Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: பத்துடை (11 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2697திருவாய்மொழி || 1-3-பத்துடை (அடியவர்க்கு எளியவன்) (எம்பெருமானுடைய ஸௌலப்யம் நன்கு விளங்கினது அவதாரங்களிலாதலால் அப்படிப்பட்ட அவதாரங்களுள்ளும் நீர்மைக்கு எல்லையான க்ருஷ்ணாவதாரத்திலே யிழிந்து, அதிலேயும் பரத்வத்தோடு ஸமமாகச் சொல்லக் வடிய நிலைகளிற் செல்லாதே, வெண்ணெய் களவுகண்டு கட்டுண்டு வருந்தியேங்கி நின்ற நிலையிலே யகப்பட்டு இப்படியும் ஒரு எளிமைக்குணமுண்டோவென்று ஈடுபடுகிறார்.) 1
பத்துடை யடியவர்க்கு எளியவன் பிறர்களுக்கு அரிய
வித்தகன் மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள்
மத்துறு கடை வெண்ணெய் களவினில் உரவிடை யாப்புண்டு
எத்திறம் உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவே –1-3-1-
பத்து உடை, Pattu udai - பக்தியை யுடைய
அடியவர்க்கு, Adiyavarkku - அடியார்களுக்கு
எளியவன், Eliyavan - ஸுலபனாயும்
பிறர்களுக்கு, Pirarkalukku - மற்றையோர்களுக்கு
அரிய, Ariya - துர்லபனாயுமிருக்கிற
வித்தகன், Vitthakan - ஆச்சரிய பூதனும்,
மலர் மகள் விரும்பும், Malar magal virumbum - பெரிய பிராட்டியார் விரும்புதற் கீடானவனும்
பெறல் அரு, Peral aru - பெறுதற்கு அரியனுமான
நம் அடிகள், Nam adigal - நமது ஸ்வாமி
மத்து உறு கடை வெண்ணெய் களவினில், Matthu uru kadai vennay kalavinil - (யசோதைப் பிராட்டி) மத்தை யுறுத்திக் கடைகின்ற வெண்ணெயினுடைய களவில்
உரம் இடை, Uram idai - மார்வினிடையிலே
ஆப்புண்டு, Appundu - கட்டுண்டு
உரலினோடு இணைந்திருந்து, Uralinodu inaindhirundhu - உரலோடு பொருந்தி இருந்து
ஏங்கிய, Aengiya - ஏங்கி யிருந்த
எளிவு, Elivu - எளிமைக் குணம்
எத்திறம், Etthiram - எப்படிப்பட்டது!
2698திருவாய்மொழி || 1-3-பத்துடை (அடியவர்க்கு எளியவன்) (ஸ்ரீமதுரகவிகள் முதலான ஸத்துக்களடங்கலும் மோஹிதரான ஆழ்வாரைச் சூழ்ந்து கொண்டிருந்தார்கள். திருவாய்மொழியை அநுபவிக்கப் பிறந்த மஹான்களின் பாக்கியத்தினால் மோஹங் கழிந்து தெளிவுபெற்ற ஆழ்வார் ப்ரஸ்துதமான ஸௌலப்ய குணத்தை விசேஷித்து அருளிச் செய்யத் தொடங்குகிறாரிதில்) 2
எளிவரும் இயல்வினன் நிலை வரம்பில பல பிறப்பாய்
ஒளி வரு முழு நலம் முதலில கேடில வீடாம்
தெளிதரு நிலைமையது ஒழிவிலன் முழுவதும் இறையோன்
அளிவரும் அருளினோடு அகத்தனன் புறத்தனன் அமைந்தே –1-3-2-
நிலை வரம்பு இல பல பிறப்பு ஆய், Nilai varambu ila pala pirappu aay - ஒரு நிலையும் ஒரு நியதியும் இல்லாத பலவகைப் பிறப்பை யுடையனாய்
முதல் இல கேடு இல முழு நலம், Mudhal ila kedu ila muzhu nalam - முதலுமில்லாமல் முடிவுமில்லாமலிருக்கின்ற கல்யாண குணங்களெல்லாம்
ஒளி வரும், Oli varum - ஒளி மல்கும்படியான
எளி வரும் இயல்பினன், Eli varum iyalbinan - ஸௌலப்யத்தையே இயல்வாக வுடையனாய்
வீடு ஆம் தெளி தரு நிலைமை அது முழுவதும், Veedu aam theli tharu nilaimai adhu muzhu vadhum - மோக்ஷமாகிற தெளிவைத் தருதலாகிற அந்த நிலைமையை முழுவதும்
ஒழிவு இலன், Ozivu ilan - எப்போதும் உடையவனான
இறையோன், Iraiyon - ஸ்வாமியானவன்
அளிவரும் அருளினோடு அமைந்து, Alivarum arulinodu amainthu - அளித்த கிருபையோடே கூடி
அகத்தனன், Agaththanan - (அடியவர்க்கு) அந்தரங்கனாய்
புறந்தனன், Puranthanan - (மற்றையோர்க்கு) அணுகத் தகாதவனாயிருப்பன்.
