Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: வெண்ணெய்விழுங்கி (11 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
202ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-ஒன்பதாம் திருமொழி - வெண்ணெய்விழுங்கி) (வெண்ணெய் களவாடல் முதலிய பாலக்ரீடை வர்ணனம்) (எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 1
வெண்ணெய் விழுங்கி வெறுங்கலத்தை வெற்பிடை யிட்டு அதனோசை கேட்கும்
கண்ண பிரான் கற்ற கல்வி தன்னைக் காக்ககில்லோம் உன் மகனைக் காவாய்
புண்ணில் புளிப்பெய்தா லொக்கும் தீமை புரை புரையால் இவை செய்ய வல்ல
அண்ணற் கண்ணானோர் மகனைப் பெற்ற அசோதை நங்காய் உன் மகனைக் கூவாய்–2-9-1
வெண்ணெய்,Vennai - வெண்ணெயை
விழுங்கி,Vizhunki - (நிச் சேஷமாக) விழுங்கி விட்டு
வெறுங் கலத்தை,Verung Kalathai - (பின்பு) ஒன்றுமில்லாத பாத்ரத்தை
வெற்பிடை இட்டு,Verpidai Ittu - கல்லிலே பொகட்டு
அதன் ஓசை,Adhan Osai - அப்படி எறிந்ததனாலுண்டான ஓசையை
கேட்கும்,Ketkum - கேட்டுக் களிக்கின்ற
கண்ண பிரான்,Kanna Piraan - ஸ்ரீக்ருஷ்ண பிரபு
கற்ற,Katra - படித்துள்ள
கல்வி தன்னை,Kalvi Thannai - (தஸ்கர) வித்தையைக்
காக்க கில்லோம்,Kaakka Killom - (எங்களால்) காக்க முடியாது;
உன் மகனை,Un Mahanai - (ஆகையால்) உன் பிள்ளையை
காவாய்,Kaavai - (தீம்பு செய்யாமல்) தடுப்பாயாக;
புண்ணில்,Punnil - புண்ணின் மேலே
புளி பெய்தால் ஒக்கும்,Puli Peithal Okkum - புளியைச் சொரிந்ததைப் போன்ற (தீவிரமான)
தீமை இவை,Theemai Ivai - இப்படிப்பட்ட தீம்புகளை
புரை புரை,Purai Purai - வீடு தோறும்
செய்ய வல்ல,Seyya Valla - செய்வதில் ஸமர்த்தனாகி
அண்ணல் கண்ணான்,Annal Kannan - ஸ்வாமித்வ ஸூசகமான கண்களை யுடையனான
ஓர் மகனை,Or Mahanai - ஒரு புத்திரனை
பெற்ற,Petra - பெற்ற
அசோதை நங்காய்,Asothai Nangai - யசோதைப் பிராட்டி;
உன் மகனை,Un Mahanai - உன் பிள்ளையை
கூவாய்,Koovai - அழைத்துக் கொள்வாயாக.
203ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-ஒன்பதாம் திருமொழி - வெண்ணெய்விழுங்கி) (வெண்ணெய் களவாடல் முதலிய பாலக்ரீடை வர்ணனம்) (எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 2
வருக வருக வருக இங்கே வாமன நம்பீ வருக இங்கே
கரிய குழல் செய்ய வாய் முகத்துக் காகுத்த நம்பீ வருக இங்கே
அரிய னிவன் எனக்கு இன்று நங்காய் அஞ்சன வண்ணா அசல கத்தார்
பரிபவம் பேசத் தரிக்க கில்லேன் பாவியேனுக்கு இங்கே போத ராயே–2-9-2
இங்கே,Enge - இவ்விடத்திலே
வருக வருக வருக,Varuga Varuga Varuga - சடக்கென வருவாயாக;
வாமன நம்பீ! இங்கே வருக-;,Vamana Nambi Inge Varuga - வாமன நம்பீ! இவ்விடத்திலே வருவாயாக;
கரிய குழல்,Kariya Kuzhal - கரு நிறமான கூந்தலையும்
செய்ய வாய்,Seyya Vaai - செந் நிறமான வாயையும்
முகத்து,Mugaththu - (ஒப்பற்ற) முகத்தையு முடைய
காகுத்த நம்பீ,Kaaguththa Nambi - இராம மூர்த்தி!
