Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: மாணிக்கம் கட்டி (10 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
44ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து - மூன்றாம் திருமொழி -மாணிக்கம் கட்டி) (கண்ணனைத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டுதல்: தாலப்பருவம்) 1
மாணிக்கம் கட்டி வயிரம் இடைகட்டி
ஆணிப் பொன்னால் செய்த வண்ணச் சிறுத் தொட்டில்
பேணி உனக்குப் பிரமன் விடு தந்தான்
மாணிக் குறளனே தாலேலோ! வைய மளந்தானே தாலேலோ!–1-3-1
மாணிக்கம்,Maanikam - மாணிக்கத்தை
கட்டி,Katti - (இரண்டருகும்) கட்டியும்
இடை,Idai - நடுவில்
வயிரம்,Vairam - வயிரத்தை
கட்டி,Katti - கட்டியும்
ஆணிப் பொன்னால்,Aanip ponnaal - மாற்றுயர்ந்த பொன்னால்
செய்த,Seidha - செய்யப்பட்ட
வண்ணம்,Vannam - அழகிய
சிறு தொட்டில்,Siru thottil - சிறிய தொட்டிலை
பிரமன்,Piraman - சதுர்முகனானவன்
பேணி,Paeni - விரும்பி
உனக்கு,Unakku - உனக்கு
விடு தந்தான்,Vidu thandhaan - அனுப்பினான்
மாணி குறளனே,Maani kuralane - ப்ரஹம்சாரி வாமநாவதாரம் பண்ணின கண்ணனே!
தாலேலோ!,Thaalelo - தாலேலோ!
வையம்,Vaiyam - உலகங்களை
அளந்தானே,Alandhaane - (த்ரிவிக்ரமனாய்) அளந்தவனே!
தாலேலோ!,Thaalelo - தாலேலோ!
45ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து - மூன்றாம் திருமொழி -மாணிக்கம் கட்டி) (கண்ணனைத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டுதல்: தாலப்பருவம்) 2
உடையார் கன மணியோடு ஒண் மாதுளம் பூ
இடைவிரவிக் கோத்த எழில் தெழ்கி னோடு
விடையேறு காபாலி ஈசன் விடுதந்தான்;
உடையாய் அழேல் அழேல் தாலேலோ! உலக மளந்தானே தாலேலோ!–1-3-2
உடை ஆர்,Udai aar - திருவரைக்குச் சேரும்படியான
கனம் மணியோடு,Kanam maniyodu - பொன் மணியையும்
இடை,Idai - நடு நடுவே
விரவி,Viravi - கலந்து
கோத்த,Kotha - கோக்கப் பட்ட
எழில்,Ezhil - அழகிய
தெழ்கினோடும்,Thezhginodum - இடைச் சரிகையையும்
ஒண் மாதளம்பூ,On maadhalampoo - அழகிய மாதளம்புக் கோவையான அரை வடத்தையும்
விடைஏறு,Vidai yeru - ரிஷப வாஹகனாய்
காபாலி,Kaabaali - கபால தாரியாய்
ஈசன் விடுதந்தான்,Eesan viduthandhaan - ஸ்வ வ்யூஹத்துக்கு நியாமகனான ருத்ரன் விடு தந்தான்-;
உடையாய்,Udaiyaai - ஸ்வாமியான கண்ணனே!
அழேல் அழேல்,Azael azael - அழாதேகொள், அழாதேகொள்
தாலேலோ,Thaalelo - தாலேலோ
உலகம் அளந்தானே! தாலேலோ!,Ulagam alandhaane! Thaalelo! - தாலேலோ
46ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து - மூன்றாம் திருமொழி -மாணிக்கம் கட்டி) (கண்ணனைத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டுதல்: தாலப்பருவம்) 3
என் தம் பிரானார் எழில் திரு மார்வர்க்கு
சந்த மழகிய தாமரைத் தாளர்க்கு,
இந்திரன் தானும் எழிலுடைக் கிண்கிணி
தந்து உவனாய் நின்றான் தாலேலோ! தாமரைக் கண்ணனே தாலேலோ!–1-3-3
எம்தம் பிரானார்,Emtham praanar - எமக்கு ஸ்வாமியாய்
எழில்,Ezhil - அழகிய
திருமார்வார்க்கு,Thirumaarvaarukku - திருமார்பை யுடையாய்
