| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 275 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (ஆறாம் திருமொழி - நாவலம்) (கண்ணன் புல்லங்குழலூதற்சிறப்பு) 1 | நாவலம் பெரிய தீவினில் வாழும் நங்கை மீர்கள் இது ஓரற்புதம் கேளீர் தூ வலம் புரி யுடைய திருமால் தூய வாயில் குழலோசை வழியே கோவலர் சிறுமியர் இளங் கொங்கை குதுகலிப்ப உடலுளவிழ்ந்து எங்கும் காவலும் கடந்து கயிறு மாலை யாகி வந்து கவிழ்ந்து நின்றனரே–3-6-1 | அம்,Am - அழகிய பெரிய,Periya - விசாலமான நாவல் தீவினில்,Naaval Theevinil - ஜம்பூத்வீபத்தில் வாழும்,Vaazhum - வாழா நின்றுள்ள நங்கைமீர்கள்,Nangaimirgal - பெண்காள்! ஓர் அற்புதம் இது,Or Arputham Ithu - ஒரு ஆச்சரியமான இச் சங்கதியை கேளீர்,Keleer - செவி கொடுத்துக் கேளுங்கள்;(யாது அற்புதமென்னில்;) தூ,Thoo - சுத்தமான வலம்புரி உடைய,Valamburi Udaiya - ஸ்ரீபாஞ்சஜந்யத்தையுடைய திருமால்,Thirumal - ச்ரியபதியான கண்ண பிரானுடைய தூய வாயில்,Thooya Vaayil - அழகிய திருப்பவளத்தில் (வைத்து ஊதப்பெற்ற) குழல்,Kuzhal - புல்லாங்குழலினுடைய ஓசை வழியே,Osai Vazhiyai - இசையின் வழியாக, கோவலர் சிறுமியர,Kovalr Sirumiyar - இடைப் பெண்களினுடைய இள கொங்கை,Ila Kongai - இள முலைகளானவை குதுகலிப்ப,Kuthukalippa - (நாங்கள் முன்னே போகிறே மென்று நெறித்து) ஆசைப்பட உடல்,Udal - சரீரமும் உள்,Ul - மநஸ்ஸும் அவிழ்ந்து,Avizhndhu - சிதிலமாகப் பெற்று எங்கும்,Engum - எங்குமுள்ள காவலும்,Kaavalum - காவல்களையும் கடந்து,Kadandhu - அதிக்கிரமித்துவிட்டு கயிறு மாலை ஆகி வந்து,Kayiru Maalai Aagi Vandhu - கயிற்றில்தொடுத்த பூமாலைகள்போல (த் திரளாக) வந்து கவிழ்ந்து நின்றனர்,Kavizhndhu Nindranar - (கண்ணனைக் கண்டு வெள்கிக்) கவிழ்தலையிட்டு நின்றார்கள்; [இதிலும் மிக்க அற்புதமுண்டோ] |
| 276 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (ஆறாம் திருமொழி - நாவலம்) (கண்ணன் புல்லங்குழலூதற்சிறப்பு) 2 | இடவணரை யிடத்தோளொடு சாய்த் திருகை கூடப் புருவம் நெரிந்தே குட வயிறு பட வாய் கடை கூடக் கோவிந்தன் குழல் கொடடூதின போது மட மயில்களோடு மான் பிணை போலே மங்கைமார்கள் மலர்க் கூந்தலவிழ உடை நெகிழ வோர் கையால் துகில் பற்றி யொல்கியோ டரிக் கணோட நின்றனரே–3-6-2 | கோவிந்தன்,Govindhan - கண்ணபிரான் இட அணர,Ida Anara - (தனது) இடப்பக்கத்து மோவாய்க் கட்டையை இடத் தோளொடு சாய்ந்து,Idath Tholodu Saindhu - இடத்தோள் பக்கமாகச் சாய்ந்து