Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: மன்னு பெரும் (11 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
545நாச்சியார் திருமொழி || 5 - மன்னு பெரும் (எம்பெருமானைக் கூவி அழைக்கும்படி குயிலை வேண்டுதல்) 1
மன்னு பெரும் புகழ் மாதவன் மா மணி வண்ணன் மணி முடி மைந்தன்
தன்னை உகந்தது காரணமாக என் சங்கு இழக்கும் வழக்குண்டே
புன்னை குருக்கத்தி நாழல் செருந்திப் பொதும்பினில் வாழும் குயிலே
பன்னி எப்போதும் இருந்து விரைந்து என் பவளவாயன் வரக் கூவாய்
புன்னை, Punnai - புன்னை மரங்களும்
குருக்கத்தி, Kurukkathi - குருக்கத்தி மரங்களும்
நாழல், Naazhal - கோங்கு மரங்களும்
செருந்தி, Serundhi - சுர புன்னை மரங்களும் (இவை முதலிய பல மரங்கள் நிறைந்த)
பொதும்பினில், Pothumpinil - சோலையிலே
வாழும், Vaazhum - வாழுகின்ற
குயிலே!, Kuyile! - கோகிலமே!
மன்னு பெரும் புகழ், Mannu Perum Pugazh - நித்யமாய் அளவில்லாத புகழை யுடையவனாய்
மாதவன், Maadhavan - ஸ்ரீ: பதியாய்
மா மணி வண்ணன், Maa Mani Vannan - நீல மணி போன்ற நிறத்தை யுடையனாய்
மணி முடி, Mani Mudi - நவ மணிகள் அழுத்திச் சமைத்த திரு வபிஷேத்தை யுடையனாய்
மைந்தன் தன்னை, Maindhan Thannai - மிடுக்கை யுடையவனான எம்பெருமானை
உகந்தது காரணம் ஆக, Ugandhadhu Kaaranam Aaga - ஆசைப் பட்டதுவே ஹேதுவாக
என் சங்கு இழக்கும் வழக்கு, En Sangu Izakkum Vazhakku - என்னுடைய கைவளைகள் கழன்றொழியும்படியான நியாயம்
உண்டே?, Unde? - (உலகத்தில்) உண்டோ (இது வெகு அநியாயமாயிருக்கிறது) (இதற்கு நான் என் செய்வேன் என்கிறாயோ)
என் பவளம் வாயன், En Pavalam Vaayan - பவளம் போற் பழுத்த திருவதரத்தை யுடையனான எனது துணைவன்
வர, Vara - (என்னிடம்) வந்து சேரும்படி
எப்போதும் , Eppothum - இரவும் பகலும்
பன்னி இருந்து , Panni Irundhu - (அவனது திருநாமங்களைக்) கத்திக் கொண்டிருந்து
விரைந்து கூவாய், Viraindhu Koovai - சீக்கிரமாகக் கூவ வேணும்.
546நாச்சியார் திருமொழி || 5 - மன்னு பெரும் (எம்பெருமானைக் கூவி அழைக்கும்படி குயிலை வேண்டுதல்) 2
வெள்ளை விளி சங்கு இடம் கையில் கொண்ட விமலன் எனக்கு உருக் காட்டான்
உள்ளம் புகுந்து என்னை நைவித்து நாளும் உயிர்ப்பெய்து கூத்தாட்டுக் காணும்
கள்ள விழ் செண்பகப் பூ மலர்க் கோதிக் களித்து இசை பாடும் குயிலே
மெள்ள இருந்து மிழற்றி மிழற்றாது என் வேங்கடவன் வரக் கூவாய்
கள் அவிழ், Kal avizh - தேன் பெருகா நின்றுள்ள
செண்பகம் பூ, Senpagam Poo - செண்பகப் பூவிலே
மலர் கோதி, Malar Kodhi - (அஸாரமான அம்சத்தைத் தள்ளி) ஸாரமான அம்சத்தை அநுபவித்து
களித்து, Kalithu - (அதனால்) ஆநந்தமடைந்து
இசை பாடும் குயிலே, Isai Padum Kuyile - (அந்த ஆநந்தத்திற்குப் போக்கு வீடாக) இசைகளைப் பாடா நின்றுள்ள கோகிலமே!
