திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2-5 பாராயது (10 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1088பெரிய திருமொழி || (2-5–பாராயது) (திருகடல்மல்லை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சர்வ வித ரஷணம் பண்ணுமவன் -சர்வருக்கும் ஸ்ப்ருஹணீ யமாய் –தானே தாரகனுமாய்-பிரபல பிரதிபந்தகங்களை கேசி வாயைக் கிழித்தாற் போலே அநாசேயேந போக்க வல்லவனை-என்னை அனன்யார்ஹன் ஆக்கினவனை – இடர் பட்டு வரவும் பிற் பாடாகை அன்றிக்கே –இவன் இடர் பட்ட மடுவின் கரையிலே வந்து உதவினாப் போலே நான் நோவு படுகிற சம்சாரத்திலே -சம காலத்திலேயே –காணப் பெற்றேன் என்கிறார் முதல் பாசுரத்தில்) 1
பாராய துண்டுமிழ்ந்த பவளத்தூணைப் பாடுகடலி லமுதத்தைப் பரிவாய்கீண்ட சீரானை, எம்மானைத் தொண்டர்தங்கள் சிந்தையுள்ளே முளைத்தெழுந்த தீங்கரும்பினை, போரானைக் கொம்பொசித்த போரேற்றினைப் புணர்மருத மிறநடந்த பொற்குன்றினை, காரானை யிடர்க்கடிந்த கற்பகத்தைக் கண்டதுநான் கடல்மல்லைத் தலசயனத்தே. –2-5-1
பதவுரை Show / Hide
பார் ஆயது, Paar Aayadhu - உலகமாக வுள்ளவற்றை யெல்லாம்
உண்டு, Undu - (பிரளயம் கொள்ளாதபடி) திருவயிற்றிலே வைத்து
உமிழ்ந்த, Umizhndha - (பிரளயம் கழிந்தபிறகு) வெளிப்படுத்தினவனும்
பவளம் துணை, Pavalam Thunai - பவழத்தூண் போலே விரும்பத்தக்கவனும்
படு கடலில் அமுதத்தை, Padu Kadalil Amudhatthai - ஆழ்ந்த கடலிலுண்டான அமுதம்போலே போக்யனானவனும்
பரி வாய் கீண்ட சீரானை, Pari Vaai Kiinda Seeranaai - குதிரை வடிவுடன் வந்த கேசியென்னுமஸூரனுடைய வாயைக் கிழித்தெறிந்த வீரலக்ஷ்மியையுடையவனும்
எம்மானை, Emmaanai - எனக்கு ஸ்வாமியானவனும்
தொண்டர் தங்கள் சிந்தை உள்ளே, Thondar Thangal Sindhai Ullae - அடியவர்களுடைய நெஞ்சினுள்ளே
முளைத்து, Mulaiththu - தோன்றி
எழுந்த, Ezhundha - அபிவிருத்தியடைகின்ற
தீம் கரும்பினை, Theem Karumbinai - இனிய கரும்பு போன்றவனும்
போர் ஆனை, Poar Aana - போர் செய்யவந்த குவலயாபீடமென்னும் யானையினுடைய
கொம்பு, Kombu - தந்தங்களை
ஒசித்த, Osiththa - முறித்தெறித்த
போர் ஏற்றினை, Poar Aetrinai - யுத்தஸாமர்த்திய முள்ளவனும்
புணர் மருதம் இற நடந்த, Punar Marudham Ira Nadandha - இரட்டை மருதமரங்கள் முறியும்படி தவழ்ந்தவனும்
பொன் குன்றினை, Pon Kunrinai - பொன்மலை போல் அழகியவனும்
கார் ஆனை இடர் கடிந்த, Kaar Aana Idar Kadintha - பெரிய கஜேந்தராழவானுடைய துன்பத்தைத் தொலைத்தவனும்
கற்பகத்தை, Karppagaththai - கல்பவருக்ஷம்; போல ஸர்வ ஸ்வதானம் செய்பவனுமான எம்பெருமானை
நான் கண்டது, Naan Kandhadhu - அடியேன் ஸேவிக்கப்பெற்றது (எவ்விடத்திலென்றால்)
கடல்மல்லை தலசயனத்து, Kadalmallai Thalasayanaththu - ஸ்தலசாயிப் பெருமாளுடையதான திருக்கடல் மல்லையிலே
1089பெரிய திருமொழி || (2-5–பாராயது) (திருகடல்மல்லை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (எனக்கு ஜனகனாய் எனக்கு சென்று ஆஸ்ரயிக்கலாம் படி சீலவானாய் உள்ளவனை – காட்டுத் தீயில் வர்ஷித்தாற் போலே நோவு படுகிற சம்சாரத்திலே காணப் பெற்றேனே-என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்) 2