குடம்பட,Kudampada - குடம் போலக் குமிழ்த்துத் தோற்றவும் வாய்,Vaay - வாயானது கடை கூட,Kadaikooda - இரண்டருகுங்குலியவும் (இவ்வறான நிலைமையாக) குழல் கொடு,Kuzhal Kodu - வேய்ங்குழலைக் கொண்டு ஊதின போது,Oodhina Podhu - ஊதின காலத்திலே மடம் மயில்களொடு,Madham Mayilgalodu - அழகிய மயில்களையும் மான் பிணை போலே,Maan Pinai Pole - மான் பேடைகளையும் போன்றுள்ள மங்கைமார்கள்,Mangaimargal - யுவதிகள் இரு கை,Eru Kai - இரண்டு திருக்கைகளும் கூட,Kooda - (குழலோடு) கூடவும் புருவம்,Puruva - புருவங்களானவை நெரித்து ஏற,Nerithu Era - நெறித்து மேலே கிளறவும் வயிறு,Vayiru - வயிறானது மலர் கூந்தல்,Malar Koondhal - (தங்களுடைய) மலரணிந்த கூந்தல் முடியானது அவிழ,Avizha - அவிழ்ந்து அலையவும் உடை,Udai - அரைப் புடவையானது நெகிழ,Negizha - நெகிழவும் துகில்,Thugil - (நெகிழ்ந்த) அத் துகிலை ஓர் கையால்,Or Kaiyaal - ஒரு கையாலே பற்றி,Patri - பிடித்துக் கொண்டு ஒல்கி,Olgi - துவண்டு அரி ஓடு கண் ஓட நின்றார்,Ari Odu Kan Oda Nindrar - செவ்வரி, கருவரிகள் ஓடாயின்ற கண்கள் (கண்ணபிரான் பக்கலிலே) ஓடப்பெற்றனர் |
| 277 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (ஆறாம் திருமொழி - நாவலம்) (கண்ணன் புல்லங்குழலூதற்சிறப்பு) 3 | வானிள வரசு வைகுந்தக் குட்டன் வாசு தேவன் மதுரை மன்னன் நந்த கோனிள வரசு கோவலர் குட்டன் கோவிந்தன் குழல் கொடு ஊதின போது வானிளம் படியர் வந்து வந்தீண்டி மனமுருகி மலர்க் கண்கள் பனிப்ப தேனளவு செறி கூந்தலவிழச் சென்னி வேர்ப்பச் செவி சேர்த்து நின்றனரே–3-6-3 | வான்,aan - பரம பதத்துக்கு இள அரசு,Ela Arasu - யுவராஜனாயும் வைகுந்தர்,Vaikunthar - அப் பரம பதத்திலுள்ள நித்ய ஸூரிகளுக்கு குட்டன்,Kuttan - பரிந்து நோக்க வேண்டும்படியான பருவத்தை யுடையானாயும் வாசுதேவன்,Vasudevan - வஸுதேவர்க்கு மகனாகப் பிறந்தவனாயும் மதுரை மன்னன்,Madurai Mannan - வட மதுரைக்கு அரசனாயும் நந்தர்கோன் இள அரசு,Nandarkon Ila Arasu - நந்தகோபர்க்குப் (பிள்ளையாய் வளர்ந்து) இளவரசனாயும் கோவலர் குட்டன்,Kovalarkuttan - இடையர்களுக்கு பரிந்து நோக்க வேண்டும்படியான பிள்ளையாயுமுள்ள கோவிந்தன்,Govindhan - கண்ண பிரான் குழல் கொடு ஊதின போது;,Kuzhal Kodu Oodhina Podhu - குழல் கொடு ஊதின போது; வான்,Vaan - ஸ்வர்க்க லோகத்திலுள்ள இள படியர்,Ela Padiyar - பொகத்துக்கு உரிய சரீரத்தை யுடையரான மாதர் வந்து வந்து ஈண்டி,Vandhu Vandhu Indi - (ஸ்ரீப்ருந்தாவனத்திலே) திரள் திரளாக