Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: நல்குரவும் செல்வும் (10 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3249திருவாய்மொழி || (6-3–நல்குரவும் செல்வும்) (தம்மை வசீகரித்தவன் ஸர்வேஸ்வரன் என்று அருளிச் செய்தல் (திருவிண்ணகர்)) (ஒன்றோடொன்று சேராதவற்றை யெல்லாம் தன்பக்கலிலே சேர விட்டுக் கொண்டிருக்கிற பெருமானைத் திருவிண்ணகரிலே காண நின்றே னென்கிறார்.) 1
நல் குரவும் செல்வும் நரகும் சுவர்க்கமுமாய்
வெல் பகையும் நட்பும் விடமும் அமுதமுமாய்ப்
பல் வகையும் பரந்த பெருமான் என்னை ஆள்வானைச்
செல்வம் மல்கு குடித் திரு விண்ணகர்க் கண்டேனே.–6-3-1
நல்குரவும் செல்வும்,Nalguravum selvum - தாரித்ரியமும் ஐச்சரியமுமாய்
நரகும் சுவர்க்கமும் ஆய்,Naragum suvargamum aai - நரகமும் ஸ்வர்க்கமுமாய்
வெல் பகையும் நட்பும்,Vel pagaiyum natpum - எதிரியைவெல்லுகின்ற பகையும் (அதற்கு எதிர்த்தடையான்) ஸ்நேஹமுமாய்
விடமும் அமுதமும் ஆய்,Vidamum amudamum aai - விஷமும் அமிருதமுமாய் (ஆக இப்படி)
பல்வகையும் பரந்த பெருமான்,Palvakaiyum parandha perumaan - பலவகையாக விரிந்த விபூதியையுடையனாய்
என்னை ஆள்வானை,Ennai aalvaanai - என்னை அடிமைகொண்ட ஸர்வேச்வரனை
செல்வம் மல்கு குடி,Selvam malku kudi - செல்வம் நிரம்பிய ஸந்நிதியான
திருவிண்ணகர்,Tiruvinnagar - திருவிண்ணகரிலே
கண்டேன்,Kanden - காணப்பெற்றேன்.
3250திருவாய்மொழி || (6-3–நல்குரவும் செல்வும்) (தம்மை வசீகரித்தவன் ஸர்வேஸ்வரன் என்று அருளிச் செய்தல் (திருவிண்ணகர்)) (ஐங்கருவிகண்டவின்பம் * என்கிறபடியே செவி வாய் கண் மூக்கு உடலென்கிற ஐந்து உறுப்புகளாலும் அநுபவிக்கப்படுகிற இன்பமும் அதற்கு எதிர்த்தட்டான துன்பமும் தானேயாயிருக்கை! வைஷயிக ஸுகாபாஸங்களையே சிலர் இன்பமாக நினைக்கும்படியும் அவற்றையே சிலர் துன்பமாக நினைக்கும்படியும் செய்யுமவ னென்கை.) 2
கண்ட இன்பம் துன்பம் கலக்கங்களும் தேற்றமுமாய்த்
தண்டமும் தண்மையும் தழலும் நிழலுமாய்க்
கண்டு கோடற்கரிய பெருமான் என்னை ஆள்வானூர்
தெண் திரைப் புனல் சூழ் திருவிண்ணகர் நன்னகரே.–6-3-2
கண்ட இன்பம் துன்பம்,Kanda inbam tunbam - உலகங்கண்ட ஸுகதுக்கங்களாயும்
கலக்கங்களும் தேற்றமும் ஆய்,Kalakkangalum theRramum aai - கலக்கமும் தெளிவுமாய்
தண்டமும் தண்மையும்,Thandamum thaNmaiyum - நிக்ரஹமும் அநுக்ரஹமுமாய்
தழலும் நிழலும் ஆய்,Thazhalum nizhalum aai - வெப்பமும் தட்பமுமாய்
கண்கொள்தற்கு அரிய பெருமான்,Kankoldharku ariya perumaan - ஒருவரால் பரிச்சேதித்து அறியமுடியாத விபூதி விஸ்தாரத்தை யுடையனாய்
என்னை ஆள்வான்,Ennai aalvaan - என்னை அடிமைகொள்பவனான ஸர்வேச்வரனுடைய
ஊர்,Oor - திவ்யதேசம் எதுவென்றால்,
தெண் திரை புனல் சூழ்,Then tirai punal soozh - தெளிந்து அலையெறிகின்ற தீர்த்தம் சூழ்ந்த
திருவிண்ணகர்,Tiruvinnagar - திருவிண்ணகரென்கிற
நல் நகர்,Nal nagar - அழகிய நகரமாகும்.