2699திருவாய்மொழி || 1-3-பத்துடை (அடியவர்க்கு எளியவன்) (எம்பெருமானுடைய அவதாரஹஸ்யம் ஒருவர்க்கும் அறியவொண்ணாததென்கிறது இப்பாட்டில்) 3
அமைவுடை யறநெறி முழுவதும் உயர்வற வுயர்ந்து
அமைவுடை முதல் கெடல் ஓடிவிடை யறநில மதுவாம்
அமையுடைய யமரரும் யாவரும் யாவையும் தானாம்
அமைவுடை நாரணன் மாயையை அறிபவர் யாரே–1-3-3-
அமைவு உடை, Amaivu udai - நல்ல பல பரிபாகத்தை யுடைத்தான
அறம் நெறி முழுவதும், Aram neri muzhu vadhum - தரும மார்க்கம் எல்லாவற்றாலும்
உயர்வு அற உயர்ந்து, Uyarvu ara uyarnthu - இதற்கு மேல் உயர்த்தி யில்லை என்னும் படியாக மிக வுமுயர்ந்தவர்களாகி
அற, Ara - மிகவும்
நிலம் அது ஆம், Nilam adhu aam - கை வந்திருக்கப் பெறுவதாகிற
அமைவு உடை, Amaivu udai - சதிரை யுடையரான
அமரரும், Amararum - பிரமன் முதலிய தேவர்களும்
யாவையும், Yaavaiyum - எல்லா அசேதனங்களும்
அமைவு உடை, Amaivu udai - (ஆச்சரியப் படத் தகுந்த அமைதியை யுடைய
கெடல், Kedal - முதல் ஸ்ருஷ்டியென்ன
ஸம்ஹாரமென்ன

யாவரும், Yaavarum - எல்லாச் சேதனர்களும்
தான் ஆம், Thaan aam - தானே யாம்படியான
அமைவு உடை, Amaivu udai - பொருத்தம் பொருந்திய
நாரணன், Naaranan - நாராயணனுடைய
மாயையை, Maayaiyai - அவதார ரஹஸ்யத்தை
யாரே அறிபவர், Yaare arivabar - ஆர் தாம் அறியவல்லார்? (ஆருமில்லை)
2700திருவாய்மொழி || 1-3-பத்துடை (அடியவர்க்கு எளியவன்) (எம்பெருமானுடைய திவ்யாவதாரங்கள் ஒருவர்க்கும் அறியப் போகாதோவென்ன, அடியவர்க்கு எளிதில் அறியக் கூடியவையாய் மற்றையோர்க்குச் சிறிதும் அறியப்போகாதவனாயிருக்குமென்கிறாரிதில்.) 4
யாரும் ஓர் நிலைமையன் என அறிவரிய வெம்பெருமான்
யாரும் ஓர் நிலைமையன் என அறிவெளிய வெம்பெருமான்
பேருமோர் ஆயிரம் பிற பல வுடைய எம்பெருமான்
பேருமோர் உருவமும் உளதில்லை இலதில்லை பிணக்கே –1-3-4-
பேரும், Perum - (விக்ரஹத்தைப் பற்றின) திருநாமங்களும்
பிற, Piru - (அந்தத் திருநாமங்களுக்கேற்ற) விக்ரஹங்களும்
பல ஆயிரம் உடைய, Pala aayiram udaiya - அனேகமாயிரம் உடையனாய்க் கொண்டு தோற்றி
எம்பெருமான், Emperumaan - எமக்கு நாதனானவனாய்,
யாரும், Yaarum - எப்படிப்பட்ட ஞானிகளுக்கும்
ஓர் நிலைமையன் என அறிவு அரிய எம்பெருமான், Oru nilai maiyan ena arivu ariya emperumaan - ஒரு படியை யுடையவன் என்று அறுதியிட வொண்ணாத பெருமானாய்.
