திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1238 | பெரிய திருமொழி || (3-10–திருமடந்தை) (திருநாங்கூர் அரிமேய விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பொறுப்பிக்கும் அவளும்-பொறைக்கு உவாத்தானவளும்-எப்போதும் ஒக்க அருகே இருக்கையாலே ஆஸ்ரிதர் பக்கல் எப்போதும் அவன் அருளே நடந்து அத்தாலே கொடிய அபராதங்கள் இவ்வோ விடங்கள் நமக்கு இருப்பிடம் அல்ல என்று விட்டு ஓட – தேவர்களுக்கும் கூட கால் பொருந்த அரிதாம்படியான இஸ் சம்சார விபூதியிலே அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தரான ஸ்ரீ நித்ய சூரிகள் பொருந்தி ஆஸ்ரயிக்கும் படியாக இருக்கிற தேசம்) 1 | திருமடந்தை மண் மடந்தை இரு பாலும் திகழ
தீ வினைகள் போயகல அடியவர்கட்கு என்றும்
அருள் நடந்து இவ் ஏழ் உலகத்தவர் பணிய வானோர்
அமர்ந்து ஏத்த இருந்த இடம் பெரும் புகழ் வேதியர் வாழ்
தரும் இடங்கள் மலர்கள் மிகு கைதைகள் செங்கழுநீர்
தாமரைகள் தடங்கள் தொறும் இடங்கள் தொறும் திகழ
அருவிடங்கள் பொழில் தழுவி எழில் திகழும் நாங்கூர்
அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே –3-10-1 | பதவுரை Show / Hideஇருபாலும் திருமடந்தை மண் மடந்தை திகழ, Irubaalum Thirumadandhai Mann Madandhai Thigazha - இரண்டு பக்கங்களிலும் ஸ்ரீதேவி பூதேவிகள் விளங்க நின்று (- (அரியமேய விண்ணகரம் மடநெஞ்சே! வணங்கு)) அடியவர்கட்கு தீ வினைகள் போய் அகல, Adiyavarkadku Thee Vinaigal Poi Akala - ஆச்ரிதர்பக்கலில் கொடிய பாவங்கள் தொலையும் படியான என்றும் அருள் நடந்து, Endrum Arul Nadandhu - எப்போதும் க்ருபைபண்ணி இவ் ஏழ் உலகத்தவர் பணிய, Iv Ezh Ulagaththavar Paniya - இந்த ஸப்த லோகங்களிலுள்ளாராலும் ஆச்ரயிக்கப்பெற்று வானோர் அமர்ந்து ஏத்த, Vaanor Amarnthu Aetha - நித்யஸூரிகள் கால் பொருந்தில் தோத்திரம் பண்ணப் பெற்று இருந்த இடம், Irundha Idam - (எம் பெருமான்) எழுந்தருளியிருக்குமிடமாய் பெரு புகழ் வேதியர் வாழ்தரும் இடங்கள், Peru Pugazh Vedhiyar Vazhtharum Idangal - மிக்க புகழை யுடையரான வைதிகர்கள் வாழ்கின்ற இடங்களை யுடைத்தாய் மலர்கள் மிகு கைதைகள், Malargal Miku Kaithaigal - புஸ்ப ஸம்பத்தியையுடைய சேங்கழுநீர் தாமரைகள், Sengalunir Thamaraihal - தாழைகளும் செங்கழுநீர் களும் தாமரைகளும் தடங்கள் தொறுநும், Thadangal Thorunam - தடாகங்கள் தோறும் (நிறைந்து ) இடங்கள் தொறும் திகழ, Idangal Thorum Thigazha - கண்விட மெங்கும் விளங்கப்பெற்றதாய் பொழில், Pozhil - ஆகாச ஸ்தலங்களைத் தழுவி யிருப்பதனாலே ஏழில் திகழும் நாங்கூர், Ezhal Thigazhum Nangoor - அழகு விளங்கா நிற்பதான திருநாங்கூரில் |
| 1239 | பெரிய திருமொழி || (3-10–திருமடந்தை) (திருநாங்கூர் அரிமேய விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவர்கள் நீ வேண்டா -எங்களுக்கு உப்புச் சாறு அமையும் –என் பெரு விலையனான தன் படி ஒன்றும் பாராதே தன் தோள் நோவும்படி கடலை நெருக்கிக் கடைந்த அவர்களுக்கு அமிர்தத்தை உபகரித்தவன் – என் ஆரமுதம் – அவர்கள் அமிர்தம் போல் அன்றிக்கே தம்முடைய அமிர்தம் இருக்கிறபடி- கொண்டாடிக் கொண்டு வர்த்திக்கிற தேசம்) 2 | வென்றி மிகு நரகனுரமது அழிய விசுறும்
