திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 10-9 புள்ளுருவாகி (10 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1932பெரிய திருமொழி || (10-9–புள்ளுருவாகி) (பழமொழியால் பணிந்து உரைத்த பாட்டு) - (தலைவியின் ஆற்றாமை கண்டு இரங்கிய தாய் தலைவனை வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கண் காண ஒண்ணாத ஆபத்தை பரிஹரித்த நமக்கு இது ஒன்றும் பழியாய்த் தலைக் கட்ட புகுகிறதோ – என்று கொண்டு இருக்கிறாயோ) 1
புள்ளுருவாகி நள்ளிருள் வந்த பூதனை மாள இலங்கை ஒள்ளெரி மண்டி யுண்ணப் பணித்த ஊக்கமதனை நினைந்தோ கள்ளவிழ் கோதை காதலும் எங்கள் காரிகை மாதர் கருத்தும் பிள்ளை தன கையில் கிண்ணமே யொக்கப் பேசுவது எந்தை பிரானே –10-9-1
பதவுரை Show / Hide
எந்தை பிரானே, Endhai Pirane - எம்பெருமானே!
எங்கள் கள அவிழ்கோதை காதலும், Engal Kala Avizhkothai Kaadhalum - தேனொழுகுகின்ற மயிர் முடியையுடையளான என்மகளின் ஆசையையும்
காரிகை மாதர் கருத்தும், Kaarikai Maathar Karuththum - (அவ்வாசையைப் பழிக்கின்ற) அழகியாருடைய கருத்தையும்
பிள்ளை தன் கையில் கிண்ணமே ஒக்க பேசுவது, Pillai Than Kaiyil Kinname Okka Pesuvathu - சிறுபிள்ளையின் கையிலுள்ள கிண்ணத்தை உபேக்ஷித்திருக்குமா போலே உபேக்ஷித்திருப்பதானது,
புள் உரு ஆகி, Pul Uru Aagi - (சிறுகுழந்தைகளை அனுங்கச் செய்யவல்ல)பறவையினுருவத்தையுடையவளாகி
நள் இருள், Nal Irul - நடுநிசியிலே
வந்த, Vanda - (முலைகொடுத்துக் கொல்ல) வந்த
பூதனை, Poothanai - பூதனை
மாள, Maala - மாளும்படியாகவும்
இலங்கை, Ilankai - லங்காபுரியை
ஒள் எரி மண்டி உண்ண, Ol Eri Mandi Unna - ஜ்வலிக்கிற அச்நிவியாபித்து புஜிக்கும்படியாகவும்
பணித்த, Paniththa - செய்தற்குறுப்பான
ஊக்கம் அதனை, Ookkam Adhanai - நிடுக்கை
நினைந்தோ, Ninaindho - திருவுள்ளம்பற்றியோ?
1933பெரிய திருமொழி || (10-9–புள்ளுருவாகி) (பழமொழியால் பணிந்து உரைத்த பாட்டு) - (தலைவியின் ஆற்றாமை கண்டு இரங்கிய தாய் தலைவனை வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஒருவர் இருவர் அன்றிக்கே ஊராக அனுபவிக்கும் படி குருகுல வாஸம் பண்ணினார்க்கும் ஆட ஒண்ணாத கூத்துக்களை அன்றோ நாம் உபகரித்தது ஆனபின்பு நமக்கு இது ஒன்றும் பழி யாகப் புகுகிறதோ -என்று இருக்கிறாயோ – ஊருக்காக உபகரித்த படி சொல்லிற்று -முன் –இனி ஒருத்திக்காக உபகரித்த படி சொல்லுகிறது) 2
மன்றில் மலிந்து கூத்து வந்தாடி மால் விடை ஏழும் அடர்த்து ஆயர் அன்று நடுங்க வா நிரை காத்த ஆண்மை கொலோ வறியேன் நான் நின்ற பிரானே நீள் கடல் வண்ணா நீ யிவள் தன்னை நின் கோயில் முன்றில் எழுந்த முருங்கையில் தேனா முன் கை வளை கவர்ந்தாயே –10-9-2
பதவுரை Show / Hide
நின்ற பிரானே, Nindra Piraane - திருமலையில நின்றருளும் பிரானே! (- (இது))
நீள் கடல் வண்ணா, Neel Kadal Vanna - பெரிய கடல்போன்ற வடிவையுடையவனே!
