Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: நெறிந்த (10 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
318ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || பத்தாம் திருமொழி - நெறிந்தகருங்குழல் (இலங்கைக்கு தூதுசென்ற திருவடி பிராட்டியைக் கண்டு, சக்கரவர்த்தித்திருமகன் கூறிய சில அடையாளங்களைக் கூறிக் கணையாழிகொடுத்துக் களிப்பித்தல்) கலிவிருத்தம் 1
நெறிந்த கருங் குழல் மடவாய் நின்னடியேன் விண்ணப்பம்
செறிந்த மணி முடிச் சனகன் சிலை யிறுத்து நினைக் கொணர்ந்தது
அறிந்து அரசு களை கட்ட அருந்தவத்தோன் இடை விலங்க
செறிந்த சிலை கொடு தவத்தைச் சிதைத்ததும் ஓரடையாளம்–3-10-1
நெறிந்த கருங்குழல்,Nerindha Karunguzhal - நெறிப்புக் கொண்ட கரிய கூந்தலை யுடையவளும்
மடவாய்,Madavaai - மடப்பத்தை யுடையவளுமான பிராட்டீ!
நின் அடியேன்,Nin Adiyen - உமது அடியவனான என்னுடைய
விண்ணப்பம்,Vinnappam - விஜ்ஞாபகம் (ஒன்றைக் கேட்டருள வேணும்):
செறிந்த,Serindha - நெருங்கின
மணி,Mani - ரத்நங்களை யுடைய
முடி,Mudi - கிரீடத்தை அணிந்த
சனகன்,Sanagan - ஜநக மஹாராஜன் (கந்யா சுல்யமாக ஏற்படுத்தின)
சிலை,Silai - ருத்ர தநுஸ்ஸை
இறுத்து,Iruththu - முறித்து
நினை,Nina - உம்மை (பிராட்டியை)
கொணர்ந்தது,Konarnthathu - மணம் புரிந்து கொண்டதை
அறிந்து,Arindhu - தெரிந்து கொண்டு
அரசு களை கட்ட,Arasu Kalai Katta - (துஷ்ட) ராஜாக்களை (ப்பயிருக்கு)க்களை களைவது போலழித்த
அருந் தவத்தோன்,Arun Thavaththon - அரிய தவத்தை யுடைய பரசுராமன்
இடை விலங்க,Idai - நடு வழியில் தடுக்க
செறிந்த சிலை கொடு,Nadu Vazhiyil Thadukka - (தனக்குத்) தகுந்த (அப்பரசுராமன் கையிலிருந்த விஷ்ணு) தநுஸ்ஸை வாங்கிக் கொண்டு
தவத்தை,Thavaththai - (அப் பரசுராமனுடைய) தபஸ்ஸை
சிதைத்ததும்,Sithaiththadhum - அழித்ததும்
ஓர் அடையாளம்,Or Adaiyaalam - ஒரு அடையாளமாகும்.
319ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || பத்தாம் திருமொழி - நெறிந்தகருங்குழல் (இலங்கைக்கு தூதுசென்ற திருவடி பிராட்டியைக் கண்டு, சக்கரவர்த்தித்திருமகன் கூறிய சில அடையாளங்களைக் கூறிக் கணையாழிகொடுத்துக் களிப்பித்தல்) கலிவிருத்தம் 2
அல்லியம் பூ மலர்க் கோதாய் அடி பணிந்தேன் விண்ணப்பம்
சொல்லுகேன் கேட்டருளாய் துணை மலர்க் கண் மட மானே
எல்லியம் போதினி திருத்தல் இருந்ததோரிட வகையில்
மல்லிகை மா மாலை கொண்டு அங்கு ஆர்த்ததும் ஓரடையாளம்–3-10-2
அல்லி,Alli - அகவிதழ்களை யுடைய
அம் பூ,Am Poo - அழகிய பூக்களால் தொடுக்கப் பட்ட
மலர்க் கோதாய்,Malark Kothai - பூமாலை போன்றவளே!
