்று இலம் கதியே–10-1-1 | தாள தாமைரை தடம்அணி,Thaala thaamarai tadam ani - தாளுரத்தையுடைய தாமரைகள் நிறைந்த தடாகங்களை அலங்காரமாகக் கொண்ட வயல் திருமோகூர் நாளும் மேவி,Vayal thirumogoor naalum mevi - வயல்களாலே சூழப்பட்ட திருமோகூரிப்பதியை நித்திய வாஸஸ்தலமாகக் கொண்டு நன்கு அமர்ந்து நின்று,Nangu amarnthu ninru - மிகவும் உகப்போட அங்குப் பொருந்தி நிற்குமவனாய் கமலம் கண்,Kamalam kan - செந்தாமரை போன்ற திருக்கண்களை யுடையனாய் அசுரரை தகர்க்கும தோளும் நான்கு உடை,Asurarai thakarkkum tholum naangu udai - அசுரர்களை புடைக்க வல்ல நான்கு திருத்தோள்களையு முடையனாய் கனி வாய்,Kani vaai - கனிந்த திருப்பவளத்தை யுடையனாய் ஸேவை ஸாதிக்கின்ற சுரி குழல்,Suri kuzhal - சுருண்ட திருக்குழல் கற்றையை யுடையனாய் காளமேகத்தை அன்றி,Kaalamegaththai anri - காளமேகப் பெருமாளைத் தவிர்த்து மற்று ஒன்று கதி இலம்,Matru ondru gathi ilam - வேறொரு துணையுடையோ மல்லோம் |
| 3668 | திருவாய்மொழி || (10-1–தாளதாமரை) (திருமோகூர்ப் பெருமானைச் சரணம் அடைந்து தாம் பரமபதம் அடையக் கருதியதை ஆழ்வார் அருளிச்செய்தல்) (திருமோகூரெம்பெருமானுடைய திருவடிகளல்லது வேறுபுகலுடையோமல்லோம் எந்நாளும் என்கிறாரிப்பாட்டில்.) 2 | இலம் கதி மற்று ஓன்று எம்மைக்கும் ஈன் தண் துழாயின் அலம் கலம் கண்ணி ஆயிரம் பேருடை யம்மான் நலம் கொள் நான்மறை வாணர்கள் வாழ் திரு மோகூர் நலம் கழல் அவனடி நிழல் தடம் அன்றி யாமே–10-1-2 | ஈன் தண் துழாயிள் அலங்கல் அம் கண்ணி,Een than thuzhaayil alangal am kanni - பரம யோக்யமான துழாய் மாலையை யுடையனாய் ஆயிரம் பேர் உடையம்மாள்,Aayiram per udaiyammaal - ஆயிரந் திருநாமங்களையுடைய ஸ்வாமியாய் அடி நிழல் தடம் அன்றி,Adi nizhal tadam anri - திருவடி நிழலாகிற பொய்கை தவிர நலம் கொள் நால்மறை வாணர்கள் வாழ் திருமோகூர் நலம் கழலவன்,Nalam kol naalmurai vaanargal vaazh thirumogoor nalam kazhalavan - விலக்ஷணர்களான வைதிகர்கள் வாழுமிடமான திருமோகூர்லே திருவடிகள் பொருந்தியிருக்கப்பெற்றவனான எம்பெருமானுடைய மற்று ஒன்று கதியை,Matru ondru kathiyai - வேறொரு கதியை யாம் எம்மைக்கும் இலம்,Yaam emmaikkum ilam - யாம் ஒரு பிறப்யிலும் உடையோ மல்லோம். |
