திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1898 | பெரிய திருமொழி || (10-6–எங்கானும்) - (மற்றை அவதாரங்களின் மேன்மையோடு கண்ணாவதாரத்தின் எளிமையை அனுபவித்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (உபதேசத்தாலும் அனுஷ்டானத்தாலுமாக அற நூல்-வேதம் விஸ்த்ருதமாம் படி பண்ணியவன் சந்திர சூரியர்களும் பூமியும் திரைக் கிளப்பத்தை உடைத்தான் பெரிய கடலும் மலைகளும் அக்னியும் இவை அடைய நெருக்கிக் கொடு புகும்படியாக ஸ்லாக்கியமான மிடற்றை – இவை புகும் அளவும் – விரித்துக் கொண்டு இருந்தவன் கிடீர் இன்று தயிரையும் வெண்ணையும் களவு கண்டு-அமுது செய்து-ஓர் இடைச்சி கையாலே கட்டுண்டு அடியுண்டு-ஒரு பிரதிகிரியை அற்றுப் போக மாட்டாதே -இருக்கிறான் –என்கிறார் முதல் பாசுரத்தில் காரேழ் கடல் ஏழ் மலை ஏழ் உலகுண்டும் ஆரா வயிற்றானை அடங்கப் பிடித்தேன் -திருவாய் மொழி -10-8-2-என்கிற பாட்டின் படியே) 1 | எங்கானும் ஈது ஒப்பதோர் மாயமுண்டே நர நாரணனாய் யுலகத் தற நூல்
சிங்காமை விரித்தவன் எம்பெருமான் அதுவன்றியும் செஞ்சுடரும் நிலனும்
பொங்கார் கடலும் பொருப்பும் நெருப்பும் நெருக்கிப் புகப் பொன் மிடறத்தனை போது
அங்காந்தவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டு ஆப்புண்டு இருந்தவனே –10-6-1 | பதவுரை Show / Hideநான் நாரணன் ஆய், Naan Naaranan Aay - (சிஷ்யனும் ஆசார்யனுமாக) நாநாராயணரூபியாய் உலகத்து, Ulagathu - லோகத்திலே அறம் நூல் சிங்காமை விரித்தவன், Aram Nool Singamai Viriththavan - அறநெறிகளைத் தெஜீவிக்கும் நூலாகியவேதம் சுருங்கிப் போகாதபடி அதை விஸ்தரிப்பித்தவனாயும் எம்பெருமான், Emperumaan - எமக்கு ஸ்வாமியாயும் அது அன்றியும், Adhu Andriyum - அவ்வளவு மல்லாமல் செம் சுடரும், Sem Sudarum - சந்திர ஸூர்யர்களும் நிலனும், Nilanum - பூமியும் பொங்கு ஆர், Pongu Aar - பொங்குதல் பொருந்திய ஸமுத்ரங்களும் பொருப்பும், Poruppum - மலைகளும் நெருப்பும், Neruppum - அக்நியும் (ஆகிய இவையடங்கலும்) நெருக்கி, Nerukki - ஒன்றின்மேலோன்றாய் புக அத்தனை போது, Puga Aththanai Podhu - உள்ளே புகு மளவும் பொன் மிடறு, Pon Midaru - திருவயிற்றை அங்காந்தவன் காண்மின், Angaanthavan Kaanmin - விவரித்துக்கொண்டிருந்தவனன்றோ இன்று, Indru - இப்போது அளை, Alai - தயிரையும் வெண்ணெய், Vennai - வெண்ணெயையும் உண்டு, Undu - (திருடி) உட்கொண்டு ஆய்ச்சியால், Aaychiyal - இடைச்சிகளால் ஆப்புண்டிருந்தவன், Aappundirundhavan - (தாம்பால்) கட்டுண்டிருக்கிறான், இது ஒப்பது ஓர் மாயம், Idhu Oppathu Oru Maayam - இதுபோன்ற ஆச்சரியம் எங்கானும், Engaanum - எங்கேனு மோரிடத்திலாவது உண்டே, Unde - கண்டதுண்டோ? |