அடி பணிந்தேன்,Adi Panindhen - (உமது) திருவடிகளில் வணங்கிய நான்
விண்ணப்பம்,Vinnappam - விஜ்ஞாபநமொன்றை
சொல்லு கேன்,Sollu Kaen - (உம்மிடத்தில்) சொல்லுவேன்;
துணை மலர் கண்,Thunai Malar Kan - ஒன்றோடொன்று ஒத்துத் தாமரை மலர் போன்ற கண்களையும்
மடம்,Madam - மடப்பத்தையு முடைய
மானே,Maanae - மான் போன்றவளே!
கேட்டருளாய்,Kaettarulai - (அதைத்) திருச் செவி சாத்த வேணும்;
அம் எல்லி போது,Am Elli Podhu - அழகிய இராத்திரி வேளையில்
இனிது இருத்தல்,Inidhu Iruththal - இனிமையான இருப்பாக
இருந்தது,Irundhathu - இருந்ததான
ஒர் இடம் வகையில்,Or Idam Vagaiyil - ஓரிடத்தில்
மல்லிகை,Malligai - மல்லிகைப் பூவினால் தொடக்கப்பட்ட
மா மாலை கொண்டு,Maa Maalai Kondu - சிறந்த மாலையினால்
ஆர்த்ததும்,Aarththadhum - (நீர் இராம பிரானைக்) கட்டியதும்
ஓர் அடையாளம்.,Or Adaiyaalam - ஒரு அடையாளமாகும்.
320ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || பத்தாம் திருமொழி - நெறிந்தகருங்குழல் (இலங்கைக்கு தூதுசென்ற திருவடி பிராட்டியைக் கண்டு, சக்கரவர்த்தித்திருமகன் கூறிய சில அடையாளங்களைக் கூறிக் கணையாழிகொடுத்துக் களிப்பித்தல்) கலிவிருத்தம் 3
கலக்கிய மா மனத்தனளாய்க் கைகேசி வரம் வேண்ட
மலக்கிய மா மனத்தனனாய் மன்னவனும் மறாதொழிய
குலக்குமரா காடுறையப் போ என்று விடை கொடுப்ப
இலக்குமணன் தன்னொடும் அங்கு ஏகியது ஓரடையாளம்–3-10-3
கைகேசி,Kaikaesi - கைகேயியானவள்
கலக்கிய மா மனத்தனன் ஆய்,Kalakkiya Maa Manaththanan Aay - (மந்தாரையினாள்) கலக்கப்பட்ட சிறந்த மனத்தை யுடையவளாய்
வரம் வேண்ட,Varam Venda - (தசரதர் முன் தனக்குக் கொடுத்திருந்த) வரங்களின் பயனைக் கேட்க
மலக்கிய,Malakkiya - (அக் கைகேயியின் வார்த்தையால்) கலக்கமடைந்த
மா மனத்தனன் ஆய்,Maa Manaththanan Aay - சிறந்த மனத்தை யுடையவனாய்
மன்னவனும்,Mannavanum - தசரத சக்ரவர்த்தியும்
மறாது,Maraadhu - மறுத்துச் சொல்ல முடியாமல்
ஒழிய,Oliya - வெறுமனே கிடக்க,
குலம் குமரா,Kulam Kumaraa - (அந்த ஸந்தர்ப்பத்தில் கைகேயியானவள்,) “உயர் குலத்திற்பிறந்த குமாரனே)
காடு உறைய,Kaadu Uraiya - காட்டிலே (பதினான்கு வருஷம்) வஸிக்கும்படி
போ என்று,Poa Endru - போய் வா” என்று சொல்லி
விடை கொடுப்ப,Vidai Koduppa - விடை கொடுத்தனுப்ப
அங்கு,Angu - அக் காட்டிலே
இலக்குமணன் தன்னொடும்,Ilakkuamanan Thannodum - லக்ஷ்மணனோடு கூட
ஏகியது,Eagiyathu - (இராமபிரான்) சென்றடைந்ததும்
ஓர் அடையாளம்.,Or Adaiyaalam - ஒரு அடையாளமாகும்.
321ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || பத்தாம் திருமொழி - நெறிந்தகருங்குழல் (இலங்கைக்கு தூதுசென்ற திருவடி பிராட்டியைக் கண்டு, சக்கரவர்த்தித்திருமகன் கூறிய சில அடையாளங்களைக் கூறிக் கணையாழிகொடுத்துக் களிப்பித்தல்) கலிவிருத்தம் 4
வாரணிந்த முலை மடவாய் வைதேவீ விண்ணப்பம்
தேரணிந்த அயோத்தியர் கோன் பெருந்தேவீ கேட்டருளாய்
கூரணிந்த வேல் வலவன் குகனோடும் கங்கை தன்னில்
சீரணிந்த தோழமையைக் கொண்டதும் ஓரடையாளம்–3-10-4
வார் அணிந்த,Vaar Anindha - கச்சை அணிந்த
முலை,Mulai - முலையையும்
மடவாய்,Madavaai - மடப்பத்தையுமுடைய பிராட்டீ!
வைதேவீ,Vaithevi - விதேஹ வம்சத்திற் பிறந்தவனே!
விண்ணப்பம்,Vinnappam - ஒரு விஜ்ஞாபகம்;
தேர் அணிந்த,Ther Anindha - தேர்களாலே அலங்காரமான
அயோத்தியர் கோன்,Ayoththiyar Kon - அயோத்தியிலுள்ளார்க்கு அரசனாதற்கு உரிய இராமபிரானது
பெருந்தேவீ,Perundhevi - பெருமைக்குத் தகுந்த தேவியே!
கேட்டருளாய்,Kaettarulai - அவ் விண்ணப்பத்தைக் கேட்டருளவேணும்;
கூர் அணிந்த,Koor Anindha - கூர்மை பொருந்திய வேலாயுதத்தில் வல்லவனாகிய
குகனோடும்,Guganodum - குஹப் பெருமாளோடு கூட
கங்கை தன்னில்,Gangai Thannil - கங்கை கரையிலே
சீர் அணிந்த தோழமை,Seer Anindha Thozhamai - சிறப்புப் பொருந்திய ஸ்நேஹத்தை
கொண்டதும்,Kondadhum - பெற்றதும்
ஓர் அடையாளம்.,Or Adaiyaalam - ஒரு அடையாளமாகும்.
322ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || பத்தாம் திருமொழி - நெறிந்தகருங்குழல் (இலங்கைக்கு தூதுசென்ற திருவடி பிராட்டியைக் கண்டு, சக்கரவர்த்தித்திருமகன் கூறிய சில அடையாளங்களைக் கூறிக் கணையாழிகொடுத்துக் களிப்பித்தல்) கலிவிருத்தம் 5
மானமரு மெல் நோக்கி வைதேவீ விண்ணப்பம்
கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்த காலத்து
தேனமரும் பொழிற் சாரல் சித்திர கூடத்து இருப்ப
பால் மொழியாய் பரத நம்பி பணிந்ததும் ஓரடையாளம்-3-10-5
மான் அமரும்,Maan Amarum - மானை யொத்த
மென் நோக்கி,Men Nookki - மென்மையான கண்களை யுடையவளான
பால் மொழியாய்,Paal Mozhiyaai - பால் போல் இனியபேச்சை யுடையவளே!
விண்ணப்பம்;,Vinnappam - ஒரு விஜ்ஞாபகம்;
கான் அமரும்,Kaan Amarum - காட்டில் பொருந்திய
கல் அதர் போய்,Kal Adhar Poi - கல் நிறைந்த வழியிலேயே
காடு உறைந்த காலத்து,Kaadu Uraindha Kaalaththu - காட்டில் வஸித்த போது
தேன் அமரும் பொழில்,Then Amarum Pozhil - வண்டுகள் பொருந்திய சோலைகளை யுடைய
சாரல்,Saaral - தாழ்வரையோடு கூடிய
சித்திர கூடத்து,Siththira Koodaththu - சித்திர கூட பர்வதத்தில்
இருப்ப,Irup - நீங்கள் இருக்கையில்
பரதன் நம்பி,Barathan Nambi - பரதாழ்வான்
பணிந்ததும்,Panindhadum - வந்து வணங்கியதும்
ஓர் அடையாளம்.,Or Adaiyaalam - ஒரு அடையாளமாகும்.
323ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || பத்தாம் திருமொழி - நெறிந்தகருங்குழல் (இலங்கைக்கு தூதுசென்ற திருவடி பிராட்டியைக் கண்டு, சக்கரவர்த்தித்திருமகன் கூறிய சில அடையாளங்களைக் கூறிக் கணையாழிகொடுத்துக் களிப்பித்தல்) கலிவிருத்தம் 6
சித்திர கூடத்து இருப்பச் சிறு காக்கை முலை தீண்ட
அத்திரமே கொண்டெறிய அனைத்துலகும் திரிந்தோடி
வித்தகனே இராமாவோ நின்னபயம் என்று அழைப்ப
அத்திரமே அதன் கண்ணை அறுத்ததும் ஓரடையாளம்–3-10-6
சித்திரக்கூடத்து ,Siththirak Koodaththu - சித்திரகூட பர்வதத்தில்
இருப்ப,Irup - நீங்களிருவரும் ரஸாநுபவம் பண்ணிக் கொண்டிருக்கையில்
சிறு காக்கை,Siru Kaakkai - சிறிய காக்கையின் வடிவு கொண்டு வந்த ஜயந்தன்
முலை தீண்ட,Mulai Theenda - (உமது) திரு முலைத் தடத்தைத் தீண்ட
அத்திரமே கொண்டு,Aththiramae Kondu - (அதனாற் சீற்றமுற்ற ஸ்ரீராமன்) ப்ரஹ்மாஸ்திரத்தைத் தொடுத்து
எறிய,Eriya - பிரயோகிக்க,
அனைத்து உலகும்,Anaiththu Ulagum - (அக் காகம் அதற்குத் தப்புவதற்காக) உலகங்களிலெல்லாம்
திரிந்து ஓடி,Thirindhu Oadi - திரிந்து ஓடிப் போய்
வித்தகனே,Viththagane - (தப்ப முடியாமையால் மீண்டு இராமபிரானையே அடைந்து) “ஆச்சரியமான குணங்களை யுடையவனே!
இராமா,Raamaa - ஸ்ரீ ராமனே!
ஓ,O - ஓ !!
நின் அபயம்,Nin Abayam - (யான்) உன்னுடைய அடைக்கலம்”
என்று அழைப்ப,Endru Azhaippa - என்று கூப்பிட
அத்திரமே,Aththiramae - (உயிரைக் கவர வேணுமென்று விட்ட அந்த) அஸ்த்ரமே
அதன் கண்ணை,Adhan Kannai - அந்தக் காகத்தின் ஒரு கண்ணை மாத்திரம்
அறுத்ததும்,Aruththadhum - அறுத்து விட்டதும் ஓர் அடையாளம்
324ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || பத்தாம் திருமொழி - நெறிந்தகருங்குழல் (இலங்கைக்கு தூதுசென்ற திருவடி பிராட்டியைக் கண்டு, சக்கரவர்த்தித்திருமகன் கூறிய சில அடையாளங்களைக் கூறிக் கணையாழிகொடுத்துக் களிப்பித்தல்) கலிவிருத்தம் 7
மின்னொத்த நுண்ணிடையாய் மெய் யடியேன் விண்ணப்பம்
பொன்னொத்த மானொன்று புகுந்து இனிது விளையாட
நின்னன்பின் வழி நின்று சிலை பிடித்து எம்பிரான் ஏக
பின்னே அங்கு இலக்குமணன் பிரிந்ததும் ஓரடையாளம்–3-10-7
மின் ஒத்த,Min Oththa - மின்னலைப் போன்ற
நுண் இடையாய்,Nun Idaiyaai - மெல்லிய இடையை யுடையவளே!
