| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3689 | திருவாய்மொழி || (10-3–வேய்மருதோளி) (ஆநிரை மேய்க்கச் சென்றால் பிரிவாற்றி இரோம் என்று போக்கைத் தவிர்க்குமாறு ஆய்ச்சியர் கண்ணனை வேண்டுதல்) (காலைப் பொழுதானவாறே கண்ணபிரானைப் பிரிய நேர்கின்றதேனென்கிற வருத்தம் செல்லா நிற்க அதற்கு மேலே குயில்மயில் முதலானவைகளின் பாடுதலும் ஆடுதலும் கேட்டும் கண்டும் இன்னமும் வருத்தம் வளர்ந்து செல்லுகிறபடியைச் சொல்லிப் புலம்புகிறாள்.) 1 | வேய் மரு தோளிணை மெலியும் ஆலோ மெலிவும் என் தனிமையும் யாதும் நோக்காக் காமரு குயில்களும் கூவும் ஆலோ கண மயில் அவை கலந்து ஆலும் ஆலோ ஆ மருவு இன நிரை மேய்க்க நீ போக்கு ஒரு பகல் ஆயிரம் ஊழி ஆலோ தாமரைக் கண்கள் கொண்டு ஈர்தி ஆலோ தகவிலை தகவிலையே நீ கண்ணா–10-3-1 | வேய் மருதோள் இணை,Vey maruthol inai - வேய் போன்ற தோள்களிரண்டும் கணம் மயில் அவை கலந்து ஆலும் ஆலோ,Kanam mayil avai kalandhu aalum AalO - திரளான மயில்கள் கலந்து கேகாரவம் செய்யா நின்றன அந்தோ! ஆல்ஓ,AalO - அந்தோ(அவ்வளவு மன்றிக்கே) மெலியும் பிரிவாற்றாமையினால் தளர்ந்தன;,Meliyum pirivaatraamaiyinaal thalarndhana; - மருவு ஆ நிரை இனம் மேய்க்களுன்னோடு மருவுகின்ற பசுக்கூட்டங்களை மேய்க்கைக்காக என் மெலிவும் என் தனிமையும்,En melivum en thanimaiyum - என்னுடல் மெலிவையும் பிரிவாற்றாத என் தனிமையையும் நீ போக்கு ஒரு பகல்,Nee pookku oru pagal - நீ (காட்டுக்குப்) போகிற ஒரு பகலானது யாதும் நோக்கா,Yaadhum nokkaa - சிறிதும் நோக்காமல் ஆயிரம் ஊழி ஆலோ,Aayiram oozhi AalO - ஆயிரம் யுகமாகக் கழியா நின்றதந் காமரு குயில்களும் கூவும்,Kaamaru kuyilgalum koovum - அழகிய குயில்களும் கூவுகின்றன; ; தாமரை கண்கள் கொண்டு ஈர்தி,Thaamarai kangal kondu eerthi - தாமரை போன்ற திருக்கண்களாலே நோக்கி நோவுபடுத்துகின்றாய் ஆலோ,AalO - அநதத் தொனியும் அஸஹ்யமாயிரா நின்ற தந்தேர் கண்ணா நீ தகவு இலை தகவு இலை,Kannaa nee thakavu ilai thakavu ilai - கண்ணா! நீ கருணையுடையை யல்லை, திண்ணம். |
| 3690 | திருவாய்மொழி || (10-3–வேய்மருதோளி) (ஆநிரை மேய்க்கச் சென்றால் பிரிவாற்றி இரோம் என்று போக்கைத் தவிர்க்குமாறு ஆய்ச்சியர் கண்ணனை வேண்டுதல்) (பிரிவை நினைத்துப் புலம்புகிற படியைக் கண்டு ஒருவாறு வருத்தம் தீரும்படி அடுத்தடுத்து ஆரத் தழுவிக் கொண்டான் கண்ணபிரான்; இது தான் விச்லேஷப்ராகலாவ காலத்து ஸம்ச்லேஷமாகையாலே இது துக்கமாகத் தோற்றுமே யல்லது ஸுகமாகத் தோற்றாதாகையாலே கனாக்கண்டு விழித்தாற்போலே நோவுபட நின்றமையைச் சொல்லிக் கதறுகிறாள்.) 