| 1899 | பெரிய திருமொழி || (10-6–எங்கானும்) - (மற்றை அவதாரங்களின் மேன்மையோடு கண்ணாவதாரத்தின் எளிமையை அனுபவித்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அந்த பிரளய காலத்து அவை தன் வயிற்றில் புகாத போது உண்டான தளர்த்தி எல்லாம் இவ் வெண்ணெய் பெறாத போது உடையனாய்க் கொண்டு அமுது செய்தான்) 2 | குன்றொன்று மத்தா வரவமளவிக் குரை மா கடலைக் கடைந்திட்டு ஒரு கால்
நின்றுண்டை கொண்டோட்டி வன்கூன் நிமிர நினைந்த பெருமான் அதுவன்றியும் முன்
நன்றுண்ட தொல் சீர் மகரக் கடலேழ் மலையேழ் உலகேழ் ஒழியாமை நம்பி
அன்றுண்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப் புண்டு இருந்தவனே –10-6-2 | பதவுரை Show / Hideஒன்று குன்று, Ondru Kuntru - (மந்தரமென்கிற) ஒரு மலையை (- (அது அன்றியும்) (இன்று ஆய்ச்சியால் அளை வெண்ணெய்உண்டு ஆப்புண்டு இருந்தவன்.)) மத்து ஆ, Maththu Aa - மத்தாகக் கொண்டு அரவம், Aravam - (வாஸுகியென்னும்) நாகத்தை அளவி, Alavi - (கடை கயிறாகச்) சுற்றி குரை மா கடலை, Kurai Maa Kadalai - ஒலிக்கின்ற பெருங்கடலை கடைந்திட்டு, Kadaindittu - கடைந்து ஒருகால், Orukaal - மற்றொரு காலத்தில், உண்டை கொண்டு, Undai Kondu - (வில்லிலுள்ள) உண்டைகளைக் கொண்டு வன் கூன், Van Koon - வலிதான கூனை ஓட்டி நின்று, Otti Nindru - போக்கி நிமிர, Nimira - (கூன்) நிமிரும்படி நினைந்த, Ninaintha - திருவுள்ளம்பற்றின பெருமான், Perumaan - ஸர்வேச்வரனாய், முன் அன்று, Mun Andru - முன்பொருகாலத்தில், நன்று உண்ட தொல் சீர், Nandru Unda Thol Seer - நன்றாகத் தன்னுட்கொள்ளப்பட்ட சிறப்பையுடைய மகரம் கடல் ஏழ், Makarama Kadal Ezh - மகரங்கள் திளைக்கின்ற ஸப்த ஸாகரங்களும் மலை ஏழ், Malai Ezh - ஸப்தகுலாசங்களும் உலகு ஏழ், Ulaku Ezh - ஸப்தலோகங்களும் ஒழியாமை, Ozhiyamai - ஒன்றுதப்பாதபடி நம்பி, Nambi - (எல்லாவற்றையும் விரும்பி) உண்டவன் காண்மின், Undavan Kaanmin - திருவயிற்றிற் கொண்டவனன்றோ |
| 1900 | பெரிய திருமொழி || (10-6–எங்கானும்) - (மற்றை அவதாரங்களின் மேன்மையோடு கண்ணாவதாரத்தின் எளிமையை அனுபவித்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஹிரண்யாசுரன் உடைய முரட்டு உடலை வளைந்த உகிராலே இரண்டாகக் கிழித்தவன் கிடீர் இன்று ஒரு அபலையால் கட்டுண்டு இருக்கிறான்) 3 | உளைத்திட்டு எழுந்த மதுகைடவர்கள் உலப்பில் வ்லியாலவர்பால் வயிரம்
விளைந்திட்டது என்று எண்ணி விண்ணோர் பரவ அவர் நாள் ஒழித்த பெருமான் முன நாள்
வளைந்திட்ட வில்லாளி வல் வாள் எயிற்று மலை போலே அவுணன் உடல் வள்ளுகிரால்