| 3669 | திருவாய்மொழி || (10-1–தாளதாமரை) (திருமோகூர்ப் பெருமானைச் சரணம் அடைந்து தாம் பரமபதம் அடையக் கருதியதை ஆழ்வார் அருளிச்செய்தல்) (நம்முடைய எல்லாத் துயரங்களுங் கெடுமா திருமோகூரைச் சென்று கிட்டுவோ மென்கிறார்.) 3 | இலம் கதி மற்று ஓன்று எம்மைக்கும் ஈன் தண் துழாயின் அலம் கலம் கண்ணி ஆயிரம் பேருடை யம்மான் நலம் கொள் நான்மறை வாணர்கள் வாழ் திரு மோகூர் நலம் கழல் அவனடி நிழல் தடம் அன்றி யாமே–10-1-2 | யாம்,Yaam - அடியோங்கள் அன்றி ஒருபுகலிடம் இலம் என்று என்று அலற்றி,Andri orupugalidam ilam enru enru alatri - உன்னை யொழிய வேறொரு புகலிடமுடையோ மல்லோமென்று இதையே பலகால் சொல்லியலற்றி நான்முகன் அரனோடு தேவர்கள் நின்று நாட,Naanmugan aranodu thevargal ninru naada - ப்ரஹ்மருத்ரர்களோடு தேவ ஜாதிகள் நிலை நின்று ஆச்ரயிச்சு வென்று,Vendru - விரோதிகளைத் தொலைத்து இம் மூவுலகு அளித்து உழல்வான்,Em moovulagu alitthu uzhalvaan - இம் மூவுலகங்களையும் ரக்ஷித்து இதுவே யாத்திரையாயிருககும் பெருமானுடைய நாம் நமது இடர் கெட,Naam namadu idar keda - நாம் நம்முடைய இடர் தீரும்படி திருமோகூர்,Thirumogoor - திருமோகூரிப்பதியை இனி நன்று நணுகும்,Eni nandru nanugum - இப்போது நன்றாகக கிட்டக் கடவோம். |
| 3670 | திருவாய்மொழி || (10-1–தாளதாமரை) (திருமோகூர்ப் பெருமானைச் சரணம் அடைந்து தாம் பரமபதம் அடையக் கருதியதை ஆழ்வார் அருளிச்செய்தல்) (தேவரும் முனிவரும் ’இடர்கெட எம்மைப் போந்தளியாய்’ என்று பலகாலுஞ்சொல்லி யேத்தி தொடருகின்றார்களாம்.) 4 | இடர் கெட வெம்மைப் போந்து அளியாய் என்று என்று ஏத்தி சுடர் கொள் சோதியைத் தேவரும் முனிவரும் தொடர படர் கொள் பாம்பணைப் பள்ளி கொள்வான் திரு மோகூர் இடர் கெட வடி பரவுதும் தொண்டீர் வம்மினே–10-1-4 | இடர் கெட போந்து எம்மை அளியாய் என்று,Edar keda pondhu emmai aliyaai enru - எம்மிடர் தீரும்படியாக எழுந்தருளி எம்மை ரக்ஷித்தருள வேணுமென்று பலகாலுஞ் சொல்லி படர் கொள் பாம்பு அணை,Padar kol paambu anai - விர்வான சேஷ சயனத்திலே பள்ளி கொள்வான்,Palli kolvaan - பள்ளி கொள்பவனான பெருமானுடைய சுடர் கொள் சோதியை,Sudar kol sothiyai - தேஜ புஞ்ஜயமான திருமேனியை ஏத்தி,Aethi - தோத்திரம் செய்து திருமோகூர்,Thirumogoor - திருமோகூரிப்பதியிலே இடர் அடி பரவுதும்,Edar adi paravudhum - நம்மிடர் கெடுமாறு அவன் திருவடிகளைத் துதிப்போம்; தேவரும் முனிவரும் தொடர,Thevarum munivarm tudara - தேவர்களும் முனிவர்களும் அநுவர்த்தித்து ஆச்ரயிக்கைக்காக . தொண்டீர் வம்மின்,Thondeer vamin - பகதர்களே! நீங்களும் வாருங்கள் |
