திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3-1 இருந்தண் (10 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1148பெரிய திருமொழி || (3-1–இருந்தண்) (திருவயிந்திரபுரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஷட்பத நிஷ்டரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஸ்ரீ தெய்வ நாயகன் திருவடி தாமரைகளில் தேனைக் குறைவற உண்டு ஆசையாலே ஸ்ரீ நித்யசூரி பரிஷத் கதனான வாசுதேவ தருவின் பாதமலரில் தேனை புஜிக்க கோலி சஞ்சரித்து கொண்டு இருப்பார்கள் என்று ஸ்வாபதேசம்) 1
இரும் தண் மாநிலம் ஏனமதாய் வளை மருப்பினில் அகத்தொடுக்கி கருந்தண் மா கடல் கண் துயின்றவன் இடம் கமல நன் மலர்த் தேறல் அருந்த இன்னிசை முரன்று எழும் அளி குலம் பொதுளி அம் பொழிலூடே செருந்தி நாண் மலர் சென்று அணைந்து உழி தரு திருவயிந்திரபுரமே –3-1-1
பதவுரை Show / Hide
இரு தண் மா நிலம், Iru Than Maa Nilam - மிகக் குளிர்ந்த பெரிய பூமியை
ஏனம் அது ஆய்வளை மருப்பு அகத்தினில் ஒடுக்கி, Enam Athu Aayvalai Maruppu Agathinil Odudki - வராஹ ரூபியாய் வளைந்த கோரப் பற்களினிடத்தே அடக்கினவனாயும்,
கரு தண் மா கடல் கண்  துயின்றவன், Karun Than Maa Kadal Kan Thuyinravan - கறுத்துக் குளிர்ந்து பெருத்த கடலில் யோக நித்திரை  செய்தருள்பவனாயுமுள்ள எம்பெருமானுக்கு
இடம், Idam - வாழுமிடம் (எதுவென்றால்)
அம் பொழிலூடே, Am Pozhilude - அழகிய சோலைகளினுள்ளே
நல் கமலம் மலர்தேறல் அருந்தி, Nal Kamalam Malartheeral Arundhi - நல்ல தாமரைப்பூவின் தேனைக் குடித்து
இன் இசை முரன்று எழும், In Isai Murandru Ezhum - இனிய ராகங்களைப் பாடிக்கொண்டு கூத்தாடா நிற்கிற
அணி குலம் பொதுனி, Ani Kulam Podhuni - வண்டுகளின் கூட்டங்கள் நெருங்கி
செருந்தி நாள் மலர்சென்று அணைந்து உழிதரு, Serundhi Naal Malarsendru Anaindhu Uzitharu - சுரபுண்ணை மரத்தினுடைய அப்போதலர்ந்த பூவிலே போய்ச் சேர்ந்து ஸஞ்சரிக்கப்பெற்ற
திரு அயிந்திரபுரம், Thiru Ayindhirapuram - திருவஹீந்த்ரபுரமாம்.
1149பெரிய திருமொழி || (3-1–இருந்தண்) (திருவயிந்திரபுரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ சர்வேஸ்வர லஷணம் ஆகிறது – ஸ்ரீ திரு ஆழியைக் கையிலே சலியாதே பிடித்தல்-ஸ்ரீ லஷ்மீ பதியாதல் வேதைக சமிதிகன் ஆதல்-இவை ஆயிற்று இவை மூன்றும் இங்கே உண்டு- ஸ்ரீ பிராட்டியும் தானுமான சேர்த்தியிலே பிரணய கலஹம் மாறாதே செல்லுமா போலே ஆயிற்று அங்குத்தை திர்யக்குகள் உடைய யாத்ரையும் – பாடப் பகை தீரும் -எனபது இறே-பேதை நெஞ்சற பாடும் பாட்டால் பகை தீர்ந்ததே) 2
மின்னும் ஆழி அம் கையவன் செய்யவள் உறை தரு திரு மார்பன் பன்னு நான்மறைப் பல் பொருளாகிய பரனிடம் வரைச் சாரல் பின்னும் மாதவிப் பந்தலில் பேடை வரப்பிணியவிழ் கமலத்து தென்ன வென்று வண்டு இன்னிசை முரல் தரு திருவயிந்தபுரமே –3-1-2
பதவுரை Show / Hide
மின்னும் ஆழி அம் கையவன், Minnum Aazhi Am Kaiyavan - ஜ்வலிக்கின்ற திருவாழியை அழகிய திருக்கையிலே உடையவனும் (- (திரு அயிந்திரபுரம்-.))
