| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 514 | நாச்சியார் திருமொழி || 2 - நாமம் ஆயிரம் (இடைப்பெண்கள் சிற்றில்சிதைக்க வேண்டாம் என்று கண்ணனை வேண்டுதல்) 1 | நாமம் ஆயிரம் ஏத்த நின்ற நாராயணா நரனே உன்னை மாமி தன மகனாகப் பெற்றால் எமக்கு வாதை தவிருமே காமன் போதரு காலம் என்று பங்குனி நாள் கடை பாரித்தோம் தீமை செய்யும் சிரீதரா எங்கள் சிற்றில் வந்து சிதையேலே | நாமம் ஆயிரம், Naamam Aayiram - ஸஹஸ்ர நாமத்தினால் ஏத்த நின்ற, Etha Nindra - (நித்ய ஸூரிகள்) துதிக்கும்படி நின்ற நாராயணா, Narayana - நாராயணனே! நரனே, Narane - (சக்கரவர்த்தித் திருமகனாய்ப் பிறந்து) மானிட வுடல் கொண்டவனே! உன்னை, Unnai - (ஏற்கனவே தீம்பனான) உன்னை மாமி தன் மகன் ஆக பெற்றால், Maami Than Magan Aaga Petral - பர்த்தாவாகவும் பெற்றால் எமக்கு வாதை தவிருமே, Emakku Vaadhai Thavirume - நாங்கள் நலிவுபடா திருக்க முடியுமோ?’ காமன் போதரு காலம் என்று, Kaaman Potharu Kaalam Endru - மன்மதன் வருங்கால மென்று பங்குனி நாள், Panguni Naal - பங்குனி மாதத்தில்- கடை, Kadai - (அவன் வரும்) வழியை பாரித்தோம், Paarithom - கோடித்தோம்’ தீமை செய்யும், Theemai Seiyum - தீம்புகளைச் செய்கின்ற சிரீதரா, Siridhara - ஸ்ரீ பதியான கண்ண பிரானே! எங்கள் சிற்றில், Engal sitril - நாங்களிழைக்கின்ற மணற் கொட்டகங்களை வந்து , Vandhu - (நாங்கள் விளையாடுமிடத்தில்) வந்து சிதையேல், Sidhayel - நீ அழிக்க வேண்டா. |
| 515 | நாச்சியார் திருமொழி || 2 - நாமம் ஆயிரம் (இடைப்பெண்கள் சிற்றில்சிதைக்க வேண்டாம் என்று கண்ணனை வேண்டுதல்) 2 | இன்று முற்றும் முதுகு நோவ இருந்து இளைத்த விச் சிற்றிலை நன்றும் கண்ணுற நோக்கி நாம் கொளும் ஆர்வம் தன்னைத் தணி கிடாய் அன்று பாலகனாகி ஆலிலை மேல் துயின்ற வெம்மாதியாய் என்றும் உன் தனக்கு எங்கள் மேல் இரக்கம் எழாதது எம் பாவமே | இன்று முற்றும், Indru Mutrum - இன்றைய தினம் முழுவதும் முதுகு நோவ, Mudhugu Nova - முதுகு நோம்படி இருந்து, Irundhu - உட்கார்ந்து கொண்டு இழைத்த, Izhaitha - ஸ்ருஷ்டித்த இச் சிற்றிலை, Is Sitrilai - இந்தச் சிற்றிலை நன்றும், Nandrum - நன்றாக கண் உற நோக்கி, Kan Ura Nokki - (நீ) கண் பொருந்தும்படி பார்த்து, நாம் கொள்ளும் ஆர்வம் தன்னை தணிகிடாய், Naam Kollum Aarvam Thannai Thanikidai - நாங்கள் கொண்டிருக்கிற அபிநிவேசத்தைத் தணியச் செய் கிடாய்’ அன்று, Andru - மஹா ப்ரளயம் வந்த காலத்தில் பாலகன் ஆகி, Balakan