திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 11-8 மாற்றமுள (10 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2022பெரிய திருமொழி || (11-8–மாற்றமுள) - (பிறப்பைப் போக்கி அருளுமாறு ஆழ்வார் எம்பெருமானைப் பிரார்த்தித்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பயத்துக்கு பரிஹாரமும்-உத்பாதகனும் -நீயாய் இருந்தாய் – அதுக்கு பய ஸ்தானம் ஆறு – உமக்கு பய ஸ்தானம் ஏது என்ன – அதுக்கு ஆறு ஓன்று-எனக்கு ஐஞ்சு ஆறு அகழ்ந்து பொகடுகிறது – அஞ்சும் ஆறும் ரசோக்தி விஷயங்கள் ஐந்தும் – தத் க்ராஹங்கள் ஆறும் கர்மேந்த்ரியங்கள் ஐந்தும் -ஜ்ஞாநேந்த்ரியங்கள் ஆறும் – ரூபத்தை சொல்லாமல் விட்டது -பயத்தாலே கண்ணாஞ்சுழலை இட்டமை தோற்றுகைக்கு – உன் பக்கல் நின்றும் அகற்றுகைக்கு பரிகரம் சப்தாதிகள் – அத்தைப் பரிஹரிக்கும் நீ பூர்ணனாய் இருந்தாய் – மமாயா துரத்தயா மாமேவ யே ப்ரபத்யந்தே –நான் பிணைத்த பிணை ஒருவராலும் அவிழ்க்கப் போகாது- என்னையே கால் கட்டி அவிட்கும் அன்று கழிக்கலாம் என்றாய் இறே ஸ்ரீ பிள்ளை திரு நறையூர் அரையர் வார்த்தையை நினைப்பது) 1
மாற்றமுள வாகிலும் சொல்லுவன் மக்கள் தோற்றக் குழி தோற்றுவிப்பாய் கொல் என்று இன்னம் ஆற்றங்கரை வாழ் மரம் போல் அஞ்சுகின்றேன் நாற்றச் சுவை யூறொலியாகிய நம்பீ –11-8-1
பதவுரை Show / Hide
நாற்றம் சுவை ஊறு ஒலி ஆகிய நம்பீ, Naatram Suvai Ooru Oli Agiya Nambi - கந்தம் ரஸம் ஸ்பர்சம் சப்தம் என்னும் புலன்கட்கு உரியனான எம்பெருமானே! (- (அதுயாதெனில்))
மாற்றம் உள ஆகிலும், Maatram Ula Aagilum - (நீ அடியேனை ஆட்கொண்டருளினாயில்லை என்று நான் உன் மேற் குறைகூறும் வார்த்தை கட்கெல்லாம் மாறாக (நீதானே ஆட்பட்டு உய்ந்தாயில்லை என்று என் மேற் குற்றமாக நீ) சொல்லத்தக்க வார்த்தைகள் பல உள்ளனவேயாகிலும்
சொல்லுவேன், Solluvein - (அவைநிற்க) யான் ஒன்று கூறுவேன்
மக்கள் தோற்றம் குழி இன்னம் தோற்றுவிப்பாய்கொல் என்று, Makkal Thotram Kuzhi Innam Thotruvippaaykol Endru - (உன்னைச்சரணமடையாத ஸாதாரண) மனிதர்கள் (கர்மவசத்தாற்) பிறக்குமிடமான கர்ப்பஸ்தாநத்திலே என்னை இன்னமும் பிறக்கும்படி செய்கிடுவையோ என்று கருதி
ஆற்றங்கரை வாழ் மரம் போல், Aatrangkarai Vaal Maram Pol - ஆற்றில் கரையிலேயுள்ள மரம் போன்றவனாகி
அஞ்சுகின்றேன், Anjuginren - (வரக்கடவதான அபாயத்தைக்குறித்து எப்பொழுதும்) பயப்படுகின்றேன்.