மெய் அடியேன்,Mei Adiyen - உண்மையான பக்தனாகிய எனது
விண்ணப்பம்,Vinnappam - விண்ணப்பத்தை (க் கேட்டருள வேணும்;)
பொன் ஒத்த,Pon Oththa - பொன் நிறத்தை ஒத்த (நிறமுடைய)
மான் ஒன்று,Maan Ondru - (மாரீசனாகிய) ஒருமான்
புகுந்து,Pugundhu - (பஞ்சவடியில் நீரிருக்கும் ஆச்ரமத்தருகில் வந்து
இனிது விளையாட,Inidhu Vilaiyaada - அழகாக விளையாடா நிற்க,
நின் அன்பின் வழி நின்று,Nin Anbin Vazi Nindru - (அதை மாயமான் என்று இளையபெருமாள் விலக்கவும்) உம்முடைய ஆசைக்குக் கட்டுப்பட்டு நின்று
சிலை பிடித்து,Silai Pitiththu - வில்லை யெடுத்துக் கொண்டு
எம்பிரான்,Empiraan - இராமபிரான்
ஏக,Eaga - அம்மானைப் பிடித்துக் கொணர்வதாக அதன் பின்னே தொடர்ந்து) எழுந்தருள,
பின்னே,Pinnae - பிறகு
அங்கு,Angu - அவ் விடத்தில்
இலக்குமணன்,Ilakkuamanan - இளைய பெருமாளும்
பிரிந்ததும்,Pirindhadhum - பிரிந்ததுவும் ஓர் அடையாளம்
325ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || பத்தாம் திருமொழி - நெறிந்தகருங்குழல் (இலங்கைக்கு தூதுசென்ற திருவடி பிராட்டியைக் கண்டு, சக்கரவர்த்தித்திருமகன் கூறிய சில அடையாளங்களைக் கூறிக் கணையாழிகொடுத்துக் களிப்பித்தல்) கலிவிருத்தம் 8
மைத் தகு மா மலர்க் குழலாய் வைதேவீ விண்ணப்பம்
ஒத்த புகழ் வானரக்கோன் உடனிருந்து நினைத் தேட
அத் தகு சீரயோத்தியர் கோன் அடையாள மிவை மொழிந்தான்
இத் தகையால் அடையாளம் ஈது அவன் கை மோதிரமே-3-10-8
மை தகு,Mai Thagu - மைபோல் விளங்குகிற
மா மலர்,Maa Malar - சிறந்த புஷ்பங்களை அணிவதற்கு உரிய
குழலாய்,Kuzhalaai - கூந்தலை யுடையவளே!
வைதேவி,Vaithevi - வைதேஹியே!
ஒத்த புகழ்,Oththa Pugazh - “பெருமாளோடு இன்பத் துன்பங்களை) ஒத்திருக்கப் பெற்றவன்” என்ற கீர்த்தியை யுடைய
வானரர் கோன் உடனிருந்து,Vaanarar Kon Udanirundhu - (இராமபிரானோடு) கூட இருந்து
நினை தேட,Ninaith Theda - உம்மை தேடும்படி (ஆள் விடுகையில் என்னிடத்து விசேக்ஷமாக அபிமானிக்க)
அத் தகு சீர்,Ath Thagu Seer - (பிரிந்த) அந்த நிலைக்குத் தகுதியான குணமுள்ள
அயோத்தியர் கோன்,Ayoththiyar Kon - அயோத்தியிலுள்ளார்க்குத் தலைவைரான பெருமாள்
அடையாளம் இவை,Adaiyaalam Ivai - இவ் வடையாளங்களை
மொழிந்தான்,Mozhindhaan - (என்னிடத்திற்) சொல்லி யருளினான்;
அடையாளம்,Adaiyaalam - (ஆதலால்) (யான் சொன்ன) அடையாளங்கள்
இத் தகையால்,Ith Thagaiyaal - இவ்வழியால் (வந்தன); (அன்றியும்)
ஈது,Eedhu - இதுவானது
அவன்,Avan - அவ்விராம பிரானுடைய
கை மோதிரம்,Kai Modhiram - திருக்கையிலணிந்து கொள்ளும் மோதிரமாகும்.
326ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || பத்தாம் திருமொழி - நெறிந்தகருங்குழல் (இலங்கைக்கு தூதுசென்ற திருவடி பிராட்டியைக் கண்டு, சக்கரவர்த்தித்திருமகன் கூறிய சில அடையாளங்களைக் கூறிக் கணையாழிகொடுத்துக் களிப்பித்தல்) கலிவிருத்தம் 9
திக்கு நிறை புகழாளன் தீ வேள்விச் சென்ற நாள்
மிக்க பெருஞ் சபை நடுவே வில்லிறுத்தான் மோதிரம் கண்டு
ஒக்குமால் அடையாளம் அனுமான் என்று உச்சி மேல்
வைத்துக் கொண்டு உகந்தனளால் மலர்க் குழலாள் சீதையுமே–3-10-9
திக்கு,Thikku - திக்குகளிலே
நிறை,Nirai - நிறைந்த
புகழ் ஆனன்,Pugazh Aanan - கீர்த்தியை யுடையவனான ஜநக ராஜனுடைய
தீ வேள்வி,Thee Velvi - அக்நிகளைக் கொண்டு செய்யும் யாகததில்
சென்ற,Sendra - (விஸ்வாமித்திரருடன்) போன
மிக்க பெருசபை நடுவே,Mikka Perusabai Naduvae - மிகவும் பெரிய ஸபையின் நடுவில்
வில்லிறுத்தான்,Villiruththaan - ருத்ர தநுஸ்ஸை முறித்த இராமபிரானுடைய
மோதிரம்,Modhiram - மோதிரத்தை
கண்டு,Kandu - பார்த்து
மலர் குழலாள்,Malar Kuzhalaal - பூச்சூடிய கூந்தலை யுடையவளான
சீதையும்,Seethaiyum - ஸுதாப் பிராட்டியும்,
அனுமான்,Anumaan - ‘வாராய் ஹனுமானே!
அடையாளம் ?,Adaiyaalam - (நீ சொன்ன) அடையாளங்களெல்லாம்
ஒக்கும்,Okkum - ஒத்திரா நின்றுள்ளவையே
என்று,Endru - என்று (திருவடியை நோக்கிச்) சொல்லி (அந்தத் திருவாழியை)
உச்சி மேல் வைத்துக் கொண்டு,Uchchi Mael Vaiththuk Kondu - தன் தலையின் மீது வைத்துக் கொண்டு
உகந்தான்,Ugandhaan - மகிழ்ந்தான்
327ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || பத்தாம் திருமொழி - நெறிந்தகருங்குழல் (இலங்கைக்கு தூதுசென்ற திருவடி பிராட்டியைக் கண்டு, சக்கரவர்த்தித்திருமகன் கூறிய சில அடையாளங்களைக் கூறிக் கணையாழிகொடுத்துக் களிப்பித்தல்) கலிவிருத்தம் 10
வாராரும் முலை மடவாள் வைதேவி தனைக் கண்டு
சீராரும் திறலனுமன் தெரிந்துரைத்த அடையாளம்
பாராரும் புகழ்ப் புதுவைப் பட்டர் பிரான் பாடல் வல்லார்
ஏராரும் வைகுந்தத்து இமையவரோடு இருப்பாரே.–3-10-10
வார் ஆரும்,Vaar Aarum - கச்சு அணிந்திருக்கைக்கு உரிய
முலை,Mulai - முலையையும்
மடலாள்,Madalaal - மடப்பத்தை யுமுடையவளான
வைதேவிதனை,Vaithevidhanai - ஸீதா பிராட்டியை
கண்டு,Kandu - பார்த்து
சீர் ஆரும்,Seer Aarum - சக்தியை யுடையவனான
திறல்,Thiral - சிறிய திருவடி
தெரிந்து,Therindhu - (பெருமாளிடத்தில் தான்) அறிந்து கொண்டு.
உரைந்து,Uraindhu - (பின்பு பிராட்டியிடத்திற்) சொன்ன
அடையாளம்,Adaiyaalam - அடையாளங்களை (க் கூறுவதான)
பார் ஆளும் புகழ்,Paar Aazhum Pugazh - பூமி யெங்கும் பரவின கீர்த்தியை யுடையராய்
புதுவை,Pudhuvai - ஸ்ரீவில்லிபுத்தூருக்குத் தலைவரான
பட்டர்பிரான் பாடல்,Pattarpiraan Paadal - பெரியாழ்வார் அருளிச் செய்த இப்பாடல்களை
வல்லார்,Vallaar - ஓத வல்லார்கள்
ஏர் ஆரும் வைகுந்தத்து,Er Aarum Vaikunthaththu - வல்லா நன்மைகளும் நிறைந்த ஸ்ரீவைகுண்டததில்
இமையவரோடு,Imaiyavarodu - நித்ய ஸூரிகளோடு
இருப்பார்,Irupaar - கோவையா யிருக்கப் பெறுவார்கள்.