வந்து குவிந்து மனம் உருகி,Manam Urugi - (தங்கள்) நெஞ்சு உருகப் பெற்று மலர் கண்கள்,Malar Kangal - குவளை மலர்போலழகிய கண்களினின்றும் பனிப்ப,Panippa - ஆநந்த நீர் துளித்து விழ தேன் அளவு,Then Alavu - தேனோடு கூடின செறி கூந்தல்,Seri Koondhal - செறிந்த மயிர்முடியானது அவிழ,Avizha - அவிழ சென்னி,Senni - நெற்றியானது வேர்ப்ப,Verppa - வேர்வையடைய செவி,Sevi - (இவ் வகை விகாரங்களை யடைந்து) (தமது) காதுகளை சேர்த்து,Serthu - (அக்குழலோசையிலே) மடுத்து நின்றனர்,Nindranar - திகைத்து நின்றார்கள் |
| 278 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (ஆறாம் திருமொழி - நாவலம்) (கண்ணன் புல்லங்குழலூதற்சிறப்பு) 4 | தேனுகன் பிலம்பன் காளிய னென்னும் தீப்பப் பூடுகள் அடங்க உழக்கி கானகம் படி உலாவி யுலாவிக் கருஞ் சிறுக்கன் குழ லூதின போது மேனகையொடு திலோத்தமை அரம்பை உருப்பசி யரவர் வெள்கி மயங்கி வானகம் படியில் வாய் திறப்பின்றி ஆடல் பாடலவை மாறினர் தாமே–3-6-4 | தேனுகன்,Thenukan - தேநுகாஸுரன் பிலம்பன்,Pilamban - ப்ரலம்பஸுரன் காளியன்,Kalian - காளிய நாகம் என்னும்,Ennum - என்று சொல்லப் படுகிற தீப்பபூடுகள் அடங்க,Theeppapoodugal Adanga - கொடிய பூண்டுகளை யெல்லாம் உழக்கி,Uzhakki - தலை யழித்துப் போகட்டு கான் அகம்,Kaan Agam - காட்டுக்குள்ளே படி,Padi - இயற்கையாக உலாவி உலாவி,Ulaavi Ulaavi - எப்போதும் உலாவிக் கொண்டு கரு,Karu - கரிய திருமேனியை யுடைய சிறுக்கன்,Sirukkan - சிறு பிள்ளையான கண்ணன் குழல் ஊதின போது;,Kuzhal Oodhina Podhu - குழல் ஊதின போது; மேனகையொடு,Menakaiyodu - மேனகையும் திலோத்தமை,Thilothamai - திலோத்தமையும் அரம்பை,Arambai - ரம்பையும் உருப்பசி,Uruppasi - ஊர்வசியும் (ஆகிற) அரவர்,Aravar - அப்ஸரஸ் ஸ்த்ரீகள் மயங்கி,Mayangi - (அக் குழலோசையைக் கேட்டு) மோஹமடைந்து வெள்கி,Velki - வெட்கப் பட்டு வான் அகம்,Vaan Agam - தேவ லோகத்திலும் படியில்,Padiyil - பூ லோகத்திலும் வாய் திறப்பு இன்றி,Vaai Thirappu Indri - வாயைத் திறவாமல் ஆடல் பாடல் இவை,Aadal Paadal Ivai - ஆடுகை பாடுகை என்கிற இக் காரியங்களை தாமே,Thaame - தாமாகவே மாறினர்,Maarinar - விட்டொழிந்தனர் |