செய்பவள் உறைததரு திருமார்வன், Seipaval Uraithatharu Thirumaarvan - பிராட்டி நித்யவாஸம் பண்ணுகிற திருமார்வையுடையவனும்
பன்னு நால் மறை பல் பொருள் ஆகிய பரன் இடம், Pannu Naal Marai Pal Porul Aagiya Paran Idam - ஓதப்பட்டு வருகிற நான்கு வேதங்களின் பலவகைப் பொருள்களும் தானேயாயிருப்பவனுமான பரம புருஷனுக்கு வாழுமிடம் (எதுவென்றால்)
வண்டு, Vandu - வண்டுகளானவை
வரை சாரல், Varai Saaral - மலைப் பக்கங்களில்
பின்னும் மாதவி பந்தலில் பெடை வர, Pinnum Maadhavi Panthalil Pedai Vara - நெருங்கி யிருக்கின்ற குருக்கத்திப் பந்தலில் நின்றும் தம் பேடைகள் (பெண் வண்டுகள்) தம்மிடம் வந்து சேர்வதற்காக
பிண அவிழ் கமலத்து தென்ன என்று இன் இசை முரல்தரு, Pin Avizh Kamalaththu Then Enru In Isai Muraltharu - கட்டு அவிழ்கிற தாமரைப்பூவிலே இருந்துகொண்டு தென்னா தெனாவென்று இனிய இசைகளைப் பாடா நிற்கப்பெற்ற
1150பெரிய திருமொழி || (3-1–இருந்தண்) (திருவயிந்திரபுரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (காதாசித்கமாக லோகத்துக்கு வந்த பிரளயத்தை பரிஹரித்தாப் போலே அன்றிக்கே தன்னை நித்ய அனுபவம் பண்ண வேணும் என்று இருப்பார்க்கு-அதுக்கு ஒரு ஷணம் விச்சேதம் வருகையாவது நித்ய பிரளயம் இறே தனக்கு அசாதாரணமாய் இருப்பார்க்கு தன் படிகளை எல்லாம் இவனுக்கு உள்ளது இவ்வளவு என்று பரிசேதித்து அனுபவிக்கலாம் படி வெளி இட்டுக் கொண்டு நிற்கிற-ஸ்ரீ தெய்வ நாயகனிடம்- ஸ்ரீ நித்ய சூரிகளுக்கு தன் படிகள் எல்லாம் அனுபவிக்கலாம் படி கொடுத்துக் கொண்டு இருக்குமா போலே இங்கு உள்ள ஆஸ்ரிதர்க்கும் தன்னை அனுபவிக்கலாம் படி கொடுத்துக் கொண்டு நிற்கிற விடம் – அகடிகடதங்களை கடிப்பித்தும் அவன் ஆஸ்ரித ரஷணம் பண்ணுமா போலே விருத்தமான தேசத்தில் அவை இரண்டையும் சம காலத்தில் கிட்டி அனுபவிக்கலாம் தேசம் ஆயிற்று குறிஞ்சி நிலமான மலை சாரலிலே முல்லை நிலமும் மருத நிலமும் இருந்தது போலே) 3
வையம் ஏழும் உண்டு ஆலிலை வைகிய மாயவன் அடியவர்க்கு மெய்யனாகிய தெய்வ நாயகனிடம் மெய்தகு வரைச் சாரல் மொய்கொள் மாதவி செண்பகம் முயங்கிய முல்லை யம் கொடி யாட செய்ய தாமரைச் செழும் பணை திகழ் தரு திருவயிந்திரபுரமே –3-1-3
பதவுரை Show / Hide
வையம் ஏழும் உண்டு, Vaiyam Ezhum Undu - (பிரளய காலத்தில்) (- (திருஅயிந்திபுரம்-.))