விறல் ஆழித் தடக்கையன் விண்ணவர்கட்கு அன்று
குன்று கொடு குரை கடலைக் கடைந்து அமுதம் அளிக்கும்
குரு மணி என்னாரமுதம் குலவி யுறை கோயில்
என்றும் மிகு பெருஞ் செல்வத்து எழில் விளங்கு மறையோர்
ஏழு இசையும் கேள்விகளும் இயன்ற பெரும் குணத்தோர்
அன்று உலகம் படைத்தவனை யவர்கள் நாங்கூர்
அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே –3-10-2 | பதவுரை Show / Hideவென்றி மிகு நரகன், Vendri Miku Naragan - ஜெயசீலனான நரகாசுரனுடைய ஊரம் அது அழிய, Ooram Adhu Azhiya - மிடுக்கு அழியும்படி விசிறும், Visirum - (அவன் மீது) வீசி யெறியப் பட்ட விறல் ஆழி, Viral Aazhi - வலிவுள்ள திருவாழியை தட கையன், Thada Kaiyan - பெரிய திருக்கையிலே உடையவனும் அன்று, Anru - முன் பொருகாலத்தில் விண்ணவர்கட்கு, Vinnavarkadku - இந்திரன் முதலிய தேவர்களுக்காக குன்று கொடு, Kundru Kodu - மந்தர பர்வதத்தை நட்டு குரைகடலை, Kuraikadalai - கோஷஞ்செய்யு மியல்வை யுடைய ஜமுத்ரத்தை கடைந்து கடைந்து, Kadaindhu - கடைந்து அமுதம் அளிக்கும், Amudham Alikkum - அமிருதத்தை யெடுத்துக் கொடுத்தவனும் குரு மணி, Guru Mani - சிறந்த ரத்னம் போன்றவனும் என் ஆர் அமுதலம், En Ar Amudhalam - அமுதம் போன்றவனுமான பெருமான் குலவி, Kulavi - கொண்டாட்டத்துடனே உறை கோவில், Urai Kovil - எழுந்தருளியிருக்கும் திவ்ய தேசம் ஏன்றும் மிகு, Aendrum Migu - எப்பொழுதும் வளர்ந்துவருகிற பெரு செல்வத்து எழில் விளங்கும், Peru Selvaththu Ezhil Vilangum - அளவற்ற செல்வத்தின் அழகு விளங்கும்படியுள்ள வர்களாய் மறையோர், Maraiyor - வேதம் வல்லவர்களாய் ஏழ் இசையும் கேள்விகளும் இயன்ற பெரு குணத்தோர், Ezhu Isaiyum Kelvigalum Iyanra Peru Gunaththor - முன்பு உலகங்களைப் படைத்த பிரமனைப் போன்றவர்களான அந்தணர்கள் வாழ்கிற திருநாங்கூரில் |
| 1240 | பெரிய திருமொழி || (3-10–திருமடந்தை) (திருநாங்கூர் அரிமேய விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பிரளயத்திலே நோவு பட புக வயிற்றிலே வைத்து நோக்கின உபகாரகன் ஸ்ரீ கிருஷ்ணனாய் வந்து அவதரித்து – இடையர்கள் கண்டு பிரீதராம்படி குவலயா பீடத்தின் உடைய கொம்பை முறித்து அநந்தரம் கம்சனுடைய மயிரைப் பிடித்து தலை கீழாகத் தள்ளி முதுகிலே அறைந்து அவனை அழியச் செய்த உபகாரகன் உடைய கோயில்) 3 | உம்பரும் இவ் ஏழு உலகும் ஏழு கடலும் எல்லாம்
உண்ட பிரான் அண்டர்கள் முன் கண்டு மகிழ்வெய்த
கும்பமிகு மதயானை மருப்பொசித்துக் கஞ்சன்
குஞ்சி பிடித்தடித்த பிரான் கோயில் மருங்கு எங்கும்
பைம் பொனொடு வெண் முத்தம் பல புன்னை காட்டப்
பலங்கனிகள் தேன் காட்ட படவரவேரல்குல்
அம்பனைய கண் மடவார் மகிழ்வெய்து நாங்கூர்
அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே –3-10-3 | பதவுரை Show / Hideஉம்பரும் இவ் ஏழ் உலகும் ஏழ் கடலும் எல்லாம், Umbarum Iv Aezh Ulagum Aezh Kadalum Ellam - தேவஜாதியும் இந்த ஸப்த லோகங்களும் ஸப்த ஸாகரங்களும் ஆகிய இவை யெல்லாவற்றையும் (- (மொக்கும் மலருமாய்ப் பூத்து நின்று)) உண்ட பிரான், Unda Piraan - (பிரளயகாலத்தில் ) திரு வயிற்றிலே வைத்து நோக்கின உபகார சீலனும் முன் அண்டர்கள் கண்டு மகிழ்வு எய்த, Mun Andarkal Kandu Makizhvu Eytha - முன்பு இடையர்கள் கண்ணாலே கண்டு களிப்படையும்படி கும்பம் மிகு மதம் யானை மருப்பு ஒசித்து, Kumbam Migu Matham Yaanai Maruppu Osiththu - குடம் போன்ற பெரிய மத்தகத்தையுடைய மந்தகஜ மான குவலயாபீடத்தி னுடைய தந்தங்களை முறித்துவிட்டு (உள்ளே நுழைந்து) கஞ்சன் குஞ்சி பிடித்து அடித்த, Kanjan Kunchipidiththu Adiththu - கம்ஸனுடைய மயிரைப் பிடித்து (கீழே தள்ளி) அவனை யழியச் செய்த புpரான், Puraan - உபகாரகனுமான பெருமானுடைய கோயில் மருங்கு எங்கும் பல புண்ணை, Kovil Marungu Engum Pala Punnai - திவ்ய தேசம் பக்கங்களிலெல்லாம் பலபல புன்னைமரங்கள் பைம்பொனொடு வெண்முத்தம் காட்ட, Paimponodu Venmuththam Kaata - அழகிய பொன்னையும் வெளுத்த முத்துக்களையும் பிகாரப்படுத்தவும் பலங்கனிகள் தேன் காட்ட, Palankanigal Then Kaata - பலாப்பழங்கள் தேனைச் சொரிந்து காட்டவும் பெற்றதாய் படம் அரவு ஏர் அல்குல் அம்பு அனைய கண் மடவார், Padam Aravu Aer Alkul Ambu Anaiya Kan Madavaar - படமெடுத்து பாம்பைப் போன்று அழகிய நிதம்பத்தையும் அம்பு போல் கூர்மையான கண்களையும் உடைய ஸ்த்ரீகள் மகிழ்வு எய்தும் நாங்குர் அரிமேய விண்ணகரம், Makizhvu Eythum Naangur Arimeya Vinnakaram - மகிழந்து வாழுமிடமான திருநாங்கூரிலே வணங்கு |
| 1241 | பெரிய திருமொழி || (3-10–திருமடந்தை) (திருநாங்கூர் அரிமேய விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஹிரண்யன் உடைய முரட்டு உடலிலே வைத்தால் வளையக் கடவது அன்றிக்கே கூர்மை மிக்கு இருந்த திரு உகிராலே இரண்டு கூறாம்படி பிளந்து அவன் பக்கல் இழவு தீரும் படி அவன் மகன் என்று ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வான் பக்கலிலே அருளைப் பண்ணினவன் வர்த்திக்கிற தேசம்) 4 | ஓடாத வாளரியின் உருவமது கொண்டு அன்று
உலப்பில் மிகு பெரு வரத்த இரணியனைப் பற்றி
வாடாத வள்ளுகிரால் பிளந்து அவன் தன் மகனுக்கு
அருள் செய்தான் வாழும் இடம் மல்லிகை செங்கழுநீர்
சேடேறு மலர்ச் செருந்தி செழுங்கமுகம் பாளை
செண்பகங்கள் மணம் நாறும் வான் பொழிலினூடே
ஆடேறு வயலாலைப் புகை கமழும் நாங்கூர்
அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே –3-10-4 | பதவுரை Show / Hideஅன்று, Anru - முன்பொரு காலத்தில் (- (அரிமேய விண்ணகரம் வணங்கு)) ஓடாத ஆள் அரியின் உருவம் அது கொண்டு, Odaadha Aal Ariyin Uruvam Adhu Konda - போரில்அ பின்வாங்க மாட்டாத நரஸிம்ஹ ரூபியாகி உலப்பு இல் மிகு பெரு வரத்த இரணியனை பற்றி, Ulapu Il Migu Peru Varaththu Iraniyanai Patri - முடிவில்லாத மிகப்பெரிய வரங்ளைப் பெற்றவனான ஹிரண்யாஸூரனை பிடித்துக் கொண்டு வாடாத வள் உகிரால் பிளந்து, Vaadaadha Val Ukiraal Pilandhu - வுளையாத தீக்ஷ்ணமான நகங்களினால் கிழித்து அவன் தன் மகனுக்கு அருள் செய்தான், Avan Than Maganukku Arul Seithaan - அவனது புத்திரனான ப்ரஹ்லாதனுக்கு க்ருபை பண்ணின பெருமான் வாழும் இடம், Vaalum Idam - எழுந்தருளியிருக்கும் திவ்ய தேசம் மல்லிகை செங்கழுநீர், Mallikai