| 279 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (ஆறாம் திருமொழி - நாவலம்) (கண்ணன் புல்லங்குழலூதற்சிறப்பு) 5 | முன் நரசிங்கமதாகி அவுணன் முக்கியத்தை முடிப்பான் மூ வுலகில் மன்னரஞ்சும் மது சூதனன் வாயில் குழலி னோசை செவியைப் பற்றி வாங்க நன்னரம்புடைய தும்புருவோடு நாரதனும் தம் தம் வீணை மறந்து கின்னர மிதுனங்களும் தம் தம் கின்னரம் தொடுகிலோ மென்றனரே–3-6-5 | முன்,Mun - முற்காலத்திலே நரசிங்கம் அது ஆகி,Narasingam Athu Aagi - நரஸிம்ஹ ரூபங்கொண்டு அவுணன்,Avunan - ஹிரண்யாஸுரனுடைய முக்கியத்தை,Mukkiyaththai - மேன்மையை முடிப்பான்,Mudippan - முடித்தவனும் மூ உலகில் மன்னர்,Moo Ulahil Mannar - மூன்று லோகத்திலுமுள்ள அரசர்கள் அஞ்சும்,Anjum - (தனக்கு) அஞ்சும்படியா யிருப்பவனுமான மதுசூதனன்,Madhusoodhanan - கண்ணபிரானுடைய வாயில்,Vaayil - வாயில் (வைத்து ஊதப் பெற்ற) குழலின்,Kuzhalin - வேய்ங்குழலினுடைய ஓசை,Osai - ஸ்வரமானது செவியை,Sevviyai - காதுகளை பற்றி வாங்க,Patri Vaanga - பிடித்திழுக்க நல் நரம்பு உடைய,Nal Narambu Udaiya - நல்ல வீணையைக் கையிலுடைய தும்புருவோடு,Thumburuvodu - தும்புரு முனிவனும் நாரதனும்,Naradhanum - நாரத மஹர்ஷியும் தம் தம்,Tham Tham - தங்கள் தங்களுடைய வீணை,Veenai - வீணையை மறந்து,Marandhu - மறந்து விட கின்னரம் மிதுனங்களும்,Kinnaram Mithunangalum - கிந்நர மிதுநம் என்று பேர் பெற்றுள்ளவர்களும் தம் தம் கின்னரம்,Tham Tham Kinnaram - தங்கள் தங்கள் கின்னர வாத்தியங்களை தொடுகிலோம் என்றனர்,Thodukilom Endranar - ’(இனித் தொடக்கடவோமல்லோம்’ என்று விட்டனர். |
| 280 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (ஆறாம் திருமொழி - நாவலம்) (கண்ணன் புல்லங்குழலூதற்சிறப்பு) 6 | செம் பெருந் தடங் கண்ணன் திரள் தோளன் தேவகி சிறுவன் தேவர்கள் சிங்கம் நம் பரமன் இந்நாள் குழலூதக் கேட்டவர்கள் இடருற்றன கேளீர் அம்பரம் திரியும் காந்தப்ப ரெல்லாம் அமுத கீத வலையால் சுருக் குண்டு நம்பர மன்றென்று நாணி மயங்கி நைந்து சோர்ந்து கைம் மறித்து நின் றனரே–3-6-6 | செம்பெரு தடங் கண்ணன்,Semberu Thadang Kannan - சிவந்து மிகவும் பெரிய திருக்கண்களை யுடையனாய் திரள் தோளன்,Thiral Tholan - பருத்த தோள்களை யுடையனாய் தேவகி சிறுவன்,Devagi Siruvan - தேவகியின் பிள்ளையாய் தேவர்கள் சிங்கம்,Devargal Singam - தேவ சிம்ஹமாய் நம் பரமன்,Nam Paraman - நமக்கு ஸ்வாமியான பரம புருஷனாயிரா நின்ற கண்ணபிரான் இந் நாள்,En Naal - இன்றைய தினம் குழல் ஊத,Kuzhal Oodha - வேய்ங் குழலை ஊத கேட்டவர்கள்,Kaettavargal - (அதன் இசையைக்) கேட்டவர்கள் இடர் உற்றன,Edar Utrana - அவஸ்தைப்பட்ட வகைகளை கேளீர்,Kaaleer - (சொல்லுகிறேன்) கேளுங்கள் அம்பரம்,Ambaram - (அந்த இடர் யாதெனில்) ஆகாசத்திலே திரியும்,Thiriyum - திரியா நின்ற காந்தப்பர் எல்லாம்,Gaanthappar Ellaam - காந்தருவர் அனைவரும் அமுதம் கீதம் வலையால் ,Amudham Geetham Valayal - அமுதம் போல் இனிதான குழலிசையகிற வலையிலே சுருக்குண்டு,Surukkundu - அகப்பட்டு நம் பரம் அன்று என்று,Nam Param Andru Endru - (பாடுகையாகிற) சுமை (இனி) நம்முடையதன்றென்று அறுதியிட்டு நாணி,Naani - (முன்பெல்லாம் பாடித் திரிந்ததற்கும்) வெட்கப்பட்டு மயங்கி,Mayangi - அறிவழிந்து நைந்து,Naindhu - மனம் சிதிலமாகப் பெற்று சோர்ந்து,Sornthu - சரீரமுங் கட்டுக் குலையப் பெற்று கை மறித்து நின்றனர்,Kai Mariththu Ninranar - (இனி நாம் ஒருவகைக் கைத்தொழிலுக்குங் கடவோமலோம் என்று) கையை மடக்கிக் கொண்டு நின்றார்கள் |
| 281 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (ஆறாம் திருமொழி - நாவலம்) (கண்ணன் புல்லங்குழலூதற்சிறப்பு) 7 | புவியுள் நான் கண்டதோ ரற்புதம் கேளீர் பூணி மேய்க்கும் இளங் கோவலர் கூட்டத்து அவையுள் நாகத் தணையான் குழலூத அமர லோகத் தளவும் சென்றிசைப்ப அவி யுணா மறந்து வானவரெல்லாம் ஆயர் பாடி நிறையப் புகுந்து ஈண்டி செவி யுணாவின் சுவை கொண்டு மகிழ்ந்து கோவிந்தனைத் தொடர்ந்து என்றும் விடாரே–3-6-7 | புவியுள்,Puviyul - பூமியிலே நான் கண்டது ஓர் அற்புதம்,Naan Kandathu Or Arputham - நான் கண்ட ஒரு ஆச்சர்யத்தைச் (சொல்லுகிறேன்) கேளீர்,Kaaleer - கேளுங்கள்; (அது யாதெனில்) பூணி,Pooni - பசுக்களை மேய்க்கும்,Meikkum - மேய்க்கா நின்ற இள கோவலர்,Ela Kovalar - இடைப் பிள்ளைகள் கூட்டத்து அவையுள்,Kootathu Avaiyul - திரண்டிருக்கின்ற ஸபையிலே நாகத்து அணையான்,Naagathu Anaiyaan - சேஷ சாயியான கண்ண பிரான் குழல் ஊத,Kuzhal Oodha - குழலூதினவளவிலே, (அதன் ஓசையானது) அமார் லோகத்து அளவும் சென்று,Amaar Lokathu Alavum Sendru - தேவ லோகம் வரைக்கும் பரவி இசைப்ப,Isaippa - (அங்கே) த்வனிக்க (அதைக் கேட்ட) வானவர் எல்லாம்,Vaanavar Ellaam - தேவர்களனைவரும் அவி உணா,Avi Una - ஹவிஸ்ஸு உண்பதை மறந்து,Maranthu - மறந்தொழிந்து ஆயர் பாடி நிறைய புகுந்து,Aayar Paadi Nireya Pugundhu - இடைச்சேரி நிறையும்படி (அங்கே) வந்து சேர்ந்து ஈண்டி,Eendi - நெருங்கி செவி உள் நா,Sevi Ul Naa - செவியின் உள் நாக்காலே இன் சுவை,In Suvai - (குழலோசையின்) இனிய ரஸத்தை கொண்டு,Kondu - உட் கொண்டு மகிழ்ந்து,Magizhndhu - மனங்களித்து கோவிந்தனை,Govindanai - கண்ண பிரானை தொடர்ந்து,Thodarndhu - பின் தொடர்ந்தோடி என்றும்,Endrum - ஒரு க்ஷண காலமும் விடார்,Vidaar - (அவனை) விடமாட்டாதிருந்தனர் |