ஆவிலை வைகிய மாயவன், Aavilai Vaikiyamaayavan - ஆலந்தளரிலே போதுபோக்கின ஆச்சர்யபூதனும்,
அடியவர்க்கு மெய்யன் ஆகிய, Adiyavarkku Meyyan Aagiya - தன்னை யடிபணந்தவர்கட்கு உண்மையாக வேலை ஸாதிக்குமவனுமான
தெய்வநாயகன் இடம், Deivanaayakan Idam - தெய்வநாயகப் பெருமானுக்கு உறைவிடம்:
மெய் தருவரை சாரல், Mei Tharuvarai Saaral - அப்பெருமானுடைய திரு மேனியோடொத்த நிறத்ததான மலையின் அருகில்
மொய்கொள் மாதவி செண்பகம் முயங்கிய, Moykol Maadhavi Senbagam Muyangiya - நெருங்கிய குறுக்கத்திச் செடிகளோடும் செய்பக மரங்களோடும் தழுவிய
முல்லை அம்கொடி ஆட, Mullai Amkodi Aada - அழகிய முல்லைக்கொடிகள் அசையாநிற்கப் பெற்றதும்
செய்ய தாமரை செழு பணை திகழ்தரு, Seyya Thaamarai Sezhu Panai Thigaztharu - செந்தாமரைபூக்கள் செழத்து வளர்கின்ற  வயல்கள் விளங்கப் பெற்றதுமான
1151பெரிய திருமொழி || (3-1–இருந்தண்) (திருவயிந்திரபுரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பெற்ற தமப்பன் பகையா அவனில் அண்ணிய உறவாய் உதவினவன் தனக்கு தன்னில்-அண்ணிய உறவு இல்லை இறே – புறம்பு –இப்படி இருக்கிற தானும் -ஆத்மைவ ரிபு ராதமான -என்கிறபடி தனக்குத் தானே பகையாய் தன்னை முடிக்கப் பார்த்த வன்று – உன்னை உன் கையில் காட்டித் தாரேன் -என்று நோக்குகைக்காக வந்து நிற்கிற விடம் – வ்யாபாரித்த போது ஹிரண்யன் உடைய ருதிர வெள்ளத்தாலே பார்த்த பார்த்த இடம் எங்கும் சேறு செய்தாற் போலே கரும்புகள் ஒன்றோடு ஓன்று நெருங்கி பிரவஹித்த சாற்று வெள்ளத்தாலே பூமி எல்லாம் சேறாய்க் கிடக்கும் ஆயிற்று) 4
மாறு கொண்டு உடன்று எதிர்ந்த வல்லவுணன் தன் மார்பகம் இரு பிளவா கூறு கொண்டு அவன் குல மகற்கு இன்னருள் கொடுத்தவனிடம் மிடைந்து சாறு கொண்ட மென் கரும்பு இளங்கழை தகை விசும்புற மணி நீழல் சேறு கொண்ட தண் பழனமது எழில் திகழ திருவயிந்தபுரமே –3-1-4
பதவுரை Show / Hide
அவன் குலம் மகற்கு இன் அருள்  கொடுத்தவன் இடம், Avan Kulam Makarku In Arul Koduthavan Idam - அவளது சிறந்த மகனான ப்ரஹ்லாதாழ்வானுக்கு நல்ல க்ருபை பண்ணின பெருமான் வாழுமிடமாவது; (- (திரு அயிந்திரபுரம்-.))