சந்தம் அழகிய,Santham azhagiya - நிறத்தாலழகிய
தாமரை தாளர்க்கு,Thaamarai thaalarkku - தாமரை போன்ற திருவடிகளை யுடையரான தேவர்க்கு
இந்திரன் தானும்,Indhiran thaanum - தேவேந்த்ரனானவன்
எழில் உடை,Ezhil udai - அழகை யுடைய
கிண்கிணி,Kinkin - கிண் கிணியை
தந்து,Thandhu - கொணர்ந்து ஸமர்ப்பித்து
உவனாய் நின்றான்,Uvanaai ninraan - அதோயிரா நின்றான்
தாலேலோ! தாமரைக் கண்ணனே! தாலேலோ,Thaalelo! Thaamaraik kannane! Thaalelo - தாலேலோ! தாமரைக் கண்ணனே! தாலேலோ
47ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து - மூன்றாம் திருமொழி -மாணிக்கம் கட்டி) (கண்ணனைத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டுதல்: தாலப்பருவம்) 4
சங்கின் வலம் புரியும் சேவடிக் கிண் கிணியும்
அங்கைச் சரிவளையும் நாணும் அரைத் தொடரும்
அங்கண் விசும்பில் அமரர்கள் போத்தந்தார்,
செங்கண் கருமுகிலே! தாலேலோ! தேவகி சிங்கமே தாலேலோ!–1-3-4
சங்கில்,Sangil - சங்குகளில்(சிறந்த)
வலம் புரியும்,Valam puriyum - வலம்புரிச் சங்கையும்
சே அடி,Se adi - செவ்விய திருவடிகளில் (சாத்தத் தகுந்த)
கிண்கிணியும்,Kinkin yum - சதங்கையையும்
அம் கை,Am kai - அழகிய கைகளுக்கு உரிய
சரி,Sari - முன் கை வளைகளையும்
வளையும்,Valaiyum - தோள்வளைகளையும்
நாணும்,Naanum - பொன்னரை நாணையும்
அரை தொடரும்,Arai thodarum - அரைவடத்தையும்
அம் கண்,Am kan - அழகியதாய் விசாலமான
விசும்பில்,Visumbil - ஸ்வர்க்கத்திலுள்ள
அமரர்கள்,Amarargal - தேவர்கள்
போத்தந்தார்,Poththandhaar - அனுப்பினார்கள்
செம் கண்,Sem kan - சிவந்த கண்களை யுடையையாய்
கரு முகிலே,Karu mugile - கானமேகம் போன்ற வடிவை யுமுடையையான கண்ணனே!
தாலேலோ!,Thaalelo! - தாலேலோ!
தேவகி,Devaki - தேவகியின் வயிற்றிற்பிறந்த
சிங்கமே,Singame - சிங்கக் குருகே!
தாலேலோ!,Thaalelo! - தாலேலோ!
48ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து - மூன்றாம் திருமொழி -மாணிக்கம் கட்டி) (கண்ணனைத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டுதல்: தாலப்பருவம்) 5
எழிலார் திருமார்வுக்கு ஏற்கு மிவையென்று
அழகிய ஐம்படையும் ஆரமும் கொண்டு
வழுவில் கொடையான் வயிச்சி ரவணன்
தொழுது உவனாய் நின்றான் தாலேலோ! தூமணி வண்ணனே தாலேலோ!–1-3-5
எழில் ஆர்,Ezhil aar - அழகுமிக்கிருந்துள்ள
திருமார்பிற்கு,Thirumaarpirku - வக்ஷஸ்ஸ்தலத்துக்கு
இவை ஏற்கும் என்று,Ivai erkum endru - இவை பொருந்தும் என்று
அழகிய,Azhagiya - அழகியவையான
ஐம்படையும்,Aimbadayum - பஞ்சாயுதங்களையும்
ஆரமும்,Aaramum - முத்து வடத்தையும்
கொண்டு,Kondu - எடுத்துக்கொண்டு,
வழுஇல்,Valuil - குற்றமற்ற
கொடையான்,Kodaiyaan - ஔதார்யத்தையுடையனான
வயிச்சிரவணன்,Vaichiravanan - குபேரானானவன்
தொழுது,Thozhuthu - (இவற்றைத் திருவுள்ளம்பற்ற வேணுமென்று) அஞ்ஜலி பண்ணிக்கொண்டு
உவனாய் நின்றான், தாலேலோ!,Uvanaai ninraan, Thaalelo! - உவனாய் நின்றான், தாலேலோ!
தூ மணி,Thoo mani - பழிப்பற்ற நீலமணி போன்ற
வண்ணனே,Vannane - வடிவையுடைய கண்ணனே!
தாலேலோ!,Thaalelo - தாலேலோ!
49ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து - மூன்றாம் திருமொழி -மாணிக்கம் கட்டி) (கண்ணனைத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டுதல்: தாலப்பருவம்) 6
ஓதக் கடலின் ஒளி முத்தி னாரமும்
சாதிப் பவளமும் சந்தச் சரிவளையும்
மாதக்க வென்று வருணன் விடுதந்தான்,
சோதிச் சுடர்முடியாய் தாலேலோ! சுந்தரத் தோளனே தாலேலோ!–1-3-6
ஓதம்,Otham - அலையெறிப்பையுடைய
கடலில்,Kadalil - ஸமுத்ரத்தில் (உண்டாய்)
ஒளி,Oli - ஒளியை யுடைத்தாய்
முத்தின்,Muththin - முத்துக்களால் கோக்கப்பட்ட
ஆரமும்,Aaramum - ஹாரத்தையும்
சாதி,Saadhi - நல்ல ஜாதியிலுண்டான
பவளமும்,Pavalamum - பவழ வடத்தையும்
சந்தம்,Santham - அழகு பொருந்திய
சரி,Sari - முன் கை வளைகளையும்
வளையும்,Valaiyum - தோல்வளைகளையும்
மா தக்க என்று,Maa thakka endru - விலையில் சிறந்து தகுதியாயிருந்துள்ளவை என்று
வருணன் விடுதந்தான்,Varunan viduthandhaan - வருண தேவனானவன் விடுதந்தான்
சோதி சுடர்,Sothi sudar - மிக்க ஜ்யோதிஸ்ஸை யுடைய
முடியாய்,Mudiyaai - கிரீடத்தை யணிந்த கண்ணனே!
தாலேலோ. . !,Thaalelo! - தாலேலோ. . !
சுந்தரம் தோளனே,Sundharam tholane - அழகிய திருத் தோள்களை யுடைய கண்ணனே!
தாலேலோ. . !,Thaalelo! - தாலேலோ. . !
50ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து - மூன்றாம் திருமொழி -மாணிக்கம் கட்டி) (கண்ணனைத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டுதல்: தாலப்பருவம்) 7
கானார் நறுந்துழாய் கை செய்த கண்ணியும்
வானார் செழுஞ்சோலைக் கற்பகத்தின் வாசிகையும்
தேனார் மலர் மேல் திரு மங்கை போத்தந்தாள்,
கோனே! அழேல் அழேல் தாலேலோ! குடந்தைக் கிடந்தானே தாலேலோ!–1-3-7
தேன் ஆர்,ThenAar - தேன் நிறைந்துள்ள
மலர்மேல்,Malarmel - (செந்தாமரை) மலரிலுறைகின்ற
திருமங்கை,Thirumangai - பெரிய பிராட்டியார்
கான் ஆர்,Kaan aar - காட்டிலுண்டான
நறு துழாய்,Naru thuzhaai - பரிமளம் மிக்க துளசியாலே
கை செய்த,Kai seidha - தொடுத்த
கண்ணியும்,Kanniyum - மாலையையும்
வான் ஆர்,Vaan aar - சுவர்க்க லோகத்தில் நிறைய வளர்ந்துள்ள
செழு,Sezhu - செழுமை தங்கிய
சோலை,Solai - சோலையாய்த் தழைத்த
கற்பகத்தின்,Karpagaththin - கல்ப வ்ருக்ஷத்தின் பூக்களால் தொடுத்த
வாசிகையும்,Vaasikaiyum - திரு நெற்றி மாலையையும்
போத்தந்தாள்,Poththandhaal - அனுப்பினாள்
கோனே,Kone - ஸர்வ ஸ்வாமியான கண்ணனே!
அழேல் அழேல் தாலேலோ!,Azael azael Thaalelo! - அழேல் அழேல் தாலேலோ!
குடந்தை,Kudanthai - திருக்குடந்தையிலே
கிடந்தானே,Kidandhaane - கண் வளந்தருளுகிற ஸ்ர்வேச்வானே!
தாலேலோ!,Thaalelo! - தாலேலோ!
51ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து - மூன்றாம் திருமொழி -மாணிக்கம் கட்டி) (கண்ணனைத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டுதல்: தாலப்பருவம்) 8
கச்சொடு பொற் சுரிகை காம்பு கனவளை
உச்சி மணிச் சுட்டி ஒண்தாள் நிரைப் பொற்பூ
அச்சுதனுக்கென்று அவனியாள் போத்தந்தாள்
நச்சு முலையுண்டாய் தாலேலோ! நாராயணா அழேல் தாலேலோ!!–1-3-8
கச்சொடு,Kachodu - கச்சுப் பட்டையையும்
பொன்,Pon - பொன்னாற்செய்த
சுரிகை,Surikai - உடை வாளையும்
காம்பு,Kaambu - கரை கட்டிய சேலையையும்
கனம்,Kanam - கநக மயமான
வளை,Valai - தோள் வளைகளையும்
மணி,Mani - ரத்நமிழைத்துச் செய்யப்பட்டதாய்
உச்சி,Ucchi - உச்சியிலே சாத்தத் தக்கதான
சுட்டி,Sutti - சுட்டியையும்
ஒண் தாள்,On thaal - அழகிய காம்புகளை யுடைத்தாய்
நிரை,Nirai - ஒழுங்கான
பொற்பூ,Porpu - பொற்பூவையும்
அச்சுதனுக்கு என்று,Achuthanukku endru - ‘கண்ணபிரானுக்கு (க்கொடுங்கோள்)’ என்று
அவனியாள்,Avaniyaal - பூமிப்பிராட்டியானவள்
போத்தந்தாள்,Poththandhaal - அனுப்பினாள்;
நஞ்சு,Nanju - விஷமேற்றின
முலை,Mulai - பூதனையின் முலையின் பாலை
உண்டாய்,Undaai - உண்ட கண்ணனே!