வெள்ளை விளி சங்கு இடங்கையில் கொண்ட, Vellai Vili Sangu Idangaiyil Konda - சுத்த ஸ்வபாவமாய் (கைங்கர்ய ருசி யுடையாரை) அழைக்கு மதான ஸ்ரீ பாஞ்ச ஜந்யத்தை இடக் கையிலே ஏந்திக் கொண்டிருக்கிற
விமலன், Vimalan - பவித்ரனான பரம புருஷன்
உரு, Uru - தனது திவ்யமங்கள விக்ரஹத்தை
எனக்கு காட்டான், Enakku Kaataan - எனக்கு ஸேவை ஸாதிப்பிக்க மாட்டே னென்கிறான் (அதுவுமல்லாமல்)
உள்ளம், Ullam - என்னுடைய ஹருதயத்தினுள்ளே
புகுந்து, Pugundhu - வந்து புகுந்து
என்னை நைவித்து, Ennai Naivithu - என்னை நைந்து போம் படி பண்ணி (அவ்வளவிலே நான் முடிந்து போவதாயிருந்தால் இன்னமும் என்னை ஹிம்ஸிப் பதற்காக முடிய வொட்டாமல்)
நாளும் உயிர் பெய்து, Naalum Uyir Peidhu - நாள் தோறும் பிராணனைப் பெருக்கடித்து
கூத்தாட்டு காணும், Koothaatu Kaanum - என்னைத் தத்தளிக்கச் செய்து வேடிக்கை பாரா நின்றான்
இருந்து, Irundhu - (நீசெய்ய வேண்டிய தென்னவென்றால்) என் அருகில் இருந்துகொண்டு
மெள்ளமிழற்றி மிழற்றது, Mellamizhatri Mizhatradhu - உன் மழலைச் சொற்களைச் சொல்லி விலாஸ சேஷ்டிதங்களைப் பண்ணாமல்
என் வேங்கடவன் வர, En Vengadavan Vara - எனக்காகத் திருவேங்கடமலையிலே வந்து நிற்கிற எம்பெருமான் (இங்கே) வரும்படியாக
கூவாய், Koovai - கூப்பிடவேணும்
547நாச்சியார் திருமொழி || 5 - மன்னு பெரும் (எம்பெருமானைக் கூவி அழைக்கும்படி குயிலை வேண்டுதல்) 3
மாதலி தேர் முன்பு கோல் கொள்ள மாயன் இராவணன் மேல் சரமாரி
தாய் தலை யற்று யற்று வீழத் தொடுத்த தலைவன் வர எங்கும் காணேன்
போதலர் காவில் புதுமணம் நாறப் பொறி வண்டின் காமரம் கேட்டு உன்
காதலியோடு உடன் வாழ் குயிலே என் கரு மாணிக்கம் வரக் கூவாய்
போது அலர் காவில், Pothu Alar Kaavil - சிறந்த பூக்கள் அலர்கின்ற சோலையிலே
புது மணம், Pudhu Manam - புதிதான பரிமளமானது
நாற, Naara - வீச
பொறி வண்டின், Pori Vandin - அழகிய வண்டினுடைய
காமரம், Kaamaram - காமரம் என்கிற பண்ணை
கேட்டு, Kettu - கேட்டுக் கொண்டு
உன் காதலியோடு உடன் வாழ் குயிலே, Un Kaadhaliyodu Udan Vaazh Kuyile - உன் பேடையோடு கூட வாழ்கிற குயிலே!