அளைந்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப்புண்டு இருந்தவனே –10-6-3 | பதவுரை Show / Hideஉலப்பு இல் வலியால், Ulappu Il Valiyal - எல்லையில்லாத வலிமையினால் (- (அதுவுமல்லாமல்) (இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய்உண்டு ஆப்புண்டு இருந்தவன்)) எழுந்த, Ezhundha - பெரிய கிளர்த்தியோடே தோன்றி மது கைடவர்கள் அவர்பால், Madhu Kaidavargal Avarpaal - மதுகடைபர்களென்கிற அவ்வசுரர்களோடே வயிரம், Vayiram - பகை விளைந்திட்டது என்று எண்ணி, Vilaindhittathu Endru Enni - உண்டாகிவிட்ட தென்றறிந்து உளைந்திட்டு, Ulaindhittu - அஞ்சி நடுங்கி விண்ணோர், Vinnor - தேவர்கள் பரவ, Parava - (திருவடிகளிலே தொழுது) துதிக்க, அவர், Avar - அந்த மதுகைடபர்களுடைய நாள், Naal - ஆயுளை ஒழித்த, Ozhitha - முடித்த பெருமான், Perumaan - ஸர்பேச்வரனாய் முனநாள், Munan Naal - முற்காலத்தில் வளைந்திட்ட வில்லாளி, Valaindhitta Villali - வளைந்தவில்லைக் கையிலேந்தியுள்ளவனும் வல் வாள் எயிறு, Val Vaal Eiyiru - வலிமை பொருந்திப் பிறங்கிய பற்களை யுடையவனும் மலை போல், Malai Pol - மலைபோன்றவனுமான அவுணம், Avunam - இரணியாசுரனுடைய உடல், Udal - உடலை வள் உகிரால், Val Ukiral - கூர்மையான நகங்களினால் அளைந்திட்ட வன் காண்மின், Alaintitta Van Kanmin - இரண்டாகக் கிழித்தவனன்றோ |
| 1901 | பெரிய திருமொழி || (10-6–எங்கானும்) - (மற்றை அவதாரங்களின் மேன்மையோடு கண்ணாவதாரத்தின் எளிமையை அனுபவித்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பூமியை கொள்ளுகைக்காக தர்ச நீயமான வாமன வேஷத்தை உடையனாய் கொண்டு க்ருத்ரிமித்து லோகத்தை அளந்து– மகா பலியைச் சிறையில் இட்ட ஆண் பிள்ளை கிடீர் – ஓர் அபலை இட்ட சிறை விட்டுக் கொள்ள மாட்டாதே இருக்கிறான்) 4 | தளர்ந்திட்டு இமையோர் சரண் தா வெனத் தான் சரணாய் முரணாயவனை உகிரால்
பிளைந்திட்டு அமரர்க்கு அருள் செய்துகந்த பெருமான் திருமால் விரி நீருலகை
வளர்ந்திட்ட தொல் சீர் விறல் மா வலியை மண் கொள்ள வஞ்சித் தொரு மாண் குறளாய்
அளந்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப்புண்டு இருந்தவனே –10-6-4 | பதவுரை Show / Hideஇமையோர், Imaiyor - தேவர்கள் (- (இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய்உண்டு ஆப்புண்டு இருந்தவன்)) தளர்ந்திட்டு, Talarntittu - (அசுரர்களாலே நெருக்குண்டு) மிகவும் தளர்ச்சியடைந்து சரண் தா என, Saran Ta En - ‘நீ எமக்கு ரக்ஷகனாக வேணும்’ என்று பிரார்த்திக்க, தான் சரண் ஆய், Tan Saran Ay - தான் ரக்ஷகனாக நின்று முரணாயவனை, Muranayavanai - பெருமிடுக்கனான இரணியனை உகிரால், Ukiral - நகங்களாலெ பிளந்திட்டு, Pilantittu - கிழித்துப்போட்டு அமரர்க்கு, Amararukku - தேவர்களுக்கு அருள் செய்து, Arul