பூண்டவத்தம் பிறர்க்கடைந்து தொண்டுபட்டுப் பொய்ந்நூலை மெய்ந்நூலென் றென்றுமோதி மாண்டு,அவத்தம் போகாதே வம்மினெந்தை என்வணங்கப் படுவானை, கணங்களேத்தும் நீண்டவத்தைக் கருமுகிலை எம்மான்தன்னை நின்றவூர் நித்திலத்தைத் தொத்தார்சோலை, காண்டவத்தைக் கனலெரிவாய்ப் பெய்வித்தானைக் கண்டதுநான் கடல்மல்லைத் தலசயனத்தே. –2-5-2
பதவுரை Show / Hide
அவத்தம் பூண்டு, Avatham Poondhu - ஸ்வரூபத்தைக் கெடுக்கவல்ல காரியங்களை ஏறிட்டுக் கொண்டு (- (நான் கண்டது கடல்மல்லைத் தலசயனத்தே-))
பிறர்க்கு அடைந்து, Pirarkku Adaindhu - பிறரை(நீசர்களை) ஆச்ரயித்து
தொண்டுபட்டு, Thondupattu - (அவர்களுக்கு)அடிமை செய்தும்
பொய் நூலை, Poi Noolai - அபத்தங்களான பாஹ்யமதச்சுவடிகளை
மெய்நூல் என்று, Mei Nool Endru - யதார்த்தமான சாஸ்த்ரமாகக் கொண்டு
என்றும், Endrum - எப்போதும்
ஓதி, Othi - (அந்தச் சுவடிகளையே) வாசித்துக்கொண்டிருந்து
மாண்டு, Maandu - முடிந்து
அவத்தம் போகாதே வம்மின், Avatham Pogaadhe Vammin - பாழாய்ப் போகாமல் (உஜ்ஜீவிக்க) வாருங்கள்;
எந்தை, Endhai - எனக்குத் தந்தையானவனும்
என் வணங்கப்படுவானை, En Vanangappaduvaanai - என்போல்வாரும் வணங்குதற்கு உரியவனும்
கணங்கள் ஏத்தும், Kanangal Aethum - (ஞானிகளின்) கூட்டங்களாலே துதிக்கப்படுபவனும்
நீண்ட அத்தை, Neenda Aththai - அளவிறந்த அப்படிப்பட்ட வஸ்துவாக உள்ளவனும்
கரு முகிலை, Karum Mugilai - காளமேகம் போன்றவனும்
எம்மான் தன்னை, Emmaan Thannai - அஸ்மத் ஸ்வாமியானவனும்
நின்றவூர் நித்திலத்தை, Nindra Vuur Niththilaththai - திருநின்றவூரில் (எழுந்தருளியிருக்கிற) முத்துக்கோவை போலக் குளிர்ந்த வடிவையுடையவனும்
தொத்து ஆர் சோலை காண்டவத்தை, Thoththu Aar Cholai Kaandavaththai - பூங்கொத்துகள் நிறைந்த சோலைகளையுடைய காண்டவவனத்தை
கனல் எரிவாய் பெய்வித்தானை, Kanal Erivai Peyviththaanai - ஜ்வலிக்கிற அக்நியினுடைய வாயிலே புகுவித்தவனுமான பெருமானை
1090பெரிய திருமொழி || (2-5–பாராயது) (திருகடல்மல்லை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்வ ப்ராப்தி உபாயங்களில் பெரு நெறியாய் உள்ளவனை –ஜகத்தை அடைய ரஷிக்க கடவனாய் இருக்கிறவனுடைய ரஷணத்துக்கு நான் இப்போது விஷய பூதன் ஆனேன் என்கிறார்-என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்) 3
உடம்புருவில் மூன்றொறாய் மூர்த்திவேறாய் உலகுய்ய நின்றானை,அன்றுபேய்ச்சி விடம்பருகு வித்தகனைக் கன்றுமேய்த்து விளையாட வல்லானை வரைமீகானில், தடம்பருகு கருமுகிலைத் தஞ்சைக்கோயில் தவநெறிக்கோர் பெருநெறியை வையங்காக்கும், கடும்பரிமேல் கற்கியைநான்கண்டுகொண்டேன் கடிபொழில்சூழ் கடன்மல்லைத் தலசயனத்தே. –2-5-3
பதவுரை Show / Hide
உலகு உய்ய, Ulaku Uyya - (ஸ்ரீமந்நாராயண னொருவனே மூன்று வடிவுகொண்டு காரியஞ் செய்கையாலே) (ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரங்களாலே) உலகங்கள் வாழ்வதற்காக (- (நான் கண்டுகொண்டேன்..))