2023பெரிய திருமொழி || (11-8–மாற்றமுள) - (பிறப்பைப் போக்கி அருளுமாறு ஆழ்வார் எம்பெருமானைப் பிரார்த்தித்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பெரும் காற்றிலே அகப்பட்ட மரக் கலத்துக்கு உள்ளே சேதனர் உடைய நெஞ்சு போலே பயப் படுக்கைக்கு மேற்பட பரிஹாரத்தில் அந்வயம் இல்லை இறே அதுக்கு உட்பட்ட மனுஷ்யர் எல்லாருக்கும் உள்ள பயம் இவர் ஒருவருக்கும் உண்டாய் இருக்கிறது – மிகவும் நடுங்கா நிற்பன் -சரீர வியோக மாத்ரத்திலே இவர்களுக்கு – ஆழி வலவா –உன் கையில் திரு வாழிக்கும் எனது உள் நடுக்கத்துக்கும் சேர்த்திச் சொல்லிப் போ – உனக்கு அசக்தி உண்டு என்று சொன்னாய் ஆதல் -என் நடுக்கைத்தை பரிஹரித்தல் செய்) 2
சீற்றமுள வாகிலும் செப்புவன் மக்கள் தோற்றக் குழி தோற்றுவிப்பாய் கொல் என்று அஞ்சி காற்றைத் திடைப் பட்ட கலவர் மனம் போல் ஆற்றத் துளங்கா நிற்பன் ஆழி வலவா –11-8-2
பதவுரை Show / Hide
ஆழி வலவா, Aazhi Valavaa - சக்கரப்படையைப் பிரயோகித்தலில் வல்லவனே!
சீற்றம் உள ஆகிலும், Seetrum Ula Aagilum - நீ கோபிக்கும்படியான குற்றங்கள் (என்னிடம்) உள்ளனவானாலும்
செப்புவன், Seppuvan - (உன்னையன்றி எனக்கு வேறுகதியில்லை யாகையால் உன்பக்கல் என் குறையைச் சொல்லிக்கொள்வேன்
மக்கள் தோற்றம்குழி தோற்றுவிப்பாய் கொல் என்று அஞ்சி, Makkal Thotram Kuzhi Thotruvippaay Kol Endru Anji - மனிதர்கள் (கர்மாதீனமாகப்) பிறக்கும் பிறவியிலே என்னையும் புகுவிப்பையொ வென்று எண்ணி அச்சமுற்று
காற்றத்து இடைபட்ட கலவர் மனம் போல், Kaatrathu Idaipatta Kalavar Manam Pol - பெருங்காற்றில் அகப்பட்டுக் கொண்ட மரக்கலத்திலே யுள்ளாரது மனம்போல
ஆற்ற, Aatra - மிகவும்
துளங்கா நிற்பவன், Thulankaa Nirpavan - நடுங்கிநிற்பேன்
2024பெரிய திருமொழி || (11-8–மாற்றமுள) - (பிறப்பைப் போக்கி அருளுமாறு ஆழ்வார் எம்பெருமானைப் பிரார்த்தித்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்வம் சம்பந்தத்தாலே பார்த்த அன்று இறே இவ்விடம் த்யாஜ்யம் ஆவது அவன் சம்பந்தத்தை இட்டு பார்த்த போது இது தானே உத்தேச்யமாய் இருக்கும் இறே – இதில் அரை ஷணம் பொருந்தாத படியாய் இருக்கிற இவர் பாசுரத்துக்கும் இது ஒழியச் செல்லாத படியாய் இருக்கிற நம் பாசுரத்துக்கும் வாசி அறியாதான் ஒருவன் சரண்யனாகப் பெறில் நமக்கு அப் பேறு பெறலாவது-என்று அருளிச் செய்த தாமே அநந்தரம் – மித்ர பாவேன சம்ப்ராப்தம் -என்கிறபடியே இத் தலையில் உள்ளது போட்கன் ஆனாலும் நான் அவனை விடேன் -என்று அருளிச் செய்த படியால் நமக்குப் பெறுகைக்கு தட்டில்லை -என்று அருளிச் செய்து அருளினார் ஸ்ரீ நஞ்சீயர் – இது மெய்யாதல் -இல்லை யாகில்-பரிஹாரம் இன்றிக்கே போதல் -செய்யும் அத்தனை இது பொய்யாகிலும் நமக்கு அஞ்ச வேண்டா –-இத்தால் பொய்யாகாது என்ற படி – இது பொய்யாகில்-நரகாத்ய அனுபவங்களை சொல்லுகிறவையோ மெய்யாகப் புகுகிறது) 3
தூங்கார் பிறவிக்கள் இன்னம் புகப் பெய்து வாங்காய் என்று சிந்தித்து நான் அதற்கு அஞ்சிப் பாம்போடு ஒரு கூரையிலே பயின்றாப் போலே தாங்காது உள்ளம் தள்ளும் என் தாமரைக் கண்ணா –11-8-3
பதவுரை Show / Hide
என் தாமரை கண்ணா, En Thaamarai Kannaa - செந்தாமரைபோன்ற திருக்கண்களையுடைய எனது தலைவனே!