Chengaluneer - மல்லிகைகளும் செங்கழுநீர் களும் சேடு ஏறு மலர் செருந்தி, Sedu Eru Malai Serunthi - திரள் திரளாகப் பூத்த பூக்களையுடைய ஸூர புன்னைகளும் செழு கமுகம் பாளை, Sezhu Kamugam Paalai - அழகிய பாக்குப் பாளைகளும் செண்பகங்கள், Senbagangal - செண்பகப் பூக்களும் மணம் நாறும் வண் பொழி லின் ஊடே, Manam Naarum Van Pozhi Lin Oode - புரிமளம் வீசப்பெற்ற அழகிய சோலைகளின் நடுவே ஆடு ஏறு வயல் ஆலைப் புகை கமழும் நாங்கூர், Aadu Eru Vayal Alaip Pugai Kamazhum Naangoor - கரும்பு ஆடுகைக்காக ஏறின வயலில் கரும்பாலைகளின் புகை பரிமளிக்கப் பெற்ற திருநாங்கூரிலே. |
| 1242 | பெரிய திருமொழி || (3-10–திருமடந்தை) (திருநாங்கூர் அரிமேய விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (மகா பலியினுடைய யஞ்ஞ வாடத்திலே இவன் -தேவ கார்யம் செய்கிறான் -என்று தோற்றாத படியாக நாட்டில் வாமனர்கள் திரு உலகு அளந்து அருளின இடம் –என்னும் படியான வாமன வேஷத்தை பரிகரித்து எனக்கு மூன்றடி வேணும் -என்று அர்த்தித்து ஆகாசத்தையும் அலை எறியா நின்றுள்ள கடலையும் த்வீபங்களையும் எல்லாம் அனாயாசேன அளந்து கொண்ட உபகாரகன் நித்ய வாசம் பண்ணுகிற தேசம்) 5 | கண்டவர் தம் மனம் மகிழ மாவலி தான வேள்விக்
களவின் மிகு சிறு குறளாய் மூவடி என்று இரந்திட்டு
அண்டமும் இவ்வலை கடலும் அவனிகளும் எல்லாம்
அளந்த பிரான் அமரும் இடம் வளம் கொள் பொழிலயலே
அண்டமுறு முழ ஒலியும் வண்டினங்கள் ஒலியும்
அரு மறையின் ஒலியும் மடவார் சிலம்பின் ஒலியும்
அண்டமுறும் அலை கடலின் ஒலி திகழும் நாங்கூர்
அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே –3-10-5 | பதவுரை Show / Hideகண்டவர் தம் மனம் மகிழ, Kandavar Tham Manam Maghizha - பார்த்தவர்களெல்லாருடைய மனமும் ஆநந்தமடையும்படி மாவலி தன் வேள்வி, Mavali Than Velvi - மஹாபலியின் யாகபூமியிலே களவின் மிகு சிறு குறள் ஆய், Kalavin Migu Siru Kural Aayi - வஞ்சனை மிகுந்த சிறுத்த வாமநரூபியாய்க் கொண்டு மூ அடி என்று இரந்திட்டு, Moo Adi Endru Irandhittu - மூவடிநிலம் தா என்று யாசித்து அண்டமும், Andamum - மேலுலகங்களையும் இவ் அலை கடலும் அவனிகளும், Iva Alai Kadhalum Avanigalum - அலையெறிகின்ற இக்கடல்களோடு கூடின பூமண்டலத்தையும் எல்லாம் அளந்தபிரான், Ellam Alandhapiraan - மற்றுமெல்லாவற்றையும் அளந்து கொண்ட எம் பெருமாள் அமரும் இடம், Amarum Idam - எழுந்தருளி யிருக்கும் தவ்ய தேசம். வுளம் கொள் பொழில் அயலெ, Vulam Kol Pozhil Ayalel - அழகிய சோலைகளின் அருகே அண்டம் உறு முழவு ஒலியும், Andam Uru Muzhavu Oliyum - ஆகாசத்தளவும் வியாபிக்கிற வாத்யகோஷங்களும் வுண்டு இனங்கள், Vundu Inangal - வண்டுத்திரள்களின் ரீங்காரமும் அரு மறையின் ஒலியும், Aru Maraiyin Oliyum - அருமையான வேதங்களின் கோஷமும் மடவார் சிலம்பின் ஒலியும், Madavaar Silampin Oliyum - மாதருடைய காலணிகளின் ஓசையும் ஆண்டம் உறும் அலை கடலின் ஒலி திகழும் அரிமேய விண்ணகரம், Aandam Urum Alai Kadalin Oli Thigazhum Arimeya Vinnaikaram - அண்டபித்தியளவுஞ் சென்று அலையெறிகிற (பிரளயக்) கடலின் கோஷம் போலே விளங்கப்பெற்ற திருநாங்குகூரிலே வணங்கு |