| 3671 | திருவாய்மொழி || (10-1–தாளதாமரை) (திருமோகூர்ப் பெருமானைச் சரணம் அடைந்து தாம் பரமபதம் அடையக் கருதியதை ஆழ்வார் அருளிச்செய்தல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –அவன் எழுந்து அருளி நின்று அருளின திரு மோகூரை ஆஸ்ரயித்து அனுபவிக்க வாருங்கோள் -என்கிறார்.) 5 | தொண்டீர் வம்மின் நம் சுடர் ஒளி ஒரு தனி முதல்வன் அண்ட மூ வுலகளந்தவன் அணி திரு மோகூர் எண் திசையும் ஈன் கரும்போடு பெரும் செந்நெல் விளைய கொண்ட கோயிலை வலம் செய்து இங்கு ஆடுதும் கூத்தே–10-1-5 | நம் சுடர் ஒளி,Nam sudar oli - நாம் அநபவித்தற்குரிய தேஜோமய திவ்யமங்கள விகரஹத்தையுடையனாய் ஈன் கரும்பொடு,Een karumpodu - இனிய கரும்போடு கூட பெரு செந்நெல் விளைய,Peru sennel vilaiya - பெரிய செந்நெற் பயிர்கள் விளையும்படியாக ஒரு தனி முதல்வன்,Oru thani mudhalvan - உலகுககெல்லாம் அத்விதீய காரண பூதனாய் கொண்ட,Konda - தான் பர்கரஹித்தருளின கோயிலை,Koyilai - ஸன்னிதியை வலம் செய்து,Valam seithu - பிரதக்ஷிணம் பண்ணி அண்டம் உலகு அளந்தவன்,Andam ulagu alandhavan - அண்டங்களையுடைய மூவுலகங்களையும் அளந்து கொண்டவனான எம்பெருமான் இங்கு கூத்து ஆடுதும்,Ingu koothu aadudhum - இங்கே கூத்தாடுவோம்; அணி திருமோகூர்,Ani thirumogoor - அழகிய திருமோகூர்லே எண் திசையும்,En thisaiyum - எட்டுத் திசைகளிலும் தொண்டீர் வம்மின்,Thondeer vamin - தொண்டர்களே! நீங்களும் வாருங்கள். |
| 3672 | திருவாய்மொழி || (10-1–தாளதாமரை) (திருமோகூர்ப் பெருமானைச் சரணம் அடைந்து தாம் பரமபதம் அடையக் கருதியதை ஆழ்வார் அருளிச்செய்தல்) (திரு மோகூரிலே நின்று அருளின -பரம ஆப்தனானவனுடைய திருவடிகள் அல்லது வேறு நமக்கு அரண் இல்லை என்கிறார்.) 6 | கூத்தன் கோவலன் குதற்று வல்லசுரர்கள் கூற்றம் ஏத்தும் நம் கட்கும் அமரர்க்கும் முனிவர்க்கும் இன்பன் வாய்த்த தண் பணை வளவயல் சூழ் திரு மோகூர் ஆத்தன் தாமரை யடி யன்றி மற்று இலம் அரணே–10-1-6 | கூத்தன்,Koothan - அழகிய நடையையுடையனாய் வாய்த்த தண்பணை வளம் வயல் சூழ் திருமோகூர் ஆத்தன்,Vaaytha thanpanai valam vayal soozh thirumogoor aathan - நெருங்கிக் குளிர்ந்த நீர் நிலங்களாலும் செழித்த வயல்களாலும் சூழப்பட்ட திருமோகூரில் எழுந்தருளியருப்பவனான ஆப்தனுடைய கோவலன்,Kovalann - பசுக்களின் பின்னே சென்று அவற்றை ரக்ஷிக்குமவனாய் குதற்று வல் அசுரர்கள் கூற்றம்,Kuthatru val asurargal kootram - பீடையைப் பண்ணும் கொடிய அசுரர்களுக்கு மருத்யுவாய் தாமரை அடி அன்றி,Thamarai adi anri - பாதாரவிந்தங்களைத் தவிர்த்து ஏத்தும் நங்கட்கும் அமரர்க்கும் முனிவாக்கும் இன்பன்,Eththum nangatkumm amararkkum munivakkum inban - துதி செய்கின்ற நமக்கும் தேவர்களுக்கும் இருடிகளுக்கும் ஆனந்தகரனாய் மறறு அரண் இலம்,Marru aran ilam - மற்றொரு ரக்ஷையுடையோ மல்லோம். |
