| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 118 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-முதல்திருமொழி - மெச்சூது) (பூச்சிகாட்டி விளையாடுதல்.) (கலித்தாழிசை) 1 | மெச்சூது சங்கம் இடத்தான் நல்வேயூதி பொய்ச்சூதில் தோற்ற பொறையுடை மன்னர்க்காய் பத்தூர் பெறாது அன்று பாரதம் கைசெய்த அத்தூதன் அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்–2-1-1 | மெச்ச,Mecha - (அனைவரும்) கொண்டாடும்படி ஊது,Oodu - ஊதுகின்ற சங்கம்,Sangam - பாஞ்சஜந்யத்தை மிடத்தான்,Midathaan - இடக்கையில் ஏந்தியுள்ளவனும் நல்வேய்,Nalvey - நல்ல வேய்ங்குழலை ஊதி,Oodi - ஊதுபவனும் பொய் சூதில்,Poi soodhil - க்ருத்ரிமமான சூதிலே தோற்ற,Thotra - (தம்முடைய சொத்துக்களை யெல்லாம்) இழந்தவர்களாய் பொறை உடை,Porai udai - பொறுமைசாலிகளான மன்னர்க்கு,Mannarkku - பாண்டவர்கட்கு ஆய்,Aay - (தான் எல்லாவகைத்) துணையுமாயிருந்து பத்து ஊர்,Pathu oor - (துர்யோதநாதிகளிடத்துத் தூது போய்க் கேட்டுப் பார்த்தும் அவர்களிடத்தினின்றும்) ஊரையும் பெறாது,Peraadhu - அடைய முடியாமல் அன்று,Andru - அக் காலத்திலே பாரதம்,Baaratham - பாரத யுத்தத்தை கை செய்த,Kai seitha - அணி வகுத்துச் செய்து அ தூதன்,A thoodhan - அந்தப் பாண்டவ தூதனான கண்ணன் அப்பூச்சி காட்டுகின்றான்,Appoochi kaattuginraan - அப்படிப்பட்ட (மிகவும் பயங்கரமான) பூச்சி காட்டுகின்றான்; அம்மனே,Ammaney - அம்மா! அப்பூச்சி காட்டுகின்றான்-.,Appoochi kaattuginraan - அப்பூச்சி காட்டுகின்றான்-. |
| 119 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-முதல்திருமொழி - மெச்சூது) (பூச்சிகாட்டி விளையாடுதல்.) (கலித்தாழிசை) 2 | மலை புரை தோள் மன்னவரும் மாரதரும் மற்றும் பலர் குலைய நூற்றுவரும் பட்டழிய பார்த்தன் சிலை வளையத் திண் தேர் மேல் முன்னின்ற செங்கண் அலவலை வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்–2-1-2 | மலை புரை,Malai purai - மலையை ஒத்த தோள்,Thol - தோள்களை யுடைய மன்னவர்,Mannavar - அரசர்களான மாரதரும்,Maaratharum - மஹா ரதரும் மற்றும் பலரும்,Matrum palarum - மற்றும் பலவகை அரசர்களும் குலைய,Kulaiya - அழியவும் நூற்றுவரும்,Noorruvarum - (துர்யோதநாதிகள்) நூறு பேரும் பட்டு,Pattu - மரணமடைந்து அழிய,Azhiya - உருவமழிந்து போகவும் பார்த்தன்,Paarthan - அர்ஜுனனுடைய சிலை,Silai - (காண்டீவமென்னும்) வில் வளைய,Valaiya - வளையவும் திண் தேர் மேல்,Thin ther mel - (அந்த அர்ஜுனனுடைய) வலிய தேரின் மேல் முன் நின்ற,Mun ninra - (ஸாரதியாய்) முன்புறத்தில் நின்ற செம் கண்,Sem kan - (வாத்ஸல்ய ஸூசகமாகச்) சிவந்த கண்களை யுடையனாய் அல வலை,Ala valai - (அர்ஜுநனுடைய வெற்றியைப்) புகழ்பவனான கண்ணன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான்-.,Vandhu appoochi kaattuginraan - அப்பூச்சி காட்டுகின்றான்-. |