Aagi - சிசு வடிவு கொண்டு ஆல் இலை மேல், Aal ilai Mel - ஆலந்தளிரின் மேல் துயின்ற, Thuyindra - கண் வளர்ந்தருளினவனும் எம் ஆதியாய், Em Aadhiyai - எமக்குத் தலைவனுமான கண்ண பிரானே! என்றும், Endrum - எக் காலத்திலும் உன் தனக்கு, Un Thanakku - உனக்கு எங்கள் மேல், Engal Mel - எம்மிடத்தில் இரக்கம் எழாதது, Irakkam Ezhathadhu - தயவு பிறவாமலிருப்பது எம் பாவமே, Em Paavame - நாங்கள் பண்ணின பாவத்தின் பயனேயாம். |
| 516 | நாச்சியார் திருமொழி || 2 - நாமம் ஆயிரம் (இடைப்பெண்கள் சிற்றில்சிதைக்க வேண்டாம் என்று கண்ணனை வேண்டுதல்) 3 | குண்டு நீர் உறை கோளரி மத யானை கோள் விடுத்தாய் உன்னைக் கண்டு மாலுறு வோங்களைக் கடைக்கண்களால் இட்டு வாதியேல் வண்டல் நுண் மணல் தெள்ளி யாம் வளைக் கைகளால் சிரமப் பட்டோம் தெண் திரைக் கடல் பள்ளியாய் எங்கள் சிற்றில் வந்து சிதையேலே | குண்டு, Kundu - மிக்க ஆழத்தை யுடைத்தான நீர், Neer - கடலிலே உறை, Urai - சாய்ந்தருள்பவனும் கோள் அரி!, Kol Ari! - மிடுக்கையுடைய சிங்கம் போன்றவனும் மதம் யானை கோள் விடுத்தாய், Madham Yaanai Kol Viduthaai - மதம் மிக்க கஜேந்திராழ்வானுக்கு (முதலையால் நேர்ந்த) துன்பத்தைத் தொலைத்தருளி னவனுமான கண்ண பிரானே! உன்னை, Unnai - (அடியார் துயரைத் தீர்க்க வல்ல) உன்னை கண்டு, Kandu - பார்த்து மால் உறுவோங்களை, Maal Uruvongalai - ஆசைப் படுகின்ற எங்களை கடைக் கண்களால் இட்டு, Kadai Kangalal Ittu - கடைக் கண்களால் பார்த்து வாதியேல், Vaadhiyel - ஹிம்ஸிக்க வேண்டா யாம், Yaam - நாங்கள் வண்டல், Vandal - வண்டலிலுள்ள நுண் மணல், Nun Manal - சிறிய மணல்களை வளை கைகளால், Valai Kaigalal - வளையல்கள் அணிந்த கைகளினால் தெள்ளி, Thelli - புடைத்து சிரமப்பட்டோம், Siramapattom - மிகவும் கஷ்டப் பட்டோம் தெண் திரை, Then Thirai - தெளிந்த அலைகளை யுடைய கடல், Kadal - திருப்பாற்கடலை பள்ளியாய், Palliyaai - படுக்கையாக வுடையவனே! எங்கள் சிற்றில் வந்து, Engal sitril Vandhu - நாங்களிழைக்கின்ற மணற் கொட்டகங்களை (நாங்கள் விளையாடுமிடத்தில்) வந்து சிதையேல், Sidhaiyel - நீ அழிக்க வேண்டா. |