3252திருவாய்மொழி || (6-3–நல்குரவும் செல்வும்) (தம்மை வசீகரித்தவன் ஸர்வேஸ்வரன் என்று அருளிச் செய்தல் (திருவிண்ணகர்)) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் கீழ்ச் சொன்ன புகர் கொள் கீர்த்தியானது புண்ய பாப அநு பந்தி பதார்த்த விபூதிகனான ஸ்ரீ கிருஷ்ணனுடைய நிர்ஹேதுக கிருபை என்கிறார்) 4
புண்ணியம் பாவம் புணர்ச்சி பிரிவென்று இவையாய்
எண்ணமாய் மறப்பாய் உண்மையாய் இன்மையாய் அல்லனாய்
திண்ண மாடங்கள் சூழ் திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான்
கண்ணன் இன்னருளே கண்டு கொண்மின்கள் கைதவமே.–6-3-4
புண்ணியம்,punniyam - புண்ணியமும்
பாவம்,paavam - பாபமுமாய்
புணர்ச்சி,punarcci - சேர்க்கையும்
பிரிவு என்று இவை ஆய்,pirivu enru ivai aai - பிரிவுமாய்
எண்ணம் ஆய்,ennam aai - நினைவும்
மறப்புஆய்,marappu aai - மறதியுமாய்
உண்மை ஆய்,unmai aai - உண்மைப் பொருளும்
இன்மைஆய்,inmai aai - பொருள் இல்லாமையுமாய்
அல்லன் ஆய்,allan aai - பாப புண்யங்களை நியமிப்பவனாய்
திண்ண,thinna - உறுதியான
மாடங்கள் சூழ்,maadangal soozh - மாடங்கள் சூழ்ந்த
திருவிண்ணகர்,tiruvinnagar - திருவிண்ணகரை
சேர்ந்த பிரான்,serndha piraan - சேர்ந்த ஸ்வாமியான
கண்ணன்,kannan - கண்ணனின்
இன் அருளே,in arule - இனிய அருளே
கைதவமே,kaithavame - உய்வதற்கு வழி என்று
கண்டு கொண்மின்கள்,kandu konminkal - கண்டு கொள்ளுங்கள்
3253திருவாய்மொழி || (6-3–நல்குரவும் செல்வும்) (தம்மை வசீகரித்தவன் ஸர்வேஸ்வரன் என்று அருளிச் செய்தல் (திருவிண்ணகர்)) (சிறியார் பெரியார் என்கிற வாசின்றிக்கே அனைவர்க்கும் காவலோன் திருவிண்ணகரப்ப னென்கிறார்) 5
கைதவம் செம்மை கருமை வெளுமையுமாய்
மெய் பொய் இளமை முதுமை புதுமை பழமையுமாய்ச்
செய்த திண் மதிள் சூழ்திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான்
பெய்த காவு கண்டீர் பெருந் தேவுடை மூவுலகே.–6-3-5
கைதவம் செம்மை,Kaithavam semmai - கோணலும் நேர்மையுமாய்
கருமை வெளுமையும் ஆய்,Karumai veLmaiyum aai - கறுப்பும் வெளுப்புமாய்
மெய் பொய்,Mey poi - மெய்யும் பொய்யுமாய்
இளமை முதுமை,iLamai mudhumai - யௌவனமும் கிழத்தனமுமாய்
புதுமை பழமையும் ஆய்,Puthumai pazhamaiyum aai - நவீநத்வமும் ஜீர்ணத்தவமுமாய்க்கொண்டு
செய்த திண் மதின் சூழ்,Seydha thiN madhin soozh - வேலைப்பாடுகளுடன் செய்யப்பட்ட திடமான மதிளாலே சூழப்பட்ட
திருவிண்ணகர்,TiruviNNagar - திருவிண்ணகரிலே
சேர்ந்த பிரான்,Serndha piraan - வர்த்திக்கிற ஸர்வேச்வரன்
பெய்த காவு கண்டீர்,Peydha kaavu kandeer - ஆக்கின சோலையன்றோ
பெரும் தேவு உடை மூ உலகு,Perum dhevu udai mu ulagu - பிரமன் முதலான உத்க்ருஷ்ட தேவதைகளை யுடைத்தான மூவுலகமும்.