| 3673 | திருவாய்மொழி || (10-1–தாளதாமரை) (திருமோகூர்ப் பெருமானைச் சரணம் அடைந்து தாம் பரமபதம் அடையக் கருதியதை ஆழ்வார் அருளிச்செய்தல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –சர்வ காரணம் ஆகையால் நம்முடைய ரக்ஷணம் தனக்கு அவர்ஜ்ஜ நீயமாம் படியான-உத்பாதகனானவனுடைய திரு மோகூரை ஆஸ்ரயிக்கவே-நம்முடைய ஸமஸ்த துக்கங்களும் அப்போதே கெடும் -என்கிறார்.) 7 | மற்று இலம் அரண் வான் பெரும் பாழ் தனி முதலா சுற்றும் நீர் படைத்து அதன் வழித் தொல் முனி முதலா முற்றும் தேவரோடு உலகு செய்வான் திரு மோகூர் சுற்றி நாம் வலம் செய்ய நம் துயர் கெடும் கடிதே–10-1-7 | வான் பெரு பாழ் தனி முதலா,Vaan peru paazh thani mudhalaa - வலிதாய் அபர்ச் சிந்தமாய் போக மோஷங்களை விளைப்பதாய் அத்விதீயமான மூலப்ரக்ருத தொடக்கமாக அதன் வழி,Athan vazhi - அந்த வழியாலே தொல் முனி முதலா,Thol muni mudhalaa - பழைய முனிவனான ப்ரஜாபதி முதலாக சுற்று நீர் படைத்து,Sutru neer padaiththu - ஆவரண ஜலத்தை ஸ்ருஷ்டித்து முற்றும் தேவரோடு உலகு செய்வான்,Muttrum thevarodu ulagu seivaan - எல்லாத் தேவ ஜாதியோடுங் கூட எல்லா உலகங்களையும் உண்டாக்குமவன் எழுந்தருளியிருக்கு இடமான நாம சுற்றி வலம் செய்ய,Naam sutri valam seiyya - நாம் சுற்றி ப்ரதக்ஷிணம் பண்ண நம் துயர் கடிது கெடும்,Nam thuyar kadithu kedum - நம் துக்கஙகள் விரைவில் தொலைந்து போம் திருமோகூர்,Thirumogoor - திருமோகூரிப்பதியை மற்று அரண் இலம்,Matru aran ilam - (ஆன பின்பு இத்திருப்பதி தவிர) மற்றொரு ரக்ஷகமுடையோ மல்லோம். |
| 3674 | திருவாய்மொழி || (10-1–தாளதாமரை) (திருமோகூர்ப் பெருமானைச் சரணம் அடைந்து தாம் பரமபதம் அடையக் கருதியதை ஆழ்வார் அருளிச்செய்தல்) (வெளியே தாளதாமரைத் தடாகமுடைய திருமோகூர்லே ஸன்னிதிககுள்ளேயும் ஒரு தடாகம் திகழ்கின்றது; அந்தத் தடாகத்தை அடியவர்களே! வந்து தொழுமின் என்றழைக்கிறார்.) 