மிடைந்து, Midaindhu - ஒன்றோடொன்று நெருங்கி
சாறுகொண்ட, Saarukondha - ரஸமயமா யிருக்கிற
மெல் கரும்பு இள கழை, Mel Karumbu Ila Kazhai - மெல்லிய கரும்பின் இளந்தடிகளானவை
தகை விசும்பு உற, Thakai Visumbu Ura - (தங்களை விம்மி வளரவொட்டாமல்) தடை  செய்கின்ற ஆகாசத்தைக் கிட்டி    வளர்ந்திருப்பதனால்
மணி நீழல், Mani Neezhal - அழகிய நிழலையுடையதும்
சேறுகொண்ட தண் பழனமது எழில் திகழ், Searukondha Than Pazhanamathu Ezhil Thigazh - (கருப்பஞ் சாற்று வெள்ளத்தினால்) சேற்றையுடைத்தாய் குளிர்ந்த நீர்நிலங்களின் அழகு விளங்கப் பெற்றதுமான
1152பெரிய திருமொழி || (3-1–இருந்தண்) (திருவயிந்திரபுரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (மகா பலி தானம் பண்ணா நின்றான் என்று கேட்டவாறே அவனுடைய யஞ்ஞவாடத்திலே தன்னை அர்த்தியாக்கிச் சென்று அவன் கையில் நீர் தன் கையில் விழுந்த அநந்தரம் அவ்விடம் தன்னிலே நின்றே பூமிப் பரப்பு அடைய அளந்து கொண்டு – இடையர் பூத்த கொடி போலே இருக்கிற ஸ்ரீ நப்பின்னை பிராட்டிக்காக உபன்னம் தேட்டமான பருவம் ஆயிற்று பதிசம்யோக சுலபம் வய -என்கிறபடியே ஒரு கொள் கொம்பிலே கூட்டில் கிடக்குமவளாய்- இல்லையாகில் தர்மி லோபம் பிறக்குமவளாய் இருக்கை இனம் இனமான ருஷபங்களோடே பொருதவன் உடைய ஸ்ரீ ஸ்தானம்) 5
ஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று அகலிடம் அளந்து ஆயர் பூங்கொடிக்கு இனவிடை பொருதவனிடம் பொன் மலர் திகழ் வேங்கை கொங்கு செண்பகக் கொம்பினில் குதி கொடு குரக்கினம் இரைத்தோடி தேன் கலந்த தண் பலங்கனி நுகர் தரு திருவயிந்திரபுரமே –3-1-5
பதவுரை Show / Hide
மாவலி வேள்வியில் சென்று இரந்து, Maavali Velviyil Sendru Irandhu - மஹாபலியின் யாக பூமியிலே        (மாணியுருவாகிச்) சென்று (மூவடிமண்) யாசித்துப் பெற்று (- (திரு அயிந்திபுரம்-.))
ஆங்கு, Aangu - அவ்விடத்திலேயே
அகல் இடம் அளந்து, Akal Idam Alandhu - பரந்த உலகம் முழுவதையும் அளந்து கொணடவனும்
ஆயர் பூங்கொடிக்கு, Aayar Poongodikku - அழகிய இடைப்பெண்ணான நப்பின்னைப் பிராட்டிக்காக
இனம் விடை, Inam Vidai - ஓரினமான ஏழு ரிஷபங்களையும்
பொருதவன் இடம், Poruthavan Idam - போர்செய்து முடித்த பெருமானுறையும் இடமாவது;
குரங்கு இனம், Kurangu Inam - குரங்குகளின் கூட்டமானது,
பொன்மலர்திகழ், Ponmalar Thigazh - பொன்னிறமான மலர்கள் விளங்காநின்ற
வேங்கை கோங்கு செண்பகம் கொம்பினில், Vengai Kongu Senbagam Kombinil - வேங்கைமரம், கோங்குமரம்,            செண்பக மரம் என்பனவற்றின்  கொம்புகளிலே
குதிகொடு இரைத்து ஓடி, Kudikodu Iraithu Odi - குதித்தல் செய்துகொண்டும் பெரிய ஆரவாரங்கள்   செய்துகொண்டும் இங்குமிங்கும் ஓடிக்கொண்டும்
