| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 162 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து - ஐந்தாம் திருமொழி - பின்னைமணாளனை) (கண்ணன்குழல் வாரக் காக்கையை வாவெனல்) (கலித்தாழிசை) 1 | பின்னை மணாளனைப் பேரில் கிடந்தானை முன்னை யமரர் முதல் தனி வித்தினை என்னையும் எங்கள் குடி முழுது ஆட் கொண்ட மன்னனை வந்து குழல் வாராய் அக் காக்காய் மாதவன் தன் குழல் வாராய் அக் காக்காய்–2-5-1 | அக்காக்காய்,Akkakkai - காக்கையே! பின்னை,Pinnai - நப்பின்னைப் பிராட்டிக்கு மணாளனை,Manalanai - நாயகனும் பேரில்,Peril - திருப் பேர்களிலே கிடந்தானை,Kidandhanai - பள்ளி கொண்டிருப்பவனும் முன்னை,Munnai - (பகவதநுபவத்தில்) முதல்வரான அமரர்,Amarar - நித்ய ஸுரிகளுக்கு முதல்,Mudhal - தலைவனும் தனி வித்தினை,Thani viththinai - (அந்த நித்ய ஸுரிகளின் ஸத்தைக்கும் தாரகாதிகளுக்கும்) ஒப்பற்ற காரணமாயிருப்பவனும் என்னையும்,Ennaiyum - என்னையும் எங்கள் குடி முழுது,Engal kudi muzhuvathu - எங்களுடைய குடியிலுள்ளாரெல்லாரையும் ஆட் கொண்ட,Aad kond - அடிமை கொண்ட மன்னனை,Mannanai - தலைவனுமாகிய கண்ணனுக்கு வந்து,Vandhu - (நீ) வந்து குழல் வாராய்,Kuzhal vaarai - கூந்தல் வாருவாயாக அக்காக்காய்,Akkakkai - காக்கையே! மாதவன் தன்,Madhavan than - ஸ்ரீயபதியான இவனுக்கு குழல் வாராய்,Kuzhal vaarai - கூந்தல் வாருவாயாக |
| 163 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து - ஐந்தாம் திருமொழி - பின்னைமணாளனை) (கண்ணன்குழல் வாரக் காக்கையை வாவெனல்) (கலித்தாழிசை) 2 | பேயின் முலை யுண்ட பிள்ளை இவன் முன்னம் மாயச் சகடும் மருதும் இறுத்தவன் காயா மலர் வண்ணன் கண்ணன் கருங்குழல் தூய்தாக வந்து குழல் வாராய் அக் காக்காய் தூ மணி வண்ணன் குழல் வாராய் அக் காக்காய்–2-5-2 | அக்காக்காய்!-,Akkakkai - காக்கையே! இவன்,Ivan - இப் பிள்ளை முன்னம்,Munnam - முன்பு பேயின் முலை,Peyin mulai - பூதனையின் முலையை உண்ட,Unda - (அவளுயிரோடுங்) குடித்த பிள்ளை,Pillai - பிள்ளை காண் மாயம்,Maayam - (அன்றியும்) வஞ்சனை யுள்ள சகடும்,Sagadum - சகடத்தையும் மருதும்,Marudum - யமளார்ஜுகங்களையும் இறுத்தவன்,Iruththavan - முறித்தவன் காயா மலர் வண்ணன்,Kaaya malar vannnan - காயாம் பூப் போன்ற திரு நிறத்தை உடையவன் கண்ணன்,Kannan - ‘க்ருஷ்ணன்’ என்னும் பேரை யுடையவன் கரு குழல்,Karu kuzhal - கரு நிறமான கூந்தலை வந்து,Vandhu - (நீ) வந்து தூய்து ஆக குழல் வாராய்,Thooythu aaga kuzhal vaarai - நின்றாக வாருவாயாக. தூ மணிவண்ணன்,Thoo ManiVannan - பழிப்பற்ற நீல மணி போன்ற நிறத்தை யுடைய இவனுக்கு குழல் வாராய் |
