திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 234 | பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-இரண்டாம் திருமொழி - அஞ்சனவண்ணனை) (யசோதப்பிராட்டி கண்ணனைக் கன்றின்பின் போக்கினதை எண்ணி அநுதபித்தல்) (கலிநிலைத்துறை) 1 | அஞ்சன வண்ணனை ஆயர் குலக் கொழுந்தினை
மஞ்சன மாட்டி மனைகள் தோறும் திரியாமே
கஞ்சனைக் காய்ந்த கழலடி நோவக் கன்றின் பின்
என் செயப் பிள்ளையைப் போக்கினேன் எல்லே பாவமே–3-2-1 | பதவுரை Show / Hideஅஞ்சனம் வண்ணனை,Anjanam Vannanai - மை போன்ற நிறத்தை யுடையனும் ஆயர் கோலம்,Aayar Kolam - இடைக் கோலம் பூண்டுள்ளவனும் கொழுந்தினை,Kozhuthinai - (அவ் விடையர்க்குத்) தலைவனும் பிள்ளையை,Pillaiyai - (எனக்குப்) பிள்ளையுமான கண்ணனை மனைகள் தொறும்,Manaigal Thorum - (தன் வீட்டிற் போலவே) அயல் வீடுகள் தோறும் திரியாமே,Thiriyame - (இஷ்டப்படி) திரிய வொட்டாமல் மஞ்சனம் ஆட்டி,Manjanam Aatti - (காலையில் குள்ளக் குளிர) நீராட்டி, கஞ்சனை,Kanjanai - கம்ஸனை காய்ந்த,Kaayndha - சீறி யுதைத்த கழல்,Kazhal - வீரக் கழலை அணிந்துள்ள அடி,Adi - திருவடிகள் நோவ,Nova - நோம் படியாக கன்றின் பின்,Kanrin Pin - கன்றுகளின் பின்னே (மேய்க்கப் போ வென்று) என் செய போக்கினேன்,En Seiya Pokkinean - ஏதுக்காகப் போக விட்டேன்!; எல்லே பாவமே,Elle Paavame - மஹாபாபம்! மஹாபாபம். |
| 235 | பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-இரண்டாம் திருமொழி - அஞ்சனவண்ணனை) (யசோதப்பிராட்டி கண்ணனைக் கன்றின்பின் போக்கினதை எண்ணி அநுதபித்தல்) (கலிநிலைத்துறை) 2 | பற்று மஞ்சள் பூசிப் பாவை மாரொடு பாடியில்
சிற்றில் சிதைத்து எங்கும் தீமை செய்து திரியாமே
கற்றுத் தூளி யுடை வேடர் கானிடைக் கன்றின் பின்
எற்றுக்கு என் பிள்ளையைப் போக்கினேன் எல்லே பாவமே–3-2-2 | பதவுரை Show / Hideபாடியில்,Paadiyil - திருவாய்ப் பாடியில் பற்று மஞ்சள் பூசி,Patru Manjal Poosi - பற்றுப் பார்க்கும் மஞ்சளை(த்திருமேனி யெங்கும் பெண்கள் கையால் தனித் தனியே) பூசப் பெற்று, சிற்றில் சிதைத்து,Sitril Sithaithu - (அப் பெண்கள் இழைக்கும்) சிற்றில்களை உதைத்தழித்து (இப்படி) எங்கும்,Engum - எல்லா விடங்களிலும் தீமை செய்து,Theemai Seidhu - தீம்புகளைச் செய்து கொண்டு பாவை மாரொடு,Paavai Maarodu - அவ் விடைப் பெண்களோடே திரியாமே,Thiriyame - திரிய வொட்டாமல், கன்று,Kanru - கன்றுகளினுடைய தூளி உடை,Thooli Udai - தூள்களை யுடைத்தாய் வேடர்,Vedar - (அடித்துப் பிடுங்கும்) வேடர்களுக் கிருப்பிடமான கான் இடை,Kaan Idai - காட்டிலே கன்றின் பின்,Kanrin Pin - கன்றுகளின் பின்னே (திரியும் படியாக) என் பிள்ளையை,En Pillaiyai - என் மகனை எற்றுக்கு போக்கினேன்,Etrukku Pokkinean - ஏதுக்காக அனுப்பினேன்! |