தூங்கு ஆர் பிறவிக்கள், Thoongu Aar Piravikkal - சஞ்சலம் மிக்க பிறப்புக்களிலே
இன்னம் புகபெய்து, Innam Pugapeythu - (இதுவரைபட்டது போதாமல்) இன்னமும் புகும்படி போட்டு
வாங்காய் என்று சிந்தித்து, Vaangai Endru Sindhithu - என்னை மீட்காதிருந்திடுவையோ? என்று கவலை கொண்டு
நான் அதற்கு அஞ்சி, Naan Atharku Anji - நான் அப்பிறவித்துன்பத்திற்கு அச்சமுறுதலால்
பாம்போடு ஒரு கூரையிலே பயின்றாப்போல், Pambodu Oru Kooraivile Payinraappol - பாம்பினுடனே ஒருவீட்டிலே பழகி வசிப்பதுபோல
தாங்காது உள்ளம் தள்ளும், Thaangadhu Ullam Thallum - (பல பொல்லாங்குகட்கு இடமான உடலோடுகூடி வாழ்தலைப்) பெறாமல் என்மனம் தடுமாறுகின்றது.
2025பெரிய திருமொழி || (11-8–மாற்றமுள) - (பிறப்பைப் போக்கி அருளுமாறு ஆழ்வார் எம்பெருமானைப் பிரார்த்தித்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இரண்டு தலையும் நெருப்பு பற்றி எரியா நிற்க நடுவே அகப்பட்டு நோவு படுகிற ஷூத்ர பதார்த்தம் போலே யாயிற்று ஜன்ம மரணங்கள் இரண்டிலும் அகப்பட்டு நோவு படுகிற படி – பிரளயத்தில் அகப்பட்டு அழிந்து போகப் புக்கதை எடுத்து ரஷித்தவன் அன்றோ) 4
உருவார் பிறவிக்குள் இன்னம் புகப் பெய்து திரிவாய் என்று சிந்தித்தி என்றதற்கு அஞ்சி இருபாடு எரி கொள்ளியினுள் எறும்பே போல் உருகா நிற்கும் என் உள்ளம் ஊழி முதல்வா –11-8-4
பதவுரை Show / Hide
ஊழி முதல்வா, Oozhi Muthalvaa - பிரளயகாலத்து (உலக முழுவதையும் வயிற்றில் வைத்துப் பாதுகாக்கிற) தலைவனே!
உரு ஆர் பிறவிக்கள், Uru Aar Piravikkal - வடிவமைந்த பிறப்புக்களிலே
இன்னம் புக பெய்து, Innam Puga Peythu - இன்னமும் (என்னைப்) பிரவேசிப்பது
திரிவாய் என்று சிந்தித்தி என்று, Thirivaai Endru Sindhiththi Endru - (கருமவசத்தால்) திரியக் கடவாய் என்று (என்னைக்குறித்து நீ) திருவுள்ளங்கொள்ளுகின்றனையோ? எனறு
அற்கு அஞ்சி, Arku Anji - அப்பிறவிகளில் திரிதற்கு அஞ்சி.
இரு பாடு எரி கொள்ளியின் உள் எறும்பே போல், Iru Paadu Eri Kolliyin Ula Erumbe Pol - இரண்டு பக்கத்திலும் நெருப்புப்பற்றியெரிய அவற்றின் நடுவிலே அகப்பட்டுவருந்தும் எறும்புபோல,
என் உள்ளம் உருகாநிற்கும், En Ullam Urugaanirkkum - என்மனம் (க்லேசத்தால்) நெகிழ்ந்து உருகிக்கொண்டேயிருக்கும்.