| 517 | நாச்சியார் திருமொழி || 2 - நாமம் ஆயிரம் (இடைப்பெண்கள் சிற்றில்சிதைக்க வேண்டாம் என்று கண்ணனை வேண்டுதல்) 4 | பெய்யு மா முகில் போல் வண்ணா உன்தன் பேச்சும் செய்கையும் எங்களை மையல் ஏற்றி மயக்க உன்முகம் மாய மந்திரம் தான் கொலோ நொய்யர் பிள்ளைகள் என்பதற்கு உன்னை நோவ நாங்கள் உரைக்கிலோம் செய்ய தாமரைக் கண்ணினாய் எங்கள் சிற்றில் வந்து சிதையேலே | பெய்யும், Peiyum - வர்ஷியா நின்றுள்ள மா முகில் போல் வண்ணா, Maa Mukil Pol Vanna - காள மேகம் போன்ற திரு நிறத்தை யுடையவனே! உன் தன், Unn Than - உன்னுடைய பேச்சும் செய்கையும், Pechum Seikaiyum - (தாழ்ந்த) வார்த்தைகளும், (தாழ்ந்த) வியாபாரங்களும் எங்களை, Engalai - எங்களை மையல் ஏற்றி, Mailal etri - பிச்சேறப் பண்ணி மயக்க, Mayakka - அறிவு கெடுக்கைக்கு உன் முகம், Unn Mugam - உன்னுடைய முகமானது மாயம் மந்திரம் தான் கொலொ, Maayam Manthiram Thaankolo - சுக்குப் பொடியோ? நொய்யர் பிள்ளைகள் என்பதற்கு, Noiyar Pillaigal Enbatharku - அற்பத்தனமுடைய சிறுமியர் இவர்கள்’ என்று நீ சொல்லுவாய் என்று பயப்பட்டு நாங்கள், Naangal - நாங்கள் உன்னை, Unnai - உன்னைக் குறித்து நோவ உரைக்கிலோம், Nova Uraikilom - நெஞ்சு புண்படும்படி (ஒன்றும்) சொல்லுகிறோமில்லை செய்ய தாமரை கண்ணினாய், Seiya Thamarai Kanninai - புண்டாரிகாக்ஷனே! எங்கள் சிற்றில், Engal sitril - நாங்களிழைக்கின்ற மணற் கொட்டகங்களை வந்து , Vandhu - (நாங்கள் விளையாடுமிடத்தில்) வந்து சிதையேல், Sidhaiyel - நீ அழிக்க வேண்டா. |
| 518 | நாச்சியார் திருமொழி || 2 - நாமம் ஆயிரம் (இடைப்பெண்கள் சிற்றில்சிதைக்க வேண்டாம் என்று கண்ணனை வேண்டுதல்) 5 | வெள்ளை நுண் மணல் கொண்டு சிற்றில் விசித்திரப்பட வீதி வாய்த் தெள்ளி நாங்கள் இளைத்த கோலம் அழித்தி யாகிலும் உன்தன் மேல் உள்ளம் ஓடி உருகல் அல்லால் உரோடம் ஓன்று இலோம் கண்டாய் கள்ள மாதவா கேசவா உன் முகத்தன கண்கள் அல்லவே | கள்ளம், Kallam - கபடச் செய்கைகளை யுடைய மாதவா, Madhava - கண்ண பிரானே! கேசவா, Kesava - கேசவனே! நாங்கள், Naangal - நாங்கள் வெள்ளை நுண் மணல் கொண்டு, Vellai Nun Manal Kondu - வெளுத்துத் சிறுத்த மணல்களைக் கொண்டு வீதியாய், Veethiyaai - தெருவிலே விசித்திரப்பட, Visithirapada - (அனைவரும் கண்டு) ஆச்சாரியப்படும்படி தெள்ளி இழைத்த, Thelli Izhaitha - தெளிந்து கட்டின சிற்றில், Sitril - சிற்றிலாகிற கோலம், Kolam - கோலத்தை அழித்தி ஆகிலும், Azhithi Aagilum - நீ அழித்தாயாகிலும், (அதற்காக) உள்ளம், Uḷḷam - (எங்களுடைய) நெஞ்சானது ஓடி, Oḍi - உடைந்து உருகல் அல்லால், Urugal allaal - உருகுமத்தனை யொழிய உன்தன்மேல், Unthanmel - உன்மேலே உரோடம் ஒன்றும் இலோம், Urodam ondrum illom - துளியும் கோபமுடையோமல்லோம் உன்முகத்தன, Un mugathana - உன்முகத்திலுள்ளவை கண்கள் அல்லவே, Kangal allave - கண்களன்றோ! |
