| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 108 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஒன்பதாம் திருமொழி - வட்டு நடுவே) (தன் முதுகைக் கட்டிக்கொள்ளும்படி கண்ணனை அழைத்தல்) 1 | வட்டு நிடுவே வளர்கின்ற மாணிக்க மொட்டு நுனையில் முளைக்கின்ற முத்தே போல் சொட்டுச் சொட்டென்னத் துளிக்கத் துளிக்க என் குட்டன் வந்து என்னைப் புறம் புல்குவான் கோவிந்தன் என்னைப் புறம் புல்குவான்–1-9-1 | என் குட்டன்,En kutthan - என் பிள்ளை வட்டு நடுவே,Vattu naduve - (இரண்டு நீலரத்ந) வட்டுகளின் நிடுவே வளர்கின்ற,Valarkindra - வளர்த்துக் கொண்டிருப்பதான மாணிக்கம் மொட்டு,Manikkam mottu - இந்திர நீலமயமான அரும்பினுடைய நுனையில்,Nunaiyil - நுனியில் முளைக்கின்ற,Mulaikkindra - உண்டாகின்ற முத்தே போல்,Mutthe pol - முத்தைப் போல சொட்டு சொட்டு என்ன,Sottu sottu enna - சொட்டுச் சொட்டென்ற ஓசை யுண்டாகும்படி துளிர்க்க துளிர்க்க,Thulirkkal thulirkkal - (அம்மாணிக்க மொட்டு) பல தரம் துளியா நிற்க வந்து,Vandhu - ஓடி வந்து என்னை,Ennai - என்னுடைய புறம்,Puram - முதுகை புல்குவான்,Pulkuvan - கட்டிக் கொள்வான்; கோவிந்தன் என்னை புறம்புல்குவான்,Govindan ennai purampulkuvan - கோவிந்தன் என்னை புறம்புல்குவான் |
| 109 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஒன்பதாம் திருமொழி - வட்டு நடுவே) (தன் முதுகைக் கட்டிக்கொள்ளும்படி கண்ணனை அழைத்தல்) 2 | கிங்கிணி கட்டிக் கிறிகட்டி கையினில் கங்கண மிட்டுக் கழுத்தில் தொடர் கட்டி தன் கணத் தாலே சதிரா நடந்து வந்து என் கண்ணன் என்னைப் புறம் புல்குவான் எம்பிரான் என்னைப் புறம் புல்குவான்-1-9-2 | என் கண்ணன்,En kannan - என் கண்ணபிரான் கிண்கிணி,Kinkini - அரைச் சதங்கையை கட்டி,Katti - கட்டிக் கொண்டும் கிறி,Kiri - சிறுப் பவள வடத்தை கையினிலே,Kaiyinilae - கையிலே கட்டி,Katti - கட்டிக் கொண்டும் கங்கணம்,Kanganam - தோள் வளையை இட்டு,Ittu - (தோள்களில்) சாத்திக் கொண்டும் கழுத்தில்,Kazhuththil - திருக் கழுத்திலே தொடர்,Thodhar - சங்கிலியை கட்டி,Katti - அணிந்து கொண்டும் தம் கணத்தாலே,Tham kanaththale - (இன்னுமணிந்து கொண்டுள்ள) திருவாபரணங்களின் திரளோடுங்கூட சதிர் ஆ நடந்து வந்து,Sathir aa nadandhu vandhu - அழகாக நடந்து வந்து என்னை புறம் புல்குவான்-;,Ennai puram pulkuvan - எம்பிரான் என்னை புறம் புல்குவான் |
