| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 172 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து - ஆறாம் திருமொழி - வேலிக்கோல்) (காக்கையை கண்ணனுக்குக் கோல்கொண்டுவர விளம்புதல்) (கலித்தாழிசை) 1 | வேலிக்கோல் வெட்டி விளையாடு வில்லேற்றி தாலிக் கொழுந்தைத் தடங்கழுத் திற் பூண்டு பீலித் தழையைப் பிணைத்துப் பிறகிட்டு காலிப் பின் போவாற்கு ஓர் கோல் கொண்டு வா கடல் நற வண்ணற்கு ஓர் கோல் கொண்டு வா–2-6-1 | (அக்காக்காய்),Akkakkai - காக்கையே! வேலிக்கோல்,Velikkol - வேலிக் கால்களிலுள்ள கோலை வெட்டி,Vetti - (வாளால்) வெட்டி (அதை) விளையாடு வில்,Vilaiyadu Vil - லீலோபகரணமான வில்லாகச் செய்து ஏற்றி,Etri - (அதிலே) நாணேற்றியும், கொழுந்து தாலியை,Kozhundu Thalaiyai - சிறந்த ஆமைத் தாலியை தடங்கழுத்தில்,Thadankazhuthil - (தனது) பெரிய கழுத்திலே பூண்டு,Poondu - அணிந்து கொண்டும் பீலித் தழையை,Peelith Thazhaiyai - மயில் தோகைகளை பிணைத்து,Pinaittu - ஒன்று சேர்த்து பிறகு இட்டு,Piragu Ittu - பின் புறத்திலே கட்டிக் கொண்டும் காலி பின்,Kaali Pin - பசுக் கூட்டங்களின் பின்னே போவாற்கு,Povarku - போகி்ன்ற இவனுக்கு ஓர் கோல்,Or Kol - ஒரு கோலை கொண்டு வா கடல் நிறம் வண்ணற்கு ஓர் கோல் கொண்டு வா,Kadal Niram Vannarku Or Kol Kondu Va - கடல் நிறம் வண்ணற்கு ஒரு கோலை கொண்டு வா |
| 173 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து - ஆறாம் திருமொழி - வேலிக்கோல்) (காக்கையை கண்ணனுக்குக் கோல்கொண்டுவர விளம்புதல்) (கலித்தாழிசை) 2 | கொங்குங் குடந்தையும் கோட்டியூரும் பேரும் எங்கும் திரிந்து விளையாடும் என் மகன் சங்கம் பிடிக்கும் தடக் கைக்குத் தக்க நல் அங்க முடையதோர் கோல் கொண்டு வா அரக்கு வழித்ததோர் கோல் கொண்டு வா–2-6-2 | கொங்கு,Kongu - வாஸனை பொருந்திய குடந்தையும்,Kudanthaiyum - திருக் குடந்தையிலும் கோட்டி ஊரும்,Kotti Uurum - திருக் கோட்டியூரிலும் பேரும்,Perum - திருப்பேர் நகரிலும் எங்கும்,Engum - மற்றுமுள்ள திருப்பதிகளிலுமெல்லாம் திரிந்து,Thirindhu - ஸஞ்சரித்து விளையாடும்,Vilaiyaadum - விளையாடுகின்ற என் மகன்,En Magan - என் பிள்ளையினுடைய சங்கம் பிடிக்கும் தடக்கைக்கு,Sangam Pidikkum Thadakkaikku - பாஞ்ச ஜந்யம் தரிக்கிற பெரிய திருக்கைக்கு தக்க,Thakka - தகுந்ததான நல் அங்கம் உடையது,Nal Angam Udaiyathu - நல்ல வடிவை யுடையதாகிய ஓர் கோல் கொண்டு வா,Or Kol Kondu Va - ஒரு கோலை கொண்டு வா அரக்கு வழித்தது,Arakku Vazhithathu - (நல்ல நிறமுண்டாம்படி) அரக்குப் பூசியதாகிய ஓர் கோல் கொண்டுவா,Or Kol Konduva - ஒரு கோலை கொண்டு வா |