தேன் கலந்த தண்பலங்கனி நுகரிதரு, Then Kalanda Thanpalangani Nukaritharu - தேன் மிக்க சிறந்த பலாப்பழங்களை               உட்கொள்ளப்பெற்ற
1153பெரிய திருமொழி || (3-1–இருந்தண்) (திருவயிந்திரபுரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஒக்கத்தை உடைய பெரிய மலைகளையும் பெரிய மதிள்களையும் சுற்றிலே உடைத்தாய் வண்டுகள் சஞ்சரியா நின்றுள்ள அழகிய பொழிலாலே சூழப்பட்ட ஸ்ரீ திருவயிந்திரபுரமே முன்பு -ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகனுக்கு ஸ்ரீ சித்ர கூடத்தையும் ஸ்ரீ தண்ட காரண்யத்தையும் விஸ்மரித்து வர்திக்கலாம் தேசம் ஆயிற்று) 6
கூனுலாவிய மடந்தை தன் கொடும் சொலின் திறத்து இளங் கொடியோடும் கானுலாவிய கருமுகில் திரு நிறத்தவன் இடம் கவினாரும் வானுலாவிய மதி தவழ் மால்வரை மா மதிள் புடை சூழ தேனுலாவிய செழும் பொழில் தழுவிய திருவயிந்திரபுரமே –3-1-6
பதவுரை Show / Hide
கூன் உலாவிய மடந்தைதன்  மடந்தைகள் கொடும் சொலின், Koon Ulaaviyam Madandhaithan Madandaigal Kodum Solin - கூனேறின மந்தரையென்னும் ஸ்திரியினுடைய கொடிய பேச்சுக்காக திறத்து (- (திரு அயிந்திபுரம்-;))
இளகொடியோடும் கான் உலாவிய, Ilakodiyodum Kaan Ulaaviyam - இளங்ககொடிபோன்ற பிராட்டியோடகூட    காட்டுக்கொழுந்தருளின
கருமுகில் திரு நிறத்தவன் இடம், Karumugil Thiru Niraththavan Idam - காளமேகம் போன்ற வடிவையுடைய பெருமானுக்கு இடமாவது;
கவின் ஆரும், Kavin Aarum - அழகு நிரம்பிய
வான் உலாவிய மதிதவழ் மால் வரை மாமதிள் புடை சூழ, Vaan Ulaaviyam Mathithavazhal Maal Varai Mamathil Pudai Soozh - ஆகாசத்தில் சஞ்சரிக்கின்ற சந்திரன் தவழப்பெற்ற பெரிய மலையும் பெரிய மதிளும் பக்கங்களில் சூழ்ந்திருக்கப்பெற்றதும்
தேன் உலாவிய செழு பொழில் தழுவிய, Then Ulaaviyam Sezhu Pozhil Thazhuviyam - வண்டுகள் ஸஞ்சரிக்கின்ற அழகிய சோலைகளால் சூழப்பட்டதுமான
1154பெரிய திருமொழி || (3-1–இருந்தண்) (திருவயிந்திரபுரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸூ வேல சைலமாய் -அதின் மேலே த்ரி கூடமாய் -அதின் மேலே படைவீடாய் இறே இருப்பது இப்படி ஒருவரால் அழிக்க ஒண்ணாத படை வீட்டுக்கு நான் ராஜா அல்லனோ என்று அபிமானித்து இருக்கிற பையலுடைய–தேவதைகள் உடைய வரங்களால் பூண் கட்டி இருக்கிற முடிகள் பத்தும் துகளாம்படி பண்ணின மிடுக்கனானவான் வர்த்திக்கிற ஸ்தானம்) 7
மின்னின் நுண் இடை மடக்கொடி காரணம் விலங்கலின் மிசை இலங்கை மன்னன் நீள் முடி பொடி செய்த மைந்தன் இடம் மணி வரை நீழல் அன்ன மா மலர் அரவிந்தத் தமளியில் பெடையொடும் இனிதமர செந்நெலார் கவரிக்குலை வீசு தண் திருவயிந்திரபுரமே –3-1-7
பதவுரை Show / Hide
மின்னின் நுண் இடை மடம், Minnin Nun Idai Madham - மின்போல் ஸூக்ஷ்மமான இடையையுடையவளும் மடமைக் குணம் வாய்ந்தவளும் (- (தண் திரு அயிந்திபுரம்-.))