Seytu - கிருபைபண்ணி உகந்த, Ukanta - திருவுள்ளமுவந்த பெருமாள், Perumal - ஸர்வேச்வரனாய் திருமால், Tirumal - திருமகள் கொழுநனாய், வளர்ந்திட்ட தொல் சீர், Valarntitta Tol Sir - மேன்மேலும் வளர்கின்ற அதிக ஸம்பத்தையுடைய விறல், Viral - பலிஷ்டனான மாவலியை, Mavaliyai - மஹாபலியை மண் கொள்ள, Man Kolla - பூமியைக் கொள்ளும் பொருட்டு ஒரு மாண் குறள் ஆய், Oru Man Kural Ay - அத்விதீயனான ப்ரஹ்மசாரி வாமன்னாய் வஞ்சித்து, Vancittu - சிறு காலைக்காட்டி ஏமாத்தி விரிநீர் உலகை, Virineer Ulagai - கடல்சூழ்ந்த வுலகங்களை அளந்திட்டவன் காண்மின், Alandittavan Kaanmin - அளந்து கொண்டவனன்றோ |
| 1902 | பெரிய திருமொழி || (10-6–எங்கானும்) - (மற்றை அவதாரங்களின் மேன்மையோடு கண்ணாவதாரத்தின் எளிமையை அனுபவித்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (லோகங்கள் ஏழையும் தன் ஆஞ்ஞையாலே நடத்தினவன் கிடீர் இன்று தன் ஆஞ்ஞை அழிந்து ஓர் அபலை கையிலே கட்டுண்டு அடி யுண்கிறான்) 5 | நீண்டான் குறளாய் நெடு வானளவும் அடியார் படும் ஆழ் துயராய வெல்லாம்
தீண்டாமை நினைந்து இமையோர் அளவும் செல வைத்த பிரான் அது வன்றியும் முன்
வேண்டாமை நமன் தமர் என் தமரை வினவப் பெறுவார் அலர் என்று உலகேழ்
ஆண்டான் அவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப்புண்டு இருந்தவனே –10-6-5 | பதவுரை Show / Hideஅடியார் படும், Adiyar Padum - பக்தர்கள் அநுபவிக்கிற (- (அது அன்றியும் முன்;) (இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய்உண்டு ஆப்புண்டு இருந்தவன்)) ஆழ் தயராய் எல்லாம், Aaz Thayarai Ellam - கொடிய பாப பலன்களெல்லாம் தீண்டாமை, Theendamai - அவர்களை ஸ்பர்சியாதபடி நினைந்து, Ninaindhu - திருவுள்ளம்பற்றி குறள் ஆய், Kural Aay - வாமணமூர்த்தியாகி நெடு வான் அளவும், Nedu Vaan Alavum - பரம்பிய ஆகாசமெங்கும் நீண்டான், Neendaan - வளர்ந்தவனாய், இமையோர் அளவும், Imaiyor Alavum - நித்யஸூரிகள்ளவும் செல, Sela - செல்லும்படியாக வைத்த, Vaitha - திருவடிகளை உயர்த்தி வைத்தருளின பிரான், Piraan - உபகாரகனாய் வேண்டாமை, Veendaamai - (‘எல்லாரையும் யமபடர்கள் ஆராயக்கடவர்கள்’ என்று தானே யிட்ட கட்டளையை) வேண்டாமையினாலே நமன் தமர் என் தமரை வினவப்பெறுவார் அலர் என்று, Naman Thamar En Thamarai Vinavapperuvar Alar Endru - ;யமபடர்கள் எம்மடியாரை ஆராயக்கடவர்களல்லார் என்று நியமித்தருளி உலகு ஏழ் ஆண்டான் அவன் காண்மின், Ulaku Ezh Aandaan Avan Kaanmin - உலகங்களையெல்லாம் ரக்ஷித்தருளினவனன்றோ |