| 164 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து - ஐந்தாம் திருமொழி - பின்னைமணாளனை) (கண்ணன்குழல் வாரக் காக்கையை வாவெனல்) (கலித்தாழிசை) 3 | திண்ணக் கலத்தில் திரை யுறி மேல் வைத்த வெண்ணெய் விழுங்கி விரைய உறங்கிடும் அண்ணல் அமரர் பெருமானை ஆயர் தம் கண்ணனை வந்து குழல் வாராய் அக் காக்காய் கார் முகில் வண்ணன் குழல் வாராய் அக் காக்காய்–2-5-3 | அக்காக்காய்!-,Akkakkai - காக்கையே! திரை,Thirai - பின்னுதலை யுடைய உறி மேல் வைத்த,Uri mel vaiththa - (பெரிய) உறி மேல் வைத்த திண்ணம் கலத்து,Thinnam kalaththu - த்ருடமான பாத்ரத்திலுள்ள வெண்ணெய்,Vennai - வெண்ணெயை விழுங்கி,Vizhunki - உட் கொண்டு விரைய,Viraiya - விரைவாக (ஓடி வந்து) உறங்கிடும்,Urangidum - பொய் யுறக்க முறங்குகின்ற அண்ணல்,Annal - ஸ்வாமியும் அமரர்,Amarar - நி்த்ய ஸுரிகளுக்கு பெருமானை,Perumanai - நிர்வாஹகனும் ஆயர் தம் கண்ணனை,Aayar tham kannanai - இடையர்களுக்குக் கண் போன்றவனுமான இவனை வந்து குழல் வாராய்,Vandhu kuzhal vaarai - வந்து கூந்தல் வாருவாயாக அக்காக்காய்!-,Akkakkai - காக்கையே! கார் முகில்,Kaar mugil - காள மேகம் போன்ற வண்ணன்,Vannan - நிறத்தை யுடையனான இவனுடைய குழல் வாராய்,Kuzhal vaarai - கூந்தல் வாருவாயாக |
| 165 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து - ஐந்தாம் திருமொழி - பின்னைமணாளனை) (கண்ணன்குழல் வாரக் காக்கையை வாவெனல்) (கலித்தாழிசை) 4 | பள்ளத்தில் மேயும் பறவை யுருக் கொண்டு கள்ள வசுரன் வருவானைத் தான் கண்டு புள்ளிது வென்று பொதுக் கோவாய் கீண்டிட்ட பிள்ளையை வந்து குழல் வாராய் அக் காக்காய் பேய் முலை யுண்டான் குழல் வாராய் அக் காக்காய்–2-5-4 | அக் காக்காய்!-,Akkakkai - காக்கையே! பள்ளத்தில்,Pallathil - நீர்த் தாழ்வுகளிலே மேயும்,Meyyum - இரை யெடுத்துத் திரிகின்ற பறவை,Paravai - (கொக்கு என்னும்) பஷியின் உரு,Uru - ரூபத்தை கொண்டு,Kondu - ஏறிட்டு்க்கொண்டு வருவான்,Varuvaan - வருபவனாகிய கள்ளம் அசுரனை,Kallam asuranai - வஞ்சனை பொருந்திய அசுரனை (பகாஸுரனை) தான் கண்டு,Thaan kandu - தான் பார்த்து (அவனை) இது புள் என்று,Ithu pul endru - இது பஷியே யென்று (ஸாமாந்யமாக நினைத்து) பொதுக்கோ,Pothukko - விரைவாக வாய்,Vaai - (அவ் வஸுரனது) வாயை தீ்ண்டிட்ட,Theenditta - கிழித்துப் போட்ட பிள்ளையை வந்து குழல் வாராய் ,Pillaiyai Vandhu kuzhal vaarai - அக்காக்காய்! பேய் முலை உண்டான் குழல் வாராய் |