யாரும், Yaarum - (அன்பர்களாகில்) அறிவில்லாதவர்களானார்க்கும்.
ஓர் நிலைமையன் என் அறிவு எளிய எம்பெருமான், Oru nilai maiyan en arivu eliya emperumaan - ஒரு படிப்பட்டவனென்று அறியக்கூடிய பெருமானான பகவானுக்கு
ஓர் பேரும், Oru perum - ஒரு பேரும்
ஓர் உருவமும், Oru uruvamum - ஒரு ரூபமும்
உளது இல்லை, Uladhu illai - உண்டாயிருப்பதில்லையென்று (பிரதிகூலர்க்கும்)
இலது இல்லை, Iladhu illai - இல்லையாய் இருப்பதில்லையென்று (அநுகூலர்க்கும்)
பிணக்கே, Pinakke - நித்ய விவாதமாயேயிருக்கும்.
2701திருவாய்மொழி || 1-3-பத்துடை (அடியவர்க்கு எளியவன்) (ஆச்ரயிக்கத் தக்கவனான எம்பெருமான் எளியனென்பது அறிந்தோம்; அன்னவனை ஆச்ரயிக்கும் வழி என்ன?’ என்று ஸம்ஸாரிகள் கேட்பதாகக் கொண்டு, அவன் கீதையிலே அருளிச் செய்துவைத்த பக்திமார்க்கத்தாலே அவனை ஆச்ரயியுங்கோள் என்கிறார். 5
பிணக்கற வறுவகைச் சமயமும் நெறியுள்ளி யுரைத்த
கணக்கற நலத்தனன் அந்தமில் ஆதியம் பகவன்
வணக்குடைத் தவ நெறி வழி நின்று புறநெறி களை கட்டு
உணக்குமின் பசையற வவனுடை உணர்வு கொண்டு உணர்ந்தே –1-3-5-
அறு வகை சமயமும் பிணக்கு அற, Aru vakai samayamum pinakku ara - ஆறுவகைப்பட்ட மதங்களும் (வைதிக மார்க்கத்தோடு) பிணக்கம் ஒழியும்படி.
நெறி, Neri - வேத மார்க்கத்தை
உள்ளி, Ulli - ஆராய்ந்து
உரைத்த, Uraitha - அருளிச் செய்த
கணக்கு அறு நலத்தனன், Kanakku aru nalaththan - எண்ணிறந்த கல்யாண குணங்களை யுடையவனும்
அந்தமில் ஆகி, Andhamil aagi - முடிவில்லாத முதல்வனும்
அம் பகவன், Am bhagavan - அழகான குணங்களை யுடையவனுமான எம்பெருமானது
வணக்கு உடை, Vanakku udai - வணக்கத்தையுடைய
தவம் நெறி, Thavam neri - பக்தி (அல்லது) ப்ரபத்தி ஆகிற
வழிநின்று, Valinndru - மார்க்கத்தில் நின்று
புறம்நெறிகளை, Puram nerigalai - வேறு மார்க்கங்களாகிற களையை
கட்டு, Kattu - பறித்து
அவனுடைய உணர்வு கொண்டு, Avanudaiya unarvu kondu - அவனளித்த கீதையைக் கொண்டு
உணர்ந்து, Unarndhu - உணர்ச்சி பெற்று
பசையற, Pasaiyara - வாஸநா ரூபமான பற்றும் அறும்படி
உணக்குமின், Unakkumin - உலர்த்தி விடுங்கள்.