| 1903 | பெரிய திருமொழி || (10-6–எங்கானும்) - (மற்றை அவதாரங்களின் மேன்மையோடு கண்ணாவதாரத்தின் எளிமையை அனுபவித்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சஹஸ்ர பாஹ் வர்ஜுனனுடைய சினத்தை உடைத்தான தோள்கள் ஆயிரத்தையும் அழகுக்குப் பிடித்த மழுவாலே துணித்துப் பொகட்டவன் கிடீர் –இன்று ஓர் அபலை கையாலே கட்டுண்டு இருந்தான்) 6 | பழித்திட்ட வின்பப் பயன் பற்றறுத்துப் பணிந்து ஏத்த வல்லார் துயராய வெல்லாம்
ஒழித்திட்ட வரைத் தனக்காக வல்ல பெருமான் திருமால் அதுவன்றியும் முன்
தெழித்திட்டு எழுந்தே எதிர் நின்ற மன்னன் சினத் தோள் அவை யாயிரமும் மழுவால்
அழித்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியாரால் அளை வெண்ணெய் யுன்டாப்புண்டு இருந்தவனே –10-6-6 | பதவுரை Show / Hideபழித்திட்ட, Pazhithitta - சாஸ்திரங்களில் இகழப்பட்ட (- (அது அன்றியும் முன்) (இன்று ஆய்ச்சியால் அளை வெண்ணெய்உண்டு ஆப்புண்டு இருந்தவன்)) இன்பம், Inbam - சிற்றின்பமாகிற பயன், Payan - அற்ப பலன்களை பற்று அறுத்து, Patru Aruththu - வாசனையோடே விட்டிட்டு பணிந்து, Panindhu - திருவடிகளிலே விழுந்து ஏத்த வல்லார், Aetha Vallar - துதிக்கவல்லவர்களுடைய துயர் ஆய எல்லாம், Thuyar Aaya Ellam - துன்பமென்று பேர்பெற்றவை யெல்லாவற்றையும் ஒழித்திட்டு, Ozhiththittu - கழித்தருளி அவரை, Avarai - அவர்களை தனக்கு ஆக்க வல்ல, Thanakku Aakka Valla - தனக்கு நித்யகிங்கரராகச் செய்து கொள்ளவல்ல பெருமான், Perumaan - ஸ்வாமியாய் திருமால், Tirumal - ச்ரியபதியாய் தெழித்திட்டு, Thezhiththittu - பெரிய ஆரவாரத்தைச் செய்துகொண்டு எழுந்து, Ezhunthu - மார்புத்தட்டிக் கிளர்ந்து எதிர் நின்ற, Edhir Nindra - (போர்புரிய) எதிரே வந்து நின்ற மன்னன், Mannan - கதர்த்தவீர்யார்ஜுன்னென்னும்) அரசனுடைய சினம், Sinam - கோவத் துடிப்புக்கொண்ட தோள் அவை ஆயிரமும், Thol Avai Aayirathum - ஆயிரந்தோள்களையும் மழுவால், Mazhuvaal - மழுப்படையினால் அழித்திட்ட வன் காண்மின், Azhiththitta Van Kaanmin - அழித்தவனான பெருமானன்றோ |
| 1904 | பெரிய திருமொழி || (10-6–எங்கானும்) - (மற்றை அவதாரங்களின் மேன்மையோடு கண்ணாவதாரத்தின் எளிமையை அனுபவித்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நெருக்கிக் கொண்டு தோற்றின ஸ்ரீ வானர வீரர்களையே சேனையாகக் கொண்டு மலைகளை இட்டு நிரம்பும் படியாக பாய்ச்சி கடலை அணை செய்தவன் கிடீர் – மஹத் தத்வமான கடலை அணை கட்டினவன் கிடீர் இன்று ஒருத்தி கட்டு அவிட்க மாட்டாதே இருக்கிறான்) 7 | படைத்திட்டது இவ்வையம் உய்ய முன நாள் பணிந்து ஏத்த வல்லார் துயராய வெல்லாம்
துடைத்திட்ட வரைத் தனக்காக வென்னத் தெளியா வரக்கர் திறல் போயவிய
மிடைத்திட்டு எழுந்த குரங்கைப் படையா விலங்கல் புகப்பாய்ச்சி விம்ம கடலை