| 174 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து - ஆறாம் திருமொழி - வேலிக்கோல்) (காக்கையை கண்ணனுக்குக் கோல்கொண்டுவர விளம்புதல்) (கலித்தாழிசை) 3 | கறுத்திட்டு எதிர்நின்ற கஞ்சனைக் கொன்றான் பொறுத்திட்டு எதிர் வந்த புள்ளின் வாய் கீண்டான் நெறித்த குழல்களை நீங்க முன் னோடி சிறுக்கன்று மேய்ப்பாற்கு ஓர் கோல் கொண்டு வா தேவ பிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா–2-6-3 | கறுத்திட்டு,Karuthittu - கோபித்து எதிர் நின்ற,Ethir Nindra - தன்னை எதிரிட்டு நின்ற கஞ்சனை,Kanjanai - கம்ஸனை கொன்றான்,Konraan - கொன்றவனும் எதிர் வந்த,Ethir Vandha - (தன்னைக் கொல்வதாக) எதிர்த்து வந்த புள்ளின்,Pullin - பகாஸுரனுடைய வாய்,Vaai - வாயை பொறுத்திட்டு,Poruthittu - (முதலிற்) பொறுத்துக் கொண்டிருந்து கீண்டான்,Keendaan - (பின்பு) கிழித்தவனும் நெறித்த,Neritha - நெறித்திரா நின்றுள்ள குழல்கள்,Kuzhalgal - கூந்தல்கள் நீங்க,Neenga - ஓடுகிற வேகத்தாலே இரண்டு பக்கமும் அலையும் படியாக முன் ஓடி,Mun Odi - கன்றுகளுக்கு முன்னே போய் சிறு கன்று,Siru Kanru - இளங்கன்றுகளை மேய்ப்பாற்கு,Meipparkku - மேய்ப்பவனுமாகிய இவனுக்கு ஓர் கோல் கொண்டு வா,Or Kol Kondu Va - ஒரு கோலை கொண்டு வா தேவபிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா,Devapiranukku Or Kol Kondu Va - தேவபிரானுக்கு ஒரு கோலை கொண்டு வா |
| 175 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து - ஆறாம் திருமொழி - வேலிக்கோல்) (காக்கையை கண்ணனுக்குக் கோல்கொண்டுவர விளம்புதல்) (கலித்தாழிசை) 4 | ஒன்றே யுரைப்பான் ஒரு சொல்லே சொல்லுவன் துன்று முடியான் துரியோதனன் பக்கல் சென்று அங்குப் பாரதம் கை யெறிந்தானுக்கு கன்றுகள் மேய்ப்பதோர் கோல் கொண்டு வா கடல் நிற வண்ணர்க்கு ஓர் கோல் கொண்டு வா–2-6-4 | ஒன்றே,Ondre - (பாண்டவர்களுடன் சேர்ந்து வாழோம் என்ற) ஒரே விஷயத்தை உரைப்பான்,Uraippan - சொல்லுபவனும் ஒரு சொல்லே,Oru Sollae - (மத்யஸ்தர் எவ்வளவு சொன்னாலும் ஊசி குத்து நிலமும் பாண்டவர்களுக்குக் கொடேன்’ என்ற) ஒரு சொல்லையே சொல்லுவான்,Solluvaan - சொல்லுபவனும் துன்று முடியான்,Thunru Mudiyan - (நவரத்னங்களும்) நெருங்கப் பதித்த கிரீடத்தை அணிந்தவனுமான துரியோதநன் பக்கல்,Dhuriyodhanan Pakkal - துரியோதநனிடத்தில் சென்று,Sendru - தூது போய் அங்கு,Angu - அவ்விடத்தில் பாரதம்,Baaratham - பாரத யுத்தத்தை கையெறிந்தானுக்கு,Kaiyerindhaanukku - உறுதிப் படுத்திக் கொண்டு வந்த இவனுக்கு கன்றுகள் மேய்ப்பது ஓர் கோல் கொண்டு வா,Kanrughal Meippathu Or Kol Kondu Va - இளங்கன்றுகளை மேய்ப்பவனுமாகிய இவனுக்கு ஒரு கோலை கொண்டு வா கடல் நிற வண்ணற்கு ஓர் கோல் கொண்டு வா,Kadal Nira Vannarku Or Kol Kondu Va - கடல் நிற வண்ணற்கு ஒரு கோலை கொண்டு வா |