8 | துயர் கெடும் கடிது அடைந்து வந்து அடியவர் தொழுமின் உயர் கொள் சோலை ஒண் தட மணி யொளி திரு மோகூர் பெயர்கள் ஆயிரம் உடைய வல்லரக்கர் புக்கு அழுந்த தயரதன் பெற்ற மரகத மணித் தடத்தினையே–10-1-8 | உயர் கொள் சோலை,Uyar kol solai - உன்னதமான சோலைகளையும் தயதரதன் பெற்ற மரகதம் மணி தடத்தினை,Dayadharan petra maragatham mani tadathinai - தசரத சக்ரவர்த்தி பெற்ற மரகத மணித் தடாகம் போன்றவனான எம்பெருமானை, ஒண் தடம் அணி,On tadam ani - அழகிய தடாகங்களையும் ஒளி திருமோகூர்,Oli thirumogoor - அலங்காரமாக உடைத்தான அழகிய திருமோகூர்லே, அடியவர்,Adiyavar - அடியீர்கள்! ஆயிரம் பெயர்கள் உடைய,Ayiram peyargal udaiya - ஸஹஸ்ர நாமப்ரதிபாத்யனாய் அடைந்து வந்து தொழுமின் வந்து கிட்டித் தொழுங்கோள்; வல் அரக்கர்,Val arakkar - புக்கு அழுந்த கொடிய ராக்ஷசகர்கள் புகுந்து மடியும்படியாக துயர் கடிது கெடும்,Thuyar kadidu kedum - கிலேசமெல்லாம் விரைவில் தொலைந்து போம் (அப்படித் தொழுதால்). |
| 3675 | திருவாய்மொழி || (10-1–தாளதாமரை) (திருமோகூர்ப் பெருமானைச் சரணம் அடைந்து தாம் பரமபதம் அடையக் கருதியதை ஆழ்வார் அருளிச்செய்தல்) (நமக்கு அரணான திருமோகூரை நாம் கிட்டப் பெற்றோமென்று தம்முடைய லாபத்தைப் பேசி மகிழ்கிறார்.) 9 | மணித் தடத்து அடி மலர்க் கண்கள் பவளச் செவ்வாய் அணிக் கொள் நால் தடம் தோள் தெய்வம் அசுரரை என்றும் துணிக்கும் வல்லரட்டன் உறை பொழில் திரு மோகூர் நணித்து நம்முடை நல்லரண் நாம் அடைந்தனமே–10-1-9 | மணி தடத்து அடி,Mani tadathu adi - அழகிய தடாகம் போலே குளிர்ந்த திருவடிகளையும் அசுரரை என்றும் துணிக்கும் வல் அரட்டன்,Asurarai endrum thunikum val arattan - அசுரர்களை எப்போதும் நிரஸிக்கின்ற பெருமிடுக்கனுமான எம் பெருமான மலர் கண்கள்,Malar kankal - தாமரைப் பூப் போன்ற திருக்கண்களையும் உறை,Urai - நித்தியவாம் பண்ணுமிடமான பவளம் செவ்வாய்,Pavalam sevvai - பவளம் போன்ற சிவந்த அதரத்தையும் பொழில் திருமோகூர் நம்முடைய நர் அரண்,Pozhil thirumogoor nammudaiya nar aran - சோலைவளம் மிக்க திருமோகூர்பதியாகிற நமக்கு நல்ல ரக்ஷகமான திவ்ய தேசம் அருகேயுள்ளது அணிகொள் நால் தடம் தோள் தெய்வம்,Anikol nal tadam thol dheivam - அழகிய நான்கு திருத்தோள்களையும் உடைய தெய்வமாயிருப்பவனும் நணித்து நாம் அடைந்தனம்,Nanithu naam adainthanam - இதனை நாம் பஜிக்கப் பெற்றோம். |