அடைத்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப்புண்டு இருந்தவனே –10-6-7 | பதவுரை Show / Hideமுன நாள், Muna Naal - முன்பொருகாலத்தில் (- (இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய்உண்டு ஆப்புண்டு இருந்தவன்)) இ வையம், I Vaiyam - இவ்வுலகங்களை படைத்திட்டு, Padaiththittu - (கரண களேபரங்கள் கொடுத்து) ஸ்ருஷ்டித்து அது, Adhu - அவ்வுலகம் உய்ய, Uyya - உஜ்ஜீவிப்பதற்குறுப்பாக பணிந்து, Panindhu - திருவடிகளிலே விழுந்து ஏத்த வல்லார், Aetha Vallar - அதிக்கவல்லவர்களுடைய துயர் ஆய எல்லாம், Thuyar Aaya Ellam - துன்பமென்று பேர்பெற்றவற்றையெல்லாம் துடைத்திட்டு, Thudaiththittu - போக்கி அவரை, Avarai - அப்படிப்பட்டவர்களை தனக்கு ஆக்க என்ன, Thanakku Aakka Enna - தனக்கே உரியவராக ஆக்கிக் கொள்ள நீனைத்தவளவிலே தெளியா, Theliya - அத்திருவுள்ளத்தை ஸஹிக்க மாட்டாமல் கலங்கித் தீங்கிழைத்த அரக்கர், Arakkar - ராவணாதி ராக்ஷஸர்களுடைய திறல், Thiral - மிடுக்கு மிடைத்திட்டு எழுந்த, Midaithittu Ezhuntha - நிபிடமாகத் திரண்ட குரங்கை, Kurangai - வானரவீரர்களை படை ஆ, Padai Aa - சேனையாகக்கொண்டு விம்ம, Vimma - (கடல்) நிரம்பும்படி விலங்கள், Vilangal - மலைகளை புக பாய்ச்சி, Puga Paaychchi - பரப்பியிட்டு கடலை, Kadalai - ஸமுத்ரத்தை அடைத்திட்டவன் காண்மின், Adaithittavan Kaanmin - தூர்த்தவனான பெருமானன்றோ |
| 1905 | பெரிய திருமொழி || (10-6–எங்கானும்) - (மற்றை அவதாரங்களின் மேன்மையோடு கண்ணாவதாரத்தின் எளிமையை அனுபவித்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அந்த வில்லை முறித்து அவளோட்டை சம்ச்லேஷ சுகத்தை ப்ரீதியோடு லபித்து யுவ ராஜாவாய் ஒருவராலும் சலிப்பிக்க ஒண்ணாத கடலை அணை கட்டி இலங்கையானது ஒருவர் கூறை எழுவர் உடுக்கும்படியாக ராவணன் உடைய முடியோடு தோள் தாள் இவை துணியும்படி அறுத்தவன் கிடீர் – இன்று ஒரு அபலை கட்டு அவிழ்க்க மாட்டாது இருக்கிறான்) 8 | நெறித்திட்ட மென் கூழை நன்னேரிழையோடு உடனாய வில்லென்ன வல்லேயதனை
இருத்திட்டவள் இன்பம் அன்போடணைந்தித்திட்டு இளங் கொற்றவனாய்த் துளங்காத முந்நீர்
செறித்திட்டி லங்கை மலங்க வரக்கன் செழு நீண் முடி தோளோடு தாள் துணிய
அறுத்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப்புண்டு இருந்தவனே –10-6-8 | பதவுரை Show / Hideநெறித்திட்ட, Nerithitta - நெறித்திராநின்ற (- (பிற வனவாஸம் நேர்ந்த பின்பு) (இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய்உண்டு ஆப்புண்டு இருந்தவன்)) மென், Men - மிருதுவான கூழை, Koozhai - மயிர்முடியையும் நல் நேர் இழையோடு, Nal Naer Izhaiyodu - விலக்ஷணமாய் அழகிய ஆபரணங்களையு