| 282 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (ஆறாம் திருமொழி - நாவலம்) (கண்ணன் புல்லங்குழலூதற்சிறப்பு) 8 | சிறு விரல்கள் தடவிப் பரிமாறச் செங்கண் கோடச் செய்ய வாய் கொப்பளிக்க குறு வெயர்ப் புருவம் கூடலிப்பக் கோவிந்தன் குழல் கொடு ஊதின போது பறவையின் கணங்கள் கூடு துறந்து வந்து சூழ்ந்து படுகாடு கிடப்ப கறவையின் கணங்கள் கால் பரப்பிட்டுக் கவிழ்ந் திறங்கிச் செவி யாட்ட கில்லாவே–3-6-8 | சிறு விரல்கள்,Siru Viragal - (தனது) சிறிய கை விரல்கள் தடவி,Thadavi - (குழலின் துளைகளைத்) தடவிக் கொண்டு பரிமாற,Parimaara - (அக் குழலின் மேல்) வியாபரிக்கவும் செம் கண்,Sem Kann - செந்தாமரை போன்ற கண்கள் கோட,Koda - வக்ரமாகவும் செய்ய வாய்,Seiya Vaai - சிவந்த திருப்பவளம் கொப்பளிப்ப,Koppalippa - (வாயுவின் பூரிப்பாலே) குமிழ்க்கவும் குறு வெயர் புருவம்,Kuru Veyar Puruva - குறு வெயர்ப் பரும்பின புருவமானது கூடலிப்ப,Koodalippa - மேற் கிளர்ந்து வளையவும் கோவிந்தன் குழல் கொடு ஊதின போது பறவையின் கணங்கள்,Paravaiyin Kanangal - (அக் குழலோசையைக் கேட்ட) பக்ஷிகளின் கூட்டங்கள் கூடு துறந்து,Koodu Thurandhu - (தம் தம்) கூடுகளை விட்டொழிந்து வந்து,Vandhu - (கண்ணனருகில்) வந்து சூழ்ந்து,Soozhndhu - சூழ்ந்து கொண்டு படு காடு கிடப்ப,Padu Kaadu Kidappa - வெட்டி விழுந்த காடு போலே மெய் மறந்து கிடக்க கறவையின் கணங்கள்,Karavaiyin Kanangal - பசுக்களின் திரள் கால் பரப்பிட்டு,Kaal Parappittu - கால்களைப் பரப்பி கவிழ்ந்து இறங்கி,Kavizhnthu Irangi - தலைகளை நன்றாக தொங்க விட்டுக் கொண்டு செவி ஆட்ட கில்லா,Sevi Aatta Killaa - காதுகளை அசைக்கவும் மாட்டாதே நின்றன. |
| 283 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (ஆறாம் திருமொழி - நாவலம்) (கண்ணன் புல்லங்குழலூதற்சிறப்பு) 9 | திரண்டெழு தழை மழை முகில் வண்ணன் செங்கமல மலர் சூழ் வண்டினம் போலே சுருண்டிருண்ட குழல் தாழ்ந்த முகத்தான் ஊதுகின்ற குழ லோசை வழியே மருண்டு மான் கணங்கள் மேய்கை மறந்து மேய்ந்த புல்லும் கடைவாய் வழி சோர இரண்டு பாடும் துலங்காப் புடை பெயரா எழுது சித்திரங்கள் போல நின்றனவே–3-6-9 | திரண்டு எழு,Thirandu Ezu - திரண்டுமேலெழுந்த தழை,Thazhai - தழைத்திராநின்ற மழை முகில்,Mazhai Mukil - காள மேகம் போன்ற வண்ணன்,Vannan - வடிவுடைய