நீ, Nee - நீ
நீன் கோயில் மூன்றில் எழுந்த முருங்கையில் தேன் ஆ, Neen Koyil Moondril Ezhunthha Murungaiyil Then Aa - தன் கோயில் முற்றத்திலுண்டான முருங்கை மரத்தின் தேனை எளிதாகக் கவருமாபோலே
இவள் தன்னை, Ival Thannai - இப்பெண்மகளினுடைய
முன் கைவளை, Mun Kaivazhai - முன்கையிலுள்ளவளைகளை
கவர்ந்தாயே, Kavarnthaye - கைக்கொண்டாயே,
மன்றில் மலிந்து, Manril Malinthu - நாறசந்தியிலே பொருந்தி நின்று.
உவந்து, Uvandu - திருவுள்ளமுகந்து
கூத்து ஆடி, Koothu Aadi - (குடக்கூத்து முதலிய கூத்துகளை யாடியும்)
மால் விடை ஏழும் அடர்த்து, Maal Vidai Ezhum Adarthu - கரிய காளைகளேழையும் வலியடக்கியும்,
அன்று, Anru - (இந்திரன் கல்மாரி பொழிந்த) அக்காலத்தில்
ஆயர் நடுங்க, Aayar Nadunga - இடையர்கள் நடுங்கிநிற்க
ஆநிரை, Aanirai - பசுக்கூட்டங்களை
காத்த, Kaatha - ரக்ஷித்தோமென்கிற
ஆண்மை கொலோ, Aanmmai Koloo - மேனாணிப்பினாலோ?
நான் அறியேன், Naan Ariyeen - என்ன காரணமென்று நான் அறிகின்றிலேன்
1934பெரிய திருமொழி || (10-9–புள்ளுருவாகி) (பழமொழியால் பணிந்து உரைத்த பாட்டு) - (தலைவியின் ஆற்றாமை கண்டு இரங்கிய தாய் தலைவனை வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பெறுதற்கு அரியல் ஆனவளை –இவளை இப்படிப் பண்ண வல்ல வடிவு அழகை உடையவனே – கையில் இருந்த கறுப்புக் கட்டி -தின்னவுமாய் பொகடவுமாய் இருக்கும் இறே அப்படியே நினைத்து இருக்கிறாயோ இவளையும்) 3
ஆர்மலி யாழி சங்கோடு பற்றி ஆற்றலை யாற்றல் மிகுத்து கார் முகில் வண்ணா கஞ்சனை முன்னம் கடந்த நின் கடுந்திறல் தானோ நேரிழை மாதை நித்திலத் தொத்தை நெடுங்கடல் அமுதனை யாளை- ஆரெழில் வண்ணா அங்கையில் வட்டாம் இவள் எனக் கருதுகின்றாயே –10-9-3
பதவுரை Show / Hide
கார் முகில் வண்ணா, Kaar Mukil Vanna - காளமேகநிறத்தனே! (- (இப்படி நினைத்திருப்பதானது))
ஆர் எழில் வண்ணா, Aar Ezhil Vanna - மிக்க அழகுடையவடிவு படைத்தவனே!,
நேர் இழை, Ner Izhai - நேர்மையான ஆபரணங்களை யுடையவளாய்
நித்திலம் தொத்தை, Niththilam Thoththai - முத்துமாலை போன்றவளான
நெடு கடல், Nedu Kadal - பெரிய கடலில் தோன்றிய அம்ருதம் போன்றவளான
மாதை, Maathai - இப்பெண்பிள்ளை விஷயத்திலே
இவள் அங்கையில் வட்டு ஆம் என கருதுகின்றாய், Ival Angaiyil Vattu Aam En Karudhingirai - ‘உள்ளங்கையிலுள்ள கருப்புக்கட்டிபோன்ற வளாமிவள்’ என்று நினைத்திருக்கிறாய்,
முன்னம், Munnam - முன்பு
ஆர் மலி, Aar Mali - கூர்மை மிக்க
ஆழி, Aazhi - திருவாழியையும்
சங்கொடு, Sangodu - திருச்சங்கையும்
பற்றி, Patri - கையிலேந்தி, (அவதரித்து)
ஆற்றலை, Aattralai - மிடுக்கை
ஆற்றல் மிகுத்து, Aatral Mikuthu - ஆறுதல் மிகும்படியாக்கி (யடக்கி)
கஞ்சனை, Kanjanai - கம்ஸனை
கடந்த, Kadandha - தொலைப்பதற் குறுப்பாயிருந்த
நின் கடு திறல் தானோ, Nin Kadu Thiral Thaano - உன்னுடைய வலியதான பராக்ரமத்தை நினைத்தோ?
