திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3-3 ஒழிவில் (11 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2919திருவாய்மொழி || (3-3–ஒழிவில்) - (திருவேங்கடமுடையானுக்கு எல்லாவடிமைகளும் செய்யப் பெறவேணுமென்று மநோரதிக்கிறார்.) 1
ஒழிவு இல் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழு இலா அடிமை செய்ய வேண்டும் நாம் தெழி குரல் அருவித் திருவேங் கடத்து எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே.–3-3-1
பதவுரை Show / Hide
தெழி குரல் அருவி, Thezhi kural aruvi - கம்பீரமான ஓசையையுடைய அருவிகள் பொருந்தின
திருவேங்கடத்து, Thiruvengadathu - திருவேங்கடமலையில்
எழில் கொள், Ezhil kol - நிறம்பெற்ற
எந்தை தந்தை தந்தைக்கு, Endhai thandhai thandhaikku - எமது குலநாதனான பெருமானுக்கு,
நாம், Naam - அடியோம்
ஒழிவு இல், Ozhivu il - ஓய்வில்லாத
காலம் எல்லாம், Kaalam ellaam - காலம் முழுவதும்
உடன் ஆய், Udan aay - கூடவே யிருந்து
மன்னி, Manni - ஸகல அவஸ்தைகளிலும் பிரியாது நின்று
வழு இலா, Valu ila - குற்றமற்ற
அடிமை, Adimai - கைங்கரியங்களை
செய்ய வேண்டும், Seyya vendum - பண்ணக்கடவோம்.
2920திருவாய்மொழி || (3-3–ஒழிவில்) - (திருநாட்டிலே சென்று எம்பெருமானுக்கு அடிமை செய்வதன்றோ எல்லார்க்கும் ஸ்வரூபம்; அப்படியிருக்க, நீர் இந்நிலத்தில் திருமலையிலே அடிமை செய்ய விரும்புவது ஏன்? என்ன; திருநாட்டிலுள்ள நித்ய முக்தர்களுங்கூட இத்திருமலையிலே வந்து அடிமை செய்யக் காண்கையாலே நானும் இங்கே அடிமைசெய்யக் குறையென்? என்கிறார்.) 2
எந்தை தந்தை தந்தை தந்தை தந்தைக்கும் முந்தை வானவர் வானவர் கோனொடும் சிந்து பூமகிழும் திரு வேங்கடத்து அந்தம் இல்புகழ்க் கார் எழில் அண்ணலே.–3-3-2
பதவுரை Show / Hide
வானவர், Vaanavar - நித்யஸூரிகள்
வானவர் கோனொடும், Vaanavar koanodum - தங்களில் தலைவரான ஸேனை முதலியரோடு கூட
சிந்து, Sindhu - தூவின
பூ, Poo - புஷ்பங்கள்
மகிழும், Magilum - செவ்விகுன்றாதிருக்கப்பெற்ற
திருவேங்கடத்து, Thiruvengadathu - திருமலையில்
அந்தம் இல் புகழ், Antham il pugazh - முடிவில்லாத புகழையுடையவனும்
கார் எழில், Kaar ezil - நீலநிறத்தழகுடையனுமான
அண்ணல், Annal - எம்பெருமான்
எந்தை தந்தை தந்தை தந்தை தந்தைக்கும் முந்தை, Endhai thandhai thandhai thandhaikkum mundhai - எம்குலநாதன்
2921திருவாய்மொழி || (3-3–ஒழிவில்) - (ஆழ்வீர்! திருமலையில் அடிமை செய்யவேணுமென்று நீர் பாரிக்கின்றீர்; இஃது உமக்கு வாய்க்குமோ வென்ன; எண்ணிறாத நித்ய ஸித்தபுருஷர்களெல்லார்க்கும் தன்னை அநுபவிக்கக் கொடுத்துக்கொண்டிருக்கிறானோரு பரமோபகாரகனல்லானோ அவன்; அன்னவன் நமக்கும் தன்னைத் தந்தருளமென்கிறார். (எம்பெருமான் ஸ்வாநுபத்தை நமக்குத் தந்தருள்வன் என்பது இப்பாசுரத்தில் கூறப்பட்டிருக்கவில்லையே என்னவேண்டா; எண்ணில் தொல்புகழ்வானவ ரீசனே என்ற ஈற்றடியில் இக்கருத்து உறைந்து நிற்கும். நமக்குத் தந்தருளாதொழிந்தனாகில் தொன்புகழுடைமை தேறுமோ என்றவாறு.)) 3
அண்ணல் மாயன் அணிகொள் செந் தாமரைக் கண்ணன் செங்கனி வாய்க் கரு மாணிக்கம் தெண்ணிறை சுனை நீர்த் திரு வேங்கடத்து எண் இல் தொல் புகழ் வானவர் ஈசனே. –3-3-3