| 519 | நாச்சியார் திருமொழி || 2 - நாமம் ஆயிரம் (இடைப்பெண்கள் சிற்றில்சிதைக்க வேண்டாம் என்று கண்ணனை வேண்டுதல்) 6 | முற்றிலாத பிள்ளைகளோம் முலைபோந்திலாதோமை நாடொறும் சிற்றில் மேலிட்டுக் கொண்டு நீ சிறிதுண்டு திண்ணென நாமது கற்றிலோம் கடலை யடைத்தரக்கர் குலங்களை முற்றவும் செற்று இலங்கையைப் பூசலாக்கிய சேவகா எம்மை வாதியேல் | கடலை அடைத்து, Kadalai Adaithu - ஸேது பந்தம் பண்ணி அரக்கர் குலங்களை முற்றவும், Arakkar Kulangalai Mutravum - ராக்ஷஸருடைய குலங்களை முழுதும் செற்று, Setru - களைந்தொழித்து இலங்கையை, Ilangaiyai - லங்கையை பூசல் ஆக்கிய, Pusal Aakkiya - அமர்க்களப் படுத்தின சேவகா, Sevaka - வீரப்பாடு உடையவனே! முற்றிலாத பிள்ளைகளோம், Mutrilatha Pillaigalom - முற்றாத இளம் பிள்ளைகளாய் முலை போந்திலாதோமை, Mulai Pondhilaathomai - முலையும் கிளரப் பெறாத வெங்களை நாள் தோறும், Naal Thorum - நாள் தோறும் சிற்றில் மேல் இட்டுக் கொண்டு, Sitril Mel Ittu Kondu - சிற்றில் விஷயமாக ஒரு வியாஜத்தை வைத்துக் கொண்டு நீ சிறிது உண்டு, Nee Siridhu Undu - நீ செய்யுஞ் செய்திகள் சில உள அது திண்ணன நாம் கற்றிலோம், Athu Thinnana Naam Katrilom - நீ செய்யுஞ் செய்திகள் சில உள எம்மை வாதியேல், Emmai Vaadhiyel - எங்களை (நீ) துன்பப்படுத்த வேண்டா |
| 520 | நாச்சியார் திருமொழி || 2 - நாமம் ஆயிரம் (இடைப்பெண்கள் சிற்றில்சிதைக்க வேண்டாம் என்று கண்ணனை வேண்டுதல்) 7 | பேத நன்கறிவார்களோடு இவை பேசினால் பெரிதின் சுவை யாதும் ஓன்று அறியாத பிள்ளைகளோமை நீ நலிந்து என் பயன் ஒதமா கடல் வண்ணா உன் மணவாட்டிமாரோடு சூழறும் சேதுபந்தம் திருத்தினாய் எங்கள் சிற்றில் வந்து சிதையேலே | பேதம், Pedham - (உன் பேச்சின்) வாசியை நன்கு அறிவார்களோடு, Nangu Arivargalodu - நன்றாக அறிய வல்லவரோடு இவை, Ivai - இப் பேச்சுக்களை பேசினால், Pesinaal - பேசினால் பெரிது இன் சுவை, Peridhu In Suvai - மிகவும் போக்யமாயிருக்கும் யாது ஒன்றும் அறியாத, Yaadhu Ondrum Ariyaadha - எவ்வகையான பாவத்தை யுமறிய மாட்டாத பிள்ளைகளோமை, Pillaigalomai - சிறுப் பெண்களான எங்களை நீ நலிந்து என் பயன், Nee Nalindhu En Payan - நீ வருத்த முறுத்துவதனால் என்ன பயன்? ஓதம், Odham - திரைக் கிளப்பத்தை யுடைய மா கடல், Maa Kadal - பெரிய கடலை யொத்த வண்ண, Vanna - திரு நிறத்தை யுடைய கண்ண பிரானே! சேது