3254திருவாய்மொழி || (6-3–நல்குரவும் செல்வும்) (தம்மை வசீகரித்தவன் ஸர்வேஸ்வரன் என்று அருளிச் செய்தல் (திருவிண்ணகர்)) (படைக்கப்படுதல், கருமங்களுக்கு வசப்பட்டிருத்தல், ஸத்வ ரஜஸ் தமோ குணமயமாயிருத்தல் என்கிற இவற்றாலே அவிலக்ஷணமாயிருக்கும் மூன்று லோகங்கள், இத்தன்மைகளுக்கு எதிர்த்தட்டாய்ப் பரமவிலக்ஷணமாயிருக்கும் நித்யவிபூதி, இவையெல்லாம் இவனிட்ட வழக்கென்றது) 6
மூவுலகங்களுமாய் அல்லனாய் உகப்பாய் முனிவாய்
பூவில் வாழ் மகளாய்த் தவ்வையாய்ப் புகழாய்ப் பழியாய்த்
தேவர் மேவித் தொழும் திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான்
பாவியேன் மனத்தே உறைகின்ற பரஞ் சுடரே.–6-3-6
மூ உலகங்களும் ஆய்,Moo ulagangalum aai - (ஆக்குவதற்கும் அழப்பதற்கும் நிலமான) மூன்று லோகங்களாயும்
அல்லன் ஆய்,Allan aai - (அங்ஙனல்லாத) நித்ய விபூதியாய்
உகப்பு ஆய் முனிவு ஆய,Ugappu aai munivu aai - ராகத்வேஷங்களாயும்
பூவில் வாழ் மகள் ஆய்,Poovil vaazhmahal aai - ஸ்ரீ மஹாலக்ஷ்மியாயும்
தௌவை ஆய்,Thauvai aai - மூதேவி யென்கிற அலக்ஷ்மியாயும்
புகழ் ஆய் பழி ஆய்,Pugazh aai pazhi aai - கீர்த்தியாயும் அபகீர்த்தியாயும் இருந்துகொண்டு
தேவர் மேவி தொழும் திரு விண்ணகர் சேர்ந்த பிரான்,Thevar mevi thozhum tiru vinnagar serndha piraan - தேவர்கள் விரும்பித்தொழுமிடமான திருவிண்ணகரில் உறையும் பெருமான்
பாவியேன் மனத்தே,Paaviyaan manathe - பாவியான என்னுடைய மனத்திலே
உறைகின்ற,Uraiginra - நித்யவாஸம்பண்ணுகின்ற
பரம் சுடர்,Param sudar - பரஞ்சோதியாவன்.
3255திருவாய்மொழி || (6-3–நல்குரவும் செல்வும்) (தம்மை வசீகரித்தவன் ஸர்வேஸ்வரன் என்று அருளிச் செய்தல் (திருவிண்ணகர்)) (ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -எத்தனையேனும் அளவுடையார்க்கும் வலிய புகல் அவன் அல்லது இல்லை என்கிறார்) 7
பரஞ்சுடர் உடம்பாய் அழுக்குப் பதித்த உடம்பாய்
கரந்தும் தோன்றியும் நின்றும் கைதவங்கள் செய்தும் விண்ணோர்
சிரங்களால் வணங்கும் திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான்
வரங் கொள் பாதமல்லால் இல்லை யாவர்க்கும் வன் சரணே.–6-3-7
பரம் சுடர் உடம்பு ஆய்,Param sudar udambu aai - அப்ராக்ருத விக்ரஹயுக்தனாயும்
அழுக்கு பதித்த உடம்பு ஆய்,Azhukku pathitha udambu aai - ஹேய ஜகத்ரூப சரீரயுக்தனாயும்
கரந்தும் தோன்றியும் நின்றும்,Karandhum thondriyum nindrum - மறைந்தும் வெளிப்பட்டு மிருந்தும்
கைதவங்கள் செய்தும்,Kaithavangal seythum - வஞ்சனைகளைச் செய்தும் (இப்படிப்பட்ட தன்மைகள் திகழ)
விண்ணோர் சிரங்களால் வணங்கும் திருவிண்ணகர் சேர்ந்த பிரான்,ViNNor sirangalal vaNangum tiru viNNagar serndha piraan - தேவர்கள் தலைவணங்கித் தொழுமிடமான திருவிண்ணகரிலே உறையும் பெருமாடைய
வரம் கொள் பாதம் அல்லால்,Varam koL paadham allaal - சிறப்புப் பொருந்திய திருவடிகள் தவிர
யாவர்க்கும் வன் சரண் இல்லை,Yaavarkkum van saran illai - யார்க்கும் வலிதான புகலிடம் வேறில்லை.