2702திருவாய்மொழி || 1-3-பத்துடை (அடியவர்க்கு எளியவன்) (த்ரிமூர்த்திஸாம்ய ப்ரமத்தைப் பரிஹரிக்குமடைவிலே அருளிச் செய்கிற பாசுரம் இது) 6
உணர்ந்து உணர்ந்து இழிந்து அகன்று உயர்ந்து உருவியந்த இந்நிலைமை
உணர்ந்து உணர்ந்து உணரிலும் இறை நிலை உணர்வு வரிது உயிர்காள்
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து அரி அயன் அரன் என்னும் இவரை
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து இறைஞ்சுமின் மனப்பட்ட தொன்றே –1-3-6-
உணர்ந்து உணர்ந்து, Unarndhu unarndhu - உணர்வையே இயற்கையாக வுடையானாகி
இழிந்து அகன்று உயர்ந்து, Izhindhu akanru uyarthu - (அந்த உணர்வு அகண்ட மாகையாலே) பத்துத் திக்கிலும் வியாபித்து
உரு வியந்த, Uru viyandha - ஜடப் பொருளில் நின்றும் வேறுபட்டிருக்கிற
இ நிலைமை, I nilai mai - இந்த ஆத்மாவின் ஸ்வரூபத்தை
உணர்ந்து, Unarndhu - கேள்வியாலே அறிந்து
உணர்ந்து, Unarndhu - மநநத்தினாலே அறிந்து
உணரிலும், Unarilum - யோகாத்தாலே ப்ரத்யக்ஷமாக அறிந்தாலும்
இறை நிலை உணர்வு, Irai nilai unarvu - ஸர்வேச்வரனுடைய நிலைமையை அறிவதாவது
அரிது, Aridhu - அருமையாயிருக்கின்றது; (ஆயினும்;)
உயிர்கான், Uyirkaan - சேதநர்களே!
அரி அயன் அரன் என்னும் இவரை, Ari ayan aran ennum ivarai - விஷ்ணு பிரமன் ருத்ரன் என்று சொல்லப்படுகிற இவர்களை
உணர்ந்து உணர்ந்து, Unarndhu unarndhu - (ஒவ்வொருவருடையவும்) குணம் முதலியவற்றைக் கொண்டு பலகாலும் ஆராய்ந்து.
உரைத்து உரைத்து, Uraithu uraithu - (அதற்கு இணங்கப்) ப்ரமாணங்களை வ்யவஹரித்துப் பார்த்து
மனப்பட்டது ஒன்று, Manappattadhu onru - உங்கள் மனதில் ஈச்வரனாகத் தோன்றின ஒரு பொருளை
உணர்ந்து உணர்ந்து, Unarndhu unarndhu - பலகாலும் அநுஸந்தித்து
உரைத்து உரைத்து, Uraithu uraithu - (அப்பொருளின் மந்திரம் திருநாமம் முதலியவற்றைப்) பலகாலும் சொல்லி
இறைஞ்சுமின், Iraijumin - உபாஸியுங்கோள்
2703திருவாய்மொழி || 1-3-பத்துடை (அடியவர்க்கு எளியவன்) (ஆராய வேண்டிய படியை விசதமாகவுபதேசித்து விரைவாக ஆச்ரயியுங்கோளென்கிறாரிப்பாட்டில்.) 7
ஓன்று என பலவென வறிவரும் வடிவினுள் நின்ற
நன்ற எழில் நாரணன் நான்முகன் அரன் என்னும் இவரை
ஒன்ற நும் மனத்து வைத்து உள்ளி நும் இரு பசை அறுத்து
நன்றென நலம் செய்வது அவனிடை நம்முடைய நாளே –-1-3-7-
ஒன்று என, Ondru ena - ஒன்றென்றும்
பல என, Pala ena - பலதென்றும் (அதாவது ஒருவர் பிரதானனென்றும் பலர் பிரதானனென்றும்)
அறிவு அரு, Arivu aru - அறிதற்கு அரிதான
வடிவினுள், Vadivinul - உருவுக்குள்ளே
நின்ற, Nindra - நிலைத்திருக்கிற