| 1243 | பெரிய திருமொழி || (3-10–திருமடந்தை) (திருநாங்கூர் அரிமேய விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ ஜனக ராஜன் திருமகளுக்காக இலங்கைக்கு நிர்வாஹனாய் இருக்கிறவனுடைய பத்துத் தலையும் இருபது தோளும் உதிரும்படியாக – தாளை உடைத்தாய் -நெடிதாய் -திண்ணியதாய் இருக்கிற வில்லை வளைத்த தசரதாத் மகன் -சேய் -பிள்ளை தயரதற்கு மகன் தன்னை அன்றி மற்றிலேன் தஞ்சமாகவே என்னுமா போலே காணும் இருப்பது – அயர்வறும் அமரர்கள் அதிபதி வர்த்திக்கிற ஸ்தானம்) 6 | வாள் நெடுங்கண் மலர்க் கூந்தல் மைதிலிக்கா இலங்கை
மன்னன் முடி யொருபதும் தோள் இருப்பதும் போய் உதிர
தாள் நெடும் திண் சிலை வளைத்த தயரதன் சேய் என்தன்
தனிச்சரண் வானவர்க்கரசு கருதுமிடம் தடமார்
சேண் இடங்கொள் மலர்க்கமலம் சேல் கயல்கள் வாளை
செந்நெலொடு மடுத்தரிய உதிர்ந்த செழு முத்தம்
வாள் நெடும் கண் கடைசியர்கள் வாரு மணி நாங்கூர்
அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே –3-10-6 | பதவுரை Show / Hideவாள்நெடு கண் மலர் கூந்தல் மைதிலிக்கா, Vaalnedu Kan Malai Koondhal Maithilikka - வாள்போல் கூர்மையாய் நீண்ட திருக்கண்களையும் பூவணிந்த கூந்தலையுமுடைய ஸீதாபிராட்டியைச் சிறை வைத்த குற்றத்திற்காக (- (அரிமேய விண்ணகரம் வணங்கு)) இலங்கை மன்னன் ஒருபது முடியும் இருபது தோளும் போய் உதிர, Ilankai Mannan Orupathu Mudiyum Irupathu Tholum Poi Uthira - இராவணனுடைய பத்துத் தலைகளும் இருபது தோள்களும் சிதறிப் போம்படி தாள் நெடு திண் சிலை வளைத்த தயரதன் சேய், Thaal Neduthin Silai Valaitha Thayaradhan Sei - கதையோடு கூடி நீண்டு திண்ணிதான வில்லை வளைத்த தசரத புத்திரனும் என் தன் தனிசரன், En Than Thanisarang - எனக்கு ஒப்பற்ற ரசஷகனும் வானவாக்கு அரசு, Vaanavaakku Arasu - நித்யஸூரிநாதனுமான பெருமான் கருதும் இடம், Karudum Idam - திருவுள்ளமுவந்து எழுந்தருளி யிருக்கும் திவ்யதேசம்: தடம் ஆர், Thadam Aar - பொய்கைகளில் நிறைந் திருப்பனவும் சேண இடம் கொள், Sena Idam Kol - ஆகாசமுள்ள விடமெங்கும் ஓங்கி வளர்ந்திருப்பனவுமான கமலம் மலர், Kamalum Malar - தாமரைப் பூக்களையும் சேல் கயல்கள் வாளை, Sel Kayalgal Vaalai - சேல் கயல்வாளையென்னும் மீன்களையும் செந்நெலொபடு மடுத்து, Sennelopadu Maduthu - செந்நெற் பயிர்களோடு சேர்த்துப் பிடித்து அரிய, Ariya - அறுக்க உதிர்ந்த செழு முத்தம், Uthirntha Sezhu Mutham - அவற்றினின்று உதிர்ந்த அழகிய முத்துக்களை வாள் நெடு கண் கடைசியர்கள் வாரும், Vaal Nedukann Kadaiyiyarkal Vaarum - வாள்போன்று நீண்ட கண்களையுடைய கடைச் சாதிப் பெண்கள் வாரித் திரட்டுமிடமான அணிநாங்கூர், Aninangoor - திருநாங்கூரில் |
| 1244 | பெரிய திருமொழி || (3-10–திருமடந்தை) (திருநாங்கூர் அரிமேய விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தேனுகன் பூதனை அவர்களை முடித்துப் பொகட்ட அழகில் வந்தால் காமனுக்கும் உத்பாதனாய் அள்ளல் அல்லாதபடி ஸ்ரமஹரமான திருமேனியை உடையனாய் இருக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரன் விரும்பி வர்த்திக்கிற தேசம் ஆயிற்று) 7 | தீ மனத்தான் கஞ்சனது வஞ்சனையில் திரியும்