பதவுரை Show / Hide
அணிக்கொள், Anikkol - அழகுபொருந்திய
செம் தாமரை கண்ணன், Sem thamarai kannan - செந்தாமரை மலர் போன்ற திருக்கண்களையுடையவனும்
செம் கனிவாய், Sem kanivai - சிவந்த கனிபோன்ற அதரத்தையுடையவனும்
கருமாணிக்கம், Karumaanikkam - நீலரத்னம்போல் திருமேனி விளக்கத்தை யுடையவனும்
தென் நிறை சுனை நீர், Then nirai sunai neer - தெளிவையும் நிறைவையுமுடைய சுனைநீர் பொருந்திய
திருவேங்கடத்து, Thiruvengadathu - திருமலையில்
எண் இல் தொல் புகழ், Enum il thol pugazh - எண்ணிறந்த நித்திய கல்யாண குணங்களையுடையவனும்
வானவர் ஈசன், Vaanavar Eesan - நித்யஸூரிகட்குத் தலைவனுமான எம்பெருமான்
அண்ணல், Annal - நமக்கு ஸ்வாமியும்
மாயன், Maayan - ஆச்சரிய சேஷ்டிதங்களையுடையவனுமானவன்
2922திருவாய்மொழி || (3-3–ஒழிவில்) - (“எண்ணில் தொல்புகழ்வானவரீசன்” என்றார் கீழ்ப்பாட்டில்; அதனால் நித்யஸூரிகளுக்குத் தன்னை அநுபவிக்கக் கொடுத்தானென்பதை ஒரேற்றமாக அருளிச் செய்தார்; மிகவும் நீசனான என் பக்கலிலே பாசம் வைத்திருக்குமப் பெருமானுக்கு அது ஓர் ஏற்றமோ என்கிறாரிப்பாட்டில்.) 4
ஈசன் வானவர்க்கு என்பன் என்றால் அது தேசமோ திரு வேங்கடத் தானுக்கு? நீசனேன் நிறைவு ஒன்றுமிலேன் என் கண் பாசம் வைத்த பரஞ்சுடர்ச் சோதிக்கே.–3-3-4
பதவுரை Show / Hide
வானவர்க்கு, Vaanavarkku - நித்யஸூரிகளுக்கு
ஈசன், Eesan - தலைவன்
என்பன், Enban - என்று சொல்லுவேன்
என்றால், Endraal - இப்படிச் சொன்னால்
நீசனேன் நிறைவு ஒன்றும் இலேன் எண் கண், Neesanen niraivu ondrum ilen en kan - கடைகெட்டவனும் குணபூர்த்தியற்றவனுமான என் விஷயத்தில்
பாசம் வைத்த, Paasam vaitha - ஆசாபாசத்தை வைத்தருளினின்ற
பரம் சுடர்சோதிக்கு, Param sudarsothikku - நிரவதிக ஜ்யோதிர்மய தின் மங்கள விக்ரஹயுக்தனான
திருவேங்கடத்தானுக்கு, Thiruvengadathaanukku - திருவேங்கட முடையானுக்கு
அது தேசமோ, Athu dhesamo - நான் சொன்னது ஒரு பெருமையோ?
2923திருவாய்மொழி || (3-3–ஒழிவில்) - (நீசனான எனக்குத் தன்னைத் தந்தவனுக்கு நித்யஸூரி நிர்வாஹகத்வம் ஒரேற்றமோ வென்றார் கீழ்ப்பாட்டில்; என்னினும் தாழ்ந்தவர்களைத் தேடிப் பெற மாட்டாதே யிருக்கிறவனுக்கு, எனக்குத் தன்னைத் தந்தானென்கிற விதுதான் ஓர் ஏற்றமோ வென்கிறாரிப்பாட்டில்) 5
சோதி ஆகி,எல்லா உலகும் தொழும் ஆதி மூர்த்தி என்றால்அளவு ஆகுமோ, வேதியர் முழு வேதத்து அமுதத்தைத் தீது இல் சீர்த் திரு வேங்கடத் தானையே?–3-3-5
பதவுரை Show / Hide
வேதியர் முழு வேதத்து அமுதத்தை , Vethiyar muzhu vedathu amudhathai - வைதிகர்களால் ஓதப்படுகிற ஸகல வேதங்களிலும் பரம போக்யனாக ப்ரதிபாதிக்கப்படுபவனும்
தீது இல் சீர் , Theethu il seer - தீது ஒன்றுமில்லாத திருக்குணங்களை யுடையனுமான
திருவேங்கடத்தானை , Thiruvengadathaannai - திருமலையப்பனைக் குறித்து
சோதி ஆகி , Sothi aagi - சோதிமயமான திருமேனியையுடையனாய்
ஆதி , Aadhi - ஸகலஜகத்காரணபூதனான (எல்லா உலகும் தொழும் உலகத்தவர்களெல்லாராலும் தொழப்படுபவனாய்)
மூர்த்தி , Moorthi - ஸர்வேச்வரன் (இவன்)
என்றால் , Endraal - என்று நான் சொன்னால் (அது)
அளவு ஆகுமோ , Alavu aagumo - ஒரு பெருமை யாகுமோ?