2026பெரிய திருமொழி || (11-8–மாற்றமுள) - (பிறப்பைப் போக்கி அருளுமாறு ஆழ்வார் எம்பெருமானைப் பிரார்த்தித்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நீ பரிஹரித்த பிரளய ஆபத்தின் அளவல்ல நான் நோவு படுகிற சம்சார பிரளயம் – அங்கு ஒருவருமே அபேஷியாது இருக்க பரிஹரித்தாய் இங்கு நான் அபேஷிக்க வேண்டுகிற ஹேது என்) 5
கொள்ளக் குறையாத விடும்பைக் குழியில் தள்ளிப் புகப்பெய்தி கொல் என்றதற்கு அஞ்சி வெள்ளத்திடைப் பட்ட நரியினம் போலே உள்ளம் துளங்கா நிற்பன் ஊழி முதல்வா –11-8-5
பதவுரை Show / Hide
ஊழி முதல்வா, Oozhi Muthalvaa - பிரளயகாலத்தில் அத்வி தீயனாயிருப்பவனே!
கொள்ள குறையாக இடும்பை குழியில், Kolla Kuraiyaga Idumbai Kuzhiyil - அநுபவிக்க அநுபவிக்க்க் குறையாதபடியுள்ள துன்பங்களை விளைப்பதான கர்ப்பஸ்தானத்திலே
தள்ளி புக பெய்தி கொல் என்று, Thalli Puga Peythi Kol Endru - நான் புகும்படி என்னைத்தள்ளிப் போகடுவையோ நீ என்று
அதற்கு அஞ்சி, Adharku Anji - அப்பிறவித்துயர்க்கு அஞ்சி
வெள்ளத்து இடை, Vellathu Idai - வெள்ளத்திலே
பட்ட, Patta - அகப்பட்டுவருந்துகிற
நரி இனம் போலே, Nari Inam Pole - நரிக்கூட்டம்போலே
உள்ளம் துளங்கா நிற்பன், Ullam Thulangaa Nirpan - மனம் நடுங்கிநிற்பேன்யான்
2027பெரிய திருமொழி || (11-8–மாற்றமுள) - (பிறப்பைப் போக்கி அருளுமாறு ஆழ்வார் எம்பெருமானைப் பிரார்த்தித்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இப்பாட்டில் அருளிச் செய்யும் போது இதுவே அமையும் என்னும் படி ஆர்த்தி தோற்ற அருளிச் செய்து அருள்வர் – நான் உன்னை அடையும் படியாக அருள வேணும் – அம்மரத்தின் உலர்ந்த அம்சமும் தன்னிலே ஒன்றிப் பச்ச்சையாம் படி பண்ண வேணும் – அது பின்னை செய்யப் போமோ என்னில் வேர் பறிந்தவையும் புகட்டிடத்தே செவ்வி பெறும்படி பண்ணும் தேசத்தில் அன்றோ நீ வர்த்திக்கிறது முதல் பறிந்ததுக்கு செவ்வி பெறுத்த வல்ல உனக்கு உள்ளத்துக்கு ஒரு பசுமை பண்ண தட்டு என் – தய நீயனான எனக்கு கொள்வர் தேட்டமான உன் அருளை அருள வேணும்) 6
படை நின்ற பைம்தாமரையோடு அணி நீலம் மடை நின்று அலரும் வயலாலி மணாளா இடையன் எறிந்த மரமே ஒத்து இராமே அடைய வருளாய் எனக்கு உன்தன் அருளே –11-8-6
பதவுரை Show / Hide
படை நின்ற, Padai Nindra - உழுபடையாகிய கலப்பையைக்கொண்டு உழும்போது அதில் அகப்பட்டு அழியாமல் தப்பியொதுங்கி நின்ற
பைந்தாமரையோடு, Painthaamaraiyodu - பசுமையான தாமரைக் கொடிகளும்
அணி நீலம், Ani Neelam - அழகிய நீலோற்பலக்கொடிகளும்
மடை நின்று, Madai Nindru - (பின்பு களையாகப்பறித் தெறியப்பட்டு அங்ஙனம் எறியப்பட்ட இடமான) நீர்பாயும் மடையிலேகிடந்து
அலரும், Alarum - மலரப்பெற்ற
வயல், Vayal - கழனிகளை யுடைய
ஆவி, Aavi - திருவாலியென்னுந் திருநகரியிலெழுந்தருளியிருக்கிற
மணாளா, Manala - மணவாளானென்னுந் திருநாம்முடைய எம்பெருமானெ!