பந்தம் திருந்தினாய், Sedhu Bandham Thirundhinaai - திருவணை கட்டினவனே! உன் மணவாட்டிமாரொடு சூழறும், Un Manavaatimaarodu Soozharum - உன்னுடைய பத்தினிகளின் மேல் ஆணை எங்கள் சிற்றில், Engal Sitril - நாங்களிழைக்கின்ற மணற் கொட்டகங்களை வந்து, Vandhu - (நாங்கள் விளையாடுமிடத்தில்) வந்து சிதையேல், Sidhaiyel - நீ அழிக்க வேண்டா |
| 521 | நாச்சியார் திருமொழி || 2 - நாமம் ஆயிரம் (இடைப்பெண்கள் சிற்றில்சிதைக்க வேண்டாம் என்று கண்ணனை வேண்டுதல்) 8 | வட்ட வாய்ச் சிறு தூதையோடு சிறு சுளகும் மணலும் கொண்டு இட்ட மாவிளையோடு வோங்களைச் சிற்றில் ஈடழித்து என் பயன் தொட்டுதைத்து நலியேல் கண்டாய் சுடர்ச் சக்கரம் கையில் ஏந்தினாய் கட்டியும் கைத்தாலின்னாமை அறிதியே கடல் வண்ணனே | சுடர் சக்கரம் கையில் ஏந்தினாய், Sudar Sakkaram Kaiyil Aendhinaai - உன்னுடைய பத்தினிகளின் மேல் ஆணை திருக் கையில் தரித்திரா நின்றுள்ள கண்ண பிரானே! கடல் வண்ணனே!, Kadal Vannane! - கடல் வண்ணனே! வட்டம் வாய், Vattam Vaai - வட்ட வடிவமான வாயை யுடைய சிறு தூரிதையோடு, Siru Thoorithaiyodu - சிறிய பானையோடு சிறு சுளகும், Siru Sulakum - சிறிய முச்சிலையும் மணலும் கொண்டு, Manalum Kondu - மணலையும் கொண்டு வந்து இட்டமா, Ittamaa - இஷ்டப்படி விளையாடுவோங்களை, Vilaiyaaduvongalai - விளையாடுகிற எங்களுடைய சிற்றில், Sitril - சிற்றிலை ஈடழித்து, Eedazhithu - மறுபடியும் உபயோகப் படாதபடி அழிப்பதனால் என் பயன்?, En Payan? - என் பயன்? தொட்டு, Thottu - கையால் தொட்டும் உதைத்து, Udhaithu - காலால் உதைத்தும் நலியேல் கண்டாய், Naliyel Kandaai - ஹிம்ஸியாதொழி கிடாய் கைத்தால், Kaithaal - நெஞ்சு கசத்துப் போனால் கட்டியும், Kattiyum - கருப்புக் கட்டியும் இன்னாமை, Innaamai - ருசியாது என்பதை அறிதியே, Arithiye - அறிவா யன்றோ? |
| 522 | நாச்சியார் திருமொழி || 2 - நாமம் ஆயிரம் (இடைப்பெண்கள் சிற்றில்சிதைக்க வேண்டாம் என்று கண்ணனை வேண்டுதல்) 9 | முற்றத்தூடு புகுந்து நின் முகம் காட்டிப் புன் முறுவல் செய்து சிற்றிலோடு எங்கள் சிந்தையும் சிதைக்கக் கடவையோ கோவிந்தா முற்ற மண்ணிடம் தாவி விண்ணுற நீண்டு அளந்து கொண்டாய் எம்மைப் பற்றி மெய்ப் பிணக்கிட்டக்கால் இந்தப் பக்கம் நின்றவர் என் சொல்லார் | கோவிந்தா, Govindha - கண்ணபிரானே! முற்ற மண் இடம் தாவி, Muttra man idam thaavi - (ஒரு திருவடியினால்) பூ மண்டலம் முழுவதையும் தாவி யளந்து விண் உற நீண்டு, Vin ura neendu - பரமபதத்தளவு ஓங்கி அளந்து கொண்டாய், Alanthu kondai - (மற்றொரு திருவடியினால் மேலுலகங்களை) அளந்து கொண்டவனே! முற்றத்தூடு, Mutrathoodu - (நாங்கள் ஏகாந்தமாக விளையாடுகிற) முற்றத்திலே புகுந்து, Pugundhu - நுழைந்து நின் முகம் காட்டி, Nin mugam kaatti - உனது திரு முகத்தை (எங்களுக்குக்) காண்பித்து புன் முறுவல் செய்து, Pun muruval seidhu - புன் சிரிப்புச் சிரித்து சிற்றிலோடு எங்கள் சிந்தையும், Sitrilodu engal sindhaiyum - எங்கள் சிற்றிலையும் நெஞ்சையும் சிதைக்கக் கடவையோ, Sithaikka kadavaiyo - அழிக்கக் கடவாயோ? எம்மைப் பற்றி, Emmai patri - (அவ்வளவோடும் நில்லாமல்) எங்களோடே மெய் பிணக்கு இட்டக்கால், Mei pinakku ittakaal - கலவியும் ப்ரவருத்தமானால் இந்த பக்கம் நின்றவர், Indha pakkam nindravar - அருகில் நிற்பவர்கள் என் சொல்லார், En sollaar - என்ன சொல்ல மாட்டார்கள்? |
| 523 | நாச்சியார் திருமொழி || 2 - நாமம் ஆயிரம் (இடைப்பெண்கள் சிற்றில்சிதைக்க வேண்டாம் என்று கண்ணனை வேண்டுதல்) 10 | சீதை வாய் அமுதம் உண்டாய் எங்கள் சிற்றில் நீ சிதையேல் என்று வீதிவாய் விளையாடும் ஆயர் சிறுமியர் மழலைச் சொல்லை வேத வாய்த் தொழிலார்கள் வாழ் வில்லிபுத்தூர் மன் விட்டு சித்தன் தன் கோதை வாய்த் தமிழ் வல்லவர் குறைவின்றி வைகுந்தம் சேர்வரே | வாய் அமுதம், Vaai amudham - அதராம்ருதத்தை உண்டாய், Undaai - பருகினவனே! எங்கள் சிற்றில் நீ சிதையேல் என்று, Engal sitril nee sidhaiyel endru - நாங்கள் இழைக்குஞ் சிற்றிலை நீ அழிக்கா தொழியவேணும் என்று வீதிவாய், Veethivaai - வீதியிலே விளையாடும், Vilaiyaadum - விளையாமாநின்ற ஆயர் சிறுமியர், Aayar sirumiyar - இடைப் பெண்களுடைய மழலைச் சொல்லை, Mazhalai sollai - இளம் பருவத்துக்குரிய மெல்லிய சொல்லை உட்கொண்டு வேதம் வாய், Vedham vaai - வேதத்தை உச்சாரிக்கின்ற வாயையுடையவர்களும் தொழிலார்கள், Thozhilaargal - வைதிகத் தொழில்களைச் செய்பவருமான (பரமை காந்திகள் வாழ், Vaazh - வாழுமிடமான வில்லிபுத்தூரிர், Villiputhoorir - ஸ்ரீ வில்லிபத்தூரிருக்கு மன், Man - தலைவரான விட்டு சித்தன் தன், Vittu chithan than - பெரியாழ்வாருடைய திருமகளான கோதை, Kothai - ஆண்டாளுடைய வாய் வாக்கில், Vaai vaakkil - நின்று அவதரித்த தமிழ், Thamizh - தமிழ்ப்பாசுரங்களை வல்லவர், Vallavar - ஓதவல்லவர்கள் குறைவு, Kuraivu - இன்றி குறைவில்லாமல் வைகுந்தம் சேர்வர், Vaigundham servar - பரமபதஞ் சேரப்பெறுவர். |