| 3676 | திருவாய்மொழி || (10-1–தாளதாமரை) (திருமோகூர்ப் பெருமானைச் சரணம் அடைந்து தாம் பரமபதம் அடையக் கருதியதை ஆழ்வார் அருளிச்செய்தல்) (அடியார்களின் விஷயத்தில் அபீஷ்டவிக்ரஹ பர்க்ரஹம் பண்ணி ரக்ஷித்தருளுமெம்பெருமான் வர்த்திக்கிற திருமோகூர்த் திருப்பதியின் திருநாமத்தைச் சொல்லி ஏத்துங்கோ என்று, தம்மோடு அந்வயமுடையார்க்கு உரைத்தருளுகிறார்.) 10 | நாமடைந்த நல்லரண் நமக்கென்று நல்லமரர் தீமை செய்யும் வல்லசுரரை அஞ்சிச் சென்றடைந்தால் காம ரூபம் கொண்டு எழுந்து அளிப்பான் திருமோகூர் நாமமே நவின்று எண்ணுமின் ஏத்துமின் நமர்காள்–10-1-10 | நமக்கு நாம் அடைந்த நல் அரன் எனறு ஸாதுக்களான தேவர்கள்,Namakku naam adaintha nal aran enru sadukal ana dhevargal - நல் அமரர் நமக்குப் புகலாக நாம் அடைந்த நல்ல ரக்ஷகமான தலம் இதுவென்று எழுந்து அளிப்பான்,Ezhundhu alippaan - கிளர்ந்து ரக்ஷிக்கும் பெருமான் எழுந்தருளியிருக்குமிடமான தீமை செய்யும் வல் அசுரரை அஞ்சி சென்று அடைந்தால்,Theemai seyyum val asurari anji sendru adainthaal - தங்களுக்குப் பொல்லாங்கு அஞ்சி வந்தது பணிந்தால் காமரூபம் கொண்டு,Kamarupam kondu - திருவுள்ளமான வடிவைக் கொண்டு திருமோகூர் நாமமே,Thirumogoor naamame - திருமோகூரிப்பதியின் பெயரையே நமர்காள நவின்று எண்ணுமின் ஏத்துமின் .,Namarkal navindru ennumin aeththumin - நம்முடையவர்களே! பயின்று நினையுங்கோள், வாய் விட்டுமேந்துங்கள் |
| 3677 | திருவாய்மொழி || (10-1–தாளதாமரை) (திருமோகூர்ப் பெருமானைச் சரணம் அடைந்து தாம் பரமபதம் அடையக் கருதியதை ஆழ்வார் அருளிச்செய்தல்) (இத் திருவாய்மொழியைக் கற்கவல்லார்க்கு சரீராவஸானத்தில் வழித்துணையில்லையே என்று க்லேசப்பட வேண்டாதபடி காளமேகம் வழித்துணையாமென்று பலன் சொல்லித் தலைக்கட்டுகிறார்.) 11 | ஏத்துமின் நமர்காள் என்று தான் குடமாடு கூத்தனை குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள் வாய்த்த வாயிரத்துள் இவை வண் திரு மோகூர்க்கு ஈத்த பத்திவை ஏத்த வல்லார்க்கு இடர் கெடுமே–10-1-11 | நமர்காள் ஏத்துமின் என்று தான் குடம் ஆடு கூத்தனை,Namarkal aeththumin enru thaan kudam aadu kooththanai - எம்முடையவர்கள்! ஏத்துங்கேளென்று தானே சொல்லிக் குடக் கூத்தாடின பெருமாளைக் குறித்து இவை வண் திருமோகூர்க்கு ஈத்த பத்து,Evai van thirumogoorukku eetha paththu - இப்பத்துப் பாசுரங்களும் திருமோகூர் விஷயமாக ஸமரிப்பித்தவை; குருகூர் சடகோபன் குற்றேவல்கள் வாய்த்த ஆயிரத்துள்,Kurukoor sadagopan kutraevargal vaayththa ayiraththul - நம்மாழ்வாருடைய திருவாக்காலான கைங்கரியமாக வாய்த்த ஆயிரத்துக்குள்ளே. இவை ஏத்த வல்லார்க்கு இடர்கெடும்,Evai aeththa vallarkku idarkedum - இவற்றைக் கொண்டு எம்பெருமானைத் துதிக்க வல்லவர்களுக்குத் துன்பங்கள் தொலைந்துபோம். |