| 166 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து - ஐந்தாம் திருமொழி - பின்னைமணாளனை) (கண்ணன்குழல் வாரக் காக்கையை வாவெனல்) (கலித்தாழிசை) 5 | கற்றினம் மேய்த்துக் கனிக்கு ஒரு கன்றினை பற்றி யெறிந்த பரமன் திரு முடி உற்றன பேசி நீ ஓடித் திரியாதே அற்றைக்கும் வந்து குழல் வாராய் அக் காக்காய் ஆழியான் தன் குழல் வாராய் அக் காக்காய்–2-5-5 | அக்காக்காய்!-,Akkakkai - காக்கையே! நீ,Nee - நீ உற்றன,Uttrana - (உன் ஜாதிக்குத்) தகுந்த வற்றை பேசி,Peshi - சொல்லிக் கொண்டு ஓடி,Odi - அங்குமிங்கும் பறந்து திரியாதே,Thiriyaadhe - திரியாமல்,- கன்று இனம் மேய்த்து,Kanru inam meythu - கன்றுகளின் கூட்டத்தை மேய்த்து வந்து ஒரு கன்றினை,Oru kanrinai - (அஸுரா விஷ்டமான) கன்றொன்றை பற்றி,Patri - பிடித்து கனிக்கு,Kanikku - (அஸுரா விஷ்டமான) விளாம் பழத்தை உதிர்த்ததற்காக எறிந்த,Erindha - (குணிலாக) வீசின பரமன்,Paraman - பரம புருஷனுடைய திருமுடி,Thirumudi - அழகிய தலை முடியை அற்றைக்கும் வந்து,Attraiyum vandhu - அவ்வக்காலும் வந்து குழல் வாராய்,Kuzhal vaarai - வாருவாயாக ஆழியான் தன்,Azhiyan than - சக்ராயுதபாணியான இவனுடைய குழல் வாராய்,Kuzhal vaarai - கூந்தல் வாருவாயாக |
| 167 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து - ஐந்தாம் திருமொழி - பின்னைமணாளனை) (கண்ணன்குழல் வாரக் காக்கையை வாவெனல்) (கலித்தாழிசை) 6 | கிழக்கில் குடி மன்னர் கேடிலா தாரை அழிப்பான் நினைந்திட்டு அவ் வாழி யதனால் விழிக்கு மளவிலே வேரறுத் தானை குழற்கு அணி யாகக் குழல் வாராய் அக் காக்காய் கோவிந்தன் தன் குழல் வாராய் அக் காக்காய்–2-5-6 | அக்காக்காய்!-,Akkakkai - காக்கையே! கேடு இலாதார்,Kedu ilaadhaar - (வர பலமும் புஜ பலமுமிருப்பதால் நமக்கு) அழிவில்லை யென்றுநி னைத்திருந்தவரான கிழக்கில் குடி மன்னரை,Kizhakkil kudi mannarai - கிழக்குத் திக்கிலுள்ள பட்டணத்திற் குடியிருந்த ராஜாக்களை அழிப்பான்,Azhippaan - அழிக்கும் படி நினைந்திட்டு,Ninaindittu - எண்ணி அவ் வாழி அதனால்,Av vaazhi athanaal - அந்தச் சக்ராயுதத்தால் விழிக்கும் அளவிலே,Vizhikkum alavile - கண் மூடித் திறக்கின்ற காலத்திற்குள் வேர் அறுத்தானை,Ver arutthaanai - ஸ மூலமாக அழித்தவனுடைய குழற்கு,Kuzharku - கூந்தலுக்கு அணி ஆக,Ani aaga - அழகு உண்டாம்படி குழல் வாராய் கோவிந்தன்,Govindan - (இந்த) கோவிந்தனுடைய தண் குழல்,Than kuzhal - குளிர்ந்த (சிறந்த) குழலை வாராய்,Vaarai - வாருவாயாக. |