உடம்பு உருவில், Udam Bu Uruvil - சரீ ரசரீரிபாவத்தையிட்டுப் பார்க்குமளவில்
மூன்று ஒன்று ஆய், Moondru Ondru Aay - மூன்று தத்துவமும் ஒருபடியாய்
மூர்த்தி வேறு ஆய்நின்றானை, Moorthi Veeru Aayninraanaai - (உண்மையில்) ஸவ்ரூபம் வேறுபட்டு நிற்குமவனும்
அன்று, Andru - கண்ணனாகப் பிறந்த அக்காலத்து
பேய்ச்சி, Peychchi - பூதனையினுடைய
விடம், Vidam - (முலையில் தடவியிருந்த) விஷத்தை
பருகு, Paruku - பானம்பண்ணின
வித்தகனை, Viththakanai - ஆச்சரீயபூதனும்
கன்று மேய்த்து விளையாட வல்லானை, Kanru Maeyththu Vilaiyaada Vallaanaai - கன்றுகளை மேய்த்து விளையாடுகைக்காக வந்து பிறந்தவனும்
வரை மீ கானில், Varai Mee Kaanil - மலைமேலுள்ள காடுகளிலே
தடம், Thadam - தடாகங்களிலே
பருகு, Paruku - (கன்றுகளுக்கு நீர் குடிக்கும் விதத்தைப் பயிற்றுவிக்கைக்காகத் தான் இறங்கிக் கையை முதுகிலே கட்டிக் கொண்டு) தண்ணீர் குடித்தவனும்
கரு முகிலை, Karum Mugilai - காளமேகம் போன்றவனும்
தஞ்சை கோயில், Thanjai Koyil - தஞ்சை மாமணிக்கோயிலிலே
தவம் நெறிக்கு ஓர் பெரு நெறியை, Thavam Nerikku Oru Peru Neriyai - தன்னைக் கிட்டுகைக்கான  உபாயங்களிலே சிறந்த  உபாயம் தானாக நிற்பவனும்
வையம் காக்கும், Vaiyam Kaakkum - உலகத்தைக் காப்பதற்காக
கடு பரி மேல் கற்கியை, Kadu Pari Mel Karkkiyai - கடுநடையுடைய குதிரையின் மேலே கல்கியவதாரம்  செய்யப்போகிறவனுமான எம்பெருமானை
கடி பொழில் சூழ் கடல் மல்லை தல சயனத்தே, Kadi Pozhil Soozh Kadal Mallai Thala Sayanatthae - மணம்மிக்க சோலைகள் சூழ்ந்த திருக்கடன் மல்லையிலே
1091பெரிய திருமொழி || (2-5–பாராயது) (திருகடல்மல்லை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஆஸ்ரித ஸ்பர்சமுடைய த்ரவ்யமே தனக்கு தாரகமாக இருந்த செயலாலே லோகத்தை அடைய எழுதிக் கொண்டவனை – எல்லார் கண் முகப்பே திருக் குரவை கோத்தவனை-தன்னுடைய ரஷணத்தைக் காட்டி என்னை அனன்யார்ஹனாக எழுதிக் கொண்டவனை – ரஷகன் என்று அறியப் பெற்றேன் –எனக்கு ஒரு குறை உண்டோ என்கிறார்- என்கிறார் நாலாம் பாசுரத்தில்) 4
பேய்த்தாயை முலையுண்ட பிள்ளைதன்னைப் பிணைமருப்பில் கருங்களிற்றைப்  பிணைமான்னோக்கின், ஆய்த்தாயர் தயிர்வெண்ணெ யமர்ந்தகோவை அந்தணர்தம் அமுதத்தைக் குரவைமுன்னே கோத்தானை, குடமாடு கூத்தன்றன்னைக் கோகுலங்கள் தளராமல் குன்றமேந்திக் காத்தானை, எம்மானைக் கண்டுகொண்டேன் கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே. –2-5-4
பதவுரை Show / Hide
தாய், Thaai - தாய்வடிவையெடுத்துக் கொண்டு கொல்லவந்த (- (கடி பொழில் சூழ் கடன் மல்லைத் தலசயனத்தே கண்டு கொண்டேன்-.))