| 236 | பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-இரண்டாம் திருமொழி - அஞ்சனவண்ணனை) (யசோதப்பிராட்டி கண்ணனைக் கன்றின்பின் போக்கினதை எண்ணி அநுதபித்தல்) (கலிநிலைத்துறை) 3 | நன் மணி மேகலை நங்கை மாரொடு நாள் தொறும்
பொன் மணி மேனி புழுதி யாடித் திரியாமே
கன் மணி நின்றதிர் கானதரிடைக் கன்றின் பின்
என் மணி வண்ணனைப் போக்கினேன் எல்லே பாவமே–3-2-3 | பதவுரை Show / Hideஎன்,En - என் மகனான மணி வண்ணனை,Mani Vannanai - நீல மணி போன்ற வடிவை யுடைய கண்ணனை, நல்,Nal - லோகோத்தரமான மணி,Mani - நவ மணிகள் பதித்த மேகலை,Megalai - மேகலையை (அணிந்துள்ள) நங்கைமாரொடு,Nangaimaarodhu - யுவதிகளோடு கூட நாள் தொறும்,Naal Thorum - தினந்தோறும் பொன் மணி மேனி,Pon Mani Meni - அழகிய நீல மணி போன்ற திருமேனியானது புழுதி ஆடி,Puzhuthi Aadi - புழுதி படைக்கப் பெற்று(விளையாடி) திரியாமே,Thiriyame - திரிய வொண்ணாதபடி கான்,Kaan - காட்டிலே கல்,Kal - (இவன் கன்றுகளை அழைக்கிற த்வநியாலும், அவை கூவுகிற த்வநியாலும்) மலையிலே மணி நின்று அதிர்,Mani Nindru Athir - மணியினோசை போல பிரதி த்வநி யெழும்பப் பெற்றுள்ள (பயங்கரமான) அதர் இடை,Athar Idai - வழியிலே கன்றின் பின்,Kanrin Pin - (வருந்தும்படியாக) கன்றுகளின் பின்னே போக்கினேன்,Pokkinean - போகவிட்டேனே! எல்லே பாவமே,Elle Paavame - மஹாபாபம்! மஹாபாபம். |
| 237 | பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-இரண்டாம் திருமொழி - அஞ்சனவண்ணனை) (யசோதப்பிராட்டி கண்ணனைக் கன்றின்பின் போக்கினதை எண்ணி அநுதபித்தல்) (கலிநிலைத்துறை) 4 | வண்ணக் கருங் குழல் மாதர் வந்து அலர் தூற்றிட
பண்ணிப் பல செய்து இப் பாடி யெங்கும் திரியாமே
கண்ணுக் கினியானைக் கானதரிடைக் கன்றின் பின்
எண்ணற் கரியானைப் போக்கினேன் எல்லே பாவமே–3-2-4 | பதவுரை Show / Hideகண்ணுக்கு இனியானை,Kannukku Iniyanai - கண்களுக்கு மிகவும் தர்சநீயனாய் எண்ணற்கு அரியானை,Ennarkku Ariyanai - (இத் தன்மையன் என்று) நினைக்க முடியாதவனாயுள்ள கண்ணபிரானை இப் பாடி எங்கும்,Ep Paadi Engum - இத் திருவாய்ப்பாடி முழுவதும் பல செய்து,Pala Seidhu - பல (தீமைகளைச்) செய்து (அத் தீமைகளினால்) வண்ணம் கரு குழல்,Vannam Karu Kuzhal - அழகிய கறுத்த கூந்தலை யுடையரான மாதர்,Maadhar - பெண் பிள்ளைகள் வந்து,Vandhu - (தாயாகிய என்னிடம் ஓடி) வந்து அலர் தூற்றிடப் பண்ணி,Alar Thoottidap Panni - பழி தூற்றும்படியாகப் பண்ணிக் கொண்டு திரியாமே,Thiriyame - திரிய வொட்டாமல் கான் அதர் இடை,Kaan Athar Idai - காட்டு வழியிலே கன்றின் பின்,Kanrin Pin - கன்றுகளின் பின்னே (திரியும்படி) போக்கினேன்,Pokkinean - அனுப்பினேனே! எல்லே பாவமே!,Elle Paavame - மஹாபாபம்! மஹாபாபம். |