கொடி காரணம், Kodi Kaaranam - கொடி போன்றவளுமான பிராட்டிக்காக,
விலங்கலின் மிசை இலங்கை மன்னன், Vilangalin Misai Ilangai Mannan - ஸூவேல மலையின் மீது அமைக்கப் பட்டிருந்த (ஸூரக்ஷிதமான) லங்கா புரிக்கு அரசனான இராவணனுடைய
நீள்முடி பொடி செய்த மைந்தனது இடம், Neelmutti Podi Seitha Maindhanathu Idam - பெரிய முடிகள் பத்தையும் பொடி படுத்தின மிடுக்கையுடைய பெருமானுக்கு இடமாவது;
மணி வரை நீழல், Mani Varai Neezhal - அழகிய மலையின் நிழலிலே
அன்னம் மா அரவிந்தம் மலர்அமளியில் பெடை யொடும் இனிது அமர, Annam Maa Aravindham Malararamalil Pedai Yodum Inidhu Amara - ஹம்ஸங்களானவை பெரிய தாமரைப் பூவாகிய படுக்கையில் தங்கள்  பேடைகளுடனே இனிதாகப் பொருந்தி வாழ்வதற்குப் பாங்காக
செந்நெல் ஆர்குலை கவரி வீசு, Sennel Aarkulai Kavari Veesu - செந்நெல் நிறைந்த குலை சாமரம் வீசப்பெற்ற
1155பெரிய திருமொழி || (3-1–இருந்தண்) (திருவயிந்திரபுரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்வ ரஷணத்தில் அந்வயம் இல்லாத பசுக்களுக்கும் இடையருக்குமாக மலையை எடுத்து மழையை பரிகரித்தான் ஆயிற்று – இந்த்ரன் வர்ஷிப்பிக்க பிற பாடராய் நோவு பட விட்டால் போலே ஆக ஒண்ணாது என்று ஏற்கவே நோவு படாமே நோக்குகைக்காக வந்து நித்யவாசம் பண்ணுகிற இடம் ஆயிற்று) 8
விரை கமழ்ந்த மென் கரும் குழல் காரணம் வில் இறுத்த அடல் மழைக்கு நிரை கலங்கிட வரை குடை எடுத்தவன் நிலவிய இடம் தடமார் வரை வளம் திகழ மதகரி மருப்பொடு மலைவளர் அகில் உந்தித் திரை கொணர்ந்து அணை செழு நதி வயல் புகு திருவயிந்திரபுரமே –3-1-8
பதவுரை Show / Hide
விரை கமழ்ந்தமென் கருங்குழல் காரணம் வில் இறுத்து, Virai Kamazhnthamen Karunguzhal Kaaranam Vil Iruththu - பரிமளம் வீசுகின்ற மெல்லிய கறுத்த கூந்தலையுடையளான பிராட்டிக்காக வில்லை முறித்தவனும், (- (திரு அயிந்திரபுரம்-.))