2924திருவாய்மொழி || (3-3–ஒழிவில்) - (இப்பதிகத்தில் முதற்பாட்டில் கைங்கர்யம் ப்ரஸ்தாவிக்கப்பட்டது; (அதன்மேல் நான்கு பாசுரங்கள் ப்ராஸங்கிகங்கள்.) முதற்பாட்டோடு இப்பாட்டிற்கு ஸங்கதி கொள்ளலாம். பிரதிபந்தகங்களான கருமங்கள் பலகிடக்க அடிமை செய்வது எங்ஙனே ஸாத்யம்? என்று சங்கை பிறக்க, அடிமை செய்வோமென்று இசையவே அவை தானே தொலையுமென்கிறாரிப்பாட்டில்.) 6
வேங் கடங்கள் மெய் மேல்வினை முற்றவும், தாங்கள் தங்கட்கு நல்லனவே செய்வார், வேங்கடத்து உறைவார்க்கு நம என்னல் ஆம் கடமை அது சுமந் தார்கட்கே.–3-3-6
பதவுரை Show / Hide
வேங்கடத்து , Vengadathu - திருமலையிலே
உறைவார்க்கு , Uraivaarkku - நித்யவாஸஞ்செய்தருளுகிற பெருமானுக்கு
நம எனல் ஆம் கடமை அது , Nama enal aam kadamai adhu - நமர் என்று சொல்லுவதாகிற அந்தக் கடமையை
சுமந்தார்கட்கு , Sumanthaarkku - வஹிக்கின்றவர்களுக்கு
கடங்கள் , Kadangal - அனுபவித்தே தீர்க்கவேண்டிய (பூர்க்ருத) பாபங்களும்
மேல்வினை , Melvinai - (ப்ரக்ருதிவாஸநையாலே) இனி விளையக்கூடிய பாவங்களம் (ஆகிய)
முற்றவும் , Mutravum - ஸகலபாபங்களும்
வேம் , Vem - வெந்துபோயினவென்னும் அழிந்து விடும்: (இப்படி பாவங்கள் தொலையலே)
தங்கட்கு நல்லனாவே , Thangatku nallanaave - தாங்கள் அடியவர்களான தாங்கள் ; தங்கள் ஸ்வரூபத்திற்குத் தகுதியானவற்றையே (ஸகங்கரியங்களையே)
செய்வார் , Seivaar - செய்யப் பெறுவர்கள்.
2925திருவாய்மொழி || (3-3–ஒழிவில்) - (நமக்கு அபேக்ஷிதமான அடிமைகளெல்லாம் பெறுவதற்குத் திருவேங்கடமுடையானை ஆச்ரயிக்கவேண்டுவதில்லை, திருமலையின் ஆச்ரயணமே போதுமென்கிறார்.) 7
சுமந்து மா மலர் நீர் சுடர் தூபம் கொண்டு. அமர்ந்து வானவர் வானவர் கோனொடும் நமன்று எழும் திரு வேங்கடம் நங்கட்குச் சமன் கொள் வீடு தரும் தடங் குன்றமே.–3-3-7
பதவுரை Show / Hide
மா , Maa - சிறந்த
மலர் , Malar - புஷ்பங்களையும்
நீர் , Neer - தீர்த்தத்தையும்
சுடர் , Sudar - தீபத்தையும்
தூபம் , Thoobam - தூபத்தையும்
சுமந்துகொண்டு , Sumandhukondu - ஏந்திக்கொண்டு
வானவர் , Vaanavar - தேவர்கள்
வானவர் கோ னொடும் , Vaanavar konodum - தங்கள் தலைவனோடுகூட
அமர்ந்து நமன்று , Amarndu namandru - அநந்யப்ரயோஜநராய் வணங்கி
எழும் , Ezhum - உஜ்ஜீவிக்குமிடமான
திருவேங்கடம் , Thiruvengadam - திருவேங்கடமென்கிற தடம் குன்றமே பெரிய திருமலையே
நங்கட்கு , Nangatku - நமக்கு
சமன் கொள் வீடு , Saman kol veedu - பரமஸாம்யாபத்தி ரூபமான மோஷத்தை
தரும் , Tharum - அளிக்கும்.