மாதலி, Maadhali - மாதலியானவன்
தேர் முன்பு, Ther Munbu - (இராவணனுடைய) தேரின் முன்னே
கோல் கொள்ள, Kol Kolla - கோலைக் கொண்டு தன் தேரை நடத்த
மாயன் இராவணன் மேல், Maayan Iraavanan Mel - மாயாவியான ராவணன் மேலே
சரம் மாரி, Saram Maari - பாண வர்ஷத்தை
தாய் தலை அற்று அற்று வீழ தொடுத்த, Thaai Thalai Attru Attru Veezha Thodutha - (அவ்விராவணனுடைய ப்ரதானமான தலை (பலகால்) அற்று அற்று விழும்படி ப்ரயோகித்த
தலைவன், thalaivan - எம்பெருமானுடைய
வரவு, Varavu - வரவை
எங்கும், Engum - ஒரு திக்கிலும்
காணேன், Kaanen - காண்கிறேனில்லை (ஆதலால்)
என், En - என்னுடைய அநுபவத்துக்கு யோக்யனாய்
கரு மாணிக்கம், Karu Maanikam - நீல ரத்நம் போன்ற திருமேனியை யுடையனான அவ் வெம்பெருமான்
வர, Vara - இங்கே வரும்படியாக
கூவாய், Koovai - நீ கூவ வேணும்
548நாச்சியார் திருமொழி || 5 - மன்னு பெரும் (எம்பெருமானைக் கூவி அழைக்கும்படி குயிலை வேண்டுதல்) 4
என்புருகி இனவேல் நெடும் கண்கள் இமை பொருந்தா பல நாளும்
துன்பக் கடல் புக்கு வைகுந்தன் என்பதோர் தோணி பெறாது உழல்கின்றேன்
அன்புடையாரைப் பிரிவுறு நோயது நீயுமறிதி குயிலே
பொன்புரை மேனிக் கருளக் கொடி யுடைப் புண்ணியனை வரக் கூவாய்
குயிலே!, Kuyile! - ஓ குயிலே!
என்பு உருகி, Enbu Urugi - எலும்புகள் உருகிப் போனதுமல்லாமல்
இனம் வேல் நெடு கண்கள் இமை பொருந்தா, inam vel nedu kangal imai porundha - சிறந்த வேல் போன்ற விசாலமான கண்களும் மூடிக் கிடக்கின்றன வில்லை
பல நாளும், pala nalum - நெடுங்காலமாக
துன்பம் கடல் புக்கு, thunbam kadal pukku - விச்லேஷ வ்யஸநமாகிற கடலிலே அழுந்தி
வைகுந்தன் என்பது ஓர் தோணி பெறாது, vaikundhan enpathu or thoni perathu - ஸ்ரீவைகுண்டநாதன் என்கிற ஒரு தோணியை அடையப் பெறாமல்
உழல்கின்றேன், uzhalginren - அக்கடலுக்குள்ளேயே தட்டித் தடுமாறிக் கொண்டிராநின்றேன்
அன்பு உடையாரை பிரிவுறும் நோய் அது, anbu udaiyarai pirivurum noi adhu - அன்பர்களைப் பிரிவதனாலுண்டாகும் துக்கத்தை
நீயும் அறிதி, neeyum arithi - நீயும் அறிவாயன்றோ
பொன் புரை மேனி, pon purai meni - பொன் போன்ற மேனியை யுடையனாய்
கருளன் கொடி உடை, karulan kodi udai - கருடனைக் கொடியாக வுடையவனான
புண்ணியனை, punniyanai - “தர்மமே வடிவெடுத்தவன்” என்னப் படுகிற கண்ண பிரானை
வர கூவாய், vara koovai - இங்கே வரும்படி கூவு
549நாச்சியார் திருமொழி || 5 - மன்னு பெரும் (எம்பெருமானைக் கூவி அழைக்கும்படி குயிலை வேண்டுதல்) 5
மென்னடை அன்னம் பரந்து விளையாடும் வில்லி புத்தூர் உறைவான் தன்
பொன்னடி காண்பதோர் ஆசையினால் என் பொரு கயல் கண் இணை துஞ்சா
இன்னடிசிலொடு பாலமுதூட்டி எடுத்த வென் கோலக் கிளியை
உன்னோடு தோழமைக் கொள்ளுவன் குயிலே உலகளந்தான் வரக் கூவாய்
மெல்நடை அன்னம், Melnadai Annam - மந்தகதி யுடைய அன்னப் பறவைகள்
பரந்து, Parandhu - எங்கும் பரவி
விளையாடும், Vilaiyadum - விளையாடுவதற்கு இருப்பிடமான
வில்லிபுத்தூர், Villiputhoor - ஸ்ரீவில்லிபுத்தூரிலே
உறைவான் தன், Uraivan Than - எழுந்தருளி யிருக்கிற எம்பெருமானுடைய
பொன் அடி, Pon adi - அழகிய திருவடிகளை
காண்பது ஓர் ஆசையினால்,Kanbadhu Or Aasaiyinal - காண வேணுமென்றுண்டான ஆசையினாலே
பொரு கயல் என் கண் இணை, Poru Kayal En Kan Inai - சண்டையிடும் இரண்டு கெண்டைகள் போன்ற எனது கண்கள்
துஞ்சா,Thunjaa - உறங்குகின்றனவில்லை
குயிலே, Kuyile - ஓ குயிலே!