பேயை, Peyai - பூதனையென்னும் பேய்ச்சியினுடைய
முலை, Mulai - (விஷந்தடவின) முலையை
உண்ட, Unda - உறிஞ்சியமுதுசெய்க
பிள்ளைதன்னை, Pillai Thannai - குமாரனும்,
பிணை மருப்பின் கரு களிற்றை, Pinai Maruppin Karu Kalittrai - இரண்டு கொம்பு முளைத்த கரிய யானைக்குட்டிபோல்  இனியவனும்,
மான் பிணை நோக்கின், Maan Pinai Nookkin - மான் பேடையின் நோக்குப் போன்ற நோக்கையுடைய
ஆய் தாயர், Aai Thaayar - இடைத்தாயரான யசோதையினுடைய
தயிர் வெண்ணெய், Thayir Vennai - தயிரிலும் வெண்ணெயிலும்
அமர்ந்த, Amarntha - ஊன்றியிருந்த
கோவை, Kovai - ஸ்வாமியும்,
அந்தணர் தம் அமுதத்தை, Andhanar Tham Amudhatthai - வைதிகர்களுக்குப் பரம யோக்யனும்,
முன்னே, Munnai - முன்பொருகால்
குரவை கோத்தானை, Kuravai Koththaanai - இடைப்பெண்களோடு ராஸக்ரிடை செய்தவனும்
குடம் ஆடு கூத்தன் தன்னை, Kudam Aadu Kooththan Thannai - குடக்கூத்தாடினவனும்
கோகுலங்கள் தளராமல், Kokulangal Thalaramal - (இந்திரன் பெய்வித்த பெருமழையினால்) பசுங்கூட்டங்கள்  வருந்தாதபடி
குன்றம் ஏந்தி, Kundram Aendhi - கோவர்த்தன மலையைக் குடையாக ஏந்தி
காத்தானை, Kaathaanai - ரக்ஷித்தவனுமான
எம்மானை, Emmaanai - எம்பெருமானை
1092பெரிய திருமொழி || (2-5–பாராயது) (திருகடல்மல்லை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நிலவறையிலே பிரவேசிப்பித்து நலிய வேணும் என்று –பதிபடை கிடந்த மல்லர் முடிந்து போம் படி சீறினவனை- அந்த க்ருத்ரிமத்தைத் தப்பி என்னை எழுதிக் கொண்டவனை காணப் பெற்றேன் என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்) 5
பாய்ந்தானைத் திரிசகடம் பாறிவீழப் பாலகனா யாலிலையில் பள்ளியின்பம் ஏய்ந்தானை, இலங்கொளிசேர் மணிக்குன்றன்ன ஈரிரண்டு மால்வரைத்தோ ளெம்மான்றன்னை, தோய்ந்தானை நிலமகள்தோள் தூதிற்சென்றப் பொய்யறைவாய்ப் புகப்பெய்த மல்லர்மங்கக் காய்த்தானை, எம்மானைக் கண்டுகொண்டேன் கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே. –2-5-5
பதவுரை Show / Hide
திரி சகடம், Thiri Sakadam - உருளுகிற சகடமானது (- (கடிபொழில் சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே கண்டுகொண்டேன்-.))