2926திருவாய்மொழி || (3-3–ஒழிவில்) - (எம்பெருமானுக்கும் பரம ப்ராப்யமான திருமலைதான் நமக்கும் பரம ப்ராப்யம்; அது நமக்கு ஒரு பலனையளிக்க வேணுமென்பதில்லை; ஒரு பலனையும் தாரா தொழியினும் அதுவே நமக்கு ப்ராப்பயமாகக்கடவது- என்கிறார்.) 8
குன்றம் ஏந்திக் குளிர் மழை காத்தவன், அன்று ஞாலம் அளந்த பிரான்,பரன் சென்று சேர் திரு வேங்கட மாமலை ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே.–3-3-8
பதவுரை Show / Hide
குன்றம் ஏந்தி , Kundram endhi - (கோவர்த்தன) மலையைக் குடையாகத் தாங்கிநின்று
குளிர் மழை , Kulir mazhai - குளிர்ந்தபெருமழையை
காத்தவன் , Kaathavan - தடுத்தவனும்
அன்று , Andru - முன்பொரு காலத்தில்
ஞாலம் அளந்த பிரான் , Nyaalam alandha piran - உலகங்களையளந்த பிரபுவுமாகிய
பரன் , Paran - எம்பெருமான்
சென்று சேர் , Sendru ser - வந்து சேர்ந்தவிடமான
திருவேங்கட மாமலை ஒன்றமே , Thiruvengata maamalai ondrame - திருமலையொன்றை மாத்திரமே
தொழ , Thozha - தொழப்பெறில்
நம் வினை , Nam vinai - நமது வினைகள் யாவும்
ஓயும் , Ooyum - தொலைந்திடும்.
2927திருவாய்மொழி || (3-3–ஒழிவில்) - (திருமலையொன்றே நம் வினை ஓய்வதற்குப் போதுமென்கிறார் கீழ்; அந்தத் திருமலை தானும் பூர்த்தியாகவேணுமென்பதில்லை, அதில் ஏகதேசமே போதுமென்கிறாரிப்பாட்டில். (இங்க ஏகதேசமென்கிற வார்த்தையினால் நினைக்கிறது திருமலையப்பனை. திருமலையில் ஸம்பந்தத்தைப் பற்றியாயிற்று ஸ்ரீநிவாஸனும் உத்தேச்யனாவது திருமங்கையாழ்வார் “வட மா மலை யுச்சியை” என்ற ஸ்ரீநிவாஸனைத் திருமலையின் ஏக தேசமாகவே கூறினார்.) 9
ஓயும் மூப்புப் பிறப்பு இறப்புப் பிணி வீயுமாறு செய்வான் திரு வேங்கடத்து ஆயன் நாள்மலராம் அடித் தாமரை வாயுளும் மனத்துள்ளும் வைப்பார்கட்கே.–3-3-9
பதவுரை Show / Hide
திருவேங்கடத்து ஆயன் தாமரை நாள் மலர் ஆம் , Thiruvengadathu Aayan Thamarai Naal Malar Aam - திருமலையில் வாழ்கிற ஸ்ரீ கிருஷ்ணன் அப்போதலர்ந்த செந்தாமரைப்பூப்போன்ற
ஓயும் மூப்பு , Ooyum Moopu - ஓய்வை விளைவிக்கின்ற கிழந்தனமென்ன
பிறப்பு , Pirappu - பிறவியென்ன
இறப்பு , Irappu - மரணமென்ன
அடி , Adi - திருவடிகளை
வாய் உள்ளும் , Vaai ullum - வாக்கினுள்ளும்
மனத்துள்ளும் , Manathullum - நெஞ்சினுள்ளும்
வைப்பார்கட்கு , Vaipparkatku - வைத்துக் கொள்பவர்களுக்கு
பிணி , Pini - வியாதியென்ன (ஆகிய இவை)
வீயும் ஆறு , Veeyum aaru - தொலையும் வகை
செய்வான் , Seyvaan - செய்தருள்வன்.