2 | தகவிலை தகவிலை யே நீ கண்ணா தடமுலை புணர்தொறும் புணர்ச்சிக்கு ஆராச் சுகவெள்ளம் விசும்பு இறந்து அறிவை மூழ்க்கச் சூழ்ந்து அது கனவு என நீங்கி ஆங்கே அக உயிர் அகம் அகம் தோறும் உள் புக்கு ஆவியின் பரம் அல்ல வேட்கை அந்தோ மிக மிக இனி உன்னை பிரிவை ஆமால் வீவ நின் பசு நிரை மேய்க்கப் போக்கே–10-3-2 | தகவிலை தகவிலை யே நீ கண்ணா,Thagavilai thakavilai ye nee kannaa - (கண்ணா நீ தகவிலை தகவிலையே) அகம் உயிர்,Agam uyir - உள்ளீடான பிராணனுடைய தட முலை புணர் தொரும்,Thadamulai punar thoram - முலைத்தடங்களை நீ ஆலிங்கனம பண்ணுகிற க்ஷணந்தோறும் அகம் அகம் தோறும்,Agam agam thorum - மர்ம ஸ்தானங்கள் தோறும் புணர்ச்சிக்கு ஆரா,Punarccikku aaraa - அந்தப் புணர்ச்சியீனளவல்லாத உள் புக்கு,Ul pukku - உள்ளே பிரவேசித்து சுகம வெள்ளம்,Sugama vellam - ஆனந்த ஸாகரமானது விசும்பு இறந்து,Visumbu irandhu - ஆகாசத்தையும் கடந்து ஆவியின் பரம் அல்ல,Aaviyin param alla - ஆத்மாவுக்குப் பொறுக்கு வொண்ணாதபடியா யிரா நின்றது! அறிவை மூழ்க்க சூழ்ந்து,Arivai mooza suzhnthu - அறிவு கெடும்படி போய் பெருகினதாகி அந்தோ,Antho - ஐயோ!: அது கனவு என நீங்கி,Adhu kanavu ena neengi - (அப்போதே) அது கனவு தானென்னும் படியாகக் கழிந்து இனி மிக மிக உன்னை பிரிவை ஆம் ஆல்,Ini miga miga unnai pirivai aam aal - இனி மேன் மேலும் உன்னைப் பிரியும் படி யாகும் அந்தோ! (ஆதலால்) ஆங்கே,Aangey - அந்த நிலைமையிலே வேட்கை,Vedkai - ஆசையானது நின் பசு நிரை மேய்க்க போக்கு வீவ,Nin pasu nirai meykka pookku veeva - பசுக்களை மேய்க்கைக்காக நீ போவது தவிர வேணும். |
| 3691 | திருவாய்மொழி || (10-3–வேய்மருதோளி) (ஆநிரை மேய்க்கச் சென்றால் பிரிவாற்றி இரோம் என்று போக்கைத் தவிர்க்குமாறு ஆய்ச்சியர் கண்ணனை வேண்டுதல்) (பசு மேய்க்கப் போவது தவிர வேணுமெனறாள்; அதற்கு அவன் சொன்னதாவது… வர்ணாச்ரம தருமங்கள் தவிரப்போமோ? பசு மேய்ப்ப தென்பது எனக்கு ஜாதிக்கேற்ற தருமமான செயலன்றோ? இதை நான் தவிரத்தகுமோ? என்றான்; அதற்குச் சொல்லுகிறாள்; பிறர்க்கு ஹிம்ஸையாய் முடியுங் காரியம் தருமமாகுமோ? நீ பசு மேய்க்கப் போவது ஸ்த்ரீ வதமாயன்றோ முடிகிறது; * ஓர் பெண் கொடியை வதை செய்தானென்எஞ் சொல் வையகத்தார் மதியாரே* என்ற பாசுரம் கேட்டிலையோ; ஆண்கொலையிற் காட்டிலும் பெண் கொலை பெரும் பாதகமன்றோ. ராமாவதாரத்திலே தாடகாவதம் பண்ணியும் இவ்வவதாரத்திலே பூதநாவதம் பண்ணியும் சமைந்திருக்கிற நீ பெண் கொலைக்கு அஞ்சுதியோ வென்கிறாள்.) 3 | வீவன் நின் பசு நிரை மேக்கப் போக்கு வெவ் உயிர் கொண்டு எனது ஆவி வேமால் யாவரும் துணை இல்லை யான் இருந்து உன் அஞ்சன மேனியை ஆட்டம் காணேன் போவது அன்று ஒரு பகல் நீ அகன்றால் பொரு கயல் கண்ணினை நீரும் நில்லா சாவது இவ் ஆய்க் குலத்துக்கு ஆய்ச்சி யோமாய் பிறந்த இத் தொழுத்தையோம் தனிமை தானே–10-3-3 | நின் பசு நிரை மேய்க்க போக்கு,Nin pasu nirai meykka pookku - நீ பசுக்களை மேய்க்கப் போகும் நிமித்தமாக; வீவன்,Veivan - நான் முடிந்து போவேன் ஒரு பகல் போவது அன்று,Oru pagal povadhu andru - அந்த ஒரு பகற்போது கழிவதன்று காண்,(ஒரு யுகமாகப் பெருகிச் செல்லா நின்றதென்க) எனது ஆவி வெவ்வுயிர் கொண்டு வேம்,Enadhu aavi vevuyir kondu vem - எனது ஆத்மாவானது நெடு மூச்செறிந்து வெந்து போகின்றது; பொரு