பாறி, Paari - சின்னபின்னமாகச் சிதறி
வீழ, Veela - விழும்படி
பாய்ந்தானை, Paayndhaanai - திருவடியாலுதைத்தவனும்
பாலகன் ஆய், Paalagan Aay - சிறுபிள்ளையாய்
ஆல் இலையில், Aal Ilaiyil - ஆலந்தளிரிலே
பள்ளி இன்பம் ஏய்ந்தானை, Palli Inbam Aeyndhaanai - திருக்கண்வளர்தலாகிற ஸுகத்தை அநுபவித்தவனும்
இலங்கு ஒளி சேர், Ilangu Oli Seer - மிக்க ஒளியை யுடைத்தான
மணி குன்று அன்ன, Mani Kunru Anna - ரத்னமயமான பர்வதம் போன்றவனும்
மால் வரை, Maal Varai - பெரிய மலைபோன்ற
ஈர் இரண்டு தோள் எம்மான் தன்னை, Eer Irandu Thol Emmaan Thannai - நான்கு திருத்தோள்களையுடைய ஸ்வாமியானவனும்
நிலம் மகள் தோள் தோய்ந்தானை, Nilam Magal Thol Thoyndhaanai - பூமிப்பிராட்டியின் தோளோடே அணைந்தவனும்
தூதின் சென்று, Thoodhin Sendru - (பாண்டவர்களுக்குத்) தூது செய்யுந் தொழிலுடனே (துரியோதனனிடம்) எழுந்தருளி
பொய் அவ் அறை வாய்புக பெய்த, Poi Av Arrai Vaaypuka Peytha - (அத்துரியோதனன்) க்ருத்ரிமமாகச் செய்துவைத்த அந்த நிலவறையி  னுள்ளே நிறுத்தப்பட்டிருந்த
மல்லர், Mallaar - மல்லர்கள்
மங்க, Manga - முடியும்படி
காய்ந்தானை, Kaayndhaanai - சீற்றங்காண்டவனுமான
எம்மானை, Emmaanai - எம்பெருமானை
1093பெரிய திருமொழி || (2-5–பாராயது) (திருகடல்மல்லை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பரப்பை உடைத்தான பூமியைத் திரு எயிற்றாலே கிழியும் படி இடந்தவனை –உடம்பு நோவ வ்யாபரித்த படி சொல்லுகிறது – பூமி அந்தரிஷ்யாதிகள் போராதபடி யாக வளர்ந்து லோகத்தை அளந்து கொண்டவனை – எல்லார் தலையிலும் திருவடிகளை வைத்த நீர்மையாலே என்னை எழுதிக் கொண்டவனை – அவன் தானே திருவடிகளை கொண்டு வந்த வைத்த அன்று தப்பின நான் இன்று இங்கே காணப் பெற்றேன் என்கிறார் – ஆறாம் பாசுரத்தில்) 6
கிடந்தானைத் தடங்கடலுள் பணங்கள்மேவிக் கிளர்ப்பொறிய மறிதிரிய வதனின்பின்னே படர்ந்தானைப், படுமதத்த களிற்றின்கொம்பு பறித்தானைப் பாரிடத்தை எயிறுகீற இடந்தானை, வளைமருப்பி னேனமாகி இருநிலனும் பெருவிசும்பு மெய்தாவண்ணம் கடந்தானை, எம்மானைக் கண்டுகொண்டேன் கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே. –2-5-6
பதவுரை Show / Hide
தடகடலுள், Thadakadalu - விசாலமான திருப்பாற் கடலிலே
பணங்கள் மேவி, Panangal Mevi - (திருவனந்தாழ்வானது) படங்களின் கீழே பொருந்தி
கிடந்தானை, Kidandhaanai - பள்ளி கொள்பவனும்,
கிளர் பொறிய, Kilar Poriy - கிளர்ந்த பலவகைப் புள்ளிகளையுடைய
மறி, Mari - (மாரிசனென்னும்) மாயாமிருகம்
திரிய, Thiriya - (எதிரே வந்து) ஸஞ்சரீக்க
அதனின் பின்னே படர்ந்தானை, Adanin Pinne Padarnthaanai - அதன் பின்னால் தொடர்ந்து சென்றவனும்
படு மதத்த களிற்றின், Padu Mathath Kalittrin - ஒழுகுகின்ற மதநீரையுடைய (குவலயாபீடமென்னும்)
கொம்பு பறித்தானை, Kombu Pariththaanai - தந்தங்களை முறித்து அவ்யானையை முடித்தவனும்
வளை மருப்பின் ஏனம் ஆகி, Valai Maruppin Yenam Aagi - வளைந்த கோரப்பற்களையுடைய வராஹ ரூபியாகி
பார் இடத்தை, Paar Idaththai - விசாலமான பூமியை
எயிறு கீற இடந்தானை, Eiyiru Keera Idanthanai - பற்களாலே கொத்தி (அண்டபித்தியில் நின்றும்) ஒட்டு விடுவித்தெடுத்தவனும்
இரு நிலனும், Iru Nilanum - விசாலமான இந்நிலவுலகும்
பெரு விசும்பும், Peru Visumbum - பெரிய மேலுலகங்களும்
எய்தா வண்ணம், Eidha Vannam - திருவடிகளுக்குப் போராதென்னும்படி (மிக வளர்ந்து)
கடந்தானை, Kadandhaanai - உலகளந்தவனுமான