| 110 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஒன்பதாம் திருமொழி - வட்டு நடுவே) (தன் முதுகைக் கட்டிக்கொள்ளும்படி கண்ணனை அழைத்தல்) 3 | கத்தக் கதித்துக் கிடந்த பெருஞ்செல்வம் ஒத்துப் பொருந்திக் கொண்டு உண்ணாது மண்ணாள்வான் கொத்துத் தலைவன் குடி கெடத் தோன்றிய அத்தன் வந்து என்னைப் புறம் புல்குவான் ஆயர்களேறு என் புறம் புல்குவான்–1-9-3 | கத்தக் கதித்து கிடந்த,Kattak kathiththu kidantha - மிகவும் கொழுத்து (உனக்கு எனக்கென்று பிணங்கும்படி) இருந்த பெருஞ்செல்வம்,Perunchelvan - மிகுந்த ஐச்வர்யத்தை ஒத்து,Othu - (தன் பந்துக்களான பாண்டவர்களோடு) ஒத்து பொருந்திக் கொண்டு,Porundhik kondu - மனம் பொருந்தி யிருக்க உண்ணாது,Unnaadhu - அநுபவியாமல் மண்,Man - பூமியை ஆள்வான்,Azhvaan - (தான் அத்விதீயனாய்) ஆள வேணுமென்று நினைத்தவனான கொத்து தலைவன்,Kothu thalaivan - (தம்பிமார்களும் பந்துக்களும் ஸேனைகளுமாகிய) திரளுக்குத் தலைவனாகிய துர்யோதநன் குடி கெட,Kudi keda - (தன்) குடும்பத்தோடு பாழாம்படி தோன்றிய,Thonriya - திருவவதரித்த அத்தன்,Atthan - ஸ்வாமி வந்து என்னை புறம் புல்குவான்-;,Vandhu ennai puram pulkuvan - எம்பிரான் என்னை புறம் புல்குவான் ஆயர்கள் ஏறு,Aayarkal aaru - இடையர்களுக்குள் சிறந்த கண்ண பிரான் என் புறம் புல்குவான்-.,En puram pulkuvan - எம்பிரான் என்னை புறம் புல்குவான் |
| 111 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஒன்பதாம் திருமொழி - வட்டு நடுவே) (தன் முதுகைக் கட்டிக்கொள்ளும்படி கண்ணனை அழைத்தல்) 4 | நாந்தக மேந்திய நம்பி சரணென்று தாழ்ந்த தனஞ்சயற்காகி தரணியில் வேந்தர்களுட்க விசயன் மணித் திண் தேர் ஊர்ந்தவன் என்னைப் புறம் புல்குவான் உம்பர் கோன் என்னைப் புறம் புல்குவான்–1-9-4 | நாந்தகம்,Nanthagam - நந்தகம் என்னும் வாளை ஏந்திய,Aendhiya - கையிலணிந்துள்ள நம்பி,Nambi - பெரியோனே! சரண்,Saran - (நீ எனக்கு) ரக்ஷகன் என்று,Endru - என்று சொல்லி தாழ்ந்த,Thaazhntha - (தன்னை) வணங்கிய தனஞ்சயற்கு ஆகி,Thananjayarku aagi - அர்ஜுநனுக்குப் பக்ஷபாதி யாயிருந்து தரணியில்,Tharaniyil-ib bhoomiyile - இப் பூமியிலே வேந்தர்கள்,Vendarhal - (எதிரிகளான) ராஜாக்கள் உட்க,Utka - அஞ்சிக் கலங்கும்படி விசயன்,Vichayan-anda Arjunanathu - அந்த அர்ஜுநனது மணி திண் தேர்,Mani thin ther - அழகிய வலிய தேரை ஊர்ந்தவன்,Oornthavan - (ஸாரதியாயிருந்து) செலுத்தின இவன் என்னை புறம்புல்குவான்-;,Ennai purampulkuvan - எம்பிரான் என்னை புறம் புல்குவான் உம்பர்,Umbar - நித்ய ஸூரிகளுக்கு கோன்,Kon - நிர்வாஹகனான இவன் என்னை புறம் புல்குவான்,Ennai puram pulkuvan - எம்பிரான் என்னை புறம் புல்குவான் |