முடையளான ஸீதையோடு உடன் ஆய, Udan Aaya - கூடப்பிறந்த அல் அன்ன, Al Anna - இருண்ட வில் அதனை, Vil Adhanai - அந்தவில்லை இறுத்திட்டு, Iruththittu - முறித்துவிட்டு அவள் இன்பம், Aval Inbam - அவனோடு கலவியால் உண்டாகுமின்பத்தை அன்போடு, Anbodu - ப்ரீதியுடனே அணைத்திட்டு, Anaithittu - லபித்து இள கொற்றவன் ஆய், Ila Kotravan Aay - யுவராஜாவாயிருந்து துளங்காத, Thulangadha - ஒருவராலும் அசைக்க முடியாத முந்நீர், Munnir - கடலை செறித்திட்டு, Serithittu - அணைகட்டி இலங்கை மலங்க, Ilankai Malanga - லங்கை கலங்கும்படியாக அரக்கன், Arakkan - இராவணனுடைய செழு, Sezhu - செழித்த நீள், Neel - நீண்ட தோள், Thol - தோள்களும் தாள், Thal - கால்களும் துணிய, Thuniya - சிதிலமாகும்படியாக அறுத்திட்டவன் காண்மின், Aruthittavan Kaanmin - அறுத்தொழித்தவனன்றோ |
| 1906 | பெரிய திருமொழி || (10-6–எங்கானும்) - (மற்றை அவதாரங்களின் மேன்மையோடு கண்ணாவதாரத்தின் எளிமையை அனுபவித்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ மகாராஜரை விஸ்வசிப்பிக்கைக்காக மராமரங்கள் ஏழையும் எய்து – மலை போலே இருக்கிற வடிவை உடையளாய் இருக்கச் செய்தேயும் ஸ்ரீ பிராட்டி போலே தன்னை சாமானை யாக புத்தி பண்ணி வந்த சூர்பணகைக்கு வைரூப்யத்தைப் பண்ணிவிட்டவன் கிடீர் – ப்ரதிகூல்யையாய் வருகையாலே இறே வைரூப்யத்தை விளைத்து விட்டது – அனுகூல்யைக்கு அகப்படாமை இல்லை இறே) 9 | சுரிந்திட்ட செங்கேழ் உளைப் பொங்கரிமாத தொலையப் பிரியாது சென்று எய்தி எய்தாது
திரிந்திட்டு இடம் கொண்ட அடங்காத தன் வாய் இரு கூறு செய்த பெருமான் முன நாள்
வரிந்திட்ட வில்லால் மரம் ஏழும் எய்து மலை போல் உருவத்தோர் ராக்கதி மூக்கு
அரிந்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப்புண்டு இருந்தவனே –10-6-9 | பதவுரை Show / Hideசெம் கேழ், Sem Kezh - சிவந்த நிறமுடையனவான (- (சுரிந்திட்ட சுருண்டிராநின்ற) (இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய்உண்டு ஆப்புண்டு இருந்தவன்)) உளை, Ulai - பிடரி மயிர்களையுடைத்தாய்க் கொண்டு பொங்கு, Pongu - களித்துவந்த அரிமா, Arimaa - குதிரைவடிவனான கேசியென்னுமசுரன் தொலைய, Tholaiya - முடிந்து போம்படியாக பிரியாது, Priyaadhu - அதனைவிடாதே சென்று எய்தி, Sendru Eydhi - சென்று கிட்டி, எய்தாது இரிந்திட்டு இடம் கொண்டு அடங்காத அதன்வாய், Eydhaadhu Irindittu Idam Kondu Adangadha Adanvaai - கிட்டவாராமல் அங்குமிங்கும் திரிந்து கொண்டு அவகாசங்கொடாதே அவிதேய மாய்க்கிடந்த அந்தக் குதிரையின் வாயை இரு கூறு செய்த, Iru Kooru Seitha - இருதுண்டமாக்கி யொழித்த பெருமான், Perumaan - ஸ்வாமியாய் முனநாள், Munan