நன்று, Nandru - விலக்ஷணமான
எழில், Ezlil - கல்யாண குணங்களாலே பிரகாசிக்கிற
நாரணன், Naaranan - ஸ்ரீமந் நாராயணன்
நான்முகன், Naanmugan - பிரமன்
அரன், Aran - ருத்ரன்
என்னும் இவரை, Ennum ivarai - என்கிற இத் தெய்வங்களை
ஒன்ற, Ondru - மத்யஸ்த த்ருஷ்டியாக
நும் மனத்து வைத்து, Num manathu vaithu - உங்களது நெஞ்சில் வைத்து
உள்ளி, Ulli - (அவர்களை ஸ்வரூப ஸ்வ பாவங்களை ப்ராமணங் கொண்டு) ஆராய்ந்து
நும், Num - உங்களுக்குண்டான
இரு பசை அறுத்து, Iru pasai aruthu - இருவர் திறத்திலும் ஈச்வர புத்தியை யொழித்து
அவனிடை, Avanidai - அந்த நன்றெழில் நாராயணன் பக்கலிலே
நம்முடை, Nammudai - நம்முடைய
நாள், Naal - வாழ் நாளில்
நன்று என, Nandru en - நன்றாக
நலம் செய்வது, Nalam seyvadhu - பக்தி பண்ணுதற்கு உரியது.
2704திருவாய்மொழி || 1-3-பத்துடை (அடியவர்க்கு எளியவன்) (கீழ்ப்பாட்டில் “நன்றென நலஞ்செய்வதனிடை” என்றருளிச் செய்ததைக் கேட்ட ஸம்ஸாரிகள், அநாதிகாலமாக நாங்கள் பண்ணிக் கூடு பூரித்துக் கிடக்கிற ப்ரபல கருமங்கள் பிரதிபந்தமாயிருக்க நாங்கள் எப்படி எம்பெருமானை ஆச்ரயிக்க முடியும்? அன்றியும் எங்களுடைய வாழ்நாள் வெகுவாய்க் கழிந்து ஒழிந்ததாகையாலே இனி ஆச்ரயிக்க நாள் தானுமில்லையே! என்ன, அவர்களுக்கு உத்தரம்போல் அருளிச் செய்யும் பாசுரம் இது) 8
நாளும் நின்று அடும் நம் பழமை அம் கொடு வினையுடனே
மாளும் ஒரு குறைவில்லை மனனக மலமறக் கழுவி
நாளும் நம் திருவுடையடிகள் தம் நலம் கழல் வணங்கி
மாளும் ஓர் இடத்திலும் வணக்கொடு மாள்வது வலமே –1-3-8-
மனனகம், Mananagam - மனத்திலுண்டான
மல் அற, Mal aru - (மும்மூர்த்திகளும் ஸமமாவர் என்னும் விப்ரதி பத்தியாகிற) அழுக்கு ஒழியும்படி
கழுவி, Kazhvi - விவேகத்தாலே பரிசுத்தப்படுத்தி
நாளும், Naalum - நாள் தோறும்
நம், Nam - நமக்கென்றே உரிய
திரு உடை அடிகள் தம், Thiru udai adikal tham - திருமகள் கொழுநனான ஸ்வாமியினுடைய
நலம் கழல், Nalam kazhal - அழகிய திருவடிகளை
வணங்கி, Vanangi - ஆச்ரயிக்க
நாளும் நின்று, Naalum nindru - எப்போதும் விடாது நின்று
அடும் நம, Adum nama - வருந்துகின்ற நாமறிந்தே
பழமை அம் கொடு, Pazhamai am kodu - பழமையாகிய மிகவுங்
வினை உடனே மாளும், Vinai udane maalum - கொடிய பாபங்கள் ஆச்ரயித்தவுடனே தொலையும்;
ஓர் குறைவு இல்லை, Oru kuravu illai - ஒரு குறைவுமுண்டாகாது; (இப்படி ஆச்ரயிக்குமிடத்தில்)
மாளும் ஓர் இடத்திலும், Maalum oru idathilum - சரீரத்தை விடுகிற காலத்திலும்
வணக்கொடு, Vanakkodu - வணக்கத்தோடு
மாள்வது, Maalvadhu - முடிவது
வலம், Valam - நன்று.