உலகு அளந்தான், Ulagu Alandhaan - (த்ரிவிக்ரமனாய்) உலகங்களை அளந்த பெருமான்
வர, Vara - இங்கே வரும்படி
கூவாய், Koovai - கூவு (அப்படி கூவுவாயாகில்)
இன் அடிசிலொடு பால் அமுது ஊட்டி எடுத்த என் கோலம் கிளியை, In Adisilodu Paal amudhu Ootti Edutha En Kolam Kiliyai - கன்ன லமுதையும் பாலமுதையும் ஊட்டி வளர்க்கப் பெற்ற எனது அழகிய கிளியை
உன்னோடு, Unnodu - உன்னோடே
தோழமை கொள்ளுவன், Thozhamai Kolluvan - ஸ்நேஹப் படுத்தி வைப்பேன்
550நாச்சியார் திருமொழி || 5 - மன்னு பெரும் (எம்பெருமானைக் கூவி அழைக்கும்படி குயிலை வேண்டுதல்) 6
எத்திசையும் அமரர் பணிந்து ஏத்தும் இருடீகேசன் வலி செய்ய
முத்தன்ன வெண் முறுவல் செய்ய வாயும் முலையும் அழகு அழிந்தேன் நான்
கொத்தலர் காவில் மணித் தடம் கண் படை கொள்ளும் இளங்குயிலே
என் தத்துவனை வரக் கூவிற்றி யாகிற்றிலை யல்லால் கைம்மாறு இலேனே
கொத்து, Kothu - பூங்கொத்தானவை
அலர், Alar - மலருமிடமான
காவில், Kaavil - சோலையிலே
மணி தடம், Mani Thadam - அழகானவொரு இடத்திலே
கண் படை கொள்ளும், Kan Padai Kollum - உறங்குகின்ற
இளங்குயிலே!, Ilanguyile! - சிறுகுயிலே!
எத் திசையும், Eththisaiyum - எல்லா திக்குகளிலும்
அமரர் பணிந்து ஏத்தும், Amarar Panindhu Ethum - தேவர்கள் வணங்கித் துதிக்கும்படியான பெருமை வாய்ந்த
செய்ய வாயும், Seiya Vaayum - சிவந்த அதரமும்
முலையும், Mulaiyum - முலைகளும் (ஆகிய இவை)
அழகு அழிந்தேன், Azhagu Azhindhen - அழகு அழிந்ததாம்படி விகாரப்பட்டேன்
என் தத்துவனை, En Thathuvanai - நான் உயிர்தரித்திருப்பதற்கு மூல காரணமான அவ் வெம்பெருமானை
இருடீகேசன், Irudeekesan - கண்டாருடைய இந்திரியங்களை யெல்லாம் கொள்ளை கொள்ளுமவனான எம்பெருமான்
வலி செய்ய, Vali Seiya - தன்னை எனக்குக் காட்டாமல் மிறுக்குக்களைப் பண்ண (அதனாலே)
நான், Naan - நான்
முத்து அன்ன வெண் முறுவல், Muthu Anna Venn Muruval - முத்துப் போல் வெளுத்த முறுவலும்
வர கூகிற்றி ஆகில், Vara Kookitri Aagil - இங்கே வரும்படி கூவ வல்லையே யானால்
தலை அல்லால், Thalai Allal - என் வாழ் நாள் உள்ளவளவும் என் தலையை உன் காலிலே வைத்திருப்பது தவிர
கைம்மாறு இலேன், Kaimaaru Ilen - வேறொரு ப்ரத்யுபகாரம் செய்ய அறியேன்
551நாச்சியார் திருமொழி || 5 - மன்னு பெரும் (எம்பெருமானைக் கூவி அழைக்கும்படி குயிலை வேண்டுதல்) 7
பொங்கிய பாற்கடல் பள்ளி கொள்வானைப் புணர்வதோர் ஆசையினால் என்
கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதுகலித்து ஆவியை ஆகுலம் செய்யும்
அங்குயிலே உனக்கு என்ன மறைந்து உறைவு ஆழியும் சங்கும் ஒண் தண்டும்
தங்கிய கையவனை வரக் கூவில் நீ சாலத் தருமம் பெறுதி
அம் குயிலே!, Am Kuyile! - அழகிய குயிலே!