| 120 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-முதல்திருமொழி - மெச்சூது) (பூச்சிகாட்டி விளையாடுதல்.) (கலித்தாழிசை) 3 | காயும் நீர் புக்குக் கடம்பேறி காளியன் தீய பணத்தில் சிலம்பார்க்கப் பாய்ந்தாடி வேயிங் குழலூதி வித்தகனாய் நின்ற ஆயன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்–2-1-3 | காயும்,Kaayum - (காளியனுடைய விஷாக்நியால்) கொதிக்கின்ற நீர்,Neer - மடுவின் ஜலத்திலே புக்கு,Pukku - புகுந்து (கலக்கி) (அம் மடுவினுள்ளிருந்த காளியனென்னும் பாம்பைக் கோபத்தோடு படமடுக்கச் செய்து) கடம்பு ஏறி,Kadambu eri - (அம் மடுவின் கரையிலிருந்த) கடம்ப மரத்தின் மேலேறி காளியன்,Kaaliyan - அந்தக் காளியனுடைய தீய பணத்தில்,Theeya panathil - கொடிய படத்திலே சிலம்பு ஆர்க்க,Silambu aarka - (தன் திருவடியிலணிந்து கொண்டிருந்த) சிலம்பு சப்திக்கும்படி பாய்ந்து,Paayndhu - குதித்து ஆடி,Aadi - கூத்தாடி வேயின் குழல் ஊதி,Veyin kuzhal oodi - (இச்செய்கையைக் கண்டு என்ன தீங்கு வருமோ! என்று கலங்கினவர் மகிழ) மூங்கினாலானாகிய குழலை ஊதி வித்தகன் ஆய் நின்ற,Vithagan aay ninra - (இப்படி) விஸ்மயரீயனாயிருந்த ஆயன்,Aayan - கண்ணபிரான் வந்து அப்பூச்சி காட்டுகின்றான்-.,Vandhu appoochi kaattuginraan - அப்பூச்சி காட்டுகின்றான்-. |
| 121 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-முதல்திருமொழி - மெச்சூது) (பூச்சிகாட்டி விளையாடுதல்.) (கலித்தாழிசை) 4 | இருட்டில் பிறந்து போய் ஏழை வல் லாயர் மருட்டைத் தவிர்ப்பித்து வஞ்சகன் மாளப் புரட்டி அந்நாள் எங்கள் பூம் பட்டுக் கொண்ட அரட்டன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்–2-1-4- | இருட்டில்,Iruttil - இருள் நிறைந்த நடு நிசியில் பிறந்த,Pirandha - (மதுரையிலே) தேவகீ புத்ரனாகத் தோன்றி போய்,Poi - (அங்கு நின்றும் அப்போதே ஆய்ப் பாடிக்குப்) போய் ஏழை,Ezhai - அவிவேகிகளான வல்,Val - (தன்னைப் பற்றி யிருக்கும்) மன வலிமையை யுடைய ஆயர்,Aayar - இடையர்களின் மருட்டை,Maruttai - (கண்ணனிடத்திலுள்ள ப்ரேமத்தாலும் கம்ஸனிடத்திலுள்ள கோபத்தாலும் தாமே கம்ஸனைக் கொல்ல வல்லவர்கள் போலே செருக்கிச் சொல்லுகிற) மருள் வார்த்தைகளை தவிர்ப்பித்து,Thavirppithu - போக்கினவனாயும் வல் கஞ்சன்,Val kanjan - கொடிய கம்ஸன் மாள,Maala - மாண்டு போம்படி புரட்டி,Puratti - (அவனை மயிரைப் பிடித்து அடித்துப் பூமியிலிட்டுப்) புரட்டினவனாயும் அ நாள்,A naal - (நாங்கள் யமுனையில் நீராடிய) அக் காலத்திலே எங்கள்,Engal - எங்களுடைய பூ பட்டு,Poo pattu - அழகிய பட்டுப் புடவைகளை கொண்ட,Konda - வாரிக் கொண்டு போன அரட்டன்,Arattan - தீம்பனாயுமுள்ள கண்ணன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான்-.,Vandhu appoochi kaattuginraan - அப்பூச்சி காட்டுகின்றான்-. |
| 122 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-முதல்திருமொழி - மெச்சூது) (பூச்சிகாட்டி விளையாடுதல்.) (கலித்தாழிசை) 5 | சேப்பூண்ட சாடு சிதறி திருடி நெய்க்கு ஆப்பூண்டு நந்தன் மனைவி கடை தாம்பால் சோப்பூண்டு துள்ளித் துடிக்க அன்று ஆப்பூண்டான் அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்–2-1-5- | சேபூண்ட,Seboonda - எருதுகள் கட்டுதற்கு உரிய சாடு,Sadu - சகடம் சிதறி,Sithari - (அஸுராவேசத்தாலே தன்னைக் கொல்ல வர முலைக்காக