தேனுகனும் பூதனை தன் ஆர் உயிரும் செகுத்தான்
காமனைத் தான் பயந்த கரு மேனி யுடை யம்மான்
கருதும் இடம் பொருது புனல் துறைதுறை முத்து உந்தி
நா மனத்தால் மந்திரங்கள் நால் வேதம் ஐந்து
வேள்வியோடு ஆறங்கம் நவின்று கலை பயின்று அங்கு
ஆ மனத்து மறையவர்கள் பயிலு மணி நாங்கூர்
அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே –3-10-7 | பதவுரை Show / Hideதீ மனத்தான் கஞ்சனது வஞ்சனையின் திரியும், Thee Manathaan Kanjanathu Vanjanaiyin Thiriyum - பொல்லாத நெஞ்சை யுடையனான கம்ஸனுடைய கபடச் செய்கைக் கிணங்க (கெட்ட எண்ணத்துடனே) திரிந்து கொண்டிருந்த தேனுகனும் பூதனைதன் உம், Thenughanum Poodhanithan Um - தேநுகாஸூரனுடையவும் பூதனையினுடையவும் ஆர்உயிர் செகுத் தான், Aaruyir Sekuth Than - நற்சீவனை முடித்தவனும் காமனை பயந்தகரு மேனி உடை அம்மான், Kaamanai Bayandhakaru Meeni Udai Amman - மன்மதனை புத்தரனாகப் படைத்தவனும் கரிய திருமேனியை யுடையவனுமான ஸர்வேச்வரன் புனல் பொருது துறை துறை முத்து உந்தி, Punal Poruthu Thurai Thurai Muthu Undhi - ஜலமானது அலையெறிந்து துறைகள்தோறும் முத்துக்களை தள்ளிக்கிடக்குமிடமாயும் நாமனத்தால் மந்திரங்கள் நால் வேதம் ஆறு அங்கம் நவின்று, Namanathaal Manthirangal Naal Vedham Aaru Angam Navinru - நாவினாலும் மநஸ்ஸினாலும் (பகவானது) மந்த்ரங்களையும் நான்கு வேதங்களையம்ஆறு அங்கங்களையும் அப்யஸித்து கலை பயின்று, Kalai Payinru - மற்றுமுள்ள சாஸ்திரங்களையும் அதிகரித்து ஐந்து வேள்வி யோடு, Ainthu Velvi Yodu - பஞ்ச மஹா யஜ்ஞங்களோடு கூடி அங்கு ஆம் மனத்து மறையவர்கள், Angu Aam Manathu Maraiyavarkal - ஆமுஷ்மிகத்திலேயே பொருந்தின நெஞ்சை யுடையரான வைதிகர்கள் பயிலும், Payilum - நித்யவாஸம் பண்ணப்பெற்ற தாயுமுள்ள அணி நாங்கூர், Ani Naangoor - திருநாங்கூரில் அரிமேய விண்ணகரம், Arimeya Vinnakaram - வணங்கு |
| 1245 | பெரிய திருமொழி || (3-10–திருமடந்தை) (திருநாங்கூர் அரிமேய விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரமஹரமாய் இருக்கிற திருமேனியை உடையவன் பசுக்களை ரஷிக்கைக்காக ஸ்ரீ கோவர்த்தனத்தாலே மழை தடுத்து மன்றிலே ஆயர் அனுபோவ்யமாம் படி குடக் கூத்தாடினவன் கொண்டாடி வர்த்திக்கிற தேசம்) 8 | கன்றதனால் விளவெறிந்து கனி யுதிர்த்த காளை
காமரு சீர் முகில் வண்ணன் காலிகள் முன் காப்பான்
குன்றதனால் மழை தடுத்துக் குடமாடு கூத்தன்
குலவும் இடம் கொடி மதிள்கள் மாளிகை கோபுரங்கள்
துன்று மணி மண்டபங்கள் சாலைகள் தூ மறையோர்
தொக்கு ஈண்டித் தொழுதி யொடு மிகப் பயிலும் சோலை
அன்று அலர் வாய் மது வுண்டு அங்கு அளி முரலும் நாங்கூர்
அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே –3-10-8 | பதவுரை Show / Hideகன்று அதனால் விளவு எறிந்து, Kandru Adhanal Vilavu Erinthu - வத்ஸாஸூரனைக் கொண்டு கபித்தாஸூரன்மேல் வீசியெறிந்து (- (அரிமேய விண்ணகரம் வணங்கு)) கனி உதிர்த்த காளை, Kani Uthirtha Kaalai - விளாம்பழங்களை உதிரச் செய்த இளையவனும் காமரு சீர், Kaamaru Seer - விருப்பத்தக்க கல்யாண குணங்களையுடையவனும் முகில் வண்ணன், Mugil Vannan - காளமேக நிறத்தனும் முன் காலிகள் காப்பான, Mun Kaaligal Kaappana - முன்பெருங்கால் பசுக்களை (பெருமழையினின்று) காக்கும் பொருட்டு குன்று அதனால் மழை தடுத்து, Kundru Adhanal Mazhai Thaduthu - கோவர்த்தனமலையினால் மழையைத் தடை செய்தவனும் குடம் ஆடு கூத்தன், Kudam Aadu Koothan - குடக்கூத் தாடினவனுமான பெருமான் குலவும் இடம், Kulavum Idam - உவந்திருக்கும் திவ்யதேசம் கொடி மதிள்கள், Kodi Mathilkal - த்வஜங்கள் பொருந்திய மதிள்களையும் மாளிகை கோபுரங்கள், Maaligai Koorangal - மாளிகைகளையும் கோபுரங்களையும் துன்று மணி மண்டபங்கள், Thunru Mani Mandapangal - நெருங்கின மணி மயமான மண்டபங்களையும் சாலைகள், Saalaihal - தார்ச்சாலைகளையும் உடைத்தாய் தூ மறையோர் தொக்கு ஈண்டி, Thoo Maraiyore Thokku Eendi - பரிசுத்தரான அந்தணர்கள் கும்பலாகக் கூடியிருக்கும் மிடமாய் தொழுதியொடுமிக பயிலும் சோலை, Thozhuthiyodumiga Payilum Solai - பறவைகளின் ஒலியோழுடு மிகவுங் கூடியிருக்கின்ற சோலைகளிலே அன்று அலர்வாய் பது உண்டு, Andru Alarvai Pathu Undu - அப்போதலர்ந்த செவ்விப் பூக்களில் தேனைப் பருகி அங்கு அளி முரலும் நாங்கூர், Angu Ali Muralam Nangoor - அவ்விடத்தில் வண்டுகள் பாடப் பெற்றதான் திருநாங்கூரிலே |
| 1246 | பெரிய திருமொழி || (3-10–திருமடந்தை) (திருநாங்கூர் அரிமேய விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) () 9 | வஞ்சனையால் வந்தவள் தன் உயிர் உண்டு வாய்த்த
தயிர் உண்டு வெண்ணெய் அமுதுண்டு வலி மிக்க
கஞ்சன் உயிரது உண்டு இவ் உலகுண்ட காளை
கருதுமிடம் காவிரி சந்து அகில் கனகம் உந்தி
மஞ்சுலவு பொழிலூடும் வயலூடும் வந்து
வளம் கொடுப்ப மா மறையோர் மா மலர்கள் தூவி
அஞ்சலித்து அங்கு அரி சரண் என்று இறைஞ்சும் மணி நாங்கூர்
அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே –3-10-9 | பதவுரை Show / Hideவஞ்சனையால் வந்தவள்தன் உயிர் உண்டு, Vanjanaiyala Vanthaval Than Uyir Undu - கபட வேஷத்தோடு வந்தவளான பேய்சியினுடைய உயிரை ஹிஞ்சி யுண்டவனாயும் வாய்த்த தயிர் உண்டு, Vaayththa Thayir Undu - கையிலகப்பட்ட தயிரையெல்லாம் உண்டவனாயும் வெண்ணெய் அமுது உண்டு, Vennai Amuthu Undu - வெண்ணெயை அமுது செய்தவனாயும் வலிமிக்க கஞ்சன் உயிர் அது உண்டு, Valimikka Kanjan Uyir Adhu Undu - பலசாலியான கம்ஸனுடைய உயிரை அபஹரித்தவனாயும் இ உலகு உண்ட, I Ulagu Unda - இவ்வுலகங்களையெல்லாம் (பிரளயக்கடல் கொள்ளாதபடி) அமுது செய்தவனாயுமுள்ள காளை, Kaalai - யுவாவானவன் கருதும் இடம் காவிரி, Kaviri - காவிரியாறானது சந்து அகில் கனகம் ;உந்தி, Sandhu Akil Kanagam Undhi - சலதன மரங்களையும் அகில் மரங்களையும் ஸ்வர்ணங்களையும் தள்ளிக் கொண்டு வந்து மஞ்ச உலவு பொதுழிலூடும் வயலூடும் வந்து வளம்கொடுப்ப, Manja Ulavu Pothuzhiloodum Vayaloodum Vanthu Valamkoduppa - மேகமண்டலத்தளவும் ஓங்கின சோலைகளிலும் கழனிகளிலும் தபிரவேசித்து (அவற்றுக்குச்) செழிப்பையுண்டாக்கப் பெற்றதும் மா மறையோர் மாமலர்கள் தூவி அங்கு அஞ்சலித்து, Maa Maraiyor Maamalargal Thuvi Angu Anjaliththu - மஹா வைதிக ப்ராஹ்மணர்கள் சிறந்த புஷ்பங்களை ஸமர்ப்பித்து அங்கே கை கூப்பி நின்று அரிசரண் என்று இறைஞ்சும், Arisarann Endru Irainchum - ‘ஹரி’ உன் திருவடிகளை சரணம் என்று சொல்லி வணங்கப்பெற்றதுமான அணிநாங்கூர், Aninangoor - திருநாங்கூரிலே அரிமேய விண்ணகரம், Arimeya Vinnakaram - வணங்கு |