இடையன் எறிந்த மரமே ஒத்து இராமே, Idaiyan Erindha Marame Othu Irame - (ஆடுமாடுகள் எட்டித் தழைமேயலாம்படி) இடையர்கள் (விரைந்து கையிற்கத்தி கொண்டு கிளைகளை வெட்டிச் சாய்க்கப்பெற்ற மரங்கள் போல யான் ஒருபுறம் உலராதபடி.
அடைய, Adaiya - நான் உன்னையடையும்படி
எனக்கு, Enakku - எளியவனான அடியேனுக்கு
உன்தன் அருள், Unthan Arul - உனது கருணையை
அருளாய், Arulai - அருளாய்
2028பெரிய திருமொழி || (11-8–மாற்றமுள) - (பிறப்பைப் போக்கி அருளுமாறு ஆழ்வார் எம்பெருமானைப் பிரார்த்தித்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (விசத்ருச த்ருஷ்டாந்தமாய் இருந்ததீ என்ன –அந்வயம் -விச்சேதத்தைப் பொறுக்கும் வ்யதிரேகம் அப்படி விச்சேதத்தைப் பொறாது இறே-அத்தைப் பற்றச் சொல்லிற்று – உன்னைக் கொண்டு விரோதியைப் போக்கிக் கொள்ள அமையும் என்று இருப்பாருக்கு விரோதியைப் போக்கிக் கொடுப்புதி – உன்னோடு அணைய வேண்டும் என்று ஆசைப் பட்டாருக்கு நித்ய சம்ச்லேஷம் பண்ணுகைக்கு உடம்பு கொடுப்புதி – நீ வேண்டா பிரயோஜனமே அமையும் என்று இருப்பாருக்கு அத்தைக் கொடுத்து உன்னையே பெற வேணும் என்று இருப்பாருக்கு உன்னைக் கொடுப்புதி – பரஞ்சோதீ – நீ அணைக்குக்கு உடம்பைக் கொடுக்காதே-ஷயத்தை வர்த்திப்பான் ஒருவன் ஆனாலும் உன்னை விடலாயோ வடிவு அழகு இருப்பது) 7
வேம்பின் புழு வேம்பன்று உண்ணாது அடியேன் நான் பின்னும் உன் சேவடி யன்றி நயவேன் தேம்பல் இளம் திங்கள் சிறை விடுத்து ஐ வாய்ப் பாம்பின் அணைப் பள்ளி கொண்டாய் பரஞ்சோதீ –11-8-7
பதவுரை Show / Hide
தேம்பல், Thembal - தக்ஷமுனிவனது சாபத்தினாலுண்டான க்ஷயரோகத்தால்) உடல்தேய்ந்து மெலிந்து வருந்துதலையுடைய (- (அதுபோலவெ))
இள திங்கள், Ila Thingal - பருவம் நிரம்பாத சந்திரன
சிறை விடுத்து, Sirai Viduthu - (அந்நோயாகிய) நிறைத்துன்பத்தினின்று விடுவித்து
ஐவாய் பாம்பின் அணை பள்ளி கொண்டாய், Aivai Paambin Anai Palli Kondaai - ஐந்து தலையையுடைய ஆதிசேஷனாகிய சயனத்தில் அறிதுயில்கொண்டருள்பவனே!
பரஞ்சோதை, Paranjothai - எல்லாவொளிகளினுஞ்சிறந்த ஒளியையுடையவனெ!
வேம்பின் புழு, Vembin Puzhu - வேப்பமரத்திலுண்டான புழுவானது
வேமுபு அன்றி உண்ணாது, Vemupu Andri Unnaadhu - அம்மரத்தின் இலை முதலியவற்றைச் சுவைபட உண்ணுமேயன்றி வேறொன்றை உண்ணாது
அடியேன் நான், Adiyen Naan - உனக்கே அடிமைப்பட்டவனான நான்
பின்னும், Pinnum - நீ வெறுத்தாலும்
உன் சே அடி அன்றி நயவேன், Un Che Adi Andri Nayvaen - உனது சிவந்த திருவடிகளை யன்றி வேறொன்றை விரும்பென்.