| 112 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஒன்பதாம் திருமொழி - வட்டு நடுவே) (தன் முதுகைக் கட்டிக்கொள்ளும்படி கண்ணனை அழைத்தல்) 5 | வெண்கலப் பத்திரம் கட்டி விளையாடி கண் பல செய்த கருந்தழைக் காவின் கீழ் பண்பல பாடிப்பல்லாண் டிசைப்ப பண்டு மண் பல கொண்டான் புறம் புல்குவான் வாமனன் என்னைப் புறம் புல்குவான்–1-9-5 | பண்டு,Pandu - முன்னொரு காலத்திலே வெண்கலம் பத்திரம்,Venkalam paththiram - வெண்கலத்தினாற் செய்த பத்திரத்தை கட்டி,Katti - (அரையிற்) கட்டிக் கொண்டு விளையாடி,Vilaiyaadi - விளையாடி பல கண் செய்த,Pala kan seitha - பல பீலிக் கண்களைக் கொண்டு செய்யப்பட்ட கரு தழை,Karu thazhai - பெரிய குடையாகிற காவின் கீழ்,Kaavin keezh - சோலையின் கீழேயிருந்து (மாவலியிடத்தில் மூவடி மண்ணை இரந்து பெற்று) பல பண் பாடி,Pala pan paadi - (அநுகூலரானவர்கள்) பலவித ராகங்களைப் பாடிக் கொண்டு பல்லாண்டு இசைப்ப,Pallandu isaippa - மங்களாசாஸநம் செய்ய பல மண் கொண்டான்,Pala man kondaan - பல (ஸகலமான) லோகங்களையுமளந்து தன்னதாக்கிக் கொண்ட இவன் புறம் புல்குவான்,Puram pulkuvan - வாமனன் என்னை புறம் புல்குவான் |
| 113 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஒன்பதாம் திருமொழி - வட்டு நடுவே) (தன் முதுகைக் கட்டிக்கொள்ளும்படி கண்ணனை அழைத்தல்) 6 | சத்திர மேந்தித் தனி யொரு மாணியாய் உத்தர வேதியில் நின்ற ஒருவனை கத்திரியர் காணக் காணி முற்றும் கொண்ட பத்திராகாரன் புறம் புல்குவான் பாரளந்தான் என் புறம் புல்குவான்–1-9-6 | உத்தர வேதியில் நின்ற,Uththara vethiyil ninra - உத்தர வேதியிலிருந்த ஒருவனை,Oruvanai - (ஔதார்யத்தில்) அத்விதீயனான மஹாபலியினிடத்திலே சத்திரம்,Saththiram - குடையை ஏந்தி,Aendi - (கையில்) பிடித்துக் கொண்டு தனி,Thani - ஒப்பற்ற ஒரு மாணி ஆய்,Oru maani aayi - ஒரு ப்ரஹ்மசாரி வாமகனாய் (போய்) கத்திரியர்,Kaththiriyar - (அவனுக்குக் கீழ்ப்பட்ட) க்ஷத்ரியர்கள் காண,Kaana - பார்த்துக் கொண்டிருக்கையில் காணி முற்றும்,Kaana muṟṟum - உலகம் முழுவதையும் கொண்ட,Konda - (நீரேற்றளந்து) தன்னதாக்கிக் கொண்ட பத்திரம்,Paththiram - விலக்ஷணமான ஆகாரன்,Aakaaran - வடிவை யுடையனான இவன் புறம் புல்குவான்-;,Puram pulkuvan - புறம் புல்குவான்-; பார்,Paar - பூமியை அளந்தான்,Alandhaan - (திரிவிக்கிரமனாய்) அளந்த இவன் என் புறம் புல்குவான்-.,En puram pulkuvan - என் புறம் புல்குவான்-. |