| 176 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து - ஆறாம் திருமொழி - வேலிக்கோல்) (காக்கையை கண்ணனுக்குக் கோல்கொண்டுவர விளம்புதல்) (கலித்தாழிசை) 5 | சீரொன்று தூதாய்த் துரியோதனன் பக்கல் ஊரொன்று வேண்டிப் பெறாத உரோடத்தால் பாரொன்றிப் பாரதம் கை செய்து பார்த்தற்குத் தேரொன்றை யூர்ந்தாற்கு ஓர் கோல் கொண்டு வா தேவ பிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா–2-6-5 | துரியோதநன் பக்கல்,Dhuriyodhanan Pakkal - துரியோதநனிடத்தில் பாண்டவர்களுக்காக சீர் ஒன்று தூது ஆய்,Seer Ondru Thoodhu Aai - சிறப்பு பொருந்திய தூதனாகப் போய் ஊர் ஒன்று வேண்டி,Oor Ondru Vendi - (பாண்டவர்களுக்கு) ஒரு ஊராவது கொடு என்று யாசித்துக் கேட்டும் பெறாத,Peraadha - அந்த ஒரு ஊரையும் பெறாமையினாலுண்டான உரோடத்தால்,Urodathaal - சீற்றத்தாலே பார் ஒன்றி,Paar Ondri - பூமியில் பொருந்தி யிருந்து பாரதம் கை செய்து,Baaratham Kai Seidhu - பாரத யுத்தத்தில் அணி வகுத்து பார்த்தற்கு,Paartharkku - அர்ஜுநனுக்கு தேர் ஒன்றை ஊர்ந்தார்க்கு,Ther Ondrai Oornthaarkku - ஒப்பற்ற தேரை (ப்பாகனயிருந்து) நடத்தினவனுக்கு ஓர் கோல் கொண்டுவா—;,Or Kol Kondu Va - ஒரு கோலை கொண்டு வா தேவ பிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா,Deva Piranukku Or Kol Kondu Va - தேவபிரானுக்கு ஒரு கோலை கொண்டு வா |
| 177 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து - ஆறாம் திருமொழி - வேலிக்கோல்) (காக்கையை கண்ணனுக்குக் கோல்கொண்டுவர விளம்புதல்) (கலித்தாழிசை) 6 | ஆலத் திலையான் அரவினணை மேலான் நீலக் கடலுள் நெடுங்காலம் கண் வளர்ந்தான் பாலப் பிராயத்தே பார்த்தர்க்கு அருள் செய்த கோலப் பிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா குடந்தைக் கிடந்தார்க்கு ஓர் கோல் கொண்டு வா–2-6-6 | ஆலத்து இலையான்,Aalathu Ilaiyaan - (ப்ரளய காலத்தில் உலகமெல்லா முண்டு) ஆலிலையில் பள்ளி கொண்டிருப்பவனும் அரவின் அணை மேலான்,Aravin Anai Melan - (எப்போதும்) திருவனந்தாழ்வான் மீது பள்ளி கொள்பவனும் நிலம் கடலுள்,Nilam Kadalul - கரு நிறமான சமுத்திரத்தில் நெடுங்காலம்,Nedunkaalam - வெகு காலமாக கண் வளர்ந்தான்,Kann Valarnthaan - யோக நித்ரை செய்பவனும் பாலம் பிராயத்தே,Paalam Pirayathe - குழந்தைப் பருவமே தொடங்கி பார்த்தற்கு,Paartharkku - அர்ஜுநனுக்கு அருள் செய்த,Arul Seidha - க்ருபை செய்த கோலம்,Kolam - அழகிய வடிவத்தை யுடைய பிரானுக்கு,Piranukku - தலைவனுமான இவனுக்கு ஓர் கோல் கொண்டு வா;,Or Kol Kondu Va - ஒரு கோலை கொண்டு வா குடந்தை கிடந்தாற்கு ஓர் கோல் கொண்டு வா.,Kudanthai Kidanthaarkku Or Kol Kondu Va - குடந்தை கிடந்தாற்கு ஒரு கோலை கொண்டு வா |