2029பெரிய திருமொழி || (11-8–மாற்றமுள) - (பிறப்பைப் போக்கி அருளுமாறு ஆழ்வார் எம்பெருமானைப் பிரார்த்தித்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சோகித்த அர்ஜுனனைக் குறித்து உன்னுடைய சர்வ பரங்களையும் நம் தலையிலே ஏறிட்டு நம்மையே தஞ்சமாக நினைத்து இரு –நாம் உன் விரோதிகளைப் போக்குகிறோம் மாஸூச -என்னுமா போலே நான் உஜ்ஜீவிக்கும் படி யெனக்கு ஒரு வார்த்தை யருளிச் செய்ய வேணும் – பூ வலரும் போதை விகாசம் போலே வார்த்தை அருளிச் செய்யும் போது-திருமேனியில் பிறக்கும் செவ்வி காண வாயிற்று ஆசைப் படுகிறது – ஆஸ்ரித பரதந்த்ரனாகை -வென்றால் உகப்பார் ஒருவர் ஆயிற்று) 8
அணியார் பொழில் சூழ் அரங்க நரகரப்பா துணியேன் இனி நின்னருளால் அல்லது யெனக்கு மணியே மணி மாணிக்கமே மது சூதா பணியாய் யெனக்கு உய்யும் வகை பரஞ்சோதி –11-8-8
பதவுரை Show / Hide
அணி ஆர் பொழியல் சூழ், Ani Aar Pozhiyal Soozh - அழகுமிக்க சோலைகள் சூழப்பெற்ற
அரங்கம் நகர், Arangam Nagar - திருவரங்கமென்னுந் திருநகரத்தில் எழுந்தருளியிருக்கின்ற
அப்பா, Appa - தந்தையே!
இனி, Ini - இனிமேல்
நின் அருள் அல்லது, Nin Arul Allathu - உனது கருணையையே யன்றி மற்றொன்றை
எனக்கு துணியேன், Enakku Thuniyen - எனக்கு (த்தஞ்சமாக) நினைத்திடேன்
மணியே, Maniye - நீலமணி போன்றவடிவை யுடையவனெ!
மணி மாணிக்கமே, Mani Manikkame - சிறந்த ரத்நமான மாணிக்கம் போல மேன்மை யுடையவனே!
மதுசூதா, Madhusoodha - மதுவென்னும் அசுரனை யழிந்தவனெ!
பரம் சோதி, Param Sothi - சிறந்த வொளியை யுடையவனே!
எனக்கு உய்யும் வகை பணியாய், Enakku Uyyum Vagai Paniyai - யான் (பிறவித்துயர் தீர்ந்து பரமபதம் பெற்று) உஜ்ஜீவிக்குமாறு எனக்கு ஒரு நல்வார்த்தையருளிச் செய்யவேணும்.
2030பெரிய திருமொழி || (11-8–மாற்றமுள) - (பிறப்பைப் போக்கி அருளுமாறு ஆழ்வார் எம்பெருமானைப் பிரார்த்தித்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பணியாய் என்றார் கீழ் பாட்டில் தத் அனுஜாநந்தம் உதார வீஷணை-என்றும் தூது செய் கண்கள் -என்ற படியும் மலர விழித்துக் கடாஷிக்க -க்ருதார்த்தராய் – சம்சார உத்தரணத்துக்கு சம்சயம் உண்டோ என்று கொண்டு உமக்குத் திரு உள்ளம் ஆனபடி என் மநோ ரதத்தை தலைக் கட்டி அருள பிரார்த்திக்கிறார் -என்று சங்கதி) 9
நந்தா நரகத்து அழுந்தா வகை நாளும் எந்தாய் தொண்டர் ஆனவருக்கு இன்னருள் செய்வாய் சந்தோகா தலைவனே தாமரைக் கண்ணா அந்தோ அடியேற்கு அருளாய் யுன்னருளே –11-8-9
பதவுரை Show / Hide
நந்தா நரகத்து, Nandha Narakathu - அழயாத்தொரு நரகமாகிற பிறவித்துயரத்திலே
அழுந்தா வகை, Azhundha Vagai - மூழ்கிக்கிடக்க வேண்டாதபடி
நாளும், Naalum - எப்பொழுதும்
தொண்டர் ஆனவர்க்கு, Thondar Aanavarkku - உனது அடியவரானவர்களுக்கு
இன் அருள் செய்வாய், In Arul Seivai - இனிமையான கருணையைச் செய்யுமியல்வுடையவனே!