3256திருவாய்மொழி || (6-3–நல்குரவும் செல்வும்) (தம்மை வசீகரித்தவன் ஸர்வேஸ்வரன் என்று அருளிச் செய்தல் (திருவிண்ணகர்)) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் அநு கூல பிரதிகூல விஷயங்களான ஸ்வபாவங்களை யுடைய சர்வேஸ்வரனாய் – ஆஸ்ரித பவ்யனான ஸ்ரீ கிருஷ்ணன் எனக்கு அசாதாரணமான புகலிடம் என்கிறார்.) 8
வன் சரண் சுரர்க்காய் அசுரர்க்கு வெங் கூற்றமுமாய்த்
தன் சரண் நிழற் கீழ் உலகம் வைத்தும் வையாதும்
தென் சரண் திசைக்குத் திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான்
என் சரண் என் கண்ணன் என்னை ஆளுடை என்னப்பனே.–6-3-8
சுரர்க்கு வன் சரண் ஆய்,Surarkku van saran aai - தேவர்களுக்குச் சிறந்த புகலிடமாய்
அசுரர்க்கு வெம்கூற்றமும் ஆய்,Asurarkku vemkooRRamum aai - அஸுரர்களுக்கு வலிய மிருத்யுவாய்
உலகம் தன் சரண் நிழல் கீழ் வைத்தும்வையாதும்,Ulagam than saran nizhal keezh vaithumvaiyaadhum - உலகத்தைத் தன் திருவடிச் சரயையிலே ஒதுக்கியும் ஒதுக்காமலும் (இருந்துகொண்டு)
தென் திசைக்கு சரண் திரு விண்ணகர் சேர்ந்த பிரான்,Then dhisaiyukku saran tiru vinnagar serndha piraan - தென்திசைக்குள்ளே புகலிடமான திருவண்ணகரிலே தங்கியுள்ள பெருமான்
என்சரண்,En saran - எனக்கு சரண்யன்
என் கண்ணன்,En kannan - எனக்கு விதேயன்
என்னை ஆளுடை என் அப்பன்,Ennai aaludai en appan - என்னை அடிமைகொண்ட மஹோபகாரகன்.
3257திருவாய்மொழி || (6-3–நல்குரவும் செல்வும்) (தம்மை வசீகரித்தவன் ஸர்வேஸ்வரன் என்று அருளிச் செய்தல் (திருவிண்ணகர்)) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –என்னுடைய சிரமம் எல்லாம் தீரும்படி-தன்னுடைய பாதச் சாயையை எனக்கு -நான் அல்லேன் -என்ன -வலியது தந்தான் என்கிறார்.) 9
என்னப்பன் எனக்காய் இகுளாய் என்னைப் பெற்றவளாய்ப்
பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பன் என்னப்பனுமாய்
மின்னப் பொன் மதிள் சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்த அப்பன்
தன்னொப்பார் இல்லப்பன் தந்தனன் தன தாள் நிழலே.–6-3-9
எனக்கு என் அப்பன் ஆய் இகுள் ஆய் என்னை பெற்றவள் ஆய்,Enakku en appan aai igul aai ennai petRavaL aai - எனக்குத் தந்தையாயும் செவிலித்யாயும் பெற்றதாயாயும்
பொன் அப்பன் மணி அப்பன் முத்து அப்பன் என் அப்பனும் ஆய்,Pon appan maNi appan muthu appan en appanum aai - பொன் மணி முத்து இவற்றின் தன்மைபோன்ற தன்மையை யுடையனுயும்மஹோபகாரகனாயுமிருந்துகொண்டு
மின்ன பொன் மதின் சூழ் திரு விண்ணகர் சேர்ந்த அப்பன்,Minna pon madhin soozh tiru viNNagar serndha appan - ஒளிவிடும்படி பொன்மயமான மதிளாலே சூழப்பட்ட திருவண்ணகரிலே தங்கும் ஸ்வாமி யானவன்
தன் ஒப்பார் இல் அப்பன்,Than oppaar il appan - தன்னோடொத்தார் இல்லாத மஹான்!
தன தான் நிழல் தந்தனன்,Thana thaan nizhal thanthanan - (எனக்குத்) தனது திருவடிநிழலைக் கொடுத்தருளினன்.