இங்கே வருக-;,Inge Varuga - இவ்விடத்திலே வருவாயாக
நங்காய்,Nangai - (என்று கண்ணனையழைத்து, தன் பிள்ளைமேல் குற்றம்சொன்னவளை நோக்கி யசோதை) குண பூர்ணை யானவளே!
இவன்,Ivan - இந்தப் பிள்ளை
எனக்கு,Enakku - எனக்கு
இன்று,Indru - இப்போது
அரியன்,Ariyan - அருமையானவனாயிற்றே;
அஞ்சனம்,Anjanam - (என்று சொல்லி மீண்டும் கண்ணனை நோக்கி) மை போன்ற
வண்ணா,Vanna - வடிவு படைத்தவனே!
அசல் அகத்தார்,Asal Agaththar - அசல் வீட்டுக்காரர்கள்
பரிபவம் பேச,Paripavam Pes - (உன்மேல்) அவமாந கரமான சொற்களைச் சொன்னால்
தரிக்க கில்லேன்,Tharikka Killen - பொறுக்க வல்லேனல்லேன்;
பாவியேனுக்கு,Paaviyeenukku - (இப்படி பரிபவங்களைக் கேட்கும்படியான) பாவத்தைப் பண்ணின எனக்கு
இங்கே போதராய்,Inge Potharai - (இவ் வருத்தந் தீர) இங்கே வாராய் (என்று யசோதை கண்ணனையழைக்கிறாள்.)
204ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-ஒன்பதாம் திருமொழி - வெண்ணெய்விழுங்கி) (வெண்ணெய் களவாடல் முதலிய பாலக்ரீடை வர்ணனம்) (எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 3
திருவுடைப் பிள்ளை தான் தீய வாறு தேக்க மொன் றுமிலன் தேசு டையன்
உருக வைத்த குடத்தொடு வெண்ணெய் உறிஞ்சி யுடைத்திட்டுப் போந்து நின்றான்
அருகிருந்தார் தம்மை அநியாயம் செய்வது தான் வழக்கோ அசோதாய்
வருகவென்று உன் மகன் தன்னைக் கூவாய் வாழ வொட்டான் மது சூதனனே–2-9-3
திரு உடை பிள்ளை தான்,Thiru Udai Pillai Thaan - உன் செல்லப் பிள்ளையாகிய கண்ணன்
தீய ஆறு,Theeya Aaru - தீம்பு செய்யும் வழியில்
ஒன்றும் தேக்கம் இவன்,Ondrum Theakkam Ivan - சிறிதும் தாமஸிப்பதில்லை.
தேசு உடையன்,Desu Udaiyan - அதைத் தனக்குப்) புகழாகக் கொண்டிரா நின்றான்;
உருக வைத்து,Uruga Vaithu - (இவன் செய்ததென்ன வென்றால்) உருகுவதற்காக (அடுப்பில் நான் வைத்திருந்த)
வெண்ணெய்,Vennai - வெண்ணெயை
குடத்தொடு,Kudathodu - தாழியோடே (நிச்சேஷமாக)
உறிஞ்சி,Uruinji - உறிஞ்சி விட்டு
உடைத்திட்டு,Udaithittu - தாழியை யுமுடைத்துப் பொகட்டு
போந்து நின்றான்,Ponthu Nindran - (பிறகு தான் உடையாதவன் போல்) அவ்வருகே வந்து நில்லா நின்றான்;
அசோதாய்,Asothai - யசோதையே!
அருகு இருந்தார் தம்மை,Arugu Irundhar Thammai - உன் வீட்டருகே இருந்தவர்களை
அநியாயம் செய்வது,Aniyaayam Seivadhu - இஷ்டப்படி அக்ரமஞ் செய்வது
வழக்கோ தான்,Vazhakkothan - ந்யாயமாகுமோ?
உன் மகன் தன்னை,Un Mahan Thannai - (நீ) உன் பிள்ளையை
வருக என்று,Varuga Endru - ‘வா’என்று சொல்லி
கூவாய்,Koovai - அழைக்க வேணும்;
மது சூதனன்,Madhu Soodhanan - (நீ அழைத்துக் கொள்ளா விட்டாலோ) இக் கண்ண பிரான்
வாழ ஒட்டான்,Vaazha Ottan - (எங்களைக்) குடி வாழ்ந்திருக்க வொட்டான்.
205ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-ஒன்பதாம் திருமொழி - வெண்ணெய்விழுங்கி) (வெண்ணெய் களவாடல் முதலிய பாலக்ரீடை வர்ணனம்) (எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 4
கொண்டல் வண்ணா இங்கே போதராயே கோயிற் பிள்ளாய் இங்கே போதராயே
தெண் திரை சூழ் திருப் பேர்க் கிடந்த திரு நாரணா இங்கே போதராயே
உண்டு வந்தேன் அம்ம னென்று சொல்லி ஓடி அகம் புக ஆய்ச்சி தானும்
கண்டெதிரே சென் றெடுத்துக் கொள்ளக் கண்ண பிரான் கற்ற கல்வி தானே–2-9-4
கொண்டல்,Kondal - காளமேகம் போன்ற
வண்ணா,Vanna - வடிவை யுடையவனே!
இங்கே போதராய்,Inge Potharai - இங்கே வாராய்;
கோயில்,Kovil - திரு வரங்கத்தில் வஸிக்குமவனான
பிள்ளாய்,Pillai - பிள்ளையே!
இங்கே போதராய் ;,Inge Potharai - இங்கே வாராய்;
தென் திரை சூழ்,Then Thirai Soozh - தெளிவான அலையை யுடைய ஜலத்தால் சூழப்பட்ட
திருப்பேர்,Thiruper - திருப்பேர் நகரிலே
கிடந்த,Kidandha - பள்ளி கொண்டிரா நின்ற
திரு நாரணா,Thiru Narana - ஸ்ரீமந் நாராயணனே!
இங்கே போதராய்,Inge Potharai - இங்கே வாராய்;
அம்மம்,Ammam - (இப்படி அம்ம முண்கைக்காகப் புகழ்ந்தழைத்த யசோதையினருகிற் கண்ண பிரான் வந்து) உணவை
உண்டு வந்தேன்,Undu Vanthen - (நான்) உண்டு வந்தேன்
என்று சொல்லி,Endru Solli - என்று சொல்லி
ஓடி,Odi - ஓடி வந்து
அகம் புக,Agam Puga - அகத்தினுள்ளே புகும்
ஆய்ச்சி தானும்,Aaychi Thaanum - தாயான யசோதையும்
கண்டு,Kandu - (கண்ணன் வந்த வரவையும் இவன் முக மலர்ச்சியையும்) கண்டு (மகிழ்ந்து)
எதிரே சென்று,Ethire Sendru - எதிர் கொண்டு போய்
எடுத்துக் கொள்ள,Eduthuk Kolla - (அவனைத் தன் இடுப்பில்) எடுத்துக் கொள்ளும்படி
கண்ண பிரான்,Kanna Piraan - (அந்த) ஸ்ரீகிருஷ்ணன்
கற்ற,Katra - (தானாகவே) கற்றுக் கொண்ட
கல்வி தானே,Kalvi Thaane - கல்வியின் பெருமையிருந்தவாறு என்னே! (என்று ஆழ்வார் இனியராகிறார்)
206ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-ஒன்பதாம் திருமொழி - வெண்ணெய்விழுங்கி) (வெண்ணெய் களவாடல் முதலிய பாலக்ரீடை வர்ணனம்) (எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 5
பாலைக் கறந்து அடுப்பேற வைத்துப் பல் வளை யாள் என் மக ளிருப்ப
மேலை யகத்தே நெருப்பு வேண்டிச் சென்று இறைப் பொழுது அங்கே பேசி நின்றேன்
சாளக் கிராம முடைய நம்பி சாய்த்துப் பருகிட்டுப் போந்து நின்றான்
ஆலைக் கரும்பின் மொழி யனைய அசோதை நங்காய் உன் மகனைக் கூவாய்–2-9-5
ஆலை கரும்பு அனைய,Aalai Karumbu Anaiya - ஆலையிலிட்டு ஆடும்படி முதிர்ந்த கரும்பைப் போன்று
இன் மொழி,En Mozhi - மதுரமான மொழியை யுடைய
அசேதை நல்லாய்,Asethai Nallai - யசோதைப் பிராட்டி!