கயல் கண் இணை நீரும் நில்லா,Poru kayal kann inai neerum nilla - சண்டையிடுமிரண்டு கெண்டைகள் போன்ற கண்களும் நீர் பெருக நின்றன; துணை யாவரும் இல்லை,Thunai yaavarum illai - துணையாவார் ஒருவருமில்லை (அவ்வளவிலும் ஆசையின் கனத்தாலே) இவ் ஆய்குலத்து ஆய்ச்சி யோம்,Ev aaykulathu aaychchi yom - இடைச்சிகளாய்ப் பிறந்த ஆய் பிறந்த,Aay pirandha - நீ பிறந்த இடைக்குலத்திலே இடையராய்ப் பிறவாதே யான் இருந்து,Yaan irundhu - யான் முடியாதிருந்து . உன் அஞ்சனம் மேனியை,Un anjanam meniyai - அஞ்சனம் போன்றழகிய உன் திருமேனியினுடைய ஆட்டம் காணேன் ஸஞ்சாரமும் காண்கின்றிலேன்;,Aattam kaanaen sanjaarumum kaankindrilaen; - தொழுத்தை யோம் நீசத்தன்மை வாய்ந்த எங்களுடைய நீ அகன்றால்,Nee akanraal - நீ பிரிந்து போனால் இதனிமை தானே சாவது,Edhanimai thaane saavathu - இப்பிரிவுத் துயரம் தொலைய வேணும். |
| 3692 | திருவாய்மொழி || (10-3–வேய்மருதோளி) (ஆநிரை மேய்க்கச் சென்றால் பிரிவாற்றி இரோம் என்று போக்கைத் தவிர்க்குமாறு ஆய்ச்சியர் கண்ணனை வேண்டுதல்) (“ உங்களை நான விட்டுப் போவேனோ? பிரியேன், பிரியில் தரியேன், என்று நான் சொன்னதெல்லாம் மறந்தீர்களோ? என்னைப் பிரிந்து நீங்கள் படும் பாடெல்லாம் உங்களைப் பிரிந்து நான் படமாட்டேனோ? என் பிரிவை ஒருவாறு நீங்கள் பொறுத்திருந்தாலும் உங்கள் பிரிவு என்னால் பொறுக்குப போமோ!’’ என்றிப்படி சில வார்த்தைகளைக் கண்ணபிரான் ப்ரணயத்தின் மேலெல்லையில் நின்று சொல்ல; நாயனே! இந்தக் கள்ளப் பணிமொழிகள் தாம் எம்மை நீராயலைந்து கரைய வுருக்குகின்றன வென்கிறார்கள்.) 4 | தொழுத்தையோம் தனிமையும் துணை புரிந்தார் துயரமும் நினைகிலை கோவிந்தா நின் தொழுத்தனில் பசுக்களையே விரும்பி துறந்து எம்மை இட்டு அவை மேய்க்கப் போதி பழுத்த நல் அமுதின் இன் சாற்று வெள்ளம் பாவியேன் மனம் அகம் தோறும் உள் புக்கு அழுத்த நின் செங்கனி வாயின் கள்வப் பணி மொழி நினைதொறும் ஆவி வேமால்–10-3-4 | கோவிந்தா தொழுத்தையோம் தனிமையும்,Govindha thozhuthaiyom thanimaiyum - கண்ணா! அடிச்சிகளான எங்களுடைய தனிமையையும் இன் சாறு வெள்ளம்,En saaru vellam - இனிதான ரஸப்ரவாஹமானது துணை பிரிந்தார் துயரமும்,Thunai pirindhaar thuyarumum - துணையான வுன்னைப் பிரிந்தார் படுமலமாப்பையும் நினைகிலை,Ninaikilay - நினைக்கின்றாயில்லை; பாவியேன் மனம் அகம் தோறும் உள் புக்கு அழுத்த,Paaviyaan manam agam thorum ul pukku azhutha - பாவியேனுடைய நெஞ்சின் அவகாசந்தோறும் மறக்க வொண்ணாதபடி ஸ்திரமாக நின் செம் கனிவாயின்,Nin sem kanivaayin - சிவந்த கனி போன்ற திருபபவளத்தினின்று வந்த நின்தோழுதனில் பசுக்களையே விரும்பி உனது,Nin thozhuthanil pasukkalaiye virumbi unadhu - தொழுலிலுள்ளன பசுக்களையே ஆதரித்து இம்மை துறந்து இட்டு,Emmai thurandhu ittu - எங்களை அநாதரித்து விட்டு கள்வம் பணி மொழி,Kalvam pani mozhi - க்ருத்ரமமான தாழ்ந்த மொழிகளானவற்றை அவை மேய்க்க போதி,Avai meykka podhi - அவற்றை மேய்க்கப் போகா நின்றாய் நினைதொறும்,Ninaithorum - (அதற்கு மேல்) நினைககும் போதெல்லாம் பழுத்த நல் அமுதின்,Pazhutha nal amudhin - பரிப’வமாய்த் தெளிந்த அம்ருதத்தினுடைய ஆவி வேம் ஆல்,Aavi vem aal - எங்கள் பிராணன் பர்தபிக்கின்றது அந்தோ! |