பொங்கிய பால் கடல், Pongiya Paal Kadal - அலை யெறிவை யுடைய திருப் பாற்கடலில்
பள்ளி கொள்வானை, Palli Kolvanai - பள்ளி கொண்டருளும் எம்பெருமானோடே
புணர்வது ஓர் ஆசையினால், Punarvadhu Or Aasaiyinal - ஸம்ச்லேஷிக்க வேணுமென்று உண்டான ஆசையினால்
என் கொங்கை, En Kongai - எனது முலைகள்
கிளர்ந்து, Kilarndhu - பருத்து
குதுகலித்து, Kudhukalithu - மிக்க உத்ஸாஹங் கொண்டு
ஆவியை, Aaviyai - எனது உயிரை
குமைத்து ஆகுலம் செய்யும், Kumaithu Aagulam Seiyum - உருக்கி வியாகுலப் படுத்தா நின்றன
மறைந்து உறைவு, Maraindhu Uravu - என் கண்ணுக்குப் புலப்படாமல் நீ மறைந்திருப்பதனால்
உனக்கு என்ன, Unakku Enna - உனக்கு என்ன புருஷார்த்தம்?
ஒண் ஆழியும் சங்கும் தண்டும் தங்கிய கையவனை வர, On Aazhiyum Sangum Thandum Thangiya Kaiyavanai Vara - திருவாழி திருச்சங்கும் ஸ்ரீ கதையும் பொருந்திய திருக் கைகளுடைய பெருமாள் இங்கே வரும்படி
நீ கூவில், Nee Koovil - நீ கூவுவாயாகில்
சால, Saala - மிகவும்
தருமம் பெறுதி, Tharumam Peruthi - தர்மம் செய்தாயாவாய்
552நாச்சியார் திருமொழி || 5 - மன்னு பெரும் (எம்பெருமானைக் கூவி அழைக்கும்படி குயிலை வேண்டுதல்) 8
சார்ங்கம் வளைய வலிக்கும் தடக்கைச் சதுரன் பொருத்தமுடையன்
நாங்கள் எம்மில் இருந்தொட்டிய கச் சங்கம் நானும் அவனும் அறிதும்
தேன்கனி மாம் பொழில் செந்தளிர் கோதும் சிறு குயிலே திருமாலை
ஆங்கு விரைந்து ஒல்லைக் கூகிற்று யாகில் அவனை நான் செய்வன காணே
தேம் கனி, Them Kani - இனிமையான பழங்களை யுடைய
மாபொழில், Maapozhil - மாந்தோப்பிலே
செம் தளிர் கோதும், Sem Thalir Kodhum - சிவந்த துளிர்களை வாயலகால் கொந்துகிற
சிறு குயிலே!, Siru Kuyile! - இளங்குயிலே!
சார்ங்கம், Saarngam - தனது வில்லை
வளைய வலிக்கும், Valaiya Valikkum - வளைத்து வலிக்கும் சக்தியை யுடைய
தட கை, Thada Kai - பெரிய திருக் கைகளை யுடையனாய்
சதுரன், Sathuran - ஸகலவித ஸாமர்த்தியமுடையனான எம்பெருமான்
பொருத்தம் உடையன், Porutham Udaian - ப்ரணயாதியிலும் வல்லமை பெற்றவன்
நாங்கள், Naangal - அவனும் நானும் ஆக இருவரும்
இருந்து, Irundhu - சேர்ந்திருந்து
எம்மில் ஒட்டிய, Emmil Otiya - எங்களுக்குள் ரஹஸ்யமாகச் செய்து கொண்ட
கச்சங்கம், Kachangam - ஸங்கேதத்தை
நானும் அவனும் அறிதும், Naanum Avanum Aridhum - நாங்களிருவருமே அறிவோமேயன்றி வேறொருவரும் அறியார்
ஆங்கு திருமாலை, Aangu Thirumaalai - தூரஸ்தனாயிருக்கிற ஸ்ரீ: பதியை
ஒல்லை விரைந்து, Ollai Virainthu - மிகவும் சீக்கிரமாக
கூ கிற்றி ஆகில் நீ, Koo Kitri Aagil Nee - கூவ வல்லையே யானால் நீ
அவனை, Avanai - (பிறகு அவன் இங்கு வந்த பிற்பாடு) அவன் விஷயத்தில்
நான் செய்வன, Naan Seivana - நான் செய்யப் போகிற மிறுக்குக்களை
காண், Kaan - காணக் கடவை