2928திருவாய்மொழி || (3-3–ஒழிவில்) - (பரமபோக்யமான திருமலையையே பரமப்ராப்யமாகப் பற்றுங்களென்று பிறர்க்கு உபதேசிக்கிறார். எம்பெருமான் சேதநர்களுக்குக் கரணகளேபரங்களைக் கொடுத்து ஆயுளையயும் அருளுகிறான்; இவை எதற்காகவென்னில்,திருமலை முதலான திருப்பதிகளிலே சென்று வழிபாடு செய்வதற்காகவேயன்றி வேறொரு காரியத்திற்காகவன்று. ஆயினும், உலகர் உடலில் வலிவுள்ள காலங்களில் விஷயாந்தரங்களிலே மண்டிக் கிடந்து, திவ்யதேச வழிபாடுகளைப் பற்றிப் போகப்போகப் பார்த்துக்கொள்வோம் என்று பதற்றமற்று ஆறியிருந்து விடுகிறார்கள்; பார்த்துக்கொண்டிருக்கும் போதே வல வகைகளிலும் தளர்ச்சி வந்து சேர்கின்றது; அப்போது திவ்யதேச வழிபாட்டை நெஞ்சிலும் நினைக்க ப்ரஸக்தியில்லையாகிறது. அங்ஙனம் ஆகாமே திருமலையைப் பணிமின் என்றாராயிற்று.) 10
வைத்த நாள்வரை எல்லை குறுகிச் சென்று, எய்த்து, இளைப்பதன் முன்னம் அடைமினோ பைத்த பாம்பணையான் திரு வேங்கடம் மொய்த்த சோலை மொய் பூந்தடந் தாள்வரை.–3-3-10
பதவுரை Show / Hide
வைத்த, vaitha - (பாகவதர்களே!) (உங்களுக்குச்) சங்கற்பித்துவைத்த
நாள், naal - ஆயுட்காலத்தினுடைய
வரை, varai - அளவான
எல்லை, ellai - எல்லையானது
குறுகி, kurugi - அணுகி
எய்த்து இளைப்பதன் முன்னம், eithu ilaipathan munnam - (அதனால் நீங்கள்) மிகவும் தளர்ச்சியடைவதற்கு முன்னே
சென்று, sendru - (திருமலையை நோக்கிச் சென்று)
பைத்த பாம்பு அணையான், paitha paambu anaiyaan - படமெடுத்த ஆதிசேஷனைப் படுக்கையாகக்கொண்ட பெருமானது
திருவேங்கடம், thiruvengadam - (அத்) திருமலையில்
மொய்த்த சோலை , Moitha solai - நெருங்கின சோலைகளும்
மொய் பூ தடம் , Moi poo Thadam - நெருங்கின புஷ்கரிணிகளுமுள்ள
தாழ்வர் , Thaazhvar - திருத்தாழ்வரையை
அடைமின் , Adaimin - அடையுங்கள்
2929திருவாய்மொழி || (3-3–ஒழிவில்) - (இத் திருவாய் மொழியை ஓதவல்லவர்கள் உலகமெல்லாங் கொண்டாடும் படியான வாழ்ச்சியைப் பெறுவரென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகின்றார்.) 11
தாள் பரப்பி மண் தாவிய ஈசனை, நீள் பொழில் குரு கூர்ச் சட கோபன் சொல், கேழில் ஆயிரத்திப் பத்தும் வல்லவர், வாழ்வர் வாழ்வெய்தி ஞாலம் புகழவே.–3-3-11
பதவுரை Show / Hide
தாள் பரப்பி, thaal parappi - திருவடியை விரித்து
மண் தாவிய, man thaaviya - பூமியெல்லாம் அளந்து கொண்ட
ஈசனை, eesanai - எம்பெருமானைக் குறித்து
நீள் பொழில், neel pozhil - உயர்ந்த சோலைகளையுடைய
குருகூர் சடகோபன், kurugoor sadagopan - ஆழ்வார்
சொல், sol - அருளிச்செய்த
கேழ் இல், kezh il - ஒப்பற்றதான
ஆயிரத்து, aayirathu - ஆயிரத்தில்
இப் பத்தும், ip pathum - இத்திருவாய்மொழியை
வல்லவர், vallavar - ஓதவல்லவர்கள்
ஞாலம் புகழ, nyaalam pugazha - உலகம் யாவும் கொண்டாடும் படி
வாழ்வு எய்தி, vaazhvu eidhi - வாழ்ச்சிபெற்று
வாழ்வர், vaazhvar - (அந்த வாழ்ச்சி ஒருநாளும் குன்றாமே) விளங்குவர்.