| 3693 | திருவாய்மொழி || (10-3–வேய்மருதோளி) (ஆநிரை மேய்க்கச் சென்றால் பிரிவாற்றி இரோம் என்று போக்கைத் தவிர்க்குமாறு ஆய்ச்சியர் கண்ணனை வேண்டுதல்) (கண்ணபிரானுடைய கள்வப்பணிமொழிகள் அமன்மேலும் வளருகையாலே மீண்டும் “பணிமொழி நினைதொறமாவி வேமால்’’ என்கிறாள்.) 5 | பணி மொழி நினைதொறும் ஆவி வேமால் பகல் நிரை மேய்க்கிய போய கண்ணா பிணியவிழ்மல்லிகை வாடை தூவப் பெரு மத மாலையும் வந்தன்றாலோ மணி மிகு மார்வினின் முல்லைப் போது என் வன முலை கமழ்வித் துன் வாயமுதம் தந்து அணி மிகு தாமரைக் கையை யந்தோ அடிச்சியோம் தலை மிசை யணியாய்–10-3-5 | பணிமொழி நினைதொறும் ஆவி வேம் ஆல்,Panimozhi ninaithorum aavi vem aal - ஆச்வாஸகரமாகச் சொல்லுகிற வார்த்தைகளை நினைக்குந்தோறும் நெஞ்சு வேவா நின்றது; மணிமிகு மார்பினில்,Manimigu maarbinil - கௌஸ்துப மணிபேரொணி விஞ்சுகிற திருமார்பில் முல்லை போது,Mullai podhu - முல்லைப் பூவாலே பகல் நிரை மேய்க்கிய போய கண்ணா,Pagal nirai meykkiya poya kannaa - பகலெல்லாம் பசுமேய்க்கப் போன கண்ணனே! என் வன முலை கமழ்வித்து,En vana mulai kamazhvidhu - அழகிய முலையைப் பரிமளிக்கச் உன் வாய் அமுதம் தந்து,Un vaai amudham thandhu - உன்னுடைய செய்து பிணி அவிழ் மல்லிகை வாடை தூவ,Pini avizh malligai vaadai thoova - தட்டவிழ்ந்து அலருகிற மல்லிகைப் பூக்களை வாடையானது தூவ, அணி மிகு தாமரை கையை,Ani migu thaamarai kaiyai - அழகிய தாமரை போன்ற திருக்கையை பெரு மதம் மாலையும் வந்தின்று,Peru madham maalaiyum vandhindru - பெரிய செருக்கோடே ( மத்த கஜம் போலே) மாலைப் பொழுதும் வந்தது; அடிச்சியோம் தலை மிசை நீ அணியாய்,Adichiyom thalai misai nee aniyaai - அடிச்சியோம்£ன எங்களுடைய தலைமேலே நீ வைத்தருள வேணும். |
| 3694 | திருவாய்மொழி || (10-3–வேய்மருதோளி) (ஆநிரை மேய்க்கச் சென்றால் பிரிவாற்றி இரோம் என்று போக்கைத் தவிர்க்குமாறு ஆய்ச்சியர் கண்ணனை வேண்டுதல்) (கண்ணா! நீ போமிடமெங்கும் உனக்கொரு குறையுல்லை கிடாய்; உனக்குக் காதலிமார்கள் எங்குமுளர்; எங்களையொழியவும் உனக்குச் செல்லுமாபோலே உன்னை யொழியவும் எங்களுக்குச் செல்லுமாகில் நாங்கள் வருந்த வேண்டாவே; நாங்கள் உன்னைப் பிரிந்து தாக்கமாட்டாமையன்றோ கதறுகிறோம்; உன் போக்கு எங்களுக்கு ஸஹ்யமன்று காண் என்கிறாள்.) 