| 178 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து - ஆறாம் திருமொழி - வேலிக்கோல்) (காக்கையை கண்ணனுக்குக் கோல்கொண்டுவர விளம்புதல்) (கலித்தாழிசை) 7 | பொன் திகழ் சித்திர கூடப் பொருப்பினில் உற்ற வடிவில் ஒரு கண்ணும் கொண்ட அக் கற்றைக் குழலன் கடியன் விரைந்து உன்னை மற்றைக் கண் கொள்ளாமே கோல் கொண்டு வா மணி வண்ண நம்பிக்கு ஓர் கோல் கொண்டு வா–2-6-7 | (அக்காக்காய்!),Akkakkai - காக்கையே! பொன்,Pon - அழகியதாய் திகழ்,Thigal - விளங்குகின்ற சித்திர கூடம் பொருப்பினில்,Chithira Koodam Poruppinil - சித்ர கூட மலைச் சாரலில் (பிராட்டி மடியிலே தலை வைத்துக் கொண்டு ஸ்ரீராமனாகிய தான் கண் வளர்ந்தருளும் போது) வடிவில்,Vadivil - (பிராட்டியின்) திரு மேனியில் உற்ற,Utra - பதிந்த ஒரு கண்ணும்,Oru Kannum - (உனது இரண்டு கண்களில்) ஒரு கண்ணை மாத்திரம் கொண்ட,Konda - பறித்துக் கொண்ட அ கற்றை குழவன்,A Kattrai Kuzhavan - அந்தத் தொகுதியான கூந்தலை யுடையவன் கடியன்,Kadiyan - க்ரூரன்; உன்னை,Unnai - (ஆதலால், அவன் தனக்கு இஷ்டமானதை உடனே செய்யாமலிருத்தற்காக) உன்னை (ச்சீறி) மற்றை கண்,Matrai Kann - (உனது) மற்றொரு கண்ணையும் கொள்ளாமே,Kollamae - பறித்துக் கொள்ளாதபடி விரைந்து,Viraindhu - ஓடிப் போய் ஓர் கோல் கொண்டு வா;,Or Kol Kondu Va - ஒரு கோலை கொண்டு வா மணிவண்ணன் நம்பிக்கு ஓர் கோல் கொண்டு வா.,Manivannan Nambikku Or Kol Kondu Va - மணிவண்ணன் நம்பிக்கு ஒரு கோலை கொண்டு வா |
| 179 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து - ஆறாம் திருமொழி - வேலிக்கோல்) (காக்கையை கண்ணனுக்குக் கோல்கொண்டுவர விளம்புதல்) (கலித்தாழிசை) 8 | மின்னிடைச் சீதை பொருட்டா இலங்கையர் மன்னன் மணி முடி பத்தும் உடன் வீழ தன்னிக ரொன்றில்லாச் சிலை கால் வளைத்திட்ட மின்னு முடியற்கு ஓர் கோல் கொண்டு வா வேலை யடைத்தாற்கு ஓர் கோல் கொண்டு வா–2-6-8 | மின்,Min - மின்னல் போன்ற (ஸூக்ஷ்மமான) இடை,Idai - இடையை யுடைய சீதை பொருட்டா,Seethai Porutraa - ஸீதையை மீட்டுக் கொணர்வதற்காக இலங்கையர் மன்னன்,Ilangaiyar Mannan - லங்கையிலுள்ளார்க்குத் தலைவனான ராவணனுடைய மணி முடி பத்தும்,Mani Mudi Paththum - ரத்ந கிரீடமணிந்த தலைகள் பத்தும் உடன் வீழ,Udan Veezha - ஒரு சேர அற்று விழும்படி தன்னிகர் ஒன்று இல்லா,Thannigar Ondru Illaa - தனக்கு ‘உபமாநமானதொன்று மில்லாத (உயர்ந்த) சிலை,Silai - வில்லை கால் வளைத்து இட்ட,Kaal Valaithu Itta - கால் வளையும் படி பண்ணி ப்ரயோகித்த மின்னும் முடியற்கு,Minnum Mudiyarkku - விளங்கா நின்ற கிரீடத்தை அணிந்தவனுக்கு வேலை அடைத்தாற்கு,Velai Adaiththaarkku - ஸமுத்ரத்தில் ஸேது கட்டினவனுக்கு ஓர் கோல் கொண்டுவா-,Or Kol Kondu Va - ஒரு கோலை கொண்டு வா |