கண்ணபிரான் செம் கமலம் மலர் சூழ்,Sem Kamalam Malar Soozh - செந்தாமரைப் பூவைச் சூழ்ந்து படிந்துள்ள வண்டு இனம் போலே,Vandu Inam Pole - வண்டுத் திரளைப் போன்று சுருண்டு இருண்ட,Surundu Irunda - சுருட்சியையும் கறு நிறத்தையுமுடைய குழல்,Kuzhal - திருக்குழல்களானவை தாழ்ந்த,Thaazhndha - தாழ்ந்து அலையப் பெற்ற முகத்தான்,Mugathaan - முகத்தை யுடையவனாய்க் கொண்டு ஊதுகின்ற,Ooduginra - ஊதுகிற குழல் ஓசை வழியே,Kuzhal Osai VazhiyE - குழலின் ஓசையாகிற வழியிலே (அகப்பட்டு) மான் கணங்கள்,Maan Kanangal - மான் கூட்டங்கள் மருண்டு,Marundu - அறிவழிந்து மேய்கை மறந்து,Meykai Marandhu - மேய்ச்சலையும் மறந்து மேய்ந்த,Meyndha - வாயில் கவ்வின புல்லும்,Pullum - புல்லும் கடைவாய்வழி,Kadaivaayvazhi - கடைவாய் வழியாக சோர,Sora - நழுவி விழ, இரண்டு பாடும்,Erandu Paadum - முன் பின்னாகிற இரண்டறாகிலும் துலுங்கா,Thulunga - (காலை) அசைக்காமலும் புடை,Pudi - பக்கங்களில் பெயரா,Peyaraa - அடியைப் பெயர்ந்து இட மாட்டாமலும் எழுது சித்திரங்கள் போல நின்றன ,Ezhudhu Sithirangal Pola Nindrana - (சுவரில்) எழுதப்பட்ட சித்திரப் பதுமை போலத் திகைத்து நின்றன |
| 284 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (ஆறாம் திருமொழி - நாவலம்) (கண்ணன் புல்லங்குழலூதற்சிறப்பு) 10 | கருங்கண் தோகை மயிற் பீலி யணிந்து கட்டி நன்குடுத்த பீதக வாடை அருங்கல வுருவி னாயர் பெருமான் அவனொருவன் குழ லூதின போது மரங்கள் நின்று மது தாரைகள் பாயும் மலர்கள் வீழும் வளர் கொம்புகள் தாழும் இரங்கும் கூம்பும் திருமால் நின்ற நின்ற பக்கம் நோக்கி அவை செய்யும் குணமே–3-6-10 | கருங்கண்,Karungan - கறுத்தகண்களையுடைய தோகை,Thogai - தோகைகளை யுடைய மயில் பீலி,Mayil Peeli - மயில்களின் இறகுகளை அணிந்து,Anindhu - (திருமுடி மேல்) அணிந்து கொண்டு நன்கு கட்டி உடுத்த,Nangu Katti Udutha - நன்றாக அழுந்தச் சாத்தின பீதகம் ஆடை,Peethagam Aadayi - பீதம்பரத்தையும் அரு கலம்,Aru Kalam - அருமையான ஆபரணங்களையும் உருவின்,Uravin - திருமேனியை யுடையனான ஆயர் பெருமானவன் ஒருவன் குழல் ஊதினபோது;,Aiyar Perumanavan Oruvan Kuzhal Oothinapodhu - ஆயர் பெருமானவன் ஒருவன் குழல் ஊதினபோது; மரங்கள்,Marangal - (அசேதநமான) மரங்களுங் கூட நின்று,Nindru - ஒருபடிப்பட நின்று மது தாரைகள்,Madhu Thaaraiyalar - (உள்ளுருகினமை தோற்ற) மகரந்த தாரைகளை பாயும்,Paayum - பெருக்கா நின்றன; மலர்கள்,Malarkal - புஷ்பங்களும் வீழும்,Veezhum - (நிலை குலைந்து) விழா நின்றன; வளர்,Valar - மேல் நோக்கி வளர்கின்ற கொம்புகள்,Kombugal - கொம்புகளும் தாழும்,Thaazhum - தாழா நின்றன; இரங்கும்,Erangum - (அம்மரங்கள் தாம்) உருகா நின்றன கூம்பும்,Koombum - (கை கூப்புவாரைப் போலே, தாழ்ந்த கொம்புகளைக்) குவியா நின்றன; அவை,Avai - (இவ்வாறாக) அந்த மரங்கள் திருமால் நின்ற நின்ற பக்கம் நோக்கி,Thirumal Nindra Nindra Pakkam Nokki - கண்ணன் எந்த எந்தப் பக்கங்களில் நிற்பனோ, அவ்வப் பக்கங்களை நோக்கி, செய்யும் குணம் ஏ,Seyyum Kunam Ea - செய்கின்ற வழிபாடுகள் இருந்தபடி யென்! [என்று வியக்கிறபடி] |
| 285 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (ஆறாம் திருமொழி - நாவலம்) (கண்ணன் புல்லங்குழலூதற்சிறப்பு) 11 | குழலிருண்டு சுருண்டேறிய குஞ்சிக் கோவிந்த னுடைய கோமள வாயில் குழல் முழைஞ்சுகளினூடு குமிழ்த்துக் கொழித்திழிந்த அமுதப் புனல் தன்னை குழல் முழவம் விளம்பும் புதுவைக் கோன் விட்டு சித்தன் விரித்த தமிழ் வல்லார் குழலை வென்ற குளிர் வாயினராகிச் சாது கோட்டியுள் கொள்ளப் படுவாரே–3-6-11 | இருண்டு சுருண்டு ஏறிய,Erundu Surundu Eriya - கறுத்து சுருண்டு நெடுக வளர்ந்த குழல் குஞ்சி,Kuzhal Kunji - அலகலகான மயிர்களை யுடையனான கோவிந்தனுடைய,Govindhanudaiya - கண்ணபிரானுடைய கோமள வாயில்,Komala Vaayil - அழகிய வாயில்(வைத்து ஊதப் பெற்ற) குழல்,Kuzhal - வேய்ங்குழலினுடைய முழஞ்சுகளினூடு,Muzhanjugalinoodu - துளைகளிலே குமிழ்த்து,Kumizhtthu - நீர்க்குமிழி வடிவாகக் கிளர்ந்து(பிறகு அது உடையப் பெற்று) கொழித்து எழுந்த,Kozhiththu Ezhundha - கொழித்துக் கொண்டு மேற்கிளம்பின அமுதம் புனல் தன்னை,Amudham Punal Thannai - அம்ருத ஜலத்தை குழல் முழவம் விளம்பும்,Kuzhal Muzhavam Vilambum - குழலோசை யோடொக்கப் [பரம யோக்யமாக] அருளிச் செய்தவரும் புதுவை கோன்,Puduvai Koon - ஸ்ரீவில்லிப்புத்தூர்க்குத் தலைவருமான விட்டு சித்தன்,Vittu Siththan - பெரியாழ்வார் விரிந்த,Virindha - விஸ்தாரமாகக் கூறிய தமிழ்,Tamil - இத்தமிழ்ப் பாசுரங்களை வல்லார்,Vallaar - ஓத வல்லவர்கள் குழலை வென்ற குளிர் வாயினர் ஆகி,Kuzhalai Vendra Kuleer Vaayinar Aagi - திருக் குழலோசையின் குளிர்த்தியையங் கீழ்ப் படுத்தித் தான் மேலாம்படி குளிர்ந்த வாய் மொழியை யுடையராய் சாது கோட்டியுள்,Saathu Koththiyul - ஸ்ரீ வைஷ்ணவர்கள் கோஷ்டியில் கொள்ளப் படுவார்,Kollappaduvaar - பரிக்ரஹிக்கப் படுவார்கள். |