1935பெரிய திருமொழி || (10-9–புள்ளுருவாகி) (பழமொழியால் பணிந்து உரைத்த பாட்டு) - (தலைவியின் ஆற்றாமை கண்டு இரங்கிய தாய் தலைவனை வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (உன்னுடைய வடிவு அழகை ஒரு கால் காட்டிக் கொண்டு போகிறிலை பாவன பிரகர்ஷத்தாலே -உருவு வெளிப்பாட்டாய் முன்னே நின்று போகிறிலை- பரக்கச் சொல்வதால் என்ன கார்யம் உண்டு – சாபமாநய சௌமித்ரே-என்று நினைத்த போதே-வாங்கிக் கார்யம் கொள்ளலாம் படி உரிய அடியார் கையில் ஆயுதத்தோபாதியாக நினைத்திரா நின்றாய்) 4
மல்கிய தோளும் மானுரியதளும் உடையவர் தமக்குமோர் பாகம் நல்கிய நலமோ நரகனைத் தொலைத்த கரதலத்தது அமைதியின் கருத்தோ அல்லியங்கோதை யணி நிறம் கொண்டு வந்து முன்னே நின்று போகாய் சொல்லியென் நம்பி இவளை நீ யுங்கள் தொண்டர் கைத் தண்டு என்றவாறே –10-9-4
பதவுரை Show / Hide
நம்பீ, Nambi - ஸ்வாமிந்! (- (இப்படி உபேக்ஷித்திருப்பதானது) (அன்றி))
அல்லி அம் கோதை, Alli Am Kothai - செவ்விமாலையினாலே அழகுபெற்ற மயிர் முடியையுடையளான இப்பெண்பிள்ளையினுடைய
அணி, Ani - விலக்ஷணமான
நிறம், Niram - மேனி நிறத்தை
கொண்டு, Kondhu - அபஹரித்தது மன்றி
முன்னே வந்து நின்று போகாய், Munnai Vandu Nindru Pogai - உருவெளிப்பாட்டாலே எப்போதும் இவள் கண்ணெதிரே தோற்றிப் புறம்பு போகிறாயில்லை
நீ, Nee - நீ
இவளை, Ivazhai - இப்பெண்பிள்ளையை
உங்கள் தொண்டர்கை தண்டு என்ற ஆறு, Ungal Thondarkai Thandu Endra Aaru - அடியார் கையிலுள்ள தடியைப்போலே நினைத்திருக்கும் விதம் என்னே!
சொல்லி என், Solli En - (இவள் திறத்திலே உனக்கு உள்ள உபேக்ஷையைப்பற்றி விரிவாகச்) சொல்வதனால்
மல்கிய தோளும், Malkiya Tholum - பணைத்த தோள்களையும்
மான் உரி அதளும், Maan Uri Adhalum - மானின் உரிக்கப்பட்ட தோலையும்
உடையவர் தமக்கும், Udaiyavar Thamakkum - உடையவரான சிவபிரானுக்கும்
ஓர் பாகம், Oru Paagam - திருமேனியில் ஒரு பகுதியை
நல்கிய, Nalkiya - (இடமாகக்) கொடுத்திருக்கிறோ மென்கிற
நலமோ, Nalamo - பெருமையை நினைத்தோ?