| 238 | பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-இரண்டாம் திருமொழி - அஞ்சனவண்ணனை) (யசோதப்பிராட்டி கண்ணனைக் கன்றின்பின் போக்கினதை எண்ணி அநுதபித்தல்) (கலிநிலைத்துறை) 5 | அவ்வவ் விடம் புக்கு அவ் வாயர் பெண்டிர்க்கு அணுக்கனாய்
கொவ்வைக் கனி வாய் கொடுத்துக் கூழைமை செய்யாமே
எவ்வம் சிலை யுடை வேடர் கானிடைக் கன்றின் பின்
தெய்வத் தலைவனைப் போக்கினேன் எல்லே பாவமே–3-2-5 | பதவுரை Show / Hideதெய்வம்,Deivam - தேவர்களுக்கு தலைவனை,Thalaivanai - நிர்வாஹகனான கண்ணனை அ அ இடம் புக்கு,A A Idam Pukku - (மச்சு மாளிகை முதலான) அவ்வவ் விடங்களில் (ஏகாந்தமாகப்) புகுந்து அ ஆயர் பெண்டிர்க்கு,A Aayar Pendirkku - (அவ்வவ் விடங்களிலுள்ள) அவ்விடைப் பெண்களுக்கு அணுக்கன் ஆய்,Anukkan Aai - அந்தரங்கனாய் கொவ்வை கனி,Kovvai Kani - (அவர்களுக்கு) கோவைப் பழம் போன்ற வாய்,Vaai - (தன்) அதரத்தை கொடுத்து,Koduthu - (போக்யமாக்க) கொடுத்துக் கொண்டு கூழைமை செய்யாமே,Koolaimai Seiyyaame - கூழ்மைத் தன்மடித்துத் திரிய வொட்டாமல் எவ்வும்,Evvum - துன்பத்தை விளைக்குமதான சிலை உடை,Silai Udai - வில்லை(க்கையிலே) உடைய வேடர்,Vedar - வேடர்களுக்கு(இருப்பிடமான) கான் இடை,Kaan Idai - காட்டிலே கன்றின் பின் போக்கினேன் ;,Kanrin Pin Pokkinean - கன்றுகளின் பின்னே (திரியும்படி) அனுப்பினேனே! எல்லே பாவமே!,Elle Paavame - மஹாபாபம்! மஹாபாபம். |
| 239 | பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-இரண்டாம் திருமொழி - அஞ்சனவண்ணனை) (யசோதப்பிராட்டி கண்ணனைக் கன்றின்பின் போக்கினதை எண்ணி அநுதபித்தல்) (கலிநிலைத்துறை) 6 | மிடறு மெழுமெழுத் தோட வெண்ணெய் விழுங்கிப் போய்
படிறு பல செய்து இப் பாடி யெங்கும் திரியாமே
கடிறு பல திரி கானதரிடைக் கன்றின் பின்
இடற என் பிள்ளையைப் போக்கினேன் எல்லே பாவமே–3-2-6 | பதவுரை Show / Hideஎன் பிள்ளையை,En Pillaiyai - என் மகனாகிய கண்ண பிரானை வெண்ணெய்,Vennei - வெண்ணெயை மிடறு,Midaru - கழுத்திலே மெழுமெழுத்து ஓட,Mezhumezhuthu Oda - (உறுத்தாமல்) மெழுமெழுத்து ஓடும்படி விழுங்கி,Vizhunghi - விழுங்கி விட்டு போய்,Poi - (பிறரகங்களுக்குப்) போய் பல படிறு,Pala Padiru - பல கள்ள வேலைகளை செய்து,Seidhu - செய்து கொண்டு இ பாடி எங்கும்,E Paadi Engum - இவ் விடைச்சேரி முழுதும் திரியாமே,Thiriyame - திரிய வொட்டாமல் பல கடிறு திரி,Pala Kadiru Thiri - பல காட்டானைகள் திரியப் பெற்ற கான் அதர் இடை,Kaan Athar Idai - காட்டு வழியிலே இடற,Idara - தட்டித் திறியும்படியாக கன்றின் பின் போக்கினேன் ;,Kanrin Pin Pokkinean - கன்றுகளின் பின்னே (திரியும்படி) அனுப்பினேனே! எல்லே பாவமே!,Elle Paavame - மஹாபாபம்! மஹாபாபம். |