அழுகிற பாவனையாலே தன் திருவடியைத் தூக்கி அச் சகடத்தை) உருக்குலையும்படி உதைத்து நெய்க்கு,Neikku - நெய்க்கு ஆசைப்பட்டு திருடி,Thirudi - களவு செய்து ஆப்பூண்டு,Aboonda - (உடைமைக்கு உரியவர் கையில்) அகப்பட்டுக் கொண்டு (அவர்கள் யசோதை கையிற் காட்டிக் கொடுக்க) நந்தன் மனைவி,Nandan manaivi - நந்தகோபன் தேவியான அவ் யசோதை கடை தாம்பால்,Kadai thambal - (தயிரைக்) கடையும் தாம்பாலே (அடிக்க) துள்ளித் துடிக்க,Thullith thudikka - துடிக்க துடிக்க சோப்பூண்டு,Soboonda - அள்ளி மிகவும் துடிக்கும் படி அடியுண்டு அன்று,Andru - (அதனோடு நல்லாமல்) அக்காலத்தில் ஆப்பூண்டாள்,Aboondal - (எங்கும் சலிக்கமுடியாதபடி உரலில்) கட்டுண்டவனுமாகிய கண்ணன் அப்பூச்சி காட்டுகின்றான்,Appuchi kaatigindran - அப்பூச்சி காட்டுகின்றான் |
| 123 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-முதல்திருமொழி - மெச்சூது) (பூச்சிகாட்டி விளையாடுதல்.) (கலித்தாழிசை) 6 | செப்பிள மென்முலைத் தேவகி நங்கைக்கு சொப்படத் தோன்றித் தொறுப்பாடியோம் வைத்த துப்பமும் பாலும் தயிரும் விழுங்கிய அப்பன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்–2-1-6 | செப்பு,Seppu - ஸ்வர்ண கலசங்கள் போன்ற இள மெல் முலை,Ila mel mulai - இளமையையும் மென்மையையுமுடைய முலைகளையுடைய தேவகி நங்கைக்கு,Devaki nangaiyku - தேவகிப் பிராட்டிக்கு (மகனாக) சொப்பட தோன்றி,Soppada thondri - நன்றாகப் பிறந்து தொறுப்பாடியோம்,Thoruppadiyom - ஆய்ப்பாடியிலுள்ளவர்களா கிய நாங்கள் வைத்த,Vaitha - சேமித்து வைத்த துப்பமும்,Thuppamum - நெய்யையும் பாலும்,Palum - பாலையும் தயிரும்,Thairum - தயிரையும் விழுங்கிய,Vizhungiya - உட்கொண்ட அப்பன்,Appan - ஸ்வாமி (உபகாரகன்) வந்து அப்பூச்சி காட்டுகின்றான்-.,Vandhu appuchi kaatigindran - அப்பூச்சி காட்டுகின்றான் |
| 124 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-முதல்திருமொழி - மெச்சூது) (பூச்சிகாட்டி விளையாடுதல்.) (கலித்தாழிசை) 7 | தத்துக் கொண்டாள் கொலோ தானே பெற்றாள் கொலோ சித்த மனையாள் அசோதை யிளஞ்சிங்கம் கொத்தார் கருங்குழல் கோபால கோளரி அத்தன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்–2-1-7 | தத்து கொண்டாள் கொல் ஓ,Thathu kondal kol o - (இந்தப் பிள்ளையை யசோதை) தத்த புத்ரனாக வளர்த்துக் கொண்டாளோ! தானே பெற்றாள் கொலோ,Thane petral kolo - (அல்லது) ஸ்வயமாகவே மெய் நொந்து பெற்றெடுத்தாளோ! சித்தம் அனையாள்,Sitham anaiyal - (கண்ணனுடைய) மனக் கருத்தை ஒத்து நடப்பவளாகிய அசோதை,Asothai - யசோதையினுடைய இளஞ்சிங்கம்,Ilanchingam - சிங்கக்குட்டி போன்றவனும் கொத்து ஆர் கருங்குழல்,Kothu ar karunkuzhal - பூங்கொத்துக்களை யணிந்த கரிய கூந்தலை யுடையவனும் கோபாலர் கோன் அரி,Gopalar kon ari - இடையர்கட்கு (அடங்காத) மிடுக்கைக் கொண்ட சிங்கம் போன்றவனுமாகிய அத்தன்,Athan - ஸ்வாமியான இவன் |