அடல் மழைக்கு நிறை கலங்கிட, Adal Mazhaikku Nirai Kalangida - அஸஹ்யமான பெருமழை வந்தபோது ஆநிரைகள் பரிதபித்து நிற்க
வரை குடை எடுத்தவன், Varai Kudai Eduththavan - கோவர்த்தன மலையைக் குடையாக வெடுத்துக் காத்தவன்
நிலவிய இடம், Nilaviyam Idam - மகிழ்ந்து உறையும் இடமாவது;
தடம் ஆர்வரை வளம் திகழ் மதகரி மருப்பொடு, Tadam Aarvarai Valam Thigazh Madakari Maruppodu - தடாகங்கள் நிறைந்த மலைக்கு அழகுசெய்து விளங்குகின்ற மதயானைகளையுடைய
மருப்பொடு, Maruppodu - தந்தங்களையும்
திரை உந்தி கொணர்ந்து அணை, Thirai Undhi Konarnthu Anai - அலைகளினாலே தள்ளிக் கொண்டுவந்து சேருகிற
செழு நதி, Sezhu Nathi - அழகிய ஆறு
வயல் புகு, Vayal Pugu - கழனிகளில் பாயப்பெற்ற
1156பெரிய திருமொழி || (3-1–இருந்தண்) (திருவயிந்திரபுரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அர்ஜுனனுக்காக தன்னை அழிவுக்கு இட்டு –ரதியைச் சீறினவன் சாரதியை இறே அழியச் செய்வது – உடம்புக்கு ஈடு இடாதே தன்னை அழிவுக்கு இட்டு நின்றான் ஆயிற்று – தான் கொண்ட விஜயமும் அர்ஜுனன் தலையிலே கிடக்கும்படி –தன்னைத் தாழ விட்டு வைத்தான் ஆயிற்று – ஸ்லாக்கியமான தேரிலே கையிலே உழவு கோலைக் கொண்டு நின்ற என் குல நாதன் உடைய ஸ்ரீ ஸ்தானம் – ஆக தாரகம் தார்யத்துக்கு உள்ளே மறைந்து இருக்கும் தேசம் ஆயிற்று – தான் வெல்லச் செய்தேயும் -அர்ஜுனன் வென்றான் என்று சொல்லலாம்படி ஸ்ரீ கிருஷ்ணன் அவனுக்கு பரிகரமாய் அந்தர்பவித்து நிற்குமா போலே தான் விளைவிக்கச் செய்தே -வயல் விளைந்தது -என்று சொல்லலாம்படி யாயிற்று இருப்பது) 9
வேல் கொள் கைத் தலத்து அரசர் வெம் போரினில் விசயனுக்காய் மணித்தேர் கோல் கொள் கைத்தலத்து எந்தை பெம்மான் இடம் குலவு தண் வரைச் சாரல் கால் கொள் கண் கொடிக் கை எழக் கமுகு இளம் பாளைகள் கமழ சாரல் சேலைகள் பாய் தரு செழு நதி வயல் புகு திருவயிந்திரபுரமே –3-1-9
பதவுரை Show / Hide
கைத்தலத்து வேல் கொள் அரசர் வெம் போரினில், Kaithalathu Vel Kol Arasar Vem Porinil - கையிலே வேலாயுதத்தை யுடையவராக (துரியோதனன் முதலிய) அரசர்களையுடைய கடூரமான பாரத யுத்தத்தில் (- (திரு அயிந்திரபுரமே-.))