| 114 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஒன்பதாம் திருமொழி - வட்டு நடுவே) (தன் முதுகைக் கட்டிக்கொள்ளும்படி கண்ணனை அழைத்தல்) 7 | பொத்த வுரலைக் கவிழ்த்து அதன் மேலேறி தித்தித்த பாலும் தடாவினில் வெண்ணெயும் மெத்தத் திரு வயிறார விழுங்கிய அத்தன் வந்து என்னைப் புறம்புல்குவான் ஆழியான் என்னைப் புறம்புல்குவான்–1-9-7 | பொத்த உரலை,Potta uralai - (அடியில்) ஓட்டையாய் விட்டதொரு உரலை (கொண்டு வந்து) கவிழ்த்து,Kavizhththu - தலை கவிழ்த்துப் போட்டு அதன் மேல் ஏறி,Adhan mel aeri - அவ் வுரவின் மேலேறி தடாவினில்,Thadavinil - மிடாக்களிலே உள்ள தித்தித்த பாலும்,Thiththitha paalum - மதுரமான பாலையும் வெண்ணெயும்,Vennaiyum - வெண்ணெயையும் திரு வயிறு ஆர்,Thiru vayiru aar - வயிறு நிரம்ப மெத்த விழுங்கிய,Meththa vizhunkiya - மிகுதியாக விழுங்கின அத்தன்,Atthan - தலைவன் வந்து என்னை புறம் புல்குவான்-;,Vandhu ennai puram pulkuvan - வந்து என்னை புறம் புல்குவான்-; ஆழியான்,Aazhiyaan - (இப்படிக் களவு கண்டு உண்கையில்) ஆழ்ந்து தேறியவன் என்னை புறம் புல்குவான்-.,Ennai puram pulkuvan - என்னை புறம் புல்குவான்-. |
| 115 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஒன்பதாம் திருமொழி - வட்டு நடுவே) (தன் முதுகைக் கட்டிக்கொள்ளும்படி கண்ணனை அழைத்தல்) 8 | மூத்தவை காண முது மணற் குன்றேறி கூத்து உவந்தாடிக் குழலால் இசை பாடி வாய்த்த மறையோர் வணங்க இமையவர் ஏத்த வந்து என்னைப் புறம் புல்குவான் எம்பிரான் என்னைப் புறம் புல்குவான்–1-9-8 | மூத்தவை,Moothavai - வயசு சென்ற இடைச் சனங்கள் காண,Kaana - காணும் படியாக முது மணல் குன்று ஏறி,Mudhu manal kunru aeri - நெடுநாளாய் குவிந்து மேடாயிருந்த மணற்குன்றின் வாய்த்த,Vaayththa - தன்னுடைய சேஷ்டிதத்தைக் காணும்படி கிட்டின மறையோர்,Maraiyor - ப்ரஹ்ம ரிஷிகள் வணங்க,Vananga - தன்னைக் கண்டு வணங்கவும் இமையவர்,Imaiavar - தேவர்கள் ஏத்த,Aetha - ஸ்தோத்ரஞ்செய்யவும் குழலால் இசைபாடி,Kuzhalal isaipaadi - வேய்ங்குழலினால் ராகம் பாடிக் கொண்டும் உவந்து,Uvandu - ஸந்தோஷித்து கூத்து ஆடி,Koothu aadi - கூத்தாடியும் நின்று வந்து என்னை புறம்புல்குவான்-;,Vandhu ennai purampulkuvan - வந்து என்னை புறம்புல்குவான்-; எம்பிரான் என்னை புறம்புல்குமான்-,Emperaan ennai purampulkumaan - வந்து என்னை புறம்புல்குவான்-; |