எந்தாய், Endhai - எமது தந்தையே!
சந்தோகா, Santhokha - வேதங்களையெல்லாம் அறிந்தவனே!
தலைவனெ, Thalaivaney - மேம்பட்டவனெ!
தாமரை கண்ணா, Thamarai Kanna - செந்தாமரைமலர்போன்ற திருக்கண்களை யுடையவனே!
அந்தோ, Andho - ஐயோ!
அடியெற்கு, Adiyerkku - அடியேனுக்கு
உன் அருள், Un Arul - உனது கிருபையை
அருளாய், Arulai - செய்தருள்
2031பெரிய திருமொழி || (11-8–மாற்றமுள) - (பிறப்பைப் போக்கி அருளுமாறு ஆழ்வார் எம்பெருமானைப் பிரார்த்தித்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஒன்பது பாட்டிலும் இவருக்கு ஓடின வ்யசனமும்-வாசனையோடு கழியும் படி அஹம் -என்று ரஷகனான தன்னைக் காட்டினான் – இவர் நோவு பட்ட ஒன்பது பாட்டும்-அதுக்கு பரிஹாரமாகச் சொன்ன ஒரு பாட்டையும் சொல்ல வல்லவர்களுக்கு – பதினெட்டு ஒத்திலும் சோகத்தை உபபாதித்து-மாஸூச -என்று பரிஹரித்தால் போலே யாயிற்று ஒன்பது பாட்டாலும் நோவு பட்டவர்க்கு-ஒரு பாட்டாலே நோவு பரிஹரித்த படி – சம்சாரத்துக்கு ஹேதுவான அவித்யாதிகள் கழிந்து பின்னையும்-வித்து முதல் கிடந்து அரும்புகை அன்றிக்கே இவர் தாம் -த்வத் அனுபவ விரோதியான பிரகிருதி சம்பந்தத்தை அறுத்துத் தர வேணும் என்று பிரார்த்தித்த படியே சவாசனமாகக் கழியும்) 10
குன்றம் எடுத்து ஆநிரை காத்தவன் தன்னை மன்றில் மலி புகழ் மங்கை மன் கலி கன்றி சொல் ஓன்று நின்ற ஒன்பதும் வல்லவர் தம் மேல் ஒன்றும் வினையாயின சார கில்லவே –11-8-10
பதவுரை Show / Hide
குற்றம் எடுத்து, Kutram Eduthu - (கோவர்த்தன) மலையைக் குடையாகவெடுத்துப் பிடித்து (- (அது கொண்டு பெருமழையைத் தடுத்து))
ஆ நிரை, A Nirai - பசுக்கூட்டத்தை
காத்தவன் தன்னை, Kaaththavan Thannai - பாதுகாத்தவனான எம்பெருமானைக்குறித்து
மன்றில் புகழ், Manril Pugazh - சபைகளில் புகழப்படுவராய்
மங்கை மன், Mangai Man - திருமங்கை நாட்டுக்குத் தலைவரான
கலிகன்றி, Kalikanri - ஆழ்வார்
சொல், Sol - அருளிச்செய்த
ஒன்று நின்ற ஒன்பதும், Onru Nindra Onpathum - இப்பத்துப் பாசுரங்களையும்
வல்லவர் தம் மேல், Vallavar Tham Mel - ஓதியுணர்ந்தவர்களின் மேல்
வினை ஆயின, Vinai Aayina - கருமங்கள்
என்றும், Endrum - எப்பொழுதும்
சார கில்லா, Saar Killa - அணுகிப் பயன்விளைக்கமாட்டா