எம்மானை, Emmaanai - எம்பெருமானை
1094பெரிய திருமொழி || (2-5–பாராயது) (திருகடல்மல்லை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவள் முலை கொடா விடில் தரியாதாளாய் கொடுத்தால் போலே தானும் முலை உண்ணா விடில் தரியாதானாய் செவ்வியாருக்கு தான் செவ்வியனாய் பரிமாறும்படியும் துஷ்டர்க்குத் தானும் அப்படி இருக்கும் படியும் காண வேணும் என்று தட்டித் திரிகிற நான் பசித்தவன் ஜீவிக்கப் பெற்ரார் போலே காணப் பெற்றேன் – சாஸ்தரங்களிலே கேட்டு-ஒரு தேச விசேஷத்தால் சென்றால் காண இருக்கை அன்றிக்கே விடாய்த்த இந்நிலத்திலே காணப் பெற்றேன்-என்கிறார் ஏழாம் பாசுரத்தில்) 7
பேணாத வலியரக்கர் மெலியவன்று பெருவரைத்தோ ளிறநெரித்தன் றவுணர்க்கோனை, பூணாகம் பிளவெடுத்த போர்வல்லோனைப் பொருகடலுள் துயிலமர்ந்த புள்ளூர்தியை ஊணாகப் பேய்முலைநஞ் சுண்டான் தன்னை உள்ளுவா ருள்ளத்தே யுறைகின்றானை, காணாது திரிதருவேன் கண்டுகொண்டேன் கடிபொழில்சூழ் கடன்மல்லைத் தலசயனத்தே. –2-5-7
பதவுரை Show / Hide
அன்று, Andru - முன்னொரு காலத்தில், (- (அவ்வரக்கர்களுடைய) (இன்று) (கடி பொழில் சூழ் கடன்மல்லைத்தலசயனத்தே கண்டுகொண்டேன்-.))
பேணாத, Penaadha - (தன்னை ஸர்வேச்வரனாக) மதியாத
வலி அரக்கர், Vali Arakkar - மிடுக்கையுடைய ராக்ஷர்கள்
மெலிய, Meliya - ஒழியும்படி
பெரு வரை தோள் இற நெரித்து, Peru Varai Thol Ir Neriththu - பெரிய மலைபோன்ற தோள்கள் முறியும்படி அழித்தவனும்,
அன்று, Andru - பிரஹ்லாதன் துன்பப்பட்ட அக்காலத்து
அவுணர் கோனை, Avunaar Konai - அசுரர் தலைவனான இரணியனுடைய
பூண் ஆகம் பிளவு எடுத்த, Poon Aagam Pilavu Edutha - ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த மார்வைப் பிளந்தொழிந்தவனும்
போர் வல்லோனை, Por Vallonai - யுத்தத்தில்; ஸமர்த்வனானவலனும்
பொரு கடலுள் துயில் அமர்ந்த, Poru Kadalul Thuyil Amarntha - அலை யெறிகின்ற திருப்பாற் கடலிலே திருக்கண்  வளர்ந்தருள்பவனும்
புள் ஊர்தியை, Pul Oorthiyai - கருடப் பறவையை வாஹனமாக வுடையவனும்
பேய் முலை நஞ்சு, Pei Mulai Nanju - பூதனையின் முலையில் தடவியிருந்த விஷத்தை
ஊண் ஆக உண்டான் தன்னை, Oon Aaga Undaan Thannai - உணவாகக் கொண்டு அமுது செய்தவனும்
உள்ளுவார் உள்ளத்தே உறைகின்றானை, Ulluvaar Ullaththae Uraikindraanai - தன்னைச் சிந்திப்பவர்களின் நெஞ்சிலே நித்யவாஸம் செய்பவனுமான எம்பெருமானை
காணாது திரி தருவேன், Kaanadhu Thiri Tharuven - (வெகு காலமாக) ஸேவியாமல் அலைந்து கொண்டிருந்த அடியேன்
1095பெரிய திருமொழி || (2-5–பாராயது) (திருகடல்மல்லை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ வைகுண்டத்திலே நித்ய சூரிகள் பரிய இருக்கிறவன் இங்கே வந்து சாய்ந்து அருளுவதே – இது என்ன நீர்மை -என்று எப்போதும் எண்ணப் படுமவன் படபாமுகாக்னி நிறைந்தால் போலே காண வேணும் என்று உறாவிப் பட்டினி விட்ட கண்களின் உடைய உறாவுதல் தீர காணப் பெற்றேன் –என்கிறார் எட்டாம் பாசுரத்தில்) 8
பெண்ணாகி யின்னமுதம் வஞ்சித்தானைப் பிறையெயிற்றன் றடலரியாய்ப் பெருகினானை, தண்ணார்ந்த வார்ப்புனல்சூழ் மெய்யமென்னும் தடவரைமேல் கிடந்தானைப் பணங்கள்மேவி, என்ணானை யெண்ணிறந்த புகழினானை இலங்கொளிசே ரரவிந்தம் போன்றுநீண்ட கண்ணானை, கண்ணாரக் கண்டுகொண்டேன் கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே. –2-5-8
பதவுரை Show / Hide
பெண் ஆகி, Pen Aagi - மோஹினி யுருவமெடுத்து (- (கடி பொழில் சூழ் கடன்மல்லைத் தலசயனத்தே கண் ஆரக் கண்டுகொண்டேன்-.))