3258திருவாய்மொழி || (6-3–நல்குரவும் செல்வும்) (தம்மை வசீகரித்தவன் ஸர்வேஸ்வரன் என்று அருளிச் செய்தல் (திருவிண்ணகர்)) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் -இப்படி பரஸ்பர விருத்த ஆகாரமான சகல சராசரங்களையும் விபூதியாகயுடைய சர்வேஸ்வரன் திருவடிகள் அல்லது வேறு ரக்ஷகமுடையோம் அல்லோம் -இத்தை நிரூபித்துக் கொள்ளுங்கோள் என்று உபதேசித்து முடிக்கிறார்.) 10
நிழல் வெய்யில் சிறுமை பெருமை குறுமை நெடுமையுமாய்ச்
சுழல்வன நிற்பன மற்றுமாய் அவை அல்லனுமாய்
மழலை வாய் வண்டு வாழ் திரு விண்ணகர் மன்னு பிரான்
கழல்கள் அன்றி மற்றோர் களை கண் இலம்; காண்மின்களே.–6-3-10
நிழல் வெய்யில்,Nizhal veyyil - நிழலாயும் வெய்யிலாயும்
சிறுமை பெருமை,Sirumai perumai - அணுத்வமாயும் விபுத்வமாயும்
குறுமை நெடுமையும் ஆய்,Kurumai netumaiyum aai - ஹ்ரஸ்வத்வமாயும் தீர்க்கத்வமாயும்
சுழல்வன நிற்பன மற்றும் ஆய,Suzhalvan nirpanum aai - ஜங்கமங்களாயும் ஸ்தாவரங்களாயும் மற்றுமுள்ள பதார்த்தங்களாயும்
அவை அல்லனும் ஆய்,Avai allanum aai - அவற்றினுடைய ஸ்வபாவத்தையுடையனல் லாதவனாயும் இருந்து கொண்டு
மழலை வாய் வண்டு வாழ் திரு வண்ணகர் மன்னுபிரான்,Mazhalai vaay vandu vaazh tiru vannagar mannupiran - மழலைப்பேச்சை யுடையவண்டுகள் களித்துவர்த்திக்கிற திருவிண்ணகரிலே நித்யவாஸம் பண்ணுகிற எம்பெருமானுடைய
கழல்கள் அன்றி,Kazhalkal andri - திருவடிகள்தவிர
மற்று ஓர் களைகண் இலம்,Matru or kalaign ilam - வேறொரு ரக்ஷகவஸ்துவை யுடையோமல்லோம்
காண்மின்கள்,Kanminkal - இதை ஸத்யமென்று கொள்ளுங்கள்
3259திருவாய்மொழி || (6-3–நல்குரவும் செல்வும்) (தம்மை வசீகரித்தவன் ஸர்வேஸ்வரன் என்று அருளிச் செய்தல் (திருவிண்ணகர்)) (இத் திருவாய்மொழியை அதிகரிக்க வல்லவர்கள் நித்ய ஸூரிகளுக்கும் கௌரவிக்கத் தகுந்தவராவர் என்று பயனுரைத்துத் தலைக் கட்டுகிறார்.) 11
காண்மின்கள் உலகீர்! என்று கண் முகப்பே நிமிர்ந்த
தாளிணையன் தன்னைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
ஆணை ஆயிரத்துத் திரு விண்ணகர்ப் பத்தும் வல்லார்
கோணை இன்றி விண்ணோர்க் கென்று மாவர் குரவர்களே.–6-3-11
உலகீர்,ulagir - உலகத்திலுள்வர்களே!
கரண்மின்கள் என்று,karanminkal enru - இந்த விநோதத்தைக் காணுங்கோள் என்று (சொல்பவன் போன்று)
கண் முகப்பே நிமிர்ந்த,kan mukappe nimirnda - கண்ணெதிரே ஓங்கி வளர்ந்த
தான் இணையன் தன்னை,thaan inaiyan thannai - உபயபாதங்களை யுடையவனான எம்பெருமான் விஷயமாக
குருகூர் சடகோபன் சொன்ன,kurukoor sadagopan sonna - நம்மாழ்வார் அருளிச் செய்த
ஆணை ஆயிரத்து,aanai aayirathu - பகவதாஜ்ஞா ரூபமான ஆயிரத்தினுள்ளும்
திருவிண்ணகர் பத்தும் வல்லார்,tiruvinnagar paththum vallaar - திருவிண்ணகர் விஷயமான இப்பதிகத்தை ஓத வல்லவர்கள்
விண்ணோர்க்கு,vinnorkku - நிர்யஸூரிகளுக்கு
கோணை இன்றி ,konai indri - மிறுக்கு இல்லாமல்
என்றும் குரவர்கள் ஆவர்,endrum kuravargal aavar - எப்போதும் கௌரவிக்கத்தகுந்தவராவர்கள்.