| 116 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஒன்பதாம் திருமொழி - வட்டு நடுவே) (தன் முதுகைக் கட்டிக்கொள்ளும்படி கண்ணனை அழைத்தல்) 9 | கற்பகக் காவு கருதிய காதலிக்கு இப்பொழுது ஈவதென்று இந்திரன் காவினில் நிற்பன செய்து நிலாத் திகழ் முற்றத்துள் உய்த்தவன் என்னைப் புறம் புல்குவான் உம்பர் கோன் என்னைப் புறம் புல்குவான்–1-9-9 | இந்திரன் காலினில்,Indhiran kaalinil - இந்த்ரனுடைய உத்யாநவநத்திலிருந்த கற்பகம் காவு,Karphakam kaavu - கற்பகச் சோலையை கருதிய,Karuthiya - (தன் வீட்டிற் கொண்டு வைக்க வேணுமென்று) விரும்பிய காதலிக்கு,Kaathalikkum - தனக்கு ப்ரியையான ஸத்யபாமைப் பிராட்டிக்கு இப்பொழுது,Ippozhudhu - இப்பொழுதே ஈவன்,Eevan - கொணர்ந்து தருவேன் என்று,Endru - என்று சொல்லி நிலா திகழ்,Nila thigazh - நிலா விளங்குகின்ற முற்றத்துள்,Mutraththul - அவள் வீட்டு முற்றத்தில் நிற்பன செய்து,Nirpan seyththu - இருப்பனவாகச் செய்து உய்த்தவன் என்னை,Uythanavan ennai - தழைக்கும்படி செய்தவன் என்னை புறம்புல்குவான்-;,Ennai purampulkuvan - என்னை புறம்புல்குவான்-; உம்பர் கோன்,Umbar kon - (அன்று தன் பராக்ரமத்தை காட்டிய) தேவாதி தேவன் என்னை புறம்புல்குவான்-.,Ennai purampulkuvan - என்னை புறம்புல்குவான்-; |
| 117 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஒன்பதாம் திருமொழி - வட்டு நடுவே) (பெரியாழ்வார் தாம் அநுபவித்து ஸந்தோஷித்து உலகத்தார்க்கு உபகரித்த தமிழ்ப் பாசுரமாகிய இப் பத்துப் பாசுரங்களையும் ஓத வல்லவர்கள் மங்களாசாஸநத்தில் விருப்பம் பொருந்தி நல்ல புத்திரர்களை அடைந்து ஆநந்திப்பர்கள்) 10 | ஆய்ச்சி யன்றாழிப் பிரான் புறம் புல்கிய வேய்த் தடந் தோளி சொல் விட்டு சித்தன் மகிழ்ந்து ஈத்த தமிழிவை ஈரைந்தும் வல்லவர் வாய்த்த நன் மக்களைப் பெற்று மகிழ்வரே–1-9-10 | வேய்,Vey - மூங்கில் போன்ற தடந்,Tadan - பெரிய தோளி,Tholi - தோள்களை யுடையனான ஆய்ச்சி,Aaychi - யசோதை யானவன் ஆழிப் பிரான்,Aazhi piran - சக்ராயுததானாகிய ப்ரபுவான கண்ணன் அன்று,Andru - அக் காலத்திலே புறம் புல்கிய,Puram pulgiya - புறம் புல்குவதைக் கூறிய சொல்,Sol - சொல்லை விட்டு சித்தன்,Vittu chiththan - பெரியாழ்வார் மகிழ்ந்து,Magizhndhu - (தாம் அநுபவித்து) ஸந்தோஷித்து ஈந்த,Eintha - (உலகத்தார்க்கு) உபகரித்த தமிழ் இவை ஈர் ஐந்தும்,Tamil ivai eer aindhum - தமிழ்ப் பாசுரமாகிய இப் பத்துப் பாசுரங்களையும் வல்லவர்,Vallavar - ஓத வல்லவர்கள் வாய்த்த,Vaaytha - (மங்களாசாஸநத்தில் விருப்பம்) பொருந்தி நல் மக்களை,Nal makkalai - நல்ல புத்திரர்களை பெற்று,Petru - அடைந்து மகிழ்வர்,Magizhvar - ஆநந்திப்பர்கள். |