2705திருவாய்மொழி || 1-3-பத்துடை (அடியவர்க்கு எளியவன்) (கீழ்ப்பாசுரங்களில் பிரமன் முதலானருடைய அவரத் தன்மையையும் எம்பெருமானுடைய பரத்வத்தையும் குறிப்பட்டருளினார். இப்பாட்டில், அந்தப் பிரமனும் சிவனும் எம்பெருமானைப்பற்றியே தங்கள் ஸ்வரூபம் பெற்றிருக்கிறபடியையும், அந்த ஸாமாந்ய தெய்வங்களும் காலிடமாட்டாத இந்நிலவுலகத்திலே எம் பெருமான் ஆச்ரியதர்கட்காக வந்து திருவவதரிக்கிறபடியையும் அருளிச் செய்கிறார்) 9
வலத்தனன் திரிபுரம் எரித்தனன் இடம் பெறத்துந்தித்
தலத்தெழு திசைமுகன் படைத்த நல்லுலகம் தானும்
புலப்படப் பின்னும் தன்னுலகத்தில் அகத்தனன் தானே
சொலப்புகில் இவை பின்னும் வயிற்றுள விவையவன் துவக்கே–1-3-9-
எழு, Elu - பதினான்கு லோகங்களையும் நிர்வகித்தற்குரிய எழுச்சி யுடைய
திசை முகன், Disai mugan - நான்முகக் கடவுள்
திரிபுரம் எரித்தவன், Thiripuram erithavan - முப்புரங்களை எரித்தவனாகிய ருத்திரன்
வலத்தனன், Valathanan - வலதுபக்கத்திலிருப்பான்;
பின்னும், Pinnum - மேலும்
அவன் புலப்பட, Avan pulappada - அவன் கண்ணுக்கு இலக்காக
தானே, Thaane - தானே
படைத்த, Padaitha - ஸ்ருஷ்டி செய்த
நல் உலகமும் தானும், Nal ulagamum thaanum - நல்ல லோகங்களும் தானுமாக
துந்தித் தலத்து இடம்பெற, Thundhit hthalathu idampera - திருநாபியில் இடம் பெற்றிருக்க,
அகத்தனன், Agaththananan - அவதரித்து உள்ளேயிருப்பன்;
சொல புகில், Sola pugil - இப்படி சொல்லப் பார்த்தோமாகில்
இவை பின்னும், Ivai pinnum - இந்தக் குணங்கள் பிள்ளையும்
வயிற்றுள, Vayitrul - தொலையாமல் உள்ளே யிருக்கும்
இவை அவன் துயக்கு, Ivai avan thuyakku - இவைகளே அவன் மயங்கப் பண்ணும்படி
2706திருவாய்மொழி || 1-3-பத்துடை (அடியவர்க்கு எளியவன்) (எம்பெருமான் தன்னிடத்து அமர்ந்த காதல் அமையப்பெறாதவர்கள் திறத்தில் பண்ணும் மாயமயக்குக்களை முன்னடிகளில் அருளிச் செய்து, அது தான் எப்படியே யானாலும், அவன் காட்டிய வழியே காணவிருக்கின்ற நாம் மனமொழி மெய்களாலே நம் விடாய்கெட உலகளந்த திருவடிகளை அநுபவிப்போமென்று தாம்கொண்ட பாரிப்பைப் பின்னடிகளில் வெளியிடுகிறார்.) 10
துயக்கறு மதியில் நல் ஞானத்துள் அமரரைத் துயக்கும்
மயக்குடை மாயைகள் வானிலும் பெரியன வல்லன்
புயற்கரு நிறத்தனன் பெரு நிலம் கடந்த நல்லடிப் போது
அயர்ப்பிலன் அலற்றுவன் தழுவுவன் வணங்குவன் அமர்ந்தே —1-3-10-
துயக்கு அறு மதியில், Thuyakku aru madhiyil - கலக்க மற்ற நெஞ்சில் பிறந்த