6 | அடிச்சியோம் தலை மிசை நீ அணியாய் ஆழி அம் கண்ணா உன் கோலப் பாதம் பிடித்து அது நடுவு உனக்கு அரியையரும் பலர் அது நிற்க எம் பெண்மை ஆற்றோம் வடித்தடம் கண் இணை நீரும் நில்லா மனமும் நில்லா எமக்கு அது தன்னாலே வெடிப்பு நின் பசு நிரை மேய்க்கப் போக்கு வேம் எமது உயிர் அழல் மெழுகில் உக்கே–10-3-6 | ஆழி அம் கணணா,Aazhi am kannanaa - அடல் போன்று விடாய் தீர்க்க வல்ல அழகிய திருக்கண்கடிளயுடிடயவனே! எம் பெண்மை ஆற்றோம்,Em penmai aatrom - ( உன் பிரிவில்) எங்களுடைய பெண்மை கொண்டு ஆறியிருக்கமாட்டோம்; அடிச்சியோம் தலைமிசை நீ அணியாய்,Adichiyom thalaimisai nee aniyaai - அடிச்சியோமான எங்கள் தலைமீது உன் அணி மிகு தாமரைக்கையை வைத்தருள வேணும்; அடி தட கண் இணை நீரும் நில்லா,Adi thada kann inai neerum nilla - கூர்மையாய்ப் பெருத்திருத்துள்ள கண்களின் நீரானது தகைவு பட்டு நிற்கிறதில்லை; நடுவு,Naduvu - நீ போகிற காரியத்தின் நடுவே மனமும் நில்லா,Manamum nilla - நெஞ்சும் ஒரு நிலையில் நிற்கிறதில்லை; அது தன்னாலே,Adhu thannaale - ஆகையினாலே எமக்கு,Emakku - கணப்பொழுதும் பிரிவாற்றகிட்லலாத எங்களுக்கு, உன் கோலம் பாதம் அது பிடித்து,Un kolam paatham adhu pidithu - உனது அழகிய திருவடிகளைப் பிடித்து நின் பசு நிரை மேய்க்க போக்கு,Nin pasu nirai meykka pookku - நீ பசு மேய்க்கப் போவதானது வெடிப்பு,Vedippu - பரிதாபகரம்; உனக்கு அரிவையரும் பலர் அது நிற்க,Unakku arivaiyarum palar adhu nirka - உனக்கு அப்மதைகளாயிருக்கும் பெண்களோ பல்லாயிரவர், அது எப்படியாவது கிடக்கட்டும்; அழல் மெழுகில் ளுக்குவேம்,Azhal mezhugil lukkuvaem - நெருப்பில் மெழுகு போலே உருகி வேகின்றது எமது உயிர்,Emadhu uyir - எங்கள் ஆத்மாவானது |
| 3695 | திருவாய்மொழி || (10-3–வேய்மருதோளி) (ஆநிரை மேய்க்கச் சென்றால் பிரிவாற்றி இரோம் என்று போக்கைத் தவிர்க்குமாறு ஆய்ச்சியர் கண்ணனை வேண்டுதல்) (கண்ணா! உன்னைப் பிரிந்து படுகிற துக்கம் மாத்திரமேயன்று காண்; தேனுகன் பிலம்பன் காளியனென்எந் தீப்பப்பூடுகள் நிறைந்த விடங்களிலன்றோ நீ திரியப் போவது; அங்கே கம்ஸனேவின ஆஸுரப்ர’ருதிகள் வந்து கூடினால் என்னாகுமோவென்று அதைப் பற்றின கிலேகமும் அளவற்றது காண் என்கிறாள்.) 7 | வேம் எமது உயிர் அழல் மெழுகில் உக்கு வெள் வளை மேகலை கழன்று வீழ தூ மலர்க்கண் இணை முத்தம் சோரத் துணை முலை பயந்து என தோள்கள் வாட மா மணி வண்ணா உன் செங்கமல வண்ண மென் மலரடி நோவ நீ போய் ஆ மகிழ்ந்து உகந்து அவை மேய்க்கின்று உன்னோடு அசுரர்கள் தலைப் பெய்யில் எவன் கொல் ஆங்கே–10-3-7 | மா மணிவண்ணா,Maa manivanna - நீலமணி நிறத்தனான கண்ணபிரானே! நீ போய்,Nee poy - நீ சென்று என் வெள் வளைமேகலை கழன்று வீழ,En vel valai megala kazhandru veezha - எனது கைவளைகளும் அரையில் மேகலைகளும் பொருந்தாமல் கழன்று விழும்படியாகவும், ஆ மகிழ்ந்து உகந்து,Aa magizhndhu ugandhu - பசுக்களிடத்திலேயே பரம ப்ரிதியை வைத்து தூ மலர் கண் இணை முத்தம் சோர,Thoo malar kann inai mutham soora - செவ்வித்தாமரை போன்ற கண்களினின்று முத்துப் போன்ற நீர்த்தாரை பெருகவும், அவைமேய்க்கின்று,Avaimeykkindru - அவற்றை நீ மேய்க்கிற காலத்தில் உன்னோடு அசுரர்கள் தலைப் பெய்யில்,Unnodu asurargal thalaip peyil - உன்னோடு (கம்ஸனேவினை பல) அசுரர்கள் (போர் செய்யக்) கூடினால் துணை