பல் வளையாள்,Pal Valaiyaal - பல வகை வளைகளை அணிந்துள்ள
என் மகன்,En Mahan - என் மகனானவன்
பாலை கறந்து,Paalai Karandhu - பாலை (ப்பாத்திரங்களில்) கறந்தெடுத்து
அடுப்பு ஏற வைத்து,Aduppu Era Vaithu - (அப் பாத்திரங்களை) அடுப்பின் மேலேற்றி வைத்து
இருப்ப,Irubba - (அவற்றுக்குக் காவலாக) இருக்க (நான்)
நெருப்பு வேண்டி,Neruppu Vendi - (அவற்றைக் காய்ச்சுவதற்காக) நெருப் பெடுத்து வர விரும்பி
மேலை அகத்தே சென்று,Melai Agaththe Sendru - மேலண்டை வீட்டிற்குப் போய்
அங்கே,Ange - அவ் விடத்தில்
இறைப் பொழுது,Iraip Pozhuthu - க்ஷண காலம்
பேசி நின்றேன்,Pesinindren - (அவர்களோடு) பேசிக் கொண்டிருந்து விட்டேன்; (அவ் வளவிலே)
சாளக்கிராமம் உடைய,Saalagrama Udaiya - ஸ்ரீஸாளக்ராமத்தை (இருப்பிடமாக) உடையனாய்
நம்பி,Nambi - ஒன்றாலுங் குறைவற்றவனான (உன் மகன்)
சாய்த்து,Saithu - (என் மகளிருந்த விடத்திற் சென்று) (அந்த க்ஷீர பாத்திரத்தைச்) சாய்த்து
பருகிட்டு,Parugittu - (அதிலிருந்த பாலை முழுதும்) குடித்து விட்டு
போந்து,Ponthu - (இப் புறத்தே) வந்து
நின்றான்,Nindran - (ஒன்றுமறியாதவன் போல) நில்லா நின்றான்;
உன் மகனை,Un Mahanai - (இனி இவன் எங்களகங்களில் இவ் வாறான தீமைகளைச் செய்யத் துணியாதபடி நீ சிக்ஷிப்பதற்காக) உன் பிள்ளையான இவனை
கடவாய்,Kadavai - அழைத்துக் கொள்ள வேணும்.
207ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-ஒன்பதாம் திருமொழி - வெண்ணெய்விழுங்கி) (வெண்ணெய் களவாடல் முதலிய பாலக்ரீடை வர்ணனம்) (எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 6
போதர் கண்டாய் இங்கே போதர் கண்டாய் போதரே னென்னாதே போதர் கண்டாய்
ஏதேனும் சொல்லி அசலகத்தார் ஏதேனும் பேச நான் கேட்க மட்டேன்
கோதுகலமுடைக் குட்டனேயா குன்றெடுத்தாய் குடமாடு கூத்தா
வேதப் பொருளே என் வேங்கடவா வித்தகனே இங்கே போதராயே–2-9-6
கோதுகலம் உடை,Kothukalam Udai - (எல்லாருடைய) கொண்டாட்டத்தையும் (தன் மேல்) உடைய
ஓ குட்டனே,O Kuttane - வாராய் பிள்ளாய்!
குன்று,Kundru - (கோவர்த்தனம் என்னும்) மலையை
எடுத்தாய்,Eduththai - (குடையாக) எடுத்தவனே!
குடம் ஆடு கூத்தா,Kudam Aadu Kooththa - குடக் கூத்தாடினவனே!
வேதம்,Vedam - வேதங்களுக்கு
பொருளே,Porule - பொருளாயிருப்பவனே!
என் வேங்கடவா,En Vengadavaa - ‘என்னுடையவன்’ என்று அபிமாநிக்கும்படி திருமலையில் நிற்பவனே!
வித்தகனே,Viththagane - வியக்கத் தக்கவனே! (நீ)
இங்கே,Inge - என்னருகில்
போதர் கண்டாய் போதர் கண்டாய்,Pothar Kandai Pothar Kandai - விரைந்து ஓடிவா;
போதரேன் என்னாதே,Potharen Ennaathe - (என்று யசோதை அழைக்க, அவன் ‘வரமாட்டேன்’ என்ன; )‘வர மாட்டேன்’ என்று சொல்லாமல்
போதர் கண்டாய்,Pothar Kandai - (இசைந்து) வருவாயாக;
அசல் அகத்தார்,Asal Agaththar - (என்று யசோதை வேண்டி யழைக்க, கண்ணன் ‘நீ இங்ஙனே வருந்தி யழைப்பது ஏதுக்காக?’ என்ன ) அசல் வீட்டுக் காரர்கள்
ஏதேனும்,Ethenum - இன்னது என்று எடுத்துக் கூற ஒண்ணா படியுள்ள சில கடுஞ்சொற்களை
சொல்லி,Solli - (உன்னை நோக்கித் தம்மிலே தாம்) சொல்லிக் கொண்டு
ஏதேனும்,Ethenum - (அவ்வளவோடும் நில்லாமல்) (என் காதால் கேட்கவும் வாயாற்சொல்லவு மொண்ணாத) சில பழிப்புகளை
பேச,Pesa - (என் பக்கலிலே வந்து) சொல்ல
நான்,Naan - (அவற்றை) (உன் மீது பரிவுள்ள) நான்
கேட்க மாட்டேன்,Ketka Matten - கேட்டுப் பொறுக்க மாட்டேன்
இங்கே போதராய்,Enge Potharai - (ஆதலால், அவர்களின் வாய்க்கு இரையாகாமல்) இங்கே வருவாயாக, (என்றழைக்கிறாள்.)
208ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-ஒன்பதாம் திருமொழி - வெண்ணெய்விழுங்கி) (வெண்ணெய் களவாடல் முதலிய பாலக்ரீடை வர்ணனம்) (எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 7
செந்நெல் அரிசி சிறு பருப்புச் செய்த அக் காரம் நறு நெய் பாலால்
பன்னிரண்டு திரு வோணம் அட்டேன் பண்டும் இப்பிள்ளை பரிசறிவன்
இன்ன முகப்பன் நா னென்று சொல்லி எல்லாம் விழுங்கிட்டுப் போந்து நின்றான்
உன் மகன் தன்னை யசோதை நங்காய் கூவிக் கொள்ளாய் இவையும் சிலவே–2-9-7
அசோதை நங்காய்!,Asothai Nangai - அசோதை நங்காய்!
செந்நெல் அரிசி,Sennel Arisi - செந்நெல் லரிசியும்
சிறு பருப்பு,Siru Paruppu - சிறு பயற்றம் பருப்பும்
செய்த,Seidha - (சமையற் குற்றமொன்றும் நெராதபடி காய்ச்சித் திரட்டி நன்றாகச்) செய்த
அக்காரம்,Akkaram - கருப்புக் கட்டியும்
நறு நெய்,Naru Nei - மணம் மிக்க நெய்யும்
பாலால்,Paalaal - பாலும் ஆகிற இவற்றாலே
பன்னிரண்டு திரு ஓணம்,Pannirandu Thiru Onam - பன்னிரண்டு திருவோணத் திரு நாளளவும்
அட்டேன்,Atten - (நோன்புக்கு உறுப்பாகப் பாயஸ பக்ஷணாதிகளை) சமைத்தேன்;
பண்டும்,Pandum - முன்பும்
இப் பிள்ளை,E Pillai - இப் பிள்ளையினுடைய
பரிசு,Parisu - ஸ்வபாவத்தை
அறிவன்,Arivan - (நான்) அறிவேன்;
எல்லாம்,Ellaam - (இப்போதும் அப்படியே திருவோண விரதத்திற்காகச் சமைத்த வற்றை) யெல்லாம்
விழுங்கிட்டு,Vizhungittu - (ஒன்றும் மிகாதபடி) விழுங்கிவிட்டு
நான் இன்னம் உகப்பன் என்று சொல்லி,Naan Innam Ugappan Endru Solli - (அவ்வளவிலும் திருப்தி பெறாமல்) ‘நான் இன்னமும் உண்ண வேண்டியிரா நின்றேன்’ என்று சொல்லிக் கொண்டு
போந்த,Ponthu - (அவ் விடத்தை விட்டு) கடக்க வந்து
நின்றான்,Nindran - (அந்ய பரரைப் போல) நில்லாநின்றான்;
உன் மகன் தன்னை,Un Mahan Thannai - (இனி இவ்வாறு தீமை செய்யாதபடி) உன் பிள்ளையான இக் கண்ணனை
கூவிக் கொள்ளாய்,Koovik Kollai - (உன் னருகில்) அழைத்துக் கொள்வாயாக;
இவையும்,Ivaiyum - (பிள்ளைகளைத் தீம்பு செய்ய வொட்டாதபடி பேணி வளர்க்க வேண்டி யிருக்க, அப்படி வளர்க்காமல்) இப்படி வளர்ப்பதும்
சிலவே,Silave - சில பிள்ளை வளர்க்கையோ?
209ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-ஒன்பதாம் திருமொழி - வெண்ணெய்விழுங்கி) (வெண்ணெய் களவாடல் முதலிய பாலக்ரீடை வர்ணனம்) (எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 8
கேசவனே இங்கே போதராயே கில்லே னென்னாது இங்கே போதராயே
நேச மிலாதா ரகத்திருந்து நீ விளையாடாதே போதராயே
தூசனம் சொல்லும் தொழுத்தை மாரும் தொண்டரும் நின்ற விடத்தில் நின்று
தாய் சொல்லுக் கொள்வது தன்மம் கண்டாய் தாமோதரா இங்கே போதராயே–2-9-8
கேசவனே,Kesavane - அழகிய குழலை யுடையவனே!
இங்கே போதராய்,Inge Potharai - இங்கே வருவாயாக;
கில்லேன் என்னாது,Killeen Ennadhu - ‘மாட்டேன்’ என்று மறுத்துச் சொல்லாமல்
இங்கே போதராய்;,Inge Potharai - இங்கே வருவாயாக, என்று யசோதை யழைக்க (இங்கே சிறிது விளையாடி வருகிறேன் என்று கண்ணன் சொல்ல,)
நீ,Nee - நீ
நேசம் இலாதார்,Nesam Ilaathaar - (உன்மீது) அன்பில்லாதவர்களுடைய
அகத்து இருந்து,Agaththu Irundhu - அகங்களிலே யிருந்து
விளையாடாதே,Vilayaadaadhe - விளையாட்டொழிவது மன்றி,
தூசனம் சொல்லும்,Thooshanam Sollum - (உன் மேல்) பழிப்புகளைச் சொல்லுகிற
தொழுத்தைமாரும்,Thozhuththaimarum - (இடைச்சிகளுக்கு) அடிச்சிகளானவர்களும்
தொண்டரும்,Thondarum - (இடையர்க்கு) அடியரானவர்களும்
நின்ற,Nindra - நிற்கின்ற
இடத்தில் நின்று,Idaththil Nindru - இடங்களையு மொழித்து விட்டு
போதராய்,Potharai - (இங்கே) வாராய்;
தாய் சொல்லு,Thaai Sollu - (என்று யசோதை சொல்லியும் அவன் வரக் காணாமையாலே,) தாய் வாய்ச் சொல்லை
கொள்வது,Kolvadhu - மேற் கொண்டு நடப்பது
தன்மம் கண்டாய்,Thanmam Kandai - (பிள்ளைகளுக்கு) தர்மங்காண்;
தாமோதரா! இங்கே போதராய். (என்றழைக்கின்றாள்.),Thaamodharaa Inge Potharai - (ஆதலால்) தாமோதரா! இங்கே போதராய். (என்றழைக்கின்றாள்.)
210ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-ஒன்பதாம் திருமொழி - வெண்ணெய்விழுங்கி) (வெண்ணெய் களவாடல் முதலிய பாலக்ரீடை வர்ணனம்) (எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 9
கன்ன லிலட்டுவத்தோடு சீடை காரெள்ளி னுண்டை கலத்தி லிட்டு
என்னக மென்று நான் வைத்துப் போந்தேன் இவன் புக்கு அவற்றைப் பெறுத்திப் போந்தான்
பின்னும் அகம் புக்கு உறியை நோக்கிப் பிறங்கொளி வெண்ணெயும் சோதிக் கின்றான்
உன் மகன் தன்னை யசோதை நங்காய் கூவிக் கொள்ளாய் இவையும் சிலவே–2-9-9
அசோதை நங்காய்,Asothai Nangai - அசோதை நங்காய்
கன்னல்,Kannal - கருப்புக் கட்டிப்பாகுடன் சேர்ந்த
இலட்டுவத்தோடு,Elattuvathodu - லட்டு என்னும் பக்ஷ்யத்தோடு
சீடை,Seedai - சீடையும்
கார் எள்ளின் உண்டை,Kaar Ellin Undai - எள்ளுண்டையையும்
கலத்தில்,Kalaththil - அவ் வவற்றுக்கு உரிய பாத்திரங்களிலே
இட்டு,Ettu - நிரைத்து
என் அகம் என்று,En Agam Endru - என் அகம் (ஆகையால் இங்குப் புகுவாரில்லை) என்று நினைத்து விசேஷமாக காவலிடாமல்