நல் ஞானத்துள், Nal gnanathul - நல்ல ஞானத்தையுடையரான
அமரரை, Amararai - தேவர்களையும்
துயர்க்கும், Thuyarkkum - கலங்கப் பண்ணுகிற
மயக்கு உடை, Mayakku udai - மயக்கும் வல்லமையை யுடைய
வானிலும் மாயைகள், Vaanilum maayai gal - அவதார ஆச்சரியங்கள் எல்லையற்ற ஆகாசத்திற் காட்டிலும்
பெரியன வல்லன், Periyana vallan - பெரியனவாகச் செய்ய வல்லவனாய்,
புயல், Puyal - நீலமேகம் போலே
கரு நிறந்தனன், Karu nirandhanan - கருநிறத்தை யுடையனான எம்பெருமானுடைய
பெரு நிலம் கடந்த, Peru nilam kadandha - பெரிய பூமிப் பரப்பை எளிதாக அளந்த
நல், Nal - விலக்ஷணமான
அடிபோது, adipodhu - திருவடித் தாமரைகளை
அமர்ந்து, Amarnthu - வேறு பிரயோஜனங்களில் பற்றற்று அமர்ந்து
அயர்ப்பு, Ayarppu - மறப்பில்லாதவனாய்
அவற்றுவன், Avaruvan - முறை மாறி அவன் குணங்களை வாயாலே சொல்லுவேன்;
தழுவுள்ள, Thazhuvullan - ஆலிங்கனம் பண்ணுவேன்;
வணங்குவன், Vananguvan - தலையாலே வணங்குவேன்
2707திருவாய்மொழி || 1-3-பத்துடை (அடியவர்க்கு எளியவன்) (இத்திருவாய்மொழி வல்லவர்கள் நித்யஸூரிகளோடொக்க உயர்த்தியைப் போய்ப்பெற்று ஸம்ஸார ஸம்பந்தமறப் பெறுவரென்று பலன் சொல்லிக்காட்டுகிற பாசுரம் இது) 11
அமரர்கள் தொழுது எழு அலை கடல் கடைந்தவன் தன்னை
அமர் பொழில் வளம் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
அமர்சுவை யாயிரத்து அவற்றினுள் இவை பத்தும் வல்லார்
அமரரோடு உயர்வில் சென்று அறுவர் தம் பிறவி அஞ்சிறையே–1-3-11-

அமரர், Amarar - தேவர்கள்
தொழுது எழ, Tholuthu elu - ஸேவித்து விருத்தியை யடைய
அமரர், Amarar - பொருந்தின
பொழில் வளம், Pozhil valam - சோலை வளமுள்ள
குருகூர், Kurugoor - திருக் குருகூரில் அவதரித்த
சடகோபன், Sadagopan - ஆழ்வாருடைய
குற்றேவல்கள், Kurraevalgal - (வாக்கினாலாகிய) கைங்கரியமான
அமரர் சுவை, Amarar suvai - சுவையமைந்த
ஆயிரத்து அவற்றினுள், Aayirathu avatrinul - ஆயிரம் பாடலுக்குள்
அலைகடல், Alaikadal - அலையெறிகின்ற திருப்பாற்கடலை
கடைந்தவன் தன்னை, Kadaindavan thanai - கடைந்தவனான ஸர்வேச்வரனைக் குறித்து
இவை பத்தும், Ivai pattum - இந்தப் பத்துப் பாசுரமும்
வல்லார், Vallar - கற்க வல்லவர்கள்
அமரரோடு, Amararodu - நித்யஸூரிகளோடு
உயர்வில், Uyarvil - பரமபதத்தில்
சென்று, sendru - சேர்ந்து
தம்பிறவி, Thambiravi - தம் பிறப்பாகிற
அம் சிறை, Am sirai - உறுதியான பந்தத்தில் நின்றும்
அறுவர், Aruvar - நீங்கப் பெறுவர்கள்.