| 1247 | பெரிய திருமொழி || (3-10–திருமடந்தை) (திருநாங்கூர் அரிமேய விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவை நின்ற இடத்திலே சென்று சினத்தை உடைத்தாய் இருக்கிற ருஷபங்கள் ஏழையும் முடியும்படி அடர்த்து ஸ்ரீ பின்னை பிராட்டி உடைய செவ்வியை உடைத்தாய் இருந்துள்ள தோள் உடன் அணைந்து ஸ்ரீயபதியாய் வர்த்திக்கிற கோயில்- இத்தை அப்யசிதவர்கள்-இஹலோகத்திலே ஹர்ஷர்கள் பயிலும் திரு உடையர் எவரேலும் எம்மை ஆளும் பரமரே-என்னும்படி அவர்களுக்கு தலைவராய் திருவடி திரு அநந்த ஆழ்வான் போல்வார் உடன் ஒரு கோவையாக ஆகப் பெறுவார்) 10 | சென்று சினவிடை ஏழும் பட அடர்த்துப் பின்னை
செவ்வித் தோள் புணர்ந்து உகந்த திருமால் கோயில்
அன்று அயனும் அரன் சேயும் அனையவர்கள் நாங்கூர்
அரி மேய விண்ணகரம் அமர்ந்த செழும் குன்றை
கன்றிநெடு வேல் வலவன் மங்கையர் தம் கோமான்
கலிகன்றி யொலி மாலை ஐந்தினோடு மூன்றும்
ஒன்றினோடும் ஒன்றும் இவை கற்று வல்லார் உலகத்து
உத்தமர்கட்கு உத்தமராய் உம்பரும் ஆவர்களே –3-10-10 | பதவுரை Show / Hideசென்றுசினம் ஏழ் விடையும் பட அடர்ந்து, Senru Sinam Ezhu Vidaiyum Pada Adarnthu - தானே சென்று கொடுமை மிகுந்த ஏழு ரிஷபங்களும் முடியும்படி பொருது பின்னை செவ்வி தோள் புணர்ந்து உகந்த திருமால் தன் கோயில், Pinnai Sevvi Thol Punarndhu Ugandha Thirumal Than Koyil - நப்பின்னைப் பிராட்டியினுடைய அழகிய தோளோடே கலந்து திருவுள்ளம் மகிழ்ந்த லக்ஷ்மீநாதனுடைய ஸந்நிதியாய் அமர்ந்த, Amarntha - பொருந்தி யெழுந்தருளியிக்கிற செழு குன்றை, Sezhu Kunrai - அழகிய மலைபோன்ற எம்பொருமானைக் குறித்து கன்றிநெடு வேல் வலவன் மங்கை யர்தம் கோமான் கலிகன்றி, Kanrinedu Vel Valavan Mangai Yartham Koman Kalikanri - கோபக்குறியோடு கூடினதாய் நீண்டதான வேற் படையைத் தரிக்கவல்லவரும் திரு மங்கை நாட்டிலுள்ளார்க்குத் தலைவருமான திருமங்கை யாழ்வார் அயனும் அரன் சேயும் அனையவர்கள் நாங்கூர், Ayanum Aran Seyyum Anaiyavargal Nangoor - பிரமனையும் ருத்ரபுத்திரனான ஸூப்ரஹ்மண்யனையும் ஒத்திருக்கின்றவர்கள் (வேதம் வல்லவர்களாய் அழகியவர்காளன அந்தணர்கள்) வாழ்கிற திருநாங்கூரில் அரிமேய வண்ணகரம், Arimeya Vannakaram - அரிமேய விண்ணககரமென்னுந் திருப்பதியில் ஒலிமாலை ஐந்தினொடு மூன்றும் ஒன்றினொடும் ஒன்றும் இவை, Olimaalai Aindhinodu Moondrum Ondrinodum Ondrum Ivai - அருளிச் செய்த சொல்மலையாகிய இப்பத்துப் பரிசுகளையும் கற்றுவல்லார், Kattruvallar - ஓதி யுணர்ந்து ஸேவிக்க வல்லவர்கள் உலகத்து, Ulakatthu - இவ்வுலகத்திலே உத்தமர்கட்கு உத்தமர் ஆய், Uttamarkadku Uttamar Aay - மிகவம் உத்க்ருஷ்டர்களா வாழ்ந்திருந்து (பின்பு) உம்பரும் ஆவர்கள், Umbarum Aavarkal - நித்யஸூரிகளோடு சேர்ந்வர்களுமாவர் |