வைத்து,Vaithu - உறிகளிலே வைத்து விட்டு
நான் போந்தேன்,Naan Ponthen - நான் வெளியே வந்தேன்
இவன்,Evan - (அவ்வளவில்) இப் பிள்ளையானவன்
புக்கு,Pukku - அவ் விடத்திலே வந்து புகுந்து
அவற்றை,Avatrai - அப் பணியாரங்களை
பெறுத்தி,Peruththi - நான் பெறும்படி பண்ணி
போந்தான்,Ponthaan - ஒன்றுமறியாதவன் போல் இவ்வருகே வந்து விட்டான்
பின்னும்,Pinnum - (அவ்வளவிலும் பர்யாப்தி பிறவாமையால் ) மறுபடியும்
அகம் புக்கு,Agam Pukku - என் வீட்டினுள் புகுந்து
உறியை நோக்கி,Uriyai Nokki - உறியைப் பார்த்து அதில்
பிறங்கு ஒளி வெண்ணையும் சோதிக்கின்றான்,Pirangu Oli Vennaiyum Sodhikkindran - மிகவும் செவ்வியை உடைத்தான வெண்ணை உண்டோ என்று ஆராயா நின்றான்
உன் மகன் தன்னை,Un Mahan Thannai - (இச்சேஷ்டைகள் எனக்குப் பொறுக்கப் போகாமையால்) உன் பிள்ளையாகிய கண்ணனை
கூவிக் கொள்ளாய்,Koovik Kollai - உன்னருகில் வரும்படி அழைத்துக் கொள்
இவையும்,Ivaiyum - இப்படி இவனைத் தீம்பிலே கைவளா விட்டிருக்கிற இவையும்
சிலவே,Silave - ஒரு பிள்ளை வளர்க்கையோ
211ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-ஒன்பதாம் திருமொழி - வெண்ணெய்விழுங்கி) (வெண்ணெய் களவாடல் முதலிய பாலக்ரீடை வர்ணனம்) (எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 10
சொல்லி லரசிப் படுதி நங்காய் சுழலுடையன் உன் பிள்ளை தானே
இல்லம் புகுந்து என் மகளைக் கூவிக் கையில் வளையைக் கழற்றிக் கொண்டு
கொல்லையில் நின்றும் கொணர்ந்து விற்ற அங்கொருத்திக்கு அவ்வளை கொடுத்து
நல்லன நாவற் பழங்கள் கொண்டு நானல்லேனென்று சிரிக்கின்றானே–2-9-10
நங்காய்,Nangai - யசோதைப் பிராட்டி
சொல்லில்,Sollil - உன் மகன் செய்த தீமைகளை நாங்கள் சொன்னால்
அரசிப்படுதி,Arasippaduthi - அதற்காக நீ சீற்றம் கொள்ளா நின்றாய் (அரசி – அரசன் மனைவி. அரசிப்படுதி – அரசியின் தன்மையை அடைகிறாய்;
இது கோபிக்கிறாயென்ற பொருளைத் தந்தது.)

உன் பிள்ளை தான்,Un Pillai Thaan - உன் பிள்ளையோ என்றால்
சூழல் உடையனே,Soozhal Udaiyane - (பற்பல) வஞ்சனச் செய்கைகளை உடையனா இருக்கின்றானே (என்று ஒரு இடைச்சி சொல்ல அவன் என்ன தீமை செய்தான் என்று யசோதை கேட்க)
இல்லம் புகுந்து,EIlam Pugundhu - என் வீட்டினுள் புகுந்து
என் மகளை,En Magalai - என் பெண்ணை
கூவி,Koovi - பேர் சொல்லி அழைத்து
கையில் வளையை,Kaiyil Valaiyai - அவளுடைய கையிலிருந்த வளையை
கழற்றிக் கொண்டு,Kazhaththi Kondu - பலாத்காரமாக நீக்கிக் கொண்டுபோய்
கொல்லையில் நின்றும்,Kollayil Nindrum - காடுகளில் நின்றும்
நாவற்பழங்கள்,Naavar Pazhangal - நாவற்பழங்களை
கொணர்ந்து,Konarndhu - இடைச்சேரி தெருக்களில் கொண்டு வந்து
அங்கு,Angu - அவ் விடத்தில்
விற்ற,Vitra - அவற்றை விற்பனை செய்யலுற்ற
ஒருத்திக்கு,Oruththikku - ஒரு பெண் பிள்ளைக்கு