| 240 | பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-இரண்டாம் திருமொழி - அஞ்சனவண்ணனை) (யசோதப்பிராட்டி கண்ணனைக் கன்றின்பின் போக்கினதை எண்ணி அநுதபித்தல்) (கலிநிலைத்துறை) 7 | வள்ளி நுடங்கிடை மாதர் வந்து அலர் தூற்றிட
துள்ளி விளையாடித் தோழரோடு திரியாமே
கள்ளி யுணங்கு வெங் கானதரிடைக் கன்றின் பின்
புள்ளின் தலைவனைப் போக்கினேன் எல்லே பாவமே–3-2-7 | பதவுரை Show / Hideபுள்ளின் தலைவனை,Pullin Thalaivanai - பெரிய திருவடிக்குத் தலைவனான கண்ண பிரானை வள்ளி,Valli - கொடி போன்று துடங்கு,Thudangu - துவளா நின்றுள்ள இடை,Edai - இடையை யுடைய மாதர்,Maadhar - இடைப் பெண்கள் வந்து,Vandhu - (தாயாகிய என்னிடத்தில்) வந்து (இவன் செய்த தீமைகளைச் சொல்லி) அலர் தூற்றிட,Alar Thoottida - பழி தூற்றிக் கொண்டிருக்கச் செய்தே துள்ளி,Thulli - (அதை ஒரு பொருளாக மதியாமல்) (நிலத்தில் நில்லாமல்) துள்ளி தோழரோடு,Thozharodu - (தன்) தோழர்களோடு கூட விளையாடி,Vilayaadi - விளையாடிக் கொண்டு திரியாமே,Thiriyame - திரிய வொட்டாமல் கள்ளி,Kalli - (மழை யில்லாக் காலத்திலும் பசுமை மாறாத) கள்ளிச் செடியுங்கூட உணங்கு,Unangu - (பால் வற்றி) உலரும் படியாய் வெம்,Vem - மிக்க வெப்பத்தை யுடைய கான் அதர் இடை,Kaan Athar Idai - காட்டு வழியிலே கான் அதர் இடை,Kaan Athar Idai - காட்டு வழியிலே |
| 241 | பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-இரண்டாம் திருமொழி - அஞ்சனவண்ணனை) (யசோதப்பிராட்டி கண்ணனைக் கன்றின்பின் போக்கினதை எண்ணி அநுதபித்தல்) (கலிநிலைத்துறை) 8 | பன்னிரு திங்கள் வயிற்றில் கொண்ட அப் பாங்கினால்
என் இளங் கொங்கை அமுத மூட்டி யெடுத்து யான்
பொன்னடி நோவப் புலரியே கானில் கன்றின் பின்
என்னிளஞ் சிங்கத்தைப் போக்கினேன் எல்லே பாவமே–3-2-8 | பதவுரை Show / Hideஎன் இள சிங்கத்தை,En Ila Singathai - எனது சிங்கக் குட்டி போன்ற கண்ணபிரானை பன்னிரு திங்கள்,Panniru Thingal - பன்னிரண்டு மாஸ காலம் வயிற்றில் கொண்ட ஆ பாங்கினால்,Vayitril Konda A Paanginal - (என்) வயிற்றிலே வைத்து நோக்கின அப்படிப்பட்ட அன்புக்கேற்ப யான்,Yaan - (தாயாகிய) நான் என்,En - என்னுடைய இள,Ela - குழைந்திரா நின்றுள்ள கொங்கை,Kongai - முலையிலுண்டான அமுதம்,Amudham - பாலை ஊட்டி,Ootti - (அவனுக்கு) உண்ணக் கொடுத்து எடுத்து,Eduthu - வளர்த்து புலரியே,Pulariye - (இப்படியாக அருமைப்பட நோக்கின பிள்ளையை) (இன்று) விடியற் காலத்திலேயே (எழுப்பி) பொன் அடி நோவ,Pon Adi Nova - அழகிய திருவடிகள் நோவெடுக்கும் படியாக கானில்,Kaanil - காட்டிலே கன்றின் பின் போக்கினேன்;,Kanrin Pin Pokkinean - கன்றுகளின் பின்னே (திரியும்படி) அனுப்பினேனே! எல்லே பாவமே!,Elle Paavame - மஹாபாபம்! மஹாபாபம். |