நாகனை, Naganei - நாகாஸுரனை
தொலைத்த, Tholaitha - கொன்றொழிப்பதற்கீடான
காதலத்து, Kaadhalathu - கையிலுள்ள
அமைதியின் கருத்தோ, Amaithiyin Karuththo - மிடுக்கை நினைத்தோ?
1936பெரிய திருமொழி || (10-9–புள்ளுருவாகி) (பழமொழியால் பணிந்து உரைத்த பாட்டு) - (தலைவியின் ஆற்றாமை கண்டு இரங்கிய தாய் தலைவனை வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (மதுரா மதுராலாபா -என்னும்படியான பேச்சை உடையவளை – செவ்வி மாறாத மாலையையும் உடையவளை – இவள் வாசி ஒன்றையும் புத்தி பண்ணிற்று இல்லை –இதுக்கு நான் எத்தைச் செய்வேன் – பெரு வழிக் கரையிலே-நாவலில் விழுந்த பழமானது-குனிந்து எடுக்க்கவுமாய் தவிரவுமாய் இருக்கும் இறே அவ்வோபாதியும் நினைத்து இறுக்கிறலை யாயிற்று இவளையும்) 5
செரு வழியாத மன்னர்கள் மாளத் தேர் வலம் கொண்டவர் செல்லும் அரு வழி வான மதர் படக் கண்ட ஆண்மை கொலோ வறியேன் நான் திரு மொழி எங்கள் தே மலர்க் கோதை சீர்மையை நினைந்திலை யந்தோ பெரு வழி நாவல் கனியினும் எளியள் இவள் எனப் பேசுகின்றாயே –10-9-5
பதவுரை Show / Hide
எங்கள், Engal - எங்களுடையவளாய்
திருமொழி, Thirumozhi - சிறந்த (மதுரமான) பேச்சையுடையவளாய்
தேன் மலர் கோதை, Then Malar Kothai - தேனொழுகும் மலர்களணிந்த மயிர் முடியையுடையளான இப்பெண்பிள்ளையினுடைய
சீர்மையை, Seermaiyai - சிறப்பை
நினைத்திலை, Ninaithilai - அறிகின்றிலை
அந்தோ, Andho - ஐயோ!
இவள் பெரு வழி நாவல் கனியினும் எளியள் என பேசுகின்றாய், Ival Peru Vazhi Naaval Kaniyinum Ezhiyal En Pesugindraai - பெரிய வழியில் விழுந்து கிடக்கிற நாவற் பழத்தைக்காட்டிலும் இவள் எளியவள் என்று நினைத்திருக்கிறாயே1,
செரு, Seru - போர்க்களத்திலே
அழியாத, Azhiyaadha - ஒருநாளும் தோற்றறியாத
மன்னர்கள், Mannargal - அரசர்கள்
மாள, Maala - மாண்டுபோகும்படியாக
தேர் வலம் கொண்டு, Ther Valam Kondu - தேரின் வலிமையையே கொண்டு
அவர் செல்லும், Avar Sellum - அவ்வரசர்கள் போகக்கூடிய
அரு வழி வானம், Aru Vazhi Vaanam - அருமையான வழியையுடைய வீரஸ்வர்க்கத்தை
அதர்பட கண்ட, Adharpada Kanda - பெருவழியாக்கின
ஆண்மை கொலோ, Aanmmai Koloo - ஆண்பிள்ளைத்தனத்தை நினைத்தோ?