இன் அமுதம் வஞ்சித்தானை, In Amudham Vanchiththaanai - இனிய அமிருத்தை (அசுரர்கள் புஜிக்கவொண்ணாதபடி) வஞ்சித்தவனும்
அன்று, Andru - முன்பொரு காலத்தில்
பிறை எயிறு, Pirai Eiyiru - சந்திரனை யொத்த பற்களையுடைய
அடல் அரிஆய், Adal Ariyaai - பலசாலியான நரஸிம்ஹமுர்த்தியாய்
பெருகினானை,, Peruginanai - வளர்ந்தவனும்,
தண் ஆர்ந்த வார் புனல் சூழ், Than Aarntha Vaar Punal Soozh - குளிர்த்தி பொருந்திப் பெருகுகின்ற ஜலத்தாலே சூழப்பட்ட
மெய்யம் என்னும், Meiyyam Ennum - திருமெய்யமென்கிற
தடவரைமேல், Thadavarai Mel - பெரிய திருமலையின்மீது
பணங்கள் மேவி கிடந்தானை, Panangal Mevi Kidandhaanai - (திருவனந்தாழ்வானுடைய) படங்களின் கீழே பொருந்திப் பள்ளி கொண்டிருப்பவனும்
எண்ணானை, Ennaanai - (யோகிகளால்) சிந்திக்கப்படுமவனும்
எண் இறந்த புகழினானை, En Irandha Pugazhinaanai - கணக்கில்லாத கீர்த்திகளையுடையவனும்
இலங்கு ஒளி சேர் அரவிந்தம் போன்று நீண்ட கண்ணானை, Ilangu Oli Ser Aravindham Poonru Neenda Kannaanai - மிக்க ஒளியையுடைய தாமரையிதழ்போலே நீண்ட திருக்கண்களையுடையவனுமான எம்பெருமானை
1096பெரிய திருமொழி || (2-5–பாராயது) (திருகடல்மல்லை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சாஸ்த்ரீய ஜ்ஞானத்தாலே தன்னை ப்ராபிக்கைக்கு ஈடான வழியைக் கண்டு வைத்தவனை – அப்பெரு வழியான சாஸ்திர ஜ்ஞானத்தாலே அன்றிக்கே இக் கண்ணாலே காணப் பெற்றேன் – என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்) 9
தொண்டாயர் தாம்பரவு மடியினானைப் படிகடந்த தாளாளற் காளாயுய்தல் விண்டானை, தென்னிலங்கை யரக்கர்வேந்தை விலங்குண்ண வலங்கைவாய்ச் சரங்களாண்டு, பண்டாய வேதங்கள் நான்கும்ஐந்து வேள்விகளும் கேள்வியோ டங்கமாறும் கண்டானை, தொண்டனேன் கண்டுகொண்டேன் கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே. –2-5-9
பதவுரை Show / Hide
தொண்டு ஆயார் தாம், Thondu Aayaar Thaam - அடிமைப்பட்டவர்கள் (- (கடி பொழில் சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே கண்டுகொண்டேன்.))