553நாச்சியார் திருமொழி || 5 - மன்னு பெரும் (எம்பெருமானைக் கூவி அழைக்கும்படி குயிலை வேண்டுதல்) 9
பைங்கிளி வண்ணன் சிரீதரன் என்பதோர் பாசத்தகப் பட்டிருந்தேன்
பொங்கொளி வண்டிரைக்கும் பொழில் வாழ் குயிலே குறிக் கொண்டிது நீ கேள்
சங்கோடு சக்கரத்தான் வரக் கூவுதல் பொன்வளை கொண்டு தருதல்
இங்குள்ள காவினில் வாழக் கருத்தில் இரண்டைத் தொன்றேல் திண்ணம் வேண்டும்
பொங்கு ஒளி வண்டு, Pongu Oli Vandu - மிக்க வொளியை யுடைய வண்டுகளானவை
இரைக்கும் பொழில், Iraikkum Pozhil - (மது பாந மயக்கத்தாலே) இசை பாடாநின்ற சோலையிலே
வாழ், Vaazh - களித்து விளையாடுகிற
குயிலே!, Kuyile! - கோகிலமே!
இது, Idhu - நான் சொல்லுகிற இதனை
நீ குறிக்கொண்டு கேள், Nee Kurikondu Kel - நீ பராக்கில்லாமல் ஸாவதாநமாய்க் கேள்
நான், Naan - நான்
பைங்கிளி வண்ணன் சிரி தரன் என்பது ஓர் பாசத்து, Paingili Vannan Siri Tharan Enpathu Or Pasathu - பசுங்கிளி போன்ற நிறத்தை யுடையனான ஸ்ரீ: பதி யென்கிற ஒரு வலையிலே
அகப்பட்டு இருந்தேன், Agappattu Irundhen - சிக்கிக் கொண்டு கிடக்கிறேன்
இங்கு உள்ள காவினில், Ingu Ulla Kaavinil - இந்தச் சோலையிலே
வாழ கருதில், Vaazha Karuthil - நீ வாழ நினைக்கிறாயாகில்
சங்கோடு சக்கரத்தான் வரக் கூவுதல், Sangodu Chakkarathaan Vara Koovuthal - திருவாழி திருச்சங்குடையனான எம்பெருமான் (இங்கே) வரும்படி கூவுவதென்ன
பொன் வளை கொண்டுதருதல், Pon Valai Kondu Tharuthal - (நான் இழந்த) பொன் வளைகளைக் கொண்டு வந்து கொடுப்பதென்ன
இரண்டத்து, Irandathu - இவையிரண்டுள் எதாவதொரு காரியம்
திண்ணம் வேண்டும், Thinnam Vendum - நீ கட்டாயம் செய்து தீரவேண்டும்
554நாச்சியார் திருமொழி || 5 - மன்னு பெரும் (எம்பெருமானைக் கூவி அழைக்கும்படி குயிலை வேண்டுதல்) 10
அன்று உலகம் அளந்தானை யுகந்து அடிமைக் கண் அவன் வலி செய்ய
தென்றலும் திங்களும் ஊடறுத்து என்னை நலியும் முறைமை அறியேன்
என்றும் இக்காவில் இருந்து இருந்து என்னைத் ததைத்தாதே நீயும் குயிலே
இன்று நாராயணனை வரக் கூவாயேல் இங்குத்தை நின்றும் துரப்பன்
அன்று, Andru - மஹாபலி கொழுத்திருந்த அக் காலத்தில்
உலகம் அளந்தானை, Ulagam Alanthaanai - மூவுலகங்களையும் அளந்து கொண்டவனான எம்பெருமான் விஷயத்திலே
உகந்து, Uganthu - நான் கைங்கர்யத்தை ஆசைப்பட
அவன், Avan - அவ் வெம்பெருமான்
அடிமைக் கண், Adimai Kan - (அந்த) கைங்கரியத்திலே
வலி செய்ய, Vali Seiya - வஞ்சனை பண்ண (அதற்கு நான் நோவு பட்டிருக்கிற சமயத்திலே)
தென்றலும், Thendralum - தென்றல் காற்றும்
திங்களும், Thingalum - பூர்ண சந்திரனும்
என்னை, Ennai - என்னை
ஊடு அறுத்து நலியும் முறைமை, Oodu Aruthu Naliyum Muraimai - உள்ளே பிளந்து கொண்டு புகுந்து ஹிம்ஸிக்கும் நியாயத்தை
அறியேன், Ariyen - அறிகின்றிலேன்
குயிலே!, Kuyile! - ஓ குயிலே!