அவ்வளை,Avvalai - அந்த என் மகளுடைய கை வளையை
கொடுத்து,Koduthu - கொடுத்து
நல்லன,Nallana - (அதற்குப் பதிலாக) (தனக்கு) நல்லவையாகத் தோற்றின
நாவல் பழங்கள்,Naaval Pazhangal - நாவற் பழங்களை
கொண்டு,Kondu - அவளிடத்தில் வாங்கிக் கொண்டு
நான் அல்லேன் என்று,Naan Allaen Endru - (போரும் போராதென்று விவாதப் படுகிற வளவிலே , என்னைத் தன் அருகில் வரக் கண்டு,
நான் ஒன்றுங் கேளாதிருக்கச் செய்தேயே) (உன் மகளினது கை வளையை களவு கண்டவன்) நான் அல்லேன் என்று தானாகவேச் சொல்லி

சிரிக்கின்றான்,Sirikkindran - (அவ்வளவில் தன் திருட்டுத்தனம் வெளியானதை தானே அறிந்து கொண்டு) ஓ! மோசம் போனோமே என்று சிரியா நின்றான்.(இதிலும் மிக்கத் தீமையுண்டோ என்கிறாள்)
212ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-ஒன்பதாம் திருமொழி - வெண்ணெய்விழுங்கி) (வெண்ணெய் களவாடல் முதலிய பாலக்ரீடை வர்ணனம்) (எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 11
வண்டுகளித்திரைக்கும் பொழில் சூழ் வரு புனல் காவிரித் தென்ன ரங்கன்
பண்டவன் செய்த கிரீடை யெல்லாம் பட்டர் பிரான் விட்டு சித்தன் பாடல்
கொண்டிவை பாடிக் குனிக்க வல்லார் கோவிந்தன் தன் அடியார்களாகி
எண் திசைக்கும் விளக்காகி நிற்பார் இணை யடி என் தலை மேலனவே–2-9-11
வண்டு,Vandu - வண்டுகளானவை
களித்து,Kaliththu - (தேனைப் பருகிக்) களித்து
இரைக்கும்,Eraikkum - ஆரவாரங்கள் செய்யப் பெற்ற
பொழில்,Pozhil - சோலைகளாலும்
வரு,Varu - (அச் சோலைகளுக்காகப் பெருகி) வாரா நின்றுள்ள
புனல்,Punal - நீரை யுடைத்தான
காவிரி,Kaaviri - காவேரீ நதியான
சூழ்,Soozh - சூழப் பெற்று
தென்,Then - அழகிய
அரங்கன் அவன்,Arangan Avan - திருவரங்கத்தில் நித்யவாஸம் பண்ணுகிற வைபவத்தை யுடையவனான அப் பெருமான்
பண்டு,Pandu - (விபவமாகிய) முற் காலத்தில்
செய்த,Seidha - செய்த
கிரீடை எல்லாம்,Kireedai Ellaam - லீலா சேஷ்டிதங்களெல்லாவற்றையும் (விசேஷமாகக் கொண்டு)
விட்டு சித்தன் பட்டர்பிரான் பாடல்,Vittu Siththan Pattarpiraan Paadal - விஷ்ணுவை நெஞ்சிற் கொண்டவராய் பிராஹ்மணோத்தமரான பெரியாழ்வார் (பாடின) பாடலாகிய
இவை கொண்டு,Ivai Kondu - இப் பாட்டுக்களை (அநு சந்தேயமாகக் ) கொண்டு
பாடி,Paadi - (இப் பாசுரங்களை)பாடி
குனிக்க வல்லார்,Kunikka Vallaar - (அதனால் பக்தி மீதூர்ந்து உடம்பு இவ் விடத்தில் இராமல் விகாரமடைந்து) கூத்தாட வல்லவர்களாய்
கோவிந்தன் தன் அடியார்கள் ஆகி,Govindhan Than Adiyaargal Aagi - கண்ண பிரானுக்கு அடியவர்களாய்
என் திசைக்கும்,En Disaiyukkum - எட்டு திக்குகளிலும் (உள்ள இருள் நீங்கும்படி)
விளக்கு ஆகி நிற்பார்,Vilakku Aagi Nrirpaar - (அத் திக்குகளுக்கு) விளக்காக நிற்கும் அவர்களுடைய
இணை யடி,Inai Yadi - திருவடிவிணை களானவை
என் தலை மேலான,En Thalai Melaana - என்னுடைய முடியின் மேல் வீற்றிருக்கத் தக்கவை