நான் அறியேன், Naan Ariyeen - எனக்குத் தெரியவில்லை
1937பெரிய திருமொழி || (10-9–புள்ளுருவாகி) (பழமொழியால் பணிந்து உரைத்த பாட்டு) - (தலைவியின் ஆற்றாமை கண்டு இரங்கிய தாய் தலைவனை வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஒரு கால் வடிவு அழகைக் காட்டிப் போகிறிலை -என்னுதல்-உருவு வெளிப்பாட்டாலே முன்னே நின்று போகிறிலை -என்னுதல் – எந்தை பிரானே-தன்னடையே பழுத்து நெகிழ்ந்து விழுகிறத்தை எறி மழுவைக் கொண்டு வியாபாரிக்க வேணுமோ) 6
அரக்கியர் ஆகம் புல்லென வில்லால் அணி மதிள் இலங்கையர் கோனை செருக்கழித்து அமரர் பணிய முன்னின்ற சேவகமோ செய்ததின்று முருக்கிதழ் வாய்ச்சி முன்கை வெண் சங்கம் கொண்டு முன்னே நின்று போகாய் எறிக்கிலைக்காக வெறி மழு வோச்சல் என் செய்வது எந்தை பிரானே –10-9-6
பதவுரை Show / Hide
எந்தை பிரானே, Endhai Pirane - எம்பெருமானே!
முன், Mun - முன்பொருகால்
அரக்கியர், Arakkiyar - ராக்ஷஸ ஸ்த்ரீகளினுடைய
ஆகம், Aaham - மார்பு
புல்லென, Pullen - சூன்யமாம்படியாக
அணி மதிள் இலங்கையர் கோனை, Ani Mathil Ilangaiyar Konai - அழகிய மதிள்களையுடைய இலங்காபுரியிலுள்ளார்க்குத் தலைவனான இராவணனை
வில்லால், Villal - ஒரு வில்லாலே
செருக்கு அழித்து, Serukku Azhithu - கொழுப்படக்கி
அமர்ர் பணிய நின்ற, Amarr Panai Nindra - தேவர்கள் வணங்குமாறு நின்ற
சேவகமோ, Sevagamo - பராக்ரமத்தை நினைத்தோ
இன்று செய்த்து, Indru Seiththu - இன்று (இவள் திறத்திலே உபேக்ஷ) செய்வது?
முருக்கு இதழ் வாய்ச்சி, Murukku Idhal Vaaychchi - முருக்கம்பூப்போன்ற அதரத்தையுடையளான இப்பெண்பிள்ளையினுடைய
முன் கை, Mun Kai - முன்கையிலுள்ள
வண் சங்கம், Van Sangam - அழகிய வளைகளை
கொண்டு, Kondhu - பறித்துக்கொண்டது மன்றி
முன்னே நின்று போகாய், Munne Nindru Pogaai - உருவெளிப்பாட்டாலே எப்போதும் இவள் கண்ணெதிரே தோன்றிப் புறம் போகிறாயில்லை,
எருக்கு இலைக்கு ஆக, Erukku Ilaikku Aaga - எருக்கிலையை உதிர்ப்பதற்காக
எறி மழு ஓச்சல் என் செய்வது, Eri Mazhu Ochal En Seivathu - வீசுகோடாலியைக் கொண்டு ஓங்கியடிப்பது எதுக்கு?
1938பெரிய திருமொழி || (10-9–புள்ளுருவாகி) (பழமொழியால் பணிந்து உரைத்த பாட்டு) - (தலைவியின் ஆற்றாமை கண்டு இரங்கிய தாய் தலைவனை வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இவளுடைய –முன்னே உன்னுடைய வடிவை ஒரு கால் காட்டி போகிறிலை – தன்னடையே உடைந்து போகிற இத்தை தடியை இட்டுத் தகர்க்க வேணுமோ) 7
ஆழி யம் திண் தேர் அரசர் வந்து இறைஞ்ச அலை கடலுலக முன்னாண்ட பாழி யம் தோள் ஆயிரம் வீழப் படை மழுப் பற்றிய வலியோ மாழை மென்னோக்கி மணி நிறம் கொண்டு வந்து முன்னே நின்று போகாய் கோழி வெண் முட்டைக்கு என் செய்வது எந்தாய் குறுந்தடி நெடுங்கடல் வண்ணா –10-9-7
பதவுரை Show / Hide
முன், Mun - முற்காலத்து, (- (நெடுங்கடல்வண்ணா எந்தாய்!))