தாலேலோ;,Thaalelo - தாலேலோ;
நாராயணா! அழேல்! தாலேலோ,Narayana! Azael! Thaalelo - நாராயணா! அழேல்! தாலேலோ
52ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து - மூன்றாம் திருமொழி -மாணிக்கம் கட்டி) (கண்ணனைத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டுதல்: தாலப்பருவம்) 9
மெய் திமிரும் நானப் பொடியோடு மஞ்சளும்
செய்ய தடங்கண்ணுக்கு அஞ்சனமும் சிந்துரமும்
வெய்ய கலைப்பாகி கொண்டு உவளாய் நின்றாள்
அய்யா அழேல் அழேல் தாலேலோ! அரங்கத் தணையானே தாலேலோ!!–1-3-9
மெய்,Mey - திருமேனியிலே
திமிரும்,Thimirum - பூசுகைக்குரிய
நானம் பொடியோடு,Naanam podiyodu - கஸ்தூரி, கருப்பூரம், சந்தநம் முதலிய ஸூகந்தப் பொடிகளையும்
மஞ்சளும்,Manjalum - மஞ்சள்பொடியையும்
செய்ய,Seyya - சிவந்ததாய்
தட,Thada - விசாலமாயுள்ள
கண்ணுக்கு,Kannukku - கண்களில் (சாத்த)
அஞ்சனமும்,Anjanamum - மையையும்,
சிந்தூரமும்,Sindooramum - ஸிந்தூரத்தையும் (திரு நெற்றியில் சாத்துகைக்கு)
வெய்ய கலை பாகி,Veyya kalai paagi - கொடிய ஆண்மானை வாஹமாகவுடைய துர்க்கையானவள்
கொண்டு,Kondu - எடுத்துக்கொடு வந்து
உவளாய் நின்றாள்,Uvalaai ninraal - அதோ இரா நின்றாள்;
ஐயா,Ayaa - ஸ்வாமியான கண்ணனே!
அழேழ் அழேழ் தாலேலோ;,Azael azael Thaalelo - அழேழ் அழேழ் தாலேலோ;
அரங்கத்து,Arangaththu - ஸ்ரீரங்கத்திலே
அணையானே,Anaiyaane - (திருவனந்தாழ்வானைப்) படுக்கையாக வுடையவனே!
தாலேலோ.,Thaalelo - தாலேலோ.
53ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து - மூன்றாம் திருமொழி -மாணிக்கம் கட்டி) (கண்ணனைத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டுதல்: தாலப்பருவம்) 10
வஞ்சனையால் வந்த பேய்ச்சி முலை யுண்ட
அஞ்சன வண்ணனை ஆய்ச்சி தாலாட்டிய
செஞ்சொல் மறையவர் சேர் புதுவைப் பட்டன் சொல்
எஞ்சாமை வல்லவர்க்கு இல்லை இடர் தானே–1-3-10
வஞ்சனையால் வந்த,Vanchanaiyaal vanda - வஞ்சக வேஷத்தோடே வந்த
பேய்ச்சி,Peychi - பூதனையினுடைய
முலை உண்ட,Mulai unda - முலையை அமுது செய்தவனாய்
அஞ்சனம் வண்ணனை,Anjanam vannanai - மை போன்ற நிறத்தை யுடையவனான கண்ண பிரானை
ஆய்ச்சி,Aaychi - யசோதைப் பிராட்டி
தாலாட்டிய,Thaalattiya - தாலாட்டின படிகளை
செம் சொல் மறையவர்,Sem sol maraivar - செவ்விய சொற்கள் நிறைந்த வேதங்களில் வல்லவரான ஸ்ரீவைஷ்ணவர்கள்
சேர்,Ser - நித்ய வாசம் பண்ணப் பெற்ற
புதுவை,Puthuvai - ஸ்ரீவில்லிபுத்தூரிலவதரித்த
பட்டன்,Pattan - பெரியாழ்வார் (அருளிச் செய்த)
சொல்,Sol - இப்பாசுரங்கள்
எஞ்சாமை,Enjaamai - குறைவு படாமல்
வல்லவர்க்கு,Vallavarkku - ஓத வல்லவர்க்கு
இடர் இல்லை,Idar illai - துன்பம் ஒன்றுமில்லையாம்.
தான் ஏ,Thaan e - அசை