| 168 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து - ஐந்தாம் திருமொழி - பின்னைமணாளனை) (கண்ணன்குழல் வாரக் காக்கையை வாவெனல்) (கலித்தாழிசை) 7 | பிண்டத் திரளையும் பேய்க்கு இட்ட நீர்ச் சோறும் உண்டற்கு வேண்டி நீ ஓடித் திரியாதே அண்டத்து அமரர் பெருமான் அழகமர் வண்டொத் திருண்ட குழல் வாராய் அக் காக்காய் மாயவன் தன் குழல் வாராய் அக் காக்காய்–2-5-7 | அக்காக்காய்!-,Akkakkai - காக்கையே! பிண்டம் திரளையும்,Pindam thiralaiyum - (பித்ருக்களை உத்தேசித்து இடும்) பிண்டத்தின் உருண்டையையும் பேய்க்கு இட்ட,Peykku itta - பிசாசங்களுக்குப் போகட்ட நீர் சோறும்,Neer sorum - நீரையுடைய சோற்றையும் உண்டற்கு,Undarkku - உண்ணுதற்கு வேண்டி,Vendi - விரும்பி நீ ஓடி திரியாதே,Nee odi thiriyadhe - நீ பறந்தோடித் திரியவே வேண்டா அண்டத்து,Andathu - மேலுலகத்திலுள்ள அமரர்,Amarar - தேவர்களுக்கு பெருமான்,Perumaan - தலைவனாகிய இக் கண்ண பிரானுடைய அழகு அமர்,Azhagu amar - அழகு பொருந்திய வண்டு ஒத்து இருண்ட,Vandu othu irunda - வண்டைப் போல் கருநிறமான குழல் வாராய்,Kuzhal vaarai - கூந்தல் வாருவாயாக மாயவன் தன்,Maayavan than - ஆச்சர்யச் செயல்களை யுடைய இவனுடைய குழல் வாராய்,Kuzhal vaarai - கூந்தல் வாருவாயாக |
| 169 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து - ஐந்தாம் திருமொழி - பின்னைமணாளனை) (கண்ணன்குழல் வாரக் காக்கையை வாவெனல்) (கலித்தாழிசை) 8 | உந்தி யெழுந்த உருவ மலர் தன்னில் சந்தச் சதுமுகன் தன்னைப் படைத்தவன் கொந்தக் குழலைக் குறந்து புளியட்டி தந்தத்தின் சீப்பால் குழல் வாராய் அக் காக்காய் தாமோதரன் தன் குழல் வாராய் அக் காக்காய்–2-5-8 | அக்காக்காய்!-,Akkakkai - காக்கையே! உந்தி,Undhi - (தனது) திருநாபியிலே எழுந்த,Ezhntha - உண்டான உருவம்,Uruvam - ஸுருபத்தையுடைய மலர் தன்னில்,Malar thannil - தாமரைப் பூவிலே சந்தம்,Sandham - சந்தஸ்ஸை நிரூபகமாக வுடைய சதுமுகன் தன்னை,Sathumugan thannai - நான்முகனை படைத்தவன்,Padaithavan - ஸ்ருஷ்டித்த இவனுடைய புளி அட்டி கொந்தம் குழலை,Puli atti kondham kuzhalai - புளிப் பழத்தை யிட்டுத் தேய்த்ததனால் நெறிப்பை யுடைய கூந்தலை தந்தத்தின் சீப்பால்,Thandathin seepal - தந்தத்தினாற் செய்த சீப்பாலே குறந்து,Kurandhu - சிக்கு விடுத்து குழல் வாராய்,Kuzhal vaarai - வாருவாயாக அக்காக்காய்! தாமோதரன் தன் குழல் வாராய்!-,Akkakkai - (இந்த) தாமோதரனுடைய குளிர்ந்த (சிறந்த) குழலை வாருவாயாக. |