திண், Thin - வலிமைபொருந்திய
ஆழி, Aazhi - உருளையோடு கூடின
அம் தேர், Am Ther - அழகிய தேரையுடையரான
அரசர், Arasar - ராஜாக்கள்
வந்து இறைஞ்ச, Vandhu Irajinja - வந்து வணங்கும்படியாக
அலை கடல் உலகம், Alai Kadal Ulagam - அலைகடல் சூழ்ந்த உலகங்களை
ஆண்ட, Aanda - ஆட்சிபுரிந்த
ஓர் ஆயிரம் பாழி அம் தோள் விழ, Oru Aayiram Pazhi Am Thol Vizh - (கார்த்தவீரியனுடைய) வலிமிக்க ஓராயிரந் தோள்கள் இற்று விழும்படியாக
வடை மழு பற்றிய வலியோ, Vadai Mazhu Patriya Valiyo - கோடாலிப்படையை எந்திய மிடுக்கை நினைத்தோ
மாழை மெல்நோக்கி, Mazhai Melnookki - மானினுடைய அழகிய நோக்குப் போன்ற நோக்கையுடையளான பெண்பிள்ளையினுடைய
மணி நிறம் கொண்டு, Mani Niram Kondu - அழகிய மேனி நிறத்தைக் கொள்ளை கொண்டது மன்றி
முன்னே வந்து நின்று போகாய், Munnai Vandu Nindru Pogai - உருவெளிப்பாட்டாலே இவள் கண்ணெதிரே தோற்றி நின்று புறம்பு போகிறாயில்லை,
கோழி வெண்முட்டைக்கு, Koli Venmuttaikku - (தன்டையே உடைந்து போக்க்கூடியதான) கோழி முட்டையை உடைப்பதற்கு
குறு தடி, Kuru Tadi - சிறிய தடிதானும்
ஏன் செய்வது, Ean Seivathu - ஏதுக்கு?
1939பெரிய திருமொழி || (10-9–புள்ளுருவாகி) (பழமொழியால் பணிந்து உரைத்த பாட்டு) - (தலைவியின் ஆற்றாமை கண்டு இரங்கிய தாய் தலைவனை வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இவள் உடைய வைலஷண்யம் ஒன்றையும் புத்தி பண்ணிற்று இல்லை – வாயில் பொகட்டின நீர் இழிச்சவும் கொப்பளிக்கவுமாய் இருக்கும் அவ்வோபாதியாக நினையா நின்றாய் -இவளையும்) 8
பொருந்தலன் ஆகம் புள்ளு வந்தேற வள்ளுகிரால் பிளந்து அன்று பெருந்தகைக்கு இரங்கி வாலியை முனிந்த பெருமை கொலோ செய்ததின்று பெரும் தடங்கண்ணி சுரும்புறு கோதை பெருமையை நினைந்திலை பேசில் கருங்கடல் வண்ணா கவுள் கொண்ட நீராம் இவள் எனக் கருதுகின்றாயே –10-9-8
பதவுரை Show / Hide
அன்று, Anru - முன்பொருகால் (- (கருங் கடல் வண்ணா!))
பொருந்தலன், Porundhalan - பகைவனான இரணியனுடைய
ஆகம், Aaham - சரீரத்திலே
புள், Pul - (கழுகு பரந்து முதலிய பறவைகள்)
உவந்து ஏற, Uvanthu Eera - மகிழ்ந்து ஏறியுண்ணும்படியாக
வள் உகிரால், Val Ukiral - கூர்மையான நகங்களாலே
பிளந்து, Pilandhu - (அவ்வுடலைப்) பங்கஞ் செய்து)
பெருந் தகைக்கு, Perun Thagaikku - பெருத்தன்மை வாய்ந்தவனான ஸுக்ரீவனுக்கு
இரங்கி, Irangi - அருள் கூர்ந்து
வாலியை முனித்த, Vaaliyai Muniththa - வாலியைச் சீறி முடிந்தோமென்கிற
பெருமை கொலோ, Perumai Kolo - பெருமையை நினைத்தோ
இன்று செய்த்து, Indru Seiththu - இப்போது (இவள்திறத்திலே உபேக்ஷை) செய்வது?