| 242 | பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-இரண்டாம் திருமொழி - அஞ்சனவண்ணனை) (யசோதப்பிராட்டி கண்ணனைக் கன்றின்பின் போக்கினதை எண்ணி அநுதபித்தல்) (கலிநிலைத்துறை) 9 | குடையும் செருப்பும் கொடாதே தாமோ தரனை நான்
உடையும் கடியன ஊன்று வெம் பரற்களுடை
கடிய வெங் கானிடைக் காலடி நோவக் கன்றின் பின்
கொடியேன் என் பிள்ளையைப் போக்கினேன் எல்லே பாவமே–3-2-9 | பதவுரை Show / Hideஎன் பிள்ளையை,En Pillaiyai - என் மகனான தாமோதரனை,Thaamodharanai - கண்ணபிரானை, குடையும்,Kudaiyum - குடையையும் செருப்பும்,Seruppum - செருப்பையும் கொடாதே,Kodaadhe - (அவனுக்குக்) கொடாமல் கொடியேன் நான் ,Kodiyen Naan - கொடியவளாகிய நான் உடையும்,Udaikum - (ஸூர்யனுடைய வெப்பத்தாலே) உடைந்து கிடப்பனவாய் கடியன,Kadiyana - கூரியனவாய்க் கொண்டு ஊன்று,Oonru - (காலிலே) உறுத்துவனவாய் வெம்,Vem - (இப்படி) அதி தீக்ஷ்ணமான பரற்கள் உடை,Parargal Udai - பருக்காங் கல்லை யுடைய கடிய வெம்,Kadiya Vem - அத்யுஷ்ணமான கான் இடை,Kaan Idai - காட்டிலே கால் அடி நோவ கன்றின் பின் போக்கினேன்,Kaal Adi Novu Kanrin Pin Pokkinen - அழகிய திருவடிகள் நோவெடுக்கும் படியாக கன்றுகளின் பின்னே (திரியும்படி) அனுப்பினேனே! எல்லே பாவமே!,Elle Paavame - மஹாபாபம்! மஹாபாபம். |
| 243 | பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-இரண்டாம் திருமொழி - அஞ்சனவண்ணனை) (யசோதப்பிராட்டி கண்ணனைக் கன்றின்பின் போக்கினதை எண்ணி அநுதபித்தல்) (கலிநிலைத்துறை) 10 | என்றும் எனக்கு இனியானை என் மணி வண்ணனை
கன்றின் பின் போக்கினே னென்று அசோதை கழறிய
பொன் திகழ் மாடப் புதுவையர் கோன் பட்டன் சொல்
இன் தமிழ் மாலைகள் வல்லவர்க்கு இட ரில்லையே–3-2-10 | பதவுரை Show / Hideஎன்றும்,Endrum - எப்போதும் எனக்கு,Enakku - (தாயாகிய) எனக்கு இனியானை,Eniyanai - இனிமையைத் தருமவனாய் என்,En - என்னுடைய மணி வண்ணனை,Mani Vannanai - நீல மணி போன்ற வடிவை யுடையனான கண்ணபிரானை கன்றின் பின் போக்கினேன் என்று,Kanrin Pin Pokkinen Endru - கன்றுகளின் பின்னே (காட்டில்) போக விட்டேனே!’ என்று அசோதை,Asothai - யசோதைப் பிராட்டி கழறிய,Kalariya - (மனம் நொந்து) சொன்னவற்றவை சொல்,Sol - அருளிச் செய்த பொன்,Pon - பொன் மயமாய் திகழ்,Thigal - விளங்கா நின்றுள்ள மாடம்,Maadam - மாடங்களை யுடைய புதுவையர்,Puthuvaiyar - ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ளவர்களுக்கு கோன்,Kon - நிர்வாஹகரான பட்டன்,Pattan - பெரியாழ்வாருடைய இன்,En - போக்யமான தமிழ் மாலைகள்,Tamil Maalaigal - தமிழ்ச் சொல் மாலைகளை வல்லவர்க்கு,Vallavarkku - ஓத வல்லவர்களுக்கு இடர் இல்லை,Edar Ellai - (ஒரு காலும்) துன்பமில்லையாம். |