| 180 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து - ஆறாம் திருமொழி - வேலிக்கோல்) (காக்கையை கண்ணனுக்குக் கோல்கொண்டுவர விளம்புதல்) (கலித்தாழிசை) 9 | தென்னிலங்கை மன்னன் சிரம் தோள் துணி செய்து மின்னிலங்கு பூண் விபீடண நம்பிக்கு என்னிலங்கு நாமத்தளவும் அரசென்ற மின்னிலங்காரற்கு ஓர் கோல் கொண்டு வா வேங்கட வாணர்க்கு ஓர் கோல் கொண்டுவா–2-6-9 | தென் இலங்கை,Then Ilangai - அழகிய லங்கைக்கு மன்னன்,Mannan - அரசனாகிய ராவணனுடைய சிரம்,Siram - தலைகளையும் தோள்,Thol - தோள்களையும் துணி செய்து,Thuni Seidhu - (அம்பினால்) துணித்துப் போகட்டு மின் இலங்கு,Min Ilangu - ஒளி வீசுகின்ற பூண்,Poon - ஆபரணங்களை அணிந்த விபீடணன் நம்பிக்கு,Vibheethanan Nambikku - விபீஷணாழ்வானுக்கு என் இலங்கு நாமத்து அளவும்,En Ilangu Naamaththu Alavum - என் பெயர் ப்ரகாசிக்குமளவும் அரசு,Arasu - ராஜ்யம் (நடக்கக் கடவது) என்ற,Endra - என்று அருள் செய்து மின் இலங்கு ஆரற்கு,Min Ilangu Aararkku - மின்னல்போல் விளங்குகின்ற ஹாரத்தை யுடையவனுக்கு ஓர் கோல் கொண்டு வா-;,Or Kol Kondu Va - ஒரு கோலை கொண்டு வா வேங்கடம்,Vengadam - திருமலையில் வாணற்கு,Vaanarkku - வாழ்ந்தருளுமவனுக்கு ஓர் கோல் கொண்டுவா-.,Or Kol Kondu Va - ஒரு கோலை கொண்டு வா |
| 181 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து - ஆறாம் திருமொழி - வேலிக்கோல்) (காக்கையை கண்ணனுக்குக் கோல்கொண்டுவர விளம்புதல்) (தரவு கொச்சகக்கலிப்பா) 10 | அக்காக்காய் நம்பிக்குக் கோல் கொண்டு வாவென்று மிக்காளுரைத்த சொல் வில்லி புத்தூர்ப் பட்டன் ஒக்க வுரைத்த தமிழ் பத்தும் வல்லவர் மக்களைப் பெற்று மகிழ்வர் இவ் வையத்தே–2-6-10 | அக்காக்காய்,Akkakkai - காக்கையே! நம்பிக்கு கோல் கொண்டுவா என்று,Nambikku Kol Kondu Va Endru - உத்தமனான இவனுக்கு கோலைக் கொண்டு வந்து தா என்று மிக்கான் உரைத்த சொல்,Mikkaan Uraiththa Sol - சிறந்தவளான யசோதை சொன்ன சொற்களை வில்லி புத்தூர் பட்டன்,Villi Puththoor Pattam - ஸ்ரீவில்லிபுத்தூரில வதரித்த பெரியாழ்வார் ஒக்க உரைத்த தமிழ் பத்தும் வல்லவர்,Okka Uraiththa Tamil Paththum Vallavar - அவ் யசோதையைர் போலவே சொன்ன தமிழினாலாகிய இப்பத்துப் பாசுரங்களையும் ஓதவல்லவர்கள் மக்களை பெற்று இ வையத்தே மகிழ்வர்,Makkalai Pettru I Vayaththae Magizhvar - ஜ்ஞாந்புத்ரர்களை (சிஷ்யர்களை) அடைந்து இப்பூமியிலே மகிழ்ந்திருக்கப் பெறுவர் |