நீயும், Neeyum - (என்னுடைய க்ஷேமத்தை விரும்புமனான) நீயும்
என்றும், Endrum - எந்நாளும்
இக் காவில், Ik Kaavil - இந்தக் சோலையிலே
இருந்து இருந்து, Irundhu Irundhu - இடைவிடாமலிருந்துகொண்டு
என்னை, Ennai - (ஏற்கனவே மெலிந்திருக்கிற) என்னை
ததைத்தாதே, Thadhaithaathe - ஹிம்ஸியாமலிரு
இன்று, Indru - இன்றைக்கு
நாராயணனை வர கூவாயேல், Narayananai Vara Koovayel - ஸ்ரீமந்நாராயணன் இங்கே வரும்படி அவனை நீ கூவாமற் போனாயாகில்
இங்குத்தை நின்றும், Inguthai Nindrum - இந்தச் சோலையிலிருந்து
துரப்பன், Thurappan - உன்னைத் துரத்தி விடுவேன்
555நாச்சியார் திருமொழி || 5 - மன்னு பெரும் (எம்பெருமானைக் கூவி அழைக்கும்படி குயிலை வேண்டுதல்) 11
விண்ணுற நீண்டடி தாவிய மைந்தனை வேல் கண் மடந்தை விரும்பி
கண்ணுற வென் கடல் வண்ணனைக் கூவு கரும் குயிலே என்ற மாற்றம்
பண்ணு நான் மறையோர் புதுவை மன்னன் பட்டர் பிரான் கோதை சொன்ன
நண்ணுற வாசக மாலை வல்லார் நமோ நாராயணாய என்பாரே
வேல் கண், Vel Kan - வேல் போன்ற கண்களை யுடையளாய்
மடந்தை, Madanthai - பெண்மைக்கு உரிய குணங்கள் நிறைந்தவளாய்
கண் உறு நால்மறையோர் புதுவை மன்னன் பட்டர் பிரான் கோதை, Kan Uru Naalmaraiyor Pudhuvai Mannan Pattar Piran Kothai - ஸ்வரூப தனமான நான்கு வேதங்களையும் ஒதின ஸ்ரீவில்லிபுத்தூர்க்குத் தலைவரான பெரியாழ்வாருடைய மகளான ஆண்டாள்
அடி விண் உற நீண்டுதாவிய மைந்தனை, Adi Vin Ura Neenduthaaviya Maindhanai - திருவடியானது பரமாகாசத்தளவும் போய்ப் பொருந்தும் படியாக
நெடுக வளர்ந்து, Neduga Valarndhu - (உலகங்களை) வியாபித்தமிடுக்கை யுடையனான எம்பெருமானை
விரும்பி, Virumbi - ஆசைப் பட்டு
கருங் குயிலே என் கடல் வண்ணனை கண் உறகூவு என்ற மாற்றம், Karung Kuyile En Kadal Vannanai Kan Urakoovu Endra Maatram - ஓ கரியகுயிலே! கடல் போன்ற திரு நிறத்தை யுடையனான என் காதலனை நான் ஸேவிக்கும்படி நீ கூவு என்று நியமித்த பாசுரமாக
சொன்ன, Sonna - அருளிச் செய்த
நண்ணுறு வாசகம் மாலை, Nannuru Vaasakam Maalai - போக்யமான (இந்த) ஸ்ரீ ஸூக்தி மாலையை
வல்லார், Vallar - ஓத வல்லவர்கள்
‘நமோநாராயணாய்‘ என்பர், “Namo Narayanaaya” Enbar - எம்பெருமானுக்கு அந்தரங்க கிங்கரராகப் பெறுவர்கள்