முலை பயந்து,Thunai mulai bayandhu - முலைகளிரணடும் விவர்ணமாகி ஆங்கு யவன் கொல் (என்று),Aangu yavan kol (endru) - அங்கு என்னாகுமோ வென்று (அதிசங்கை பண்ணி) தோள்கள் வாட,Tholgal vaada - தோள்கள் வாடும்படியாகவும் எமது உயிர்,Emadhu uyir - என் ஆத்மாவானது உன் செங்கமல வண்ணம் மெல் மலர் அடி நோவ,Un sengamala vannam mel malar adi nova - உனது பரமஸுகமாரமான பாதாரவிந்தங்கள் நோகும் படியாக அழல் மெழுகில் ளுக்குவோம்,Azhal mezhugil lukkuvom - நெருப்பில் மெழுகு போலே உருகி வேவாநின்றது. |
| 3696 | திருவாய்மொழி || (10-3–வேய்மருதோளி) (ஆநிரை மேய்க்கச் சென்றால் பிரிவாற்றி இரோம் என்று போக்கைத் தவிர்க்குமாறு ஆய்ச்சியர் கண்ணனை வேண்டுதல்) (கீழ்ப்பாட்டில் “அசுரர்கள் தலைப்பெய்யில்’’ என்று அஸுர ப்ரஸ்தாவம் வந்ததே; அதுவே மேலும் அநுவர்த்திக்கிறது; இப்பாட்டுத் தொடங்கிப் பதிகம் முடியுமளவும் அஸுர பயமே விஞ்சிச் செல்லுகிறதாயிற்று.) 8 | அசுரர்கள் தலைப்பெய்யில் எவன் கொல் ஆங்கு என்று ஆழும் என்னார் உயிர் ஆன் பின் போகல் கசிகையும் வேட்கையும் உள் கலந்து கலவியும் நலியும் என் கை கழியேல் வசி செய் உன் தாமரைக் கண்ணும் வாயும் கைகளும் பீதக வுடையும் காட்டி ஓசி செய் நுண்ணிடை இள வாய்ச்சியர் நீ யுகக்கும் நல்லவரோடும் உழி தராயே–10-3-8 | ஆங் அசுரர்கள் தலைப்பெய்யில் யவன் கொல் என்று,Aang asurargal thalaippeyyil yavan kol endru - நீ பசு மேய்க்கப் போகிற காட்டிலே அசுரர்கள் வந்து கூடினாலும் என்ன அபாயமாகுமோ வென்று கசிகையும் வேட்கையும் கலவியும் உள் கலந்து நலியும்,Kasikaiyum vedkaiyum kalaviyum ul kalandhu naliyum - நெஞ்சிலுள்ள ஈடுபாடும் மேன்மேலுமுண்டாகின்ற குதூஹலமும் கலவியும் இவை ஒன்று சேர்ந்து நலியா நிற்கும்; (ஆதலால்) என் ஆருயிர் ஆழும்,En aaruyir aazhum - அருமையான எனது உயிர் வருந்தா நின்றது; (ஆதலால்) என் கை கழியேல் என்னைப் பிரிந்து போகாதே; ஆன் பின் போகேல்,Aan pin pogel - சி பசுக்களின் பின்னே போகாதே; வசி செய்,Vasi sey - கண்டவர்களை வசப்படுத்த வல்ல உஉன் தாமரை கண்ணும் வாயும் கைகளும்,Un thaamarai kannum vaayum kaigalum - செந்தாமரை போன்ற உனது கண்களையும் வாயையும் கைகளையும் ஒசி செய் நுண் இடை உகக்கும் நல்லவரொடும்,Osi sey nun idai ugakkum nallavarodum - ஒசிந்த நுண்ணிடையையுடைய உனது காதலிமார்களுடனே பீதகம் உடையும் காட்டி,Peedhagam udaiyum kaatti - திருப்பீதாம்பர வடிய்ழகையுங் காட்டி, உழிதராய்,Uzhitharaai - திரிந்து கொண்டு இவ்விடத்திலேயே இரு. |