| 125 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-முதல்திருமொழி - மெச்சூது) (பூச்சிகாட்டி விளையாடுதல்.) (கலித்தாழிசை) 8 | கொங்கை வன் கூனி சொற் கொண்டு குவலயத் துங்கக் கரியும் பரியும் இராச்சியமும் எங்கும் பரதற் கருளிவன் கானடை அங்கண்ணன் அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்–2-1-8 | கொங்கை,Kongai - (முதுகில்) முலையெழும்பினாற் போன்ற வல்,Val - பலிஷ்டமான கூனி,Kooni - கூனை யுடையளான மந்தரையினுடைய சொல்,Sol - சொல்லை கொண்டு,Kondu - அங்கீகரித்து எங்கும்,Engum - எல்லாவிடங்களிலுமுள்ள குவலயம் துங்கம்,Kuvalayam thungam - இப் பூமியில் (இருப்பவற்றுள்) கரியும்,Kariyum - யானைகளையும் பரியும்,Pariyum - (அங்ஙனொத்த) குதிரைகளையும் இராச்சியமும்,Iraachiyamum - ராஜ்யத்தையும் பரதற்கு,Paratharku - பரதாழ்வானுக்கு அருளி,Aruli - கொடுத்துவிடல் வல் கான் அடை,Val kan adai - கொடிய காட்டை அடைந்த அம் கண்ணன்,Am kannan - அழகிய கண்ணையுடையனான இவன் அப்பூச்சி காட்டுகின்றான்,Appuchi kaatigindran - அப்பூச்சி காட்டுகின்றான் |
| 126 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-முதல்திருமொழி - மெச்சூது) (பூச்சிகாட்டி விளையாடுதல்.) (கலித்தாழிசை) 9 | பதக முதலை வாய்ப் பட்ட களிறு கதறிக் கை கூப்பி என் கண்ணா கண்ணா என்ன உதவப் புள்ளூர்ந்து அங்கு உறு துயர் தீர்த்த அதகன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்–2-1-9 | பதகம்,Padagam - பாதிக்குந் தன்மையை யுடைய முதலை,Mudhalai - முதலையின் வாய்,Vai - வாயிலே பட்ட,Patta - அகப்பட்ட களிறு,Kaliru - ஸ்ரீகஜேந்த்ராழ்வான் கதறி,Kathari - (தன் வருத்தந்தோன்றக்) கூப்பிட்டு கை கூப்பி,Kai kooppi - கையைக் குவித்துக் கொண்டு என் கண்ணா கண்ணா என்ன,En kanna kanna enna - என்னுடைய கண்ணனே! என்று பலகாலழைக்க அங்கு,Angu - அப்போதே உதவ,Udhava - (அந்த யானைக்கு) உதவும்படி புள் ஊர்ந்து,Pul oorndhu - பெரிய திருவடியை வாஹநமாகக் கொண்டு சென்று உறு துயர்,Uru thuyar - (அந்த யானையின்) மிக்க வருத்தத்தை தீர்த்த,Theertha - போக்கின அதகன்,Athagan - (ஆச்ரித ரக்ஷணத்தில்) மிடுக்கை யுடையவன் வந்து,Vandhu - அப்பூச்சி காட்டுகின்றான்-. |
| 127 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-முதல்திருமொழி - மெச்சூது) (பூச்சிகாட்டி விளையாடுதல்.) (கலித்தாழிசை) 10 | வல்லாளிலங்கை மலங்கச் சரந்துரந்த வில்லாளனை விட்டு சித்தன் விரித்த சொல்லார்ந்த அப் பூச்சிப் பாடல் இவை பத்தும் வல்லார் போய் வைகுந்தம் மன்னி யிருப்பரே–2-1-10 | வல்லாள்,Vallal - பலசாலிகளான வீரர்களை யுடைய இலங்கை,Ilangai - லங்கையானது மலங்க,Malanga - பாழாம்படி சரம் துரந்த,Saram thuranda - அம்பைச் செலுத்திய வில் ஆளனை,Vil alanai - வில்லையேந்தி ஸ்ரீராமனாக (முன்பு) திருவவதரித்த கண்ணனைப் பற்றி விட்டு சித்தன்,Vittu sithan - பெரியாழ்வார் விரித்த,Viritha - பரக்க கூறிய சொல் ஆர்ந்த,Sol arndha - சொல் நிரம்பிய அப் பூச்சி பாடல் இவை பத்தும்,Appuchi paadal ivai pathum - அப் பூச்சி காட்டுதலைப் பற்றிய இப் பத்துப் பாசுரங்களையும் வல்லார்,Vallar - கற்க வல்லவர் போய்,Poi - (அர்ச்சிராதிமார்க்கமாகப்) போய் வைகுந்தம்,Vaikundam - ஸ்ரீவைகுண்டத்திலே மன்னி இருப்பர்,Manni iruppar - நித்ய வாஸம் பண்ணப் பெறுவர். |