பெரு தட கண்ணி, Peru Thada Kanni - மிகப் பரந்த கண்களை யுடையளாய்
சுரும்பு உறு கோதை, Surumbu Uru Kothai - (மதுபான விருப்பத்தினால்) வண்டுகள் மாறாத கூந்தலை யுடையளான இப்பெண் பிள்ளையினுடைய
பெருமையை, Perumaiyai - வைலக்ஷண்யத்தை
நினைந்திலே, Ninaindhile - ஆராய்கின்றிலை
பேசில், Pesil - (இவள் திறத்தில் நீ கொண்டிருக்கு மெண்ணத்தைப்) பேசப் புகுந்தால்
இவள் கவுள் கொண்ட நீர் ஆம் என கருது கின்றாய், Ival Kavul Kondu Neer Aam En Karuthu Kindraai - வாயினுட் கொள்ளப்பட்ட நீர்போலே இவனை நினைத்திருக்கின்றாயத்தனை.
1940பெரிய திருமொழி || (10-9–புள்ளுருவாகி) (பழமொழியால் பணிந்து உரைத்த பாட்டு) - (தலைவியின் ஆற்றாமை கண்டு இரங்கிய தாய் தலைவனை வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இவளுடைய ஸ்லாக்யதையில் குறை யுண்டாய் இழக்கிறேன் அல்லேன்-இதுக்கடி நான் பண்ணின பாபம் இறே- அக்நி பரிசர்யை பண்ணவே காலம் போந்து இருக்கிற பிராமணன் தோட்டமாக நினைத்தாயே – வேறேயும் ஒரு கர்த்தவ்யம் உண்டாகா நினைத்து இரா நின்றாய்) 9
நீரழல் வானே நெடு நிலம் காலாய் நின்ற நின்நீர்மையை நினைந்தோ சீர் கெழு கோதை என் அலது இலள் என்று அன்னதோர் தேற்றன்மை தானோ பார் கெழு பவ்வத் தாரமுதனைய பாவையைப் பாவம் செய்தேனுக்கு ஆரேழல் ஓம்பும் அந்தணன் தோட்டமாக நின் மனத்து வைத்தாயே –10-9-9
பதவுரை Show / Hide
பாவம் செய்தேனுக்கு, Paavam Seithenukku - பாவியான என்னுடைய (- (இது))
பார் கெழு பௌவத்து ஆர் அமுது அனையபாவையை, Paar Kezhu Paavaththu Aar Amuthu Anaiyapavaiyai - பூமியைச் சூழ்ந்திருக்கிற கடலிலுண்டான அருமையான அம்ருதம்போன்ற கட்டழகியை
ஆர் அழல் ஒம்பும் அந்தணன் தோட்டம் ஆக நின் மனத்து வைத்தாய், Aar Azhai Ombum Andhanan Thottam Aaga Nin Manaththu Vaiththai - அக்நிஹோத்ரியான அந்தணனுடைய தோட்டமாகத் திருவுள்ளம் பற்றியிருக்கின்றாய்
நிலம்நீர் அழல்வான் நெடு நிலம்கால் ஆய் நின்ற நின் நீர்மையை நினைந்தோ, Nilamneer Azhalvan Nedu Nilamkal Aay Nindra Nin Neermayai Ninaindho - பஞ்சபூதங்களும் நாமேயாயிருக்கிறோ மென்கிற பெருமை நினைத்தோ?