| 3697 | திருவாய்மொழி || (10-3–வேய்மருதோளி) (ஆநிரை மேய்க்கச் சென்றால் பிரிவாற்றி இரோம் என்று போக்கைத் தவிர்க்குமாறு ஆய்ச்சியர் கண்ணனை வேண்டுதல்) (கீழ்ப்பாட்டில் * நீயுக்க்கு நல்லவரோடு முழிதராயே* என்று சொன்னதைக் கேட்ட கண்ணபிரான் “இப்படி நீங்கள் சொல்லுகிறது உண்மையான வார்த்தையாகுமோ? ஏதோ நான் போகாமைக்காகச் சொல்லுகிற வார்த்தையே யொழிய, உங்களருகே நான் வேறு சில மாதரோடே கலந்து பரிமாறினால் அதை நீங்கள் பொறுத்திருப்பர்களோ? கண்ணாலேயே தஹித்து விடமாட்டீர்களோ?’’ என்று சொல்ல, அதற்கு மறுமாற்ற முரைப்பது இப்பாட்டு; உன்னோடு நாங்கள் கலவி செய்து அதனாலடையுமுகப்பிற்காட்டிலும், நீ உன் உகப்புக்கு இலக்கானாரோடு கூடி நெஞ்சிடர் தீர, அதனால் நாங்களடையுமுகப்பே எங்கட்கு உயர்ந்தது என்கிறது இப்பாட்டில்.) 9 | உகக்கும் நல்லவரோடும் உழி தந்து உன் தன் திரு உள்ளம் இடர் கெடும் தோறும் நாங்கள் வியக்க இன்புறுதும் எம் பெண்மை ஆற்றோம் எம்பெருமான் பசு மேய்க்கப் போகேல் மிகப் பல அசுரர்கள் வேண்டு உருவம் கொண்டு நின்று உழி தருவர் கஞ்சன் ஏவ அகப்படில் அவரோடும் நின்னொடு ஆங்கே அவத்தங்கள் விளையும் என் சொல் கொள் அந்தோ–10-3-9 | எம்பெருமான் உமக்கும் நல்லவரொடும் வழி தந்து,Emperumaan umakkum nallavarodum vazhi thandhu - எமது தலைவனே! நீ உகக்கும்படியான நன்மைமிக்க ஆய்ச்சிகளோடே திரிந்து பல அசுரர்கள் வேண்டு உருவம் கொண்டு,Pala asurargal vendu uruvam kondu - பலவசுரர்கள் (மரூபிகளாகையாலே) வேண்டின வடிவுகளைக் கொண்டு உன்தன் திருவுளம் இடர் கெடும் தோறும்,Unthan thiruvulam idar kedum thorum - உன் திருவுள்ளம் ஆனந்திக்குமளவில் மிக நின்று உழிதருவர்,Miga nindru uzhitharuvar - மிகவும் திரிவர்கள் நாங்கள் வியக்க இன்புறும்,Naangal viyakka inburum - அகப்பட்டால் எம் பெண்மை ஆற்றோம்,Em penmai aatrom - பிறரைக் காதலிக்குமளவில் பொறாமைப்படும்படியான பெண்மையை யுடையோமலலோம்; (ஆகவே) அவரொடும் நின்னொடு ஆங்கே,Avarodum ninnodu aangey - அவர்களும் நீயுமாகப் பிணக்கிடவே அவத்தங்கள் விளையும்,Avathangal vilaiyum - ஏதேனும் பொல்லாங்கு விளையும், பசு மேய்க்கப் போகேல் ;,Pasu meykka pogel; - பசு மேய்க்கப் போகாதே கொள் என் சொல் கொள்,En sol kol - என் சொல்லைப் பேணியருளாய், கஞ்சன் ஏவ,Kanjan eva - கம்ஸனுடைய ஏவுதலால் அந்தோ!,Antho! - பிரிவாற்றகில்லேன். |
| 3698 | திருவாய்மொழி || (10-3–வேய்மருதோளி) (ஆநிரை மேய்க்கச் சென்றால் பிரிவாற்றி இரோம் என்று போக்கைத் தவிர்க்குமாறு ஆய்ச்சியர் கண்ணனை வேண்டுதல்) (“அவத்தங்கள் விளையும்’’ என்றதைக் கேட்ட கண்ணபிரான் * அதிஸ்நேஹ, பாபசங்கீ* என்கிறபடியே உங்களுடைய அளவுகடந்த அன்பினால் இப்படி அதிசங்கை யுண்டாகின்றதே யன்றி, உண்மையில் எனக்கு யாதோரவத்யமும் விளையாது; வணாக அஸ்தாநே அங்ஞச வேண்டர் வாளாவிருங்கள்’’ என்று சொல்ல, அப்படியன்று காண்; உள்ளபடி சொல்லுகிறோம் கேளாய் என்கிறார்கள்.) 