| 170 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து - ஐந்தாம் திருமொழி - பின்னைமணாளனை) (கண்ணன்குழல் வாரக் காக்கையை வாவெனல்) (கலித்தாழிசை) 9 | மன்னன் தன் தேவிமார் கண்டு மகிழ்வெய்த முன் இவ் வுலகினை முற்றும் அளந்தவன் பொன்னின் முடியினைப் பூவணை மேல் வைத்து பின்னே யிருந்து குழல் வாராய் அக் காக்காய் பேராயிரத்தான் குழல் வாராய் அக் காக்காய்–2-5-9 | அக்காக்காய்!-,Akkakkai - காக்கையே! முன்,Mun - வாமநாவதார காலத்தில் மன்னன் தன்,Mannan than - அஸுரராஜனான மஹாபலியினுடைய தேவிமார்,Devimaar - மனைவியர்கள் கண்டு,Kandu - (தன்னுடைய) வடிவைக் கண்டு மகிழ்வு எய்த,Magizhvu aiththa - மகிழ்ச்சி யடையும்படி இ உலகினை முற்றும், E ulakini mutrum - (மஹாபலியினிடத்திற்போய் ‘கொள்வன் நான் மாவலி’ என்று மூவடி மண் இரந்து பெற்றுப் பின்பு த்ரிவிக்ரமனாய்) இந்த வுலகங்கள் முழுவதையும் அளந்தவன்,Alandhavan - அளந்து கொண்ட இவனுடைய பொன் முடியினை,Pon mudhiyinai - அழகிய தலையை பூஅணை மேல் வைத்து,Pooanai meel vaiththu - புஷ்பத்தினாலாகிய படுக்கையில் வைத்து பின்னே இருந்து,Pinne irundhu - (இவனது) பின்புறத்திலே இருந்து கொண்டு குழல் வாராய்,Kuzhal vaarai - அக்காக்காய்!- பேர் ஆயிரத்தான்,Per aayiraththaan - ஸஹஸ்ர நாமங்களை யுடைய இவனுக்கு குழல் வாராய்,Kuzhal vaarai - கூந்தல் வாருவாயாக |
| 171 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து - ஐந்தாம் திருமொழி - பின்னைமணாளனை) (கண்ணன்குழல் வாரக் காக்கையை வாவெனல்) (தரவு கொச்சகக்கலிப்பா) 10 | கண்டார் பழியாமே அக் காக்காய் கார் வண்ணன் வண்டார் குழல் வார வா வென்ற ஆய்ச்சி சொல் விண் தோய் மதிள் வில்லி புத்தூர்க் கோன் பட்டன் சொல் கொண்டாடிப் பாடக் குறுகா வினை தாமே–2-5-10 | அக் காக்காய்,Akkakkai - காக்கையே! கண்டார்,Kandar - பார்த்தவர்கள் பழியாமே,Pazhiyaamae - பழியாதபடி கார் வண்ணன்,Kaar vannan - காள மேகம் போன்ற நிறமுடைய கண்ணனுடைய வண்டு ஆர் குழல்,Vandu aar kuzhal - வண்டை ஒத்த கரிய கூந்தலை வார,Vaar - வாரும்படி வா,Vaa - வருவாயாக என்ற,Endru - என்று சொன்ன ஆய்ச்சி,Aaychi - யசோதைப் பிராட்டியின் சொல்,Sol - சொல்லை (க்குறித்த) விண் தோய்,Vin thoy - ஆகாசத்தை அளாவுகின்ற மதிள்,Mathil - மதிளை யுடைய வில்லிபுத்தூர்,Villipuththoor - ஸ்ரீவில்லிபுத்தூர்க்கு கோன்,Kon - நிர்வாஹகரான பட்டன்,Pattam - பெரியாழ்வாருடைய சொல்,Sol - அருளிச் செயல்களை கொண்டாடி,Kondaadi - சிலாகித்து பாட,Paada - பாடப் பெற்றால் வினை தாம்,Vinai thaam - ஸுக்ருத துஷ்க்ருதங்களிரண்டும் குறுகா,Kurugaa - சேராவாம். |