சீர் கெழு கோதை, Seer Kezhu Kothai - சிறந்த மயிர்முடியை யுடையளான விஉள்
என் அலது இலள் என்ற, En Alathu Ilal Endra - என்னைத் தவிர்த்து வேறொரு கதியை யுடையவளல்லள் என்றுண்டான
அன்னது ஓர் தேற்றன்மை தானோ, Annadhu Oru Thetranmai Thaano - அப்படிப்பட்ட தைர்யத்தினாலோ?
1941பெரிய திருமொழி || (10-9–புள்ளுருவாகி) (பழமொழியால் பணிந்து உரைத்த பாட்டு) - (தலைவியின் ஆற்றாமை கண்டு இரங்கிய தாய் தலைவனை வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தான் ஓன்று கண்டு சொல்லுகை அன்றிக்கே-முன்பு உள்ளார் சொன்ன பாசுரத்தை யாயிற்று சொல்லிற்று – யன் மங்களம் ஸூ பர்ணச்ய வினதாகல்ப யத்புரா அம்ருதம் ப்ரார்த்தயா நஸ- -பரம பக்தி இருந்த படியை சொன்ன படி – அதுக்கு அநந்தரம் உண்டாம் கைங்கர்ய லஷ்மியைப் பெற்று விஸ்த்ருதமாம்) 10
வேட்டத்தைக் கருதா தடியிணை வணங்கி மெய்ம்மை நின்று எம்பெருமானை வாள் திறல் தானை மங்கையர் தலைவன் மான வேற் கலியன் வாய் ஒலிகள் தோட்டலர் பைந்தார்ச் சுடர் முடியானைப் பழ மொழியால் பணிந்து உரைத்த பாட்டிவை பாடப் பத்திமை பெருகிச் சித்தமும் திருவோடு மிகுமே –10-9-10
பதவுரை Show / Hide
வேட்டந்தை கருதாது, Vettandhai Karudhadhu - மேன்மேலே பெருகி வருகிற காமனைகளைக் கொள்ளாமல்
அடி இணை வணங்கி, Adi Inai Vanangi - தன் திருவடியிணைகளையே (பரமப்ரயோஜனமாக்க் கொண்டு) வணங்கிநிற்க
மெய்ம்மை நின்ற, Meimmai Nindra - (அப்படிப்பட்ட பசுமை காந்திகளுக்கு) உண்மையாகத் தன்னைக் காட்டிக் கொடுக்குமவனும்
தோடு அலர் பை தார் சுடர் முடியானை, Thodu Alar Pai Thaar Sudar Mudiyanaai - இதழ்களானவை விரிந்து விகஸிக்கப்பெற்ற பசுமைதங்கிய (திருத்துழாய்) மாலையை ஒளிமிக்க திருமுடியிலே அணிந்துள்ளவனுமான
எம் பெருமானை, Em Perumaanai - எம்பெருமானை நோக்கி,
வாள் திறல் தானே, Vaal Thiral Thaaney - வாள் வலி கொண்ட சேனையையுடையவரும்
மங்கையர் தலைவன், Mangaiyar Thalaivan - திருமங்கை நாட்டிலுள்ளார்க்குத் தலைவரும்
மானம் வேல், Maanam Veel - பெருமைதங்கிய வேற்படையையுடைய வருமான
கலியன், Kalyan - திருமங்கையாழ்வாருடைய
வாய் ஒலிகள், Vaai Oligal - ஸ்ரீஸூக்தியாய்
பழமொழியால் பணிந்து உரைத்த, Pazhamozhiyal Panindhu Uraitha - பழமொழிகளைக் கொண்டு விநயத்துடன் அருளிச் செய்தவையான
பாட்டு இவை பாட, Paatu Ivai Paada - இப்பாசுரங்களைப் பாடவே
சித்தம், Siththam - (பாடுமவர்களது) நெஞ்சானது
பத்திமை பெருகி, Pathimai Perugi - பரமபக்திதலையெடுக்கப் பெற்று
திருவொடு மிகும், Thiruvodu Mikum - (எம்பெருமானது திருவடிகளில் நித்ய கைங்கரிய விருப்பமாகிற) செல்வமும் விஞ்சிவளரப்பெறும்.