10 | அவத்தங்கள் விளையும் என் சொல் கொள் அந்தோ அசுரர்கள் வன்கையர் கஞ்சன் ஏவ தவத்தவர் மறுக நின்று உழி தருவர் தனிமையும் பெரிது உனக்கிராமனையும் உவத்திலை உடன் திரிகிலையும் என்று என்று ஊடுற வென்னுடை யாவி வேமால் திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவே–10-3-10 | செம் கனி வாய் எங்கள் ஆயர் தேவே,Sem kani vaai engal aayar deve - சிவந்த கனிபோன்ற அதரத்தையுடைய எங்களாயர் குலக்கொழுந்தே! உடன் திரிகிலையும் என்றெனறு,Udan thirikilaiyum endrenru - அவனோடுங் கூடித் திரியமாட்டாய் நீ யென்று இதைப் பலகாலும் நினைத்து வகையர் அசுரர்கள்,Vagayar asurargal - வலிமை மிக்க அசுரர்கள் கஞ்சன் ஏவ,Kanjan eva - கம்ஸனுடைய ஏவுதலால் என்னுடை ஆவி ஊடுறவேம்,Ennudai aavi ooduraveem - என்னெஞ்சு உள்உற வேவா நின்றது; தவத்தவர் மறுக நின்று –உழிதருவர்,Tavathavar maruga nindru –uzhitharuvar - முனிவர்கள் குடல் குழம்பும்படி திரிவர்கள் அந்தோ என் சொல் கொள்,Antho en sol kol - நீயோ! என் சொல்லைக் கொள்ளாய்; உனக்கு தனிமையும் பெரிது,Unakku thanimaiyum peridhu - நீயோ மிகவும் துணையற்றிரா நின்றாய்; திவத்திலும்,Thivathilum - திருநாட்டிலிருப்பதிற் காட்டிலும் இராமனையும் உவர்த்தலை,Iraamanaiyum uvarthalai - ( உனக்குத் துணைவனான) பலராமனையும் நீ உகவாதவனாய் பசு நிரை மேய்ப்பு உவத்தி,Pasu nirai meippu uvathi - பகூட்டங்களை மேய்ப்பதையே நீ உகக்கின்றாயே. |
| 3699 | திருவாய்மொழி || (10-3–வேய்மருதோளி) (ஆநிரை மேய்க்கச் சென்றால் பிரிவாற்றி இரோம் என்று போக்கைத் தவிர்க்குமாறு ஆய்ச்சியர் கண்ணனை வேண்டுதல்) (ஆழ்வார் தாமருளிச் செய்த பதிகங்களுள் எம்பெருமானைப் பசுநிரை மேய்க்கப் போக வேண்டாவென்று நிஷேதித்த பாசுரமான இப்பதிகமும் மற்றைப் பதிகங்ளோடொக்க ஒரு பதிகமே! என்று தாமே விஸ்மிதராகிறார்.) 11 | செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவு அத் திருவடி திருவடி மேல் பொருநல் சங்கணி துறைவன் வண்தென் குருகூர் வண் சடகோபன் சொல்லாயிரத்துள் மங்கையர் ஆய்ச்சியர் ஆராய்ந்த மாலை அவனோடும் பிரிவதற்கு இரங்கி தையல் அங்கு அவன் பசு நிரை மேய்ப்பு ஒழிப்பான் உரைத்தன இவையும் பத்து அவற்றின் சார்வே–10-3-11 | செம் கனி வாய்,Sem kani vaai - செங்கனி போன்ற அதரத்தையுடைய மங்கையர் ஆய்ச்சியர் ஆய்ந்த மாலை,Mangaiyar aaychiyar aayndha maalai - ஆயர் மங்கைகள் அநுஸந்தித்த சொல் மாலையாய் எங்கள் ஆயர் தேவு,Engal aayar devu - எங்களாயர் கொழுந்தாகிய அவனோடும் பிரிவதற்கு இரங்கி,Avanodum pirivadharku irangi - அவனை விட்டுப் பிரிவதற்கு வருந்தி அத்திருவடி,Aththiruvadi - அந்த ஸ்வாமியினுடைய அங்கு தையல்,Angu thaiyal - அததிருவாய்ப் பாடியிலுள்ள ஒரு ஆய்ச்சி திரு அடி மேல்,Thiru adi mel - திருவடிகளிலே, அவன் பசு நிரை மேய்ப்பு ஒழிப்பான் உரைத்தன,Avan pasu nirai meippu ozhippaan uraiththana - அவன் பசு மேய்க்கப் போவதைத் தவிரிப்பதற்காகச் சொன்ன பொருநல் சங்கணி துறைவன் வண் தென் குரு கூர் வண் சடகோபன் சொல் ஆயிரத்துள்,Porunal sangani thuraivan van then kurukoor van sadagopan sol aayirathul - தமிரபர்ணியில் திருச்சங்கணி துறையை நிரூபகமாகவுடையரான திருக்குருகூராழ்வார் பணித்த ஆயிரம் பாடலினுள்ளும் இவையும் பத்து,Ivaiyum paththu - இப்பதிகமும் அவற்றின் சார்வே,Avatrin saarve - மற்றைப் பதிகங்களுக்குச் சொன்ன பலனைத் தரும். |