பரவும், Paravum - துதிக்கப்பெற்ற
அடியினானை, Adiyinanae - திருவடிகளை யுடையவனும்,
படி கடந்த தாள் ஆளற்கு ஆள் ஆய் உய்தல் விண்டானை தென் இலங்கை அரக்கர் வேந்தை, Padi Kadanda Thaal Aalarku Aal Aayi Uythal Vintaanai Then Ilangai Arakkar Vendai - பூமியை யளந்த திருவடிகளை யுடையனான தனக்கு ஆட்பட்டு உஜ்ஜீவிப்பது தவிர்ந்தவனான இராவணனை
விலங்கு உண்ண, Vilangu Unna - மிருகங்கள் தின்னும்படி
வலம் கைவாய், Valam Kaivai - வலத்திருக்கையாலே
சரங்கள் ஆண்டு, Sarangkal Aandu - அம்புகளைப்பிரயோகித்தவனும்,
பண்டு ஆய, Pandhu Aaya - நித்யமான
நான்கு வேதங்களும், Naanthu Vedhangalum - நாலு வேதங்களையும்
ஐந்து வேள்விகளும், Ainthu Velvikalum - பஞ்சமஹா யஜ்ஞங்களையும்
கேள்வியோடு, Kelviyodu - ஸ்மிருதிகளையும்
அங்கம் ஆறும், Angam Aarum - ஆறு அங்கங்களையும் (பிரவர்த்திப்பித்தவனுமான எம்பெருமானை
தொண்டனேன், Thondanaen - அடியேன்
1097பெரிய திருமொழி || (2-5–பாராயது) (திருகடல்மல்லை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சர்வாதிகனான புண்டரீகாஷன் என்று தோற்றும் படி கண் வளர்ந்து அருளினவனை ஆயிற்று கவி பாடிற்று – இப்பத்தையும் அப்யசிக்க வல்லார்கள் –ப்ராக்தமான கர்மங்களை தாங்களே வாசனையோடு போக்க வல்லார் ஆவார்கள் பாபங்களை கூடு பூரித்துக் கொள்ளும் இத்தனை போக்கி எலி எலும்பனான இவனால் இது போக்கிக் கொள்ளலாம் என்றால் -இது கூடுமோ என்னில் –அதில் ஒரு தட்டு இல்லை இது த்ருடம் -என்கிறார் பத்தாம் பாசுரத்தில்) 10
படநாகத் தணைக்கிடந்தன் றவுணர்கோனைப் படவெகுண்டு மருதிடைப்போய்ப் பழனவேலி, தடமார்ந்த கடல்மல்லைத் தலசயனத்துத் தாமரைக்கண் துயிலமர்ந்த தலைவன்தன்னை, கடமாரும் கருங்களிறு வல்லான்வெல்போர்க் கலிகன்றி யொலிசெய்த இன்பப்பாடல், திடமாக விவையைந்து மைந்தும்வல்லார் தீவினையை முதலரிய வல்லார்தாமெ. –2-5-10
பதவுரை Show / Hide
படம் நாகம் அணை கிடந்து, Padam Naagam Anai Kidandhu - படங்களையுடைய சேஷசயனத்திலே பள்ளிகொள்பவனும்
அன்று, Andru - முன்பொருகால்
அவுணர் கோனை படவெகுண்டு, Avaunar Konai Padavegundhu - அசுரர் தலைவனான இரணியனை முடியும்படி சீறினவனும்
மருது இடை போய், Maruthu Idai Poi - இரட்டை மருதமரங்களின் நடுவே தவழ்ந்து சென்றவனும்
பழனம் வேலி, Pazhanam Veli - நீர் நிலங்களைச் சுற்றிலுமுடைத்தாய்
தடம் ஆர்ந்த, Thadam Aarntha - தடாகங்கள் நிறையப்பெற்றதான
கடல்மல்லை தலசயனத்து, Kadalmallai Thalasayanaththu - திருக்கடல்மல்லையிலே
தாமரை கண்துயில் அமர்ந்த, Thamarai Kanthuyil Amarntha - தாமரைபோன்ற திருக்கண்கள் துயில்கொண்டிராநின்ற
தலைவர் தம்மை, Thalaivar Thammai - ஸ்வாமியுமான தலசயனத்துறைவாரைப் பற்றி,
கடம் ஆரும் கருகளிறு வல்லான், Kadham Aarum Karugaliru Vallan - மதம்மிக்க பெரிய யானையை நடத்தவல்லவரும்
போர் வெல், Por Vel - யுத்தத்திலே வெற்றி பெறுமவருமான
கலிகன்றி, Kalikanri - திருமங்கையாழ்வார்
ஒலிசெய்த, Oliseitha - அருளிச்செய்த
இன்பம், Inbam - இன்பம் விளைக்கவல்ல
இவை ஐந்து ஐந்து பாடலும், Ivai Ainthu Ainthu Paadalum - இப்பத்துப் பாசுரங்களையும்
திடம் ஆக, Thidam Aaga - உறுதியாக
வல்லார் தாம், Vallaar Thaam - ஓதவல்லவர்கள்
தீவினையை, Theevinaiyai - பாவங்களை
முதல் அரிய வல்லார், Muthal Ariya Vallaar - வேரறுக்க வல்லவராவர்கள்.