Naal - (அன்றியும்) முன்பொரு காலத்திலே வரிந்திட்ட, Varinditta - கட்டுடைத்தான வில்லால், Villal - வில்லாலே மரம் ஏழும், Maram Ezham - மராமரங்களேழையும் எய்து, Eythu - முறித்தவனாய், மலை போல் உருவம், Malai Pol Uruvam - மலைபோன்றவடிவையுடையளான ஒரு இராக்கதி, Oru Iraakkathi - சூர்ப்பணகையென்னும் ஒரு ராக்ஷஸியினுடைய மூக்கு, Mooku - மூக்கை அரிந்திட்ட வன் காண்மின், Arinthitta Van Kaanmin - அறுத்தொழித்தவனான பெருமானன்றோ |
| 1907 | பெரிய திருமொழி || (10-6–எங்கானும்) - (மற்றை அவதாரங்களின் மேன்மையோடு கண்ணாவதாரத்தின் எளிமையை அனுபவித்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஒரு காலும் துக்கத்தை ப்ராபியார்கள் –நிரதிசய ஆனந்தத்தை ப்ராபித்து ப்ரஹ்மாதிகள் குடி இருப்புக்கும் அவ்வருகான பரம பதத்தை ப்ராபிப்பார்) 10 | நின்றார் முகப்புச் சிறிதும் நினையான் வயிற்றை நிறைப்பான் உறியில் தயிர் நெய்
அன்று ஆய்ச்சியர் வெண்ணெய் விழுங்கி உரலோடு ஆப்புண்டு இருந்த பெருமான் அடி மேல்
நன்றாய தொல் சீர் வயல் மங்கையர் கோன் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை வல்லார்
என்றானும் எய்தார் இடர் இன்பம் எய்து இமையோர்க்கும் அப்பால் செல வெய்துவாரே –10-6-10 | பதவுரை Show / Hideநின்றார் முகப்பு, Ninraar Mukappu - தன்னைக் காணவந்து நின்றவர்களெதிரே சிறிதும் நினையான், Sirithum Ninaithyaan - கொஞ்சமும் வெட்கப்பட வறியாதவனாய் வயிற்றை நிறைப்பான், Vayittrai Niraippaan - வயிற்றை நிறைப்பதற்காக ஆய்ச்சியர், Aaychiyar - இடைச்சிகளுடைய உறி, Uri - உறிகளிலேயிருந்த பால், Paal - பாலையும் தயிர், Thayir - தயிரையும் நெய், Ney - நெய்யையும் வெண்ணெய், Vennai - வெண்ணெயையும் விழுங்கி, Vizhungi - (களவாடி) அமுதுசெய்து அன்று, Anru - அப்போது உரலோடு, Uralodu - உரலோடே ஆப்புண்டிருந்த, Aappundirundha - கட்டுண்டிருந்த பெருமான், Perumaan - கண்ணபிரானுடைய அடிமேல், Adimeel - திருவடிகளின்மேலே நன்று ஆய தொல் சீர், Nandru Aaya Thol Seer - விலக்ஷணமான ஸ்ரீவைஷ்ணவ ஸ்ரீயையுடையராய் வயல் மங்கையர், Vayal Mangaiyar - வயல் சூழ்ந்த மங்கை நாட்டிலுள்ளார்க்குத் தலைவரான கலியன், Kalyan - ஆழ்வார் ஒலி செய் –, Oli Sei - அருளிச்செய்த தமிர் மாலை, Tamir Maalai - இப்பாசுரங்களை வல்லார், Vallaar - கற்றுவல்லவர்கள் என்றாலும், Endraalum - ஒருகாலும் இடர் எய்தார், Idar Eydhaar - துன்பமடையார்கள் இன்பம் எய்தி, Inbam Eydhi - நித்யாநந்தத்தைப் பெற்று இமையோர்க்கும் அப்பால செல, Imaiyorkkum Appaal Sela - தேவர்களுக்கும் அவ்வருகான பரமபதத்தையடையும்படியான பாக்கியத்தை எய்துவார், Eydhuvaar - பெறுவார்கள். |