விசயனுக்கு ஆய், Visayanukku Aayi - அர்ஜூனனுக்குத் துணையாகி
மணி தேர்தலத்து கோல் கொள் எந்தைபெம்மான் இடம், Mani Therthalathu Kol Kol Endhaipemman Idam - (அவனுடைய) அழகிய தேரிலே கையில் கோல்பிடித்து நின்ற எம்பெருமானுக்கு இடமாவது:
குலவு தண் வரை சாரல், Kulavu Than Varai Charal - கொண்டாடத்தக்க குளிர்ந்த மலைச்சாரலில்
கால் கண் கொள் கொடி கையெழ, Kaal Kan Kol Kodi Kaiyezha - வெற்றிலைக் கால்கள் கணுக்கள் தோறும் கிளைக்கின்ற (வெற்றிலைக்) கொடிகள் மிகுதியாக வளரப் பெற்றதும்
கமுகு இளம் பாளைகள் கமழ் சாரல், Kamuku Ilam Paalaigal Kamazh Charal - பாக்கு மரங்களின் இளங்குருத்துகள் வாஸனை வீசப்பெற்ற சுற்றுப் பிரதேசங்களையுடையதும்
சேல்கள் பாய்தரு செழு நதி வயல் புகு, Selgal Paaytharu Sezhu Nathi Vayal Pugu - மீன்கள் துள்ளி விளையாடுகிற அழகிய ஆறானது கழனிகளிலே பெருகப் பெற்றதுமான
1157பெரிய திருமொழி || (3-1–இருந்தண்) (திருவயிந்திரபுரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சர்வ நியந்தாவாய் ஆயிற்று –ஆபத் சகனும் ஆயிற்று-தேவானாம் தனவாநாஞ்ச-என்கிறபடியே தன்னாலே ஸ்ருஜ்யரான இவர்கள் இரண்டு திறத்தாருக்கும் ஒத்து இருக்கையாலே தம்தாமுடைய அபேஷித சித்திக்காக தேவர்களும் அசுரர்களும் அடைய சென்று ஆஸ்ரயிகலாம் படி திருவயிந்திரபுரத்தில் நித்ய வாசம் பண்ணி அத்தாலே பரம பதத்தில் காட்டிலும் உஜ்ஜ்வலனாய் இருக்கிறவனை எல்லாம் இல்லை இறே பரமபதத்தில் இவர்களுக்கு அபேஷிதம் விதானம் பண்ணுகையால் வந்த ஏற்றம் உண்டு இறே இங்கு- பாடிட-பாப அனுபவம் பண்ணுகைக்காக இறே சம்சாரத்தில் பிறக்கிறது அத்தை அனுபவிக்க வந்த இத் தேசத்தில் இத்தை அதிகரிக்கில் அவை தாம் நமக்கு இருப்பிடம் இல்லை என்று விட்டு ஓடிப் போம்) 10
மூவராகிய ஒருவனை மூ வுலகு உண்டு உமிழ்ந்து அளந்தானை தேவர் தானவர் சென்று சென்று இறைஞ்சத் தண் திருவயிந்திரபுரத்து மேவு சோதியை வேல் வலவன் கலி கன்றி விரித்து உரைத்த பாவு தண் தமிழ் பத்திவை பாடிடப் பாவங்கள் பயிலாவே –3-1-10
பதவுரை Show / Hide
மூவர் ஆகிய ஒருவனை, Moovar Aagiya Oruvanai - தானொருவனே மும்மூர்த்தியாக உருவெடுத்து முத்தொழில் நிகழ்த்துமவனாய
மூ உலகு உண்டு உமிழ்ந்து அளந்தானை., Moovulagu Undu Umizhndhu Alandhanai - (பிரளயகாலத்தில்) மூன்று லோகங்களையும் உட்கொண்டு (பிறகு) வெளிப்படுத்தி (மற்றொருகால் திரிவிக்கிரமனாகி) அளந்தவனாய்
தேவர் தானவர் சென்றுசென்று இறைஞ்ச, Thevar Thanavar Senru Senru Irainja - தேவரும் தானவரும் வந்து வந்து வணங்கலாம்படி
தண்திரு அயிந்திராபுரத்து மேவு சோதியை, Thanthiru Ayindhirapurathu Mevu Sothiyai - குளிர்ந்த திருவயிந்திரபுரத்திலே நித்யவாஸம் பண்ணுகிற பரஞ்சோதியான பெருமானைக்குறித்து
வேல் வலவன் கலிகன்றி, Vel Valavan Kalikanri - வேல் பிடிக்கவல்ல திருமங்கை மன்னன்
விரித்து உரைத்த, Virithu Uraitha - விரிவாக அருளிச்செய்த
பாவு தன் தமிழ் இவை பத்து பாடிட, Paavu Than Tamil Ivai Paththu Paadida - அழகிய விஸ்தார கவியாக அமைந்த இப்பத்துப் பாசுரங்களையும் பாடியநுஸந்திக்குமளவில் பாவங்கள் பயிலா பாவங்கள் சேரமாட்டா.